search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Marudamalai Murugan Temple"

    • தைப்பூசம் நெருங்கி வருவதாலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
    • வனத்துறையினர் விரைந்து வந்து, சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.

    வடவள்ளி:

    கோவை மாவட்டம் மருதமலையில் பிரசித்தி பெற்ற மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது.

    இந்த கோவில் முருக பெருமானின் 7-வது வீடு என பக்தர்களால் அழைக்கப்பட்டு வருகிறது. கோவிலுக்கு கோவை மாவட்டத்தில் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் அதிகளவில் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

    தற்போது மார்கழி மாதம் என்பதாலும், தைப்பூசம் நெருங்கி வருவதாலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக அய்யப்ப பக்தர்கள், முருக பக்தர்கள் கூட்டம், கூட்டமாக வந்து செல்கின்றனர்.

    ஐயப்பன் கோவிலுக்கு சென்று விட்டு வரும் வழியில், இங்கு வந்து முருகபெருமானை தரிசித்து விட்டு ஐயப்ப பக்தர்கள் தங்கள் ஊர்களுக்கு செல்கின்றனர்.

    இதனால் தற்போது அனைத்து நாட்களிலுமே மருதமலை முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. அண்மைக்காலமாக மருதமலை முருகன் கோவில் பகுதி மற்றும், அடிவார பகுதிகளில் வனவிலங்குகள் நடமா ட்டம் காணப்படுகிறது.

    குறிப்பாக யானைகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. இந்த நிலையில் நேற்று வழக்கம் போல கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். அவர்கள் சாமி தரிசனம் செய்து விட்டு வந்தனர்.

    நேற்று இரவு 7 மணிக்கு பக்தர் ஒருவர் மருதமலை முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு, மீண்டும் தனது காரில் மலைப்பாதையில் வந்து கொண்டிருந்தார். அப்போது அடிவார பகுதியில் அருகே வந்த போது 3-வது வளைவில் மலைப்பாதையில் சிறுத்தை ஒன்று நின்றிருந்தது.

    இது காரின் முகப்பு விளக்கு வெளிச்சத்தில் தெளிவாக தெரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் காரை சற்று தூரத்தில் நிறுத்தினார். மேலும் தனது செல்போனை எடுத்து, அதில் சிறுத்தையை புகைப்படம் மற்றும் வீடியோவும் எடுத்தார்.

    இருளாக இருந்த இடத்தில் வெளிச்சம் ஏற்பட்டதை பார்த்ததும் சிறுத்தை வேகவேமாக ஓடி வனத்திற்குள் சென்று மறைந்து கொண்டது.

    இதையடுத்து பக்தர் தனது காரில் அங்கிருந்து புறப்பட்டு கீழே வந்தார். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். வனத்துறையினர் விரைந்து வந்து, சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.

    மேலும் கோவில் பகுதிக்கு சென்று அங்கிருந்த பக்தர்களை பத்திரமாக கீழே அழைத்து வந்தனர். கடந்த ஆண்டு கோவில் பகுதியில் தேர் நிறுத்தி வைத்திருக்கும் இடம் மற்றும் மலைப்படிக்கட்டில் உள்ள தான்தோன்றி விநாயகர் கோவில் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருந்தது. இது அங்கு வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்தது.

    தற்போது மீண்டும் மருதமலை முருகன் கோவில் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. தைப்பூசம் நெருங்கி வருவதால் கோவிலுக்கு அதிகமான பக்தர்கள் வருவார்கள். இந்த நேரத்தில் இங்கு சிறுத்தை நடமாட்டம் இருப்பது அவர்களுக்கு அச்சத்தை கொடுத்துள்ளது. வனத்து றையினர் கோவிலு க்கு வரும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறும் போது, மருதமலை மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலின் பேரில் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறோம்.

    கோவிலுக்கு வரும் பக்தர்கள் மிகவும் கவன த்துடன் மலைக்கோவிலுக்கு செல்ல வேண்டும். மலைப்பாதையில் கார், மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்களில் செல்வோர் மிகுந்த கவன த்துடன் வாகனங்களை இயக்கி செல்ல வேண்டும். சிறுத்தை நடமாட்டத்தை தொடர்ந்து நாங்கள் கண்காணித்து வருகிறோம்.

    இதற்கிடையே மருதமலை முருகன் கோவில் மலைப்பாதையில் சிறுத்தை சுற்றி திரியும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    • வருகிற 5-ந் தேதி முதல் ஒரு மாதம் வரை வாகனங்களுக்கு அனுமதிக்கப்படமாட்டது.
    • முருக பெருமானின் 7-வது படைவீடாக அழைக்கப்பட்டு வருகிறது.

    வடவள்ளி,

    கோவை மருதமலையில் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் பக்தர்களால் முருக பெருமானின் 7-வது படைவீடாக அழைக்கப்பட்டு வருகிறது.

    இந்த கோவிலுக்கு கோவை மட்டுமின்றி அண்ைட மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் தினமும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள்.

    குறிப்பாக விஷேச நாட்கள் மற்றும் செவ்வாய், வெள்ளி கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

    இந்த நிலையில் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில், கல்பாதை அமைக்கும் பணி, பார்க்கிங் பகுதியில் ஆண், பெண் இருபாலருக்கும் கழிவறை வசதி, தானியங்கி கருவி லிப்ட் அமைக்கும் பணி, தார்சாலை அமைக்கும் என பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதனால் மலைக்கோவில் பகுதியில் வாகனங்கள் நிறுத்த போதிய இடம் இல்லாததால், அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது.

    பணிகள் நடைபெறுவதை முன்னிட்டு வருகிற 5-ந் தேதி முதல் ஒரு மாதம் வரை மலைக்கோவிலுக்கு மலைப்பாதை வழியாக இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் 

    • மருதமலை முருகன் கோவிலில் ரூ.5.20 கோடியில் லிப்ட் பணிக்கான பூமி பூஜை நடந்தது.
    • கோவில் அர்ச்சகர்கள் வேத மந்திரம் முழங்க வேள்வி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தனர்.

    வடவள்ளி:

    கோவை மருதமலையில் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கோவை மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான திருப்பூர், ஈரோடு உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்த வண்ணம் உள்ளனர்.

    இதனால் எப்போதுமே மருதமலை முருகன் கோவிலில் கூட்டம் அதிக மாக காணப்படும். குறிப்பாக விஷேச நாட்களில் அதிகளவிலான கூட்டம் காணப்படும்.

    இந்நிலையில் மருதமலை முருகன் கோவிலில் மின்தூக்கி(லிப்ட்) அமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று ரூ.5.20 கோடியில் லிப்ட் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் இன்று மருதமலை முருகன் கோவிலில் ரூ.5.20 கோடியில் லிப்ட் மற்றும் ரூ.3.51 கோடியில் மலை அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் உள்ள தார்சாலையை சீரமைக்கும் பணிக்கான பூமி பூஜை இன்று நடந்தது.

    பூமிபூஜையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். கோவையில் நடந்த விழாவில், கலெக்டர் கிரந்திகுமார், இந்து சமயஅறநிலையத்துறை துணை ஆணையர் தர்ஷினி, துணை மேயர் வெற்றிச் செல்வன், கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் ஆகியோர் பங்கேற்றனர்.

    அதை தொடர்ந்து கோவில் அர்ச்சகர்கள் வேத மந்திரம் முழங்க வேள்வி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தனர்.

    இதில் தி.மு.க வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் அ.ரவி, வடவள்ளி பகுதி செயலாளர் வ.ம.சண்முக சுந்தரம், வட்ட செயலாளர்கள், கவுன்சிலர்கள் , கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×