மருதமலை முருகன் கோவிலில் ஒரு மாதத்திற்கு இரண்டு, நான்கு சக்கர வாகனங்கள் செல்ல அனுமதியில்லை

வருகிற 5-ந் தேதி முதல் ஒரு மாதம் வரை வாகனங்களுக்கு அனுமதிக்கப்படமாட்டது. முருக பெருமானின் 7-வது படைவீடாக அழைக்கப்பட்டு வருகிறது.
மருதமலை முருகன் கோவிலில் ஒரு மாதத்திற்கு இரண்டு, நான்கு சக்கர வாகனங்கள் செல்ல அனுமதியில்லை
Published on

வடவள்ளி,

கோவை மருதமலையில் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் பக்தர்களால் முருக பெருமானின் 7-வது படைவீடாக அழைக்கப்பட்டு வருகிறது.

இந்த கோவிலுக்கு கோவை மட்டுமின்றி அண்ைட மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் தினமும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள்.

குறிப்பாக விஷேச நாட்கள் மற்றும் செவ்வாய், வெள்ளி கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

இந்த நிலையில் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில், கல்பாதை அமைக்கும் பணி, பார்க்கிங் பகுதியில் ஆண், பெண் இருபாலருக்கும் கழிவறை வசதி, தானியங்கி கருவி லிப்ட் அமைக்கும் பணி, தார்சாலை அமைக்கும் என பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.

இதனால் மலைக்கோவில் பகுதியில் வாகனங்கள் நிறுத்த போதிய இடம் இல்லாததால், அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது.

பணிகள் நடைபெறுவதை முன்னிட்டு வருகிற 5-ந் தேதி முதல் ஒரு மாதம் வரை மலைக்கோவிலுக்கு மலைப்பாதை வழியாக இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com