search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Main falls"

    • உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், அண்டை மாநிலம் என பல பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் முகாமிடுவார்கள்.
    • மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் குளிப்பதற்கு காலை முதலே சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருந்தனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தளமான குற்றாலத்தில் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் சீசன்களை கட்டும்.

    அப்போது குற்றால அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுவார்கள். உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், அண்டை மாநிலம் என பல பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் முகாமிடுவார்கள்.

    இந்நிலையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை போதிய அளவில் இன்னும் பொழியாததால் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அருவிகளுக்கு தண்ணீர் வரத்து மிகவும் குறைந்து காணப்படுகிறது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் உட்பகுதிகளில் அவ்வப்போது பெய்து வரும் சாரல் மலை காரணமாக குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவிக்கு மட்டும் தண்ணீர் வரத்து தற்போது சற்று அதிகரித்து காணப்படுகிறது. இன்று சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால் குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் குளிப்பதற்கு காலை முதலே சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருந்தனர்.

    அருவி பகுதிகளில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை சற்று அதிகமாகவே காணப்பட்டது. ஐந்தருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பகுதியில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டதால் அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அருவியில் குளிக்க வந்த பயணிகள் அனைவரையும் வரிசையில் நின்று குளித்து செல்ல அறிவுறுத்தினர்.

    • மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள பகுதிகளில் பரவலாக மழை நீடித்து வருகிறது.
    • இன்று காலை ஐந்தருவி, பழையகுற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள தென்காசி, செங்கோட்டை, ஆய்க்குடி, சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் பரவலாக மழை நீடித்து வருகிறது. அதிகபட்சமாக ஆய்க்குடியில் 5 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் கனமழையால் குற்றாலம் அருவிகளில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு நீடித்து வருகிறது. இதனால் அங்கு கடந்த 2 நாட்களாக சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க அனுமதி வழங்கப்படவில்லை.

    குளிக்க அனுமதி

    இந்நிலையில் இன்று காலை நீர்வரத்து சீரானதை தொடர்ந்து ஐந்தருவி, பழையகுற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே நேரம் மெயினருவியில் மட்டும் 3-வது நாளாக தடை நீடித்தது.

    அங்கும் நீர்வரத்து சீரான பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மெயினருவிக்கு வந்த சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் பழையகுற்றாலம் அருவி மற்றும் ஐந்தருவியில் குளிக்க சென்றனர்.

    அணை நிலவரம்

    அணை பகுதிகளை பொறுத்தவரை கடனா அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 25 மில்லிமீட்டரும், குண்டாறில் 18.6 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. தொடர்மழையின் காரணமாக கடனா அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 71.80 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 79.25 அடியாகவும் உள்ளது.

    குண்டாறு அணையில் 34.50 அடி நீர் இருப்பு உள்ளது. அடவிநயினார் கோவில் அணை நீர்மட்டம் 3 அடி உயர்ந்து 63 அடியாக உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் நெல் மற்றும் வாழை சாகுபடி பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    • செண்பகாதேவி அருவியில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்தில் இருபுறமும் மலை முகட்டுக்கிடையில் இடமானது பறந்து விரிந்து காணப்படுகிறது.
    • அருவியில் தண்ணீர் விழுகிற வகையிலும், மழைக் காலங்களில் வெள்ளப் பெருக்கால் உயிர் சேதம் ஏற்படாத வண்ணமும் ஏற்பாடு செய்யலாம்.

    தென்காசி:

    மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள குற்றாலம் மெயின் அருவிக்கு மேலே செண்பகாதேவி அருவியில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்தில் இருபுறமும் மலை முகட்டுக்கிடையில் இடமானது பறந்து விரிந்து காணப்படுகிறது.

    அந்த பகுதியில் புதிதாக அணை கட்டி ஆண்டு முழுவதும் குற்றால அருவியில் தண்ணீர் விழுகிற வகையிலும், மழைக் காலங்களில் வெள்ளப் பெருக்கால் உயிர் சேதம் ஏற்படாத வண்ணமும் ஏற்பாடு செய்யலாம். இதற்கு பொதுப்பணித்துறை மூலம் அணை கட்டுவதற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகனிடம் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாபன் கோரிக்கை மனு வழங்கி உள்ளார்.

    அணை கட்ட திட்டம் நிறைவேறுகிற போது வனத்துறை அனுமதி அவசியம் என்பதனால் அணை கட்டும் பட்சத்தில் அனுமதி வழங்கிட வேண்டும் என்ற அடிப்படையில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரனிடம் அவர் தனது கோரிக்கை மனுவினை வழங்கினார்.




    ×