search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Heavy"

    • சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
    • மாலையில் இருந்து இரவு முழுவதும் கன மழையாக பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று காலை முதல் சாரல் மழை பெய்தது. மாலையில் இருந்து இரவு முழுவதும் கன மழையாக பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இன்று காலை சாரல் மழையுடன் பனி மூட்டமும் காணப்படுகிறது. இதனால் வழக்கத்திற்கு மாறாக குளிரின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. தற்போது ஏற்காட்டில் காபி அறுவடை காலம் தொடங்கியுள்ளதால் காபி தோட்டங்களில் காபி அறுவடை செய்யப்பட்டு வருகிறது. இந்த மழை காரணமாக காபி அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது.

    மேலும் பனி மூட்டம் அடர்த்தியாக காணப்படுவதால் சாலைகளில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறு நகர்ந்து செல்கின்றன. குளிரின் தாக்கம் அதிகமாக காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

    • நாமக்கல் நகரப் பகுதியில் இன்று காலை கடும் பனிப்பொழிவு நிலவியது.
    • காலை 7 மணி வரை பனி மூட்டம் இருந்ததால் சாலையில் சென்ற வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே சென்றன.

    நாமக்கல்:

    நாமக்கல் நகரப் பகுதியில் இன்று காலை கடும் பனிப்பொழிவு நிலவியது. வழக்கத்திற்கு மாறாக பனி மூட்டம் மிகுந்து காணப்பட்டது. அருகே இருப்பவர்கள் யார் என தெரியாத அளவிற்கு பனி மூட்டம் இருந்தது.

    காலை 7 மணி வரை பனி மூட்டம் இருந்ததால் சாலையில் சென்ற வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே சென்றன. கடும் பனிப்பொழிவையும் பொருட்படுத்தாமல் அன்றாட வேலைக்கு சென்றனர்.

    நகரப் பகுதி கோடை வாசஸ்தலம் போல் காட்சியளித்த நிலையில், கடும் குளிரால் மக்கள் தவிப்புக்கு உள்ளாகினர்.

    • மார்கழி மாதம் இன்று பிறந்த நிலையில் நாமக்கலில் கடும் பனி மூட்டம் நிலவியது.
    • அதிகாலை முதல் பனிமூட்டம் இருந்ததால் சாலை முழுவதும் மேகம் போல் பனி படர்ந்து இருந்தது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இந்த நிலையில் மார்கழி மாதம் இன்று பிறந்த நிலையில் நாமக்கலில் கடும் பனி மூட்டம் நிலவியது.

    அதிகாலை முதல் பனிமூட்டம் இருந்ததால் சாலை முழுவதும் மேகம் போல் பனி படர்ந்து இருந்தது. இதனால் அருகில் இருப்பவர்கள் கூட பார்க்க முடியாமல் நிலை காணப்பட்டது. வாகனங்கள் சாலையில் முகப்ப விளக்கை எரிய விட்டபடியே சென்றன. ராசிபுரம், மோகனூர் சுற்றுவட்டார பகுதிகளிலும் இதே போல் பனிமூட்டம் இருந்தது. பனி காரணமாக கடும் குளிர் நிலவியது. காலை 8 மணிக்கு மேல் தான் வெயில் வந்தது. குளிரால் பொது மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டது. பனி பொழிவு அதிகாமாக இருந்தாலும், இன்று வெயிலின் தாக்கமும் அதிகரித்து காணப்பட்டது.

    • பரமத்திவேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விசேஷங்கள் இல்லாததால் பூவன் வாழைத்தார் விலை கடும் வீழ்ச்சி.
    • கடந்த வாரம் நடைபெற்ற பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக தார் ஒன்று ரூ.600க்கு விற்பனையானது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், பொத் தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, கொந்தளம், அண்ணா நகர், பிலிக்கல் பாளையம், ஆனங்கூர், ஜேடர்பாளையம், நன்செய் இடையாறு, குப்புச்சிபாளையம், பால ப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நூற்றுக் கணக்கான ஏக்கர் பரப்பில் விவசாயிகள் பூவன், வாழை, ரஸ்தாலி, பச்ச நாடன், கற்பூரவல்லி, மொந்தன் உள்ளிட்ட பல்வேறு ரகமான வாழைகளை பயிரிட்டுள்ளனர்.

    வாழைத்தார்கள் நன்கு விளைந்தவுடன் கூலி ஆட்கள் மூலம் வாழைத்தார்களை வெட்டி உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கு வாழைத்தார்களை விற்பனை செய்து வருகின்றனர்.

    அதேபோல் வியா பாரிகள் வாழைத் தோப்பு களிலேயே நேரடியாக வாங்கி செல்கின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக தார் ஒன்று ரூ.600-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக தார் ஒன்று ரூ.450-க்கும், பச்சநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக தார் ஒன்று ரூ.300-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் தார் ஒன்று ரூ.400-க்கும் மொந்தன் வாழைத்தார் ஒன்று ரூ.550க்கும் வாங்கிச் சென்றனர். நேற்று பூவன் வாழைத்தார் ஒன்று ரூ.250-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் தார் ஒன்று ரூ.350-க்கும், பச்சநாடன் வாழைத்தார் தார் ஒன்று ரூ.200-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் தார் ஒன்று ரூ.300-க்கும், மொந்தன் வாழைத்தார் ஒன்று ரூ.400க்கும் வாங்கிச் சென்றனர்.

    திருமண முகூர்த்தங்கள், கோவில் விசேஷங்கள் இல்லாததால் பூவன் வாழைத்தார் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித் தனர்.

    • திருமங்கலம் அருகே கனமழையால் கிராமம் துண்டிக்கப்பட்டது.
    • மழைநீர் நேசனேரி கிராமத்தை சூழ்ந்தது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு இடி, மின்னலுடன் கன மழை பெய்தது. இரவு 7 மணிக்கு தொடங்கிய கனமழை 10 மணிவரை பெய்தது.

    இதனால் நகரில் மின்தடை ஏற்பட்டது. கன மழையால் கவுண்டமா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மழைநீர் நேசனேரி கிராமத்தை சூழ்ந்தது. இதனால் செங்கப்படையிலிருந்து நேசனேரி கிராமத்திற்கு செல்லும் தரைப்பாலம் மூழ்கியது.

    இதேபோல் மதுரை- விருதுநகர் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து நேசனேரி விலக்கு வழியாக செல்லும் தரைப்பாலமும் தண்ணீரில் மூழ்கியதால் அந்த வழியாகவும் நேசனேரி கிராமத்திற்கு செல்ல முடியவில்லை. இதனால் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து நேசனேரி கிராமம் முற்றிலும் துண்டிக்கப்பட்டதால் கிராமமக்கள் வீடுகளில் முடங்கினர்.

    செங்கப்படை, திருமங்கலம், கள்ளிக்குடி பகுதிகளுக்கு செல்லும் பள்ளி மாணவ-மாணவிகள் கிராமத்தை விட்டுவெளியே செல்ல முடியவில்லை. கூலித்தொழில் மற்றும் விவசாய பணிக்கு செல்லும் கிராமமக்களும் வெளியேற வழியின்றி தவித்து வருகின்றனர்.

    திருமங்கலம் அருகேயுள்ள மேலக்கோட்டையில் ரெயில்வே தரைப்பாலம் உள்ளது. திருமங்கலத்திலிருந்து காரியாபட்டிக்கு செல்லும் சாலையில் ெரயில் தண்டவாளத்தை கடந்து செல்ல வசதியாக இந்த தரைப்பாலம் அமைக்கப்பட்டது.

    மழைகாலத்தில் தரைப்பாலத்தில் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை கொடுத்து வருகிறது. நேற்று இரவு பெய்த கனமழையால் மேலக்கோட்டை தரைப்பாலத்தில் தண்ணீர் அதிகளவில் தேங்கியது.

    தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரைக்கு வெள்ளைப்பூடு, கருவாடுகளை ஏற்றி கொண்டு சென்ற மினிவேன் நேற்று நள்ளிரவு 1 மணிக்கு மேலக்கோட்டை தரைப்பாலத்தை கடக்க முயன்றது. நடுப்பாலத்தினை அடைந்த போது அந்த வேன் தண்ணீரில் சிக்கி கொண்டது.

    இது குறித்து மேலக்கோட்டை பஞ்சாயத்து தலைவர் கோபி பொதுமக்கள் உதவியுடன் மினிவேனை தரைப்பாலத்தில் இருந்து அப்புறப்படுத்தினார்.

    மழைநீர் அதிகளவில் தரைப்பாலத்தில் தேங்கியதால் திருமங்கலத்தில் இருந்து காரியாபட்டி செல்லும் பஸ்கள், லாரிகள் மாற்றுபாதையான சாஸ்திரிபுரம் ரெயில்வே கேட் வழியாக சென்று வருகின்றன.

    மதுரை மாவட்டம் எழுமலையில் உற்பத்தியாகி வரும் தெற்கு ஆறு சின்ன–கட்டளை, சவுடார்பட்டி, மீனாட்சிபுரம், கிழவனேரி வழியாக செங்கப்படையை அடுத்த நேசனேரியில் கவுண்டமாநதியுடன் இணைகிறது.

    இங்குள்ள சிவரக்கோட்டை பகுதியில் 2 ஆறுகளும் கமண்டல நதியாக மாறுகிறது. திருமங்கலம், கள்ளிக்குடி பகுதிகளில் விவசாயத்திற்கு பலன் தரும் கமண்டல நதி காரியாபட்டியில்உள்ள குண்டாற்றில் ஒன்று சேருகிறது. திருமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு பெய்த பலத்த மழையால் கமண்ட நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    நீண்ட நாள்களுக்கு பின்பு ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதை கண்ட சிவரக்கோட்டை பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

    • தாரமங்கலம் நகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க.வினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.
    • மேலும் கூட்டத்தில் அத்தியாவசிய திட்டப்பணிகள் குறித்த செலவுகளுக்கு தீர்மானம் நிறைவேற்றபட்டது.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் நகராட்சி மன்ற கூட்டம் நேற்று கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகரமன்றத்தலைவர் குப்பு என்கிற குணசேகரன் தலைமை தாங்கினார். ஆணையாளர் மங்கையர்கரசன், துணைத்தலைவர் தனம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் கடந்த 3 மாதங்களில் சுகாதார பணிகளுக்கு தேவையான பினாயில், சுண்ணாம்பு உள்ளிட்ட பொருட்கள் வாங்கியதற்கான அனுமதி கோரி மன்ற பொருளில் அனுமதிக்கு வைக்கப்பட்டது.

    அப்போது கடந்த 3 மாதங்களில் மன்ற உறுப்பினர்கள் யாருடைய அனுமதியும் இன்றி பல லட்சம் ரூபாய்க்கு பொருட்கள் வாங்கியதாக கணக்கு காட்டுவதில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது என்று கூறி அ.தி.மு.க. கவுன்சிலர்கள் பாலசுப்பிரமணியம், ருக்மணி, சின்னுசாமி, தமிழ்செல்வி ஆகியோர் ஆணையாளரிடம் வாக்குவாதம் செய்தனர் .

    இதை தொடர்ந்து பொருட்கள் வாங்கியதற்கான பில் மற்றும் கணக்குகள் குறித்து ஆதாரத்துடன் உரிய விளக்கம் கொடுக்கப்பட்டது. பின்னர் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் அமைதியாக அமர்ந்தனர். மேலும் கூட்டத்தில் அத்தியாவசிய திட்டப்பணிகள் குறித்த செலவுகளுக்கு தீர்மானம் நிறைவேற்றபட்டது.

    • சுங்கசாவடிக்கு பணம் செலுத்த தவிர்த்து பெருந்துறை-காங்கேயம் ரோட்டில் செல்லும் கனரக லாரிகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
    • சென்னிமலை வழியாக வரும் லாரிகள் அடிக்கடி விபத்துக்களையும், உயிர் இழப்புகளையும் ஏற்படுத்தி வருகின்றன.

    சென்னிமலை:

    சென்னிமலை- பெருந்துறை ரோட்டில் உள்ள ஈங்கூரில் கடந்த 12 வருடங்களுக்கு முன்பு ெரயில்வே மேம்பாலம் திறந்து வைக்கப்பட்டது. அந்த பாலம் கட்டப்படுவதற்கு முன்பாக அந்த வழியே வாகனங்களில் செல்லும் அனைத்து மக்களும் ெரயில் செல்லும் வரை காத்திருந்த பின்பே செல்வார்கள்.

    ஈங்கூரில் ெரயில்வே மேம்பாலம் கட்டப்படுவதற்கு முன்பு பல்வேறு பொதுநல அமைப்பினரும், பொதுமக்களும் ெரயில்வே மேம்பாலத்திற்காக போராடினார்கள்.

    அதன்பிறகு ஈங்கூரில் ெரயில்வே மேம்பாலம் கட்ட அரசு அனுமதியளித்தது. 2010-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு அதன்பிறகு இந்த மேம்பாலம் வழியாக எந்த வித தடங்களும் இன்றி வாகனங்கள் சென்று வருகின்றன.

    இந்த மேம்பாலம் கட்டப்பட்ட பிறகு தேசிய நெடுஞ்சாலை வழியாக பொள்ளாச்சி, கேரளா செல்லும் பெரும்பாலான லாரிகள் பெருந்துறையில் இருந்து சென்னிமலை வழியாக செல்ல ஆரம்பித்து விட்டன.

    தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்றால் விஜயமங்கலம், கருமத்தம்பட்டி உள்பட 3 இடங்களில் உள்ள சுங்க சாவடிகளில் பணம் செலுத்த வேண்டும் என்பதற்காக தினமும் ஆயிரக்கணக்கான லாரிகள் ஈங்கூர், சென்னிமலை, காங்கேயம் வழியாக பொள்ளாச்சி மற்றும் கேரளாவுக்கு செல்கின்றன.

    அதேபோல் அங்கிருந்து வரும் லாரிகளும் இதன் வழியாக செல்கின்றன. இதனால் சென்னிமலை -பெருந்துறை ரோடு, சென்னிமலை-காங்கேயம் செல்லும் ரோடு, மற்றும் குறுகிய ரோடாக உள்ள சென்னிமலை டவுன் பகுதி ஆகியவை மிகுந்த போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளாகி விட்டது.

    இந்த வழியாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் அனைவரும் உயிரை கையில் பிடித்துக் கொண்டு செல்கின்றனர். சென்னிமலை வழியாக வரும் லாரிகள் அடிக்கடி விபத்துக்களையும், உயிர் இழப்புகளையும் ஏற்படுத்தி வருகின்றன.

    நான்கு வழிச் சாலைகளில் செல்லும் கண்டெய்னர்கள் எல்லாம் சுங்க கட்டணம் கட்டுவதை தவிர்க்க இந்த வழியில் செல்கின்றன. இதனால் இந்த ரோடு தாங்காமல் அடிக்கடி பெயர்ந்து போய்விடுகிறது. மேலும் ஒரே நேரம் 2, 3 லாரிகள் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    இதனால் குறுகலான சாலையை கொண்ட சென்னிமலை பகுதியில் அடிக்கடி சென்னிமலை கிழக்கு ராஜா வீதி மற்றும் சென்னிமலைபாளையம் பிரிவு, மலை கணுவாய், பசுவபட்டி வெப்பிலி ரோடு பிரிவு ஆகிய இடங்களில் மாதம் தோறும் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.

    காங்கேயத்திலிருந்து சென்னிமலை வழியாக பெருந்துறைக்கோ அல்லது பெருந்துறையில் இருந்து காங்கேயத்திற்கோ இரு சக்கர வாகனங்களிலோ அல்லது கார்களிலோ குறிப்பாக காலை, மாலை நேரங்களில் செல்பவர்களுக்கு இந்த லாரிகளின் தொந்தரவு நன்கு தெரியும்.

    சரக்கு லாரிகள் மற்றும் கண்டெய்னர் லாரிகளால் ஏற்படும் விபத்துக்களை தடுக்கவே நான்கு வழி சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் அந்த வழியாக செல்லாமல் சுங்கச் சாவடிகளுக்கு பயந்து குறுக்கு வழியில் லாரிகள் செல்வதால் பொதுமக்களுக்கு பெரிய இடையூறு ஏற்படுவதுடன், உயிர் இழப்பும் ஏற்பட்டு வருகிறது.

    ஈங்கூர் மேம்பாலம் கட்டப்படாமல் இருந்திருந்தால் ெரயில் வரும் போது மட்டும் ஒரு பத்து நிமிடங்கள் தான் நாம் நின்று விட்டு சென்றிருப்போம். ஆனால் தற்போது இந்த லாரிகளால் ஒரே வழியாக சென்று விடும் நிலையில் உள்ளோம் என சென்னிமலை பகுதி மக்கள் புலம்பி வருகின்றனர்.

    சென்னிமலை டவுன் பகுதிக்குள் இந்த கனரக லாரிகள் நுழைய தடை விதித்தால் கூட போதும் என்கின்றனர். இதை தவிர்க்க சென்னிமலை நகரை சுற்றி ரிங்ரோடு பைபாஸ் அமைக்க வேண்டும் என சென்னிமலை ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றியும் அரசுக்கு அனுப்பி உள்ளனர்.

    ×