search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருமணம் மற்றும் கோவில் விசேஷங்கள் இல்லாததால் பூவன் வாழைத்தார் விலை கடும் வீழ்ச்சி
    X

    திருமணம் மற்றும் கோவில் விசேஷங்கள் இல்லாததால் பூவன் வாழைத்தார் விலை கடும் வீழ்ச்சி

    • பரமத்திவேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விசேஷங்கள் இல்லாததால் பூவன் வாழைத்தார் விலை கடும் வீழ்ச்சி.
    • கடந்த வாரம் நடைபெற்ற பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக தார் ஒன்று ரூ.600க்கு விற்பனையானது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், பொத் தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, கொந்தளம், அண்ணா நகர், பிலிக்கல் பாளையம், ஆனங்கூர், ஜேடர்பாளையம், நன்செய் இடையாறு, குப்புச்சிபாளையம், பால ப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நூற்றுக் கணக்கான ஏக்கர் பரப்பில் விவசாயிகள் பூவன், வாழை, ரஸ்தாலி, பச்ச நாடன், கற்பூரவல்லி, மொந்தன் உள்ளிட்ட பல்வேறு ரகமான வாழைகளை பயிரிட்டுள்ளனர்.

    வாழைத்தார்கள் நன்கு விளைந்தவுடன் கூலி ஆட்கள் மூலம் வாழைத்தார்களை வெட்டி உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கு வாழைத்தார்களை விற்பனை செய்து வருகின்றனர்.

    அதேபோல் வியா பாரிகள் வாழைத் தோப்பு களிலேயே நேரடியாக வாங்கி செல்கின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக தார் ஒன்று ரூ.600-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக தார் ஒன்று ரூ.450-க்கும், பச்சநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக தார் ஒன்று ரூ.300-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் தார் ஒன்று ரூ.400-க்கும் மொந்தன் வாழைத்தார் ஒன்று ரூ.550க்கும் வாங்கிச் சென்றனர். நேற்று பூவன் வாழைத்தார் ஒன்று ரூ.250-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் தார் ஒன்று ரூ.350-க்கும், பச்சநாடன் வாழைத்தார் தார் ஒன்று ரூ.200-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் தார் ஒன்று ரூ.300-க்கும், மொந்தன் வாழைத்தார் ஒன்று ரூ.400க்கும் வாங்கிச் சென்றனர்.

    திருமண முகூர்த்தங்கள், கோவில் விசேஷங்கள் இல்லாததால் பூவன் வாழைத்தார் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித் தனர்.

    Next Story
    ×