என் மலர்
நீங்கள் தேடியது "electricity board office"
- வாடகை பாக்கி தராததால் நடவடிக்கை
- பணிகள் பாதிப்பு
வேலூர்:
காட்பாடி வள்ளிமலை சாலை பகுதியில் மின்வாரிய அலுவலகம் இயங்கி வருகிறது.
இந்த அலுவலகம் லிடியா சரோஜினி என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் வாடகையில் இயங்கி வருகிறது.
இந்த கட்டிடத்திற்கு மாதம் 2000 ரூபாய் வாடகை. கடந்த 2021-ம் ஆண்டு முதல் தற்போது வரை வாடகை பாக்கி உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் இதன் உரிமையாளர் இன்று அலுவலகத்தை பூட்டினார். மின்வாரிய அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் மின்வாரிய அலுவலகத்தில் பணிகள் பாதிக்கப்பட்டன. இந்த சம்பவம் காட்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- பொல்லிகாளிபாளையம் மின் அலுவலகத்தின் கீழ் சுமார் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளன.
- 5 ஆண்டுகள் ஆகியும் மின் அலுவலகம் அமைக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள கரைப்புதூரை அடுத்த திருவள்ளுவர் நகர் பகுதியில் மின்வாரிய அலுவலகம் அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால் இதுவரை அமைக்க வில்லை. இதனால் மின்கட்டணம் செலுத்த அந்தப்பகுதி மக்கள் சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பொல்லிகாளிபாளையம் செல்ல வேண்டியுள்ளதாக தெரிவித்தனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
பொல்லிகாளிபாளையம் மின் அலுவலகத்தின் கீழ் சுமார் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளன. இதனை நிர்வாகம் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக பொல்லிகாளிபாளையம் மின் அலுவலகத்தின் மேற்கு பகுதிகளான காளிநாதம்பாளையம். அக்கணம்பாளையம், பொன்நகர், குப்புச்சிபாளையம், அல்லாளபுரம், பாரியூர்அம்மன் நகர், அவரப்பாளையம், நொச்சிப்பாளையம் உள்ளிட்ட ஊர்களில் உள்ள சுமார் 2ஆயிரத்துக்கு மேற்பட்ட மின்இணைப்புகளை பிரித்து திருவள்ளுவர் நகர் பகுதியில் மின் அலுவலகம் அமைக்க திட்டமிடப்பட்டது.
மின்கட்டணம் செலுத்த 5 கிலோ மீட்டர் தூரம் செல்வதால் நொச்சிபாளையம் திருவள்ளூவர் நகரில் மின்வாரிய அலுவலகம் அமைப்பது என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். ஆனால் 5 ஆண்டுகள் ஆகியும் மின் அலுவலகம் அமைக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதற்காக நியமிக்கப்பட்ட மின் ஊழியர்கள் அனைவரும் பொல்லிகாளிபாளையம் மின் அலுவலகத்திலேயே பணிகளை தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை:
சென்னை அண்ணா சாலையில் உள்ள மின் வாரிய தலைமை அலுவலகத்தில் லஞ்சப் பணம் கைமாறப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மாலை மின் வாரிய அலுவலகத்தில் புகுந்து அதிரடி சோதனை நடத்தினர்.
முக்கிய அதிகாரிகள் மற்றும் என்ஜினீயர்களின் அலுவலகங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டது. தங்கம், வெள்ளி, நாணயங்களும் சிக்கியது. அதனை பறிமுதல் செய்த போலீசார் இதன் பின்னணி குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மின் வாரிய தலைமை பொறியாளர் முத்துவின் அலுவலகத்தில் ரூ.1½ லட்சம் கணக்கில் வராத பணம் இருந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் இந்த பணத்துக்கு கணக்கு கேட்டுள்ளனர். நேற்று இரவு 9 மணி அளவில் தொடங்கிய சோதனை இரவு முழுவதும் நீடித்தது. புத்தாண்டையொட்டி, மின் வாரிய ஒப்பந்ததாரர்கள், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் மின் வாரிய உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரும் லஞ்ச ஒழிப்பு சோதனையின் பின்னணியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. #Vigilancepoliceraid #ElectricityBoardoffice