என் மலர்
உள்ளூர் செய்திகள்

காட்பாடியில் உள்ள மின்வாரிய அலுவலகம் பூட்டப்பட்டுள்ள காட்சி.
மின்வாரிய அலுவலகத்திற்கு பூட்டு
- வாடகை பாக்கி தராததால் நடவடிக்கை
- பணிகள் பாதிப்பு
வேலூர்:
காட்பாடி வள்ளிமலை சாலை பகுதியில் மின்வாரிய அலுவலகம் இயங்கி வருகிறது.
இந்த அலுவலகம் லிடியா சரோஜினி என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் வாடகையில் இயங்கி வருகிறது.
இந்த கட்டிடத்திற்கு மாதம் 2000 ரூபாய் வாடகை. கடந்த 2021-ம் ஆண்டு முதல் தற்போது வரை வாடகை பாக்கி உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் இதன் உரிமையாளர் இன்று அலுவலகத்தை பூட்டினார். மின்வாரிய அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் மின்வாரிய அலுவலகத்தில் பணிகள் பாதிக்கப்பட்டன. இந்த சம்பவம் காட்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story