என் மலர்
நீங்கள் தேடியது "DMK Student team"
- தி.மு.க. மாணவர் அணி செயலாளர் ராஜீவ்காந்தி தலைமை தாங்கியுள்ளார்.
- போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கடந்த வாரம் கோவையில் 2 நாட்கள் முகாமிட்டு தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
அப்போது கோவில் நிதியில் கல்லூரி கட்ட எதிர்ப்பு தெரிவித்து சில கருத்துக்களை தெரிவித்தார். இதற்கு கண்டனம் தெரிவித்தும், மத்திய அரசை கண்டித்தும் கோவையில் இன்று தி.மு.க. மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்தது.
கோவை டாடாபாத்தில் இன்று மாலை ஆர்ப்பாட்டம் தொடங்கியது. போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். தி.மு.க. மாணவர் அணி செயலாளர் ராஜீவ்காந்தி தலைமை தாங்கியுள்ளார். ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர்.
இதுகுறித்து அவர் கூறுகையில்," கோவில்களுக்கு மக்கள் காணிக்கையாகக் கொடுக்கும் உபரி நிதியிலிருந்து கல்வி நிலையங்கள், சிறார், முதியோர் பராமரிப்பு நிலையங்கள், மருத்துவமனைகள் அமைக்கலாம் என்பது இந்து சமய அறநிலையத்துறையின் சட்டங்களில் ஒன்று.
ஆனால் கல்விக்காக திராவிட மாடல் அரசு எடுக்கும் முன்னெடுப்புகளைக் கொச்சைப்படுத்தும் விதமாக பேசிய எடப்பாடி பழனிசாமியை கண்டித்து இந்த போராட்டத்தை நடத்துகிறோம்.
மேலும் தமிழ்நாட்டில் கல்வி உரிமையை பறிக்கும் மத்திய அரசை கண்டித்தும், அதற்கு துணைபோகும் அ.தி.மு.க.வை கண்டித்தும் இந்த போராட்டம் நடக்கிறது" என்றார்.
- அமைச்சர் எ.வ.வேலு அறிக்கை
- தாமதமாக வரும் விண்ணப்பங்கள் எக்காரணத்தை கொண்டும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை தெற்கு, வடக்கு மாவட்டத்தில் உள்ள ஒன்றிய, நகர, பேரூராட்சி களில் தி.மு.க. மாணவர் அணி பொறுப்புகளுக்கு வரும் 10-ந் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு பொதுப்பணித்துறை அமைச்சரும், கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பி னருமான எ.வ.வேலு கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சரும், கழகத்தலைவருமான மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, திருவண்ணாமலை தெற்கு வடக்கு மாவட்டத்தில் திமுக மாணவர் அணி, ஒன்றிய, நகர, பேரூர் அமைப்பா ளர்கள், துணை அமைப்பா ளர்கள் பொறுப்புகளுக்கு, விண்ணப்பிக்க விரும்புவோர், திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தை சேர்ந்தவர்கள், சாரோனில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்திலும், திருவண்ணாமலை வடக்கு மாவட்டத்தை சேர்ந்த வர்கள், வந்தவாசியில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில், விண்ணப்பங்களை பெற்று, அதனை உரிய ஆவணங்க ளுடன் பூர்த்தி செய்து, அந்ததந்த மாவட்ட அலுவல கங்களில் வரும் 10-ந்தேதி வியாழக்கிழமை மாலைக்குள் ஒப்படைத்திட வேண்டும்.
நகர, ஒன்றியம், பேரூர் அமைப்பிற்கு ஒரு அமைப்பாளர், ஐந்து துணை அமைப்பாளர்கள் நியமிக் கப்படுவர். துணை அமைப்பாளர்களில் ஒருவர் ஆதிதிராவிடர், பழங்குடியின இனத்தைச் சேர்ந்தவராகவும் மற்றும் பெண் துணை அமைப்பாளர் ஒருவரும் இருப்பது அவசியம்.
ஒரு துணை அமைப்பாளர், கண்டிப்பாக தற்போது கல்லூரியில் பயிலக்கூடிய மாணவராக இருத்தல் அவசியம்.
30 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டும் இப்பொறுப்பு களுக்கு விண்ணப்பிக்கவும்.
நியமிக்கபடவுள்ள நிர்வாகிகள் அனைவரும் கல்லூரி/ டிப்ளமோ படிப்பை முடித்தவராகவோ அல்லது தற்போது கல்லூரியில் பயி லக்கூடியவராகவோ இருத்தல் அவசியம்.
இப்பொறுப்புகளில் உள்ள தற்போதைய நிர்வாகிகள், மீண்டும் அப்- பொறுப்புகளுக்கு வர விரும்பினால், அவர்களும் விண்ணப்பிக்க வேண்டியது அவசியம்.
விண்ணப்பம்
விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் தெளிவாக. முழுமையாக நிரப்பி, பாஸ்போர்ட் அளவு கலர் புகைப்படம் ஒட்டி விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்துடன் கழக உறுப்பினர் அட்டை, வாக் காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, கல்விச் சான்றிதழின் நகல் இணைப்பது அவசியம்.
முழுமையாகப் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அந்தந்த மாவட்டக் கழகத்தில் ஆகஸ்டு மாதம், 10-ந் தேதி வியாழக்கிழமை மாலை மணிக்குள் ஒப்படைக்கவேண்டும்.
தாமதமாக வரும் விண்ணப்பங்கள் எக்கார ணத்தை முன்னிட்டும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- எது பாசிசம் தெரியுமா மதிப்புகுறிய விஜய் அவர்களே?
- பாசிசத்திற்கும் பாயாசத்திற்கும் வித்தியாசம் தெரியாத உங்களுக்கு இது தெரிய வாய்ப்பு இல்லை.
திமுக மாணவர் அணி தலைவர் ராஜீவ் காந்தி த.வெ.க தலைவர் விஜய்க்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
எது பாசிசம் தெரியுமா மதிப்புகுறிய விஜய் அவர்களே!?
தாங்கள் ஆளுனரிடம் கொடுத்த கடிதத்தில் உங்கள் பெயர் விஜய் என்று தான் உள்ளது!!
ஆனால் கமலாலயத்தின் ஒரு பிரிவாக இயங்கும் தமிழ்நாட்டின் ஆளுனர் மாளிகையின் செய்தி குறிப்பில் உங்கள் பெயர் ஜோசப் விஜய் என்று உள்ளது!!
இது பாசிசம்!!
பாசிசத்திற்கும் பாயாசத்திற்கும் வித்தியாசம் தெரியாத உங்களுக்கு இது தெரிய வாய்ப்பு இல்லை!!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- தமிழ்நாட்டு மக்களின் ஒருமித்த குரலாக சட்டப்பேரவையில் தனித்தீர்மானத்தை முதலமைச்சரே முன்மொழிந்து தீர்மானத்தை நிறைவேற்றினார்.
- டி.ஆர்.பாலு தலைமையில் இருக்கக்கூடிய அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்கக்கூடிய போராட்டமாக இது இருக்கும்.
யுஜிசி விதிகளுக்கு எதிராக டெல்லியில் நாளை திமுக சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்பார் என திமுக மாணவரணிச் செயலாளர் எழிலரசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எழிலரசன் செய்தியாள்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
மத்திய பாஜக அரசு பொறுப்பேற்றதில் இருந்து தொடர்ந்து மாநில உரிமைகளை பறிப்பதிலும், குறிப்பாக காவிமயமாக்குவதற்காக கல்வியை ஒட்டுமொத்தமாக அவர்கள் கட்டுப்பாட்டை கொண்டு செல்கிற முயற்சிகளில், தொடர்ந்து செய்துக்கொண்டிருக்கின்ற நடவடிக்கைகளில் ஒன்றாக தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ கொண்டு வந்தார்கள்.
அந்த அறிக்கையில் வழங்கப்பட்டதை போல இனி யுஜிசி என்று ஒன்று இருக்காது. இன்று யுஜிசி மூலம் கல்வியை மொத்தமாக அபகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு பல்கலைக்கழக நிதி நெல்கைக் குழு என்பதனை இன்றைக்கு பல்கலைக்கழகங்களை விழுகுகின்ற குழுவாக மாறுகின்ற வகையில் மாநில உரிமைகளை பறிப்பதற்கும், கல்வி உரிமையை பறிப்பதற்கும், சமூக நீதிக்கு எதிராகவும் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானதாகவும், பல வரைவு நெறிவு முறைகளை வெளியிட்டிருக்கிறது.
அதை எப்போதும் போல பிற மாநிலங்கள் கவனித்துக் கொண்டிருந்தாலும் அதனை விரைவாக எதிர்க்கக்கூடிய மாநிலமாக சமூக நீதியின் மண்ணாக விளங்கக்கூடிய தமிழ்நாட்டில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டபேரவையில் கண்டித்தும் அதை நிறைவேற்றக் கூடாது என்றும், தமிழ்நாட்டு மக்களின் ஒருமித்த குரலாக சட்டப்பேரவையில் தனித்தீர்மானத்தை அவரே முன்மொழிந்து தீர்மானத்தை நிறைவேற்றினார்.
இதைதொடர்ந்து திமுக மாணவர் அணியும், பிற மாநில அமைப்புகளின் மாணவர் அணியும் கூட்டமைப்பை கொண்டு ஒரு மாபெரும் போராட்டம் சென்னையின் நடந்தது.
ஒரு மாதம் ஆன நிலையில், டெல்லி ஜந்தர் மந்தரில் நாளை காலை 10 மணிக்கு மாபெரும் அறப்போராட்டத்தை நடத்த இருக்கிறோம்.
டி.ஆர்.பாலு தலைமையில் இருக்கக்கூடிய அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்கக்கூடிய போராட்டமாக இது இருக்கும்.
இந்த போராட்டத்தில் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், டிஎம்சி சார்பாக சுதீப், திருமாவளவன் ஆகியோர் பங்கேற்று உரையாற்ற இருக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.






