search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Beirut"

    • பெய்ரூட் மீது இஸ்ரேல் ராணுவம் வான்வெளி தாக்குதல் நடத்தியது.
    • இதில் அப்பகுதியில் இருந்த குடியிருப்பு பகுதிகள் கடுமையாக சேதமடைந்தன.

    பெய்ரூட்:

    பாலஸ்தீன நகரமான காசா இஸ்ரேல் தாக்குதலில் உருக்குலைந்துள்ள நிலையில் முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளவர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து வருகிறது.

    இந்நிலையில், லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள குடியிருப்புகள் மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 100க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். தாக்குதலில் அப்பகுதியில் இருந்த குடியிருப்பு பகுதிகள் சேதமடைந்துள்ளன என லெபனான் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    உயிரிழந்தவர்களின் உடல்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    • பெய்ரூட் சுற்றுவட்டார மாவட்டங்களில் உள்ள மக்களை தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும்படி இஸ்ரேல் எச்சரித்தது
    • ஹிஸ்புல்லா அமைப்பின் செயற்குழு தலைவரான ஹாசிம் நஸ்ரல்லாவின் உறவினரும் ஆவார்.

    லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பைக் குறிவைத்து இஸ்ரேல் நடந்து வரும் தாக்குதல்கள் மத்திய கிழக்கில்  போர் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா தலைமையகம் தாக்கப்படத்தில் அவ்வமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார்.

    இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக 150 முதல் 200 ஏவுகணைகளைக் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இஸ்ரேல் மீது ஈரான் ஏவியது. ஆனால் பெரும்பாலானவற்றை இஸ்ரேல் தாக்கி அளித்ததால் பெரிய அளவிலான உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. இதற்கிடையே லெபனானுக்குள் வான்வழியாகும், தரை மார்க்கமாகவும் இஸ்ரேல் தனது தாக்குதல்களைத் தொடர்ந்து வருகிறது.

    இந்நிலையில் பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா புலனாய்வுத் தலைமையகத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது. பெய்ரூட் சுற்றுவட்டார மாவட்டங்களில் உள்ள மக்களை தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும்படி இஸ்ரேல் எச்சரித்திருந்த நிலையில் நேற்றைய தினம் இந்த தாக்குதலை இஸ்ரேல் மேற்கொண்டுள்ளது.

    ஹிஸ்புல்லாவின் அடுத்த தலைவராகக் கருதப்படும் ஹாசிம் சஃபிதீன் [Hashem Safieddine] இந்த தாக்குதலில் குறிவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஹிஸ்புல்லா அமைப்பின் செயற்குழு தலைவரான ஹாசிம் நஸ்ரல்லாவின் உறவினரும் ஆவார்.

     

    ஹிஸ்புல்லா தலைமையகம் அமைந்துள்ள தாகியே [dahieh] பகுதியில் பூமிக்குக் கீழ் அமைக்கப்பட்ட பங்கரில் ஹாசிம் பதுங்கியிருந்ததாகக் கூறப்படும் நிலையில் தற்போதைய இஸ்ரேல் தாக்குதலுக்குப் பின் அவரது நிலை குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இதற்கிடையே வடக்கு இஸ்ரேலில் ஹாபியா [Hafia] பகுதியில் உள்ள சாக்நின்[Sakhnin] மற்றும் நெஸ்ஹர்[Nesher] ராணுவ ஆலைகள் அமைத்துள்ள தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ஹிஸ்புல்லா அமைப்பும் தெரிவித்துள்ளது.

    • காசா மீது இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.
    • இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹிஸ்புல்லா இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்துகிறது.

    ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. காசா மீது தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து லெபனான் நாட்டில் உள்ள ஹிஸ்புல்லா ஆயுதமேந்திய குழு இஸ்ரேல் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது.

    லெபனான் இஸ்ரேல் எல்லையில் அமைந்துள்ளது. இதனால் அடிக்கடி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு இஸ்ரேலும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்று இஸ்ரேல் ராணுவம் லெபனான் நாட்டின் தலைநகரான பெய்ரூட்டில் உள்ள ஷியா மாவட்டத்தில் உள்ள கட்டடத்தை குறிவைத்து வான்தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் சீனியர் தலைவர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஹிஸ்புல்லா ஆதிக்கம் செலுத்தி வரும் பகுதியிலேயே இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில், பாலஸ்தீன தலைவர்களை குறிவைத்து லெபனானில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என ஹிஸ்புல்லா தலைவர் சயத் ஹசன் நஸ்ரல்லா தெரிவித்துள்ளார்.

    கொல்லப்பட்ட தலைவர் சலா அரூரி என்றும், குழுவின் ராணுவ பிரிவின் நிறுவனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இஸ்ரேல் டிரோன் மூலம் இந்த தாக்குதலை நடத்தியதாக லெபனான் நாட்டின் தேசிய நியூஸ் ஏஜென்சி தெரிவித்துள்ளது. ஆனால் இஸ்ரேல் அதிகாரிகள் இதற்கு கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர், நாங்கள் தொடர்ந்து ஹமாஸ்க்கு எதிராக போரில் கவனம் செலுத்துவோம் என்றார்.

    ஆனால் அவர் நேரடியாக சலா அரூரி மரணம் குறித்து ஏதும் தெரிவிக்கவில்லை. நாங்கள் எந்த சூழ்நிலையிலும் தயாராக இருக்கிறோம்" என்றார்.

    ×