ஹிஸ்புல்லாவின் அடுத்த தலைவரையும் குறிவைத்து தாக்கிய இஸ்ரேல்.. பெய்ரூட் தலைமையகம் மீது குண்டு மழை

பெய்ரூட் சுற்றுவட்டார மாவட்டங்களில் உள்ள மக்களை தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும்படி இஸ்ரேல் எச்சரித்ததுஹிஸ்புல்லா அமைப்பின் செயற்குழு தலைவரான ஹாசிம் நஸ்ரல்லாவின் உறவினரும் ஆவார்.
ஹிஸ்புல்லாவின் அடுத்த  தலைவரையும் குறிவைத்து தாக்கிய  இஸ்ரேல்.. பெய்ரூட் தலைமையகம் மீது குண்டு மழை
Published on

லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பைக் குறிவைத்து இஸ்ரேல் நடந்து வரும் தாக்குதல்கள் மத்திய கிழக்கில்  போர் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா தலைமையகம் தாக்கப்படத்தில் அவ்வமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக 150 முதல் 200 ஏவுகணைகளைக் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இஸ்ரேல் மீது ஈரான் ஏவியது. ஆனால் பெரும்பாலானவற்றை இஸ்ரேல் தாக்கி அளித்ததால் பெரிய அளவிலான உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. இதற்கிடையே லெபனானுக்குள் வான்வழியாகும், தரை மார்க்கமாகவும் இஸ்ரேல் தனது தாக்குதல்களைத் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா புலனாய்வுத் தலைமையகத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது. பெய்ரூட் சுற்றுவட்டார மாவட்டங்களில் உள்ள மக்களை தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும்படி இஸ்ரேல் எச்சரித்திருந்த நிலையில் நேற்றைய தினம் இந்த தாக்குதலை இஸ்ரேல் மேற்கொண்டுள்ளது.

ஹிஸ்புல்லாவின் அடுத்த தலைவராகக் கருதப்படும் ஹாசிம் சஃபிதீன் [Hashem Safieddine] இந்த தாக்குதலில் குறிவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஹிஸ்புல்லா அமைப்பின் செயற்குழு தலைவரான ஹாசிம் நஸ்ரல்லாவின் உறவினரும் ஆவார்.

ஹிஸ்புல்லா தலைமையகம் அமைந்துள்ள தாகியே [dahieh] பகுதியில் பூமிக்குக் கீழ் அமைக்கப்பட்ட பங்கரில் ஹாசிம் பதுங்கியிருந்ததாகக் கூறப்படும் நிலையில் தற்போதைய இஸ்ரேல் தாக்குதலுக்குப் பின் அவரது நிலை குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இதற்கிடையே வடக்கு இஸ்ரேலில் ஹாபியா [Hafia] பகுதியில் உள்ள சாக்நின்[Sakhnin] மற்றும் நெஸ்ஹர்[Nesher] ராணுவ ஆலைகள் அமைத்துள்ள தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ஹிஸ்புல்லா அமைப்பும் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com