என் மலர்

  நீங்கள் தேடியது "Rashi"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • திருவாதிரை நட்சத்திரத்தின் அதிபதியாக ராகு பகவான் இருக்கிறார்.
  • திருவாதிரை நட்சத்திரக்காரர்களுக்கு உரிய தலவிருட்சமாக செங்காலி மரம் இருக்கிறது.

  27 நட்சத்திரங்களின் வரிசையில் ஆறாவதாக வருகின்ற நட்சத்திரம் திருவாதிரை நட்சத்திரமாகும். நவக்கிரக நாயகர்களில் திருவாதிரை நட்சத்திரத்தின் அதிபதியாக ராகு பகவான் இருக்கிறார். திருவாதிரை நட்சத்திரத்தின் அதிதேவதை ருத்ரன் எனப்படும் சிவபெருமான் இருக்கிறார். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்வில் ஏற்படும் இடர்கள் அனைத்தும் நீங்கி மிகுதியான அதிர்ஷ்டங்களும், யோகங்களும் உண்டாக கீழ்கண்ட பரிகாரங்களை முறைப்படி செய்து வந்தால் நன்மைகள் பெறலாம்.

  திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களின் ஜென்ம நட்சத்திர தினத்தன்று தஞ்சை மாவட்டத்திலிருக்கும் திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோவிலுக்கு சென்று, சிவபெருமானுக்கும் பார்வதிக்கும் அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து, வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்ய வேண்டும். பிறகு அங்கிருக்கும் ராகு பகவானின் பாலாபிஷேக பூஜைக்கு, பால் தானம் தந்து வழிபாடு செய்வதால் உங்கள் நட்சத்திரத்திற்கு ஏற்பட்டிருக்கும் ராகு கிரகத்தின் தோஷங்கள் அனைத்தும் நீங்கும். தினமும் காலை எழுந்து குளித்து முடித்ததும் சிவபெருமானுக்குரிய ருத்ர மகாமந்திரத்தை உங்களால் முடிந்த எண்ணிக்கையில் துதித்து வழிபடுவது உங்கள் வாழ்வில் நன்மைகள் அதிகம் ஏற்பட செய்யும்.

  திருவாதிரை நட்சத்திரக்காரர்களுக்கு உரிய தலவிருட்சமாக செங்காலி மரம் இருக்கிறது. செங்காலி மரம் தல விருட்சமாக இருக்கும் கோவில்களுக்கு சென்று செங்காலி மரத்தையும், அங்கிருக்கும் இறைவனையும் வழிபடுவது உங்களின் அனைத்து வகையான தோஷங்களையும் நீக்கி, நன்மைகளை கிடைக்கச் செய்யும். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகள் யாரேனும் ஒருவருக்கு ஆடைகள், புற்று நோய் குணமாக மருந்துகள் வாங்கித் தருவது ராகுபகவானின் மனம் குளிரச் செய்து உங்களுக்கு மிகுந்த நன்மைகளை அளிக்கச் செய்யும் ஒரு சிறந்த பரிகாரமாக இருக்கிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • திருமணத்திற்கு மிக முக்கியமாகப் பார்க்கப்படுவது இந்தப் பொருத்தம்.
  • ரஜ்ஜு பொருத்தம் இல்லையெனில் திருமணம் செய்யக் கூடாது என ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

  நட்சத்திரப் பொருத்தங்களிலேயே மிக முக்கியமான பொருத்தம் ரஜ்ஜுப் பொருத்தமாகும். திருமணமான தம்பதிகள் பல்லாண்டுகள் வாழ மாங்கல்யப் பொருத்தம் எனும் திருமண கயிறுப் பொருத்தம் மிக அவசியம். இது ஆயுளைப்பற்றிக் கூறும் பொருத்தமாகும்.

  தசவிதப் பொருத்தங்களில் அனைத்துப் பொருத்தங்கள் இருந்தும் ரஜ்ஜு பொருத்தம் இல்லையெனில் திருமணம் செய்யக் கூடாது என ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. மிக முக்கியமாகப் பார்க்கப்படுகின்ற இந்தப் பொருத்தம் இல்லாத பலரது வாழ்க்கை சிறப்பாக இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை.

  ரஜ்ஜுப் பொருத்தம் இல்லாதவர்களும் 8-ம் இடத்துடன் சம்பந்தம் பெறும் கிரகங்களின் தசாபுத்தி காலங்களில் மட்டுமே அசுப பலன்களை சந்திக்கிறார்கள். மற்ற காலங்களில் சிறு சிறு மனஸ்தாபத்தை மட்டுமே தருகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஒவ்வொரு ராசிகளுக்கும் ஒரு மரம் உள்ளது.
  • இனி 12 ராசிகளுக்குரிய மரங்கள் பற்றி பார்ப்போம்...

  உங்கள் ராசி மற்றும் நட்சத்திரத்திற்குரிய மரங்களை பற்றி தெரிந்து கொள்வோம். மொத்தம் 27 நட்சத்திரங்களும், 12 ராசிகளும் உள்ளன. இதில் ஒவ்வொரு நட்சத்திரம் மற்றும் ராசிகளுக்கு என்று மரம் உள்ளது.

  பண்டைக்காலத்தில் மரங்களை மக்கள் வழிபட்டு வந்துள்ளனர். அதே போல் ஒவ்வொரு மரத்துக்கும் ஒரு மருத்துவ குணம் உண்டு. இது பலருக்கு தெரியாது. ஒவ்வொரு நட்சத்திரம் மற்றும் ராசிகளுக்குரிய மரங்களை வழிபட்டு வந்தாலே நல்ல பலன் கிடைக்கும். இனி 12 ராசிகளுக்குரிய மரங்கள் பற்றி பார்ப்போம்...

  மேஷம் - செஞ்சந்தனம் மரம்,

  ரிஷபம் - அத்தி மரம்,

  மிதுனம் - பலா மரம்,

  கடகம் - புரசு மரம்,

  சிம்மம் - குங்குமப்பூ மரம்,

  கன்னி - மா மரம்,

  துலாம் - மகிழ மரம்,

  விருச்சிகம் - கருங்காலி மரம்,

  தனுசு - அரச மரம்,

  மகரம் -ஈட்டி மரம்,

  கும்பம் - வன்னி மரம்,

  மீனம் - புன்னை மரம்.

  அவரவர் ராசி நட்சத்திரத்திற்கும் உண்டான விருட்சங்களை தன் நட்சத்திரம் வரும் நாளில் கோவிலில் அல்லது வீட்டு தோட்டங்களில் தன் கைப்பட நட்டு வணங்கி வளர்த்து வர பலவித கர்ம தோஷங்கள் குறைந்து நன்மைகள் அதிகமாகும்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஒவ்வொரு நட்சத்திரத்திற்குரிய மரங்களை வழிபட்டு வந்தாலே நல்ல பலன் கிடைக்கும்.
  • உங்கள் நட்சத்திரத்திற்குரிய மரங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

  மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளன. இதில் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு மரம் உள்ளது. பண்டைக்காலத்தில் மரங்களை மக்கள் வழிபட்டு வந்துள்ளனர். அதே போல் ஒவ்வொரு மரத்துக்கும் ஒரு மருத்துவ குணம் உண்டு. இது பலருக்கு தெரியாது. ஒவ்வொரு நட்சத்திரத்திற்குரிய மரங்களை வழிபட்டு வந்தாலே நல்ல பலன் கிடைக்கும். இனி நட்சத்திரத்திற்குரிய மரங்கள் பற்றி பார்ப்போம்...

  நட்சத்திர மரங்கள்:

  அஸ்வதி- ஈட்டி மரம்,

  பரணி-நெல்லி மரம்,

  கார்த்திகை-அத்திமரம்,

  ரோகிணி-நாவல்மரம்,

  மிருகசீரிடம்- கருங்காலி மரம்,

  திருவாதிரை-செங்கருங்காலி மரம்,

  புனர்பூசம்-மூங்கில் மரம்,

  பூசம்- அரசமரம்,

  ஆயில்யம்- புன்னை மரம்,

  மகம்-ஆலமரம்,

  பூரம் -பலா மரம்,

  உத்திரம்-அலரி மரம்,

  அஸ்தம்- அத்தி மரம்,

  சித்திரை- வில்வ மரம்,

  சுவாதி -மருத மரம் ,

  விசாகம்- விலா மரம்,

  அனுஷம்- மகிழ மரம்,

  கேட்டை-பராய் மரம்,

  மூலம்- மராமரம்,

  பூராடம்- வஞ்சி மரம்,

  உத்திராடம்- பலா மரம்,

  திருவோணம்- எருக்க மரம் ,

  அவிட்டம்-வன்னி மரம்,

  சதயம்-கடம்பு மரம்,

  பூரட்டாதி- தேமமரம்,

  உத்திரட்டாதி- வேம்பு மரம்,

  ரேவதி-இலுப்பை மரம்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • உத்திரட்டாதி நட்சத்திரத்தின் அதிபதியாக சனி பகவான் இருக்கிறார்.
  • உத்திரட்டாதி நட்சத்திரத்தின் அதிதேவதை சிவபெருமான் ஆவார்.

  உத்திரட்டாதி நட்சத்திரகாரர்கள் மிகுதியான செல்வங்களையும், யோகங்களையும் பெறுவதற்கு செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

  27 நட்சத்திரங்கள் வரிசையில் இருபத்தாறாவது நட்சத்திரமாக உத்திரட்டாதி நட்சத்திரம் வருகிறது. உத்திரட்டாதி நட்சத்திரத்தின் அதிபதியாக சனி பகவான் இருக்கிறார். இந்த நட்சத்திரத்தின் அதிதேவதை மகா ஈஸ்வரனாக இருக்கும் சிவபெருமான் ஆவார். சனி பகவானின் ஆதிக்கம் கொண்டிருப்பதால் மிகுந்த பொறுமை குணமும், கடினமாக உழைப்பவர்களாகவும் உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் இருக்கிறார்கள். உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் தங்கள் வாழ்வில் மிகுதியான செல்வ வளங்களை பெற கீழ்கண்ட பரிகாரங்களை செய்ய வேண்டும்.

  உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வருடத்திற்கு ஒரு முறை தங்கள் நட்சத்திர அதிபதியான சனி பகவானின் முழுமையான நல்லருளை பெறுவதற்கு வருடத்திற்கு ஒரு முறை திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலுக்கு சென்று, சனீஸ்வரனுக்கு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து, கருப்பு நிற வஸ்திரம் சாற்றி வழிபட வேண்டும்.

  வாரந்தோறும் வரும் சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று ஆஞ்சநேயருக்கு நெய் தீபம் ஏற்றி, இனிப்பு அல்லது கற்கண்டுகள் நைவேத்தியம் வைத்து, வழிபட்டு வர வாழ்வில் சிறப்பான பலன்கள் ஏற்படுவதை காணலாம். சனி பிரதோஷ தினங்களில் சிவ பெருமானையும், அம்பாளையும் வழிபட்டு வர உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு வாழ்வில் பல நன்மைகள் உண்டாக்கும் ஒரு சிறந்த பரிகாரமாக இருக்கிறது.

  தினமும் நீங்கள் காலையில் உணவு சாப்பிடுவதற்கு முன்பாக சனிபகவானின் வாகனமாகிய காகங்களுக்கு சிறிது உணவை வைத்த பிறகு சாப்பிடுவதால், சனீஸ்வர பகவானின் அருட்பார்வை உங்களுக்கு கிடைத்து அதனால் வாழ்வில் நன்மையான பலன்கள் அதிகரிக்கும். ஏதேனும் சனிக்கிழமை தினத்தில் உடல் ஊனமுற்றவர்களுக்கு ஆடை மட்டும் இனிப்புகளை தானம் செய்வது நன்மை பயக்கும்.

  கோவில்களில் 2, 4, 6 போன்ற இரட்டைப்படை எண்ணிக்கையில் இருக்கும் பசுமாடுகளுக்கு ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொண்டிருக்கும் இரட்டை வாழைப்பழங்களை, சிறிது தேன் தடவி உணவாக கொடுப்பதன் மூலம் உங்கள் நட்சத்திரத்திற்கு மிகுதியான அதிர்ஷ்டங்கள் உண்டாக செய்யும் ஒரு சிறந்த பரிகாரமாகும்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மிக விலை உயர்ந்த கற்களில் வைரமும் ஒன்று.
  • வைரத்தில் தோஷம் இல்லாததாக பார்த்து வாங்க வேண்டும்.

  ஒவ்வொரு ராசிக்கும், அந்த ராசியின் அதிபதிக்கேற்ப, ஒவ்வொரு விதமான இரத்தினக்கல் உள்ளது. அதில், வைரம், சுக்கிரனின் அம்சமாகும். வைரத்தை யார் தான் விரும்ப மாட்டார்கள்? மிக விலை உயர்ந்த கற்களில் வைரமும் ஒன்று. ராசிக்கல் என்பதைத் தவிர்த்து, வைர நகைகளை பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும் விரும்புவார்கள். ஆனால், பிற உலோகங்களை வாங்குவது போல, வைரத்தை, நகையாக இருந்தாலும், ரத்தினக் கல்லாக ராசிக்கு வாங்கினாலும் சரி, அத்தனை எளிதாக அல்லது உடனடியாக வாங்கிட முடியாது.

  நகைகள் வாங்கும் போதே, வைரத்தில் தோஷம் இல்லாததாக பார்த்து வாங்க வேண்டும் என்று கூறுவார்கள். வைர நகை வாங்கும் போது. ஆங்கிலத்தில் CCC ஐப் பார்க்க வேண்டும், அதாவது Cut, Clarity மற்றும் Carat என்ற அடிப்படையில் வாங்க வேண்டும். அதே போல, வைரம் அணிவது எல்லா ராசிக்காரர்களுக்கும் சாதகமாக இருக்காது. 12 ராசிகளுக்கு, ஒரு சிலர் மட்டுமே, வைரத்தை அணிவது அதிர்ஷ்டமாக இருக்கும். வேத ஜோதிடத்தின் படி, எந்த ராசிக்காரர்கள் எல்லாம் வைரம் அணிவது சாதகமாக இருக்கும் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

  வைரம் அணிவதால் சுக்கிரன் சார்ந்த அம்சங்கள் மேம்படும்...

  காதல் மற்றும் உறவுகளை ஆளும் கிரகம் சுக்கிரன். இது வாழ்வின் அனைத்து இன்பங்களையும் வழங்குகிறது. மேலும், சுக்கிரன் படைப்பாற்றலையும் குறிக்கிறது. கருணை, வசீகரம், ஆடம்பரம், நல்ல தூக்கம், மற்றும் அழகு ஆகியவற்றையும் சுக்கிரன் குறிக்கிறது. சுக்கிரனை மிகச்சிறந்த முறையில் குறிக்கும் ஒரு சொல் " மிகுதி ". இந்த அனைத்து குணாதிசயங்களும், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, வைரங்களுடன் தொடர்புடையவை. ஜோதிட ரீதியாக, வைரம் சுக்கிரனின் நேர்மறையான சக்திகளைக் குறிக்கின்றது.

  எனவே, எந்தவொரு நபரின் ஜாதகத்திலும் சுக்கிரன் சக்தி வாய்ந்ததாக இருந்தால், அது அவர்களின் வாழ்க்கையில் எல்லாவற்றையும் அதிகமாகக் கொடுத்து, வசதியாக வாழ வைக்கும்.

  வைரம் வாங்கியவுடனே, ஒரு சிலருக்கு உடனடியாக நல்ல அதிர்ஷ்டத்தையோ அல்லது துரதிர்ஷ்டத்தையோ தரக்கூடும் என்று கூறப்படுகிறது. ஜோதிட ரீதியாக சில ரத்தினக் கற்கள் பிரபஞ்சத்தில் உள்ள ஒன்பது கிரகங்களில் ஒன்றோடு தொடர்புடையது.

  வாழ்க்கையில் அழகான, சொகுசான, மற்றும் ஆடம்பரமான விஷயங்கள் அனைத்தும் சுக்கிரனின் அம்சத்தைக் கொண்டுள்ளன. மேலும், சுக்கிரன் வானத்தில் மிகவும் பிரகாசமாக ஒளிரும் ஒரு கிரகம். எனவே, வைரத்தின் ஒளிரும் தன்மை மற்றும் நேரடியான ரிஃப்லகஷனுக்கு பொருந்தும் கிரகம் சுக்கிரன். ஒவ்வொரு ராசிக்கும், அந்த ராசியின் அதிபதிக்கேற்ப, ஒவ்வொரு விதமான இரத்தினக்கல் உள்ளது. அதில், வைரம், சுக்கிரனின் அம்சமாகும்.

  எந்த ராசிக்காரர்கள் வைரம் அணியலாம்?

  சுக்கிரன் 12 ராசிகளில், ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளை ஆட்சி செய்கிறது, மீன ராசியில் உச்சம் பெறுகிறது மற்றும் கன்னி ராசியில் நீசம் ஆகிறது.

  இந்த அடிப்படையில், சுக்கிரனின் ஆட்சி வீடுகளான, ரிஷபம் மற்றும் துலாம் ராசிக்காரர்கள் வைரம் அணிவது அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும். சுக்கிரன் சம்மந்தப்பட்ட அனைத்து விஷயங்களும் மேம்படும். இவர்கள், ஜாதகம் பார்த்து வைரம் அணிய வேண்டும் என்ற அவசியம் இல்லை.

  அடுத்ததாக, எந்த ராசிக்காரர்களாக இருந்தாலும், ஜாதகத்தில் சுக்கிரன் மீனத்தில் உச்சம் பெற்றிருந்தால், வைரம் அணிவது, அதிர்ஷ்டமான பலன்களைத் தரும்.

  ஒரு சில விதிமுறைகளின் அடிப்படையில் வைரத்தை அணியலாம். உதாரணமாக, சனியின் ஆளும் ராசியான மகர ராசி மற்றும் கும்ப ராசியினர் பிளாட்டினத்தில் உள்ள வைரத்தையும், நீல நிற சபையருடன் சேர்த்து அணியலாம்.

  மற்ற ராசிகளான கடகம், மிதுனம் மற்றும் கன்னி ராசிக்காரர்களின் ஜாதகத்தில் சுக்கிரன் ரிஷபம் அல்லது துலாம் ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்திருந்தால், வைரம் அணிவது நல்ல பலன்களைத் தரும்.

  எந்த ராசிக்காரர்கள் வைரம் அணியக்கூடாது?

  மேஷம், விருச்சிகம், சிம்மம், தனுசு மற்றும் மீன ராசிக்காரர்கள் வைரம் அணியக்கூடாது. ஜோதிட சாஸ்திரத்தின் படி, வைரம் அணிவது அவர்களின் வாழ்க்கையில் ஒற்றுமையை சீர்குலைக்கும். ஆனால், ஜாதகத்தில் சுக்கிரன் உச்சமாக இருக்கும் எந்த ராசிக்காரர்களும் வைரம் அணியலாம்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ரோகிணி நட்சத்திரத்திற்குரிய தலவிருட்சமாக நாவல் பழ மரம் இருக்கிறது.
  • சந்திர பகவானின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரமாக ரோகிணி நட்சத்திரம் இருக்கிறது.

  27 நட்சத்திரங்களில் நான்காவதாக வரும் நட்சத்திரம் ரோகிணி நட்சத்திரம் ஆகும். நவகிரகங்களில் சந்திர பகவானின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரமாக இந்த ரோகிணி நட்சத்திரம் இருக்கிறது. இந்த நட்சத்திரத்தின் அதி தேவதையாக "பிரம்ம தேவன்" இருக்கிறார். ரோகிணி நட்சத்திரக்காரர்கள் தங்களின் வாழ்வில் சிறந்த நிலையை அடைவதற்கு கீழ்கண்ட பரிகாரங்களை செய்து வருவது சிறப்பானதாகும்.

  வருடத்திற்கு ஒருமுறை நவகிரகங்களில் சந்திர பகவானுக்குரிய திருக்கோயில்களான திங்களூர், திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவில் போன்றவற்றிற்கு சென்று வழிபட வேண்டும். எந்த ஒரு புதிய காரியத்தை தொடங்குவதற்கு முன்பும் பெற்ற தாயாரையும், தாய் வழி முன்னோர்களையும் வழிபட்டு தொடங்குவது சிறந்த வெற்றிகளைத் தரும்.

  கோடைக்காலங்களில் மற்றும் கோவில் விழாக்களில் மக்களின் தாகத்தைத் தணிக்க மோர் பந்தல் அமைத்து, மோர் தானம் வழங்குவது நல்லது. மேலும் வீட்டிற்கு வெளியே பசுக்கள், நாய்கள் போன்றவை தாகத்தைத் தீர்த்துக் கொள்ளும் வகையில் நீர் தொட்டி அமைத்து, அதில் எப்போதும் நீர் ஊற்றி வைத்தது சிறப்பான பலன்களைத் தரும்.

  ரோகிணி நட்சத்திரத்திற்குரிய தலவிருட்சமாக நாவல் பழ மரம் இருக்கிறது. நாவல் மரம் தலவிருட்சமாக இருக்கும் கோயில்களுக்கு சென்று நாவல் பழமரத்தையும், அங்குள்ள இறைவனையும் வழிபடுவது ரோகிணி நட்சத்திரக்காரர்களின் தோஷங்களை நீக்கும். மன நோயாளிகளுக்கு உணவு, ஆடை தானங்கள் போன்றவற்றை செய்வது சந்திர பகவானின் அருளாசி களைத் தரும் பரிகாரமாக இருக்கிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கன்னி ராசியை ஆளும் கிரகமாக புதன் பகவான் இருக்கிறார்.
  • புதன் கிழமைகளில் பச்சை நிற ஆடைகளை அணிவது உங்களுக்கு யோகங்களை ஏற்படுத்தும்.

  ஜோதிடத்தில் கூறப்படும் 12 ராசிகளில் ஆறாவது ராசியாக வருவது கன்னி ராசியாகும். கன்னி ராசியை ஆளும் கிரகமாக புதன் பகவான் இருக்கிறார். இயற்கையிலேயே சிறந்த அறிவாற்றலும், பல கலைகளை கற்றுக்கொள்ளும் ஆர்வமும் திறனும் கொண்ட கன்னி ராசியினர் தங்களின் வாழ்வில் மிகுந்த யோகங்களையும் அதிர்ஷ்டங்களையும் பெற கீழ்கண்ட பரிகாரங்களை செய்து வருவது அவசியம்.

  நவக்கிரகங்களில் புதன் பகவானுக்குரிய கோயிலாக மதுரை மீனாட்சி – சுந்தரேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இக்கோவிலுக்கு வருடத்திற்கு ஒருமுறை சென்று வழிபடுவது புதன் பகவானின் நல்லருளை உங்களுக்குப் பெற்றுத் தரும். புதன் கிழமைகள் தோறும் பச்சை நிற ஆடைகளை அணிவது உங்களுக்கு யோகங்களை ஏற்படுத்தும். விசேஷ தினங்கள் மற்றும் பண்டிகை நாட்களில் உங்கள் தாய்மாமன்களிடம் ஆசீர்வாதம் பெறுவது கன்னி ராசியின் புதன் கிரக தோஷங்களை போக்கும்.

  ஏதேனும் ஒரு வளர்பிறை புதன்கிழமை தினத்தில் பெருமாள் கோவிலுக்கு சென்று, பெருமாள் மற்றும் தாயாருக்கு பச்சை நிற ஆடைகளை சாற்றி வேண்டுவது, உங்களுக்கு மிகுதியான அதிர்ஷ்டங்களை நிச்சயமாக ஏற்படுத்தும் ஒரு பரிகாரமாக இருக்கிறது. இதே போன்று வளர்பிறை புதன் கிழமைகளில் உங்கள் சக்திக்கு ஏற்ப வேதமறிந்த பிராமணர்களுக்கு அன்னதானம் அல்லது ஆடை தானம் வழங்குவது, கன்னி ராசியின் தோஷங்களை போக்கி நன்மைகளை ஏற்படுத்தும் மிகச் சிறந்த பரிகாரமாக இருக்கிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கஷ்டங்கள் மற்றும் சோதனை காலங்களில் மனிதர்களிடம் உதவி கேட்பதை விட அதிக மக்கள் கோயில்களில் இருக்கும் இறைவனிடம் தங்களின் நிலையை கூறி ஆறுதல் பெறுகின்றனர்.
  12 ராசிகளுக்கும் அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் பரிகார கோவில்கள் உள்ளது. எவ்வித பிரச்னைகளாயினும் அவற்றை எதிர்கொண்டு வெல்லும் மன வல்லமை பெறவும் இறையருள் நமக்குத் துணைபுரிவதற்கு ஏதுவாக, உங்கள் ஒவ்வொருவரது ராசிக்கும் உரிய தெய்வங்கள் இருக்கின்றன. பல விதமான கஷ்டங்கள் மற்றும் சோதனை காலங்களில் மனிதர்களிடம் உதவி கேட்பதை விட அதிக மக்கள் கோயில்களில் இருக்கும் இறைவனிடம் தங்களின் நிலையை கூறி ஆறுதல் பெறுகின்றனர். அந்த வகையில் 12 ராசியினரும் எந்த கோயில்களுக்கு சென்று வழிபட்டால்  நன்மைகள் பெறலாம் என்பதை இங்கு பார்ப்போம்.
   
  மேஷம் : ராமேஸ்வரம்
  ரிஷபம் : திருப்பதி
  மிதுனம் : பழனி
  கடகம் : ராமேஸ்வரம்
  சிம்மம் : ஸ்ரீவாஞ்சியம்
  கன்னி : திருக்கழுக்குன்றம்
  துலாம் : திருத்தணி
  விருச்சிகம் : காஞ்சிபுரம்
  தனுசு : மயிலாடுதுறை
  மகரம் : சிதம்பரம்
  கும்பம் : தேவிப்பட்டிணம்
  மீனம் : வைதீஸ்வரன் கோவில்.
  ×