search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Forbes"

    • லேண்ட்மார்க் நிறுவனத்தின் சிஇஓவாக பதவி வகித்து வருபவர் ரேணுகா ஜக்தியானி.
    • போர்ப்ஸ் நாளிதழ் வெளியிட்ட கோடீஸ்வரர்கள் பட்டியலில் ரேணுகா ஜக்தியானி இடம்பிடித்துள்ளார்.

    வாஷிங்டன்:

    லேண்ட்மார்க் நிறுவனத்தின் சிஇஓ ரேணுகா ஜக்தியானி. இந்த நிறுவனத்தை அவரது கணவர் மிக்கி ஜக்தியாணி தொடங்கினார்.

    2023 மே மாதம் கணவர் இறந்த பிறகு சி.இ.ஓ. பதவிக்கு வந்தார் ரேணுகா. தற்போது இந்த நிறுவனத்தில் தற்போது 50,000 பேர் பணியாற்றி வருகின்றனர்.

    இந்நிலையில், அமெரிக்காவின் போர்ப்ஸ் நாளிதழ் வெளியிட்ட கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்தியாவின் ரேணுகா ஜக்தியானி இடம்பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு 4.8 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.

    மேலும், போர்ப்ஸ் பட்டியலில் இந்தாண்டு இந்தியாவில் இருந்து மேலும் 25 பேர் கோடீஸ்வரர்கள் ஆக இணைந்துள்ளனர்.

    ரேணுகா ஜக்தியானி 2007-ம் ஆண்டு ஆசியாவின் சிறந்த பெண் தொழிலதிபர் விருது பெற்றார். 2012-ல் அரபு நாடுகளின் தொழில்கூட்டமைப்பின் சிறந்த பெண் தொழிலதிபர் விருதையும் பெற்ற அவர், 2014-ல் உலக தொழில்முனைவோர் அமைப்பின் சிறந்த தொழில்முனைவோர் விருதையும் பெற்றுள்ளார்.

    • சந்தை மதிப்பில் இந்த ஆண்டில் 50 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
    • மொத்த சொத்து மதிப்பு ஒரு பில்லியன் டாலர் என கணக்கிடப்படுகிறது.

    அமெரிக்காவின் பிரபல பத்திரிகையான போர்ப்ஸ் ஆண்டுதோறும் உலகளவில், இந்திய அளவிலான கோடீஸ்வரர்கள் பட்டியலை வெளியிடும். இந்த பட்டியலில் இந்தியாவின் முகேஷ் அம்பானி, அதானி இடம் பிடிப்பது வழக்கம்.

    தற்போது இந்திய கோடீஸ்வரர் பட்டியலில் 80 வயதான லலித் கைதான் இணைந்துள்ளார். இவர் மதுபான தயாரிப்பு நிறுவனமான ரேடிகோ கைதானின் அதிபர் ஆவார். இந்த நிறுவனத்தின் வருமானம் 380 மில்லியன் டாலர் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இந்த வருடத்தில் இவரது நிறுவனம் மதிப்பு 50 சதவீதம் உயர்ந்துள்ளது. மேலும், புதுவகையான பானங்கள் அறிமுகம் காரணமாக சொத்து மதிப்பு ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இவருடைய மொத்த சொத்து மதிப்பு ஒரு பில்லியன் டாலர் என கணக்கீடப்பட்டுள்ளது.

    மதுபான நிறுவனத்தால் கோடீஸ்வரர் பட்டியலில் இணைந்துள்ள லலித் கைதான் மது அருந்தாதவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு வயது 80 ஆகும்.

    • சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் உள்பட 4 இந்தியர்கள் இடம்பெற்றனர்.
    • இந்தப் பட்டியலில் ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஊர்சுலா வாண்டர் லியன் முதலிடம் பிடித்துள்ளார்.

    நியூயார்க்:

    உலக அளவில் மிகவும் சக்தி வாய்ந்த 100 பெண்கள் கொண்ட பட்டியலை ஆண்டுதோறும் அமெரிக்காவின் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டு வருகிறது. செல்வம், ஊடகம், தாக்கம் மற்றும் செல்வாக்கு ஆகிய 4 துறைகளில் இருந்து இந்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

    இந்த ஆண்டுக்கான பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் உலக அளவில் மிகவும் சக்திவாய்ந்த பெண்ணாக ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஊர்சுலா வாண்டர் லியன் முதலிடத்தை பிடித்து உள்ளார். ஐரோப்பிய மத்திய வங்கி தலைவர் கிறிஸ்டின் லகார்ட் 2-ம் இடத்தையும், அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

    இந்நிலையில், இந்தப் பட்டியலில் இந்தியாவில் இருந்து 4 பேர் இடம்பிடித்துள்ளனர். இதில் முக்கியமாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 32-வது இடத்தைப் பிடித்துள்ளார். கடந்த 4 ஆண்டாக இந்தப் பட்டியலில் இடம்பிடித்து வரும் அவர் 5-வது முறையாக இந்த ஆண்டும் தனது இடத்தை உறுதி செய்திருக்கிறார்.

    இதைப்போல எச்.சி.எல். டெக் தலைவர் ரோஷினி நாடார் மல்கோத்ரா 60-வது இடத்தையும், இந்திய ஸ்டீல் ஆணைய தலைவர் சோமா மண்டல் 70-வது இடத்தையும் பிடித்து இருக்கின்றனர். பயோகான் நிறுவன தலைவர் கிரண் மஜூம்தார்-ஷா 76-வது இடத்தை பிடித்துள்ளார்.

    இதில் ரோஷினி நாடார் மல்கோத்ரா, சோமா மண்டல், கிரண் மஜூம்தார்-ஷா ஆகியோர் கடந்த ஆண்டிலும் பட்டியலில் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • உலக பணக்காரர்கள் பட்டியலில் டாப்-20 பட்டியலில் இருந்து கவுதம் அதானி வெளியேறியுள்ளார்.
    • கவுதம் அதானி 57 பில்லியன் டாலர் மதிப்புடன் 22-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

    நியூயார்க்:

    அதானி குழுமத்தின் மீதான ஹிண்டன்பெர்க் ஆய்வு புகாரை அடுத்து அதானி குழும பங்குகள் வேகமாக குறைந்து வந்த காரணத்தால், அதானி தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறார்.

    இந்நிலையில், போர்ப்ஸ் பத்திரிகை வெளியிடும் உலக பணக்காரர்கள் பட்டியலில் டாப்-20 பட்டியலில் இருந்து கவுதம் அதானி வெளியேறியுள்ளார்.

    கவுதம் அதானி 57 பில்லியன் டாலர் மதிப்புடன் 22-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். உலகப் பணக்காரர்கள் பட்டியலில் அதானி 2-வது இடத்தில் இருந்து 22-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

    பெர்னார்ட் அர்னால்ட் மற்றும் குடும்பம் முதலிடத்திலும், எலான் மஸ்க் இரண்டாவது இடத்திலும், முகேஷ் அம்பானி 12-வது இடத்திலும் நீடிக்கின்றனர்.

    உலக பணக்காரர் பட்டியலில் முதல் 10 பேரில் ஒருவராக இருந்த அதானியை இந்தியாவின் முகேஷ் அம்பானி பின்னுக்கு தள்ளி ஆசியாவின் பணக்கார இந்தியர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மிகவும் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் உள்பட 6 இந்தியர்கள் இடம் பிடித்தனர்.
    • சக்திவாய்ந்த பெண்ணாக ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஊர்சுலா வாண்டர் லியன் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

    நியூயார்க்:

    அமெரிக்காவின் பிரபல போர்ப்ஸ் பத்திரிகை ஆண்டுதோறும் உலகின் சக்திவாய்ந்த பெண்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. 100 பேர் கொண்ட இந்தப் பட்டியலில் இடம்பெறுவது மிகப்பெரும் கவுரவமாக பார்க்கப்படுகிறது. செல்வம், ஊடகம், தாக்கம் மற்றும் செல்வாக்கு ஆகிய 4 துறைகளில் இருந்து இந்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

    இந்நிலையில், போர்ப்ஸ் பத்திரிகை இந்த ஆண்டுக்கான சக்திவாய்ந்த பெண்களின் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது.

    போர்ப்ஸ் பத்திரிகையின் இந்த பெருமை மிகுந்த பட்டியலில் முக்கியமாக 39 தலைமை செயல் அதிகாரிகள், 10 நாடுகளின் தலைவர்கள், 11 கோடீசுவரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

    இதில் உலக அளவில் மிகவும் சக்திவாய்ந்த பெண்ணாக ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஊர்சுலா வாண்டர் லியன் முதலிடத்தைப் பிடித்துள்ளார். உக்ரைன் போர் மற்றும் கொரோனா பெருந்தொற்று காலத்தில் அவரது செல்வாக்கு மிகுந்த தலைமையை அடிப்படையாக கொண்டு பட்டியலில் முதலிடம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

    இந்தப் பட்டியலில் ஐரோப்பிய மத்திய வங்கி தலைவர் கிறிஸ்டின் லக்ராட் 2-ம் இடத்தையும், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

    இந்தப் பட்டியலில் இந்தியாவில் இருந்து 6 பேர் இடம்பிடித்துள்ளனர். இதில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 36-வது இடம் பிடித்துள்ளார். கடந்த 3 ஆண்டாக இந்தப் பட்டியலில் இடம்பிடித்து வரும் அவர், 4-வது முறையாக இந்த ஆண்டும் தனது இடத்தை உறுதி செய்திருக்கிறார்.

    எச்.சி.எல். டெக் தலைவர் ரோஷிணி நாடார் மல்கோத்ரா 53-வது இடமும், செபி தலைவர் மாதபி புரி பக் 54-வது இடமும், இந்திய ஸ்டீல் ஆணைய தலைவர் சோமா மண்டல் 67-வது இடமும் பிடித்துள்ளனர்.

    இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் குழும நிறுவன தலைவரான முகேஷ் அம்பானி முதலிடத்தில் நீடிக்கிறார். #MukeshAmbani
     


    அமெரிக்காவின் நியூ யார்க் நகரை தலைமையிடமாக கொண்டு ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியாகி வருகிறது. மாதம் இருமுறை வெளியாகும் இந்த பத்திரிகையில் உலக சாதனையாளர்கள் பட்டியல் அடிக்கடி வெளியிடப்படுகிறது. 

    அந்த வகையில் இந்தியாவில் 2018 ஆம் ஆண்டு முன்னணியில் உள்ள கோடீஸ்வரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 100 கோடீஸ்வரர்கள் இந்த பட்டியலில் இடம் பெற்று உள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டின் இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. 

    முதன் முறையாக முதல் 100 கோடீஸ்வரர்களில் 4 பெண் தொழிலதிபர்கள் இடம் பெற்று உள்ளனர். இந்தியாவின் முதல் பெரிய கோடீஸ்வரராக முகேஷ் அம்பானி திகழ்கிறார். 61 வயதாகும் இவர் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் ஆவார்.



    கடந்த 11 ஆண்டுகளாக தொடர்ந்து அவர் முதல் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. அவரது தற்போதைய சொத்து மதிப்பு 3 லட்சத்து 31 கோடி ரூபாய் ஆகும். நடப்பாண்டில் மட்டும் அவரது சொத்து மதிப்பு 65 ஆயிரத்து 100 கோடி ரூபாய் அதிகரித்து உள்ளது.

    முகேஷ் அம்பானியை தொடர்ந்து விப்ரோ நிறுவனத்தின் அசிம்பிரேம்ஜி 2 ஆவது கோடீஸ்வரராக இருக்கிறார். அவரது சொத்து மதிப்பு 1 லட்சத்து 47 கோடி ரூபாய் ஆகும். தொழிலதிபர் லட்சுமி மிட்டல் 3 ஆவது இடத்தில் இருக்கிறார். 4 ஆவது இடத்தில் அசோக் லேலண்டின் இந்துஜா சகோதரர்கள், 5 ஆவது இடத்தில் பலோன்ஜி மிஸ்ட்ரி உள்ளார்.
    ‘போர்ப்ஸ்’ பத்திரிகை வெளியிட்ட உலகின் மிக சக்திவாய்ந்த பெண்மணிகள் பட்டியலில் ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல் தொடர்ந்து எட்டாவது முறையாக முதலிடம் பிடித்துள்ளார். #AngelaMerkel #ForbeslistMostInfluentialWomen
    வாஷிங்டன்:

    உலகின் பெரும் செல்வந்தர்கள் மற்றும் சக்தியும் செல்வாக்கும் நிறைந்த ஆண், பெண்களின் பட்டியலை ஆண்டுதோறும்  ‘போர்ப்ஸ்’ பத்திரிகை வெளியிட்டு வருகிறது.

    வர்த்தகம், தொழில்நுட்பம், நிதித்துறை, ஊடகம் மற்றும் கேளிக்கைத்துறை, அரசியல் மற்றும் கொள்கை, கொடையாளர்கள் என மொத்தம் 6 பிரிவுகளில் 100 பேர் இந்த பட்டியலில் இடம்பெறுவார்கள்.

    பிரிட்டன் பிரதமர் தெரசா மே

    அவ்வகையில், இந்த ஆண்டு நிலவரப்படி உலகின் மிக சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் தொடர்ந்து எட்டாவது முறையாக ஏஞ்சலா மெர்க்கெல் முதலிடம் பிடித்துள்ளார். அவரையடுத்து, பிரிட்டன் பிரதமர் தெரசா மே இரண்டாம் இடத்தில் உள்ளார். இந்த இடத்தை தெரசா மே தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக தக்கவைத்து கொண்டுள்ளார்.

    இவர்களை தொடர்ந்து சர்வதேச நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்ட்டைன் லகார்டே மூன்றாவது இடத்தில் உள்ளார். #AngelaMerkel #ForbeslistMostInfluentialWomen
    ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் டாப் 50 அமெரிக்க டெக் ஜாம்பவான்கள் பட்டியலில் நான்கு இந்திய வம்சாவளி பெண்கள் இடம்பிடித்துள்ளனர். #Forbes



    ஃபோர்ப்ஸ் பத்திரிகை சார்பில் டெக் உலகின் டாப் 50 பெண்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் தொழில்நுட்ப சந்தையில் முன்னணி பதவியில் இருக்கும் பெண் அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். 

    ஃபோர்ப்ஸ் பட்டியலில் தேர்வு செய்யப்பட்டு இருக்கும் பெண் அதிகாரிகள் சைபர்செக்யூரிட்டி, நிறுவனம் மற்றும் நுகர்வோர் தொழில்நுட்பம், கேமிங், செயற்கை நுண்ணறிவு, ஏரோ-ஸ்பேஸ், பயோடெக் மற்றும் பல்வேறு பிரிவுகளில் தலைமை வகிக்கின்றனர். 

    அந்த வகையில், ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் டாப் 50 அமெரிக்க டெக் ஜாம்பவான்கள் 2018 பட்டியலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த நான்கு பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.



    அவ்வாறு, சிஸ்கோவின் முன்னாள் தலைமை தொழில்நுட்ப அலுவலரான பத்மஸ்ரீ வாரியர், உபெர் நிறுவன மூத்த தலைவர் கோமல் மங்டானி, உபெர் நிறுவன தொழில்நுட்ப அலுவலர் நேஹா நர்கடெ, டிராபிரெக் நிறுவன தலைமை செயல் அதிகாரி காமாக்‌ஷி சிவராமகிருஷ்ணன் ஆகியோர் இப்பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். 

    அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணினி உள்ளிட்ட துறைகளில் பெரும்பாலும் ஆண்களின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதாக கருதப்படும் நிலையில், ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம்பிடித்திருக்கும் பெண் தலைவர்கள் அவரவர் துறைகளில் தங்களை நிரூபித்து வருகின்றனர்.
    போர்பஸ் பத்திரிகை வெளியிட்ட இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி தொடர்ந்து 11-வது ஆண்டாக முதலிடத்தை பிடித்துள்ளார். #Forbes #MukeshAmbani
    புதுடெல்லி:

    பிரபல போர்பஸ் பத்திரிக்கை இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் பட்டியலை ஒவ்வொரு வருடமும் அறிவிக்கும். இந்த ஆண்டிலும் இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர் இடத்தை ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி முதலிடத்தை பிடித்துள்ளார். 

    அம்பானியின் சொத்து மதிப்புகள் சுமார் 47.3 பில்லியன் டாலர்கள் ஆகும். இந்த வருடம் மட்டும் அவரின் சொத்து மதிப்பு சுமார் 9.3 பில்லியன் டாலர்கள் அதிகரித்திருக்கிறது.

    விப்ரோ தலைவர் அஸிம் பிரேம்ஜி இந்த ஆண்டும் இரண்டாம் இடத்தில் உள்ளார். அவரின் சொத்து மதிப்பு சுமார் 21 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். அர்செலோர் மித்தல் குழுமத்தின் தலைவர் லக்‌ஷ்மி மித்தல் 18.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்புடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.


    தமிழகத்தை சேர்ந்த ஷிவ் நாடார்

    இவர்களைத் தொடர்ந்து ஹிந்துஜா சகோதரர்கள், பல்லோஜி மிஸ்ட்ரி, தமிழகத்தை சேர்ந்த ஷிவ் நாடார், கோத்ரேஜ் குழுமம், திலீப் சங்வி, குமார் பிர்லா மற்றும் கௌதம் அதானி உள்ளனர். 

    100 பேர் கொண்ட பட்டியலில் 4 பெண்கள் மட்டுமே இந்த ஆண்டில் இடம் பெற்றுள்ளனர். பயோடெக்னாலஜி துறையில் புகழ்பெற்று விளங்கும் கிரண் மஸும்தர் ஷா இப்பட்டியலில் 39-ம் இடம் பிடித்துள்ளார்.
    சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருப்பதாகவே தான் கருதுவதாக கூறிய நடிகை சுருதி ஹாசன், தனக்கும், அப்பாவுக்கு மத நம்பிக்கை பற்றிய கருத்து வேறுபாடு இருப்பதாக கூறினார். #ShrutiHaasan
    சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருப்பதாகவே கருதுகிறேன் என்று நடிகை சுருதி ஹாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நடிகை சுருதி ஹாசன் அமெரிக்காவின் பிரபல போர்ப்ஸ் பத்திகைக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, 

    ‘ சினிமாவில் நான் அறிமுகமாகி பத்து ஆண்டுகள் ஆகிறது. இதுவரை நான் நடித்த படங்கள் அனைத்தும் நான் விருப்பப்பட்டு தேர்வு செய்து நடித்தது தான். இதற்காக நான் இப்போதும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த பத்தாண்டு கால திரையுலக வாழ்க்கை நன்றாகவேயிருந்தது. இதைப் போலவே எதிர்காலத்திலும் எனக்கு பிடித்த கதாபாத்திரத்திலும், கதைகளிலும் மட்டுமே நடிப்பேன்.

    மத நம்பிக்கை குறித்து எனக்கும் அப்பாவிற்கும் வேறுபட்ட கருத்து இருக்கிறது. என்னைப் பொருத்தவரை நான் ஆன்மீக சக்தி என்ற ஒன்று இருப்பதாகவே நம்புகிறேன். ஆனால் அது கோவில், தேவாலாயம், மசூதிகளில் இருக்கிறதா? என்று கேட்டால் அதற்கு என்னிடம் நேரடியான பதிலில்லை. ஆனால் அனைத்தையும் நம்புகிறேன்.



    அதேபோல் சினிமாவில் மட்டுமல்ல, இந்தியாவிலும் பெண்கள் பாதுகாப்பாகவே இருக்கிறார்கள். எனக்கு திரைத்துறையில் கிடைக்க வேண்டிய மரியாதையும், மதிப்பும் கிடைக்கிறது. நான் திரைத்துறையில் சந்தித்தவர்கள் அனைவரும் நல்லவர்கள் தான்.

    தற்போது மகேஷ் மஞ்சரேக்கரின் ஹிந்தி படத்தில் நடித்து வருகிறேன். அப்பாவுடன் இணைந்து நடித்து வரும் ‘சபாஷ் நாயுடு’வின் பணிகள் விரைவில் தொடங்கும்.

    நியூயார்க்கில் இந்திய சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டதையும், அதில் தேசப்பற்று பாடலை பாடியதையும் எண்ணி பெருமையடைகிறேன் ’ என்றார். #ShrutiHaasan

    விளையாட்டு வீரர்களில் அதிகம் சம்பாதிப்பவர்கள் பட்டியலில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி 83-வது இடத்தை பிடித்துள்ளார். #ViratKohli
    நியூயார்க்:

    விளையாட்டு வீரர்களில் அதிகம் சம்பாதிப்பவர்கள் பட்டியலை பிரபல போபர்ஸ் நாளிதழ் வெளியிட்டு இருக்கிறது. இதில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி உலக அளவில் 83-வது இடத்தில் உள்ளார். அவர் ஆண்டுக்கு ரூ.160.95 கோடி சம்பாதிக்கிறார்.

    சமீபத்தில் விராட் கோலிக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் சம்பளத்தை உயர்த்தி வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் பல்வேறு விளம்பர படங்களிலும் நடித்து சம்பாதித்து வருகிறார்.

    போபர்ஸ் வெளியிட்ட இந்த பட்டியலில் முதலிடத்தை பிரபல குத்துச்சண்டை வீரரான மேவெதர் பிடித்துள்ளார். அவர் கடந்த ஆண்டு ரூ.1,900 கோடி சம்பாதித்து இருக்கிறார். இதில் பிரபல கால்பந்து வீரர்களான ரொனால்டோ, மெஸ்சி, கூடைப்பந்து வீரர் லீபீரன் ஜேம்ஸ் ஆகியோர் இடம் பெற்றிருக்கிறார்கள்.

    இப்பட்டியலில் பெண் வீராங்கனைகள் யாரும் இடம் பெறவில்லை. கடந்த ஆண்டு இடம் பெற்றிருந்த செரீனா வில்லியம்ஸ், ‌ஷரபாவா ஆகியோர் இப்பட்டியலுக்குள் வரவில்லை.  #ViratKohli
    ×