என் மலர்
நீங்கள் தேடியது "Died"
- மணப்பாறை அருகே இருவேறு சம்பவங்களில் இடி, மின்சாரம் தாக்கி இருவர் பலியாகி உள்ளனர்
- னர் உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரணை
மணப்பாறை,
திருச்சி மாவட்டம் மணப்பாறை வையம்பட்டியை அடுத்த வெள்ளாளபட்டி அருகே உள்ள சுக்காம்பட்டியை சேர்ந்தவர் மீனாட்சியம்மாள் (வயது 65). இவர் இன்று அதிகாலை இயற்கை உபாதையை கழிக்க சென்றார். அப்போது அந்த பகுதியில் நேற்று இரவு வீசிய பலத்த காற்று மற்றும் இடி, மின்னல் மழையால் மின் கம்பி ஒன்று அறுந்த நிலையில் தாழ்ந்து தொங்கிக் கொண்டிருந்தது.தரையில் இருந்து சுமார் 4 அடி கூட உயரம் இல்லாத நிலையில் தொங்கிக் கொண்டிருந்த மின் கம்பியை கவனிக்காமல் அதனை மீனாட்சியம்மாள் கடக்க முயற்சித்து உள்ளார். இதில் எதிர்பாராதவிதமாக அவரது உடல் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதை பார்த்ததும் அந்த வழியாக சென்றவர்கள் அலறல் சப்தம் போடவே அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர்.மேலும் இதுபற்றி தகவல் அறிந்த வையம்பட்டி போலீசார் விரைந்து சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன் அந்த பகுதியில் உடனடியாக மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.இதே போல் வையம்பட்டியை அடுத்த பெரிய வெள்ளபட்டியை சேர்ந்தவர் வெங்கடாசலம் (65). விவசாயியான இவர் நேற்று மாலை அருகில் உள்ள தோட்டத்தில் மாட்டை பிடிக்க சென்று கொண்டிருந்தார். அப்போது இடி மின்னல் ஏற்பட்ட நிலையில் திடீரென இடி தாக்கவே அதே இடத்தில் வெங்கடாசலம் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்த வையம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- சுப்பிரமணி கோவில்பாளையத்தில் இ-சேவை மையத்திற்கு பணம் அனுப்ப சென்றார்.
- எதிரே வந்த மோட்டார் சைக்கிள், இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது.
பொள்ளாச்சி,
சேலம் மாவட்டம் ஒமலூரை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது47). இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். அண்மையில் நடந்த வாகன விபத்தில் சுப்பிரமணியின் மனைவி இறந்து விட்டார்.
இதையடுத்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சுப்பிரமணி தனது மகன்களுடன், கோவை கிணத்துக்கடவு அருகே வடக்குபாளையம் கோபாலபுரத்திற்கு வந்தார்.
அங்கு தங்கி கட்டிட வேலைக்கு சென்று வந்தார். நேற்று சுப்பிரமணி கோவில்பாளையத்தில் இ-சேவை மையத்திற்கு பணம் அனுப்ப சென்றார். அவருடன் அவரது நண்பரான ராமு (46) என்பவரும் சென்றார். இவரும் கட்டிடத்தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
மோட்டார் சைக்கிளை ராமு ஓட்ட, சுப்பிரமணி பின்னால் அமர்ந்து இருந்தார். கோவில்பாளையம் சென்று இ-சேவை மையத்தில் பணத்தை அனுப்பி விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்தனர்.
அப்போது பொள்ளாச்சி-கோவை சாலையில் எஸ்.மேட்டுப்பாளையம் அருகே வந்த போது, எதிரே வந்த மோட்டார் சைக்கிள், இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது.
இதில், ராமு, சுப்பிரமணி 2 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி சாலையில் வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து, அவர்கள் 2 பேரையும் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது, ராமு வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
ெதாடர்ந்து பலத்த காயம் அடைந்த சுப்பிரமணியை மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆட்டை, வெறிநாய் கடித்ததில் பலி
- நாய்களை கட்டுப்படுத்திட கோரிக்கை
கரூர்,
கரூர் மாவட்டம், வரவணை ஊராட்சி பாப்பணம்பட்டியை சேர்ந்தவர் விவசாயி கதிர்வேல். இவர் தனது தோட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட ஆடு மற்றும் மாடுகள் வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை கதிர்வேல் தனது தோட்டத்தில் அமைந்துள்ள ஆட்டுப்பட்டியில் ஆடுகளை அடைத்து வைத்துள்ளார். இந்த நிலையில் அங்கு வந்த வெறிநாய்கள் பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகளை கடிக்க முற்பட்டுள்ளன. அப்போது ஆடுகள் சத்தம் போட்டதால் அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தனர். இதனால் வெறிநாய்கள் தப்பி ஓடி விட்டன. இதில் பட்டியில் அடைக்கப்பட்டு இருந்த ஆடுகளில் ஒரு ஆடு பலத்த காயத்துடன் இறந்து கிடந்துள்ளது. இதேபோல் வரவணை ஊராட்சி பகுதியில் தொடர்ந்து வெறிநாய்கள் கடித்து கால்நடைகள் இறந்து வருகின்றன. இதனால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். எனவே வெறிநாய்களை கட்டுப்படுத்தி கால்நடைகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடவூர் ஒன்றிய ஆணையர் சுரேஷிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
- வீட்டில் அழுகிய நிலையில் கூலி தொழிலாளி பிணம்
- தூங்க சென்றவரின் அறையில் இருந்து துர்நாற்றம் வீசியதால் பரபரப்பு
திருச்சி,
திருச்சி வடக்கு தாராநல்லூர் வசந்தம் நகரை சேர்ந்தவர் மூக்க பிள்ளை. இவரது மகன் வரதராஜ் (வயது 35) இவர் திருமணமாகாதவர். கூலி தொழிலாளி. மதுவுக்கு அடிமையானவர். வீட்டில் வரதராஜன் முதல் தளத்தில் வசித்து வந்தார். கீழே அவரது தாயார் அம்சவல்லி மற்றும் சகோதரி கோமதி அவரது கணவர் சரவணன் ஆகியோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் வீட்டின் அறையில் தூங்கிய வரதராஜ் நீண்ட நேரம் ஆகியும் எழுந்திருக்கவில்லை.இந்த நிலையில் அறையில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனை பார்த்து அதிர்ச்சிடைந்த தாய் அம்சவல்லி முதல் தளத்தில் உள்ள வரதராஜ் அறைக்கு சென்றுபார்த்த பொழுது அவர் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அம்சவல்லி உடனடியாக காந்தி மார்க்கெட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.இதை யடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காந்தி மார்க்கெட் போலீசார் வரதராஜன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் குறித்து காந்தி மார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து வரதராஜ் இறந்தது எப்படி? என்ன காரணம்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் காந்தி மார்க்கெட் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
- லால்குடி அருகே ஆற்றில் மூழ்கி சிறுவன் சாவு
- தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர்
திருச்சி,
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே இடையாற்று மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கஸ்பர்மோகன்ராஜ் இவருக்கு ஆண்டோ, புதின் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். ஆண்டோ (வயது 17). மற்றும் தனது நண்பர்கள் மூன்று பேருடன் கொள்ளிடம் ஆற்றில் நேற்று மாலை குளிக்க சென்றுள்ளனர். ஆன்டோ மற்றும் நண்பர்கள் மூன்று பேரும் ஆற்றில் குளிக்க இறங்கிய நிலையில் மற்ற இருவரும் ஆற்றின் கரையில் மேலே வந்து விட்டனர். இதில் ஆழ மிகுதியான இடத்தில் மாட்டிக் கொண்ட ஆண்டோ தண்ணீரில் தத்தளித்த நிலையில் நிலை தடுமாறி நீரில் மூழ்கி மேலே கையை உயர்த்தி உள்ளார். தண்ணீர் இழுத்து சென்றதை அறிந்த நண்பர்கள் உறவினர்களிடம் தகவல் தெரிவிக்கவே இதுகுறித்து லால்குடி தீயணைப்பு துறைக்கும், லால்குடி காவல் நிலையத்திற்கும், ஆண்டோவின் தந்தை மற்றும் உறவினர்கள் தகவல் தெரிவித்தனர் இதனை அடுத்து லால்குடி தீயணைப்பு துறையினர் மற்றும் உறவினர்கள் நீரில் மூழ்கிய ஆண்டோவின் உடலை லால்குடி மற்றும் ஸ்ரீரங்கம் தேடி வந்த நிலையில் இன்று காலை மீட்கப்பட்டது.உடற்கூறு ஆய்விற்காக லாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சம்பவம் குறித்து லால்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்து வருகின்றனர்.
- பரவாய் கிராமத்தில் கிணற்றில் தவறி விழுந்த முதியவர் உயிரிழந்தார்
- தீயணைப்பு வீரர்கள் மீட்ட உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள பரவாய் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி மகன் திருமூர்த்தி(வயது 74). இவர் சொந்தமாக விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் திருமூர்த்தி நேற்று முன்தினம் மாலை தனது வயலுக்கு செல்வதாக கூறி விட்டு வீட்டை விட்டு சென்றுள்ளார். பின்னர் இரவு நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதை அறிந்த உறவினர்கள் திருமூர்த்தியை தேடி பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. நேற்று காலை காணாமல்போன திருமூர்த்தி வயல் அருகே குமரசாமி என்பவரது வயலில் உள்ள கிணற்றின் மேல் பகுதியில் திருமூர்த்தியின் செருப்பு மற்றும் துண்டு, சட்டை கிடப்பதாக அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து கூறியுள்ளனர். இதை அறிந்த உறவினர்கள் உடனடியாக வேப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றில் இறங்கி தேடி பார்த்த போது திருமூர்த்தி இறந்து கிடந்தது தெரியவந்தது. அவரது உடலை தீயணைப்பு படை வீரர்கள் மீட்டனர். மேலும் இச்சம்பவம் குறித்து குன்னம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்- இன்ஸ்பெக்டர் பிச்சுமணி விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். போலீசார் விசாரணையில் திருமூர்த்தி வயலுக்கு வரும்போது தனியாருக்கு சொந்தமான கிணற்றில் இறங்கி பாட்டிலில் தண்ணீர் எடுப்பாராம். அதேபோல் தான் பாட்டிலில் தண்ணீர் எடுக்க சென்றபோது தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்பது தெரிய வந்தது.
- இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் வேகத்தடையில் தவறி விழுந்து பலியானார்
- காயமடைந்த கணவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை
கரூர்,
விஸ்வநாதபுரி 'அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் தனசுந்தரம் (64) இவர் தனது டி.வி.எஸ்., ஸ்கூட்டியில், மனைவி தங்கமணி (51) என்பவருடன், சின்னதாராபுரம்-கரூர் சாலை குளத்துார் பகுதியில் சென்று கொண் டிருந்தார். அப்போது, வேகத்தடைமீது மொபட் ஏறி இறங்கிய போது, நிலை தடுமாறி தனசுந்தரமும், தங்கமணியும் கீழே விழுந்தனர். அதில், தலையில் காயம் அடைந்த தங்கமணி, கரூர் அரசு மருத்துவ கல் லுாரி மருத்துவமனைக்கு கொண்டு. செல்லும் வழியில் உயிரிழந்தார். கணவன் தனசுந்தரத்துக்கு காயம் ஏற்பட்டது. இது குறித்து வழக்கு பதிந்து சின்னதாராபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வேன் மீது பஸ் மோதிய விபத்தில் பள்ளி மாணவன் பலி
- வழக்கு பதிந்து போலீசார் விசாரணை
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி கலைவாணர் தெருவை சேர்ந்தவர் ராஜா (39). இவரின் மகன் லாபியரசு (13). இவர் அரவக்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளியில், 8-ம் வகுப்பு படித்து வந்தார். ராஜா தனது மகன் லாபியரசுடன், திண்டுக்கல்-கரூர் சாலை வாங்கலைபுதுார் பகுதியில், வேனில் சென்று கொண்டிருந்தார்.அப்போது, அந்த வழியாக, கேரளா மாநிலத்தை சேர்ந்த ஆனந்து (30) ஓட்டி வந்த, ஆம்னி பஸ், வேன் மீது மோதியது. அதில், வேனில் பயணம் செய்த லாபியரசு, தலையில் அடிப்பட்டு அதே இடத்தில் உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிந்து அரவக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.
- ரெயிலில் அடிபட்டவர் சிகிக்சை பலனின்றி உயிரிழந்தார்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்,
கரூர் மாவட்டம், புகலூர் ஹோம் சிக்னல் அருகே உள்ள ரெயில்பாதையில், சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர், அவ்வழியாக சென்ற ரெயிலில் அடிப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதனை பார்த்த ரெயில்நிலை அதிகாரி சீனிவாசன், கரூர் ரெயில் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவரை மீட்டு வேலாயுதம்பாளையம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மயங்கி விழுந்து இறந்த வாலிபர் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த 24-ந் தேதி மாலையில் பரிதாபமாக இறந்தார்.
மதுரை
மதுரை வெள்ளக்கல் முனியாண்டி கோவில் அருகில் கடந்த 20-ந் தேதி இரவு 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் மயங்கி கிடந்தார். தகவலறிந்த அயன்பாப்பாக்குடி கிராம உதவியாளர் செல்லப்பாண்டி மற்றும் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 24-ந் தேதி மாலையில் பரிதாபமாக இறந்தார்.
அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. நெற்றியில் கருப்பு மச்சமும், இடது கால் முட்டியில் பழைய காயத்தழும்பும் காணப்படுகிறது. இதுகுறித்து அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சமயபுரம் சுங்கச்சாவடி அருகே சாலையை கடக்க முயன்ற மான் பலி
- வனத்துறையினர் உடலை கைப்பற்றி விசாரணை
மண்ணச்சநல்லூர்,
திருச்சி மாவட்டம் சமயபுரம் சுங்கச்சாவடி பகுதியில் இரவு நேரத்தில் மேய்ச்சலுக்காக வந்த புள்ளி ஆண் மான் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அந்த புள்ளி மான் உடல் நசுங்கி உயிரிழந்தது. இதுபற்றி அங்கு வந்த இரவு நேர ரோந்து போலீசார் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த எம்.ஆர்.பாளையம் வன பாதுகாவலர் ஜான் ஜோசப் சாலையில் கிடந்த மானை மீட்டு உடற்கூற் ஆய்வுக்காக ஆட்டோ மூலம் எம்.ஆர்.பாளையம் வனப்பகுதிக்கு எடுத்துச் சென்றார்.