search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "லார்ட்ஸ் டெஸ்ட்"

  • டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
  • முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 121 ரன்னுக்கு சுருண்டது.

  லண்டன்:

  வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

  இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லண்டனின் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

  அதன்படி, வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் களமிறங்கியது. இங்கிலாந்து அணி துல்லியமாக பந்து வீசியதால் வெஸ்ட் இண்டீஸ் அணி சிக்கித் திணறியது. இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன.

  அந்த அணியில் அதிகபட்சமாக மிக்கில் லூயிஸ் 27 ரன்னும், ஹோட்ஜ் 24 ரன்னும் எடுத்தனர்.

  இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 121 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

  இங்கிலாந்து சார்பில் அட்கின்சன் 7 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். கிறிஸ் வோக்ஸ், பென் ஸ்டோக்ஸ், ஆண்டர்சன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

  லார்ட்ஸ் டெஸ்ட் படுதோல்வி எதிரொலியாக தொடக்க ஆட்டக்காரர் கவுதம் காம்பீர் இந்திய அணியை கடுமையாக விமர்சித்துள்ளார். #GautamGambhir
  புதுடெல்லி :

  லண்டன் லார்ட்ஸில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி கண்டது. 1974-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி லார்ட்ஸ் மைதானத்தில் சந்தித்த மோசமான தோல்வி இதுவாகும்.

  இந்த வெற்றியின் மூலம் 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இதனால், இந்திய அணி போராட்டம் இல்லாமல் இங்கிலாந்து அணியிடம் பணிந்தது பரவலாக கடும் விமர்சனத்துக்கு ஆளாகி இருக்கிறது. 

  இந்நிலையில், லார்ட்ஸ் டெஸ்ட் குறித்து இந்திய அணியின் மீது தொடக்க ஆட்டக்காரர் கவுதம் காம்பிர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் குறிப்பிட்டுள்ளதாவது :-

  ’ஆட்டத்தின் இரண்டு இன்னிங்ஸ்களும் இந்திய அணிக்கு சற்று கடினமாக இருந்தது. ஆனாலும் அதில் இருந்து மீள இந்திய அணி எவ்வித போராட்டத்திலும் ஈடுபடாமல் ஆட்டம் மூன்று நாட்களிலேயே முடிந்து விடும் என எதிர்பார்க்கவில்லை. இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி போராடி கடைசி நாள் வரை ஆட்டத்தை நகர்த்தி இருக்க வேண்டும் அதன் பிறகு முடிவு எப்படி அமைந்திருந்தாலும் பரவாயில்லை. இந்திய அணி தோல்வி அடைந்த விதம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. 

  இனி இந்தியாவால் தொடரை கைப்பற்றுவது கடினம் தான், எனினும் வரும் ஆட்டங்களில் 5 பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கி பேட்ஸ்மேன்களும் ரன் குவித்தால் இந்த தோல்விகளில் இருந்து மீண்டு வர முடியும். ஹர்திக் பாண்டியாவை ஆல்ரவுண்டர் நிலையில் களமிறக்குகிறோம் ஆனாலும் 193 எனும் இலக்கை நம்மால் துரத்த முடியவில்லை, எனவே இந்த இடத்தில் கண்டிப்பாக மாற்றம் செய்வது அவசியம் என நினைக்கிறேன்.

  அடுத்து வரும் ஆட்டங்களில் குறைந்த பட்சம் ஒரு போட்டியில் டிரா செய்தாலும், எஞ்சிய இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று இந்திய அணியால் தொடரை சமன் செய்ய முடியும்’ என கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார். #GautamGambhir
  லார்ட்ஸ் டெஸ்டில் இந்தியா அணி 159 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்சிஸ் படுதோல்வியடைந்ததால் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது. #ENGvIND
  லண்டன் :

  இங்கிலாந்து - இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. இந்தியா முதல் இன்னிங்சில் 107 ரன்னில் சுருண்டது.

  பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 7 விக்கெட் இழப்பிற்கு 396 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இந்தியா 289 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கியது. முதல் இன்னிங்சில் சொதப்பிய தொடக்க வீரர்களான முரளி விஜய் (0), லோகேஷ் ராகுல் (10) இந்த இன்னிங்சிலும் சொதப்பினார்கள்.

  அதன்பின் வந்த புஜாரா 17 ரன்னிலும், ரகானே 13 ரன்னிலும் வெளியேறினார்கள். விராட் கோலி 17 ரன்னில் வெளியேற, அடுத்த பந்தில் தினேஷ் கார்த்திக் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். இதனால் இந்தியா 61 ரன்கள் அடிப்பதற்குள் 6 விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது.  7-வது விக்கெட்டுக்கு ஹர்திக் பாண்டியா உடன் அஸ்வின் ஜோடி சேர்ந்தார்.  இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதும் இந்த ஜோடி நீண்ட நேரம் நிலைக்கவில்லை, அணியின் ஸ்கோர் 117-ஆக இருந்த போது வோக்ஸ் வீசிய பந்தில் பாண்டியா 26 ரன்களில் எல்.பி.டபள்யூ முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

  அடுத்து களமிறங்கிய குல்தீப் யாதவ் மற்றும் ஷமி இருவரும் ரன் ஏதும் அடிக்காமல் ஆண்டர்சன் தாக்குதலில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். 

  இதனால் இந்திய அணி 47 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 130 மட்டுமே அடித்து இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை தழுவியது. 

  இறுதிவரை ஓரளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அஷ்வின் 33 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். 

  இன்ங்கிலாந்து அணி தரப்பில் ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் தலா 4  விக்கெட்டுக்களை கைப்பற்றினர். வோக்ஸ் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். 5 போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது. #ENGvIND
  லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் முகமது ஷமியின் அபாரமான பந்து வீச்சால் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 131 ரன்கள் அடித்து தடுமாறி வருகிறது. #ENGvIND
  லண்டன் : 

  இங்கிலாந்து - இந்தியா இடையிலான இரண்டாவது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஆட்டத்தின் முதல் நாள் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்டது.

  இரண்டாவது நாளில் டாஸ் சுண்டப்பட்டு ஆட்டம் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. 

  அதனடிப்படையில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தொடக்கம் முதலே சொதப்ப தொடங்கியது. விஜய் ரன்ஏதும் எடுக்காமலும், லோகேஷ் ராகுல் 8, புஜாரா ஒரு ரன் என பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

  அதிகபட்சமாக அஷ்வின் 29 ரன்களும், கோலி 23 ரன்களும் அடித்தனர். இதனால், இந்தியா முதல் இன்னிங்சில் 35.2 ஓவரில் 107 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நேற்றும் மழையால் ஆட்டம் அடிக்கடி நிறுத்தப்பட்டது. இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

  இந்நிலையில், ஆட்டத்தின் மூன்றாம் நாளான இன்று இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது, குக் மற்றும் ஜென்னிங்ஸ் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

  ஆட்டத்தில் 7-வது ஓவரில் முகமது ஷமி வீசிய பந்தில் 11 ரன்கள் அடித்திருந்த நிலையில் ஜென்னிங்ஸ் எல்.பி.டபள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அதற்கடுத்த ஓவரிலேயே குக், இஷாந்த் பந்தில் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து 21 ரன்னில் வெளியேற இங்கிலாந்து அணி 32 ரன்களுக்கு 2 விக்கெட்டுக்கள் இழந்து தடுமாறியது.

  அடுத்து களமிறங்கிய போப் மற்றும் ரூட் ஆகியோர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர், இங்கிலந்து அணி 77 ரன்கள் குவித்திருந்த நிலையில் பாண்டியா வீசிய பந்தில் போப் எல்.பி.டபள்யூ ஆகி வெளியேறினார். அவர் 38 பந்துகளில் 28 ரன்கள் குவித்தார்.


  தொடர்ந்து, ஷமி பந்து வீச்சில் 19 ரன் அடித்திருந்த ஜோ ரூட் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்ப, ஆட்டத்தின் உணவு இடைவேலையில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 89 ரன்கள் குவித்திருந்தது.

  உணவு இடைவேலைக்கு பிறகு களமிறங்கிய பட்லர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார், ஆனால் 22 பந்துகளில் 24 ரன்கள் அடித்திருந்த அவர் ஷமி பந்தில் எல்.பி.டபள்யூ முறையில் ஆட்டமிழந்தார். 

  இதனால், 31 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 131 ரன்களுடன் தொடர்ந்து விளையாடி வருகிறது, பெய்ஸ்டோவ் 20 ரன்களுடனும், வோக்ஸ் ரன் ஏதும் அடிக்காமலும் களத்தில் உள்ளனர்.

  இந்திய அணி தரப்பில் ஷமி 3 விக்கெட்டுக்களையும், பாண்ட்யா மற்றும் இஷாந்த் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர். #ENGvIND
  ×