என் மலர்
கிரிக்கெட் (Cricket)

பணத்தை இழக்க விரும்பவில்லை: அடிக்கடி பந்து மாற்றங்கள் குறித்த கேள்விக்கு பும்ரா பதில்..!
- நாங்கள் எங்களுக்கு தந்த பந்தை வைத்து விளையாடினோம்.
- அதை எங்களால் மாற்ற முடியாது. அதற்காக சண்டையிடவும் முடியாது.
இந்தியா- இங்கிலாந்து இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு டெஸ்ட் முடிவில் இரு அணிகளும் தலா 1 போட்டியில் வெற்றி பெற்றுள்ளன.
3ஆவது போட்டி நேற்று முன்தினம் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. இந்த மைதானத்தில் பந்து வீசும்போது இந்திய அணி வீரர்கள் பந்து அடிக்கடி தனது வடிவத்தை (Shape) இழந்து விடுகிறது, பந்தை மாற்றித் தரும்படி நடுவரிடம் அடிக்கடி முறையிட்டனர்.
ஏற்கனவே முதல் இரண்டு போட்டிகளின்போதும் இதே பிரச்சனை இருந்தது. ரிஷப் பண்ட் கோபமாக நடுவர் முன்னே பந்தை கோபத்தில் வீசினார்.
இந்த நிலையில் லார்ட்ஸ் மைதானத்தில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய பும்ராவிடம் செய்தியாளர்கள் Dukes பந்து அடிக்கடி மாற்றப்பட்டது குறித்து கேள்வி எழுப்பினர்.
அதற்கு பும்ரா பதில் அளித்ததாவது:-
பந்தின் வடிவம் மாறியது. உண்மையிலேயே என்னால் பந்தை கட்டுக்கோப்புடன் வீசமுடியவில்லை. நான் பணத்தை இழக்க விரும்பவில்லை. ஏனென்றால், நான் கடினமாக பயிற்சி மேற்கொண்டு, அதிக ஓவர்கள் விளையாடினே். ஆகவே, எந்தவிதமான சர்ச்சையிலும் சிக்கி, போட்டிக்கான கட்டணத்தில் பிடித்தம் செய்யப்படுவதை விரும்பவில்லை.
இருந்த போதிலும், நாங்கள் எங்களுக்கு தந்த பந்தை வைத்து விளையாடினோம். அதை எங்களால் மாற்ற முடியாது. அதற்காக சண்டையிடவும் முடியாது. சில நேரங்களில் அது நம் வழியில் செல்லும். சில நேரங்களில் மோசமான பந்தை பெறுவோம். அப்படித்தான் நடக்கும்.
இவ்வாறு பும்ரா தெரிவித்துள்ளார்.






