என் மலர்
நீங்கள் தேடியது "ரீரிலீஸ்"
- இப்படத்தில் சூர்யாவின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.
- சமந்தாவிற்கு திருப்புமுனையாக அமைந்த படம்.
நடிகர் சூர்யாவின் 'அஞ்சான்' படத்தின் மறுவெளியீட்டு டிரெய்லர் வெளியானது. லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான படம் அஞ்சான். இதில் வித்யூத், சமந்தா, சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு, வசூலிலும் கலக்கியது. இப்படத்தில் சூர்யாவின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. இப்படம் சமந்தாவிற்கு நல்ல திருப்புமுனையாகவும் அமைந்தது.
அஞ்சான் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், நவ.28ஆம் தேதி திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளது. இதனையொட்டி படத்தின் ரீ-எடிட் செய்யப்பட்ட புதிய டிரெய்லரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
- 'அஞ்சான்' படத்தில் சூர்யாவுடன், வித்யூத் ஜாம்வால், சமந்தா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
- விஜயின் 'சச்சின்', சூர்யாவின் 'வாரணம் ஆயிரம்', தனுசின் 'யாரடி நீ மோகினி' உள்ளிட்ட பல படங்கள் மீண்டும் திரையிடப்பட்டன.
தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரிலீஸ் செய்து வருகிறார்கள்.
ஏற்கனவே ரஜினியின் 'பாட்ஷா', 'பாபா', கமல்ஹாசனின் 'வேட்டையாடு விளையாடு', 'ஆளவந்தான்', விஜயகாந்தின் 'கேப்டன் பிரபாகரன்', விஜயின் 'சச்சின்', சூர்யாவின் 'வாரணம் ஆயிரம்', தனுசின் 'யாரடி நீ மோகினி' உள்ளிட்ட பல படங்கள் மீண்டும் திரையிடப்பட்டன.
இந்த நிலையில், நடிகர் சூர்யா- இயக்குநர் லிங்குசாமி கூட்டணியில் வெளியான 'அஞ்சான்' திரைப்படம் மீண்டும் வெளியாக உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு வெளியான 'அஞ்சான்' படத்தில் சூர்யாவுடன், வித்யூத் ஜாம்வால், சமந்தா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தில் மனோஜ் பாஜ்பாய் வில்லனாக நடித்திருந்தார்.
'அஞ்சான்' படத்தின் இந்தி மொழிக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, இப்படத்தை ரீ-எடிட் செய்து விரைவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் அண்மையில் தெரிவித்திருந்த நிலையில் படம் வரும் நவம்பர் 28 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- எஸ். ஜே. சூர்யா இயக்கிய இந்த படத்தில் விஜய், ஜோதிகா உடன் விஜயகுமார், விவேக், மும்தாஜ், ஷில்பா ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
- 2000 ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் தேதி வெளியான திரைப்படம் வெளியாகி 100 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடியது.
தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரீ-ரிலீஸ் செய்து வருகிறார்கள்.
அந்த வகையில் கடந்த 2000-ம் ஆண்டில் விஜய், ஜோதிகா நடிப்பில் வெளியான 'குஷி' திரைப்படம் மீண்டும் ரிலீஸ் ஆக உள்ளது.
எஸ். ஜே. சூர்யா இயக்கிய இந்த படத்தில் விஜய், ஜோதிகா உடன் விஜயகுமார், விவேக், மும்தாஜ், ஷில்பா ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
தேவாவின் இசையில் படத்தில் இடம்பெற்ற கட்டிப்புடி; கட்டிப்புடிடா, ரேக்கவீனா, ஒரு பொண்ணு ஒண்ணு, மேகம் கருக்குது உட்பட ஆறு பாடல்களும் ஹிட் ஆகின.
2000 ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் தேதி வெளியான திரைப்படம் வெளியாகி 100 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடியது. விஜய்யின் சினிமா கேரியரில் முக்கியமான படமாக குஷி அமைந்தது.
இந்நிலையில் குஷி திரைப்படம் வரும் 25ஆம் தேதி மீண்டும் ரிலீஸ் செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- அவரது மைல்கல் திரைப்படமான 'கேப்டன் பிரபாகரன்' மீண்டும் திரைக்கு புதுப்பொலிவுடன் வருகிறது.
- தமிழ்நாடு முழுவதும் 500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்தப் படம் பிரம்மாண்டமாக ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற ஆக்ஷன் நாயகனாகவும், 'கேப்டன்' என்று கோடிக்கணக்கான மக்களால் அன்போடு அழைக்கப்பட்டவருமான விஜயகாந்தின் நினைவுகளைப் போற்றும் வகையில், ஒரு மாபெரும் கொண்டாட்டத்திற்குத் தயாராகி வருகிறது கோலிவுட்.
மறைந்த நடிகர் மற்றும் அரசியல் தலைவர் கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது திரைப்பயணத்தின் மைல்கல் திரைப்படமான 'கேப்டன் பிரபாகரன்' மீண்டும் திரைக்கு புதுப்பொலிவுடன் வருகிறது. வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி, தமிழ்நாடு முழுவதும் 500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்தப் படம் பிரம்மாண்டமாக ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
மேலும், இன்றைய தலைமுறை ரசிகர்களுக்கும் ஒரு புத்தம் புதிய அனுபவத்தைக் கொடுக்கும் வகையில், நவீன 4K தொழில்நுட்பத்தில் இப்படம் முழுவதுமாக டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
1991-ம் ஆண்டு, தமிழ்ப் புத்தாண்டு அன்று இயக்குனர் ஆர்.கே. செல்வமணி இயக்கத்தில் வெளியான 'கேப்டன் பிரபாகரன்', பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இத்திரைப்படம் விஜயகாந்த் அவர்களுக்கு மக்கள் மத்தியில் 'கேப்டன்' என்ற அடையாளப் பெயரைப் பெற்றுத் தந்தது, அதுவே அவரது வாழ்நாள் முழுவதும் நிலைத்தது.
இசைஞானி இளையராஜாவின் அதிரடியான இசையில், விஜயகாந்துடன் சரத்குமார், ரூபிணி, ரம்யா கிருஷ்ணன், மன்சூர் அலி கான், லிவிங்ஸ்டன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- 'பாட்ஷா' படம் ஒரு ஆண்டுக்கும் மேலாக திரையில் ஓடி பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது
- படத்தில் இடம் பெற்ற பாடல்கள், தேவாவின் பின்னணி இசை பட்டித் தொட்டி எங்கும் எதிரொலித்தது.
1995ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியான படம் ரஜினியின் 'பாட்ஷா'. சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் நக்மா, ரகுவரன், விஜயகுமார், தேவன், ஜனகராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கும் மேலாக திரையில் ஓடி பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்ற படம் 'பாட்ஷா'. இந்த படம் 2017-ம் ஆண்டு மீண்டும் டிஜிட்டலாக ரீஸ்டோர் செய்து வெளியிடப்பட்டது.
சாதாரண மனிதன் சந்தர்ப்ப சூழ்நிலையால் தாதாவாக மாறுவதும் பிறகு அதில் இருந்து விலகி ஊருக்கு சென்று ஆட்டோ ஓட்டி பிழைப்பதும் அங்கும் சில பிரச்சினைகளை எதிர்கொள்வதையும் திரைக்கதையாக அமைத்து சுரேஷ் கிருஷ்ணா இயக்கினார். இப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக ரகுவரன் நடித்திருந்தார். ரகுவரன் ஏற்று நடித்திருந்த மார்க் ஆண்டனி கதாபாத்திரம் இன்று ரசிகர்கள் மாஸ் வில்லனாக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளது.
படத்தில் இடம் பெற்ற பாடல்கள், தேவாவின் பின்னணி இசை பட்டித் தொட்டி எங்கும் எதிரொலித்தது. இன்றுவரை மக்களால் கேட்கப்பட்டு வருகிறது. திரைப்படத்தில் இடம் பெற்ற வசனங்கள், ஒரு தடவை சொன்னா 100 தடவை சொன்ன மாதிரி. மாணிக் பாஷா, மார்க் ஆண்டனி என இன்றும் டிரேட் மார்க் வசனமாக அமைந்துள்ளது.
இந்நிலையில், 'பாட்ஷா' திரைப்படம் வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில், நாளை (ஜூலை 18ம் தேதி) அப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
- 2006 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் புதுப்பேட்டை திரைப்படம் வெளியானது.
- யுவன் சங்கர் ராஜா இசையில் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆகின.
நடிகர் தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு 'புதுப்பேட்டை' திரைப்படம் ஜூலை 26ல் புதுப்பொலிவுடன் 4K தரத்தில் ரீ-ரிலீஸ் ஆகிறது
2006 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் புதுப்பேட்டை திரைப்படம் வெளியானது. இப்படத்தில் தனுஷ், சோனியா அகர்வால், சினேகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசையில் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆகின.
புதுப்பேட்டை திரைப்படம் வெளியான சமயத்தில் மக்களிடம் போதிய வரவேற்பை பெறவில்லை. ஆனால் இத்திரைப்படம் பின்னாளில் மக்களிடம் பெரும் கவனத்தை பெற்று கல்ட் கிளாசிக் கேங்ஸ்டர் படமாக மாறியது குறிப்பிடத்தக்கது.
- 2012 ஆம் ஆண்டு மகிழ் திருமேனி வெளியானது தடையறத் தாக்க திரைப்படம்.
- 13 வருடங்கள் முடிவடைந்த நிலையில் படத்தை படக்குழு மீண்டும் நாளை ரிலீஸ் செய்கிறது.
2012 ஆம் ஆண்டு மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய்,மம்தா மோகந்தாஸ், ரகுல் ப்ரீத் சிங் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது தடையறத் தாக்க திரைப்படம்.
திரைப்படம் வசூல் ரீதியாக பெரிதும் பேசப்படவில்லை என்றாலும், விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் நாளடைவில் இப்படம் மக்களிடம் அங்கீகாரம் பெற்றது.
இந்நிலையில் திரைப்படம் வெளியாகி 13 வருடங்கள் முடிவடைந்த நிலையில் படத்தை படக்குழு மீண்டும் நாளை ரிலீஸ் செய்கிறது.
அருண் விஜய் கடைசியாக பாலா இயக்கத்தில் வணங்கான் திரைப்படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.
- ஆர்.கே செல்வமணி இயக்கத்தில் மறைந்த கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் வெளியானது கேப்டன் பிராபகரன் திரைப்படம்.
- இளையராஜா இசையில் உருவான பாடல்கள் அனைத்தும் ஹிட்டடித்தது.
1991 ஆம் ஆண்டு ஆர்.கே செல்வமணி இயக்கத்தில் மறைந்த கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் வெளியானது கேப்டன் பிராபகரன் திரைப்படம். இப்படம் விஜயகாந்திற்கு 100-வது திரைப்படமாக அமைந்தது. திரைப்படம் வெளியாகி மக்களிடையே மிகப்பெரியளவில் வரவேற்பை பெற்று வெற்றி திரைப்படமாக உருமாறியது.
கேப்டன் விஜயகாந்துடன் மன்சூர் அலிகான், ரூபினி, லிவிங்ஸ்டன் மற்றும் ரம்யா கிருஷ்ணன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்தனர். இளையராஜா இசையில் உருவான பாடல்கள் அனைத்தும் ஹிட்டடித்தது.
இந்நிலையில் திரைப்படம் வெளியாகி 34 வருடங்கள் நிறைவடைந்த நிலையில் படத்தை 4K தரத்தில் ரீ-ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது.
மேலும் 2000 ஆண்டில் என்.மகாராஜன் இயக்கத்தில் வெளியான வல்லரசு திரைப்படத்தை படக்குழு ரீரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளது.திரைப்படம் வெளியாகி 25 வருடங்கள் முடிவடைந்த நிலையில் அதை கொண்டாடும் வகையில் மீண்டும் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
இந்த இரண்டு படங்களின் ரீரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால் கேப்டனின் ரசிகர்கள் மிகவும் உற்சாகமாக எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டு இருக்கின்றனர்.
- கடந்த 2014 ஆம் ஆண்டு சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியானது வீரம் திரைப்படம்.
- படத்தின் இசையை தேவி ஸ்ரீ பிரசாத் மேற்கொண்டார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியானது வீரம் திரைப்படம். இப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று ப்ளாக்பஸ்டர் திரைப்படமாக அமைந்தது.
இப்படத்தில் தமன்னா கதாநாயகியாக நடிக்க விதார்த், பாலா, சந்தானம், நாசர்,பிரதீப் ரவாத் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்தனர். படத்தின் இசையை தேவி ஸ்ரீ பிரசாத் மேற்கொண்டார்.
திரைப்படம் வெளியாகி 11 வருடங்கள் நிறைவு பெற்றதையொட்டி அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் மே 1 ஆம் தேதி படத்தை ரீ-ரிலீஸ் செய்கின்றனர். இதற்கான புது டீசரையும் இன்று படக்குழு வெளியிட்டது அதை இணையத்தில் அர்ஜுன் தாஸ் பதிவிட்டார். 11 வருடங்களுக்கு முன் இப்படத்தின் டீசரை நான் அப்லோட் செய்தேன் அஜித் சாரின் நிறுவனத்திற்காக தற்பொழுது மீண்டும் அப்லோட் செய்கிறேன். என் வாழ்க்கை முழுமை அடைந்தது போல உணர்வை பெறுகிறேன்."
சமீபத்தில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதில் குறிப்பாக அர்ஜுன் தாஸ் கதாப்பாத்திரத்தை மக்கள் பலரும் பாராட்டி இணையத்தில் பதிவு செய்து வருகின்றனர்.
- குட் பேட் அக்லி' இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
- அஜித் குமார் நடிப்பில் ராஜிவ் மேனன் இயக்கத்தில் வெளியானது கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படம்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. அஜித் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்.
கடந்த 2000 ஆம் ஆண்டில் அஜித் குமார் நடிப்பில் ராஜிவ் மேனன் இயக்கத்தில் வெளியானது கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படம். இப்படத்தில் ஐஷ்வர்யா ராய், தபு, மமூட்டி மற்றும் அபாஸ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்தனர். திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் இசையை ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்தார். படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடலகளும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இன்று வரை அப்படத்தின் பாடல்கள் ரீல்ஸ்-இல் வலம்வருகிறது.
திரைப்படம் தேசிய விருதை பெற்றது. இத்திரைப்படம் தெலுங்கில் மொழிமாற்றம் செய்தும் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வரும் மே 1 ஆம் தேதி அஜித் குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தை படக்குழு ரீரிலீஸ் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற இந்த படம் மூன்று பிரிவுகளில் தேசிய விருதுகளை வென்றது.
- ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட டிரெய்லர் வீடியோவை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் வெளியிட்டார்.
பாரதி கண்ணம்மா, பாண்டவர் பூமி, வெற்றிக் கொடிகட்டு, தவமாய் தவமிருந்து உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கியவர் சேரன். இவர் கடந்த 2004-ம் ஆண்டு சொந்தமாகத் தயாரித்து, இயக்கி, நடித்தத் திரைப்படம் 'ஆட்டோகிராப்'.
இதில் சினேகா, கோபிகா, கனிகா, மல்லிகா ஆகியோர் நடித்திருந்தனர். மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற இந்த படம் மூன்று பிரிவுகளில் தேசிய விருதுகளை வென்றது. பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்த 'ஒவ்வொரு பூக்களுமே' பாடலுக்காக பாடகி சித்ரா, பாடலாசிரியர் பா.விஜய் தேசிய விருது பெற்றனர்.
பள்ளிப் பருவம், கல்லூரி பருவம், வேலை தேடும் பருவம் என ஒரு சராசரி தமிழ் இளைஞனின் வாழ்க்கையை தத்ரூபமாக சித்தரித்த இந்த படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது.
இந்த நிலையில், படம் வெளியாகி 21 ஆண்டுகளுக்குப் பிறகு 'ஆட்டோகிராப்' படம் மே 16ம் தேதி ரீ-ரிலீஸாக உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
படம் ரீ-ரிலீஸாவதை ஒட்டி புதிய ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட டிரெய்லர் வீடியோவை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
- விஜய், வடிவேலு, ரீமா சென் ஆகியோர் நடிப்பில் வெளியான பகவதி படம் சூப்பர் ஹிட் ஆனது.
- பகவதி படம் வெளியாகி 23 ஆண்டுகள் ஆனது.
1992 இல் நாளைய தீர்ப்பு படத்தில் ஹீரோவாக அறிமுகமான விஜய் ஆக்ஷன் ஹீரோவாக பரிணமித்த படம் பகவதி. 2002 இல் ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் விஜய், வடிவேலு, ரீமா சென் ஆகியோர் நடிப்பில் வெளியான பகவதி படம் சூப்பர் ஹிட் ஆனது.
விஜய்க்கும் வடிவேலுவுக்கும் இடையிலான காமெடி காட்சிகளும், டீக்கடை உரிமையாளராக இருந்து கேங்ஸ்டராக விஜய் பரிணமிக்கும் ஆக்ஷன் காட்சிகளும் வெறித்தனமாக அமைந்திருக்கும்.

விஜய்யின் 22 ஆவது படமான இது என்றுமே அவரது கேரியரில் ஸ்பெஷலானதாக இருக்கும்.
பகவதி படம் வெளியாகி 23 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது இப்படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்படுகிறது. அதன்படி வரும் மார்ச் 21 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) படம் ரீரிலீஸ் ஆகும் என தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






