என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    VIDEO: திரையரங்கில் ரீரிலீஸான படையப்பா படத்தை கண்டு ரசித்த நீலாம்பரி ரம்யா கிருஷ்ணன்
    X

    VIDEO: திரையரங்கில் ரீரிலீஸான 'படையப்பா' படத்தை கண்டு ரசித்த 'நீலாம்பரி' ரம்யா கிருஷ்ணன்

    • படையப்பா, டிச.12ஆம் ரீரிலீஸ் செய்யப்பட்டது.
    • இதுதொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு வீடியோ எல்லாம் வெளியிட்டிருந்தார்.

    நடிகர் ரஜினிகாந்தின் 50 ஆண்டுகால திரைப்பயணம், அவரது 75வது பிறந்தநாள் உள்ளிட்டவற்றை சிறப்பிக்கும் வகையில் அவரது பிளாக்பஸ்டர் படமான படையப்பா, டிச.12ஆம் ரீரிலீஸ் செய்யப்பட்டது.

    இதுதொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு வீடியோ எல்லாம் வெளியிட்டிருந்தார். ரீரிலீஸுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ரஜினிகாந்தின் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

    இந்நிலையில் நீலாம்பரி கதாபாத்திரத்தில் நடித்து நம்மை மிரட்டிய ரம்யா கிருஷ்ணன் படையப்பா படத்தை திரையரங்கில் கண்டு ரசித்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

    Next Story
    ×