என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    அஜித் ரசிகர்களுக்கு ட்ரீட்... மங்காத்தா ரீ-ரிலீஸ் தேதியை அறிவித்த சன் பிக்சர்ஸ்
    X

    அஜித் ரசிகர்களுக்கு ட்ரீட்... மங்காத்தா ரீ-ரிலீஸ் தேதியை அறிவித்த சன் பிக்சர்ஸ்

    • மங்காத்தா படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்தார்.
    • விநாயக் மகாதேவ் என்ற கதாப்பாத்திரத்தில் நடிகர் அஜித் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்திருப்பார்.

    2011 ஆம் ஆண்டு அஜித், திரிஷா, அர்ஜூன் நடிப்பில் வெளியான மங்காத்தா திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது.

    இன்ஸ்பக்டர் விநாயக் மகாதேவ் என்ற கதாப்பாத்திரத்தில் நடிகர் அஜித் மிகவும் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்திருப்பார். ஒரு கடத்தல்காரனை தப்பிக்க விட்டதற்காக அவரை ச்ஸ்பண்ட் செய்து விடுவார்கள். அப்பொழுது அவர் ஒரு கும்பலை சந்திக்கிறார். அவர்கள் 500 கோடி ரூபாய் பணத்தொகையை கடத்த திட்டம் போடுகிறார்கள். அதற்கு அஜித் உதவுவதாக கூறுவார் அதற்கு அடுத்து என்ன நடந்தது என்பதே கதைக்களம்.

    இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்தார். படத்தின் பின்னணி இசை மிரட்டலாக இருக்கும். படத்தில் இடம் பெற்றுள்ள ஸ்டண்ட் காட்சிகளும், அஜித் ஒற்றை வீலில் பைக் ஓட்டும் காட்சிகள் மக்களை பிரமிக்க வைத்தது.

    இந்நிலையில், ஜனவரி மாதம் 23 ஆம் தேதி மங்காத்தா படம் ரீரிலீஸ் ஆகும் என்று சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    ஏற்கனவே அஜித்தின் அட்டகாசம் படம் அண்மையில் ரீ ரிலீஸ் ஆனது. அதேபோல அமர்க்களம் படமும் பிப்ரவரியில் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×