என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மன்சூர் அலிகான்"
- மன்சூர் அலிகான் பேசிய கருத்து மிகப்பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்தது.
- நடிகர் மன்சூர் அலிகான், நடிகைகள் திரிஷா, குஷ்பு மற்றும் நடிகர் சிரஞ்சீவிக்கு எதிராக மான நஷ்டஈடு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
நடிகர் மன்சூர் அலிகான் அளித்த பேட்டி ஒன்றில் நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கூறியிருந்தார். இதற்கு நடிகை திரிஷா கண்டனம் தெரிவித்தார். தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு, நடிகர் சிரஞ்சீவி ஆகியோரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

மன்சூர் அலிகான் பேசிய கருத்து மிகப்பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்தது. இதனால் பெண்களை இழிவுப்படுத்தி பேசுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர்ந்தனர். இதற்கிடையே மன்சூர் அலிகான் தன்னுடைய கருத்து வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டார். நடிகை திரிஷாவும் மன்னித்ததாக தெரிவித்தார்.
இத்துடன் பிரச்சனை முடிந்துவிட்டது என்று நினைக்கையில் நடிகர் மன்சூர் அலிகான், நடிகைகள் திரிஷா, குஷ்பு மற்றும் நடிகர் சிரஞ்சீவிக்கு எதிராக மான நஷ்டஈடு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மூவரும் தலா ஒரு கோடி ரூபாய் வீதம் ரூ.3 கோடி வழங்க உத்தரவிட வேண்டும் என புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரத்தில் திரிஷா தான் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும் என்று கூறியதோடு எங்களுக்கு எதுவும் தெரியாது என்று நினைக்க வேண்டாம் என்று நீதிபதி தெரிவித்தார். மேலும், நடிகராக இருக்கும் ஒரு நபரை பல இளைஞர்கள் ரோல் மாடலாக பின்பற்றும் நிலையில், பொதுவெளியில் அநாகரிகமாக நடந்து கொள்ளலாமா? பொதுவெளியில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று மன்சூர் அலிகானுக்கு அறிவுறுத்துங்கள் என்று மன்சூர் அலிகான் தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதி கூறினார்.
இதைத்தொடர்ந்து, மன்சூர் அலிகான் மனுவிற்கு பதிலளிக்கும் படி நடிகைகள் திரிஷா, குஷ்பு மற்றும் நடிகர் சிரஞ்சீவிக்கு உத்தரவிட்ட நீதிபதி இந்த வழக்கை டிசம்பர் 22-ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளார்.
- நடிகை திரிஷா குறித்து பேசியது சர்ச்சையாக வெடித்தது.
- மன்சூர் அலிகான் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்க்குப்பதிவு செய்யப்பட்டது.
நடிகர் மன்சூர் அலிகான் அளித்த பேட்டி ஒன்றில் நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கூறியிருந்தார். இதற்கு நடிகை திரிஷா கண்டனம் தெரிவித்தார். தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு, நடிகர் சிரஞ்சீவி ஆகியோரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
மன்சூர் அலிகான் பேசிய கருத்து மிகப்பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்தது. இதனால் பெண்களை இழிவுப்படுத்தி பேசுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர்ந்தனர். இதற்கிடையே மன்சூர் அலிகான் தன்னுடைய கருத்து வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டார். நடிகை திரிஷாவும் மன்னித்ததாக தெரிவித்தார்.
இந்த நிலையில் நடிகைகள் திரிஷா, குஷ்பு மற்றும் நடிகர் சிரஞ்சீவிக்கு எதிராக மன்சூர் அலிகான் மான நஷ்டஈடு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மூவரும் தலா ஒரு கோடி ரூபாய் வீதம் ரூ.3 கோடி வழங்க உத்தரவிட வேண்டும் என புகார் மனுவில் தெரிவித்துள்ளார். மன்சூர் அலிகான் தாக்கல் செய்த வழக்கு வரும் திங்கள்கிழமை நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடவடிக்கை எடுக்க வேண்டாம்- திரிஷா
நடிகை திரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரம் தொடர்பாக திரிஷா தரப்பிடம் விளக்கம் கேட்டு ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கடிதம் அனுப்பினர். இந்த விவகாரம் தொடர்பாக எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க வேண்டும் என திரிஷாவுக்கு காவல்துறை அறிவுறுத்தியது.

இதையடுத்து நடிகர் மன்சூர் அலிகான் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டுவிட்டதால் அவர் மீது மேல் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என நடிகை திரிஷா தெரிவித்திருந்தார். இருந்தபோதிலும் நீதிமன்றம் அவருக்கு முன்ஜாமின் வழங்க நீதிமன்றம் மறுத்து விட்டது.
திரிஷாவுக்கு ஆதரவாக சிரஞ்சீவி கருத்து
"நடிகை திரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசிய கண்டிக்கத்தக்க கருத்துகள் என் கவனத்திற்கு வந்தது. அவரின் இந்த மரியாதை இல்லாத அருவருக்கத்தக்கப் பேச்சு நடிகைக்கு மட்டுமல்ல எந்த பெண்ணுக்கும் நேரக்கூடாது.

இதனை கடுமையான வார்த்தைகள் கொண்டு கண்டிக்க வேண்டும். இதுபோன்ற வக்கிரமான வார்த்தைகள் பெண்களை துவண்டு போகச் செய்திடும். திரிஷாவுக்கு மட்டுமல்ல இது போன்ற மோசமான கருத்துகளை எதிர்கொள்ளும் பெண்களுக்கும் ஆதரவாக உடன் நிற்கிறேன்" என சிரஞ்சீவி குறிப்பிட்டிருந்தார்.
- அணை தண்ணீர் திறந்துவிட்டால் இங்கே தண்ணீர் வந்துதான் ஆகும்.
- நான் கொஞ்சம் உயராமாக வீடு கட்டியதால் தப்பித்தேன்.
'மிச்சாங்' புயல் காரணமாக சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகள் மழைநீரால் சூழப்பட்டுள்ளன. மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்கும் பணிகள் அரசு சார்பில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இதைத்தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு அமைப்பினர் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். நடிகர்கள் மற்றும் சின்னத்திரை பாலா மற்றும் பலர் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் அரும்பாக்கத்தில் வெள்ள நீர் தேங்கியுள்ளதாக காரின் மேல் அமர்ந்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில்," இது அரும்பாக்கம், திருக்கமலம் கோயில் மூன்றாவது தெரு. 100 மீட்டர் தொலைவில் கூவம் ஆறு உள்ளது. செம்பரம்பாக்கம் தண்ணீர் நம்ம ஏரியாவிற்கு வருவது அரிது. அணை தண்ணீர் திறந்துவிட்டால் இங்கே தண்ணீர் வந்துதான் ஆகும். கூவம் ஆறை ஒட்டியுள்ள பகுதி இது என்பதால் தண்ணீர் வரும். பலரும் தாழ்வாக கட்டிவிட்டார்கள். நான் கொஞ்சம் உயரமாக வீடு கட்டியதால் தப்பித்தேன்.

எல்லாவற்றிற்கும் பெருநகர மாநகராட்சியை, அரசை குறை சொல்ல முடியாது. ஏனெனில், செம்பரம்பாக்கம் அணையில் நீர் அதிகமாக இருந்தால் அதை திறந்துவிட்டே ஆக வேண்டும். இல்லையெனில் அணை உடைந்துவிடும். ஏரி கரையில் உள்ள பகுதிகளுக்கு தண்ணீர் வந்துவிட்டது. ஏனெனில், பெரும் மழை, புயல். எதுவும் செய்ய முடியாது. அரசை குறை சொல்லி ஒரு பயனும் இல்லை. நிஜத்தை பேசணும். கூவம் ஆற்றிற்கு அருகில் தாழ்வான பகுதிகளில் உள்ள எல்லாரும் பாதிக்கப்படுவார்கள். எல்லாம் ஆக்கிரமிப்பு பகுதிகளில் கட்டப்பட்டது. ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டதால் இந்த வேதனைகளையெல்லாம் தாங்க வேண்டியதாக இருக்கிறது. செம்பரம்பாக்கம் அதிக கொள்ளளவு கொண்ட ஏரி. அது நீர் நிரம்பி உடைந்துவிட்டால் சென்னையே மூழ்கிவிடும்." என்று கூறினார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
- சர்ச்சை பேச்சு குறித்து விசாரணைக்கு நேரில் ஆஜராகக்கோரி மன்சூர் அலிகானுக்கு போலீசார் சம்மன் வழங்கினர்.
- திரிஷா தரப்பிடம் விளக்கம் கேட்டு ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் கடிதம் அனுப்பினர்.
நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதைத்தொடர்ந்து மன்சூர் அலிகானுக்கு எதிராக பலர் கண்டன குரல் எழுப்பினர்.
இதற்கிடையே மன்சூர் அலிகான் மீது தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் டி.ஜி.பி.க்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை ஏற்று உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோருக்கு, டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து மன்சூர் அலிகான் மீது சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சர்ச்சை பேச்சு குறித்து விசாரணைக்கு நேரில் ஆஜராகக்கோரி மன்சூர் அலிகானுக்கு போலீசார் சம்மன் வழங்கினர். இந்த சம்மனை ஏற்று நடிகர் மன்சூர் அலிகான் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு நேரில் வந்து விளக்கம் அளித்தார்.
இதனை தொடர்ந்து, திரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு மன்சூர் அலிகான் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக திரிஷா, "தவறு செய்பவன் மனிதன். அதை மன்னிப்பவன் தெய்வம்" என்று தனது சமூக வலைதளத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், நடிகை திரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரம் தொடர்பாக திரிஷா தரப்பிடம் விளக்கம் கேட்டு ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் கடிதம் அனுப்பினர். இந்த விவகாரம் தொடர்பாக எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்கவேண்டும் என திரிஷாவுக்கு காவல்துறை அறிவுறுத்தியது.
இதையடுத்து போலீசாரின் கடிதத்திற்கு நடிகை திரிஷா பதிலளித்துள்ளார். அதில், நடிகர் மன்சூர் அலிகான் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டுவிட்டதால் அவர் மீது மேல்நடவடிக்கை எடுக்க வேண்டாம் என நடிகை திரிஷா தெரிவித்துள்ளார்.
- நடிகை திரிஷா குறித்து மன்சூர் அலிகான் ஆபாசமாக பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
- இதைத்தொடர்ந்து மன்சூர் அலிகான், திரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
நடிகை திரிஷா பற்றி வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஆயிரம் விளக்கு மகளிர் போலீசார் மன்சூர் அலிகான் மீது வழக்குப் பதிவு செய்தனர். தேசிய பெண்கள் ஆணையம் வலியுறுத்தியதன் பேரில் மன்சூர்அலிகான் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை நேரில் அழைத்து விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கில் மன்சூர் அலிகானுக்கு முன்ஜாமீன் கிடைக்காத நிலையில் திரிஷாவிடம் அவர் மன்னிப்பு கேட்டிருந்தார். பின்னர் மன்சூர் அலிகான், திரிஷாவிடம் நான் மன்னிப்பு கேட்கவில்லை என்று பல்டி அடித்தார். திரிஷா மீது மானநஷ்ட வழக்கு தொடர இருப்பதாகவும் அவர் தெரிவித்து இருந்தார்.
மன்சூர்அலிகானின் பேச்சு தொடர்பாக திரிஷாவிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்திருந்தனர். இதையடுத்து அவருக்கு ஆயிரம்விளக்கு மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி கடிதம் அனுப்பி உள்ளார்.

அதில் மன்சூர்அலிகான் மீது போடப்பட்டுள்ள வழக்கு தொடர்பாக உங்களிடம் சில விளக்கங்களை கேட்க வேண்டியதுள்ளது. எனவே நீங்கள் போலீஸ் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக போலீசாரிடம் கேட்டபோது, தாங்கள் அனுப்பியுள்ள கடித்தை ஏற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பதா? இல்லை எழுத்துப்பூர்வமாக தபாலில் விளக்கம் அளிப்பதா? என்பது திரிஷாவின் விருப்பமாகும் என்று தெரிவித்தனர். இந்த கடிதத்தை அனுப்பி சில நாட்கள் ஆகிவிட்டது என்றும், இதற்கு திரிஷா விளக்கம் அளிக்கவில்லை என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அனுப்பி உள்ள கடிதத்தை ஏற்று திரிஷா விரைவில் விளக்கம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- 'திரிஷாவே என்னை மன்னித்து விடு' என்று அறிக்கை வெளியிட்டு மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டார்.
- மன்சூர் அலிகான் ஆயிரம் விளக்கு போலீஸ் நிலையத்துக்கு நேரில் சென்று ஆஜரானார்.
நடிகை திரிஷா பற்றி அவதூறாக பேசிய வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் மீது ஆயிரம் விளக்கு மகளிர் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திரிஷா பற்றிய பேச்சுக்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று தெரிவித்திருந்த மன்சூர் அலிகான் பின்னர் 'திரிஷாவே என்னை மன்னித்து விடு' என்று அறிக்கை வெளியிட்டு மன்னிப்பு கேட்டார்.
ஆயிரம் விளக்கு போலீஸ் நிலையத்துக்கு நேரில் சென்று ஆஜரானார். அப்போது மன்சூர் அலிகானிடம் 45 நிமிடங்கள் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையின் போது திரிஷா பற்றி தவறான கண்ணோட்டத்துடன் எதுவும் பேசவில்லை என்று மன்சூர் அலிகான் விளக்கம் அளித்தார். இது தொடர்பாக அவர் அளித்த தகவல்களை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர்.

இதற்கிடையே சென்னை மாவட்ட முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் மன்சூர் அலிகான் போலீஸ் நிலையத்தின் பெயரை தவறுதலாக குறிப்பிட்டு தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றார். இதற்கு நீதிபதி அல்லி கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் மீண்டும் தாக்கல் செய்யப்பட்ட முன்ஜாமீன் மனு தள்ளுபடியானது. மன்சூர் அலிகானின் மன்னிப்பை திரிஷா ஏற்றுக் கொண்ட நிலையிலும் முன்ஜாமீன் மனு தள்ளுபடியானதால் அவர் மீதான சட்ட நடவடிக்கைகளில் அடுத்து என்ன நடக்கும்? என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மன்சூர் அலிகான் கைது செய்யப்படுவாரா? என்கிற கேள்வியும் எழுந்தது. இவற்றை போலீசாரிடம் கேட்டபோது, முன்ஜாமீன் மனு தள்ளுபடியாகி இருக்கும் நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவித்தனர்.

இந்த நிலையில் மன்சூர் அலிகான் தன்னைப் பற்றி அவதூறாக பேசியது தொடர்பாக திரிஷா இது வரை போலீசில் எந்த புகாரையும் அளிக்காமலேயே உள்ளார். இருப்பினும் மன்சூர் அலிகான் மீது போடப்பட்டுள்ள வழக்கு தொடர்பாக திரிஷாவிடம் நேரில் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.
திரிஷாவை நேரில் அழைத்தோ அல்லது அவரது வீட்டுக்கு சென்றோ விரைவில் விசாரணை நடத்தப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த விசாரணை மற்றும் வாக்குமூலத்தை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்பதால் கண்டிப்பாக அவரிடம் உரிய விசாரணையை நடத்த தயாராகி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
- மன்தூர் அலிகான் மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
- மன்சூர் அலிகான் முன் ஜாமின் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல்.
நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக மன்சூர் அலிகானுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.
பெண்களை இழிவுபடுத்தி பேசுதல் உள்பட 2 பிரிவுகளின் கீழ், சென்னை ஆயிரம் விரளக்கு மகளிர் போலீசார் மன்தூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்தது.
பின்னர், இந்த வழக்கில் மன்சூர் அலிகான் முன் ஜாமின் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில், மன்சூர் அலிகான் தாக்கல் செய்த முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சர்ச்சை பேச்சை தொடர்ந்து நடிகர் மன்சூர் அலிகான் திரிஷாவிடம் மன்னிப்பு கோரினார். தொடர்ந்து, திரிஷாவும் மன்னிப்பை ஏற்றுக்கொண்டதாக பதிவு வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- திரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசியது சர்ச்சையானது.
- இதனால் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
திரிஷா பற்றி நடிகர் மன்சூர்அலிகான் பேசிய ஆபாச பேச்சு சர்ச்சையாகி திரையுலகில் கடந்த சில தினங்களாக பரபரப்பாகி வந்தது. மன்சூர்அலிகான் மீது போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஆயிரம் விளக்கு போலீஸ் நிலையத்தில் அவர் நேற்று நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.
இதையடுத்து மன்சூர் அலிகான் இன்று திரிஷா விடம் மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், "ஆம்!! அடக்க நினைத்தால் அடங்கமறு!! இப்ப சொல்கிறேன். என்னை மன்னித்துவிடு! ஒரு வாரமாக நடந்த கத்தியின்றி ரத்தமின்றி போரில் நான் வெற்றி? பெற்றுவிட்டேன்.
எனது சக திரைநாயகி திரிஷாவே என்னை மன்னித்துவிடு! இல்லறமாம் நல்லறத்தில் நின் மாங்கல்யம் தேங்காய் தட்டில் வலம்வரும்போது நான் ஆசிர்வதிக்கும் பாக்கியத்தை இறைவன் தந்தருள்வானாக!! " என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், நடிகை திரிஷா தனது சமூக வலைதளத்தில், "தவறு செய்பவன் மனிதன். அதை மன்னிப்பவன் தெய்வம்" என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் திரிஷா, மன்சூர் அலிகானை மன்னித்துவிட்டதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
- திரிஷா குறித்த மன்சூர் அலிகான் பேச்சு சர்ச்சையாகியது.
- மன்சூர் அலிகான் போலீஸ் நிலையத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.
திரிஷா பற்றி நடிகர் மன்சூர்அலிகான் பேசிய ஆபாச பேச்சு சர்ச்சையாகி திரையுலகில் கடந்த சில தினங்களாக பரபரப்பாகி வந்தது. மன்சூர்அலிகான் மீது போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஆயிரம் விளக்கு போலீஸ் நிலையத்தில் அவர் நேற்று நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.
இந்த நிலையில் மன்சூர் அலிகான் இன்று திரிஷா விடம் மன்னிப்பு கேட்டுள் ளார். இது தொடர்பாக நடிகர் மன்சூர்அலிகான் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறி இருப்பதாவது:-
ஆம்!! அடக்க நினைத் தால் அடங்கமறு!! இப்ப சொல்கிறேன். என்னை மன்னித்துவிடு!
ஒரு வாரமாக நடந்த கத்தியின்றி ரத்தமின்றி போரில் நான் வெற்றி? பெற்றுவிட்டேன்!
எனக்காக வாதிட்ட தலைவர்கள், நடிகர்கள், ஊடகவியலாளர்கள் யாவோர்க்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். எதிர்த்து என்னை கண்டித்த மானுடர்களுக்கும் பணிவான வணக்கங்கள். கலிங்கத்துப் போர் முடிந் தது. லட்சக்கணக்காணோர் மாண்டு கிடக்க, சாம்ராட் அசோகனின் இதயத்தில் ரத்தம் வடிந்து, அகிம்சை யை தழுவினான். ஆம். மனசாட்சியே இறைவன்.
காவல் அதிகாரி அம்மை யார் திரிஷாவின் மனது வருத்தப்பட்டிருக்கிறது எனச் சொல்ல, 'ஐயஹோ எனக்கும் வருத்தம் தான்' என வந்துவிட்டேன். யதார்த்த நிலை!
சட்டம் வென்று வெளியே வந்தால், மீண்டும் கோரப்பசி யுடன் கோழிக் குஞ்சை கவ்வ வரும் வல்லூறுகளாக ஊடகம் துரத்துகிறது!! ஜனநாயகத்தின் நான்காவது தூண்,. மணிப்பூர், ஹாத்ரஸ் பெண் பல்கீஸ் பானு, நீட் அனிதாக்கள், வாச்சாத்தி வன் கொடுமைகள் நித்தம் மதக்கலவர வன்கொடுமை களை சாட்டையடியாக கேள்வி கேட்க மறுக்கிறது.
எனது இளமைக்காலம் யாவும் திரைத்துறையில் இழந்து விட்டேன். திமிங்கல மாக உலா வந்தாலும், பாத்திரங்கள் சிறு மீன்க ளாகத்தான் அமைந்தது. இனி வரும் நாட்களாவது ஆக்கபூர்வமாக உழைக்க இறைவா சக்தியை கொடு!
என் மக்கள், மலடான பளபளக்கும் ரசாயன உர மேற்றப்பட்ட காய்கறிகளை உண்டு, விவசாயிகள் வீணர் களாக ஆக்கப்பட்டு, விளை நிலங்கள் கரிக்கட்டைகளாக மாறும். கனிமங்கள், மலை, ஆறு காணாடிக்கப்பட்டு, வேலையற்றவர்களாய் நிற்கிறோம். குழந்தைகள் கசடறகற்க, சூரியன் மறையும் முன் குடும்பம் காக்க மாங்குமாங்கு என்று உழைப்போம். மாதத்தில் 10 நாள் கடுமையாக உழைத் தால்தான் கரண்ட் பில் கட்ட முடியும். மீதி நாள் ஜி.எஸ்.டி., எஸ்.டி., டோல்கேட், பெட்ரோல் கேஸ், ஸ்கூல் பீஸ், மளிகை வாங்க என, ஒன்றும் மிஞ்சமாட்டேங்கிறது. இன் னும் கடுமையாக ஏதாவது சம்பளத்திற்கு வேலை செய்தால்தான் நாம் அதா னிக்கு கப்பம் கட்ட முடியும். அதானிந்தியா மார்பில் தவமும் குழந்தையுடன், இளமங்கை இளவரசியை கட்டிலில் விட்டுச்செல்ல நாம் புத்தனில்லை. ஆம்!
பெண்ணிலிருந்து தான் மனிதன் பிறக்கிறான். தாயின் காலடியில் சொர்க் கம். தாய்க்கு சேவை செய் என்றார் நபிகளார். பெண்மை புனிதம். கார ணத்தோடு தான் ஆண்மை யை அழியுங்கள் என்றார் பெரியார். எனை ஈன்ற சபூரா மாள் பாம்புக்கடி, பூரான், தேள் கடித்து வருவோர்க்கு 8' வேளை தொழுது, ஓதி, ஊதி, கிராம்பு நீர் கொடுத்து, நற்கிருபைகள் செய்தவர். சினிமா பார்க்கவிடாது 10-ம் வகுப்புவரை வளர்த்த வர். இனிமேலும் இம்மண் ணின் மீட்சிக்கு, சகோ தரத்துவத்துடன் உழைக்க அருள் புரிவாய் இறைவா!! இறையச்சமே நம் குழந்தை களின் நல்வாழ்க்கையை அருளும்!
எனது சக திரைநாயகி திரிஷாவே என்னை மன்னித்துவிடு!
இல்லறமாம் நல்லறத்தில் நின் மாங்கல்யம் தேங்காய் தட்டில் வலம்வரும்போது நான் ஆசிர்வதிக்கும் பாக்கியத்தை இறைவன் தந்தருள்வானாக!! ஆமீன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் நடிகர் மன்சூர் அலிகான் கூறியுள்ளார்.