என் மலர்
நீங்கள் தேடியது "தேசியவாத காங்கிரஸ்"
- அஜித் பவார் மீண்டும் சரத் பவாருடன் இணையத் திட்டமிட்டிருந்தார்.
- கடைசி நேரத்தில் விமானி மாற்றப்பட்டது ஏன்?
மகாராஷ்டிர துணை முதல்வராக இருந்த அஜித் பவார், ஜனவரி 28 அன்று காலை புனேவில் உள்ள தனது சொந்த தொகுதியான பாராமதிக்கு உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்திற்கு சென்றபோது அவரின் தனிவிமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
இதில் அஜித் பவார் உட்பட விமானத்தில் இருந்த அவரது பாதுகாவலர், 2 விமானிகள், விமான பணிப்பெண் என 5 பேர் உயிரிழந்தனர். அஜித் பவாரின் துணை முதல்வர் பதவி அவரின் மனைவி சுனேத்ரா பவாருக்கு வழங்கப்பட்டது.
நடப்பு உள்ளாட்சி தேர்தலில் அஜித் பவரின் தேசியவாத காங்கிரஸ், பல இடங்களில் எதிரணியில் உள்ள சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்தது. எனவே பிரசாரங்களில் அஜித் பவார் தான் அங்கம் வகிக்கும் பாஜக கூட்டணியை எதிர்த்தே பேசி வந்தார். பாஜக உள்ளாட்சிகளில் ஊழல் செய்வதாக அஜித் பவார் பேசி வந்தார்.
இந்த நிலையில் அஜித் பவாரின் மரணத்தில் எதிர்க்கட்சிகள் சந்தேகம் கிளப்பியுள்ளன. விபத்து நடந்த அன்றே மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இந்த விபத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகம் எழுப்பினார்.
உத்தவ் சிவசேனா எம்பி சஞ்சய் ராவத், அஜித் பவார் மரணத்தில் மர்மம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
சஞ்சய் ராவத் கூறுகையில், "பாஜகவின் ஊழல்கள் குறித்த ஒரு ரகசிய கோப்பு தன்னிடம் இருப்பதாக ஜனவரி 15 அன்று அஜித் பவார் தெரிவித்திருந்தார். அதை வெளியிடப்போவதாகவும் கூறியிருந்தார். அவர் பேசிய 10 நாட்களுக்குள் இந்த விபத்து நடந்துள்ளது" என்று தெரிவித்தார்.
மேலும், அஜித் பவார் மீண்டும் சரத் பவாருடன் இணையத் திட்டமிட்டிருந்ததாகவும், இது பாஜகவுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால் இந்தச் சதி நடந்திருக்கலாம் என்றும் அவர் கூறினார்.
விபத்தில் சிக்கிய அந்த விமானத்திற்கு முறையான பராமரிப்பு சான்றிதழ் இல்லை. கடைசி நேரத்தில் விமானி மாற்றப்பட்டது ஏன்? என இதுபோன்ற பல குழப்பங்கள் நிலவுவதாக சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் அமோல் மித்காரியும் பேசியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் விஜய் வடேட்டிவார் கூறுகையில், "அஜித் பவாரின் உடல் அடக்கம் கூட இன்னும் முழுமையாக முடிவடையவில்லை, ஆனால் அதற்குள் அவரது மனைவி சுநேத்ரா பவார் துணை முதல்வராகப் பதவி ஏற்றுக்கொண்டார். அனைவருக்கும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதிலேயே அவசரம் இருந்தது. மகாராஷ்டிராவின் 80 சதவீத மக்கள் இந்த மரணத்தில் மர்மம் இருப்பதாகவே நம்புகின்றனர்" என்று தெரிவித்துள்ளார்.
சரத் பவார் இதனை ஒரு விபத்து என்று கூறினாலும், மற்ற எதிர்க்கட்சிகள் இதனை ஒரு பெரிய அரசியல் சதியாகவே பார்க்கின்றன. இது குறித்து உயர்மட்ட விசாரணை தேவை எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
- எங்களது கட்சி தலைவர்கள் பலர் அஜித்பவாரின் மனைவி துணை முதல்-மந்திரியாக வர வேண்டும் என விரும்புகிறார்கள்.
- அஜித்பவார் குடும்பத்தை சேர்ந்தவர் துணை முதல்-மந்திரி ஆவதற்கு நாங்கள் பக்கபலமாக இருக்கிறோம்.
மகாராஷ்டிர துணை முதல்-மந்திரியாக பதவி வகித்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித்பவார் கடந்த புதன்கிழமை புனே அருகே விமான விபத்தில் சிக்கி மரணம் அடைந்தார். இதைத்தொடர்ந்து, அவரின் அரசியல் வாரிசு யார்? என்பது தான் புதிய கேள்வியாக எழுந்தது. கட்சியின் பெரும்பான்மை தரப்பினர் கட்சியிலும், ஆட்சியிலும் அஜித்பவார் வகித்து வந்த பதவிகளை அவரது மனைவி சுனேத்ரா பவாருக்கு வழங்க விருப்பம் தெரிவித்தனர்.
இந்தநிலையில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசை நேற்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் பிரபுல் படேல், மூத்த தலைவர்கள் சகன் புஜ்பால், சுனில் தட்கரே, தனஞ்செய் முண்டே ஆகியோர் சந்தித்தனர். அப்போது அஜித்பவார் மனைவி சுனேத்ரா பவாருக்கு துணை முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். சுமார் 1½ மணி நேரம் முக்கிய ஆலோசனை நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து தேசியவாத காங்கிரசின் மூத்த தலைவரும், மந்திரியுமான சகன் புஜ்பால் நேற்று இரவு கட்சி அலுவலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
நாங்கள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசை சந்தித்தோம். அப்போது சுனேத்ரா பவாரை துணை முதல்-மந்திரியாக்க வேண்டும் என்ற எங்களது கோரிக்கையை ஏற்றுக்கொண்டார். அவரை தேசியவாத காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுத்து விட்டால், நாளையே கூட துணை முதல்-மந்திரி பதவி ஏற்பதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று கூறினார்.
எங்களது கட்சி தலைவர்கள் பலர் அஜித்பவாரின் மனைவி துணை முதல்-மந்திரியாக வர வேண்டும் என விரும்புகிறார்கள். கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் பதவி மற்றும் அதனை தொடர்ந்து துணை முதல்-மந்திரி பதவியை நிரப்புவதே தற்போது எங்களது முன்னுரிமை. அதன்படி தேசியவாத காங்கிரசின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் சட்டமன்ற கட்சி தலைவராக சுனேத்ரா பவாரின் பெயர் முன்மொழியப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதன் மூலம் அஜித்பவாரின் மனைவி சுனேத்ரா பவார் துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்பது உறுதியாகி உள்ளது. அதுவும் இன்று மாலை 5 மணிக்கு அவர் பதவி ஏற்க இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுகுறித்து முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், "அஜித்பவார் குடும்பத்தை சேர்ந்தவர் துணை முதல்-மந்திரி ஆவதற்கு நாங்கள் பக்கபலமாக இருக்கிறோம். துணை முதல்-மந்திரி பதவி விவகாரத்தில் தேசியவாத காங்கிரஸ் எடுக்கும் எந்த முடிவுக்கும் நாங்கள் உடன்படுகிறோம்" என்றார்.
- அஜித் பவார் மறைவால் தேசியவாத காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் தேர்வு செய்யப்பட வேண்டிய நிலை உள்ளது.
- அவரது மனைவி சுனேத்ராவை தலைவராக மூத்த தலைவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவரான அஜித் பவார் நேற்றுமுன்தினம் நடைபெற்ற விமான விபத்தில் காலமானார். இவர் துணை முதல்வராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் துணை முதல்வர் பதவி வழங்க பாஜக தயாராக இருந்தால், தேசியவாத சட்டமன்ற கட்சித் தலைவர் யார் என்பது அந்த கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.
இந்த நிலையில் நாளை தேசியவாத காங்கிரஸ் சட்டமன்ற கட்சி நாளை கூடுகிறது. இதில் அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா தலைவராக தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார் என அக்கட்சியின் தலைவரும், மாநில அமைச்சருமான சகான் புஜ்பால் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக புஜ்பால் கூறுகையில் "தேசியவாத காங்கிரஸ் கட்சி, சுனேத்ராவை சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்தால், சனிக்கிழமை துணை- முதல்வராக பதவி ஏற்க இருந்தாலும் அதனால் எந்த பிரச்சினையும் இல்லை என முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தெரிவித்துள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் சட்டமன்ற கட்சிக் கூட்டம் நாளை நடைபெறும். சுனேத்ரா பவார் தலைவராக அறிவிக்கப்படுவார். ஏராளமான தலைவர்கள் அவர் துணை முதல்வராக வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
இவ்வாறு புஜ்பால் தெரிவித்தார்.
288 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட மகாராஷ்டிராவில் சட்டசபையில் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு தற்போது 40 உறுப்பினர்கள் உள்ளனர். அஜித் பவார் காலமானாதால் பாராமதி தொகுதி காலியானதாக அறிவிக்கப்படும்.
சுனேத்ரா பவார் மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளார். அவர் மகாராஷ்டிர சட்டமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினராக இல்லை.
- தேசியவாத கட்சியை உடைத்து சரத் பவாரின் அண்னன் மகன் அஜித் பவார் பாஜகவுடன் கைகோர்த்து துணை முதல்வர் பதவி பெற்றார்.
- குடும்பம் ஒன்றுபட்டுள்ளது என்று அஜித் பவார் இதை உறுதிப்படுத்தினார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் தேசியவாத கட்சியை உடைத்து சரத் பவாரின் அண்னன் மகன் அஜித் பவார் பாஜகவுடன் கைகோர்த்து துணை முதல்வர் பதவி பெற்றார்.
சமீபத்தில் நடந்த மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான 'மகாயுதி' கூட்டணி வெற்றி பெற்றது. மீண்டும் அஜித் பவார் துணை முதல்வர் ஆனார்.
அங்கு சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் முதல் கட்டத்தில் பாஜக மிகப் பெரிய அளவில் வெற்றியை பெற்றது. உள்ளாட்சித் தேர்தல் என்பதால், முதல் கட்டத் தேர்தலிலேயே மகாயுதியில் உள்ள பாஜக, ஷிண்டே சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகியவை தனித்தனியே போட்டியிட்டன.
2-வது கட்டமாக புனே, பிம்ப்ரி சிஞ்ச்வட் உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கு வரும் 15-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது.
இந்நிலையில் பிம்ப்ரி–சிஞ்ச்வட் மாநகராட்சி தேர்தலில் சரத்பவார் கட்சியும், எதிரணியில் உள்ள அஜித் பவார் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.
உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி அமைத்ததன் மூலம் குடும்பம் ஒன்றுபட்டுள்ளது என்று அஜித் பவார் இதை உறுதிப்படுத்தினார்.
பிம்ப்ரி-சின்ச்வாட் எப்போதும் பவார் குடும்பத்தின் கோட்டையாகக் கருதப்பட்டது. இந்நிலையில் குடும்பப் பிளவால் வாக்குகள் சிதறுவதைத் தவிர்க்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
- நாங்கள் அனைவருமே ஒரு பெண் முதல்வர் இருக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறோம்.
- இந்த விழாவின் போது, பல்வேறு துறைகளில் பணிபுரியும் பிரமுகர்கள் கௌரவிக்கப்படுகிறார்கள்.
அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், மும்பையின் வோர்லியில் உள்ள ஜம்போரி மைதானத்தில் மகாராஷ்டிர மஹோத்சவத்தை ஏற்பாடு செய்துள்ளது.
மே 1 ஆம் தேதி தொடங்கிய இந்த நிகழ்வு மே 4 வரை தொடரும். இந்த விழாவின் போது, பல்வேறு துறைகளில் பணிபுரியும் பிரமுகர்கள் கௌரவிக்கப்படுகிறார்கள்.
இந்த நிகழ்வில் இன்று அஜித் பவாரிடம் மூத்த பெண் பத்திரிகையாளர் ஒருவர், வரும் காலங்களில் மகாராஷ்டிராவின் முதலமைச்சராக ஒரு பெண் வர முடியுமா என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அஜித் பவார், "நாங்கள் அனைவருமே ஒரு பெண் முதல்வர் இருக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறோம். ஆனால் அதற்கு, தற்செயலாக ஏதாவது நடக்க வேண்டும்.
இப்போது பாருங்கள், நானும் பல வருடங்களாக முதலமைச்சராக வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன், ஆனால் விஷயங்கள் ஒருபோதும் பலனளிப்பதில்லை. அந்த நாள் எப்போதாவது வரும்" என்று பெருமூச்செறிந்தார்.
2023 ஆம் ஆண்டு சரத் பவாரின் தேசியவாத கட்சியை உடைத்த அஜித் பவார் பாஜக கூட்டணியில் இணைந்து துணை முதல்வர் ஆனார்.
ஆனால் முதல்வர் ஆக முடியாத ஆதங்கத்தை அவர் பல மேடைகளில் தொடர்ந்து வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
- பாராமதியில் கட்சியை பா.ஜனதா பலப்படுத்தி வருகிறது.
- பாராமதிக்கு நிர்மலா சீத்தாராமன் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
மும்பை :
புனே மாவட்டத்தில் உள்ள பாராமதி தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் சொந்த ஊர் ஆகும். இந்த பகுதி தேசியவாத காங்கிரசின் கோட்டையாக உள்ளது. தற்போது பாராமதி எம்.பி.யாக சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே உள்ளார்.
இந்தநிலையில் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பாராமதியில் வெற்றி பெறவேண்டும் என்ற முனைப்பில் பா.ஜனதா உள்ளது.
எனவே பாராமதியில் கட்சியை பா.ஜனதா பலப்படுத்தி வருகிறது. இதற்காக கடந்த செப்டம்பர் மாதம் பாராமதிக்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
இந்தநிலையில் நிர்மலா சீதாராமன் பாராமதியில் கவனம் செலுத்துவதைவிட்டு விட்டு, விட்டு பொருளாதாரத்தில் கவனம் செலுத்த வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் கூறியுள்ளது. இதுதொடர்பாக அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் கிளைடு கிராஸ்டோ கூறியதாவது:-
நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பாராமதி மீது அதிக கவனம் செலுத்தி வருகிறார். இதன் காரணமாக அவர் பொருளாதாரத்தை மறந்துவிட்டார். பாராமதியில் பா.ஜனதாவை வெற்றி பெற வைக்க அவர் மீண்டும் அங்கு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. பாராமதியில் சுப்ரியா சுலேயை பா.ஜனதா தோற்கடிக்கும் பொறுப்பு நிர்மலா சீதாராமனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதை செய்யும் முயற்சியில் நிர்மலா சீதாராமன் அவர் மத்திய நிதி மந்திரி என்பதை மறந்துவிட்டார். எனவே அவர் பாராமதியைவிட்டு, விட்டு பொருளாதாரத்தில் கவனம் செலத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வேட்பாளர்கள் அதிக அளவில் பணம் செலவழித்து தேர்தலில் வெற்று பெறுகின்றனர்.
- கடந்த தேர்தலில் ஒரு வேட்பாளர் 45 கோடி ரூபாய் செலவிட்டதாக மக்கள் கூறினர்.
மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலின்போது 10 கோடி முதல் 12 கோடி ரூபாய் வரை செலவு செய்ததாக அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. பேசிய வீடியோ வைரலாகி கேள்வியை எழுப்பிய நிலையில், லட்சம் என்பதை கோடி என தெரிவித்ததாக விளக்கம் அளித்துள்ளார்.
பீட் மாவட்டத்தின் மஜல்கயான் தொகுதியில் இருந்து 4 முறை எம்.எல்.ஏ.-வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பிரகாஷ் சொலாங்கே. இவர் ஒரு பொது நிகழ்ச்சியில் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில்:-
வேட்பாளர்கள் அதிக அளவில் பணம் செலவழித்து தேர்தலில் வெற்று பெறுகின்றனர். கடந்த தேர்தலில் ஒரு வேட்பாளர் 45 கோடி ரூபாய் செலவிட்டதாக மக்கள் கூறினர். மற்றொரு வேட்பாளர்கள் 35 கோடி ரூபாய் செலவழித்ததாக நான் அறிந்தேன். எனினும் என்னுடைய செலவு 10 கோடி முதல் 12 கேபாடி வரைதான்.
தேர்தலில் வெற்றிபெற பணம் இருக்க வேண்டிய அவசியமில்லை. அரசியலில் சாதாரண மக்களின் நம்பிக்கை, வளர்ச்சிப் பணிகள் மற்றும் சாதாரண மக்களுக்கு நீதி ஆகியவை முக்கியம், பணம் என்பது இரண்டாம் பட்சம்தான்.
பிரகாஷ் சொலாங்கே பேசுவதுபோல் இடம் பெற்றுள்ளது.
தேர்தல் ஆணையம் ஒரு வேட்பாளர் 40 லட்சம் ரூபாய் வரைதான் செலவழிக்க அனுமதி அளித்துள்ளது. ஆனால் இவர் 12 கோடி வரை செலவழித்ததாக சொல்கிறாரே? என கேள்வி எழுப்பப்பட்டது.
உடனே, "நான் லட்சம் என சொல்ல விரும்பினேன். ஆனால் கோடி எனச் சொல்லிவிட்டேன். கட்சி எனக்கு தேர்தல் செலவிற்காக 40 லட்சம் ரூபாய் கொடுத்தது. ஆனால் அதில் 23 லட்சம் ரூபாய் செலவழித்தேன். மீதி பணத்தை திருப்பி கட்சியிடம் வழங்கினேன்" எனத் தெரிவித்துள்ளார்.
- முன்னாள் மத்திய மந்திரி சையீத்தின் உறவினரை தாக்கியதாக புகார் எழுந்தது.
- கேரளாவின் கவரட்டியில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது
திருவனந்தபுரம்:
கேரளாவையொட்டியுள்ள லட்சத்தீவின் தேசியவாத காங்கிரஸ் தலைவராக இருப்பவர் முகமது பைசல். இவர் லட்சத்தீவு தொகுதியின் எம்.பி.யாகவும் உள்ளார். கடந்த 2009-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலின்போது நடந்த மோதலில் இவர் முன்னாள் மத்திய மந்திரி சையீத்தின் உறவினரை தாக்கியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக முகமது பைசல் மற்றும் அவரது சகோதரர்கள் உள்பட 4 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பான விசாரணை கேரளாவின் கவரட்டியில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த கோர்ட்டு, லட்சத்தீவு தொகுதியின் எம்.பி.யும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான முகமது பைசல் மற்றும் அவரது சகோதரர்கள் உள்பட 4 பேருக்கும் 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இத்தீர்ப்பை எதிர்த்து முகமது பைசல் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார்.
- காரணமே இல்லாமல் சந்தேக வளையம் என்னை சுற்றி கட்டப்பட்டுள்ளது.
- உங்கள் மனதிலும் நிறைய கேள்வி ஓடிக்கொண்டு இருக்கும்.
புனே :
தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான அஜித்பவார் பா.ஜனதாவுடன் கைகோர்க்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. அவருக்கு முதல்-மந்திரி பதவி கிடைக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் அஜித்பவார் நேற்று புனேயில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
என்னை பற்றி பல தகவல்களும், வதந்திகளும் பரவி வருகிறது. காரணமே இல்லாமல் சந்தேக வளையம் என்னை சுற்றி கட்டப்பட்டுள்ளது. ஆனால் வதந்திகளுக்கு இடம்கொடுக்காமல் நான் எனது வேலையை தொடர்ந்து வருகிறேன்.
உங்கள் மனதிலும் நிறைய கேள்வி ஓடிக்கொண்டு இருக்கும். அதிகாலையில் நடந்ததை (பட்னாவிசுடன் துணை முதல்-மந்திரி ஏற்ற சம்பவம்) மீண்டும் நான் செய்வேனா என்ற கேள்வி உங்களுக்கும் எழுந்து இருக்கும். நான் ஏற்கனவே கூறிவிட்டேன். கடைசி மூச்சு உள்ளவரை தேசியவாத காங்கிரசுக்காக தான் உழைப்பேன் என்பதை கூறிவிட்டேன். கட்சி எடுக்கும் எந்த முடிவையும் நான் ஏற்றுக்கொள்வேன். மக்கள் நலம், வளர்ச்சிக்காக உழைப்பது தான் எங்களின் நோக்கம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கிடையே தாராசிவ் மாவட்டத்தில் கிராஸ்ரோடு பகுதியில் அஜித்பவார் வருங்கால முதல்-மந்திரி என புகழ்ந்து வைக்கப்பட்ட பேனரால் பரபரப்பு ஏற்பட்டது.
- ராஜினாமா முடிவை திரும்ப பெறாவிட்டால் கட்சி அலுவலகத்தில் இருந்து செல்லமாட்டோம் என்று தொண்டர்கள் கூறினர்.
- செயல் தலைவரை நியமிக்க வேண்டும் என்று அஜித் பவார் பரிந்துரை செய்துள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக சரத் பவார் (வயது 83) இன்று திடீரென அறிவித்தார். வயது முதிர்வை காரணம் காட்டி அவர் இந்த முடிவை எடுத்ததாக கூறியிருந்தார்.
'புதிய தலைமுறையினர் கட்சியையும், கட்சி செல்ல நினைக்கும் பாதையையும் வழிநடத்த வேண்டிய நேரம் இது. தலைவர் பதவிக்கான காலியிடத்திற்கு புதிய தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்து முடிவு செய்வதற்காக கட்சி உறுப்பினர்களைக் கொண்ட குழுவை அமைக்க வேண்டும்' என சரத் பவார் கூறினார்.
அவரது முடிவு கட்சியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவரது ராஜினாமாவை பெரும்பாலான தொண்டர்கள் ஏற்க மறுத்துள்ளனர். அவரே தலைவராகத் தொடர வேண்டும் என வலியுறுத்தினர். கட்சி அலுவலகத்தில் திரண்டிருந்த ஏராளமான தொண்டர்கள் முழக்கங்கள் எழுப்பினர். ராஜினாமா முடிவை திரும்ப பெறாவிட்டால் அங்கிருந்து செல்லமாட்டோம் என்றும் பிடிவாதமாக இருந்தனர்.
இதையடுத்து சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே மற்றும் உறவினர் அஜித் பவார் ஆகியோர் சரத் பவாரை சந்தித்து ராஜினாமா முடிவை மறுபரிசீலனை செய்யும்படி கேட்டுக்கொண்டனர். அப்போது இதுபற்றி சிந்திப்பதாகவும், சில நாட்கள் அவகாசம் தேவை என்றும் சரத் பவார் கூறியிருக்கிறார்.
"நான் ஒரு முடிவை எடுத்தேன், ஆனால் உங்கள் அனைவரின் வேண்டுகோள் காரணமாக எனது முடிவை மறுபரிசீலனை செய்வேன். ஆனால் இரண்டு மூன்று நாட்கள் தேவை. தொண்டர்கள் வீட்டுக்கு போனால்தான் யோசிப்பேன். சிலர் கட்சிப் பதவிகளையும் ராஜினாமா செய்கின்றனர். அதை நிறுத்தவேண்டும்" என சரத் பவார் கூறியதை மேற்கோள் காட்சி அஜித் பவார் தெரிவித்தார்.
மேலும், சரத் பவார் தலைவராக இருக்க வேண்டும் என்றும், அவருக்கு கீழ் ஒரு செயல் தலைவரை நியமிக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்ததாகவும் அஜித் பவார் கூறினார்.
- 1999-ம் ஆண்டு சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியை உருவாக்கினார்.
- அஜித்பவாரிடம் கட்சி தலைமையை கொடுக்க மூத்த நிர்வாகிகள் பலர் தயாராக இல்லை என்றும் கூறப்படுகிறது.
1998-ம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமையை ஏற்று சோனியா காந்தி தீவிர அரசியலில் நுழைந்தார்.
அடுத்த ஆண்டில் (1999) பாராளுமன்ற தேர்தலை சந்திக்க காங்கிரஸ் தயார் ஆனது. அப்போது சோனியா காந்தியை பிரதமர் வேட்பாளராக தேர்வு செய்ய முயற்சி நடந்தது. ஆனால் சோனியா காந்தி வெளிநாட்டு பெண் என்ற சர்ச்சையை கிளப்பி, மூத்த தலைவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். சோனியாவுக்கு எதிராக தீவிர எதிர்ப்பு குரல் கொடுத்த சரத்பவார், பி.ஏ. சங்மா, தாரிக் அன்வர் ஆகியோர் காங்கிரசில் இருந்து நீக்கப்பட்டனர்.
காங்கிரசின் இந்த அதிரடியால், அதே ஆண்டு (1999) உருவானது தான் தேசியவாத காங்கிரஸ். சரத்பவார் இந்த புதிய கட்சியை உருவாக்கினார். இதில் சுவாரசியம் என்னவென்றால், அதே ஆண்டு மராட்டிய சட்டசபை தேர்தலில் சிவசேனா- பா.ஜனதாவை ஆட்சிக்கு வர விடாமல் தடுக்க காங்கிரசுடன் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி வைத்தது. காங்கிரசை சேர்ந்த விலாஸ்ராவ் தேஷ்முக் முதல்-மந்திரி ஆனார். தேசியவாத காங்கிரசை சேர்ந்த சகன் புஜ்பால் துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். சரத்பவார் மாநில அரசியலுக்கு திரும்பவில்லை. தொடர்ந்து அவர் தேசிய அரசியலில் கவனம் செலுத்தி வந்தார். பகையை மறந்து தேசிய அளவிலும் காங்கிரசுடன் கூட்டணி வைத்தார்.
இந்தநிலையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எதிர்பார்க்காத வகையில் 82 வயது சரத்பவார் நேற்று முன்தினம் அரசியல் வெடிகுண்டை தூக்கி போட்டார். தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மும்பை ஒய்.பி. சவான் அரங்கில் நடந்த விழாவில், தனது புதுப்பிக்கப்பட்ட சுயசரிதை புத்தகத்தை வெளியிட்டு, இந்த அறிவிப்பை சரத்பவார் வெளியிட்டபோது, கட்சி நிர்வாகிகள் முகம் வாடியது. முடிவை திரும்ப பெறுமாறு அவரை கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் மன்றாடி கேட்டனர்.
ஆனால், கட்சி தலைவர் பதவியில் இல்லாவிட்டாலும், நான் உங்களுடன் தொடர்ந்து இருப்பேன் என்று கூறிய சரத்பவார் அரங்கை விட்டு வெளியேறி வீடு திரும்பினார். இருப்பினும் ஒய்.பி. சவான் அரங்கில் தொண்டர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி சரத்பவார் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோஷமிட்டனர். அவர்களை சரத்பவாரின் அண்ணன் மகனும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான அஜித்பவார் சமாதானப்படுத்த முயன்றார்.
அப்போது அவர், "சரத்பவார் கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக தான் அறிவித்துள்ளார். கட்சியை அவர் தொடர்ந்து வழிநடத்துவார். காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே இருந்தபோதிலும், கட்சியை சோனியா காந்தி தானே வழிநடத்துகிறார். அதே போல கட்சி சரத்பவார் வழிகாட்டுதலின் பேரில் தான் செயல்படும். நீங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.
இருப்பினும் தொண்டர்கள் பலர் சரத்பவாரின் ராஜினாமா முடிவை ஏற்க தயாராக இல்லை. 4 முறை முதல்-மந்திரி பதவி, சுமார் 12 ஆண்டு காலம் மத்திய மந்திரி பதவி வகித்த சரத்பவார், தேசியவாத காங்கிரசை தொடங்கி 24 ஆண்டு காலம் கட்சியை திறம்பட நடத்தி வந்தவர். தொண்டர்கள் அவர் மீது வைத்துள்ள அன்பிற்கு ஒரு உதாரணமாக, சரத்பவார் தனது முடிவை திரும்ப பெற வேண்டும் என்று தொண்டர் ஒருவர் ரத்தத்தில் கடிதம் எழுதி அனுப்பி உள்ளார். இவ்வாறு தொண்டர்கள் ஆக்ரோஷமாக இருக்க, சரத்பவார் அவரது முடிவில் இருந்து மாற மாட்டார் என்று கட்சியின் நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது பற்றி அஜித்பவார் கூறுகையில், "நான் சரத்பவாரின் மனைவியிடம் பேசினேன். அப்போது சரத்பவார் அவரது முடிவை திரும்ப பெறமாட்டார் என்று அவர் கூறி விட்டார்" என்றார்.
தேசியவாத காங்கிரசில் 53 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இதில் சுமார் 40 எம்.எல்.ஏ.க்களுடன் அஜித்பவார் பா.ஜனதாவுடன் கைகோர்க்க போவதாக சமீப நாட்களில் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், சரத்பவார் பதவி விலகல் தொடர்பான தடாலடி அறிவிப்பை வெளியிட்டார்.
2019-ம் ஆண்டு பா.ஜனதா- சிவசேனா கூட்டணி முறிவை தொடர்ந்து, சிவசேனா தலைமையில் ஆட்சியமைக்க சரத்பவார் முயன்று கொண்டு இருந்தவேளையில், பா.ஜனதாவுடன் கைகோர்த்து அதிகாலையில் துணை முதல்-மந்திரி பதவி ஏற்று கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியவர் தான் இந்த அஜித்பவார். எனவே அஜித்பவார் மீண்டும் பா.ஜனதா பக்கம் சாய தயாராகி வருவதாக கூறப்படும் வேளையில் விரக்தி அடைந்து சரத்பவார் இந்த முடிவை எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.
சரத்பவாரின் இந்த திடீர் முடிவு அடுத்த ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலுக்காக தேசிய அளவில் பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முடிவிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அடுத்தடுத்து திரைமறைவு ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்கள். சரத்பவார் தனது முடிவை திரும்ப பெறாதபட்சத்தில் புதிய தலைவர் யார்? என்பது பற்றி ஆலோசிக்க தொடங்கி உள்ளனர். இதில் சிலரின் பெயர் அடிப்படுகிறது. சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே எம்.பி. முன்னணியில் உள்ளார். அஜித்பவார், கட்சியின் மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீல், முன்னாள் மத்திய மந்திரி பிரபுல் பட்டேல் ஆகியோரின் பெயரும் அடிபடுகிறது.
சுப்ரியா சுலே தான் தேசிய அரசியலுக்கு சரியான தேர்வாக இருப்பார் என்று முன்னாள் துணை முதல்-மந்திரி சகன்புஜ்பால் நேற்று தனது கருத்தை பகிரங்கப்படுத்தினார். அஜித்பவாரிடம் கட்சி தலைமையை கொடுக்க மூத்த நிர்வாகிகள் பலர் தயாராக இல்லை என்றும் கூறப்படுகிறது. அவரை மாநில அரசியலுடன் மட்டுப்படுத்தவே அவர்கள் விரும்புகிறார்கள். இதனால் சரத்பவாரின் ஒரே மகளான சுப்ரியா சுலே தேசியவாத காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக தேர்வு ஆக அதிக வாய்ப்பு இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சுப்ரியா சுலே தற்போது பாராளுமன்ற எம்.பி.யாக இருப்பது குறிப்பிடத்தக்கது. சரத்பவார் மீண்டும் ஒருமுறை தனது முடிவை தெளிவுப்படுத்தும் போது, தேசியவாத காங்கிரசில் அடுத்தகட்ட நகர்வுகள் தீவிரமடையும்.
- புதிய தலைவரை தேர்வு செய்ய கமிட்டி கூட்டம் இன்று நடக்கிறது.
- சுப்ரியா சுலே தலைவர் பதவிக்கு தேர்வு ஆக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
மும்பை :
82 வயதான தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கடந்த செவ்வாய்க்கிழமை மும்பை ஒய்.பி. சவான் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் தனது சுயசரிதை புத்தகத்தை வெளியிட்டு பேசுகையில், தான் கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக தடாலடி அறிவிப்பை வெளியிட்டார். அப்போது அங்கு கூடியிருந்த கட்சி தலைவர்கள், தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். முடிவை திரும்ப பெற வேண்டும் என்று கோஷமிட்டு வலியுறுத்தினர்.
கட்சி தொண்டர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். நேற்றும் ஒய்.பி. சவான் அரங்கு முன் திரண்டு தொண்டர்கள் போராட்டம் நடத்தினர்.
அப்போது, சரத்பவார் கட்சி தலைவர் பதவியில் தொடர்ந்து நீடிக்க வேண்டும், தேவைப்பட்டால் செயல் தலைவரை நியமிக்க வேண்டும் என்று தொண்டர்கள் வலியுறுத்தினர். அடுத்த ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற மற்றும் மராட்டிய சட்டமன்ற தேர்தல் வரையாவது சரத்பவார் கட்சியை வழிநடத்த வேண்டும் என்று மேலும் பல தொண்டர்கள் வலியுறுத்தி கோஷம் போட்டனர்.
அப்போது அங்கு வந்த சரத்பவார் தொண்டர்களை சமரசப்படுத்தும் விதமாக அவர்கள் மத்தியில் பேசியதாவது:-
உங்கள் உணர்வுகளை மதிக்கிறேன். எனது முடிவை எடுக்கும் முன் நான் உங்களின் நம்பிக்கையை பெற்று இருக்க வேண்டும். ஆனால் அப்படி செய்திருந்தால், எனது முடிவை நீங்கள் அனுமதித்து இருக்க மாட்டீர்கள் என்பது எனக்கு தெரியும்.
கட்சியின் எதிர்காலத்திற்காகவும், புதிய தலைமையை உருவாக்குவதற்காகவும் நான் ராஜினாமா முடிவை எடுத்தேன். இன்னும் ஓரிரு நாட்களில் எனது இறுதி முடிவை அறிவிப்பேன். நீங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தேசியவாத காங்கிரசுக்கு புதிய தலைவரை தேர்வு செய்ய சரத்பவாரால் நியமிக்கப்பட்ட கமிட்டி கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதில் சரத்பவார் பதவி நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படும் என கட்சியின் செய்தி தொடர்பாளர் மகேஷ் தபசே கூறினார்.
சரத்பவார் பதவி விலகல் முடிவை திரும்ப பெற சம்மதிக்காவிட்டால், புதிய தலைவர் தேர்வு பற்றி இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில், சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே எம்.பி. அந்த பதவிக்கு தேர்வு ஆக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. சரத்பவாரின் அண்ணன் மகனும், மராட்டிய சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான அஜித்பவார் மற்றும் சரத்பவாரின் குடும்பம் சாராத சிலரும் கட்சி தலைவர் போட்டியில் உள்ளனர்.






