என் மலர்
நீங்கள் தேடியது "தங்கம் கடத்தல்"
- பெண் பயணி ஒருவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரிடம் தனியாக விசாரணை நடத்தி சோதனையிட்டனர்.
- அவருடைய சூட்கேஸ் மற்றும் உள்ளாடைகளுக்குள் தங்க கட்டிகள் மறைத்து கடத்தி வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆலந்தூர்:
இலங்கையில் இருந்து சென்னைக்கு இன்று காலை பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது பெண் பயணி ஒருவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரிடம் தனியாக விசாரணை நடத்தி சோதனையிட்டனர்.
அவருடைய சூட்கேஸ் மற்றும் உள்ளாடைகளுக்குள் தங்க கட்டிகள் மறைத்து கடத்தி வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அவரிடம் இருந்த ரூ.1 கோடி 59 லட்சம் மதிப்புடைய 3.42 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர் இலங்கையை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
அவரிடம் தங்க கட்டிகளை கொடுத்தது யார்? அதனை சென்னை விமான நிலையத்தில் வாங்க வந்தவர் யார்? என்பது குறித்து அதிகாரிகள் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டு காலமாக வெளிநாடுகளுக்கு சிறப்பு மீட்பு விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தது.
- இந்த நிலையில் தொற்று பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளதால் கடந்த மார்ச் மாதம் முதல் தினசரி விமான சேவைகள் வழங்கப்பட்டு அனைத்து வெளிநாடுகளுக்கும் இயக்கப்பட்டு வருகிறது.
திருச்சி:
திருச்சி விமா ன நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், ஷார்ஜா, மஸ்கட், ஓமன், துபாய், இலங்கை, அபுதாபி, உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் தங்கத்தை கடத்தி வரும் போதும் அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது.
கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டு காலமாக வெளிநாடுகளுக்கு சிறப்பு மீட்பு விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தொற்று பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளதால் கடந்த மார்ச் மாதம் முதல் தினசரி விமான சேவைகள் வழங்கப்பட்டு அனைத்து வெளிநாடுகளுக்கும் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் திருச்சி விமான நிலையத்தில் ரூ.63.80 லட்சம் மதிப்பிலான 974 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சார்ஜாவில் இருந்து வந்த பயணி ஒருவரிடம் இருந்து ரூ.12.62 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் துபாயில் இருந்து திருச்சிக்கு வந்த விமானத்தில் பயணம் செய்த பயணி கொண்டு வந்த லேப்டாப்பில் மறைத்து வைத்திருந்த ரூ.28.11 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கமும் சிக்கியது.
இதேபோன்று 9 சிறிய கட்டிகளாக மறைத்து எடுத்து வந்த ரூ.23.07 மதிப்பிலான 449 கிராம் என மொத்தமாக 974 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- பினராயி விஜயன், அவரது மகளின் ஐ.டி.நிறுவனத்தை அரபு நாட்டிலும் விரிவுபடுத்த விரும்பினார். இதற்காக ஷார்ஜாவின் சுல்தான் கேரளா வந்த போது அவரை பினராயி விஜயன் சந்தித்தார்.
- ஸ்வப்னாவின் வாக்குமூல விபரங்கள் ஒவ்வொன்றாக வெளியாகி கேரள அரசியலில் பரபரப்பை கிளப்பி வருகிறது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் நடந்த தங்க கடத்தல் விவகாரம் குறித்து ஸ்வப்னா கோர்ட்டில் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.
கொச்சி கோர்ட்டில் அவர் அளித்த வாக்குமூலத்தில் முதல் மந்திரி பினராயி விஜயனுக்கு தொடர்பு இருப்பதாக கூறி பரபரப்பை கிளப்பினார்.
மேலும் இது தொடர்பாக திருவனந்தபுரத்தில் உள்ள அரசு வீட்டில் பினராயி விஜயனை சந்தித்ததாகவும் கூறினார்.
இதனை முதல் மந்திரி பினராயி விஜயன் மறுத்தார்.இந்த நிலையில் பினராயி விஜயன், அவரது மகளின் ஐ.டி.நிறுவனத்தை அரபு நாட்டிலும் விரிவுபடுத்த விரும்பினார். இதற்காக ஷார்ஜாவின் சுல்தான் கேரளா வந்த போது அவரை பினராயி விஜயன் சந்தித்தார்.
இத்திட்டத்திற்கு ஷார்ஜா அரசு ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் இத்திட்டம் நிறைவேறவில்லை என ஸ்வப்னா வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
ஸ்வப்னாவின் வாக்குமூல விபரங்கள் ஒவ்வொன்றாக வெளியாகி கேரள அரசியலில் பரபரப்பை கிளப்பி வருகிறது.
இதையடுத்து பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என்ற காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சியி னரின் போராட்டமும் தீவிரம் அடைந்துள்ளது.
- தங்க கடத்தல் விவகாரத்தில் கேரள முதல் மந்திரி பினராயி விஜயனுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தொடர்பு இருப்பதாக ஸ்வப்னா தெரிவித்தார்.
- ஸ்வப்னாவை தனக்கு தெரியாது என்றும், இது எதிர்கட்சிகளின் திட்டமிட்ட சதி எனவும் பினராயி விஜயன் கூறினார்.
திருவனந்தபுரம்:
கேரளாவில் நடந்த தங்க கடத்தல் விவகாரத்தில் கைதான ஸ்வப்னா தற்போது ஜாமீனில் விடுதலை ஆகியுள்ளார்.
தற்போது வெளியில் இருக்கும் ஸ்வப்னா, தங்க கடத்தல் விவகாரத்தில் கேரள முதல் மந்திரி பினராயி விஜயனுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தொடர்பு இருப்பதாக தெரிவித்தார்.
இதையடுத்து பினராயி விஜயன் பதவி விலக கோரி மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது.
இதுபற்றி பினராயி விஜயன் கூறும்போது, ஸ்வப்னாவை தனக்கு தெரியாது என்றும், இது எதிர்கட்சிகளின் திட்டமிட்ட சதி எனவும் கூறினார்.
பினராயி விஜயன் தன்னை தெரியாது என்று கூறியது பற்றி நிருபர்கள் ஸ்வப்னாவிடம் கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது:-
கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் என்னை தெரியாது என்று கூறியுள்ளார். நான் அவரை திருவனந்தபுரத்தில் உள்ள அரசு அலுவலக வீட்டில் பலமுறை சந்தித்து உள்ளேன்.
அவரை மட்டுமல்ல அவரது குடும்பத்தினரையும் சந்தித்து பேசியுள்ளேன். தேவைப்படும் போது அதனை ஆதாரத்துடன் தெரிவிப்பேன், என்றார். ஸ்வப்னாவின் இந்த பேட்டி தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.