என் மலர்
நீங்கள் தேடியது "ஜெயம் ரவி"
- இயக்குனர் சந்தோஷ் ராஜன் இயக்கத்தில் ஜீவா நடித்துள்ள படம் வரலாறு முக்கியம்.
- இந்த படத்தின் மூன்றாவது பாடல் குறித்த அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.
இயக்குனர் சந்தோஷ் ராஜன் எழுதி இயக்கி இருக்கும் படம் வரலாறு முக்கியம். இந்த படத்தில் நடிகர் ஜீவா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகை காஷ்மீரா பர்தேஷி கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் பிரக்யா நாகரா, வி.டி.வி கணேஷ், கே.எஸ்.ரவிக்குமார், மலையாள நடிகர் சித்திக், சரண்யா பொன்வண்ணன், சாரா, லொள்ளு சபா சுவாமிநாதன், மொட்ட ராஜேந்திரன், லொள்ளு சபா மனோகர், காளி ராஜ்குமார், ஆதிரை மற்றும் சில முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

வரலாறு முக்கியம்
சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்திரி தயாரித்துள்ள இப்படத்திற்கு 'ஜிமிக்கி கம்மல்' பாடல் புகழ் ஷான் ரகுமான் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இப்படத்தின் மூன்றாவது பாடலான "வேல கெடச்சிருச்சு" என்ற பாடலை நடிகர் ஜெயம் ரவி இன்று வெளியிட்டார். இந்த பாடலை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
- இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள படம் பொன்னியின் செல்வன்.
- இதைத் தொடர்ந்து இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி புதிய படத்தில் நடிக்கிறார்.
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தில், ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்ற திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர். இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு உள்ளது.

ஜெ.ஆர்.30 படக்குழு
இதைத்தொடர்ந்து, இயக்குனர் எம். ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி புதிய படத்தில் நடிக்கிறார். ஜெ.ஆர்.30 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் இணைந்துள்ளார். மேலும், இதில் நட்டி, வி.டி.வி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

ஜெ.ஆர்.30 படக்குழு
இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இந்நிலையில், ஜெயம் ரவி நடிக்கும் 30-வது படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. இதன் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. மேலும் இப்படத்தின் அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- இயக்குனர் சந்தோஷ் ராஜன் இயக்கத்தில் ஜீவா நடித்துள்ள படம் வரலாறு முக்கியம்.
- இந்த படத்தின் மூன்றாவது பாடல் குறித்த அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.
இயக்குனர் சந்தோஷ் ராஜன் எழுதி இயக்கி இருக்கும் படம் வரலாறு முக்கியம். இந்த படத்தில் நடிகர் ஜீவா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகை காஷ்மீரா பர்தேஷி கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் பிரக்யா நாகரா, வி.டி.வி கணேஷ், கே.எஸ்.ரவிக்குமார், மலையாள நடிகர் சித்திக், சரண்யா பொன்வண்ணன், சாரா, லொள்ளு சபா சுவாமிநாதன், மொட்ட ராஜேந்திரன், லொள்ளு சபா மனோகர், காளி ராஜ்குமார், ஆதிரை மற்றும் சில முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்திரி தயாரித்துள்ள இப்படத்திற்கு 'ஜிமிக்கி கம்மல்' பாடல் புகழ் ஷான் ரகுமான் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இப்படத்தின் மூன்றாவது பாடலான "வேல கெடச்சிருச்சு" என்ற பாடலை நடிகர் ஜெயம் ரவி நாளை மதியம் 12.30 மணிக்கு சமூக வலைத்தளத்தின் வாயிலாக வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
- 'பூலோகம்' திரைப்படத்திற்குப் பிறகு இயக்குனர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் திரைப்படம் 'அகிலன்'.
- 'அகிலன்' திரைப்படத்தின் டீசர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
'பூலோகம்' திரைப்படத்திற்குப் பிறகு இயக்குனர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் திரைப்படம் 'அகிலன்'. இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் மற்றும் தான்யா ரவிச்சந்திரன் இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு 'அகிலன்' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.
அதன்பின் சமீபத்தில் படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் அகிலன் படத்தின் டீசர் வெளியீட்டுத் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி அகிலன் திரைப்படத்தின் டீசர் நாளை (ஜூன் 10) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அகிலன்
இந்த படத்தில் ஜெயம் ரவி இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் ஒரு கதாபாத்திரம் கடற்படை அதிகாரி என்றும் தகவல் வெளியாகி உள்ளது. படத்தின் இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அகிலன் திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது.
Glad to share the character tease of #HarbourAgilan in #AgilanPrelude02 here#AgilanTeaser on June 10th🤞@Screensceneoffl #DirKalyan @priya_Bshankar @actortanya @SamCSmusic @vivekcinema @thinkmusicindia @shiyamjack @onlynikil pic.twitter.com/jYLgIUVq0A
— Jayam Ravi (@actor_jayamravi) June 8, 2022