search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "சென்னை மழை"

  இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு.
  • புதுச்சேரியின் காரைக்கால் பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்பு.

  தென் இந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

  இதனால், தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை இன்று பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

  13-ந் தேதி (இன்று) குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் தெற்கு கேரள கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

  இந்நிலையில், தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  அதன்படி, மயிலாடுதுறை, நாகை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, நெல்லை, குமரியில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

  இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  மேலும், புதுச்சேரியின் காரைக்கால் பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  • சென்னை மற்றும் தென்மாவட்டங்கள் கனமழையால் வெள்ளம் சூழ்ந்து கடும் பாதிப்படைந்தன.
  • மத்திய அரசு நிவாரண நிதி தர மறுப்பதாக திமுக அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தது.

  கடந்த ஆண்டு இறுதியில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் மழை வெள்ளத்தில் மூழ்கின. இதனால் மக்கள் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது.

  அதேபோல் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய தென்மாவட்டங்களில் எதிர்பாராத வகையில் மழை கொட்டித்தீர்த்தது. தாமிரபரணி ஆற்றில் இருந்து அளவுக்கு அதிகமாக தண்ணீர் திறந்து விடப்பட்டதால் ஆற்றின் கரையோர கிராமங்கள் மிகப்பெரிய அளவில் பாதித்தன.

  தூத்துக்குடி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. தண்ணீர் வடிய பல நாட்கள் ஆகின. இந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்கக்கோரி தமிழக அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தது. தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பாதிப்பு குறித்து விரிவாக கடிதம் எழுதி சுமார் 30 ஆயிரம் கோடிக்கு மேல் நிவாரணம் கேட்டிருந்தார். ஆனால் மத்திய அரசு நிவாரணம் வழங்கவில்லை.

  தற்போது மக்களவை தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது. இந்த பிரசாரத்தின்போது வெள்ள நிவாரண நிதியாக ஒரு பைசா கூட தரவில்லை என மத்திய அரசு மீது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது.

  நேற்று வேலூரில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசினார். அப்போது இது தொடர்பாக மத்திய அரசு மீது வழக்கு தொடரப்படும் எனத் தெரிவித்தார்.

  இந்த நிலையில் வெள்ள நிவாரணம் வழங்கக்கோரி மத்திய அரசு மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் ரூ.6 ஆயிரம் பணம் கேட்டு ரேசன் கடைகளில் விண்ணப்பம் செய்திருந்தனர்.
  • ரேசன் கார்டு இல்லாதவர்களும் விண்ணப்பித்தனர்.

  சென்னை:

  மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்டு விண்ணப்பித்தவர்களுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக வீடு வீடாக ஆய்வு செய்யும் பணியும் நடந்தது.

  சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் ரூ.6 ஆயிரம் பணம் கேட்டு ரேசன் கடைகளில் விண்ணப்பம் செய்திருந்தனர். ரேசன் கார்டு இல்லாதவர்களும் விண்ணப்பித்தனர். இவர்களுக்கு இன்று முதல் ரூ.6 ஆயிரம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

  • தென்சென்னை பகுதிகளில் 50 மி.மீ முதல் 70 மி.மீ மழை பதிவாகி உள்ளது.
  • கடந்த 4 வருடங்களாக ஜனவரி மாதம் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.

  சென்னை:

  வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களின் உள் பகுதிகளில் தீவிரம் அடைந்து இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

  இதன் காரணமாக தென் மாவட்டங்களின் உள் பகுதிகளில் அனேக இடங்களிலும், கடலோர மாவட்டங்களில் சில இடங்களிலும், வட மாவட்டங்களின் உள் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

  இதன் தொடர்ச்சியாக தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் மழை பெய்து வருகிறது.

  தமிழ்நாட்டில் அதிகபட்சமாக சீர்காழியில் 22 செ.மீ. மழை பெய்து உள்ளது. திருவாரூரில் 20 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. மேலும் பல மாவட்டங்களிலும் கனமழை பெய்துள்ளது.

  பலத்த மழை காரணமாக மயிலாடுதுறை, விழுப்புரம், கடலூர், திருவாரூர் ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, அரியலூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

  இதற்கிடையே வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. மேலும் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கும் இன்று 'ஆரஞ்சு அலர்ட்' விடுக்கப்பட்டு இருந்தது.

  இந்த நிலையில் சென்னையில் இன்று மிக கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மிக கனமழைக்கு வாய்ப்பு இல்லை என்றும், கனமழை மட்டுமே பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இதுகுறித்து தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியதாவது:-

  தமிழகத்தில் மழை மேகங்கள் டெல்டா பகுதியில் இருந்து மாமல்லபுரம் வரை நேற்று மையம் கொண்டிருந்தது. அந்த மழை மேகங்கள் கொஞ்சம் மேலே நோக்கி நகர்ந்து இன்று புதுச்சேரி, விழுப்புரம், மரக்காணம், மாமல்லபுரம் பகுதிகளில் மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாகவே டெல்டா மாவட்டங்களில் சில பகுதிகளில் மிக கனமழை பெய்து உள்ளது. சீர்காழி பகுதியில் 24 செ.மீ, திருவாரூரில் 21 செ.மீ. மழை பெய்துள்ளது.

  டெல்டா மாவட்டங்களில் அதிக மழை கொட்டி தீர்த்து விட்டது. தென்சென்னை பகுதிகளில் 50 மி.மீ முதல் 70 மி.மீ மழை பதிவாகி உள்ளது. இன்று காலையில் மழை மேகங்கள் தென்சென்னை பகுதிகளுக்கு வந்தது. இதனால் இன்று காலையில் தென்சென்னை பகுதிகளில் கனமழை பெய்தது.

  சென்னையில் இன்று 20 செ.மீ முதல் 25 செ.மீ. அளவுக்கு மிக கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த மழை திருவாரூர் மாவட்டத்தில் பெய்து விட்டதால் சென்னையில் கனமழை மட்டுமே பெய்யும். விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் சமாளிக்கக்கூடிய வகையில் மழை விட்டு விட்டு பெய்யும்.

  காற்றழுத்தம், புயல் உருவாகும் போது மழை எங்கெங்கு பெய்யும், எவ்வளவு பெய்யும் என்பதை கணித்து சொல்ல முடியும். ஆனால் இது போன்ற காலங்களில் பெய்யும் மழை சற்று வித்தியாசமாக இருக்கும். எனவே எவ்வளவு மழை பெய்யும் என்பதை கணிப்பது கொஞ்சம் கடினமான விஷயம் தான்.

  கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் வரலாறு காணாத வகையில் பலத்த மழை பெய்தது. அப்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஜனவரி மாதம் தமிழகத்தில் எல்லா இடங்களிலும் பரவலாக 2 செ.மீ. மழை தான் வழக்கமாக பெய்யும். சென்னையில் 2 அல்லது 3 செ.மீ. வரை மழை பெய்யும். ஆனால் தமிழகம் முழுவதும் கடந்த 2 நாட்களில் 6 செ.மீ. முதல் 8 செ.மீ. வரை மழை பதிவாகி உள்ளது.

  கடந்த 4 வருடங்களாக ஜனவரி மாதம் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. 2020-ம் ஆண்டுக்கு முன்பு வரை அப்படி கிடையாது. 3 அல்லது 4 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் ஜனவரி மாதம் மழை பெய்யும். இப்போது 4 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஜனவரி மாதம் மழை பெய்து வருகிறது. அதாவது கால நிலையில் புதிய மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது.

  வடகிழக்கு பருவமழை தாமதமாக தொடங்கி ஜனவரியில் பொங்கல் பண்டிகை வரை நீடித்து வருகிறது. ஜனவரி மாதம் அதிக அளவில் மழை பெய்வது வரலாறு காணாத விஷயம் தான். சீர்காழி, திருவாரூரில் ஜனவரி மாதம் 10 மடங்கு அதிக மழை பெய்துள்ளது.

  கீழடுக்கு சுழற்சி அரபிக்கடலை நோக்கி நகர்வதால் தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி உள்ள மாவட்டங்களில் நாளை முதல் 2 நாட்களுக்கு மழை பெய்யும். தமிழகத்தில் மழையின் தாக்கம் வருகிற 11-ந்தேதி வரை இருக்க வாய்ப்புள்ளது. வட தமிழக பகுதிகளான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் இன்று இரவு வரை மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. அதன் பிறகு மழை படிப்படியாக குறைந்து விடும். அதன் பிறகு உள் மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  இவ்வாறு அவர் கூறினார்.

  சென்னையில் நேற்று முதல் மிதமான மழையும், அவ்வப்போது கனமழையும் பெய்து வருகிறது. மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாக 18 செ.மீ. மழை பெய்துள்ளது.

  தமிழகத்தில் இன்று காலையில் 29 மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களிலும், புதுச்சேரியில் ஒரு சில இடங்களிலும் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  இந்த நிலையில் தமிழகத்தில் மேலும் 7 நாட்களுக்கு மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறி இருப்பதாவது:-

  தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென் மேற்கு அரபிக்கடலில் கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும். ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும். சென்னையில் தொடர்ந்து மிதமான மழை பெய்யும்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

  • விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரையில் புத்தகக் காட்சி நடைபெறும்.
  • புத்தகக் காட்சியில் சுமார் 1,000 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

  சென்னை:

  தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் நந்தனம் ஒய்எம்சிஏ உடற்கல்வியியல் கல்லூரியில் 47-வது புத்தகக் காட்சி கடந்த 3-ந்தேதி தொடங்கியது. புத்தகக் காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

  வருகிற 21-ந்தேதி வரை நடைபெற உள்ள புத்தகக் காட்சி வேலை நாட்களில் மதியம் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும், விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் நடைபெறும். புத்தகக் காட்சியில் சுமார் 1,000 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

  இந்நிலையில், சென்னை புத்தகக் காட்சிக்கு இன்று ஒருநாள் மட்டும் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக பொதுமக்கள் வந்து செல்வதில் ஏற்படும் சிரமங்களுக்காக இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் நாளை வழக்கம்போல் புத்தகக் காட்சி நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

  • சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் சாரல் மழையால் குளிர்ச்சியால் சூழல்.
  • கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட சென்னையில் ஏராளமான பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

  தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் தென் மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  இந்நிலையில், சென்னையில் கடந்த 4 மணி நேரத்திற்கும் மேலாக மிதமாக மழை பெய்து வருகிறது.

  குறிப்பாக, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், சூளைமேடு, தாம்பரம், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட சென்னையில் ஏராளமான பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

  ஏற்கனவே குளுமையான சூழல் உள்ள நிலையில், சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் சாரல் மழையால் மேலும் குளிர்ச்சியான நிலை ஏற்பட்டுள்ளது.

  இதைதொடர்ந்து, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று இரவு முதல் நாளை காலை 8.30 வரையில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

  • தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலம் தொடர்ந்து நீடித்து வருகிறது.
  • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்துவருகிறது.

  சென்னை:

  தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலம் தொடர்ந்து நீடித்து வருகிறது. லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் வரும் 10-ம் தேதி வரை பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

  இந்நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

  கிண்டி, குரோம்பேட்டை, பல்லாவரம், மந்தைவெளி, அடையாறு, பட்டினப்பாக்கம், மயிலாப்பூர், எம்.ஆர்.சி.நகர், சாந்தோம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

  சென்னை உள்பட 19 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
  • நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

  சென்னை:

  சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

  லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

  இதனால் இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

  நாளை தமிழகத்தில் அநேக இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் ஒரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

  7-ந்தேதி: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

  8-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

  சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.

  அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.

  இன்று கேரள கடலோரப்பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

  06.01.2024 மற்றும் 07.01.2024: தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

  • மிச்சாங் புயல் மற்றும் கனமழை காரணமாக சென்னையில் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
  • ஜனவரியில் 2 சனிக்கிழமைகள், பிப்ரவரியில் 2 சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும்.

  சென்னை:

  சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

  மிச்சாங் புயல் மற்றும் கனமழை காரணமாக சென்னையில் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. வெள்ள பாதிப்பு காரணமாக அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்ய வேலை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

  * 4 வாரங்களுக்கு சனிக்கிழமைகளில் அனைத்து பள்ளிகளுக்கும் வேலை நாள்.

  * ஜனவரியில் 2 சனிக்கிழமைகள், பிப்ரவரியில் 2 சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும்.

  * ஜன.6, 20 மற்றும் பிப்.3, 17 ஆகிய தேதிகளில் பள்ளிகள் இயங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

  • தமிழகத்தின் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.
  • இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.

  வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக டிசம்பர் 25 முதல் 30-ம் தேதி வரை தமிழகத்தின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

   


  அந்த வகையில், சென்னை, திருவள்ளூர், பெரம்பலூர், சேலம், திருச்சி, சிவகங்கை, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.