மீண்டும் மீண்டுமா... சென்னையின் பல்வேறு இடங்களில் மழை

4 நாட்களுக்கு பிறகு இன்று மழை நின்றதால் சூரிய பிரவேசம் இருந்தது சென்னை மக்கள் வெயிலை இன்று பார்த்ததால் மகிழ்ச்சி அடைந்தனர்.
மீண்டும் மீண்டுமா... சென்னையின்  பல்வேறு இடங்களில் மழை
Published on

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்தது. டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் கொட்டி தீர்த்த மழை கடந்த 30-ந்தேதி முதல் வட தமிழகத்தில் பெய்தது.

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் மட்டுமின்றி ஒருங்கிணைந்த காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் 3 நாட்கள் பலத்த மழை பெய்தது.

இந்தநிலையில் 4 நாட்களுக்கு பிறகு இன்று மழை நின்றதால் சூரிய பிரவேசம் இருந்தது. சென்னை மக்கள் வெயிலை இன்று பார்த்ததால் மகிழ்ச்சி அடைந்தனர். பயன்படுத்திய உடைகளையெல்லாம் துவைத்து வெயிலில் காய வைத்தனர்.

இதனிடையே, சென்னையில் தற்போது பல்வேறு இடங்களில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com