என் மலர்
வழிபாடு
- 21-ந்தேதி பவுர்ணமி.
- 19-ந்தேதி கானாடுகாத்தான் சிவபெருமான் திருக்கல்யாணம்.
18-ந்தேதி (செவ்வாய்)
* சர்வ ஏகாதசி.
* திருக்கோளக்குடி சிவபெருமான் கயிலாய வாகனத்தில் உலா.
* திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் சிறிய திருவடியிலும், தாயார் தோளுக்கினியானிலும் பவனி.
* திருவில்லிபுத்தூர் பெரியாழ்வார் புறப்பாடு.
* சமநோக்கு நாள்.
19-ந்தேதி (புதன்)
* கானாடுகாத்தான் சிவபெருமான் திருக்கல்யாணம்.
* சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் பூக்குழி விழா. இரவு புஷ்ப சப்பரம்.
* மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர், திருப்பரங்குன்றம் முருகன் கோவில்களில் ஊஞ்சல் சேவை.
* கீழ்நோக்கு நாள்.
20-ந்தேதி (வியாழன்)
* திருநெல்வேலி நெல்லையப்பர் கங்காளநாதர் காட்சி.
* திருக்கோளக்குடி, கண்டதேவி, கானாடு காத்தன் தலங்களில் சிவபெருமான் ரத உற்சவம்.
* சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் யானை வாகனத்தில் பவனி.
* சமநோக்கு நாள்.
21-ந்தேதி (வெள்ளி)
* பவுர்ணமி.
* காரைக்கால் அம்மை யார் மாங்கனி திருவிழா.
* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் முப்பழ உற்சவம்.
* திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கிரிவலம்.
* சமநோக்கு நாள்.
22-ந்தேதி (சனி)
* சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் ரிஷப வாகனத்தில் பவனி.
* திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் யானை வாகனத்தில் உலா.
* மதுராந்தகம் கோதண்டராம சுவாமி பவனி.
* கீழ்நோக்கு நாள்.
23-ந்தேதி (ஞாயிறு)
* திருத்தங்கல் அம்பாள் கண்ணாடி சப்பரத்தில் வீதி உலா.
* சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் முத்துப் பல்லக்கில் பவனி.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் குளக் கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்.
* திருத்தணி முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.
* கீழ்நோக்கு நாள்.
24-ந்தேதி (திங்கள்)
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
* திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் குதிரை வாகனத்தி லும். தாயார் பூப்பல்லக் கிலும் பவனி.
* மதுராந்தகம் கோதண்டராம சுவாமி திருவீதி உலா.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் மாடவீதி புறப்பாடு.
* மேல்நோக்கு நாள்.
- நிர்ஜல ஏகாதசி அன்றுதான் பீமன் விரதம் இருந்து பகவானின் அருளை பெற்றதாக கூறுவார்கள்.
- நீண்ட ஆயுளும், செல்வமும், பகவான் அருளும் கிடைக்கும்.
ஒரு சமயம் முரன் என்னும் அசுரன், பிரம்மாவை நோக்கி பல்லாயிரம் வருடம் தவம் செய்தான். அந்த தவத்தின் பயனாக பிரம்மாவிடம் இருந்து பல அரிய வரங்களைப் பெற்றான்.
எப்பொழுதுமே பணம், பதவி, அதிகாரம் ஆகியவை சேரும் இடத்தில், பிரச்சினைகளும் வந்துசேரும். பெரும் தவத்தின் பயனாக, தான் பெற்ற வரத்தை தவறாக பயன்படுத்தினான், முரன். அவன் மூன்று உலகங்களுக்கும் சென்று அங்குள்ளவர்களை துன்புறுத்தினான்.
காட்டில் உள்ள ஒரு பலம் வாய்ந்த சிங்கத்தைக் கண்டு எளிய விலங்குகள் நடுங்குவது போல், பிரம்மா கொடுத்த வரத்தின் காரணமாக, முரனைக் கண்டு தேவர்களும், முனிவர்களும் நடுங்கினர். முரனுக்கு அழிவு பெண்ணால் மட்டும் தான். மற்ற வழியில் அவனுக்கு அழிவு ஏற்படாது என்பது அவன் பெற்றிருந்த வரம்.
இந்த நிலையில் தேவர்களும், முனிவர்களும் பிரம்மலோகம் சென்றனர். பிரம்மன் வசிக்கும் அந்த உலகத்தை 'சத்திய லோகம்' என்றும் கூறுவார்கள். அங்கு பிரம்மா அமர்ந்திருந்தார்.
அவரிடம், "சுவாமி.. எங்கள் நிலையை பாருங்கள். முரனை அழிக்கும் வழி என்ன என்று கூறுங்கள்" என்றார். பிரம்மா, "அவனை படைத்தவன் நான். வரமும் நான்தான் கொடுத்தேன். அவனை அழிக்கக்கூடிய ஆற்றலைப் பற்றி நீங்கள் திருக்கயிலாயம் சென்று கேளுங்கள்" என்றார்.
தேவர்களும், முனிவர்களும் திருக்கயிலாயம் சென்றபோது, அங்கு சிவ பெருமான் யோகத்தில் இருந்தார். யோகத்தில் இருந்த சிவபெருமானை பார்த்து அவர்கள், "இறைவா.. முரன் எங்களை துன்புறுத்துகிறான். இதற்கு நீங்கள்தான் சரியான வழி காட்ட வேண்டும்" என்றனர்.
அதற்கு சிவபெரு மான், "நீங்கள் வைகுண்டம் செல்லுங்கள். உங்களுக்கு அங்கு நல்ல வழி காத்திருக்கிறது" என்றார். அதன்படி தேவர்களும், முனிவர்களும் வைகுண்டம் சென்று, "நாராயணா, மாதவா, கோவிந்தா, மதுசூதனா, எங்களுக்கு வழிகாட்டு" என்று திருமாலை வணங்கி துதித்தனர்.
அவர் தனது கதாயுதத்துடன் முரனை எதிர்த்து யுத்தம் செய்தார். முரன் ஆயிரம் ஆண்டுகள் கடும் யுத்தம் செய்தான். இனி முரன் அழியக்கூடிய நேரம் வந்துவிட்டது என்று கருதி, அங்கிருந்த ஒரு குகையில் சென்று பகவான் யோக சயனத்தில் இருந்தார்.
அந்த யோக சயனத்தின் பொழுது ஒரு பெரிய ஒளி அவர் உடலில் இருந்து தோன்றியது. அதே நேரத்தில் முரனும் அந்த குகையின் உட்புறம் வந்தான். அந்த ஒளி, ஒரு பெண்ணாக மாறி முரனை எரித்தது. இதே நேரத்தில் தேவர்களும், முனிவர்களும் குகையின் அருகே வந்து மகாவிஷ்ணுவை துதி செய்தனர். அந்த பெண்ணே 'ஏகாதசி'. அவள் தோன்றிய தினமே 'ஏகாதசி திதி' என்றும் சொல்கிறார்கள்.
சாந்தாகாரம் புஜகசயநம் பத்மநாபம் சுரேசம்
விச்வாதாரம் ககந ஸத்ருசம் மேகவர்ணம் சுபாங்கம்
லக்ஷ்மீகாந்தம் கமலநயநம் யோகிஹ்ருத்யாநகம்யம்
வந்தே விஷ்ணும் பவபயஹரம் ஸர்வலோகைக நாதம்!
தேவர்கள் மேற்கண்ட துதியை சொல்லி, திருமாலை வழிபட்டனர். அப்போது அவர், "முரன் அழிந்த இந்த ஏகாதசி அன்று, யார் என்னை வழி படுகிறார்களோ, அவர் களுக்கு சகல செல்வத்தையும் அருள்வேன்" என்றார். ஏகாதசி அன்று நாம், பகவான் நாமத்தைச் சொல்ல வேண்டும்.
ஏகாதசி அன்று விரதம் இருந்து மறுநாள் காலை துவாதசி அன்று உண்பதை 'பாரணை' என்பார்கள். அன்று உணவில் அகத்திக்கீரை, சுண்டைக்காய், நெல்லிக்காய் முதலியவற்றை சேர்த்து உண்பார்கள். துவாதசி அன்று பகலில் உறங்கக்கூடாது.
ஏகாதசி அன்று விரதம் இருக்கும் பொழுது கர்ப்பிணி பெண்கள், சர்க்கரை நோய் உள்ளவர்கள், தீராத நோய் உள்ளவர்கள், சிறு குழந்தைகள், எண்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆகியோர், தேன், வேக வைத்த கிழங்குகள், பழங்கள் போன்றவற்றை உண்ணலாம். மேலும் இவற்றை கோவிந்தன் நாமத்தை சொல்லி உண்பதால் விரத பங்கம் ஏற்படாது.
வளர்பிறை, தேய்பிறை ஏகாதசிகளை சேர்த்து, ஆண்டு ஒன்றுக்கு 24 அல்லது 25 ஏகாதசி வரும். இவற்றில் மிக விசேஷமானது வைகுண்ட ஏகாதசி ஆகும். ஆனி மாதம் வளர்பிறையில் வரக்கூடிய ஏகாதசியை 'நிர்ஜல ஏகாதசி' என்பார்கள். இந்தப் பெயர் வந்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. அதைப் பார்க்கலாம்.
ஒரு சமயம் பஞ்ச பாண்டவர்களில் ஒருவனான பீமனுக்கு, 'நாம் விரதம் எதுவும் மேற்கொள்ளாமல் இருக்கிறோமே' என்ற ஏக்கம் உண்டாயிற்று. மற்றவர்கள் ஏகாதசி விரதத்தை முறையாக கடைப்பிடிக்கும் பொழுது, தான் மட்டும் இந்த விரதத்தை கடைப்பிடிக்க முடியவில்லையே என்ற வருத்தம் அவனுக்கு ஏற்பட்டது.
வேத வியாசரிடம் சென்று "மகரிஷியே.. என் சகோதரர்களும், என் தாயாரும், என் மனைவியும் ஏகாதசி விரதத்தை நல்ல முறையில் அனுஷ்டிக்கின்றனர். அவர்கள் இருக்கும் விரதத்தை பார்க்கும் போது எனக்கு வருத்தமாக இருக்கிறது. எனக்கு எப்பொழுதும் உண்பதில் அதிக ஆர்வம் உள்ளதால், என்னால் விரதம் இருக்க முடியவில்லை. இதற்கு ஏதாவது வழி சொல்லுங்கள்" என்றான்.
அதற்கு வேதவியாசர் "பீமா.. உன் மனதில் பகவான் இருக்கிறார். உனது எண்ணம் தெரியும். பொதுவாக 24 ஏகாதசி என்று சொன்னாலும் மொத்தத்தில் 25 ஏகாதசிகள் வரும். இப்பொழுது நான் உனக்கு ஒரு விஷயத்தை சொல்கிறேன்.
ஆனி மாதம் வளர்பிறையில் வரக்கூடிய ஏகாதசி அன்று, நீ ஜலம் (நீர்) கூட அருந்தாமல் உபவாசம் இரு. அப்படி இருந்தால், உனக்கு இந்த வருடம் முழுவதும் ஏகாதசி உபவாசம் இருந்த பலன் கிடைக்கும்" என்றார். அதனால் ஆனி மாதம் வரக்கூடிய வளர்பிறை ஏகாதசியை 'நிர்ஜல ஏகாதசி' என்றும், 'பீம ஏகாதசி' என்றும் அழைப்பார்கள்.
இந்த ஏகாதசி அன்றுதான் பீமன் விரதம் இருந்து பகவானின் அருளைப் பெற்றதாக கூறுவார்கள். அதனால் ஏகாதசி விரதம் வருடம் முழுவதும் இருக்க முடியாதவர்கள், இந்த ஒரு நாள் ஏகாதசி விரதம் இருந்தால் போதும். வருடம் முழுவதும் இருந்த பலன் கிடைக்கும். நீண்ட ஆயுளும், செல்வமும், பகவான் அருளும் கிடைக்கும்.
- மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர், திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் ஊஞ்சலில் காட்சி.
- ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு ஆனி-4 (செவ்வாய்க்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: ஏகாதசி காலை 5.56 மணி வரை பிறகு துவாதசி
நட்சத்திரம்: சுவாதி பிற்பகல் 3.47 மணி வரை பிறகு விசாகம்
யோகம்: சித்த, மரணயோகம்
ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு. சோழவந்தான் ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் பாற்குடக் காட்சி. மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர், திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் ஊஞ்சலில் காட்சி. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப்பாவாடை தரிசனம். வடபழனி, திருப்போரூர், திருத்தணி, வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-நிறைவு
ரிஷபம்-பரிவு
மிதுனம்-கவனம்
கடகம்-கடமை
சிம்மம்-கண்ணியம்
கன்னி-கட்டுப்பாடு
துலாம்- தாமதம்
விருச்சிகம்-லாபம்
தனுசு- விவேகம்
மகரம்-வரவு
கும்பம்-முயற்சி
மீனம்-நன்மை
- சிவன் காட்சி அளித்ததாக வரலாறு உள்ளது.
- சதுர வடிவ ஆவுடையார் அமைப்பில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
இன்றைய வெகுவேகமான நவீன உலகில் பெரும்பாலானவர்கள் மனக்கவலை எனும் மாயவலையில் சிக்கித் தவிக்கின்றனர். அது மாயவலைதான். ஆனால் இரும்பு திரை போல கண்ணை மறைத்து மனக்கவலையை ஏற்படுத்துகிறது.
சரி இதுக்கு என்ன தீர்வு. துன்பம் நீங்கி, தூய மன ஓட்டத்தை ஏற்படுத்தி மனக்கவலைகளை தீர்த்து வைக்கும் வல்லமை கொண்டவராக கோனூர் நாடு அகத்தீஸ்வரர் விளங்குகிறார் என்பதுதான் அந்த சிறப்பு.
ஒரத்தநாடு அருகே உள்ள கோனூர்நாடு கோவில்
இந்த இடம் எங்கிருக்கு, தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ளது கோனூர் நாடு. இங்குதான் கவலைகளை தீர்க்கும் அகத்தீஸ்வர் உள்ளார். கோவிலில் இறைவன் அகத்தீஸ்வரர், சதுர வடிவ ஆவுடையார் அமைப்பில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது தனி சிறப்பு.
சித்தர்கள் வழிபட்ட கோவில்களில் தான் இத்தகைய அமைப்பில் சிவன் காட்சி அளித்ததாக வரலாறு உள்ளது. இறைவன் கிழக்கு நோக்கி வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இறைவி பெரிய நாயகி தெற்கு நோக்கியும் காட்சி அளிக்கிறார்.
இங்கு பெரியநாயகி உடனாகிய அகத்தீஸ்வரராக இறைவன் இருக்கிறார். இதன் காரணமாக பெரியநாயகி பெண்களின் மன உறுதியை மேம்பட செய்யும் தனி பண்பை தன்னகத்தை கொண்டுள்ளாள். தனது சன்னதி முன்பு மனச்சுமையோடு வந்து கண்ணீர் மல்க வேண்டும் பெண் பக்தர்களின் கவலை போக்கும் தாய் உள்ளத்தோடு பெரியநாயகி வீற்றிருந்து அருள்புரிகிறாள்.
18 கிராம மக்கள் மட்டுமே இக்கோயிலில் வழிபட்டு வந்த நிலையில் தற்போது இக்கோயிலின் பெருமை அறிந்து முக்கியமாக மனக்கவலைகள் தீர்ப்பதை உணர்ந்து வெளி ஊர்கள், வெளி மாவட்டங்களில் இருந்தும் பலர் இக்கோவிலில் வழிபட்டு வருகின்றனர்.
திருமணத் தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் 21 பிரதோஷ நாட்களில் தொடர்ச்சியாக வந்து நந்தியம்பெருமான், ஈசன், அம்பாளை வழிபாட்டால் திருமணயோகம் கிட்டும், குழந்தை செல்வம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதுமட்டுமின்றி ஈசன், அம்பாள், நந்தியம்பெருமானை ஒரே இடத்தில் நின்று வழிபடும் வகையில் சன்னதி அமைய பெற்றுள்ளது இக்கோயிலின் மேலும் ஒரு தனிசிறப்பு.
சிவபெருமானின் கண்ணீரே ருத்ராட்சத்தின் தோற்றம் என சிவபுராணம் சொல்கிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த 5 ஆயிரம் ருத்ராட்சங்களால் அகத்தீஸ்வரர் கோவிலில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பந்தலுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சிவன், பெரியநாயகி அம்பாள் சன்னதிகளில் பொருத்தப்பட்டுள்ளது.
- சிவன் கோவில்களில் காலை சிறப்பு சோம வார அபிஷேகம், அலங்காரம் வழிபாடு.
- இன்று சர்வ ஏகாதசி.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு ஆனி-3 (திங்கட்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: ஏகாதசி (முழுவதும்)
நட்சத்திரம்: சித்திரை நண்பகல் 1.48 மணி வரை பிறகு சுவாதி
யோகம்: சித்த, அமிர்தயோகம்
ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்று சர்வ ஏகாதசி. சுப முகூர்த்த தினம். திருநெல்வேலி ஸ்ரீ காந்திமதியம்பாள் ஸ்ரீ நெல்லையப்பர் வெள்ளி விருஷப சேவை. திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயணப் பெருமாள் விழா தொடக்கம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர், திருவிடைமருதூர் கோவில்களில் காலை சிறப்பு சோம வார அபிஷேகம், அலங்காரம் வழிபாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-தனம்
ரிஷபம்-வரவு
மிதுனம்-உயர்வு
கடகம்-களிப்பு
சிம்மம்-கருணை
கன்னி-மகிழ்ச்சி
துலாம்- ஆக்கம்
விருச்சிகம்-சாதனை
தனுசு- நிம்மதி
மகரம்-நற்செயல்
கும்பம்-பரிவு
மீனம்-சாந்தம்
- இந்த சம்பவத்தின் அடிப்படையிலேயே தியாகதிருநாள் கொண்டாடப்படுகின்றது.
- ஆடு, மாடுகளை பலியிட்டு பொருளாதாரத்தில் பின் தங்கிய உறவினர்கள், ஏழைகளுக்கு வீடு தேடி சென்று உதவுவார்கள்.
பக்ரீத் பண்டிகை, உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இந்த பண்டிகை ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கப்படுகின்றது. இறைவனின் தூதரான இப்றாகீம் நபிகளாரின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக கொண்டாடப்படுகிறது.
இஸ்லாமியர்களின் தூதுவராக நம்பப்படுபவர்களில் ஒருவர் இப்ராஹிம். இவர் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய ஈராக்கில் வாழ்ந்து வந்ததார். நெடுநாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்து வந்த இவருக்கு, இறுதியில் இறைவன் அருளால் இவரின் இரண்டாவது மனைவி ஃஆசரா மூலம் ஒரு ஆண் மகவு பிறந்தது. இஸ்மாயீல் என பெயரிடப்பட்ட அந்த குழந்தையின் வழி வந்தவர்களே இன்றைய அராபியர்கள்.
இப்ராஹிமின் மகன் இஸ்மாயீல் பால்ய பருவத்தை அடைந்தபொழுது, அவரை தனக்கு பலியிடுமாறு கடவுள், இப்ராஹிம் அவர்களுக்கு கனவின் மூலம் கட்டளையிட்டான். இதைப்பற்றி மகனிடம் கூறிய இப்ராஹிம், அவரின் அனுமதியோடு பலியிட துணிந்தபொழுது, சிஃப்ரயீல் என்னும் வானவரை அனுப்பி இறைவன் அதனை தடுத்து மேலும் ஒரு ஆட்டை இறக்கிவைத்த இறைவன், இஸ்மாயீலுக்கு பதில் அந்த ஆட்டை அறுத்து பலியிடுமாறு இப்ராஹிமிற்கு கட்டளையிட்டான். மேற்கூரிய இந்த சம்பவத்தின் அடிப்படையிலேயே தியாகதிருநாள் கொண்டாடப்படுகின்றது.

இப்ராஹிமின் தியாகத்தை நினைவு கூரும் வகையில், பெருநாளுக்கு முதல் நாளே உணவு பொருட்களை தயார் செய்து வைத்துக்கொள்வார்கள். மறுநாள் அதை சமைப்பது மட்டும்தான். வழக்கமான அதிகாலை தொழுகையை தொழுதுவிட்டு குளித்து புத்தாடை அணிந்து நறுமனங்களை பூசிக்கொள்ளும் முஸ்லிம்கள், மசூதியிலோ அல்லது திடலிலோ சென்று பெருநாள் சிறப்பு தொழுவது வழக்கம். அதன் பின்னர் அங்கு வரும் வறியவர்களுக்கு தர்மங்கள் செய்து நண்பர்கள், உறவினர்களை கட்டியணைத்து வாழ்த்துவார்கள்.
வீட்டில் உள்ள சிறுவர்களுக்கு பெரியவர்கள் பெருநாள் காசு என்ற பெயரில் ஒரு தொகையை அன்பளிப்பாக வழங்கி அவர்களை மகிழ செய்வார்கள். வெவ்வேறு ஊர்களில் பணி நிமித்தமாக தங்கி இருப்பவர்கள் சொந்த ஊருக்கு திரும்பி பெருநாள் அன்று ஒன்றாக சமைத்து சாப்பிடுவது வழக்கம். அதன் பின்னர் ஆடு, மாடுகளை பலியிட்டு பொருளாதாரத்தில் பின் தங்கிய உறவினர்கள், ஏழைகளுக்கு வீடு தேடி சென்று உதவுவார்கள். இப்படி ஹஜ் பெருநாள் நிறைவடையும்.
- திருவண்ணாமலையில் உலக பிரசித்திபெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது.
- லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் உலக பிரசித்திபெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு வெளிமாவட்டங்கள் , வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
இங்கு மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
இதில் கார்த்திகை தீபத் திருவிழாவின் போது மகா தீபம் ஏற்றப்படும் நாளிலும், சித்ரா பவுர்ணமியன்றும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இந்த நிலையில் ஆனி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பவுர்ணமி வருகிற 21-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 7.46 மணிக்கு தொடங்கி மறுநாள் 22-ந்தேதி (சனிக்கிழமை) காலை 7.21 மணிக்கு நிறைவடைகிறது.
பவுர்ணமியை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
- ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோவில் குளக்கரை ஸ்ரீஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.
- சூரியனார்கோவில் ஸ்ரீசூரியநாராயணருக்கு சிறப்பு திருமஞ்சன சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு, ஆனி 2 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: தசமி நாளை விடியற்காலை 4.28 மணி வரை. பிறகு ஏகாதசி.
நட்சத்திரம்: அஸ்தம் காலை 11.29 மணி வரை. பிறகு சித்திரை.
யோகம்: சித்த, அமிர்தயோகம்
ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்று சுபமுகூர்த்த தினம். சூரியனார்கோவில் ஸ்ரீசூரியநாராயணருக்கு சிறப்பு திருமஞ்சன சேவை. திருக்கோளக்குடி, கண்டதேவி தலங்களில் ஸ்ரீசிவபெருமான் திருக்கல்யாணம், சோழவந்தான் ஸ்ரீ ஜெனகைமாரியம்மன் அன்ன வாகனத்தில் பவனி. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சன்னதி எதிரில் உள்ள ஸ்ரீஅனுமாருக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோவில் குளக்கரை ஸ்ரீஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-உழைப்பு
ரிஷபம்-சுகம்
மிதுனம்-மகிழ்ச்சி
கடகம்- ஆதரவு
சிம்மம்-களிப்பு
கன்னி-தனம்
துலாம்- வரவு
விருச்சிகம்-சிரமம்
தனுசு- உழைப்பு
மகரம்-லாபம்
கும்பம்-வெற்றி
மீனம்-இன்பம்
- ஸ்ரீமுஷ்ணம் திருக்கோவிலில் இறைவனுக்குக் கோரைக் கிழங்கு சமைத்து நைவேத்தியம் செய்கிறார்கள்.
- தேங்காய்த் துருவலைத்தான் அரங்கநாதருக்கு நிவேதனமாகப் படைக்கிறார்கள்.
* திருவரங்கத்தில் தேர்த் திருவிழாவின் போது மான் தோல் பையில் நீரைச் சுமந்து அபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும். இதற்கு 'தண்ணீர் சேவை' என்று பெயர். இரவில் தீப்பந்தங்களை ஏந்தியவாறு செய்யும் சேவைக்கு 'பந்த சேவை' என்று பெயர்.
* திருவள்ளூரை அடுத்துள்ளது, சோளிங்கர் என்ற திருத்தலம். இங்கு நரசிம்மர் யோக நிலையில் காட்சி தரும் ஆலயம் மலை மேல் அமைந்துள்ளது. சப்த ரிஷிகள் அனைவரும் மோட்சம் வேண்டி, நரசிம்மரை யோக நிலையில் காண விரும்பினர். அதன்படி நரசிம்ம பெருமாள், யோக நிலையில் மலை மீது அமர்ந்து காட்சி தந்தார். அவர் காட்சி தந்தது, கடிகைப் (24 நிமிடங்கள்) பொழுது என்பதால் இவ்வூர் 'கடிகாசலம்' என்றும் வழங்கப்படுகிறது.
* கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் திருக்கோவிலில் இறைவனுக்குக் கோரைக் கிழங்கு சமைத்து நைவேத்தியம் செய்கிறார்கள்.ஸ்ரீமுஷ்ணம் திருக்கோவிலில் இறைவனுக்குக் கோரைக் கிழங்கு சமைத்து நைவேத்தியம் செய்கிறார்கள்.

* திருவரங்கத்தில் அரங்கநாதர் பள்ளிகொண்டுள்ள சன்னிதியில் தேங்காய் உடைக்கும் வழக்கம் இல்லை. தேங்காய் உடைத்தால் சத்தம் எழும். அது இறைவனின் தூக்கத்தைக் கெடுத்துவிடும் என்பதற்காக இங்கே தேங்காய் உடைக்கப்படுவதில்லை. தேங்காய்த் துருவலைத்தான் அரங்கநாதருக்கு நிவேதனமாகப் படைக்கிறார்கள்.
* திருக்கழுக்குன்றம், திருப்பைஞ்ஞீலி ஆகிய சிவ தலங்களில் வாழை மரம்தான் தல விருட்சம். அதே போல் வைணவத் திருப்பதிகளில் திருக்கரம்பனூர் மற்றும் திருவெள்ளியங்குடி ஆகிய கோவில்களிலும் வாழை மரம் தல விருட்சமாக அமையப்பெற்றுள்ளது.
* கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் தட்சிணாயன வாசல், உத்ராயன வாசல் என்று இரண்டு வாசல்கள் உள்ளன. திருவெள்ளறை தலத்தில் தட்சிணாயனம், உத்திராயனம் என்று இரண்டு படிகள் அமைந்துள்ளன.
* தஞ்சாவூர் தெற்கு வீதியில் கலியுக வரதராஜப் பெருமாள் கோவில் உள்ளது. இங்கு நவக்கிரகங்களின் சன்னிதி இடம் பெற்றுள்ளது. பெருமாள் கோவிலில் நவக்கிரகங்கள் இடம் பெறுவது மிகவும் அபூர்வம்.
- திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத் குசாம்பிகை புறப்பாடு.
- சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு வைகாசி-32 (வெள்ளிக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: அஷ்டமி நள்ளிரவு 12.46 மணி வரை பிறகு நவமி
நட்சத்திரம்: பூரம் காலை 6.23 மணி வரை பிறகு உத்திரம்
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர், திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் கோவில்களில் ஊஞ்சல் உற்சவ சேவை. சோழவந்தான் ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் காமதேனு வாகனத்தில் புறப்பாடு. திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத் குசாம்பிகை புறப்பாடு. ராமேசுவரம் மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் காலை திருமஞ்சனம், மாலை ஊஞ்சல் சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-போட்டி
ரிஷபம்-நற்செயல்
மிதுனம்-பாராட்டு
கடகம்-பெருமை
சிம்மம்-இன்பம்
கன்னி-பரிவு
துலாம்- செலவு
விருச்சிகம்-ஆக்கம்
தனுசு- ஆதரவு
மகரம்-உழைப்பு
கும்பம்-உண்மை
மீனம்-கடமை
- இன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூபம், காலை சந்தி பூஜைகள் நடைபெற்றது.
- கொடிமரத்திற்கு 16 வகை பொருட்களால் அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
நெல்லை:
தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவில் மிகவும் பழமை வாய்ந்ததாகும்.
இந்த கோவிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெறுவது தனிச்சிறப்பு. அதிலும் ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் நடைபெறும் தேரோட்ட பெருந்திருவிழாவில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்பார்கள்.
இந்த ஆண்டு 418-வது ஆனி பெருந்தோ் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது.
இதற்காக நேற்று முன்தினம் தங்க பல்லக்கில் அஸ்திர தேவா் புறப்பட்டு அங்கூர விநாயகா் கோவிலில் பிடிமண் எடுத்து வந்து கோவிலில் வைத்து அங்குரார்பணம் என்னும் முளைப்பாலிகை இடுதல் நடைபெற்றது.
நேற்று மாலையில் கொடிப்பட்டம் ரதவீதிகளில் சுற்றி வர, ஆனிப்பெருந்திருவிழாவின் பூர்வாங்க பூஜைகள் நடைபெற்று கோவில் பெரிய கொடிமரம், பஞ்ச மூர்த்திகள் உள்ளிட்ட ஆனிப்பெருந்திருவிழாவில் எழுந்தருளும் பிற மூர்த்திகள் ஆகியோருக்கு காப்புக்கட்டுதலுடன் கூடிய சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
திருவிழாவின் தொடக்கமாக இன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூபம், காலை சந்தி பூஜைகள் நடைபெற்றது.
கொடிமரம் அருகில் அஸ்திர தேவா் மற்றும் கலசங்களுக்கு மகா மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில் ஹோமங்களுடன் பூஜைகள் நடைபெற்றது. சுவாமி-அம்பாள் ஆகியோர் கோவிலின் பிரதான கொடிமரத்திற்கு அருகில் எழுந்தருள கொடிப் பட்டத்திற்கு பூஜைகள் நடைபெற்று இன்று அதிகாலை 4.30 மணிக்கு மேல் 5.30-க்குள் கொடியேற்றம் நடைபெற்றது.
தொடா்ந்து கொடிமரத்திற்கு 16 வகை பொருட்களால் அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. வேத விற்பனா்கள் நான்கு வேதம் கூற ஓதுவா மூர்த்திகள் பஞ்ச புராணம் பாட, கொடிமரத்திற்கு நட்சத்திர ஆரத்தி, கோபுர ஆரத்தி, சோடச உபசாரனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மொத்தம் 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் தினமும் சுவாமி-அம்பாள் காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சி கொடுப்பதும், ரத வீதிகளில் உலா நடைபெறுவதும் வழக்கம்.
இதனையொட்டி கோவில் கலையரங்கத்தில் தினமும் மாலை சமயச்சொற்பொழிவு, கர்நாடக இன்னிசை, ஆன்மிகக் கருத்தரங்கம், பக்தி இன்னிசை கச்சேரி, புராண நாடகம் என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
சிகர நிகழ்ச்சியான ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட பெரிய தேரான நெல்லையப்பர் தேர் உட்பட 5 தேர் ஓடும் தேரோட்டம் வருகிற 21-ந்தேதி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி தலைமையில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
- திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
- தக்கோலம் ஸ்ரீ தட்சணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு வைகாசி-31 (வியாழக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: சப்தமி இரவு 10.44 மணி வரை பிறகு அஷ்டமி
நட்சத்திரம்: பூரம் (முழுவதும்)
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம்: தெற்கு
நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். சாத்தூர் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள், ராஜபாளையம் சமீபம் பெத்தவநல்லூர் ஸ்ரீ மாயூரநாதர் கோவில்களில் விழா தொடக்கம். திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் உற்சவம் ஆரம்பம். மதுரை ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் ஊஞ்சல் உற்சவ விழா தொடக்கம். ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக் கடலை சாற்று வைபவம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. தக்கோலம் ஸ்ரீ தட்சணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு
இன்றைய ராசிபலன்
மேஷம்-பாராட்டு
ரிஷபம்-போட்டி
மிதுனம்-நற்செயல்
கடகம்-ஆசை
சிம்மம்-நற்சொல்
கன்னி-பொறுப்பு
துலாம்- இன்பம்
விருச்சிகம்-ஆக்கம்
தனுசு- பெருமை
மகரம்-ஆதரவு
கும்பம்-பரிசு
மீனம்-பணிவு






