என் மலர்tooltip icon

    வழிபாடு

    • விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
    • தேர் மீண்டும் வடக்கு வீதி, கீழ வீதி வழியாக நிலையை வந்தடைந்தது.

    உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் பஞ்ச பூத தலங்களில் ஆகாய தலமாக விளங்கி வருகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் 6 மகா அபிஷேகங்கள் நடைபெறுவது வழக்கம்.

    இதில் ஆனி மாதம் நடக்கும் ஆனி திருமஞ்சன விழாவும், மார்கழி மாதம் நடக்கும் ஆருத்ரா தரிசன விழாவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    ஏனெனில், இந்த 2 உற்சவத்தின் போதும் மூலவராகிய ஆனந்த நடராஜமூர்த்தி, சிவகாமசுந்தரி அம்பாளுடன் உற்சவராக தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். அதன்படி இந்த ஆண்டுக்கான ஆருத்ரா தரிசன விழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரி பஞ்சமூர்த்திகள் வீதிஉலாவரும் நிகழ்ச்சி நடைபெற்று, 8-ந்தேதி தெருவடைச்சான் உற்சவம் நடந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. தேர் மீண்டும் வடக்கு வீதி, கீழ வீதி வழியாக நிலையை வந்தடைந்தது.

    பின்னர் தேரில் இருந்து சுவாமிகள் இறக்கப்பட்டு, கோவிலில் உள்ள ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் வைக்கப்பட்டது. அங்கு நடராஜருக்கு ஏக கால லட்சார்ச்சனை நடந்தது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவையொட்டி இன்று (திங்கட்கிழமை) ஆருத்ரா தரிசனம் நடந்தது. இதையொட்டி அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், பஞ்ச மூர்த்திகள் வீதிஉலா வந்ததும் பிற்பகல் 3 மணிக்கு மேல் 3.30 மணிக்குள் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளியுள்ள நடராஜர்-சிவகாம சுந்தரி அம்மன் புறப்பட்டு நடன பந்தலில் நடனமாடி ஆருத்ரா தரிசன காட்சி அளித்து சித்சபை பிரவசேம் செய்கின்றனர். இந்த தரிசனத்தை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிவபக்தர்கள் திரண்டு தரிசனம் செய்தனர். இதனால் சிதம்பரம் நகர் முழுவதும் விழாக்கோலம் பூண்டு இருந்தது.

    நாளை முத்துப்பல்லக்கு வீதிஉலாவும், நாளை மறுநாள் (புதன்கிழமை) புதுப்பிக்கப்பட்ட ஞானபிரகாசர் தெப்பக்குளத்தில் 22 ஆண்டுகளுக்கு பிறகு தெப்ப உற்சவமும் நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.

    விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. திஷாமித்தல், கடலூர் மாவட்டபோலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ஆகியோர் மேற்பார்வையில் சிதம்பரம் துணைபோலீஸ் சூப்பிரண்டு அகஸ்டின் ஜோஸ்வா லாமேக் தலைமையில் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

    • விரதத்தை கடைப்பிடிக்க வேண்டிய முறை பல இருக்கின்றன.
    • இருபத்திநான்கு மணி நேரமும் இறைச் சிந்தனையோடு இருக்க வேண்டும்.

    நம் எண்ணங்கள் நிறைவேற, இறைவனை நினைத்து விரதம் இருக்கிறோம். விரதத்தை கடைப்பிடிக்க வேண்டிய முறை பல இருக்கின்றன. அவற்றில் முக்கியமான சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

    * கோபப்படுதல் கூடாது.

    * விரதத்திற்கு முதல்நாளே வீட்டை மெழுகிக் கோலம் போட வேண்டும்.

    * பூஜை அறையைப் புனித அறையாக மாற்ற வேண்டும்.



    * தெய்வப் படங்களை ஆனைமுகப் பெருமான் படத்திற்கு பக்கத்தில் வைத்து பூச்சூட வேண்டும்.

    * ஐந்து முக விளக்கேற்றி வைத்து அந்த தெய்வத்திற்குரிய பாராயணங்களைப் படிக்க வேண்டும்.

    * பெண்கள் வீட்டிற்கு விலக்கானால் எட்டுநாட்களுக்குப் பிறகே விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.

    * இருபத்திநான்கு மணி நேரமும் இறைச் சிந்தனையோடு இருக்க வேண்டும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பொங்கல் பண்டிகையையொட்டி வீடுகள் தோறும் பொங்கல் வைத்து கொண்டாடுவார்கள்.
    • மகர ராசியில் சூரிய பகவான் பகல் 11.58 மணிக்குத்தான் பிரவேசிக்கிறார்.

    தமிழர் திருநாளான தை பொங்கல் பண்டிகை நாளை (செவ்வாய்கிழமை) கொண்டாடப்படுகிறது.

    பொங்கல் பண்டிகையையொட்டி வீடுகள் தோறும் பொங்கல் வைத்து கொண்டாடுவார்கள். பொங்கல் வைக்க நல்ல நேரம் எப்போது என்பதை பார்ப்போம்...

    அன்று சூரிய உதயம் காலை 6.42 மணிக்கு நடைபெறுகிறது. நல்லநேரம் காலை 7.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் இருந்தாலும், மகர ராசியில் சூரிய பகவான் பகல் 11.58 மணிக்குத்தான் பிரவேசிக்கிறார்.



    எனவே மகர சங்கராந்திப் பொங்கல் என்ற அடிப்படையில், பொங்கல் வைக்க பகல் 12 மணிக்கு மேல் 1 மணிக்குள் நல்ல நேரம் உள்ளது. அந்த நேரத்தில் குரு ஓரையும் வருவதால் பொங்கல் வைக்க உகந்த நேரமாகும்.

    மாட்டுப் பொங்கல் வைக்க உகந்த நேரம்

    வீட்டுப் பொங்கலுக்கு மறுநாள், மாட்டுப்பொங்கல் வைத்துக் கொண்டாட வேண்டும். அந்த திருநாள் வருகிற 15.1.2025 (புதன்கிழமை) வருகிறது. அன்றைய தினம் காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் மாட்டுப்பொங்கல் வைக்க உகந்த நேரமாகும்.

    முதலில் மாடுகளை குளிப்பாட்டி அலங்கரித்து மாடுகளின் கழுத்தில் பூமாலையும், கரும்பு மாலையும் கட்டி அலங்கரித்து, பின் பொங்கல் வைத்து வழிபடுங்கள். மாடுகளுக்கு கண்டிப்பாக பொங்கல் நைவேத்தியம் வழங்க வேண்டும். அதில் கொஞ்சத்தை குடும்ப உறுப்பினர்களும் சாப்பிட வேண்டும். அதன் மூலம் லட்சுமி கடாட்சம் பெருகும்.

    • இன்று பவுர்ணமி. போகிப் பண்டிகை. ஆருத்ரா தரிசனம்.
    • உத்திரகோசமங்கை மரகத நடராஜருக்கு 32 வகையான அபிஷேக காட்சி.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு மார்கழி-29 (திங்கட்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: பவுர்ணமி மறுநாள் விடியற்காலை 4.40 மணி வரை பிறகு பிரதமை

    நட்சத்திரம்: திருவாதிரை காலை 11.23 மணி வரை பிறகு புனர்பூசம்

    யோகம்: சித்த, அமிர்தயோகம்

    ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    இன்று பவுர்ணமி. போகிப் பண்டிகை. ஆருத்ரா தரிசனம். உத்திரகோசமங்கை மரகத நடராஜருக்கு 32 வகையான அபிஷேக காட்சி. சிதம்பரம் கனகசபை, மதுரை வெள்ளிசபை, திருவாலங்காடு, ரத்தினசபை, திருநெல்வேலி தாமிரசபை, திருக்குற்றாலம் சித்திரசபை ஆகிய ஐந்து சபைகளிலும் ஸ்ரீ நடராஜப் பெருமான் திருநடனக்காட்சி. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்த ராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சனம். திருவிடைமருதூர் ஸ்ரீ மகாலிங்க சுவாமி, திருமயிலை ஸ்ரீ கபாலீஸ்வரர், திருவான்மியூர் ஸ்ரீ மருந்தீஸ்வரர், பெசன்ட்நகர் ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் கோவில்களில் சோமவார அபிஷேகம். ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம். திருச்சேறை ஸ்ரீ சாரநாதருக்கு திருமஞ்சனம். கோவில்பட்டி ஸ்ரீ பூவண்ணநாதர் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நன்மை

    ரிஷபம்-நலம்

    மிதுனம்-சிந்தனை

    கடகம்-உழைப்பு

    சிம்மம்-கவனம்

    கன்னி-சாந்தம்

    துலாம்- சுகம்

    விருச்சிகம்-உறுதி

    தனுசு- புகழ்

    மகரம்-பணிவு

    கும்பம்-பக்தி

    மீனம்-பொறுமை

    • நாளை மறுநாள் (14-ந்தேதி) மகரவிளக்கு பூஜை நடைபெறுகிறது.
    • திருவாபரணத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர்.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜை கடந்த மாதம் 31-ந்தேதி தொடங்கியது. அதிலி ருந்து தினமும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு வந்தனர்.

    மகரவிளக்கு பூஜை தொடங்கியதில் இருந்தே பக்தர்களின் வருகை அதிக மாக காணப்பட்டது. இந்த நிலையில் நாளை மறுநாள் (14-ந்தேதி) மகரவிளக்கு பூஜை நடைபெறுகிறது. அதற்கான அனைத்து முன்னேற்பாடு நடவடிக்கைகளையும் தேவசம்போர்டு செய்து வருகிறது.

    மகரவிளக்கு பூஜையன்று பக்தர்களின் வருகையை கட்டுப்படுத்தும் வகையில் பம்பை, சபரிமலையில் கூடுதல் போலீசார் பணி யமர்த்தப்பட்டு உள்ளனர். அவர்கள் இன்று முதல் சபரிமலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

    மகரவிளக்கு பூஜை தினத்தில் மாலையில் ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. அதற்கு முன்னதாக ஐயப்பனுக்கு திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும். ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் ஊர்வலம் பந்தளம் அரண்மனையில் இருந்து இன்று மதியம் புறப்படுகிறது.

    வரும் இடங்களில் எல்லாம் திருவாபரணத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்வார்கள். திருவாபரண ஊர்வலம் நாளை மறுநாள் (14-ந்தேதி) பம்பைக்கு வந்து சேரும். அன்று மாலையில் பம்பையில் இருந்து சன்னி தானத்துக்கு கொண்டு வரப்படுகிறது.

    அதன்பிறகு திருவாபரணங்கள் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும். அதன் தொடர்ச்சியாக மகரஜோதி தரிசனம் நடைபெறுகிறது. மகரவிளக்கு பூஜை முடிந்து பந்தள அரண்மனை பிரதிநிதி தரிசனம் செய்ததும் வருகிற 20-ந்தேதி காலை ஐயப்பன் கோவில் நடை சாத்தப்படுகிறது.

    • சித்சபையில் விஷேக ரகசிய பூஜை.
    • 14-ந் தேதி இரவு முத்துப்பல்லக்கு காட்சி நடைபெறுகிறது.

    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இக் கோவிலில் ஒவ்வொரு வருடமும் மார்கழி ஆருத்ரா தரிசன விழா நடைபெறுவது வழக்கம்

    இந்த ஆண்டுக்கான மார்கழி ஆருத்ரா தரிசன விழா கடந்த 4-ந் தேதி (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி யது. 5-ந் தேதி வெள்ளி சந்திர பிரபைவாகன காட்சி,6-ந் தேதி தங்க ஸர்யபிரபை வாகன காட்சி, 7-ந் தேதி வெள்ளி பூத வாகனகாட்சி, 8-ந் தேதி வெள்ளி ரிஷப வாகன காட்சி (தெருவடைச்சான்) ஆகியவை நடந்தது.

    9-ந் தேதி வெள்ளி யானை வாகன காட்சி, 10-ந் தேதி தங்க கைலாஸ வாகன காட்சி,11-ந் தேதி தங்க ரதத்தில் பிஷாடன மூர்த்தி காட்சி, பின்னர் சோமாஸ் கந்தர் வெட்டுங்கு திரையில் வீதியுலா நடக்கிறது.

    இன்று (ஞாயிற்றுக் கிழமை) காலை 5 மணி முதல் 5.30 மணிக்குள் ரதயாத்ராதானம் நடை பெற்றது. இதனை தொடர்ந்து நடராஜர், அம்பாள், விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் தேரோட்டம் நடைபெற்றது. தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

    தேர் கீழ ரத வீதியில் இருந்து தொடங்கி தெற்கு ரத வீதி, மேல வீதி, வடக்கு ரத வீதி வழியாக மாலை 4 மணியளவில் நிலையை வந்தடைகிறது.

    நாளை ( 13-ந் தேதி)அதிகாலை 2 மணி முதல் 6 மணிவரை ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாம சுந்தரி சமேத நடராஜர் மகாபிஷேகம் நடைபெறும். 6 மணி முதல் 10 மணி வரை திருவாபரண அலங்காரம், பஞ்ச மூர்த்தி வீதி உலா காட்சி, சித்சபையில் விஷேக ரகசிய பூஜை, 2 மணிக்கு மேல் மார்கழி ஆருத்ரா தரிசன மகோற்சவ ஞானாகாச சித்சபா பிரவேசம் நடைபெறும்.

    14-ந் தேதி இரவு முத்துப்பல்லக்கு காட்சி நடைபெறுகிறது. உற்ச வத்தில் 9 நாட்களும் மாலை சாயரட்சை காலத்தில் மாணிக்க வாசகர், நடராஜர் சன்னதிக்கு வந்தவுடன் திருவெம்பாவை பாடி விஷேச 21 தீபாராதனை நடைபெறும்.

    • குறைகள் இல்லாத கோவிந்தனே!
    • கிடைத்தற்கரிய முதலும், நடுவும், முடிவும் ஆனவனே!

    திருப்பாவை

    பாடல் :

    கறவைகள் பின்சென்று கானம்சேர்ந் துண்போம்!

    அறிவொன்றும் இல்லாத ஆயக்குலத்து

    உன் தன்னைப்

    பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம்உடையோம்;

    குறைவொன்றும் இல்லாத கோவிந்தா!

    உன்தன்னோடு

    உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது!

    அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச்

    சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே,

    இறைவா! நீதாராய் பறையலோ ரெம்பாவாய்.

    விளக்கம்:

    குறைகள் இல்லாத கோவிந்தனே! எந்தவித ஞானமும் இல்லாத ஆயர்குலத்தில் நீ வந்து பிறக்க, நாங்கள் புண்ணியம் செய்துள்ளோம். பசுக்களின் பின்னே சென்று காட்டிற்குப் போய் கூடி உண்ணும் நாங்கள், உன்னோடு கொண்ட உறவினை ஒரு போதும் அறுக்க இயலாது. அன்பின் காரணமாக உன்னைச் சிறு பெயர்களால் (ஒருமையில்) அழைத்ததற்காக கோபம் கொள்ளாமல், இறைவனாகிய நீ எங்களுக்கு அருளோசையை தந்தருள்வாய்.

    திருப்பள்ளியெழுச்சி

    பாடல்:

    முந்திய முதல்நடு இறுதியும் ஆனாய்

    மூவரும் அறிகிலர், யாவர்மற்று அறிவார்?

    பந்தணை விரலியும்,நீயும்நின் அடியார்

    பழங்குடில் தொறும்எழுந் தருளிய பரனே!

    செந்தழல் புரைதிரு மேனியும் காட்டித்

    திருப்பெருந் துறையுறை கோயிலும் காட்டி

    அந்தணன் ஆவதும் காட்டிவந்து ஆண்டாய்

    ஆரமுதே! பள்ளி எழுந்தருளாயே!

    விளக்கம்:

    கிடைத்தற்கரிய முதலும், நடுவும், முடிவும் ஆனவனே! காத்தல், படைத்தல், அழித்தல் ஆகிய தொழில்களைச் செய்யும் பிரம்மா, திருமால், ருத்திரன் ஆகிய மூவரும் உன்னை அறிய மாட்டார்கள்; எனில் பின் வேறு யார் தான் அறிந்திடுவார்? வேதங்களாகிய பந்தினை தன் கைவிரல்களால் பிடித்து விளையாடும் உமையவளோடு, உனது அடியவர்களின் இல்லம் தோறும் எழுந்தருள்பவனே! எனக்கு நெருப்பைப் போன்ற உன் சிவந்த திருமேனியைக் காட்டி, திருப்பெருந்துறை கோவிலையும் காட்டி, பின் குருவாகவும் காட்சி தந்து, என்னை ஆட்கொண்டு அருளினாய். நீ உனது துயில் நீங்கி எழுந்தருள்வாயாக!

    • இன்று ஆருத்ரா அபிஷேகம்.
    • சிதம்பரம் ஸ்ரீநடராஜ மூர்த்தி அம்பாள் சிவகாம சுந்தரியம்மன் ரதோற்சவம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு மார்கழி-28 (ஞாயிற்றுக்கிழமை)

    பிறை: வளர்பிறை.

    திதி: சதுர்த்தசி மறுநாள் விடியற்காலை 5.20 மணி வரை. பிறகு பவுர்ணமி.

    நட்சத்திரம்: மிருகசீரிஷம் காலை 11.46 மணி வரை. பிறகு திருவாதிரை.

    யோகம்: சித்தயோகம்.

    ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    இன்று ஆருத்ரா அபிஷேகம். சிதம்பரம் ஸ்ரீநடராஜ மூர்த்தி அம்பாள் சிவகாம சுந்தரியம்மன் ரதோற்சவம். நெல்லையப்பர் திருவீதியுலா. சடைய நாயனார் குருபூஜை. சூரியனார்கோவில் ஸ்ரீசூரியநாராயணருக்கு சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீஅனுமனுக்கு திருமஞ்சன சேவை. திருப்போரூர் ஸ்ரீமுருகப்பெருமானுக்கு கிளி வாகன சேவை. சாத்தூர் ஸ்ரீவேங்கடேசப் பெருமாள் புறப்பாடு. ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீஅங்காரகருக்கும், ஸ்ரீசெல்வமுத்துக்குமார சுவாமிக்கும் அபிஷேகம், அலங்காரம். ஸ்ரீவாஞ்சியம் ஸ்ரீவாஞ்சிநாத சுவாமி, பழனி ஸ்ரீபாலதண்டாயுதபாணி தலங்களில் பவனி.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-சிந்தனை

    ரிஷபம்-போட்டி

    மிதுனம்-விவேகம்

    கடகம்-உயர்வு

    சிம்மம்-திடம்

    கன்னி-தனம்

    துலாம்- மாற்றம்

    விருச்சிகம்-பொறுமை

    தனுசு- அன்பு

    மகரம்-நலம்

    கும்பம்-இன்பம்

    மீனம்- நன்மை

    • நவக்கிரக பாதிப்பிற்கு நம்முடைய கர்மவினைகள் தான் காரணமாக அமைகிறது.
    • 18 வாரங்கள் காளியம்மனுக்கு தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

    ஒவ்வொருவருடைய ஜாதகத்திலும் நவக்கிரகங்களின் அமைப்பு ஒவ்வொரு மாதிரி இருக்கும். அந்த நவக்கிரகங்களின் அமைப்பிற்கு ஏற்றார் போல் தான், நம்முடைய வாழ்க்கையும் அமையும்.

    இந்த நவக்கிரகங்களின் அமைப்பு ஏற்படுவதற்கு நம்முடைய கர்மவினைகள் தான் காரணமாக திகழ்கிறது. நம்முடைய கர்ம வினைகளை நீக்குவதற்கும், அதே சமயம் நவகிரகங்களால் ஏற்பட்ட பாதிப்புகள் குறைவதற்கும் செய்யக்கூடிய காளியம்மன் வழிபாடு குறித்து பார்க்கலாம்.

    ஒவ்வொரு கிரகமும் எந்தெந்த இடத்தில் அமைந்தால் நற்பலன்கள் கிடைக்கும், நன்மை தடைபடும். தோஷம் உண்டாகும். துன்பங்கள் அதிகரிக்கும். என்று பல விதிமுறைகள் ஜோதிடத்தில் இருக்கிறது.


    எப்பேர்ப்பட்ட கிரகமாக இருந்தாலும் அது எந்த கிரகத்தைப் பார்த்தாலும் அந்த கிரகத்திற்குரிய பாதிப்பை கண்டிப்பான முறையில் நாம் அனுபவித்து தான் தீர வேண்டும். இந்த நவக்கிர கங்களின் பாதிப்பால் நமக்கு ஏற்படக்கூடிய கஷ்டங்களில் இருந்து வெளியே வருவதற்கு காளியம்மனை எப்படி வழிபாடு செய்வது என்று பார்ப்போம்.

    செவ்வாய்க்கிழமை அன்று அருகில் இருக்கக்கூடிய காளியம்மன் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அங்கு செல்வதற்கு முன்பாக அங்கு தீபம் ஏற்றுவதற்கு தேவையான பொருட்களை தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    தீபம் ஏற்றுவதற்கு வேப்ப எண்ணெய் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அதேபோல் மஞ்சள் நிற காட்டன் துணியை வாங்கி வந்து, அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.


    தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் அந்த பாத்திரத்தை இறக்கி வைத்து நாம் வாங்கிவைத்திருக்கும் மஞ்சள் துணியை அதில் மூழ்கும்படி வைத்து விட வேண்டும். சிறிது நேரம் கழித்து அதை எடுத்து நன்றாக தண்ணீரை பிழிந்து காய வைத்து எடுக்க வேண்டும். பிறகு சுத்தமான பன்னீரில் நனைத்து காயவைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

    இந்த துணியில் தான் நாம் திரியை தயார் செய்து தீபம் ஏற்ற வேண்டும். எவ்வளவு பெரிய திரி வேண்டுமோ அவ்வளவு பெரியதாக அதை வெட்டி திரியாக தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

    இதேபோல் காளியம்மனுக்கு தங்க அரளிப் பூவை பறித்து மாலையாக தொடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அருகில் இருக்கக்கூடிய காளியம்மன் ஆலயத்திற்கு தொடுத்து வைத்திருந்த தங்க அரளிப்பூ, வேப்ப எண்ணெய், மஞ்சள் திரி, மூன்று அகல் விளக்குகளையும் வாங்கிக்கொண்டு செல்லவேண்டும்.

    மலரை அம்மனுக்கு சாற்றச் சொல்லி கொடுத்து விட வேண்டும். அம்மனுக்கு முன்பாக மூன்றாக விளக்குகளை வைத்து அதில் வேப்ப எண்ணெய்யை ஊற்றி நாம் தயார் செய்துவைத்திருக்கும் திரியை போட்டு மூன்று திரிகளும் ஒன்றாக இருப்பது போல் வைத்து தீபம் ஏற்ற வேண்டும்.

    இப்படி தொடர்ந்து 18 வாரங்கள் நாம் காளியம்மனுக்கு தீபம் ஏற்றி வழிபட நம்முடைய ஜாதகத்தில் இருக்கக்கூடிய நவகிரகங்களால் ஏற்பட்ட பாதிப்புகள் குறைய ஆரம்பிக்கும்.

    மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமான காளியம்மனை முழு மனதுடன் நம்பி இந்த வழிபாட்டை மேற்கொண்டால் நவக்கிரக பாதிப்பில் இருந்து விடுபடலாம்.

    • சிலை உச்சி முதல் பாதம் வரை எந்தவித பிடிமானமும் இல்லாமல் நிற்கிறது.
    • தற்போது 18 அடி உயர சிலையை மட்டுமே வெளியே தெரியும். மீதியுள்ள 4 அடி பூமிக்குள் இருக்கிறது.

    சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சிலர் கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் பகுதிக்கு படையெடுத்து வந்தனர். அப்போது சுசீந்திரம் தாணுமாலயன் கோவிலின் மூலஸ்தானத்தை சுவர் கட்டியும், நகை-உடைமைகளை வேறு இடத்திற்கு மாற்றியும் அப்பகுதியினர் பாதுகாத்தனர். இதனால் கோவில் சொத்துக்கள் பறிபோகாமல் காப்பாற்றப்பட்டது.

    அப்படி பாதுகாக்கப்பட்டவற்றில் ஒன்று, இன்றும் இவ்வாலயத்தில் கம்பீரமாக நிற்கும் 22 அடி உயர அஞ்சலி ஹஸ்த அனுமனின் சிலை.

    ஒரே கல்லில் செதுக்கப்பட்ட இந்த அனுமன் சிலையை, படையெடுப்பாளர்களிடம் இருந்து காப்பதற்காக, கோவில் கிணற்றின் அருகில் 23 அடி நீளத்தில் பூமியைத் தோண்டி, சிலை மண்ணுக்குள் இருக்கும் விதமாக குப்புற படுக்க வைத்தனர். மேலோட்டமாக பார்ப்பதற்கு சாதாரண கற்தூணின் மேல் பாகம் போல்தான் அது தெரியும்.


    பல காலம் நடந்த படையெடுப்பால் அந்த சிலையை யாரும் மண்ணில் இருந்து வெளியே எடுக்கவில்லை. காலப்போக்கில் அந்த அனுமன் சிலை மண்ணிலேயே புதைந்து கிடந்தது.

    கோவிலுக்கு வரும் பக்தர்கள் அதன்மேல் அமர்ந்து இளைப்பாறுவதும், சிறுவர்கள் அதன் மீது ஏறி விளையாடுவதுமாக காலம் கடந்தது.

    85 ஆண்டுகள் மண்ணில் புதையுண்டிருந்த நிலையில், ஒரு தெய்வீக சக்தி இருப்பதை உணர்ந்த கோவில் நிர்வாகிகள், அதுதொடர்பாக பிரசன்னம் பார்த்த போது, அந்த இடத்தில் ஆஞ்சநேயர் சிலை இருப்பது தெரியவந்தது.

    உடனடியாக அந்த இடம் தோண்டப்பட்டு, விஸ்வரூப அனுமன் சிலை வெளியே எடுக்கப்பட்டது.


    பின்னர் அந்த சிலையை நிறுவ இடம் தேர்வு நடந்தது. அதன்படி 1930-ம் ஆண்டு சித்திரை 19-ந் தேதி, கோவிலில் உள்ள ஸ்ரீராமர்- சீதாதேவி சன்னிதிக்கு எதிரில் இந்த ஆஞ்சநேயர் சிலை நிறுவப்பட்டது.

    ஆகம விதிகளின்படி அஷ்டபந்தனம் செய்து பிரதிஷ்டை செய்யாததால், யார் வேண்டுமானாலும் இந்த அனுமனை தொட்டு வணங்கலாம்.

    22 அடி நீளம் கொண்ட ஆஞ்சநேயர் சிலையில், தற்போது நாம் காண்பது 18 அடி உயர சிலையை மட்டுமே. மீதியுள்ள 4 அடி பூமிக்குள் பதிந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை உச்சி முதல் பாதம் வரை எந்தவித பிடிமானமும் இல்லாமல் நிற்கிறது.

    • ஜனவரி 19-ந் தேதி வரை பக்தர்கள் அரச கோல ஐயப்பனை தரிசிக்க அனுமதி.
    • ஜனவரி 20-ந் தேதி கோவில் நடை அடைக்கப்படும்.

    சபரிமலையில் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காலம் கடந்த 2024-ம் ஆண்டு நவம்பர் 16-ந்தேதி தொடங்கியது. இதனையடுத்து, மண்டல பூஜை காலத்தின் முக்கிய நிகழ்வாக, ஐயப்பனுக்கு கடந்த டிசம்பர் 25-ந் தேதி மகா தீபாராதனை நடைபெற்றது.

    டிசம்பர் 26-ந் தேதி மண்டல பூஜை நடந்தது. இரவு 11 மணிக்கு ஹரிவராசனம் பாடல் பாடி நடை அடைக்கப்பட்டது.

    அதன்பிறகு மூன்று நாள் இடைவெளிக்குப் பின் டிசம்பர் 30-ந் தேதி மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மகரஜோதி தரிசனத்திற்காக சபரிமலைக்கு வந்தவண்ணம் உள்ளனர்.

    2025-ம் ஆண்டு ஜனவரி 14-ந் தேதி மாலை, ஐயப்பனுக்கு மகரவிளக்கு பூஜை நடக்கிறது. மகரஜோதி தரிசனத்திற்குப்பின், ஜனவரி 19-ந் தேதி வரை பக்தர்கள் அரச கோல ஐயப்பனை தரிசிக்க அனுமதிக்கப்படுவர்.

    ஜனவரி 20-ந் தேதி பந்தள மகாராஜா குடும்பத்தினருக்கு மட்டுமான சிறப்பு பூஜையும், தரிசனமும் நடத்தப்பட்டு, அன்றிரவு கோயில் நடை அடைக்கப்படும்.

    பின்னர் கோயிலின் சாவி, பந்தள மகாராஜா குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும். அதோடு, மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்கால உற்சவம் நிறைவு பெறும். 


    • எத்தனை சந்தர்ப்பம் தந்தும் உன்னோடு கூடாமல் எதிர்த்தே நிற்கும் பகைவர்களை, நீ வென்று நிற்பவன்.
    • உத்தரகோச மங்கையில் உறைந்தவனே!

    திருப்பாவை

    பாடல்:

    கூடாரை வெல்லும்சீர் கோவிந்தா! உன் தன்னைப்

    பாடிப்பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்;

    நாடும் புகழும் பரிசினால் நன்றாக,

    சூடகமே தோள்வளையே, தோடே, செவிப்பூவே

    பாடகமே, என்றனைய பல்கலனும் யாமணிவோம்;

    ஆடை உடுப்போம்; அதன்பின்னே பாற்சோறு

    மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்

    கூடி யிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.

    விளக்கம்:

    கோவிந்தனே! எத்தனை சந்தர்ப்பம் தந்தும் உன்னோடு கூடாமல் எதிர்த்தே நிற்கும் பகைவர்களை, நீ வென்று நிற்பவன். உன்னைப் பாடி, நோன்பிற்கான அருள் முரசைப் பெற்றால், அதை நாடே போற்றும் பரிசாகக் கருதுவோம். அந்த மகிழ்ச்சியில் கைகளில் வளையல்களையும், காதுகளில் தோடுகளையும். கால்களில் சிலம்புகளையும் அணிவோம். எல்லா ஆபரணங்களையும் அணிந்து, நல்ல ஆடைகளை உடுப்போம். அதன் பிறகு பாலில் வெந்த சோற்றில் நிறைய நெய் இட்டு உண்ண எடுக்கையில், எங்கள் முழங்கைகளில் அந்த நெய் வடியும்படி அனைவரும் கூடி அமர்ந்து உண்டு, மனம் குளிர்ந்து இருப்போம்.

    திருவெம்பாவை

    பாடல்:

    அதுபழச் சுவையென அமுதென அறிதற்கு

    அரிதென எளிதென அமரரும் அறியார்;

    இது அவன் திருவுரு, இவன் அவன் எனவே

    எங்களை ஆண்டுகொண்டு இங்கெழுந் தருளும்

    மதுவளர் பொழில் திரு உத்தர கோச

    மங்கையுள் ளாய்! திருப் பெருந்துறை மன்னா!

    எதுஎமைப் பணிகொளும் ஆறு?அது கேட்போம்;

    எம்பெரு மான்! பள்ளி எழுந்தருளாயே!

    விளக்கம்:

    நீ பழத்தின் சுவை போன்றவனோ, அமுதத்தின் சுவை போன்றவனோ. அறிந்து கொள்வதற்கு அரிதானவனோ, எளிமையானவனோ என்று தேவர்களும் அறியமாட்டார்கள். இது தான் அவருடைய திருவுருவம் என்றும், இவனே இறைவனாகிய நீ என்றும், நாங்கள் உணரும்படி இந்த திருப்பெருந்துறையில் எழுந்தருளி உள்ளாய்! தேன் சிந்துகின்ற மலர்கள் உள்ள பூவனங்களைக் கொண்ட உத்தரகோச மங்கையில் உறைந்தவனே! திருப்பெருந்துறையின் மன்னவனே! எங்களுக்கு நீ இடும் திருப்பணியை செய்ய வேண்டும் என்று கேட்கிறோம். துயில் நீங்கி எழுந்தருள்வாய்!

    ×