என் மலர்
கோவில்கள்
பல்வேறு பெருமைகள் கொண்ட தலமாக விளங்குவது, மதுரை மாவட்டத்தில் உள்ள, யானை மலை யோக நரசிம்மர் ஆலயம். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
சமணம், சைவம், வைணவ வழிபாட்டுத் தலங்களைக் கொண்ட மலை, இயற்கையில் யானை வடிவில் அமைந்த அழகிய மலை, பாண்டியர், சோழர், நாயக்கர் என பலரும் திருப்பணி செய்த ஆலயம், குடவரை கோவில்கள் அமைந்த மலை, திருமோகூர் பெருமாள் கஜேந்திர மோட்சம் நிகழ்த்தும் தலம் என பல்வேறு பெருமைகள் கொண்ட தலமாக விளங்குவது, மதுரை மாவட்டத்தில் உள்ள, யானை மலை யோக நரசிம்மர் ஆலயம்.
தல வரலாறு :
யானை மலை எனும் இந்த மலையில் சமணம், சைவம், வைணவம் முதலிய மூன்று ஆலயங்களின் வழிபாட்டுத் தலங்கள் அமைந்துள்ளன. நடுநாயகமாக யோக நரசிம்மர் அமர்ந்துள்ளார். அருகில் லாடர் கோவில் எனும் முருகன் ஆலயம், உச்சியில் சமணர் குகைகள், யானைமலையின் வடகோடியில் வேத நாராயணப் பெருமாள் கோவில் என பக்தி மணத்தோடு இந்த மலை விளங்குகிறது.
கி.பி. முதலாம் நூற்றாண்டு முதல் நாயக்கர் காலம் வரை பல்வேறு காலகட்டங்களில் இங்கு திருப்பணிகள் செய்யப்பட்டிருக்கின்றன. தமிழ்பாடல், தமிழ் வட்டெழுத்துக்கள், பாறைச் சிற்பங்கள், குடவரைக் கோவில்கள், கட்டிடக் கோவில்கள் இந்த மலையில் நிறைந்து காணப்படுகின்றன. இந்தப் பகுதியில் சமணர் வாழ்ந்ததை, திருஞானசம்பந்தர் தமது தேவாரப் பதிகங்களில் குறிப்பிட்டுள்ளார்.
முதல் வரகுண பாண்டிய மன்னன் அரசவையில் அமைச்சராக விளங்கிய மாறன்காரி மற்றும் அவனது தம்பி மாறன் எயினன் ஆகிய இருவரால், குடவரைக் கோவில் மற்றும் முன்மண்டபம் எழுப்பப்பட்டதை வரலாறு எடுத்துக்காட்டுகிறது.
மதுரையில் இருந்து இத்தலம் வரும் போது, பிரமாண்ட மலை நம்மை வரவேற்கும். அங்கு யானை ஒன்று முன்புறம் துதிக்கையை நீட்டி அமர்ந்த கோலத்தில் இருப்பதைக் கண்டு வியக்கலாம். இதன் காரணமாக இம்மலை ‘யானை மலை’ ஆனது.
இதற்கு மற்றொரு கதையும் உண்டு. பாண்டி யனின் வீரத்தால் வெற்றி பெற இயலாத சோழமன்னன் ஒருவன், தன் நாட்டில் வாழ்ந்த சமணர்களின் உதவியை நாடினான். அதன்படி அசோக மரத்தின் கீழ் யாகம் வளர்த்து, மூவுலகும் நடுங்கச் செய்யும் பெரும் யானையை உருவாக்கி, மதுரையை நோக்கி ஏவினர்.
இதனை ஒற்றர் மூலம் அறிந்த பாண்டிய மன்னன், அதனைத் தடுத்துக் காத்திட மதுரை மீனாட்சி சுந்தரேசுவரரை வேண்டினான். அப்போது ஒரு அசரீரி ஒலித்தது. அதன்படி மதுரைக்கு வெளியே அட்டாலை மண்டபம் ஒன்றைக் கட்டினான். அம்மண்டபத்தின் சேவகனாக சிவபெருமானே தோன்றி, சமணர்கள் ஏவிய யானையை அடித்தார். அதுவே, யானை மலையானது என்ற வரலாறும் கூறப்படுகிறது.
அந்த மலையில், யோக நரசிம்மருக்குக் கோவில் அமைத்ததை பெரும்பற்றப்புலியூர் திருவிளையாடல் புராணம் கூறுகிறது. பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடல் புராணம், இங்கு பாண்டிய மன்னனின் மகன் திருக்குளம் வெட்டியதைக் குறிப்பிடுகிறது.
ஆலய அமைப்பு :
யோகநரசிம்மர் திருக்கோவில், பெரிய திருச்சுற்றுச் சுவருக்குள், யோக நரசிம்மர் சன்னிதி, நரசிங்கவல்லித் தாயார் சன்னிதி ஆகிய சன்னிதிகள் அமைந்துள்ளன. தாயார் கருணை பொழியும் திருமுகத்துடன் சுகாசனத்தில் அமர்ந்துள்ளார். தாயார் சன்னிதியைக் கடந்தால் நரசிம்மன் சன்னிதியைக் காணலாம். அதை நோக்கி செல்லும் போது, கருட மண்டபமும், அதனுள் கருடனும் அமைந்திருக்கிறது. இங்கே சிம்மங்களைத் தாங்கி நிற்கும் பெருந்தூண்கள், சிறிய தூண்கள் அமைந்துள்ளன. இதனைக் கடந்து குடவரைக்குள் யோக நரசிம்மர் அருள்காட்சி வழங்குகிறார்.
கருவறையின் வெளியே, வடதிசையில் விநாயகர் சன்னிதி, அதனையொட்டி மிகப் பெரிய அழகிய தாமரைக்குளம் அமைந்துள்ளன. இத்தலத்திற்குத் திருமோகூர் காளமேகப் பெருமாள், கள்ளர் வேடத்தில் எழுந்தருளி வழங்கும், கஜேந்திர மோட்ச விழா நடைபெறும். நரசிம்மர் ஜெயந்தி மற்றும் மாத சுவாதி நட்சத்திர நாளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
கல்வெட்டுகள் :
யோக நரசிங்கப் பெருமாள் கோவிலில் கிடைத்த ஒன்பது கல்வெட்டுகள் பல்வேறு செய்திகளைக் கூறுகின்றன. முதல் வரகுண பாண்டியன் (கி.பி. 765), முதல் மதுராந்தகச் சோழன் (கி.பி. 907), சடையவர்ம சுந்தர பாண்டியன் (கி.பி. 1021), சடையவர்மன் ஸ்ரீவல்லப பாண்டியன் (கி.பி. 1101), முதல் மாறவர்மன் சுந்தர பாண்டியன் (.கி.பி. 1216), கிருஷ்ண தேவராயர் (கி.பி. 1509) என பல்வேறு மன்னர்களின் திருப் பணிகளையும் அவர்கள் காலத்தில் வழங்கப்பட்ட கொடைகளையும் அறிய முடிகிறது.
இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம் :
மதுரை மாவட்டம், மதுரை கிழக்கு வட்டத்தில், யானை மலை திருத்தலம் உள்ளது. மதுரையில் இருந்து மேலூர் செல்லும் வழித்தடத்தில் 8 கிலோமீட்டர் தொலைவில் இந்த திருத்தலம் இருக்கிறது. மதுரையில் இருந்து ஏராளமான பேருந்து வசதிகள் உள்ளன. சொந்த வாகனத்தில் வருவோர் யா.ஒத்தக்கடையின் வழியே வந்தால் சுலபமாக வரலாம். மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து அடிக்கடி மினி பஸ் வசதி உள்ளது.
பனையபுரம் அதியமான்

கொப்பனாபட்டியில் சாய்பாபா யோக சத்குரு சாய் பாபாவாக அருள்பாலிக்கிறார். இங்கு இவர் தோன்றிய வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் இருந்து 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கொப்பனாபட்டி என்ற இயற்கை எழில் சூழ்ந்த கிராமம். இந்த ஊரை பூர்வீகமாக கொண்டிருந்தாலும் 45 ஆண்டுகளாக மதுரையில் மருந்துக் கடை நடத்தி வயிற்றை கழுவி வந்தவர்கள்தான் திருநாவுக்கரசர்- முத்தாத்தாள் தம்பதியினர். முத்துராமன் என்ற மகனும், கவிதா என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது.
அப்பகுதி மக்களிடையே சாய்-அம்மா என்று அறிமுகமான திருநாவுக்கரசர்- முத்தாத்தாள் தம்பதியினர் ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டவர்கள். குறிப்பாக சாய்பாபா மீது அளவற்ற அன்பும், ஈடுபாடும் கொண்டுள்ளனர்.
ஒரு முறை சீரடி செல்லக் கூடிய பாக்கியத்தை பெற்ற முத்தாத்தாள் சாய்பாபா ஜீவ சமாதி அடைந்த சீரடிக்கு சென்று சாய் பாபாவை தரிசனம் செய்து பிரசாதம் பெற்று வெளியே வந்துள்ளார். அப்போது அங்கு இருந்த மரத்தின் நிழலில் முத்தாத்தாள் நின்றார். அப்போது நொடிப்பொழுதில் மகான் சத்குரு ஸ்ரீசாய்நாத் பகவான் காட்சியளித்து முத்தாத்தாளிடம் இருந்த பிரசாதத்தை முழுமையாக வாங்கி சாப்பிட்டுவிட்டு மறைந்துள்ளார். மெய்சிலிர்த்து போன முத்தாத்தாள் கண்கள் கலங்கியபடி தனது தோழிகளிடம் கூற, அவர்களும் யாரோ தற்போது வந்து மறைந்து போனதை பார்த்ததாகவும், அந்நிற உடையை யாரும் இங்கு அணிய வில்லை எங்களுக்கும் மெய்சிலிர்த்தது என்று கூறி நெகிழ்ச்சியடைந்தனர்.
அந்த நாள் முதல் வாழ்வின் ஒவ்வொரு செயலையும் பாபாவிற்கு அர்ப்பணித்து தொடர் முயற்சியுடன் பாபா மீது தீராத அன்பும் மாறாப் பற்றும் கொண்டு பூஜித்து வந்த தம்பதியர் வாழ்வில் பல மாற்றங்களையும் ஏற்றங்களையும் கண்டனர். சொந்த ஊரான கொப்பனாபட்டியில் தனது பூர்வீக சொத்தில் இவருக்கென இருந்த வீட்டில் பாபா விக்கிரகம் வைத்து ஆரம்பத்தில் வழிபாடு செய்தனர். பலருக்கு அங்கு அன்னதானமும் வழங்கினர்.
முன்னதாக தனது பூர்வீக வீட்டின் முன்பு பயனுள்ள செடிகளான எலுமிச்சை, வாழை போன்ற மரங்களை வளர்த்து வந்துள்ளனர். அதில் தனது பேரன்கள் இருவருக்கும் வீடு கட்டுவோம் என திரு நாவுக்கரசு குடும்பத்தினர் தீர்மானித்து அதற்காக அவ்விடத்தை சுத்தம் செய்துள்ளனர். அப்போது இரண்டு வாழை மரங்கள் மட்டும் தார் விடாமல் இருந்துள்ளது. இப்பகுதியில் தார் விடாத வாழை மரத்தை வெட்டுவது இல்லை. அதற்காக இரு வாழை மரங்களையும் அப்படியே விட்டுவிட்டனர். அந்த வாழைமரங்கள் தார் விட்ட நிலையில் அதன் நடுவேதான் சாய்பாபாவின் திருவுருவச்சிலை அமைந்திருந்தது.
தனது ஆரம்ப கட்ட காலத்திலேயே தங்களது மனதில் சொந்தமாக கோவில் ஒன்றை கட்ட வேண்டும் என்ற எண்ணங்களை அடி மனதில் வைத்திருந்த திருநாவுக்கரசு- முத்தாத்தாள் தம்பதியினருக்கு ஒரு கட்டத்தில் சித்தர் சொன்னதையடுத்து பல இடங்களில் அருள் வாக்கு கேட்டு கோவில் கட்டுவது என தீர்மானித்துள்ளார். ஆனால் அந்த சித்தர் இந்த இடம் ஐந்து தலைமுறைக்கு முன்பு சிவனடியார்கள் வாழ்ந்த இடம், இங்கு சிவனடியார்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவ்விடத்தில் சித்தர் சிவன் மகானாக கோவில் கொண்டு குடியேறுவார் என தெரிவித்து சென்றிருந்தார்.
வேறு எங்காவது இடம் வாங்கி அவ்விடத்தில் கோவில் கட்டுவோம் என முடிவெடுத்து முயற்சி செய்தனர். ஆனால் அச்செயல் கைகூடி வர வில்லை. அப்போதுதான் எதிர்பாராதவிதமாக தங்களது மகன் முத்துராமன் பணி நிமித்தமாக புதுக்கோட்டையில் இருந்து கொப்பனாபட்டியில் உள்ள வீட்டிற்கு வந்தபோது நாய் ஒன்று குறுக்கே வந்து விபத்து ஏற்பட்டுள்ளது. அதில் தனது மகன் பிழைத்ததே மறுபிறவி, அனைத்தும் சாயி அருள் என்கிறார் முத்தாத்தாள்.
தாம் வறுமையில் வாழ்ந்த காலத்தில் தனது குடும்பம் பொருளாதார நிலையிலிருந்து உயர்வு பெற, தனது வாழ்வில் நிகழ்ந்த அடுத்தடுத்த மாற்றங்களுக்கு காரணமாகவும் மனதில் நிறைந்த இஷ்ட தெய்வமான சீரடி சாய்பாபாவின் சிலையை தனது வீட்டில் வைத்து வழிபட்டு வருவதை தொடர்ந்து அங்கேயே கோவில் கட்ட முடிவு செய்து பணியை தொடங்கினர்.
மதுரையில் வீடு கட்ட ஆரம்பித்த பணியில் தொய்வு ஏற்பட்ட நிலையில், கோவில் கட்டும் பணி எந்தவித தடையும் இன்றி மளமளவென முடிந்து 2014 -ம் ஆண்டு பொன்னமராவதி சுற்று வட்டார பகுதியில் முதல் சாய்பாபா கோவிலாக உருவெடுத்தது. வீட்டையே கோவிலாக மாற்றிய தம்பதியினர் சாய்பாபாவின் பெரிய சிலை வைக்க விரும்பினர். பின்னர் ராஜஸ்தானில் இருந்து ரூ.3 1/2 லட்சத்தில் சிலை வாங்க தீர்மானித்து 50 ஆயிரத்தை முன்பணமாக செலுத்தினர். அதிலிருந்து 9-வது நாளில் கொப்பனாபட்டிக்கு சாய்பாபா வந்திறங்கினார். அவரே இன்று யோக சத்குரு சாய் பாபாவாக அருள்பாலிக்கிறார். ராஜஸ்தானில் இருந்து புறப்பட்டபோது, சிலை அமைத்தவர்கள் இவர் செல்லும் இடம் யோகமாகும் என்று கூறி அனுப்பி வைத்தனர்.
ஆனந்தக் கண்ணீருடன் சாய்பாபா திருவுருவச் சிலையை வரவேற்று மகிழ்ந்த முத்தம்மாள் திருநாவுக்கரசு தம்பதியினர் தொடர் பூஜை, புனஸ்காரங்கள் என சாய்பாபாவிற்கு செய்த போதிலும் ஏதோ ஒரு குறை இருப்பதை உணர்ந்தனர். ஏற்கனவே சித்தர் கூறியது நினைவில் வந்தது. மேலும் கனவில் தோன்றிய சாய்பகவான், இவ்விடத்தில் ஆவுடையார் குடியேறுவார் என தெரிவிக்க ஆவுடையார் என்றாலே என்னவென்று தெரியாமல் இருந்த முத்தாத்தாள், சிவன் மீது லிங்கத்திற்கு பதிலாக சாய் உருவம் இருக்க வேண்டும் என்பதை அறிந்தார். சித்தர் ஒருவர் சொன்னதை போல் சித்தர் சிவன் மகனாக இங்கே காட்சியளிக்கிறார் சீரடி யோக சாய் பகவான்.
நாள்தோறும் நான்கு வேளை பூஜை செய்யப்படுகிறது. வியாழன் தோறும் மதியம் மற்றும் இரவில் அன்னதானம் வழங்கப்படுகிறது. நன் கொடையாளர்கள் பணமாகவோ பொருளாகவோ தருகிறார்கள். ஐம்பதிலிருந்து நூறு பேருக்கு அன்னதானம் வழங்குகிறோம். யோக சத்குரு சாய்பாபா மட்டுமின்றி இவ்விடத்தில் சாய் விநாயகர், துவ ராமாயி, பல்லக்கு பாபா, சத்திய நாராயண மகாலட்சுமி, அபிஷேக பாபா என அனைவருக்கும் ஆரத்தி அளிக்கப்பட்டு நெய்வேத்தியம் செய்யப்படுகிறது.
மாதந்தோறும் பவுர்ணமி பூஜையன்று சத்திய நாராயண மகாலட்சுமி விளக்கு பூஜை வழிபாடு பெண்களால் நடத்தப்படுகிறது. பல்லாக்கு பாபாவிற்கு ஆண்டிற்கு மூன்று முறை பல்லக்கு ஊர்வலம் நடக்கிறது. சத்குரு ஸ்ரீ சாய்பாபா சீரடி ஜீவசமாதியான விஜயதசமி, ஆவணி குரு பவுர்ணமி, ராம நவமி அன்றும் ஏப்ரல் 8-ந்தேதி வருடாபிஷேகம் அன்றும் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கு பாபாவை நகர் வலம் வருவது வழக்கம் என்கிறார் முத்தாத்தாள். பொன்னமராவதி சுற்று வட்டார பகுதியிலே தனது வீட்டையே கோவிலாக மாற்றி தம்பதியர் திருநாவுக்கரசர் முத்தாத்தாள் இருவரும் விருப்ப தொண்டாற்றினர்.
குழந்தை வரம்
கொப்பனாபட்டி பகுதியில் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வரும் கூலித்தொழிலாளி ஒருவருக்கு கடந்த 14 ஆண்டுகளாக திருமணமாகி குழந்தை ஒன்று இல்லாத சூழ்நிலை இருந்து வந்துள்ளது. பாபாவுக்கு கோவில் வந்ததும் அங்கு அக்குடும்பத்தினர் சென்று தொடர் வேண்டுதலை நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்தனர். இரண்டே மாதத்தில் கருவுற்று அழகிய பெண் குழந்தையும் பிறந்துள்ளது.
சாய் மாலை அணிந்து விபூதியை பூசிக்கொள்
கடந்த செப்டம்பர் மாதம் 13-ந்தேதி காலை முத்தாத்தாள் கணவர் திருநாவுகரசு காலை 5.05 மணியளவில் பிரம்ம முகூர்த்தத்தில் இயற்கை எய்தினார். அந்நிகழ்வு குறித்து முத்தாத்தாள் நம்மிடம் கூறும் போது, திருநாவுக்கரசு மறைவிற்கு முன் 2 நாட்கள் மதுரையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சையில் இருந்த நிலையில் எந்த ஒரு செயல் ஆனாலும் அதில் சாய் பகவானின் உத்தரவு எனக்கு கிடைக்கும். ஆனால் எனது கணவர் உடல்நிலையில் சாய் பகவானின் உத்தரவு நல்ல விதமாக கிடைக்கவில்லை.
தொடர்ந்து சிகிச்சையில் மதுரையில் இருந்தபோது உடனடியாக கொப்பனாபட்டி வரச்சொல்லி சாய் சத்குரு சாய்பாபாவின் உத்தரவாக எனக்கு கிடைத்தது. அதன் பின் இங்கு வந்து அதிகாலை 4.50 மணிக்கு திடீரென நான் கண் விழித்தேன். யாரோ சாய் மாலையை அணிந்து விபூதியைப் பூசிக்கொள் என கேட்க கண்கலங்கியபடி ஏற்றுக் கொண்டேன். சரியாக ஐந்து மணி ஐந்து நிமிடத்தில் எனது கணவரின் உடலிலிருந்து ஆன்மா பிரிந்தது என்றார்.
தொடர்புக்கு:
முத்தாத்தாள்,
ஓம் ஸ்ரீ சீரடி யோக சாய்பாபா ஆன்மீக மற்றும் தர்மக்கோவில்,
கொப்பனாபட்டி,
பொன்னமராவதி தாலுகா,
புதுக்கோட்டை மாவட்டம். 97897 78770.
பல்வேறு சிறப்புகள் கொண்டதாக திகழ்கிறது, இலங்கை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள, தொண்டைமானாறு செல்வச் சன்னிதி முருகன் திருக்கோவில்.
இலங்கையின் ஆறுபடை வீடுகளுள் ஒன்று, வடஇலங்கையின் கதிர்காமமாக போற்றப்படும் தலம், வீரபாகு கால் வைத்த பூமி, ஐராவசு சாப விமோசனம் பெற்ற இடம், சிகண்டி முனிவர் வழிபட்டுப் பேறுபெற்ற ஆலயம், சோழனின் தளபதி தொண்டைமான் கருணாகரன் திருப்பணி செய்த கோவில், மீனவர் அடியார் மருதர் கதிர்காமர் திருப்பணி செய்த திருத்தலம் என பல்வேறு சிறப்புகள் கொண்டதாக திகழ்கிறது, இலங்கை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள, தொண்டைமானாறு செல்வச் சன்னிதி முருகன் திருக்கோவில்.
‘ஆறு திருப்பதிகண் டாறெழுத்து மன்பினுடன் கூறுமவர் சிந்தை குடிகொண்டோனே’ என்ற குமரகுருபரரின் வாக்கிற்கிணங்க, இலங்கையிலும் முருகப்பெருமானுக்கு ஆறுபடைவீடுகள் அமைந்துள்ளன. கதிரைமலை, உகந்தமலை, மாவிட்டபுரம், கந்தவனம், செல்வச்சன்னிதி, நல்லூர் ஆகிய இந்த ஆறுபடை வீடுகளில் ஒன்றாகத் திகழ்வதுதான் செல்வச் சன்னிதி ஆலயம். தெற்கே கதிர்காமம், வடக்கே செல்வச்சன்னிதி விளங்குவதுடன், இவ்விரு தலங்களின் வழிபாட்டு முறைகளிலும் ஒற்றுமையே காணப்படுகிறது.
கி.பி.1935-ல் வெளியான வண்ணை நெ.வை.செல்லையா எழுதிய ‘தொண்டை மானாற்றுச் செல்வச் சன்னிதி வடிவேல் பதிகம்' இத்தலத்தினைப் புகழ்ந்துரைக்கிறது. சிங்கள வரலாற்று நூலான ‘மகாவம்சம்' புத்தகத்தில் இத்தலம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
தொண்டைமானாறில் மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்த மருதர் கதிர்காமர் என்ற முருக பக்தர் வாழ்ந்து வந்தார். தன் பக்தரான இவரிடம், முருகப்பெருமான் பல்வேறு திருவிளையாடல்களைப் புரிந்தார். ஒருநாள் மருதர் கனவில் தோன்றிய முருகப்பெருமான், தற்போதுள்ள இடத்திலேயே தனக்கு ஆலயம் எழுப்பி பூஜைகள் செய்யுமாறு பணித்தார். அதன் படியே, அதே இடத்தில் ஆலயம் எழுப்பி பூஜைகள் செய்து வரலானார். இவர் வழிவந்தவர்களே இன்றும் ஆலயத்தில் பூஜைகள் செய்து வருகிறார்கள்.
தேவ ரிஷி என்று புகழப்படும் சிகண்டி முனிவர், தமிழில் புலமை பெற விரும்பி முருகப் பெருமானை வேண்டி நின்றார். முருகனின் அறிவுரைப்படி, அகத்தியரிடம் தமிழைக் கற்றுணர்ந்தார். அதன்பின் கதிர்காமத்து முருகனை வழிபட விரும்பி, தன் சீடர்களுடன் இலங்கை சென்றார். ஆலயத்தை நெருங்கும் வேளையில், மதம் கொண்ட யானை ஒன்று, சிகண்டி முனிவரை வழிமறித்தது. சிகண்டி முனிவர் சற்றும் பயம் கொள்ளாது, அங்கிருந்த வெற்றிலைக் கொடியில் இருந்து ஒரு இலையைப் பறித்து, முருகப்பெருமானை தியானித்து, யானையின் மீது வீசினார். அந்த வெற்றிலையானது, வேலாக மாறி யானையை இரண்டாகக் கிழித்தது. அதில் இருந்து தேவலாகத்தைச் சேர்ந்த ஒருவன் வெளிப்பட்டான். அவன் சிகண்டி முனிவரை வணங்கி, “அடியேன் பெயர் ஐராவசு. வியாழ பகவானின் சாபத்தினால் இந்த நிலையை அடைந்தேன். தாங்கள் வீசிய வெற்றிலையாலும், கதிர்காமத்தானின் அருளாலும் என் சாபம் நீங்கி, பழைய வடிவம் கிடைத்தது, நன்றி” என்று கூறி தேவலோகம் சென்றான்.
இந்த நிகழ்வை உறுதிப்படுத்தும் விதமாக வெற்றிலையை வைத்து ‘பத்திரசக்தி வழிபாடு’ இன்றளவும் இந்த ஆலயத்தில் நடைபெற்று வருகிறது. வேலின் நடுவில் முக்கோண பொட்டுடன் வெற்றிலையை வைத்து வீதியுலா வருவார்கள்.
இந்தப் பகுதியில் ஆலயம் முன்பாக பாயும் ஆற்றில் குளித்து, இத்தல இறைவனை வழிபாடு செய்தால், தீராத நோயும் தீரும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். சூரபத்மனிடம் தூது சென்ற வீரவாகு, இந்த இடத்தில்தான் தன்னுடைய காலடியை முதலில் பதித்தார் என்று, ஆலய தல வரலாறு சொல்கிறது. அதற்குச் சான்றாக, வீரவாகுவின் பாதச்சுவடு ஆலயத்தின் வடக்குப் பகுதியில் காணப்படுகிறது.
இத்தலத்து முருகப்பெருமான், ‘செல்வச் சன்னிதி முருகன், ஆற்றங்கரை வேலன், ஆற்றங்கரை யானை, கல்லோடையான், கல்லோடைக்கந்தன், அன்னக்கந்தன், அன்னதானக் கந்தன்’ என பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றார். கருவறையில் முருகப்பெருமானின் சிலா வடிவத்திற்கு பதிலாக ‘வேல்’ தான் மூலவராக இருக்கிறது. இந்த ஆலயம் அன்னதானத்திற்கு புகழ்பெற்ற திருத்தலமாக விளங்குகிறது. இக்கோவிலைச் சுற்றி 45 அன்னதான மடங்கள், பக்தர்களின் பசிப்பிணியைப் போக்கி வருகிறது. இதனால்தான் இத்தல முருகனை ‘அன்னதானக் கந்தன்' என்று போற்றுகின்றனர். போர்ச்சூழலால் பாதிக்கப்பட்டு, மீண்டும் புத்துணர்வு பெற்று வரும் இந்த ஆலயத்தில், இப்போதும் பல்வேறு திருப்பணிகள், புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
தொன்மை வரலாறு
கி.பி. 11 மற்றும் 12-ம் நூற்றாண்டில் தமிழகத்தை ஆண்ட முதலாம் குலோத்துங்கச் சோழன் காலத்தில் இலங்கையை ஆட்சி செய்தவன், முதலாம் விஜயபாகு. இலங்கை மன்னன் சோழன் மீது பகைமை கொண்டிருந்தான். தன்னிடம் போர் செய்ய முடியுமா? என சவால் விடுத்தான் என, சிங்கள வரலாற்று நூலான ‘மகாவம்சம்’ கூறுகிறது. சவாலை ஏற்ற சோழன், தன் பிரதான தளபதியான தொண்டைமான் கருணைகரனைப் போருக்கு அனுப்பினான். தொண்டைமான் வெற்றி பெற்று அந்தப் பகுதியைச் சோழப் பேரரசோடு இணைத்தான். அங்கு ஓடிய ஆறு கடலில் சங்கமிக்காத நிலையில், கால்வாய் வெட்டி கடலில் சங்கமிக்க வைத்தான். அது முதல் அந்த ஆறும் அப்பகுதியும், ‘தொண்டைமானாறு’ என வழங்கப்படலானது. உவர்நீர் உள்ளே வந்ததால், உப்பு உற்பத்தி தொடங்கியது. கரணவாய், செம்மேனி, வெள்ளப்பராய் ஆகிய பகுதிகளில் விளைந்த உப்பு தமிழகத்திற்கும் ஏற்றுமதியானது.
கி.பி. 16-ம் நூற்றாண்டில் வியாபாரம் செய்ய வந்த போர்ச்சுக்கீசியர்கள், இந்தப் பகுதி மக்களிடம் ஏற்பட்ட ஒற்றுமை இன்மையைப் பயன்படுத்தி, ஆட்சியைப் பிடித்தனர். அவர் களது 33 ஆண்டு கால ஆட்சியில் ஏராளமான கோவில்கள் தரைமட்டமாக்கப்பட்டன. கி.பி.1658-ல் வந்த ஒல்லாந்தர்கள், 150 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தனர். இவர்கள் காலத்தில் பல கோவில்கள் மீண்டும் எழுப்பப்பட்டன.
இந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரி சனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
இலங்கை நாட்டின் வடமாகாணமான யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பருத்தித்துறை அருகே, பழமையான தொண்டைமானாறு செல்வச் சன்னிதி முருகன் திருக்கோவில் அமைந்துள்ளது. பருத்தித் துறையில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும், யாழ்ப்பாணத்தில் இருந்து 35 கிலோமீட்டர் தூரத்திலும், கொழும்பில் இருந்து 220 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த ஆலயம் இருக்கிறது.
-பனையபுரம் அதியமான்

இங்கிலாந்து நாட்டில் கொவன்ட்ரி என்ற சிறு நகரத்தில் விநாயகர் வீற்றிருக்கிறார். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
ஆற்றங்கரையும் அரசமரத்தடியும் பிள்ளையாருக்கு பிடித்த இடம். அது எந்த ஊராக.. எந்த தேசமாக இருந்தால் என்ன?
இங்கிலாந்து நாட்டில் கொவன்ட்ரி என்ற சிறு நகரத்தில் விநாயகர் வீற்றிருக்கிறார். பளிங்கு போன்ற குளிர்ந்த நீர் சிலு சிலு வென்று ஓடிக்கொண்டிருக்க, பசுமை இருகரைகளிலும் பாய் விரித்திருக்க, படகுப் போக்குவரத்து நடைபெறும் கொவன்ட்ரி ஆற்றின் கரையோரம் கோவில் கொண்டுள்ளார், இந்த விநாயகப்பெருமான்.
இந்த ஆலயம் அமைந்திருக்கும் வளாகத்துக்குள் நுழைந்ததும், ஒரு சிறிய கோவிலில் கணபதி அமர்ந்திருக்க ‘இங்கே தேங்காய் உடைக்கவும்’ என்று தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருந்தது.
விசாரித்ததில், புதிய வாகனங்கள் வாங்குவோர் இவர் முன்னே நிறுத்தி தேங்காய் உடைத்து வழிபாடு செய்துவிட்டுத்தான் வாகனத்தை ஓட்டுகிறார்கள் என்ற செய்தி கிடைத்தது.
வெளிச்சுவர் முழுவதும் வெள்ளை, காவிநிற நெடும்பட்டைகளும், நுழைவு வாசலில் சிறிய கோபுரமும் கோவிலை அடையாளப்படுத்துகின்றன. கோவிலுக்கு முன் ஓடும் ஆற்றின் கரையோரம் இலைகளும், கிளைகளும், அரசமரம் போலவே காட்சிதரும் ‘சில்வர் பெரிச்’ மரம் நிழல் பரப்பிக் கொண்டிருக்கிறது. மக்கள் தங்கள் தோஷம் நீங்க மஞ்சள் துணியில் எலுமிச்சை பழத்தை சேர்த்துக் கட்டி மரத்தில் தொங்கவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
கோவில் வாசல் வழியே நுழைந்ததும் பலிபீடமும், கொடி மரமும் அதன் கீழே சிறிய ஸ்தம்ப விநாயகரும் தோற்றம் தருகின்றன. மூஷிக வாகனத்தில் எதிரே உயர்ந்து நின்றுள்ள விமானத்தின் கீழ் கருவறையில் மூலவரான சித்தி விநாயகர் அமர்ந்த கோலத்தில் அருளாட்சி செய்கிறார். ஐந்தடி உயரமுள்ள இந்த விநாயகர்தான் ஐரோப்பா முழுவதும் உள்ள இந்து கோவில்களில் இருக்கும் விநாயகர் சிலைகளை விட பெரியது என்று பெருமை பொங்கச் சொல்கிறார்கள்.
இந்த விநாயகரின் வலதுகரம் அபயம் அளிப்பதாகவும், இடதுகரம் கனியைத் தாங்கியும், பின்னிரு கரங்கள் பாசாங்குசம் ஏந்தியும் காட்சி தருகிறார்.
விநாயகர் சன்னிதியின் தென்புறம் கயிலாசநாதராக சிவலிங்கமும், வட புறத்தில் சங்கு சக்கரதாரியான வேங்கடேச பாலாஜியும், தனித்தனியான சிறிய சன்னிதியில் வீற்றிருக்கின்றனர்.
மூலவரின் கோஷ்டத்தில் தென்திசை நோக்கி தட்சிணாமூர்த்தி சுவாமியும், மேற்கில் லிங்கோத்பவரும் வடக்கில் கோமுகத்தின் மேல், பிரம்மனுக்குப் பதிலாக அவர் மனைவி சரஸ்வதியும், கீழே சண்டிகேசரும் தரிசனம் தருகின்றனர்.
பிரகாரத்தை வலம் வரும் போது, திரிசூலம் ஏந்திய வடக்கு நோக்கிய துர்க்கை அம்மனும், கிழக்கு நோக்கிய வரலட்சுமி சன்னிதியும், சிவலிங்கம் ஏந்திய நாக தம்பீரானாக ஐந்து தலை நாகமும் தனித்தனி சன்னிதிகளில் உள்ளன.
அடுத்து ராமசபை என்ற சன்னிதியில் ராமர், சீதை, லட்சுமணர், அனுமன் காட்சிதருகின்றனர். அதற்கு அடுத்தாற்போல், வள்ளி - தெய்வானை சமேத வேல் தாங்கிய முருகப்பெருமான் ‘கதிர்காம முருகன்’ என்ற நாமத்துடன் சிறு சன்னிதியில் எழுந்தருளியிருக்கிறார்.
வடக்கு சுற்றில் தென்திசை நோக்கியபடி, சபரிமலை ஐயப்பனும், சிவகாமி அம்மன் சமேத தில்லைக் கூத்தனும் காட்சி தருகின்றனர். வசந்த மண்டபத்தில் விநாயகர் உட்பட எல்லா தெய்வங்களின் செப்புத் திருமேனிகள் அழகுற அமைந்துள்ளன. ஈசானிய மூலையில் ஒன்பது கிரகங்களும் பீடத்தின் மீது நின்ற கோலத்தில் வீற்றிருக்கின்றன. மேற்கு நோக்கியபடி பைரவர் காட்சி தருகிறார்.
இந்த ஆலயத்தில் சங்கடஹர சதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி போன்ற விழாக்களும், திருக் கார்த்திகை, சஷ்டி போன்ற விழாக்களும், சிவராத்திரி, நவராத்திரி, வைகுண்ட ஏகாதசி போன்ற விழாக்களும், நவக்கிரக பெயர்ச்சிகளின் போதும், வேள்வி மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன.
இந்த ஆலயம் தினமும் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.
டாக்டர் ச.தமிழரசன்

தஞ்சாவூர் மாவட்டம் மரத்துறை கிராமத்தில் உள்ளது, சர்வலோகநாத சுவாமி ஆலயம். இந்த கோவில் வரலற்றை அறிந்து கொள்ளலாம்.
தஞ்சாவூர் மாவட்டம் மரத்துறை கிராமத்தில் உள்ளது, சர்வலோகநாத சுவாமி ஆலயம். இந்தக் கோவிலில் அருள்பாலிக்கும் இறைவனின் பெயர் ‘சர்வலோகநாத சுவாமி.’ அம்பாளின் திருநாமம் ‘மங்களாம்பிகை’ என்பதாகும்.
ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ராஜகோபுரம் இல்லாத இந்தக் கோவிலுக்கு கிழக்கு, மேற்கு என இரு திசைகளிலும் வாசல்கள் உள்ளன. ஆனால் மேற்கு வாசலையே அனைவரும் பயன்படுத்துகின்றனர்.
சுமார் 400 ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஆலயம் இது. இக்கோவில் மிகவும் சிதிலமடைய தொடங்கிய போது ஊர் மக்கள் ஒன்று கூடி கோவிலை வண்ணமயமாக அற்புதமாக புதுப்பித்துள்ளனர்.
மேற்கு வாசல் வழியே உள்ளே நுழைந்து கிழக்கு திசைக்கு வருவோம். கிழக்கு வாசலின் எதிரே பலிபீடமும், நந்தியும் தனி மண்டபத்தில் உள்ளன. அடுத்துள்ள மகாமண்டபத்திற்கு இடது புறம் சித்தி விநாயகர் அருள்பாலிக்கிறார்.
முக மண்டபத்தினுள் நுழைந்தால் இறைவனின் சன்னிதிக்கு எதிரே நந்தியும் பலிபீடமும் இருக்கிறது. அடுத்துள்ளது அர்த்த மண்டபம். அதை அடுத்துள்ள கருவறையில் இறைவன் சர்வலோக நாதர் லிங்கத்திருமேனியில் கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். இறைவனின் தேவ கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி லிங்கோத்பவர் மற்றும் பிரம்மா ஆகியோர் களின் திருமேனிகள் உள்ளன.
மகா மண்டபத்தின் வலதுபுறம் இறைவி மங்களாம்பிகை சன்னிதி உள்ளது. இந்த அன்னை தென்திசை நோக்கி நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறாள். மங்களாம்பிகையை வேண்டிக்கொள்வதால் தங்களுக்கு நடைபெற வேண்டிய அனைத்து மங்களகரமான காரியங்களும் தடையில்லாது நடக்கும் என்று பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
பிரகாரத்தின் மேற்கில் விநாயகர், முருகன், வள்ளி- தெய்வானை ஆகியோர் தனி சன்னிதியில் அருள்பாலிக்கின்றனர். வடக்கு பிரகாரத்தில் சண்டீஸ்வரி சன்னிதி உள்ளது.
வடகிழக்கு மூலையில் ஆலயத்தின் தலவிருட்சமான வில்வ மரமும், அதன் கீழே நாகர் சிலைகளும் உள்ளன. கிழக்கு பிரகாரத்தில் சூரியன், சனி பகவான், பைரவர், நாகர் திருமேனிகள் காணப்படுகின்றன. இந்த ஆலயத்தில் துர்க்கையும், நவக்கிரக நாயகர்களும் இல்லை. இந்த ஆலயத்தில் இரண்டு கால பூஜைகள் மட்டுமே நடைபெறுகின்றன.
நகரத்தில் உள்ள கோவில்களில் பல பராமரிப்பே இல்லாமல் இருக்கும் நிலையில், ஒரு கிராமத்தில் இப்படிப்பட்ட அழகு கோவிலா என்று நம் மனம் வியக்கும்படி உள்ளது இந்த கோவில்.
இந்த ஆலயத்தில் பிரதோஷம், சிவராத்திரி, நவராத்திரி, ஆண்டு பிறப்பு நாட்களில் இறைவனுக்கும் இறைவிக்கும் விசேஷ அலங்காரங்களும், அபிஷேக - ஆராதனைகளும் நடைபெறுகின்றன.

இந்த திருத்தலத்தின் அருகில் உள்ள விளத்தொட்டி, தொட்டிலில் முருகன் தவழ்ந்த ஊர் ஆகும். எனவே இந்த ஊர் மக்கள், இன்றளவும் தங்கள் குழந்தைகள் பிறந்து 10 நாட்கள் வரை தொட்டிலில் போட்டு தாலாட்டு பாடுவதில்லை. இது முருகனுக்கு அவர்கள் செய்யும் மரியாதை என்கிறார்கள்.
கிராமம் என்பதால் அபிஷேகம், அர்ச்சனை மற்றும் இதர பூஜை களுக்கு தேவையான பொருட்கள் வாங்க இந்த ஊரில் கடைகள் எதுவும் கிடையாது. எனவே பக்தர்கள் தேவையான ஆராதனைப் பொருட்களை உடன் வாங்கிச் செல்வது நல்லது.
இந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.
இத்தலத்திற்கு அருகிலேயே பந்த நல்லூர், நெய்க்குப்பை, நெய்வாசல், திருச்சிற்றம்பலம், திருமேனியார் கோவில், மணல்மேடு, திருப்புங்கூர் மற்றும் கடலங்குடி தலங்கள் உள்ளன. மரத்துறை செல்வோர் இந்த தலங்களையும் தரிசிக்கலாம்.
அமைவிடம் :
தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் - சீர்காழி பேருந்து வழித்தடத்தில் உள்ளது மரத்துறை கிராமம். சாலையில் இறங்கி 1 கி.மீ வடக்கே நடந்து செல்ல வேண்டும்.
திருப்பனந்தாள், மயிலாடுதுறை, வைத்தீஸ்வரன் கோவில், சீர்காழி, சிதம்பரம், பந்தநல்லூர் ஆகிய ஊர்களில் இருந்து மரத்துறை செல்ல நிறைய பேருந்து வசதிகள் உள்ளன. வாடகை கார் மற்றும் ஆட்டோ, மினி பஸ் வசதிகளும் உள்ளன.

கொள்ளிடம் என்ற ஜீவநதிக்கும், மண்ணியாற்றுக்கும் இடையே கரும்பு தோட்டங்களும் வயல்வெளிகளும் பச்சை நிற கம்பளம் விரித்திருக்க, அதன் நடுவே அமைந்துள்ளது மரத்துறை என்ற இந்த கிராமம். ‘தேவபுரி’ என்பதே இதன் முற்கால பெயர்.

இந்த திருத்தலத்தின் அருகில் உள்ள விளத்தொட்டி, தொட்டிலில் முருகன் தவழ்ந்த ஊர் ஆகும். எனவே இந்த ஊர் மக்கள், இன்றளவும் தங்கள் குழந்தைகள் பிறந்து 10 நாட்கள் வரை தொட்டிலில் போட்டு தாலாட்டு பாடுவதில்லை. இது முருகனுக்கு அவர்கள் செய்யும் மரியாதை என்கிறார்கள்.
கிராமம் என்பதால் அபிஷேகம், அர்ச்சனை மற்றும் இதர பூஜை களுக்கு தேவையான பொருட்கள் வாங்க இந்த ஊரில் கடைகள் எதுவும் கிடையாது. எனவே பக்தர்கள் தேவையான ஆராதனைப் பொருட்களை உடன் வாங்கிச் செல்வது நல்லது.
இந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.
இத்தலத்திற்கு அருகிலேயே பந்த நல்லூர், நெய்க்குப்பை, நெய்வாசல், திருச்சிற்றம்பலம், திருமேனியார் கோவில், மணல்மேடு, திருப்புங்கூர் மற்றும் கடலங்குடி தலங்கள் உள்ளன. மரத்துறை செல்வோர் இந்த தலங்களையும் தரிசிக்கலாம்.
அமைவிடம் :
தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் - சீர்காழி பேருந்து வழித்தடத்தில் உள்ளது மரத்துறை கிராமம். சாலையில் இறங்கி 1 கி.மீ வடக்கே நடந்து செல்ல வேண்டும்.
திருப்பனந்தாள், மயிலாடுதுறை, வைத்தீஸ்வரன் கோவில், சீர்காழி, சிதம்பரம், பந்தநல்லூர் ஆகிய ஊர்களில் இருந்து மரத்துறை செல்ல நிறைய பேருந்து வசதிகள் உள்ளன. வாடகை கார் மற்றும் ஆட்டோ, மினி பஸ் வசதிகளும் உள்ளன.
கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், குருவாயூர் நகரில் மம்மியூர் பகுதியில் அமைந்திருக்கும் மம்மியூர் மகாதேவர் கோவிலைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்வோம் வாருங்கள்..
தான் தவமியற்றி வந்த இடத்தை விட்டுக் கொடுத்துக் கிருஷ்ணர் கோவில் அமைக்க உதவிய இறைவன் சிவபெருமான், அங்கிருந்து சிறிது தொலைவில் தனியாகக் கோவில் கொண்டார். கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், குருவாயூர் நகரில் மம்மியூர் பகுதியில் அமைந்திருக்கும் இந்தக் கோவிலைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்வோம் வாருங்கள்..
தல வரலாறு
விஷ்ணுவின் தோற்றங்களில் ஒன்றான கிருஷ்ணர் அவதாரத்திற்கான நோக்கமும் காலமும் நிறை வடைந்து விட்டது. இதையடுத்து கிருஷ்ணர், அந்த அவதாரத்தில் இருந்து விலக, வைகுண்டம் சென்றார். அதன் பிறகு, துவாரகை நகரம் கடலில் மூழ்கியது. கிருஷ்ணரால் வடிவமைக்கப்பட்ட அவரது உருவத்திலான சிலை கடலில் மிதக்கத் தொடங்கியது.
கடலில் மிதந்த அந்தச் சிலையைக் கலியுகத்திலும் வழிபாட்டுக்கு உரியதாக மாற்ற வேண்டும் என்று விரும்பிய குரு பகவானும், வாயு பகவானும் அந்தச் சிலையை எடுத்துக் கொண்டு, அதை நிறுவச் சரியான இடத்தைத் தேடி அலைந்தனர். அப்போது, ஒரு குளக்கரையில் இறைவன் சிவபெருமான் அமர்ந்து தவம் இயற்றிக் கொண்டிருந்ததைக் கண்டனர்.
உடனே அவர்கள், தாங்கள் கொண்டு வந்திருந்த சிலையைச் சிவபெருமானுக்கு அருகில் வைத்துவிட்டு, அவரை வணங்கினர். அவர்கள் வந்ததை அறிந்த சிவபெருமான், அவர்களது விருப்பத்தையும் அறிந்தார். கிருஷ்ணர் கோவில்கொள்ள, தான் இருக்கும் இடமே சிறந்த இடம் என்று அவர்களிடம் தெரிவித்த சிவபெருமான், தானிருக்கும் இடத்தைக் கிருஷ்ணர் கோவில் கட்டுவதற்காக வழங்கினார். பின்னர், அங்கிருந்து சிறிது தொலைவில் தனக்கும் ஒரு கோவில் அமைத்துக் கொண்டார்.
சிவபெருமான் வழங்கிய இடத்தில் குருவும், வாயுவும் சேர்ந்து நிறுவிய கிருஷ்ணர் கோவில் இருக்கும் இடம் ‘குருவாயூர்’ ஆனது. தானிருந்த இடத்தை விட்டுக் கொடுத்த சிவபெருமானின் பெருமையைப் போற்றும் விதமாக, அவர் கோவில் கொண்ட இடம் ‘மகிமையூர்’ என்று பெயர் பெற்றது. பிற்காலத்தில் இது ‘மம்மியூர்’ என்று மாற்றம் கொண்டது என்று இக்கோவிலின் தல வரலாறு தெரிவிக்கப்படுகிறது.
கோவில் அமைப்பு
கேரளக் கட்டுமான முறையில் அமைந்த இக்கோவிலின் கருவறையில் சிவபெருமான் இடதுபுறத்தில் பார்வதி தேவியுடன் ‘உமா மகேஷ்வரர்’ ஆகக் காட்சி யளிக்கிறார். இங்கிருக்கும் சிவபெருமான் ‘மகா தேவர்’ என்றும், ‘மம்மியூரப்பன்’ என்றும் அழைக்கப்பெறுகிறார். அருகில் இருக்கும் மற்றொரு கருவறையில் மகாவிஷ்ணு இருக்கிறார். இக்கோவில் வளாகத்தில், கணபதி, சுப்பிரமணியர், சாஸ்தா, பகவதியம்மன் மற்றும் நாக தேவதைகளுக்கும் தனித்தனிச் சன்னிதிகள் இருக்கின்றன.
இக்கோவிலில் மகாதேவனுக்கும், மகாவிஷ்ணுவுக்கும் ஒரே நேரத்தில் வழிபாடு செய்யப்படுகிறது. இரு அர்ச்சகர்கள் தனித்தனியே இருவருக்கும் ஒரே நேரத்தில், ஒரே மாதிரியான வழிபாடு செய்வது இக்கோவிலில் மட்டும்தான் என்கின்றனர். இக்கோவிலில் நாள்தோறும் காலை 6.45 மணி முதல் 7.45 மணி வரை வேதங்களில் முதலாவதாகக் கருதப்படும் ரிக் வேதத்தில் இருந்து சொல்லப்பட்ட மந்திரச் சொற்களைக் கொண்டு ‘ரிக் வேத தாரை’ எனும் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. இவை தவிர, இங்கு சிவபெருமான், மகாவிஷ்ணு ஆகியோருக்கான சிறப்பு நாட்களில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. மலையாள நாட்காட்டியின்படி, கும்பம் (மாசி) மாதத்தில் மகா சிவராத்திரி விழாவும், மகரம் (தை) மாதத்தில் வரும் ரேவதி நட்சத்திர நாளில் இந்த ஆலயத்தில் மகாவிஷ்ணு சிலை நிறுவப்பட்ட நாள் விழாவும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. கன்னி (புரட்டாசி) மாதத்தில் வரும் நவராத்திரி விழாவில் சரஸ்வதி பூஜைக்கான நாளில், லலிதா சகஸ்ர நாம லட்சார்ச்சனை செய்யப்படுகிறது. விஜயதசமி நாளில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் ஐந்தாயிரத்துக்கும் அதிகமானக் குழந்தைகளைக் கொண்டு சங்கீதார்ச்சனை நிகழ்வு நடத்தப்பெறுகிறது. இந்நாளில் குழந்தைகளுக்கான கல்வி தொடக்கத்திற்கான சிறப்பு வழிபாடும் (வித்யாரம்பம்) நடத்தப் பெறுகின்றன.
விருச்சிகம் (கார்த்திகை) மாதம் முதல் நாளில் தொடங்கி 41 நாட்கள் நடைபெறும் ஐயப்பன் வழிபாட்டிற்கான மண்டல நாட்கள் மற்றும் கேரளாவில் ராமாயண மாதம் என்று அழைக்கப்படும் கர்க்கடகம் (ஆடி) மாதம் முழுவதும் சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுகின்றன. கணபதி சன்னிதியில் சிங்கம் (ஆவணி) மாதம் வரும் விநாயகர் சதுர்த்தி விழாவும், சுப்பிர மணியர் சன்னிதியில் துலாம் (ஐப்பசி) மாதம் வரும் பூசம் நட்சத்திர நாளில் சஷ்டி விழாவும், நாகர்கள் சன்னிதியில் கன்னி (புரட்டாசி) மாதம் வரும் ஆயில்யம் நட்சத்திர நாளில் ஆயில்ய வழிபாடும் சிறப்பு விழாக்களாக நடக்கின்றன.
இதே போல் தனு (மார்கழி) மாதம் திருவாதிரை நட்சத்திர நாளில் திருவாதிரைத் திருநாளிலும், சிங்கம் (ஆவணி) மாதத்தில் ரோகிணி நட்சத்திர நாளில் வரும் கோகுலாஷ்டமி எனப்படும் கிருஷ்ணர் தோற்ற நாளிலும், மேடம் (சித்திரை) மாதம் முதல் நாள் நடைபெறும் சித்திரை விசுத் திருநாளிலும் இக்கோவிலில் சிறப்பு விழாக்கள் நடத்தப்பெறுகின்றன. கேரள மாநிலம் முழுவதும் சிங்ஙம் (ஆவணி) மாதத்தில் விவ சாயிகள் இறைவனுக்கு நன்றி செலுத்தும் இல்லம் நிறா எனப்படும் நிறப்புத்தேரி விழா இங்கும் நடைபெறுகிறது. மேலும், சிவபெருமானுக்குரியதாகக் கருதப்படும் பிரதோஷ நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.
கலியுகம் தொடங்குவதற்கு முன்பே அமைந்த கோவில் என்று போற்றப்படும் இந்த ஆலயத்தில் தம்பதியர்களுக்கு இடையிலான கருத்து வேறுபாடுகளை நீக்கி ஒற்றுமை ஏற்படச் செய்யும் தம்பதியர் ஒற்றுமைக்கான வழிபாடு, குடும்ப அமைதி மற்றும் குறைவற்ற செல்வம் வேண்டிச் செய்யப்படும் ‘ஏகாதச ருத்ராபிஷேகம்’ எனும் வழிபாடு, திருமணத் தடை நீக்கத்திற்கான உமாமகேஸ்வர வழிபாடு, ராகு வழிபாடு, நாக வழிபாடு என்று பல சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இக்கோவிலில் 120 வகையான சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
குருவாயூர் சென்று குருவாயூரப்பனை வழிபடும் பக்தர்கள், குருவாயூர் கோவிலுக்கு அருகில் இருக்கும் இந்த மம்மியூர் மகாதேவர் கோவிலுக்கும் சென்று வழிபட வேண்டும். அப்போதுதான், குருவாயூர் கோவிலுக்கு வந்து குருவாயூரப்பனிடம் வேண்டிய பலனை முழுமையாகப் பெற முடியும் எனும் நம்பிக்கை இருப்பதால், இக்கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருந்து கொண்டிருக்கிறது.
மரங்களுக்குத் திருமணம்
1930-ம் ஆண்டு கோவிலில், சுவாமி சன்னிதியின் முன் நடப்பட்ட ஆலமரம் வளர்ந்து பெரியதாக இருந்தது. 1961-ம் ஆண்டு ஒரு பெண் இந்த ஆலமரத்துக்கு உபநயனம் நடத்தி, வேத மந்திர விதிமுறைப்படி எல்லாச் சடங்குகளையும் செய்து வைத்தார். பின்னர் ஆலமரத்தை ஒரு மணமகனாக நினைத்து, வேப்ப மரம் ஒன்றைப் மணப்பெண்ணாக நட்டு வைத்து, வேத மந்திரங்கள் சொல்லி, வாத்தியங்கள் முழங்க, இரண்டு மரங்களுக்கும் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது என்றும் சிலர் சொல்கின்றனர்.
இக்கோவிலில் காலை 5 மணி முதல் 12.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் தினசரி வழிபாடுகள் செய்யப்படுகின்றன.
அமைவிடம்
கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், குருவாயூர் நகரில், மம்மியூர் எனும் பகுதியில் அமைந்திருக்கும் இக்கோவிலுக்குச் செல்ல குருவாயூர் சென்றால் போதுமானது. அங்கிருந்து எளிதில் மம்மியூர் மகாதேவர் கோவிலுக்குச் செல்ல முடியும்.

கோவில்பட்டியில் சொர்ணமலை கதிர்வேல் முருகன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
‘குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்’ என்பார்கள். முற்காலத்தில் முருகன் ஆலயம் என்பது வேல் கோட்டமாகவே அமைந்திருந்தது. அதாவது வேல் அமைத்து வழிபடும் முறையே இருந்தது. காலப்போக்கில்தான் முருகப்பெருமானின் சிலைகளை வடித்து வைத்து வழிபடும் முறை வழக்கத்திற்கு வந்தது. ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழமுதிர்சோலையில் மூலவராக இருப்பது வேல்தான். சமீப காலத்தில்தான் வள்ளி - தெய்வானை சமேத முருகப்பெருமான் பிரதிஷ்டை ஆகியுள்ளார்.
திருப்பரங்குன்றத்தில் மூலவரான முருகப்பெருமான் குடவரையில் இருப்பதால், அவருக்குரிய அபிஷேகங்கள் அனைத்தும் அங்கிருக்கும் வேலுக்கே நடைபெறுகின்றன. அதேபோல தமிழகத்தின் தென்கோடியான கன்னியாகுமரியில் ‘முருகன் குன்றம்’ என்ற திருத்தலத்திலும், வடகோடியான சென்னை குரோம்பேட்டையில் ‘குமரன் குன்றம்’ என்ற திருத்தலத்திலும் மற்றும் மதுரை அருகிலுள்ள கோவில்பட்டி எனும் தலத்தில் உள்ள ‘சொர்ணமலை' எனும் திருத்தலத்திலும் மலைக்குன்றின் மீது வேல் வைத்து வழிபடும் வழக்கமே இருந்துள்ளது. காலப்போக்கில் இங்கெல்லாம் முருகனைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளனர்.
அதே நேரத்தில் இன்றளவும் ஆலயக் கருவறையில் முருகப்பெருமானுக்குப் பதிலாக வேலே மூலவராக வழிபடப்படும் திருக்கோவில்தான் கோவில்பட்டி சொர்ணமலை கதிரேசன் திருக்கோவிலாகும். இங்கு கருவறையில் மூலவராக முருகப்பெருமானின் கதிர்வேல் எனும் திருக்கைவேல் அமைந்துள்ளது.
கோவில்பட்டியில் இருந்து இலங்கைக்கு வணிகம் செய்யச் சென்ற முருகன் அடியவர் ஒருவர், இலங்கையில் உள்ள கதிர்காமம் முருகப்பெருமான் மீது மிகுந்த பக்தி உள்ளவர். கதிர்காமத்தில் வேல் வழிபாடே சிறப்பாக உள்ளது. ஆகவே கதிர்காமம் முருகனை நினைத்து, தானும் ஒரு வேல் வாங்கி வைத்து வழிபாடு செய்து வந்தார். ஒரு கட்டத்தில் இலங்கையில் இருந்து மீண்டும் தன்னுடைய சொந்த ஊருக்குத் திரும்ப நினைத்த அடியவருக்கு, கதிர்காமம் முருகப்பெருமானை பிரிவதை நினைத்து கவலையில் ஆழ்ந்தார்.
அவரது மனக்கவலையை போக்க எண்ணிய முருகப்பெருமான், அவர் வைத்திருந்த வேலுக்குள் தன்னை செலுத்தினார். பின்னர் அசரீரியாக, “அன்பனே! உன் பொருட்டு யாம் இந்த வேல் மூலம் உன் ஊருக்கு வருகிறேன். கதிர்காமத்தில் இருந்து பிடி மண் கொண்டு சென்று, அங்குள்ள மலைக்குன்றில் மூலவராக எமது இந்த திருக்கை வேல் வைத்து வழிபடு. உன் கவலை மட்டுமின்றி, என்னை வழிபடும் பிற அடியவர்களின் கவலையையும் நான் அகற்றுவேன்” என்று கூறி அருளினார்.
கோவில்பட்டிக்கு அந்த கதிர்காம கந்தனின் திருக்கை வேலுடன் திரும்பிய அந்த முருக பக்தர், பின்னாளில் இலங்கை கதிர்காமம் முருகப்பெருமான் கூறியபடி மலைக்குன்றில் ஆலயம் எழுப்பினார். அந்த கதிர்காம முருகன் திருக்கை வேல் தான் இங்கு மூலவராக உள்ளது சிறப்பு.
இத்தலத்தில் மாணிக்க விநாயகர், பழனி ஆண்டவர், பைரவர் சன்னிதிகளும் உள்ளன. கந்தசஷ்டி அன்று இந்த ஆலயத்திற்கு வந்து, ‘சத்ரு சம்கார வேல்’ என்ற பதிகத்தை ஆறு முறை பாராயணம் செய்து, மூலவரான கதிர்வேலை வழிபாடு செய்தால், பகை, பில்லி, சூனியம், வறுமை, தரித்திரம், உடல் மற்றும் மன நோய்கள் அகலும் என்கிறார்கள்.
சஷ்டி, கிருத்திகை, விசாகம், பூசம் நட்சத்திர நாட்களில் இத்தலம் வந்து கதிர்வேலுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து, சிவப்பு மலர்கள் கொண்டு இத்தல மூலவர் கதிர்வேல், மாணிக்க விநாயகர், பழனி ஆண்டவர், பைரவர் ஆகியோருக்கு அர்ச்சனை செய்து நெய் தீபம் ஏற்றி தொடர்ந்து 8 மாதம் வழிபாடு செய்து வந்தால், நம் எண்ணங்கள் யாவும் பூர்த்தியாகும். தொழில் விருத்தி உண்டாகும். குடும்ப பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். தீவினை, தீயவை, கர்மவினைகள் விலகும். இத்தலத்தில் வழிபட்டால் இலங்கை கதிர்காமம் முருகன் ஆலயத்தில் வழிபடுவதற்கு நிகரான பலன் கிடைக்கும்.
கிருத்திகை நட்சத்திர நாள் அன்று இந்த வேலுக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. இந்த அன்னப் பிரசாதத்தை மகப்பேறுக்காக ஏங்கும் பெண்கள் உட்கொண்டால், அடுத்த வருடமே குழந்தைப் பேறு கிடைக்கும் என்பதற்கு பலர் சாட்சியாக நிற்கின்றனர். மறு வருடமே குழந்தைப் பேறு கிடைக்கப் பெற்றவர்கள், தங்கள் குழந்தையோடு இத்தலம் வந்து முருகனுக்கு நன்றிக் கடன் செலுத்திச் செல்கிறார்கள்.
இங்குள்ள மலையே ‘கதிரேசன் மலை’ என்றுதான் அழைக்கப்படுகிறது. தொழில் முனைவோர்கள், செவ்வாய்க்கிழமைகளில் இங்கு வந்து வேலுக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி, செவ்வரளி மாலை அணிவித்து, நெய்தீபம் ஏற்றி வழிபட்டால், வெகு விரைவில் தொழில் அபிவிருத்தி காணலாம் என்பது நம்பிக்கை. இதனால் இந்த மலையை ‘சொர்ண மலை’ என்றும் அழைக்கிறார்கள். மாதம் தோறும் இங்கு சொர்ணமலையை சுற்றி கிரிவலம் நடக்கிறது. கிரிவலம் வரும் வழியில் ‘ஒளி குகை’ என்ற குகையின் வாசல் உள்ளது. அங்கு சித்தர்கள் பலர் தவம் இருந்து வருவதாக கூறுகிறார்கள். அவர்களின் தவத்தை கலைக்கக்கூடாது என்பதற்காக, யாரும் அங்கு செல்வதில்லை.
திருக்கார்த்திகை தீப திருநாள் இங்கு சிறப்பு. அன்றைய தினம் சொர்ணமலை குன்றில் ‘திருக்கார்த்திகை தீபம்' ஏற்றுகிறார்கள்.
அமைவிடம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் சொர்ணமலை கதிர்வேல் முருகன் திருக்கோவில் அமைந்துள்ளது. கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் சமேத பூவனநாத சுவாமி ஆலயத்துடன் இணைந்த கோவில் இதுவாகும்.
சிவ.அ.விஜய் பெரியசுவாமி

நெல்லை என்.ஜி.ஓ காலனியில் ஒய்யாரமாய் ஸ்ரீகுபேர சாய்பாபா அருள்புரிகிறார். இந்த கோவில் தோன்றிய வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
நெல்லை மாவட்டம், ரெட்டியார்பட்டி மிகவும் பிரசித்தி பெற்ற பழமையான ஊர். திருநெல்வேலி புதிய பேருந்து நிலையமும், சென்னை - கன்னியாகுமரி நான்குவழிச்சாலையும் உதயமான பிறகு, இவ்வூர் மிகப்பெரிய நகரமாக மாறிவிட்டது. நெல்லை என்.ஜி.ஓ காலனி இதோடு இணைந்து மேன்மை பெற்றுவிட்டது. இவ்வூரில் தான் மிக ஒய்யாரமாய் ஸ்ரீகுபேர சாய்பாபா அருள்புரிகிறார்.
ரெட்டியார்பட்டியில் விஜயரங்கன் ரெட்டியார்- பார்வதி அம்மாள் மகனாக பிறந்தவர் தோத்தாரி. சிறு வயதிலே சுறுசுறுப்பாய் விளங்கிய இவரை ஆரம்பகல்வி பயில ரெட்டியார்பட்டி அரசு துவக்கப்பள்ளியில் சேர்த்தனர். கல்வி கற்று முடிக்கும் முன்பே வறுமை இவரை விரட்டியது. எனவே வேலை தேடி சென்னை மாநகருக்கு 1957-ல் இடம் பெயர் பெயர்ந்தார்.
அங்கு சென்றவர் 8 வருடமாக ஹோட்டல் கூலி தொழிலாளியாக பணியாற்றினார். காலங்கள் செல்ல செல்ல இவருக்கு சொந்த தொழில் செய்ய வேண்டும் என எண்ணங்கள் தோன்றியது. எனவே நாரயணன் என்பவரோடு இணைந்து சென்னை திருநெல்வேலி அல்வா கடை நடத்தி வந்தார். கோடம்பாக்கத்தில் முதலில் தொழில் நடத்தியவர், அதன் பின் தனது வியாபாரத்தினை அயனாபுரத்திற்கு விரிவாக்கம் செய்தார். அதன் பின் தான் தனியாக ஹோட்டல் தொழிலை ஆரம்பித்தார்.
1980-ல் அண்ணாநகர் பகுதியில் பார்வதி பவன் என்ற கடையை ஆரம்பித்தார். இவரது தாயார் பெயர் பார்வதி, இவரை மணம்முடித்த தாரத்திற்கும் பார்வதி என்றே பெயர். எனவே தான் இந்த பெயரை தனது கடைக்கு வைத்தார். இந்த கடை மிகச்சிறப்பாக நடந்த காரணத்தினால் தொடர்ந்து சாலிகிராமத்தில் பார்வதி பவன் கிளை துவங்கியது.
இந்த கடைகள் முதலில் சுவிட் கடையாக துவங்கி அதன் பின் பெரிய ஹோட்டலாக உருவெடுத்தது. பெரும்பாலுமே திருநெல்வேலி ரெட்டியார்கள் ஹோட்டலில் முன்னணியில் திகழ்பவர்கள். அதுபோலவே இவரும் திகழ்ந்தார். இவரது வாழ்க்கை மேன்மை அடைந்தது. தனது தேவைகளை எல்லாம் நன்றாக பூர்த்தி செய்து கொண்டார். குடும்பத்தினரும் மேன்மை அடைந்தனர். ஆனால் அவருக்கு மெட்ரோ ரயில் ரூபத்தில் பிரச்சனை வந்தது. மெட்ரோ ரயில் பணி நடைபெறும்போது இவரது கடையை மூடும் சூழ்நிலை ஏற்பட்டது. ஆனாலும் தான் சொந்தமாக வாங்கி வைத்திருந்த விருகம்பாக்கம் பகுதியில் கடை வைக்க முயற்சி செய்தார்.
ஆனால் இவருக்கு கடனோ அதிகரித்தது. 2009-10ஆம் ஆண்டு வங்கியில் இவர் வாங்கிய கடன் 3 கோடி ரூபாயாக உயர்ந்தது. அதோடு மட்டுமல்லாமல் உடல் நிலையும் பாதிக்கப்பட்டது. இவருக்கு கல்லீரல் பாதிக்கப்பட்டு, மஞ்சள் காமாலை நோய் அதிகரித்தது. அதோடு மட்டுமல்லாமல் இவர் வாங்கிய கடன் வட்டியோடு சேர்ந்து 8 கோடியை தாண்டி விட்டது. என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தார் தோத்தாரி
இந்த சமயத்தில் தான் சாய் வரதராஜன் என்ற சாய் பக்தரை கண்டார். அவரை தனது குருஜியாகவே ஏற்றுக் கொண்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூட்டு பிரத்தனை நடந்து கொண்டிருந்தது. ஞாயிற்று கிழமை தோறும் நடக்கும் நடைபெற்ற வழிபாட்டில் தானும் கலந்துகொண்டார். கொஞ்சம் கொஞ்சமாக உடல் நிலை அவருக்கு தேறியது. கல்லீரல் பிரச்சினை தீர்ந்தது. அதோடு மட்டுமல்லாமல் மஞ்சள் காமலையும் அகன்றது. புது மனிதனாக அவதாரமெடுத்தார் தோத்தாரி. பாபாவுடைய மகிமையை தோத்தாரி உணர்ந்தார். அதன் பிறகு பாபாவே கதி என கிடக்க ஆரம்பித்தார்.
குருஜியை தேடி வந்தார், அவருடன் பாபாவை வணங்கி நின்றார். கூட்டுப் பிராத்தனைகளில் தவறாது கலந்து கொண்டார். சாதரண பக்தராகவே இருந்து தனது வாழ்நாள் முழுவதும் தொண்டு செய்து விட வேண்டும் என நினைத்தவரை பாபா விடவில்லை. நோய் தீர்ந்தாலும் கடன் தீரவில்லை.
எனவே பாபாவிடம் தினமும் பிராத்தனை வைத்துவந்தார். என்ன ஆச்சரியம். ஒருநாள் வங்கி கடன் கொடுத்தவர்களே எதிர்பாரத விதமாக 65 லட்ச ரூபாய் கூடுதலாக கடன் கொடுத்து ஹோட்டல் பணியை துவங்க ஏற்பாடு செய்தனர். பாபாவின் அருளை, அவரின் அருட்கொடையில் தன்னையே மறந்த அவர் தொழிலை தொடர்ந்து செய்தார். பாபா பிரார்த்தனையையும் விட வில்லை.
தொடர்ந்த தொழில் செய்தாலும் கூட, வாங்கப்பட்ட கடன் அடைப்படவில்லை. எனவே சொத்தை விற்று, கடனை அடைத்து விடலாம் என்று ஏற்பாடு செய்தார். பல்வேறு பிரச்சனைக்கிடையில் சொத்தும் விற்ககப்படவில்லை. தொடர்ந்து பல போராட்டங்கள். எல்லாம் சாய்பாபா அருள் என்று நினைத்துக்கொண்டே தனது வேலைகளை தொடர்ந்து கொண்டிருந்தார். மேலும் ஒரு அருள் பாபாவின் சிலை வடிவில் வந்து சேர்ந்தது.
2014-ம் ஆண்டு கீரப்பாக்கம் மலையில் சீரடி சாய்பாபா கோயில் கட்டுவதற்கு ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது. அதற்காக 18 ஆயிரம் செலவில் சீரடியில் இருந்து இரண்டு சாய்பாபா விக்ரகம் அவரது குருஜி ஏற்பாடில் கொண்டு வரப்பட்டது. 5.06.2014-ம் நாள் எதிர்பாரத விதமாக சாலிகிராமம் ஹோட்டல் முன்பு கிரேனில் வந்த சாய்பாபா சிலை இறக்கப்பட்டது.
அவருக்கு தீபாரதனை காட்டி வைத்து விட்டு சென்றார்கள். ஆனால் அவரை அங்கே பிரதிஷ்டை செய்வார்கள் என அப்போது கூட யாரும் நினைக்கவில்லை. ஆனால் சாய்பாபா வேறு மாதிரி நினைத்து விட்டார். அவர் இங்கேயே அமர்ந்து அருள் பாலிக்க முடிவு செய்தார். எனவே 11.07.2014 அன்று பாபாவை அவ்விடத்திலேயே பிரதிஷ்டை செய்து கும்பாபிசேகம் நடத்தினார் தோத்தாரி. அதன் பிறகு அங்கு அவரின் அருளாட்சி தொடர ஆரம்பித்து. ஆனாலும் சாய்பாபா தோத்தாரியை விட வில்லை.
தனது சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியார் பட்டியில் தனது குல தெய்வமான பர்வத வர்த்தினி, தளவாய் மாடசாமிக்கு 50 வருடம் கழித்து கும்பாபிசேகம் வேலை நடக்க ஆயத்தமானது. இந்த பணியை தலைமை தாங்கி நடத்தும் பாக்கியம் தோத்தாரிக்கு கிடைத்தது. அந்த பணியை சிறப்பாக முடிப்பதற்காக ஊருக்கு வந்தவருக்கு சொந்த ஊரில் தனக்கு நிலம் இல்லையே என எண்ணம் பிறந்தது. அதன் பயனாக தற்போது அரசு மேல்நிலைப்பள்ளி உள்ள இடத்தின் அருகே 2000 சதுர அடி நிலத்தினை வாங்கினார்.
அந்த சமயத்தில் நமக்கு அருள்பாலிக்கும் சாய்பாபா நமது ஊரில் அருள்பாலித்தால் என்ன என எண்ணத்தோன்றியது. எனவே தான் வாங்கிபோட்டிருக்கும் இடத்தில் சாய்பாபா கோயில் கட்ட திட்டமிட்டார். ஆனால் சாய்பாபா பெரியவர். தனக்கு என்று தனி இடத்தினைதேர்வு செய்தார். அதை குறிப்பாலும் காட்டினார். எனவே சாய்பாபா சுட்டி காட்டிய நண்பர் இடத்தினை விலைக்கு வாங்கி அதில் கோயிலை கட்ட ஆரம்பித்தார். அதற்காக ரெட்டியார் பட்டியில் சீரடி ஸ்ரீ சாய்ராம பிரத்தனை மையத்தினை உருவாக்கினார் தோத்தாரி.
இந்த கோயில் மிக பிரமாண்டமாக உருவாகி விட்டது. உள் பக்கம் முழுவதும் வேலை முடிந்தாலும் கூட வெளி பக்கம் வேலை முடியாமல் தான் உள்ளது. ஆனாலும் பிராத்தனை ஆரம்பித்து விட்டது. மக்கள் வரவு அதிகரித்துவிட்டது. பக்தர்களின் பங்களிப்புடன் வேலைகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது.
கோயிலுக்குள் நுழைகிறோம் இளவயது சாய்பாபா குருஸ்தானை வணங்கி விட்டுதான் கோயிலுக்குள் செல்லவேண்டும். அருகில் உள்ள ராகுகேது விநாயகரை வணங்கி விட்டு மாடியேறுகிறோம். அங்கே துவாரக மாயி உள்ளது. எப்போதுமே இங்கு நெருப்பு எரிந்து கொண்டே இருக்கிறது. சாய்பாபா ஷீரடியில் அமர்ந்து அருள்பாலித்த அதே துவாரக மாயி இங்கும் அமைந்துள்ளது. அந்த இடத்தினை சுற்றி வணங்கிவிட்டு உள்ளே நுழைகிறோம்.
உள்ளே குபேர சாய்பாபா நம்மை ஆதரவு கரம் நீட்டி புன்னகையாக வரவேற்கிறார். அது மட்டுமல்லாமல் உள்ளே நுழைந்து, ஸ்ரீநிதி விநாயகர் அவரை சுற்றி வணங்கி வருகிறோம். சுற்றி வந்து சாய்பாபா பாதத்தினை தரிசிக்கிறோம். தொடர்ந்து சுற்றி வந்து முன்பக்கமாக நின்று சாய்பாபாவை வணங்கி நிற்கிறோம். அருளையும் அள்ளி தரும் சாய்பாபா நம்மை நோக்கி ஸ்ரீகுபேர சாயி பாபா பார்வையிட்டு அருளை அள்ளி அள்ளி தருகிறார். தொடர்ந்து சுற்றி வருகிறோம்.
தாத்தாரேயர் தனி சன்னிதியில் அமைந்துள்ளார். அருகில் சாய்பாபாவின் இஷ்ட தெய்வமான பாண்டுரெங்கர் ருக்குமணி அம்மையோடு அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் வியாழக்கிழமை தோறும் கூட்டு பிரார்த்தனை நடைபெறுகிறது. இதில் நூற்றுகணக்கான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். குழந்தை வரம், திருமணம், விவசாயம் செழிக்க, வியபாரம் கொழிக்க, தீராத வழக்குகள் தீர, பணி உயர்வு பெற மண குழப்பம் தீர, தேர்ச்சி முடிவடைய இங்கு பிரார்த்தனை நடைபெறுகிறது.
தினப்படி பூஜைகள் மற்றும் நிர்வாக செலவு வகைக்கு மாதந்திர உபயதாரர்கள் வரவேற்றக் கப்படுகிறார்கள். மாதம் ஒன்றுக்கு ரூ500, ரூ1000 கட்டி உபயதார்கள் தாங்கள் விரும்பிய நாள்களில் தங்கள் குடும்ப கோத்திரம் நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்து கொள்ளலாம். அவர்களுக்கு பாபாவிற்கு அணுவிக்கப்பட்ட வஸ்திரம், பிரசாதம் வழங்கி திருக்கோவில் சார்பாக மரியாதை செய்யப்படுகிறது.
நெல்லை புது பஸ் நிலையத்தில் இருந்து மூலைக்கரைப்பட்டி செல்லும் சாலையில் 5 கிலோ மீட்டரில் ரெட்டியார் பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் கோயில் உள்ளது.
தொடர்பு எண் :- குமரகுரு 7708077729
தகவல்:- முத்தலாங்குறிச்சி காமராசு.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகில் சுண்டக்காய்பட்டி என்ற கிராமத்தில் மலை மேல் அமைந்துள்ளது, கந்தர்மலை என்ற முருகன் கோவில்.
இந்த உலகத்தில் எத்தனையோ முருகன் திருத்தலங்கள் மக்களுக்காக அருளாசி வழங்கி வருகின்றன. அவற்றுள் நமக்கு தெரியாமல் எத்தனையோ அதிசயங்களும், அற்புதங்களும் நிகழ்ந்து கொண்டிருக்கும் முருகன் தலங்களும் இருக்கத்தான் செய்கின்றன. அப்படிப்பட்ட முருகன் ஆலயங்களில் ஒன்றுதான் ‘கந்தர்மலை.’
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகில் சுண்டக்காய்பட்டி என்ற கிராமத்தில் மலை மேல் அமைந்துள்ளது, கந்தர்மலை என்ற முருகன் கோவில். இந்த மலையின் மீது சித்தர்கள் வாழ்ந்து வருவதாக இன்றளவும் ஒரு நம்பிக்கை இருக்கிறது. ஏறத்தாழ 750 அடி உயரத்தில் அமைந்துள்ள கந்தர் மலை முருகனை தரிசிக்க, 250 படிகள் ஏறிச்செல்ல வேண்டும்.
சித்தர்கள் இங்கு வாழ்ந்திருக்கிறார்கள் என்பதன் அடையாளமாக, மலை மீது உள்ள குகைக்குள், அதிகமான ருத்ராட்ச மணிகள் கிடைத்திருக்கின்றன. இங்கு ‘வள்ளி குளம்’ என்று ஒரு குளம் இருக்கிறது. இந்தக் குளத்தின் மேல் சூரிய ஒளி, சந்திர ஒளி படுவதில்லை. இந்த குளத்து நீரை எடுத்து பருகினால் தீராத நோய்கள் தீர்ந்துவிடும் என்பதும், பக்தர்களின் உறுதியான நம்பிக்கையாக இருக்கிறது.
இதற்கு ஒரு கதையும் சொல்லப்படுகிறது. ஒரு முறை கானகத்தில் முருகனோடு இருந்த வள்ளியம்மைக்கு திடீரென்று விக்கல் ஏற்பட்டது. அதை நிறுத்த ஏதாவது வழி சொல்லும்படி வள்ளியம்மை, முருகப்பெருமானிடம் வேண்டினாள்.
உடனே முருகப்பெருமான் “எந்தக் குளத்தில் சூரிய ஒளியும், சந்திர ஒளியும் படவில்லையோ, அந்த குளத்தில் இருந்து நீர் எடுத்து பருகினால் விக்கல் நின்றுவிடும்” என்று கூறினார்.
இதையடுத்து வள்ளியம்மை இந்த கந்தர் மலை குளத்தில் நீர் எடுத்து பருகியதும், விக்கல் நின்று விட்டதாக செவி வழிக் கதை ஒன்றை சொல்கிறார்கள்.
வள்ளியின் தாகம் தீர்த்த மலைக்குகையில் அற்புத சித்தர்கள் அமர்ந்து தியானம் செய்திருக்கிறார்கள். அரிய வகை நாகங்களும் இங்கே அதிகமாக இருந்ததாக சொல்கிறார்கள். இன்றளவும் சித்தர்களும், நாகங்களும் அரூபமாக இங்கே நடமாடிக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது.
இந்த குகைக் குளத்தில் உள்ள தண்ணீரை பக்தர்கள் வீட்டிற்கு எடுத்துச்சென்று தெளித்தால், சகல தோஷங்களும் நீங்கும். கந்தர்மலை வேல்முருகனை வணங்கினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமண தடை நீங்கும். வியாபாரம் விருத்தியாகும். நோய் நொடிகள் அகலும். தீவினைகள் விலகி ஓடும். என்ன வேண்டுதல் வைத்தாலும் அதை உடனடியாக நிறைவேற்றுவார் ‘கந்தர்மலை வேல்முருகன்’ என்பது பக்தர்களின் நம்பிக்கை.
கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக விளங்கும் கந்தப்பெருமான், இந்த கந்தர் மலையில் அருளும் ஆசியும் வழங்கி வருகிறார். இந்த திருத்தலத்தில் பங்குனி உத்திரம், ஆடிக் கிருத்திகை, வைகாசி விசாகம் உள்ளிட்ட அனைத்து முருகப்பெருமானுக்குரிய விழாக்களும் வெகு விமரிசையாக நடைபெறுகின்றன. பங்குனி உத்திர விழாவின்போது நடக்கும் வள்ளி - தெய்வானை திருக்கல்யாண விழாவும் மிகவும் பிரசித்தி பெற்றது. முகூர்த்த நாட்களில் நூற்றுக்கணக்கான திருமணங்கள், கந்தர்மலையில் நடக்கிறது. கந்தர்மலை வேல்முருகனை தரிசிக்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமன்றி, பெங்களூரு, புதுச்சேரியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
அமைவிடம்
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தில் இருந்து சுமார் 27 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சுண்டக்காய்பட்டி என்ற ஊர். காவேரிப்பட்டினத்தில் இருந்து பஸ் வசதிகள் உள்ளன.
அறந்தாங்கி சங்கர்

தமிழகத்தில் உள்ள குரு பகவான் அருள்பாலிக்கும் புகழ்பெற்ற சிறப்பு தலங்களில் சிலவற்றை இங்கே விரிவாக பார்க்கலாம்.
நவக்கிரகங்களில் சுபக்கிரகம் என்று அழைக்கப்படுபவர், குரு பகவான். இவர் ஆண்டுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்கிறார். இந்த ஆண்டு வருகிற 28-ந் தேதி (திங்கட்கிழமை) விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடம் பெயர்கிறார். குரு பகவான் இருக்கும் இடத்தை விட அவரது பார்வை பதியும் இடங்களுக்கு நன்மைகளை வாரி வழங்குவார் என்பது ஜோதிட சாஸ்திரம் சொல்லும் செய்தி.
குரு பெயர்ச்சி நாளன்று உங்களுக்கு அருகில் உள்ள குரு பரிகார தலங்களுக்கு சென்று குரு பகவானை வணங்கி வரலாம். வியாழ பகவானுக்குரிய நாளாகிய வியாழக்கிழமையில் விரதம் இருந்து பரிகாரம் செய்யலாம். அன்றையதினம் அதிகாலையில் நீராடி மஞ்சள் நிற ஆடை அணிந்து, புஷ்பராக மோதிரம் அணிந்து குரு பகவானை வழிபட வேண்டும். குரு பகவானுக்கு மஞ்சள் நிற ஆடையும், சரக்கொன்றை மற்றும் முல்லை மலர்களும் கொண்டு அலங்கரிக்க வேண்டும். கடலைப்பொடி சாதம், வேர்க்கடலைச் சுண்டல், பருப்பு கலந்த இனிப்பு பொங்கல் ஆகியவற்றை நைவேத்தியமாக படைத்து வழிபாடு செய்ய வேண்டும். இந்த வழிபாட்டில் முடிவில் மற்றவர்களுக்கு தானம் செய்தல் அவசியம். மஞ்சள் நிற ஆடையை தானமாக கொடுக்கலாம். அதே போல் கடலை, சர்க்கரை கலந்து குருவுக்கு நைவேத்தியம் செய்து குழந்தைகளுக்கு தானம் செய்வதும் சிறப்பு தரும்.
தமிழகத்தில் உள்ள குரு பகவான் அருள்பாலிக்கும் புகழ்பெற்ற சிறப்பு தலங்களில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.
குருவித்துறை
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகில் உள்ளது, குருவித்துறை. இங்கு சித்திர ரத வல்லப பெருமாள் கோவிலில், ஒரே சன்னிதியில் குருபகவானும், சக்கரத்தாழ்வாரும் சுயம்பு மூர்த்திகளாகக் காட்சி தருகின்றனர். அசுர குருவான சுக்ராச்சாரியார், இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் மிருத சஞ்சீவினி மந்திரம் கற்றிருந்தார். இதனால் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் யுத்தம் நடக்கும்போது, அவர் எளிதாக அசுரர்களை உயிர்ப்பித்தார். அந்த மந்திரத்தை கற்க விரும்பிய தேவர்கள், தங்கள் படையில் இருந்து ஒருவரை சுக்ராச்சாரியாரிடம் அனுப்ப முடிவு செய்தனர். தேவகுரு பிரகஸ்பதியின் (வியாழன்) மகன் கசன், அந்த மந்திரத்தை கற்று வருவதாகச் சொன்னான்.
அதன்படி சுக்ராச்சாரியாரிடம் சென்றவன், அவரது மகள் தேவயானியிடம் அன்பு செலுத்துவது போல நடித்து, அவரிடம் மந்திரத்தைக் கற்று வந்தான். கசன், தேவகுலத்தைச் சேர்ந்தவன் என்பதை அறிந்த அசுரர்கள், அவனை எரித்து சாம்பலாக்கி, சுக்ராச்சாரியார் பருகிய பானத்தில் கலந்து கொடுத்துவிட்டனர். கசனைக் காணாத தேவயானி, தந்தையிடம் அவனைக் கண்டுபிடித்துத் தரும்படி வேண்டினாள். சுக்ராச்சாரியார் அவனை உயிர்ப்பித்தார். மகனைக் காணாத குரு பகவான், அவனை அசுர லோகத்தில் இருந்து மீட்டு வர அருளும்படி, இங்கு பெருமாளை வேண்டி தவமிருந்தார். சுவாமி, சக்கரத்தாழ்வாரை அனுப்பி கசனை மீட்டு வந்தார். குரு பகவானுக்கு அருளிய பெருமாள், இங்கே எழுந்தருளியுள்ளார்.
பாடி திருவலிதாயம்
சென்னைக்கு அருகே பாடி திருவலிதாயத்தில் அமைந்துள்ள வலிதாயநாதர் கோவில் குரு பகவான் வழிபட்ட தலமாகும். வியாழ பகவான், தான் செய்த ஒரு தவறால் தனது சகோதரரின் மனைவி மேனகையிடம் சாபம் பெற்றார். இதற்கு விமோசனம் கிடைக்க மார்க்கண்டேய மகரிஷியின் உதவியை நாடினார். அவரது ஆலோசனைப்படி, இத்தலத்து சிவனை வணங்கினார். அவருக்கு காட்சி தந்த சிவன், சாப விமோசனம் கொடுத்தருளினார். குருவுக்கு இங்கு சன்னிதி உள்ளது. இவர் சிவனை வணங்கும் வகையில் மேற்கு நோக்கி இருப்பது சிறப்பான அமைப்பு.
தென்குடி திட்டை
திட்டை திருத்தலம், தஞ்சாவூரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் ‘வசிஷ்டேஸ்வரர்’ என்ற பெயருடன் இறைவன் பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார். இறைவியின் நாமம் ‘மங்களாம்பிகை’ என்பதாகும். இறைவனுக்கும், இறைவிக்கும் நடுவில் குருபகவான் சன்னிதி இருக்கிறது. இந்த குருவானவர், நின்ற நிலையில் ராஜ குருவாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இது வேறு எந்த தலத்தில் காண முடியாத தனிச்சிறப்பாகும்.
திருச்செந்தூர்
குரு பகவானுக்குரிய தலங்களில் பிரதான இடம் பெறுவது திருச்செந்தூர். இது முருகப்பெருமானுக்குரிய ஆறுபடைவீடுகளில் இரண்டாம் படைவீடாகும். தேவர்களைக் காப்பாற்றும் பொருட்டு, அசுரர்களுடன் போரிடுவதற்காக முருகப்பெருமான், இத்தலம் வந்தார். அப்போது இங்கு வைத்து, தேவர்களின் குருவான பிரகஸ்பதி, அசுரர்களைப் பற்றியும், அவர்களின் குணம் பற்றியும் முருகனுக்கு எடுத்துரைத்தார். இதனால், இத்தலம் குரு தலமாகக் கருதப்படுகிறது. இங்கு அருள்பாலிக்கும் மேதா தட்சிணாமூர்த்தி விசேஷமானவர். இவர், கூர்மம் (ஆமை), அஷ்ட நாகம், அஷ்ட யானைகளுடன் கூடிய பீடத்தின் மீது அமர்ந்து காட்சி தருகிறார். இவரது வலது கையில் சிவபெருமானுக்குரிய ஆயுதமான மழுவும், இடக்கையில் மானும் உள்ளது. இவருக்குப் பின்புறமுள்ள கல்லால மரத்தில் நான்கு வேதங்களும், கிளி வடிவில் காணப்படுகின்றன. தட்சிணாமூர்த்தியின் இத்தகைய அமைப்பை வேறெங்கும் காண முடியாது. குரு தோஷம் உள்ளவர்கள், குரு பரிகாரம் செய்ய வேண்டியவர்கள் அவசியம் ஒரு முறையாவது சென்று வரவேண்டிய தலம் இது.
அகரம் கோவிந்தவாடி
காஞ்சிபுரத்தில் இருந்து அரக்கோணம் செல்லும் சாலையில் உள்ளது கம்மவார்பாளையம். இந்த பேருந்து நிறுத்தத்தில் இறங்கி அகரம் கோவிந்தவாடி கோவிலுக்குச் செல்லலாம். இத்தலத்தில் தட்சிணாமூர்த்தியே, குருவாக அருளாட்சி புரிகிறார். இது சிறந்த குரு பரிகாரத் தலமாக திகழ்கிறது. இங்குள்ள தட்சிணாமூர்த்தி, ‘வியாக்யான தட்சிணாமூர்த்தி’ என்று அழைக்கப்படுகிறார்.
பட்டமங்கலம்
சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலத்தில், கிழக்கு நோக்கியபடி அனுக்கிரக தட்சிணாமூர்த்தி அருள்கிறார். இவரது சன்னிதிக்குப் பின்புறம் படர்ந்து விரிந்த பெரிய ஆலமரம் உள்ளது. பக்தர்கள் இம்மரத்தையும் சேர்த்து வலம் வரும் வகையில் சன்னிதி அமைந்துள்ளது. இவரது சன்னிதி முன் மண்டபத்தில் ராசிக் கட்டம் உள்ளது. இத்தலத்தில் தட்சிணாமூர்த்தியே பிரதானம் என்பதால், பக்தர்கள் முதலில் இவரையே தரிசிக்கிறார்கள். வியாழக்கிழமை குரு ஓரை நேரத்தில் (மதியம் 1 - 2 மணி), இவருக்கு விசேஷ அபிஷேகத்துடன் பூஜை நடக்கும். மதுரையில் இருந்து 65 கிலோமீட்டர், திருச்சியில் இருந்து புதுக்கோட்டை வழியாக 90 கிலோமீட்டர் தூரத்தில் திருப்புத்தூர் என்ற ஊர் உள்ளது. இங்கிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் பட்டமங்கலம் திருத்தலம் இருக்கிறது.
தக்கோலம்
வேலூர் மாவட்டத்தில் அரக்கோணத்தில் இருந்து பேரம்பாக்கம் செல்லும் வழியில் தக்கோலம் உள்ளது. இங்கு வலது காலைத் தரையில் ஊன்றி, இடது காலை மடித்து அமர்ந்தபடி குரு பகவான் வீற்றிருக்கிறார். இவர் தன்னுடைய தலையை சற்றே வலதுபுறம் சாய்த்த நிலையில் உத்கடி ஆசனத்தில் அமர்ந்த கோலத்தில் அருள்கிறார். இவரை வழிபட்டால் தோஷங்கள் அனைத்தும் விலகும்.

மத்தியமாகேஸ்வர் கோவில் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள தர்வால் இமயமலையின் மன்சூனா கிராமத்தில் அமைந்துள்ளது.
தென்னாடுடைய சிவன், எந்நாட்டவருக்கும் இறைவனாகிய சிவபெருமான், மும்மூர்த்திகளில் ஒருவர் என்றும், மூவரும் அவரே என்னும் தத்துவத்தையும் சைவ சித்தாந்தம் கூறுகிறது. ‘சிவம்’ என்ற சொல்லுக்கு செம்மை (பூரணத்துவம்), மங்களமானது என்று பொருள். மங்களகரமானவராகவும் தன்னை சார்ந்தவர்களை மங்களகரமாக வாழ வைப்பவருமான இறைவனை போற்றி துதித்து, நாம் பல காரியங்களில் வெற்றி காண்கிறோம்.
தென்னாட்டில் சிவபெருமானின் வீரம் வெளிப்பட்ட இடங்களை ‘அட்ட வீராட்டான தலங்கள்’ என்று அழைப்பாா்கள். அதைப்போல வடநாட்டில் சிவபெருமானின் ‘பஞ்சகேதரா தலங்கள்’ பிரசித்திப் பெற்றவை. இந்த திருத்தலங்கள் அனைத்தும் மகாபாரதத்துடன் தொடர்புபடுத்திக் கூறப்படுபவையாகும்.
தல புராணம் :
பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் இடையே நடந்த மகாபாரதப் போரில் பாண்டவர்கள் வெற்றி பெற்றனர். அந்தப் போரில் பாண்டவர்கள் தங்கள் உறவினர்களான கவுரவர்களை கொன்ற பிறகு ஏற்பட்ட பாவத்தை போக்கிக்கொள்ள ஆலோசனைக்கு கிருஷ்ணனை அனுகினர். அவரின் ஆலோசனையின் பேரில் சிவபெருமானை சந்தித்து பாவத்தை போக்கிக் கொள்ள முடிவுசெய்தனர். அதன்படி அவர்கள் பல்வேறு இடங்களில் சிவபெருமனை தேடினர். எங்கு தேடியும் ஈசனைக் காண முடியவில்லை.
சிவபெருமனை தரிசிக்காமல் திரும்புவது இல்லை என்ற உறுதி ஏற்றுக்கொண்ட பாண்டவர்கள், குப்த காசியில் இருந்து இமயமலை பள்ளத்தாக்கில் இருக்கும் கவுரி குண்ட் என்ற இடத்தை அடைந்தனர்.
குருசேத்திரப் போரில் பாண்டவர்களின் நடத்தையால் கோபம் கொண்ட சிவபெருமான், அவர்களைக் காண்பதை தவிர்ப்பதற்காக நந்தி வடிவம் எடுத்து ஓரிடத்தில் இருந்தார். அவர் இமயமலை கர்வால் பகுதியில் தன்னை மறைத்துக் கொண்டு தவத்தில் ஆழ்ந்திருந்தார்.
ஆனால் மன உறுதியோடு போராடிய பாண்டவர்கள், குப்தகாசியின் மலைப்பகுதியில் மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த காளை வடிவத்தில் ஈசனைப் பார்த்து, அவரை அறிந்து கொண்டனர். காளை வடிவில் இருந்த ஈசனின் வால் மற்றும் பின்னங்கால்களை வலுக்கட்டாயமாக பிடிக்க முற்பட்டனர். ஆனால் சிவபெருமான் ஐந்து இடங்களில் மீண்டும் தோன்றுவதற்காக தன்னை தரையில் மறைத்துக்கொண்டார். கேதார்நாத்தில் ஒரு கூம்பின் வடிவத்திலும், துங்நாத்தில் கைகள் வடிவத்திலும், ருத்ரநாத்தில் முகம் வடிவிலும், மத்தியமாகேஸ்வரில் வயிறு மற்றும் அவரது நபி (தொப்புள்)யாகவும், கல்பேஷ்வரில் ஜடா என்று அழைக்கப்படும் தலைமுடி வடிவிலும் உள்ளது.
சிவனின் தெய்வீக வடிவமாகக் கருதப்பட்டு, இந்த கோவில்கள் வழிபடப்படுகிறது. இந்த ஆலயங்கள் அனைத்தும் பாண்டவர்களால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. காளையின் உடற்பகுதி இருந்த இடத்தில் ஒரு ஜோதி லிங்கம் உண்டானது. அந்த ஒளியில் இருந்து சிவபெருமான் பாண்டவர் களுக்கு காட்சியளித்து அவர்களின் பாவத்தை போக்கினார். மேற்கண்ட ஐந்து சிவன் கோவில்களையும் பக்தர்கள் புனித யாத்திரையாக சென்று வணங்கி வழிபட்டு வருகின்றனர்.
இந்த ஐந்து கோவில்களுக்கான பயணம் கடல் மட்டத்தில் இருந்து 3583 மீட்டர் உயரத்தில் கேதார்நாத்துடன் தொடங்குகிறது. இந்த பயணத்தின் இரண்டாவது கோவில் துங்நாத் 3680 மீட்டர் உயரத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து ருத்ரநாத் 2286 மீட்டர் உயரத்தில் மூன்றாவது கோவிலாக இருக்கிறது. நான்காவது கோவிலான மத்திய மாகேஸ்வர் கோவில் உத்தரகாண்ட் மாநிலம் இமயமலைப் பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து 3497 மீட்டர் தொலைவில் உள்ளது. 2200 மீட்டர் உயரத்தில் கடைசி கோவில் கல்பேஷ்வர். இந்த கோவில்கள் அனைத்தும் நாட்டின் மிக அழகான மலைகளுக்கு மத்தியில் உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ளன.
மத்தியமாகேஸ்வர் கோவில் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள தர்வால் இமயமலையின் மன்சூனா கிராமத்தில் அமைந்துள்ளது. 3497 மீட்டர் (11,437 அடி) உயரத்தில் இருக்கிறது. மத்தியமாகேஸ்வர் கோவிலில் கருங்கல்லால் செய்யப்பட்ட நந்தியின் தொப்புள் வடிவ சிவலிங்கம் கருவறையில் பொறிக்கப்பட்டுள்ளது. இவற்றை வெள்ளியால் செய்த சிவலிங்க கவசத்தைக் கொண்டு போர்த்தியிருக்கிறார்கள். இந்த சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யும் போது, கவசத்தை எடுத்து வயிறு போல் உள்ள சிவனுக்கு அபிஷேகம் செய்கிறார்கள். இது கண்கொள்ளா காட்சியாகும்.
ஆலய பிரகாரத்தில் இரண்டு சிறிய ஆலயங்கள் உள்ளன. இதில் ஒரு கோவில் பார்வதி தேவிக்காகவும், மற்றொரு ஆலயம் பார்வதியும், சிவபெருமானும் பாதி பாதியாக அமைந்த உருவமான அர்த்தநாரீஸ்வரருக்கும் அமைக்கப்பட்டுள்ளது. பாண்டவர்களில் ஒருவரான பீமன் இந்த கோவிலைக் கட்டியதாக சொல்லப்படுகிறது. பிரதான கோவிலின் வலதுபுறத்தில் ஒரு சிறிய கோவில் இருக்கிறது. அங்கு பளிங்கால் செய்யப்பட்ட சரஸ்வதியின் உருவம் கருவறையில் பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கோவிலின் வளாகத்தில் இருந்து வரும் நீர் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. இந்த நீரின் ஒரு துளி கூட நம் பாவங்கள் அனைத்தையும் நீக்குவதற்கு போதுமானவை என்று சொல்லப்படுகிறது. இங்கு வரும் புனிதநீரில் நீராடி முன்னோர் களுக்கு தர்ப்பணம் செய்கிறார்கள். ஆலயத்தில் இருக்கும் அர்ச்சகரே இந்த தர்ப்பணத்தை செய்து வைக்கிறார்.
இந்த ஆலயம் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை, பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும். ஆனால் குளிர் அதிகமாக இருக்கும். பார்வையிட சிறந்த நேரம் மே முதல் ஜூன் வரை. ஒவ்வொரு ஆண்டும் மே முதல் வாரம் முதல் அக்டோபர் கடைசி வாரம் வரை கோவில் திறந்திருக்கும். மழைகாலங்களில் அடிக்கடி நிலச்சரிவு ஏற்படும் என்பதால் அந்த நேரங்களில் கோவில் நடை திறக்கப்படுவதில்லை என்கிறார்கள்.
குதிரை சவாரி :
மத்தியமாகேஸ்வர் கோவிலுக்கு நடக்க முடியாதவர்கள் குதிரையில் அமர்ந்து செல்லலாம். செல்லும் வழி அடர்ந்த காடாக இருப்பதால் இரவு பண்டாலி அல்லது நானவில் ஆகிய இடங்களில் தங்கலாம். அங்கு தங்குவதற்கு சிறிய வீடுகள் உள்ளன. குளிர் தெரியாத வகையில் வடிவமைக்கப்பட்ட வீடுகள் அவை. நம்முடன் வரும் குதிரை பாதுகாவலர்களே இதனை ஏற்பாடு செய்து கொடுக்கின்றனர். குதிரை சவாரிக்கு தனியாக கட்டணம் வசூலிக்கின்றனர். இரவு உணவு வழங்குகிறார்கள்.
முன்பே குதிரைக்கு சொல்லிவைத்து இருந்தால் அவர்கள் குதிரையுடன் வருவார்கள். அழகான புல்வெளிகள் மற்றும் மலைகள் வழியாக மலையேறுபவர்களுக்கு இது ஒரு சொர்க்கமாகும். இப்பகுதி பனி மூடிய இமயமலை மற்றும் பசுமையான ஆல்பைன் புல்வெளி களால் மூடப்பட்டிருக்கிறது. இந்தப் பகுதியில் வளமான தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் உள்ளன. அதிகமாக வெளிநாட்டவர்களும் மலையேறுபவர்களும் மலையின் இயற்கையையும், ரம்மியமான சூழலையும், பல நீர்வீழ்ச்சிகளையும் கண்டு ரசித்து மலையேறுகிறார்கள்.
அமைவிடம் :
இந்த கோவில் டெராடூன் விமான நிலையத்தில் இருந்து 244 கிலோமீட்டா் தொலைவிலும், ரிஷிகேஷ் ரெயில் நிலையத்தில் இருந்து 227 கிலோமீட்டர் காரில் ரான்சி வழியாக யூனியானாவை அடைந்து 19 கிலோ மீட்டர் மலையேற்றம் செய்ய வேண்டும். இந்த மலைப்பாதையில் நடந்தோ, குதிரையிலோ செல்லலாம். பன்டோலி வரை மலையேற்றம் மிகவும் மென்மையானது, அதன் பிறகு செங்குத்தான மலையில் செல்ல வேண்டும்.
மருத்துவர் நா.மோகன்தாஸ்

திருமலைநம்பி கோவில் 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
வள்ளியூர் அருகே உள்ள நம்பிமலை, வைணவக் கோவில்களில் புராணங்களால் போற்றப்படும் முக்கியமான மலையாகும். திருமலைநம்பி கோவில் 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும். வைணவக் கோவில்களில் புரட்டாசி சனிக்கிழமை மட்டுமே கருட சேவை நடைபெறும். ஆனால், திருமலை நம்பி கோவிலில் ஆண்டு முழுவதும், ஒவ்வொரு சனிக்கிழமை அன்றும் கருடசேவை நடைபெறுவது சிறப்புக்குரியதாகும். அதுபோலவே கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு உறியடி திருவிழா பல ஆலயங்களில் சிறப்பாக நடைபெறும். ஆனால் நம்பி மலையில் மட்டும் ஆவணி மாதம் கடைசி சனிக்கிழமைதான் உறியடி திருவிழா மிகச்சிறப்பாக நடைபெறும்.
மலைமேல் நடுக்காட்டுக்குள் இருக்கும் நம்பியைத் தரிசிக்க வரும் பக்தர்களையும், கோவிலையும் காவல் தெய்வமாக இருந்து காக்கிறார் சங்கிலிபூதத்தார். கருடசேவை நடைபெறும் போது சாமியாடும் சங்கிலிபூதத்தாரின் பக்தர்கள், தங்களை சங்கிலியால் உடலில் அடித்துக் கொள்வது சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது. வருடந்தோறும் ‘கைசிக விருத்தாந்தம்’ எனும் புராண நிகழ்ச்சி திருக்குறுங்குடி தலத்தில் நடந்து வருகிறது. இதுதான் இந்த ஆலயத்தின் தல புராணம்.
திருக்குறுங்குடியில் இருந்த பாணர் குலத்தைச் சேர்ந்த பக்தர், நம்பியின் மீது அளவிலா பக்தி கொண்டிருந்தார். யாழை மீட்டி பள்ளிகொண்டிருக்கும் பெருமாளைத் திருப்பள்ளியெழுச்சி பாடி எழுப்புவார். ஒருமுறை அவர், நம்பி பெருமாளை மனதில் தியானித்துக்கொண்டே அடர்ந்த காடுகளில் பயணித்தார். நடுவழியில் அவரை வழிமறித்த ஒரு அசுரன், தனது உணவாக்கிக் கொள்ளப் போவதாக மிரட்டினான்.
அதைக் கேட்டு புன்முறுவல் பூத்த பாணன், “நான் இன்று ஏகாதசி விரதமிருக்கிறேன். நம்பியை வணங்கிய பின்பு நானாக வந்து உனக்கு உணவாவேன்” என்றார்.
அரக்கன் அவரை சந்தேகத்தோடு பார்த்தான்.
உடனே பாணன் “சந்தேகப்படாதே. நான் வணங்கும் பெருமாளின் மீது ஆணையாக வந்துவிடுவேன்” என்றார்.
இதையடுத்து அசுரன் அவருக்கு வழிவிட்டான். பாணன் அங்கிருந்து புறப்பட்டு, திருக்குறுங்குடி நம்பி கோவிலின் வாசலில் வந்து நின்றார். வைகுந்தனை இதயத்தில் நிறுத்தி, யாழை மெல்ல இசைக்கத் தொடங்கினார். அந்த காடு முழுவதுமே யாழிசை கேட்டு மயங்கியது. அரக்கனும் அந்த இசையில் தன்னை மறந்தான். பாணன் கைசிகம் எனும் உயர்ந்த ராகத்தை பாடினார். இசையால் நம்பியைக் கரைத்தார். கண் திறந்து பார்த்தால் பல நாழிகைகள் கடந்துவிட்டிருந்தன.
‘கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டுமே’ என்ற அவசரத்தில் அரக்கனைத் தேடினார். அப்போது திருமலை நம்பி, ஒரு வயோதிகர் தோற்றத்தில் அங்கு வந்தார். அவர் பாணனிடம், “யாரை தேடுகிறாய்?” என்று கேட்டார்.
“என்னை சாப்பிட வேண்டுமென்று ஒருவர் இங்கு காத்திருந்தார். அவரை இப்போது காணவில்லை. அவரைத்தான் தேடுகிறேன்.”
“ஐயோ.. அவன் அரக்கன். அவனிடம் போய் மாட்டிக்கொள்ளாதே. எப்படியாவது தப்பித்துக் கொள்.”
“பெரியவரே, எம்பெருமாள் நம்பியின் பெயரால் வாக்கு கொடுத்துவிட்டேன். அதனால் அதை நான் காப்பாற்றத்தான் வேண்டும்” என்றபடி பாணன் முன்னேறிச் சென்றார். அவரை வயோதிகர் பின் தொடர்ந்தார்.
ஓரிடத்தில் அசுரனைக் கண்ட பாணனின் முகம் மலர்ந்தது. அவர் நேராக அசுரனிடம் சென்றார். பாணனைப் பார்த்த அசுரனின் முகம் பிரகாசமானது. ஆனால் முன்பிருந்த அசுர வெறி இப்போது இல்லை. முகத்தில் சாந்தத்தால் ஒளி கூடியிருந்தது.
“பாணரே.. உங்களை இப்போது பார்க்கையில் என் சுபாவம் சாந்தமாக மாறுகிறது. நீங்கள் பாடிய பண், இந்த கானகம் முழுவதும் பரவியது. என் இதயத்திலும் அது பரவி என் குணத்தை மாற்றிவிட்டது. உங்களை மிரட்டியதற்காக வெட்கப்படுகிறேன். எனவே நான் பசியாற உங்கள் உடல் வேண்டாம். ஆனால், கைசிகப் பண் இசைத்த பலனை மட்டும் எனக்கு தாருங்கள்” என்று அசுரன் கெஞ்சினான்.
அப்போது அங்கே பேரொளி தோன்றியது. வயோதிக தோற்றத்தில் இருந்தவர், திருமலை நம்பியாக விஸ்வரூப தோற்றம் காட்டி நின்றார். அதே நேரத்தில் அங்கு இன்னொரு அதிசயமும் நடந்தது. அசுரன், திடீரென்று அழகான மானிட உருவிற்கு மாறினான். அவன், திருமலை நம்பியையும், பாணனையும் வணங்கி நின்றான்.
“என் பெயர் சோமசர்மா. அந்தணனான நான், வேள்விகளை தவறாக செய்த காரணத்தால், அசுரனாக மாறினேன். பாணனாகிய பரம பாகவதரின் தரிசனத்தால் எனக்கு சாப நிவர்த்தி கிடைத்து விட்டது” என்றான்.
தன் சன்னிதியில் கைசிக பண் பாடிய பாணனுக்கு, ‘நம்பாடுவான்’ என்ற திருநாமத்தை இறைவன் சூட்டினார்.
இந்தச் சம்பவம் கார்த்திகை வளர்பிறை ஏகாதசி அன்று நடந்ததாக தல புராணம் சொல்கிறது. ஆகவே, இந்த நன்னாளுக்கு ‘கைசிக ஏகாதசி’ என்று பெயர் வந்தது. பெரியாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் ஆகியோரால் அதிக பாசுரம் பாடப்பெற்ற சிறப்புடையது திருமலை நம்பிக் கோவில். திருக்குறுங்குடியில் நின்ற நம்பி, கிடந்த நம்பி, அமர்ந்த நம்பி, திருப்பாற்கடல் நம்பி என்ற நான்கு நம்பிகளும், மலை மேல்பகுதியில் திருமலை நம்பி என்ற பெயரில் நின்ற கோலத்திலும் எம்பெருமாள் அருள்பாலிக்கிறார். ஒரே ஊரில் ஐந்து கோலத்தில் இறைவனின் தரிசனம் கிடைப்பது அரிது என்பதால் இந்த ஆலயம் மேலும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
பெரும்பாலும் மலைக் கோவில்கள், சித்தர்களால் சிறப்பு பெற்றது என்பார்கள். அதுபோலவே மகேந்திரகிரி மலையும் மிகவும் சிறப்புக்குரியது. அகப்பேய் சித்தர், கல்யாணி சித்தர் உள்பட பல சித்தர்கள் இங்கு நித்யவாசம் செய்வதாக நம்பப்படுகிறது.
இந்தக் கோவிலுக்கு முன்பு பாலத்துக்கு அடியில் நம்பியாறு பாறைக்குள் நுழைந்து ஓடி வருகிறது. அது ஒரு பள்ளத்தாக்கு. சங்கிலிபூதத்தார் சாமி ஆடும் பக்தர்கள், இந்த இடத்தில் இரும்பு சங்கிலியை ஆற்றுக்குள் போட்டு விடுவார்கள். மறு ஆண்டு விழா நடைபெறும் போதுதான், இந்தச் சங்கிலி எடுக்கப்படும். அப்போது போட்ட இடத்தில் அப்படியே அந்த சங்கிலிகள் இருப்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.
பாலத்தைக் கடந்ததும், இடதுபுறம் மிக உயரத்தில் திருமலைநம்பி அமர்ந்து அருள்பாலிக்கிறார். அதன் கீழே அடிவாரத்தில் ஒரு புற்று உள்ளது. அந்தப் புற்றை மக்கள் வணங்கி செல்கிறார்கள். இதில் 201 சித்தர்கள் வாசம் செய்வதாக கூறப்படுகிறது. தினமும் ஒருவர் வீதம் நம்பியை பூஜை செய்வார்களாம். அப்படி சித்தர்கள் பூஜை செய்த பிறகே அர்ச்சகர்கள், நம்பிக்கை பூஜையை செய்யத் தொடங்குவார்கள்.
நம்பியைத் தரிசிக்கும் முன்பு நம்பி ஆற்றில் நீராட வேண்டும். அதன் பின் திருமலை நம்பி கோவிலுக்குள் சென்று நின்ற கோலத்தில் இருக்கும் திருமலை நம்பியை தரிசிக்கலாம்.
‘திருப்பம் வேண்டுமென்றால் திருப்பதிக்கு செல்லவேண்டும்’ என்பார்கள். திருப்பதிக்கு ஏழு ஏற்றம் இருப்பது போலவே, திருமலை நம்பி கோவிலுக்கு செல்லவும் ஏழு ஏற்றம் இருக்கிறது. எனவே இவரை நம்பி மலை மீது ஏறினால் அனைத்து பிரச்சினைகளும் நீங்கி நல்வழி கிடைக்கும்.
இந்த ஆலயம் வனத்துறை கட்டுப்பாட்டில் இருக்கிறது. எனவே வனத்துறையில் அறிவுரையுடன் மலை ஏறுவது உத்தமம். தினமும் காலை 7 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை ஆலயம் திறந்திருக்கும். சனிக்கிழமை கருட சேவை நடைபெறுவதால், காலை 6 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை கோவில் நடை திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
நோய் தீர்க்கும் நம்பியாறு
இந்த ஆலய பகுதியில் பாய்ந்தோடும் நம்பியாறு புனிதமானதாக சொல்லப்படுகிறது. இந்த நம்பியாறு, ‘மகேந்திரகிரி’ என்ற மலையில் உற்பத்தியாகி வருகிறது. இந்த நதி, மாயவன் பரப்பு என்ற இடத்தில் ஐந்து சுனைகளாக தோன்று கிறது. பின் கடையார் பள்ளம் வழியாக தாய்பாதம் தொட்டு, நம்பி கோவில் வந்து சேருகிறது. பல வகை மூலிகைகளின் வாசத்தினைத் தன் வசம் சேர்த்து, நோய் தீர்க்கும் தீர்த்தமாகவும் இது விளங்குகிறது. கோவிலுக்கும், இறைவனின் திருமஞ்சனத்திற்கு தேவையான நீரை இந்த நதி தருவதால், இந்த ஆற்றில் நீராடும் பக்தர்கள் எண்ணெய் மற்றும் சோப்பு பயன்படுத்தக்கூடாது என்ற தடை உள்ளது.
அமைவிடம் :
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் இருந்து களக்காடு செல்லும் சாலையில் திருக்குறுங்குடி உள்ளது. இங்கு இறங்கி ஆட்டோ மூலம் மலை அடிவாரத்திற்குச் செல்ல வேண்டும். பின்னர் மலை ஏறி நம்பியை தரிசிக்கலாம். திருநெல்வேலி பழைய பஸ் நிலையத்தில் இருந்து திருக்குறுங்குடிக்கு ஏராளமான பஸ் வசதிகள் உள்ளன. மலைக்குச் செல்ல தினமும் ஜீப் வசதி இருக்கிறது.