என் மலர்tooltip icon

    கோவில்கள்

    எதுமலை - அழகு தாலாட்டும் இந்தக் கிராமத்தில் நடுநாயகமாய் அமைந்துள்ளது ஒரு சிவாலயம். இங்கு அருள்பாலிக்கும் இறைவன் அருணாசலேஸ்வரர். இறைவின் பெயர் உண்ணாமுலையம்மன்.
    எதுமலை - அழகு தாலாட்டும் இந்தக் கிராமத்தில் நடுநாயகமாய் அமைந்துள்ளது ஒரு சிவாலயம். இங்கு அருள்பாலிக்கும் இறைவன் அருணாசலேஸ்வரர். இறைவின் பெயர் உண்ணாமுலையம்மன். பல நூறு ஆண்டுகளைக் கடந்த ஆலயம் இது.

    விஜய நகரப் பேரரசை மாமன்னன் கிருஷ்ண தேவராயர் ஆண்டு கொண்டிருந்த காலம் அது. அங்கு எதுர்மலை, பாலைமலை என இரண்டு ஊர்கள் இருந்தன. இரண்டு கிராமங்களுக்கும் இடையே ஒரு பெரிய குளம். அந்த இரண்டு ஊர்களிலும் இரண்டு பெருமாள் ஆலயங்களும், சிவாலயமும் இருந்தன.

    அங்கிருந்து இந்தப் பக்கம் குடியேறிய ராயர் வம்சத்தினர் அதே அமைப்பில் இரண்டு கிராமங்களை அமைத்தனர். அதே பெயர்களில் இங்கு அமைக்கப்பட்ட ‘எதிர்மலை’ திரிந்து ‘எதுமலை’ என தற்போது அழைக்கப்படுகிறது. பாலைமலை என்ற பெயரில் உருவாக்கப்பட்ட கிராமம் தற்போது ‘பாலையூர்’ என வழங்கப்படுகிறது. இந்த ஊர் எதுமலைக்கு அருகிலேயே உள்ளது.

    அங்கு உள்ளது போல் தம் வம்சத்தினர் வழிபட பாலையூரில் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் ஆலயத்தையும், எதுமலையில் வரதராஜப்பெருமாள் மற்றும் அருணாசலேஸ்வரர் ஆலயங்களையும் கிருஷ்ண தேவராயர் உருவாக்கினார்.

    இது செவி வழி தல வரலாறு. பின்னர் வந்த மன்னர்கள் இந்த ஆலயங்களை புனரமைப்பு செய்ததாக பக்தர்கள் கூறுகின்றனர்.

    இந்த சிவாலய முகப்பு தெற்கு நோக்கி உள்ளது. உள்ளே நுழைந்ததும் விசாலமான திருச்சுற்று உள்ளது. வலதுபுறம் பல்லாண்டுகளைக் கடந்த தல விருட்சம் வில்வம் தழைத் தோங்கி காட்சி தருகிறது. அடுத்துள்ளது மகா மண்டபம். அதை அடுத்து அர்த்த மண்டபம் காணப்படுகிறது. அடுத்தாற்போல் உள்ள கருவறையில், மூலவர் அருணாசலேஸ்வரர் லிங்கத் திருமேனியில் கீழ் திசை நோக்கி அருள்பாலிக்கிறார்.

    இறைவனின் தேவக் கோட்டத்தில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகா விஷ்ணு, பிரம்மா, விஷ்ணு துர்க்கை ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். இறைவனின் சன்னிதியை அடுத்து இறைவி உண்ணாமலை அம்மனின் தனிச் சன்னிதி இருக்கிறது. இத்தல அம்மனுக்கு நான்கு கரங்கள். மேல் இரு கரங்கள் தாமரை மலரை தாங்கியிருக்க, கீழ் இரு கரங்கள் அபய, வரத ஹஸ்த முத்திரைகளுடன் காணப்படுகிறது. அன்னை நின்ற கோலத்தில் இளநகை தவழ கீழ் திசை நோக்கி அருள்பாலிக்கிறார்.

    திருச்சுற்றில் வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயர்களும், கிழக்கில் கால பைரவரும், சூரியனும் அருள் பாலிக்கின்றனர். தினசரி இரண்டு கால பூஜை நடக்கும் இந்த ஆலயத்தில், சிவராத்திரி, கார்த்திகை, சோமவாரங்கள், மார்கழி 30 நாட்கள், தைப் பொங்கல், ஆண்டு பிறப்பு முதலிய நாட்களில் இறைவன் இறைவிக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெறுகின்றன. கார்த்திகை தீபத்தன்று சொக்கப்பனை ஏற்றும் வைபவமும், ஐப்பசி பவுணர்மியில் இறைவனுக்கு அன்னாபிஷேகமும் சிறப்பாக நடைபெறுகின்றன.

    குடும்ப சகிதமாக நந்தீஸ்வரர்

    இங்கு மேற்கு திருச்சுற்றில் பாலமுருகன் என்ற திருநாமத்தில், நின்ற கோலத்தில் முருகப்பெருமான் அருள் பாலிக்கிறார். அவருக்கு எதிரே கோஷ்டத்தில் மகாவிஷ்ணு அருள்பாலிப்பது சிறப்பானதாக பார்க்கப்படுகிறது.

    குடும்ப சகிதமாக நந்தீஸ்வரர் :

    பொதுவாக சிவாலய கருவறைக்கு எதிரில் நந்தி பகவான் வீற்றிருக்கிறார். இங்கும் நந்தியம் பெருமான் இருக்கிறார். அது மூன்று நந்தியாக இருக்கிறது. அதாவது தாய், தந்தை, கன்று என்ற அமைப்பில் மூன்று நந்திகள் இறைவனின் சன்னிதிக்கு எதிரில் அமைந்துள்ளன. அந்தக் காலத்தில் இந்த கிராமம் மரங்கள் நிறைந்த காட்டுப் பகுதியாக இருந்தன. அந்தக் காட்டுப் பகுதியில் நிறைய காட்டு எருமைகள் மனம் போல் திரிந்து கொண்டிருந்தன. ஊரில் இருந்த விளை நிலங்களையும், வாழை மற்றும் தென்னை மரங்களையும் இந்த காட்டு எருமைகள் கூட்டமாக வந்து துவம்சம் செய்து கொண்டிருந்தன. இதனால் கிராம மக்கள் மிகுந்த மன வேதனை அடைந்தனர்.

    அவர்கள் இத்தல இறைவன் அருணாசலேஸ்வரரின் சன்னிதியின் எதிரே நந்தி பகவானை குடும்ப சகதிமாய் பிரதிஷ்டை செய்து தங்கள் வேதனைகளை சொல்லி கண்ணீர் விட்டு கதறினர். இதையடுத்து அவர்களுக்கு நந்தி பகவானின் அருள் பரிபூரணமாகக் கிடைத்தது. அதன் பின் காட்டு எருமைகள், விளைச்சல் நிலங்களின் பக்கமே வருவது இல்லையாம். இன்னும் தங்கள் நிலங்களில் விளையும் பயிர்கள் சேதாரம் இன்றி வீட்டிற்கு வந்து சேர, பக்தர்கள் நந்தியின் குடும்பத்தை ஆராதனை செய்ய தவறுவதில்லை.

    வேண்டிய வரத்தை வேண்டியபடி அருளும் இத்தல இறைவன், இறைவியை நாமும் ஒரு முறை தரிசிக்க எதுமலை சென்று வரலாமே.

    இந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் 9 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம் :

    திருச்சி மாட்டம் மண்ணச்சநல்லூரில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது எதுமலை கிராமம். திருச்சியில் இருந்து 32 கிலோமீட்டர் தொலைவில் இந்த ஊர் இருக்கிறது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து ஏராளமான பஸ் வசதிகள் இருக்கின்றன.

    ஜெயவண்ணன்
    கும்பகோணத்தை அடுத்த திருபுவனம் அருள்மிகு தர்ம்சவர்த்தினி உடனுறை கம்பகேஸ்வரர் திருக்கோவிலில் இருந்து சுமார் 2 பர்லாங்தூரத்தில் எழுந்தருளி இருக்கும் சீரடி சாயிநாதர் பற்றிதான் பார்க்கப்போகிறோம்.
    கும்பகோணத்தை அடுத்த திருபுவனம் அருள்மிகு தர்ம்சவர்த்தினி உடனுறை கம்பகேஸ்வரர் திருக்கோவிலில் இருந்து சுமார் 2 பர்லாங் தூரத்தில் எழுந்தருளி இருக்கும் சீரடி சாயி நாதர் பற்றிதான் பார்க்கப்போகிறோம். வினைதீர்க்கும் கணேசர் தமது பக்தன் கணேசன் கனவில் தோன்றி பாபா சிலையையும் நிறுவச் சொல்லியது விசேஷமானதாகும்.

    கும்பகோணம் அருகே உள்ள பிள்ளையம் பேட்டை வடக்கு தெருவில் வசித்து வந்த ரெங்கராஜன்ராஜாத்தி தம்பதிகளுக்கு தலைமகனாக பிறந்தவர் கணேசன். குடும்ப வறுமை காரணமாக பள்ளிப்படிப்பை ஆறாம் வகுப்புடன் நிறுத்த வேண்டிய நிர்பந்தமான சூழ்நிலை ஏற்பட்டது. அலுமினிய பாத்திரம் தயாரிக்கும் ஒரு தனியார் தொழிற்சாலையில் கூலி வேலைக்கு சென்று வந்தார்.

    சில வருடகாலம் அப்படி வேலை பார்த்து வரும் போது ஒருநாள் எதிர்பாராதவிதமாக நடந்த விபத்து ஒன்றில் தனது வலது கையில் முட்டி வரை உள்ள பகுதியை இழந்தார். அதனால் அவரின் தினசரி வருமானம் தடைப்பட்டது. குடும்பத்தில் இருந்து விலக்கப்பட்டு தனி ஆளாய் நின்றார். அதன் பின்னர் சாய்பாபாவின் அருளால் பெட்டிக்கடை ஒன்று வைத்து தனது வாழ்க்கையை தொடர்ந்தார். அந்த காலகட்டத்தில் (1994ல்) ஏழை பெண் ஒருவரை திருமணம் செய்தார்.

    இவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்று, பெண் குழந்தை ஒன்று பிறந்தது. இப்படி இனிமையாக சென்ற இவரின் வாழ்க்கையில் மீண்டும் துயரம் துரத்தியது. வருமானம் போதுமானதாக இல்லை என்று அவர் மனைவி அதிருப்தி அடைந்தார். கருத்து வேறுபாடு காரணத்தினால் இவரின் மனைவி தங்களின் குழந்தைகளுடன் இவரை விட்டு பிரிந்தார்.

    அதன் பிறகு தனது வாழ்க்கை பயணத்தில் திருபுவனம் கம்பஹரேஸ்வரர் (சரபர் தலம்) ஆலயத்தின் அருகிலுள்ள குருநாதன் குட்டை குப்பை மேட்டில் இருக்கும் அருள்மிகு விநாயகர் பெருமானும் தன் மனதில் மங்கா ஒளிவீசி தன்னை வழி நடத்திச் செல்லும் சாய்பாபாவும் தான் தனக்கு நல்லருள் புரிய வேண்டும் என்று நினைத்து கொண்டு வாழ்ந்து வந்தார்.

    அந்த சமயம் பாபாவின் அருள் கொடையாக கணேசனின் நிலையை கண்டு உதவிகரமாக இருக்க 2007ல் இவரின் வாழ்க்கை துணைவியாக வாழ வந்தார் செல்வி. இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இப்போது இவர்களுக்கு கோகுலகிருஷ்ணன் என்ற மகனும், சுமித்திரா என்ற மகளும் உள்ளார்கள்.

    இப்படி பல போராட்டக்களங்களை சந்தித்து வந்த கணேசன் திருப்புவனம் தென்றல் நகரில் குருநாதன் குட்டை குப்பை மேடு பகுதியில் தான் வசிக்க இடம் ஒன்றை வாங்கினார். அதில் விரைவாக வீடு கட்டி முடிக்க வேண்டும் என்றும் விநாயகருக்கும் கோயில் கட்ட அருள வேண்டும் என்றும் குப்பைமேடு விநாயகரிடம் மனமுருக வேண்டிக் கொண்டார்.

    விநாயகரும் அவர் நினைத்த வண்ணம் அனைத்து கட்டிட வேலைகளையும் 72 தினங்களில் சிறப்பாக முடித்து வைத்தார். அதன் பின்னர் அவரது வீட்டின் ஒரு பகுதியில் குப்பை மேட்டில் இருந்த வெற்றி விநாயக பெருமானுக்கு திருக்கோயிலும் 60 தினங்களில் கட்டப்பட்டு 15.3.2013 அன்று கும்பாபிஷேக விழாவும் மிக எளிமையான முறையில் நடைபெற்றது.

    இந்த நிலையில் ஒருநாள் கணேசன் தனது இருசக்கர வாகனத்தில் கும்பகோணம் புறப்பகுதியான சென்னை சாலையில் சென்றுகொண்டிருக்கும்போது விபத்தில் சிக்கினார். அதில் அவரின் இரு சக்கர வாகனம் தூள் தூளாகி விட இவர் மட்டும் இறை அருளால் துளியும் காயமின்றி தப்பினார். விநாயகருக்கு தமது உயிரை காப்பற்றிக் கொடுத்தமைக்கு நன்றி செலுத்தி, ஒரு வேளை தனது உயிர் விபத்தில் பிரிந்திருந்தால் பிற்காலத்தில் உம்மை யார் கவனித்துக் கொள்வார்கள் என விநாயகரிடம் மனமுருகி பணிந்து வணங்கியுள்ளார். இரவில் அவர் கனவில் தோன்றிய விநாயகர் உன்னையும் என்னையும் இனி கவனித்துக் கொள்ள இந்தக் கோவிலில் நீ சீரடி சாய்பாபாவையும் பிரதிஷ்டை செய் என அருளியுள்ளார். கணேசன் இதுவரை சீரடி சென்றதில்லை. சீரடி சாய்பாபா பற்றியும் அறிந்திருக்கவில்லை. உடனே அதுபற்றி தெரிந்தவர்களை அணுகி சீரடி சாய்பாபாவுக்கு கோவில் கட்டுவது பற்றி விபரம் கேட்டுள்ளார்.

    சாய்பாபா

    இவரின் பிரார்த்தனை பயனாக சாய் பக்தர் ஒருவர் இவரிடம் கும்பகோணத்தில் பிரஸ் வைத்திருக்கும் ஜெயராமனை சென்று பார்க்கும்படி கூறினார். அதன்படி கணேசன் உடனே அவரை சந்தித்து பேசினார். தான் கண்ட கனவை பற்றி கூறி அதற்கான வழி முறைகளை கேட்டார். அதன் பின் அவரின் ஆலோசனையின்படி பல பொருளாதார நெருக்கடியிலும் பாபாவின் அருளினாலும், சாய் அன்பர்களின் அன்பினாலும் (105 தினங்களில்) 12.3.2015 அன்று சீரடி சாய்பாபா சன்னதி கும்பாபிஷேகம் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

    அதன் பின் 13.3.2016 அன்று துனி நிறுவுதல் விழாவும் நடைபெற்றது இவ்விரு விழாவிலும் சீரடியில் 20 வருடங்களாக வசித்து வரும் மகான். அச்சுதானந்தசாமி எந்த அழைப்பும் இன்றி தாமாகவே வந்து விழாக்களில் கலந்து கொண்டு சாய் பக்தர்களுக்கு உதியை வழங்கியது வியப்புக்குரியதாகும்.

    தனது வாழ்வில் ஏற்பட்ட பலவித இன்னல்களில் இருந்து காத்து வரும் குருநாதன் குட்டை குப்பை மேடு அருள்மிகு வெற்றி விநாயகர், அருள்மிகு ராமபக்தன் ஸ்ரீ ஆஞ்சனேய சுவாமி, அருள்மிகு சீரடி சாய்பாபா ஆகிய இறை வடிவங்களுக்கு கணேசன் தினசரி பூஜை தனது இடது கரத்தால் தான் செய்து வருகிறார். இவருக்கு உதவியாக இவரின் மனைவி செல்வி துணை புரிகிறார். இங்கு இறை மூர்த்திகள் தனி தனி சந்நிதி கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள்.

    வருடத்தில் ஒருமுறை நடைபெறும் விழாக்கள் விபரம்: சம்வத்ஸரா விழா, விநாயகர்சதுர்த்தி விழா, குருபூர்ணிமா விழா, சங்காபிஷேகவிழா, லட்சார்ச்சனை விழா, குத்துவிளக்கு பூஜை விழா, மகாசமாதி விஜயதசமி விழா, மடிபிச்சை எடுக்கும் விழா இவை தவிர மாதந்தோறும் பவுர்ணமி தினத்தன்று ஸ்ரீசத்யநாராயண பூஜை மற்றும் தினசரி பூஜைகளும் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது.

    திருமணம் தடை நீங்க, குழந்தை வரம் கிடைக்க இங்கு வந்து மனம் உருகி சாய்பாபாவிடம் வழிபாடு செய்து வந்தால் நல்லது நடக்கும் என்பது இங்கு வழிபட்டு பேறுபெற்றவர்களின் நம்பிக்கையாகும்.

    “கடவுளும் மனிதனும் வேறல்ல உனக்கும் எனக்கும் நடுவே உள்ள சுவற்றை உடைத்துவிடு. என்னை நீ உன்னுள் உணர்வாய்” என்ற பாபாவின் வாக்குபடி இவரது வீடும் கோவிலும் ஒன்றாகவே உள்ளது மிகவும் சிறப்பானது.

    செல்வி கணேசன் எனும் இவரது துணைவியார் காலையில் எழுந்து வீட்டை சுத்தம் செய்து குளித்து நைவேத்தியம் தயாரிக்க, கணேசன் குளித்து தாமே ஸ்ரீவிநாயகர், ஸ்ரீஆஞ்சநேயர் மற்றும் பாபாவிற்கு அபிஷேகம், அலங்காரம் ஆரத்தி செய்கிறார். முதலில் இவரிடம் இருந்து இடக்கை மூலமாக பாபாவின் உதி பெறத் தயங்கிய மக்கள், இவரது விடாமுயற்சி, ஈடுபாடு ஆகியவற்றைக்கண்டு தற்பொழுது ஆர்வத்துடன் பாபா கோவிலுக்கு வருகின்றனர்.

    இவர் ராம நவமி, தத்திஜெயந்தி, பாபா மகா சமாதி அடைந்த விஜயதசமி திருநாள் போன்ற அனைத்து விழாக்களையும் தனது பொருளாதார நிலையையும் பொருட்படுத்தாமல் மனந்தளராமல் சிறப்பாக நடத்தி வருகிறார்.

    மேலும் ஏழை, எளிய மக்கள் குறைந்த செலவில் திருமணம் நடத்த மண்டபம் கட்ட வேண்டி கோவிலுக்கு அருகிலேயே மனை வாங்கியுள்ளார். பாபா கோவிலை மேலும் விரிவுபடுத்தவும், பெரிய மூர்த்தி, தியான மண்டபம் போன்றவற்றை கட்டவும் கோவிலுக்கு பின்னால் மனை வாங்கியுள்ளார். இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாக தனது வாழ்வை, உயிரை காப்பாற்றிய விநாயகர் நினைவாக இத்திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களை ஆசீர்வதிக்க யானை வாங்கும் திட்டத்தையும் வைத்துள்ளார். இவரது மனவலிமை வியக்கத்தக்கது.
    திருநெல்வேலிப் பகுதியில் உள்ள பஞ்சபூதத் தலங்களில், கரிவலம் வந்த நல்லூர் பால்வண்ண நாதர் திருக்கோவில், அக்னித் தலமாக விளங்குகிறது.
    அமிர்தம் வேண்டி தேவர்களும், அசுரர்களும் திருப்பாற் கடலைக் கடைந்தனர். அமிர்தம் வெளிப்பட்டதும், அதைப் பருகுவதில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் பிரச்சினை உருவானது. அப்போது மோகினி வடிவம் எடுத்த திருமால், அமிர்தம் தேவர்களுக்கு மட்டுமே கிடைக்கும்படி செய்தார். இதனால் அமிர்தம் கிடைக்காத அசுரர்கள் கோபம் கொண்டனர்.

    பின்னர் அமிர்தத்திற்கு இணையான, இறவா நிலையைத் தரும் ஒரு பானத்தை தயாரிக்க அசுரர்கள் முடிவு செய்தனர். இதற்காக சுக்ரன் தலைமையிலான அசுரர்கள் பூலோகத்தில் கருவைப் பதியில் களா வனத்தில் பால் தடாகத்தினை உருவாக்கினர். அந்த தடாகத்தில் உள்ள பாலை அசுரர்கள் குடித்தால் அவர்களை எவராலும் வெல்லமுடியாது என்ற நிலை ஏற்படும். இதனை அறிந்த தேவர்கள், கயிலாயம் சென்று சிவனிடம் முறையிடுகிறார்கள். சிவபெருமான் பால் தடாகத்தினை நீர் தடாகமாக மாற்றி அமைத்தார். இதனால் வேதனை அடைந்த அசுரர்கள், ‘இப்படி யார் செய்தது?’ என நிஷ்டையில் காணும் போது, சிவபெருமான் தெரிந்தார்.

    உடனே அசுரர்கள் அனைவரும், “ஈசனே, தேவர்களை வெல்வதற்கு எங்களுக்கு வரம் கொடுங்கள்” என்று கேட்டனர். அதற்கு சிவபெருமான், “தேவர்கள் என்னை எப்போது மறக்கிறார்களோ, அப்போது நீங்கள் அவர்களை வெல்லலாம்” என வரம் கொடுத்தார். பால் தடாகத்தில் உருவாகிய சிவன் ‘பால் வண்ண நாதர்’ என்றும், சுக்ரன் உருவாக்கிய பால் தடாகம், ‘சுக்ரவ தீர்த்தம்’ என்றும் அழைக்கப்படுகிறது.

    உலகத்தை சமநிலைக்கு கொண்டுவருவதற்காக, அகத்திய பெருமானை தென்திசைக்கு அனுப்பி வைத்தார், சிவபெருமான். தென் திசை வந்த அகத்தியர், தன் ஒருவனால் பொதிகையில் நின்று உலகத்தை சமன் செய்ய இயலாது என்றும், தனக்கு தனி சக்தி வேண்டும் என்றும் கருதி, ஸ்ரீசக்கர பராசக்தி பீடம் ஒன்றை பிரதிஷ்டை செய்து வணங்கினார்.

    இந்தக் கோவிலில் சுக்ரன் உருவாக்கிய ‘சுக்ர தீர்த்தம்’, அக்னி தேவன் உருவாக்கி வழிபட்ட ‘அக்னி தீர்த்தம்’, அம்பாள் உருவாக்கிய ‘தேவி தீர்த்தம்’ ஆகிய தீர்த்தங்கள் காணப்படுகின்றன. இத்தல இறைவனை, முகலிங்கநாதர் என்றும் அழைக்கிறார்கள். அம்பாளுக்கு சவுந்தரியாம்பிகை, ஒப்பனையம்பாள், ஒப்பிலாவல்லி என்று பெயரும் உண்டு. ஆலய தல விருட்சம் களா மரம். இந்தக் கோவிலை பிரம்மா, விஷ்ணு, அகத்தியர், காகபுஜண்டர், நாரதர், சூரியன், சந்திரன், லட்சுமணன் ஆகியோர் வழிபட்டு பேறுபெற்றுள்ளனர்.

    ஆலய அமைப்பு

    இந்த ஆலயமானது, மிகவும் பிரமாண்டமாக அமைந்திருக்கிறது. கோவிலின் 125 அடி உயர ராஜகோபுரத்தை தாண்டி உள்ளே செல்கிறோம். மிகவும் பழையான தலம் என்பதை பறைசாற்றும் விதமாக கோவிலின் கூரையில் மூலிகை வர்ணம் தீட்டப்பட்டு இருக்கிறது. ஆலயத்தின் உள்ளே நுழைந்தால் கொடிமரம், நந்தி பலிபீடம் ஆகியவற்றை தரிசிக்கலாம். அதைக் கடந்து உள்நுழைந்தால், அகத்தியர், சந்திரன், சூரியன் ஆகியோரை தரிசிக்கலாம். அவர்களைத் தாண்டி சென்றால், கர்ப்பக் கிரகத்தில் பால்வண்ண நாதர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். தானே வளர்ந்த லிங்கமாக வெண்ணிறத்தில் காட்சி தரும் இவரைத் தேடிவரும் பக்தர்களுக்கு, கேட்ட வரத்தை தரும் நாயகனாக ஈசன் ஆட்சி செய்கிறார்.

    திருநெல்வேலிப் பகுதியில் உள்ள பஞ்சபூதத் தலங்களில், கரிவலம் வந்த நல்லூர் பால்வண்ண நாதர் திருக்கோவில், அக்னித் தலமாக விளங்குகிறது. கருவறையில் வீற்றிருக்கும் பால் வண்ணநாதரை வணங்கி வெளியே வந்தால், திருச்சுற்றில், துர்க்கை அம்மன், 63 நாயன்மார்கள், சப்த மாதர்கள், தட்சிணாமூர்த்தி, கன்னி மூல விநாயகர், பஞ்சலிங்கம் ஆகியோர் வீற்றிருக்கிறார்கள். ஆவணி மாதம் அன்னையின் தபசுக்கு காட்சி தந்த லிங்கோத்பவர் கருவறையின் பின்புறம் இருந்து அருள்புரிகிறார். இந்த ஆலயத்தில் இருக்கும் வீரசண்முகர் மிகவும் விசேஷமானவர். வைகாசி விசாகத் திருநாள் அன்று, இவரை காவடி எடுத்தும், பால்குடம் எடுத்தும் பக்தர்கள் வழிபடுவார்கள். கேட்ட வரம் தரும் சண்முகராக இவர் வீற்றிருக்கிறார். இவரது சன்னிதி முன்பு திருமணம் செய்து கொண்டால், வாழ்க்கையில் 16 வகையான பேறுகளையும் பெற்று சிறப்பாக வாழலாம் என்பது பலரது நம்பிக்கை. எனவே இங்கு நடைபெறும் திருமணத்தின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

    மேலும் ஆலயத்தில் சனீஸ்வரர், சண்டிகேஸ்வரர் ஆகியோரும் இருக்கிறார்கள். இவர்களின் சன்னிதிக்கு அடுத்தபடியாக தல விருட்சமான களா மரம் உள்ளது. தொடர்ந்து பைரவர் காட்சி தருகிறார். அவரை தரிசித்து விட்டு கோவிலின் வெளிப்பிரகாரத்திற்கு வர வேண்டும். அங்கு அகத்தியர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீசக்கர பராசக்தியை தரிசனம் செய்யலாம். அடுத்ததாக உதயமார்த்தாண்டேஸ்வரர் மேற்கு நோக்கி வீற்றிருக்கும், அவருக்கு நோ் எதிரில் சடையப்பர் உள்ளார். இவர் அமர்ந்திருக்கு இடத்தின் ஈசான மூலையில் புற்று ஒன்று மேல் இருந்து கீழ்நோக்கி இருப்பது அதிசயமாக பார்க்கப்படுகிறது. தனிச் சன்னிதியில் ஒப்பனையம்மாள் வீற்றிருக்கிறார். அழகு மிகுந்த இந்த அன்னையை தரிசனம் செய்வதே பேரானந்தம்தான். ஆவணி மாதம் தபசு ஏற்றிய அன்னை இவள். இந்த தேவியை வணங்கி, ஒரு மண்டலம் பூஜை நடத்தி வந்தால், மனம் குளிர்ந்த வாழ்க்கையும், அதன் மூலம் முகப்பொலிவும், அகப்பொலிவும் பெறுவார்கள்.

    ராமாயணத்தில் இறுதிகட்ட போரின் போது, ராவணனின் மகன் இந்திரஜித்தை லட்சுமணன் கொன்றான். இதனால் ஏற்பட்ட தோஷம் நீங்குவதற்காக, இத்தலம் வந்து ஈசனை வணங்கினான் லட்சுமணன். அதன் காரணமாக இத்தலத்தில் தனிச் சன்னிதியில் மேற்கு நோக்கி, ஈஸ்வரராகவே லட்சுமணன் வீற்றிருக்கிறான். இந்த மேற்கு பார்த்த சிவலிங்கத்தை வணங்கினால், 1000 சிவாலயங்களுக்குச் சென்று இறைவனை தரிசித்து வந்த பலன் கிடைக்கும் என்கிறார்கள். இக்கோவிலில் இரண்டு சிவலிங்கங்கள், மேற்கு பார்த்து உள்ளது. எனவே இக்கோவிலை வணங்கினால் 200 சிவன் கோவிலுக்கு சென்று வணங்கிய புண்ணியம் கிடைக்கும். இது தவிர இந்த ஆலயத்தில் நவக்கிரகத்திற்கும், சாஸ்தாவிற்கும் தனிச் சன்னிதிகள் இருக்கின்றன. இந்த ஆலயம் சங்கரன்கோவில் ஆலயத்திற்கும் முற்பட்டது என்று கூறப்படுகிறது.

    இக்கோவிலில் சித்திரை தீர்த்தவாரி, வசந்த உற்சவம், வைகாசி விசாகம், ஆனி திருவம்மானை, ஆடிப்பூரம், ஆவணி தபசு 14 நாட்கள், புரட்டாசி நவராத்திரி, ஐப்பசி கந்த சஷ்டி, கார்த்திகை சோமவாரம், திருக்கார்த்திகை, மார்கழி திருவாதிரை, தை பத்ர தீபம், மாசி மகா சிவராத்திரி, பங்குனியில் 12 நாட்கள் பிரமோற்சவம், சபாபதி ஆறுகால அபிஷேக ஆராதனை, சமயகுரவர்கள் மற்றும் 63 நாயன்மார்களின் குருபூஜை, சங்கடஹர சதுர்த்தி, பிரதோஷம், பவுர்ணமி, அஷ்டமி, மாதாந்திர கார்த்திகை, பிரதி செவ்வாய், வெள்ளி போன்ற நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது. ஆவணி மற்றும் பங்குனியில் தேரோட்டமும் உண்டு.

    இந்த ஆலயத்தில் உள்ள இறைவனை, ஸ்ரீவரதுங்கராம பாண்டியர், காஞ்சிபுரம் சிதம்பர நாத முனிவர், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், நமச்சிவாயக் கவிராயர், கல்லல் குகமணிவாசக சரணாலய சுவாமிகள், காளமேகப்புலவர், சென்னிகுளம் அண்ணமலைக் கவிராயர், எட்டிசேரி திருமலை வேற்கவிராயர், சங்குப்புலவர், மலையடிகுறிச்சி பிச்சையா நாவலர், கரிவலம் வந்த நல்லூர் ராமசாமி பிள்ளை ஆகியோர் பாடி துதித்துள்ளனர்.

    இந்தக் கோவிலில் உள்ள இறைவனை வேண்டி எந்த ஒரு காரியமாக இருந்தாலும் ஒரு மண்டலம் பூஜை செய்தால், கேட்ட வரம் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் என்கிறார்கள். இழந்த பொருட்களை மீட்க வேண்டும் என்பவர்கள், இத்தலம் வந்து இறைவனை வழிபடலாம். மனநோய் இருப்பவா்கள், வெற்றிக்காக போராடுபவா்களும் இங்கு வந்து வழிபட்டுச் செல்லலாம்.

    யானை வழிபட்ட திருத்தலம்

    ஒரு காலத்தில் இந்திரனுக்கும், அவரது மகனுக்கும் சாபம் ஏற்பட்டது. அந்த சாபத்தின் காரணமாக அவர்கள் வேடர் களாக இருந்து, இத்தல இறைவனான, பால்வண்ண நாதரை பூசித்து வந்தனர். காலையில் வேடர்கள் இருவரும் ஈசனை பூசிக்க, இரவு நேரத்தில் யானை ஒன்று பால்வண்ணநாதரை பூசித்தது. மறுநாள் ஆலயத்திற்குள் இருந்த பொருட்கள் எல்லாம் சிதறிக் கிடப்பதைக் கண்ட வேடர்கள் கோபம் கொண்டனர். இரவு நேரத்தில் வரும் யானைதான் இதற்கெல்லாம் காரணம் என்பதை அறிந்த அவர்கள், மறுநாள் இரவு யானை வந்தபோது, அதை அம்பு எய்து கொல்ல முயற்சி செய்தனர். அப்போது அந்த யானை வெள்ளை யானையாக உருவெடுத்தது. அதே நேரத்தில் வேடர்களாக இருந்த இந்திரனும், அவரது மகனும் சாப விமோசனம் பெற்றனர். இந்திரன் மற்றும் அவரது மகன் சாபம் தீர்ந்ததாலும், கரி (யானை) வலம் வந்து சிவபெருமானை வழிபட்டதாலும் இந்த ஊருக்கு ‘கரி வலம் வந்த நல்லூர்’ என்று பெயர் ஏற்பட்டது. இந்த ஊருக்கு அநாதிபுரம், பாவநாசம், சித்துருவம், ஞானபாசுரம், சிவசக்திபுரம் , அமுதாசலம், சீவன் முத்திபுரி, உபயபுரி, கரிபுரம், அம்பரபுரம், திருக்களாவனம் போன்ற பெயர்கள் உண்டு.

    இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    இந்த ஆலயமானது, சங்கரன்கோவிலில் இருந்து ராஜ பாளையம் செல்லும் சாலையில் சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் கரிவலம் வந்த நல்லூர் திருத்தலம் அமைந்துள்ளது. இங்கு செல்ல அடிக்கடி பேருந்து வசதிகள் இருக்கின்றன. சங்கரன்கோவிலில் இருந்து ஆட்டோ மூலமாகவும் இந்த ஆலயத்திற்கு வரலாம்.

    முத்தாலங்குறிச்சி காமராசு
    திண்டுக்கல் மாவட்டம் அகரம் பகுதியில் அமைந்துள்ளது முத்தாலம்மன் கோவில். இன்று இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் வரித்தண்டலராக பணிபுரிந்தவர் சக்கரராயர் என்ற அந்தணர். இவர், தனது குலதெய்வமான முத்தியாலு அம்மனின் மீது அதீத பக்தி கொண்டவர். விஜயநகர பேரரசின் வீழ்ச்சிக்கு பின்பு சுல்தான்கள் கட்டுப்பாட்டில் விஜயநகரம் சென்றது. இதையடுத்து சக்கரராயர் அங்கிருந்து தனது குலதெய்வத்துடன் இடம்பெயர முடிவு செய்தார். மேலும் இதற்காக முத்தியாலு அம்மனிடம் அனுமதியும் கேட்டார். அம்மன் குறிப்பால் உணர்த்தியதன் பேரில் தென்திசை நோக்கி குலதெய்வம் மற்றும் தன் கட்டுப்பாட்டில் உள்ள படைகளுடன் புறப்பட்டார்.

    திண்டுக்கல் மாவட்டத்துக்கு வந்த அவர், தாடிக்கொம்பு அருகே குடகனாற்றின் மேற்கு கரையில் அமைந்துள்ள அகரம் பகுதியில் ஓய்வு எடுப்பதற்காக படைகளுடன் முகாமிட்டிருந்தார். அப்போது முத்தியாலு அம்மன் குறிப்பால் உணர்த்திய ஒரு இடத்தில் தனது குலதெய்வத்துக்கு அவர் கோவில் கட்டினார். அன்றில் இருந்து இன்று வரை அந்த கோவிலில் தினசரி வழிபாடு மற்றும் திருவிழாக்கள் பாரம்பரிய முறைப்படி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த கோவிலில் மூலவராக உள்ள முத்தியாலு அம்மனின் பெயர் காலப்போக்கில் மறுவி முத்தாலம்மன் என்று மாறியது.

    அம்மன் உத்தரவு

    இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஐப்பசி மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமை திருவிழா நடத்தப்படும். முன்னதாக ஆவணி மாதம் 10-ம் தேதி அல்லது அதன் பிறகு வரும் வெள்ளிக்கிழமையன்று அம்மன் சன்னதியில் உத்தரவு கேட்கும் வைபவம் நடைபெறும். இதற்காக தாடிக்கொம்பு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் சன்னதியில் திரள்வார்கள். பின்னர் மனமுருகி அம்மனை வேண்டுவார்கள்.

    அப்போது கோவில் பிரகாரத்தில் உள்ள பூதராணி சிலை பக்கமோ அல்லது வடக்கு பிரகாரத்தில் உள்ள திருவாச்சி சிலை பக்கமோ பல்லி சத்தம் கேட்கும். அந்த சத்தத்தையே அம்மனின் உத்தரவாக நினைத்து திருவிழா நடத்தப்படுகிறது. அதேபோல் அம்மனிடம் உத்தரவு கேட்டு வேண்டும் போது, தெற்கு பிரகாரத்தில் உள்ள ஆண்பூத ராஜா சிலை இருக்கும் இடத்தில் பல்லி சத்தம் கேட்டால் அம்மன் உத்தரவு அளிக்கவில்லை என கருதப்பட்டு திருவிழாவும் நடத்தப்படாது. மேலும் பல்லி சத்தம் கொடுக்கவில்லை என்றாலும் திருவிழா நடத்தப்படாது.

    திருவிழா சாட்டுதல்

    அம்மன் உத்தரவு கிடைத்ததும், ஐப்பசி மாதம் முதல் செவ்வாய்க்கிழமையை அடிப்படையாக கொண்டு அதற்கு முந்தைய 10-ம்நாள் ஞாயிற்றுக்கிழமை இரவு பாரம்பரிய முறைப்படி அடிப்படையில் திருவிழா சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறும். அடுத்த நாள் திங்கட்கிழமை முதல் அடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமை வரை 7 நாட்கள் இரவு 8 மணிக்கு உற்சவர் மற்றும் அம்மனின் பண்டார பெட்டி சன்னதியில் இருந்து புறப்பட்டு கொலுமண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும். உற்சவ காலத்தில் அம்மனின் பிறப்பு மண்டபத்தில் சர்க்கரை, முட்டை, களிமண் உள்ளிட்ட பல்வேறு பொருட்களைக்கொண்டு விழா சாட்டப்பட்ட 6-ம் நாள் உற்சவ கால அம்மன் உருவாக்கப்படுகிறது. அதையடுத்து உற்சவ கால அம்மன் கண்திறப்பு மண்டபத்துக்கு எடுத்துச்சென்று அம்மனின் கண்களை திறக்கும் நிகழ்ச்சி நடைபெறும். பின்னர் ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளும் அம்மன் பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்தபடி கொலுமண்டபத்துக்கு செல்லும் நிகழ்ச்சி நடத்தப்படும்.

    கண் திறக்கப்பட்ட உற்சவ கால அம்மன் சன்னதிக்கு செல்லாமல் கொழுமண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்வு வேறு எங்கும் நடைமுறையில் இல்லாத ஒன்றாகும். அன்று பகல் முழுவதும் அம்மன் கொலு மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அப்போது பக்தர்கள் தீச்சட்டி எடுத்தும், குழந்தை பாக்கியம் பெற்றவர்கள் குழந்தைகளை கரும்பு தொட்டிலில் சுமந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். அத்துடன் தங்களது நிலத்தில் விளைந்த கம்பு, சோளம், நெல், மக்காச்சோளம், வாழைப்பழம் ஆகியவற்றை சூறையிட்டும்,கை, கால் சுகம் அடைந்தோர் மண்ணால் செய்யப்பட்ட உடல் உறுப்பு பொம்மைகளை காணிக்கையாக அளிப்பார்கள். அதேபோல் சேத்தாண்டி வேடம் அணிந்து வந்தும் நேர்த்திக்கடன் செலுத்துவர்.

    குழந்தை பாக்கியம்

    அன்று நள்ளிரவு அம்மன் பு‌‌ஷ்ப விமானத்தில் எழுந்தருளி வாணக்காட்சி மண்டபத்திற்கு வருவார். அடுத்த நாள் நண்பகல் வரை அங்கு எழுந்தருளும் அம்மன் சொருகுபட்டை சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்கள் மத்தியில் உலா வரும் நிகழ்ச்சியும், பூஞ்சோலையில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

    அப்போது அம்மனின் பாதத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட எலுமிச்சை பழத்தை பெண் பக்தர்கள் சாப்பிட்டு, அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட மஞ்சளை உடலில் பூசி குளித்து வந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். இங்கு எழுந்தருளியுள்ள விநாயகருக்கு தேங்காய் மாலை அணிவித்து வழிபட்டால் திருமணத்தடை நீங்கும். இந்த கோவிலின் காவல் தெய்வமான பூத ராஜாவை வழிபடுவதன் மூலம் தொழில் மற்றும் வழக்கு தொடர்பான சிக்கல்கள் தீரும்.

    நவக்கிரக பூஜை

    அகரம் முத்தாலம்மன் கோவில் பிரகாரத்தில் எழுந்தருளும் சுரலிங்கேஸ்வரருக்கு ஒவ்வொரு பிரதோ‌‌ஷத்தின் போது சிறப்பு வழிபாடும், ஐப்பசியில் அன்னாபிஷேகமும் நடைபெறும். தினசரி 2 கால பூஜைகளும், விசே‌‌ஷ நாட்களில் சிறப்பு பூஜைகளும், பங்குனி மாதத்தில் சின்ன சாத்திரை வைபவமும் நடைபெறும். அத்துடன் மாதந்தோறும் கார்த்திகை நட்சத்திரம், வைகாசி விசாகம், தைப்பூசம், கந்தச‌‌ஷ்டி போன்ற நாட்களில் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடைபெறும்.

    அமாவாசை, பவுர்ணமி, சித்திரை புத்தாண்டு, ஆடிமாத வெள்ளிக்கிழமைகள், நவராத்திரியின் 9 நாட்கள், விஜயதசமி, தீபாவளி போன்ற விசே‌‌ஷ நாட்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடைபெறும். மார்கழி மாதம் முழுவதும் அதிகாலையில் திருவிளக்கு பூஜை, சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜை நடைபெறும். சனிப்பெயர்ச்சி, குருபெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி நாட்களில் நவக்கிரக சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடைபெறும்.

    அட்சய பாத்திரங்களை ஏந்தியபடி 3 அம்மன்கள்

    அகரம் முத்தாலம்மன் கோவில் கருவறையில் ஞானா சக்தி (அறிவு), கிரியா சக்தி (செயல்), இச்சா சக்தி (ஆசை) ஆகிய அம்சங்களில் கைகளில் அட்சய பாத்திரங்களை ஏந்தியபடி நிற்பது போன்று 3 அம்மன் சிலைகள் உள்ளன. 2005-ம் ஆண்டுக்கு முன்பு சுதையால் செய்யப்பட்ட 3 அம்மன் சிலைகள் இருந்ததை பாரம்பரிய வழக்கப்படி அம்மனிடம் உத்தரவு கேட்டு கல்சிலைகளாக மாற்றப்பட்டது. கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம், முகப்புமண்டபம் என கோவில் பிரகாரம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இக்கோவிலின் கருவறையில் அம்மனை வழிபட்ட குருமா முனிவரின் ஜீவ சமாதியும், அவருடைய பண்டார பெட்டியும் உள்ளது.

    அம்மனுக்கு செய்யும் அனைத்து பூஜைகளும் குருமா முனிவருக்கும், பண்டார பெட்டிக்கும் செய்யப்படுகிறது. இக்கோவிலின் பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் 5 முகங்களுடன் சுரலிங்கேஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அத்துடன் விநாயகர், விசாலாட்சி அம்மன், பாலமுருகன், மகாலட்சுமி, துர்க்கை, நவகிரகங்கள் என அனைத்து தெய்வங்களுக்கும் பிரகாரத்தில் தனித்தனி சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளது.
    மலேசிய நாட்டில் தோன்றிய முதல் திருக்கோவில், பினாங்கு தமிழர்களின் காவல் தெய்வம் என பலவேறு சிறப்புகள் கொண்ட கோவிலாகத் திகழ்வது, பினாங்கு மகாமாரியம்மன் திருக்கோவில்.
    மலேசிய நாட்டில் தோன்றிய முதல் திருக்கோவில், யுனெஸ்கோ உலக பாரம்பரிய தலம், பினாங்கு தமிழர்களின் காவல் தெய்வம், இந்து அறக்கட்டளை வாரியத் திருத்தலம், ஜார்ஜ் டவுன் நகரின் மையப் பகுதியில் அமைந்த ஆலயம் என பலவேறு சிறப்புகள் கொண்ட கோவிலாகத் திகழ்வது, பினாங்கு மகாமாரியம்மன் திருக்கோவில்.

    கி.பி.1786 மற்றும் கி.பி.1800-ம் ஆண்டுகளில் அமைந்த பிரிட்டிஷ்காரர்களின் ஆட்சி, தென்இந்தியர்களின் பினாங்கு வருகையைத் தூண்டியது. தொடக்கக் காலத்தில் அவர்கள், ரப்பர், தேயிலை, காபி தோட்டப் பணியாளர்களாக வந்தனர். பினாங்கு தீவின் அபார வளர்ச்சியும், அதன் தமிழ்நாட்டினை ஒற்றிருந்த சூழலும் அதிக அளவிலான தமிழர்களை ஈர்த்தது. இங்கு குடியேறிய தமிழர்களுக்கு, பிரிட்டிஷ் அரசு தங்கள் விருப்பப்படி கோவில்கள், கட்டிடங்கள் கட்டிக்கொள்ள ஆதரவு தந்தது. இதனால் தாங்கள் விரும்பும் தெய்வங்களுக்கு உரிய கோவில்களை எழுப்பி வழிபடத் தொடங்கினர். ரப்பர் மற்றும் ஈயம் தொழில் வளர்ச்சியினால் மக்களின் வருகையும் அதிகரித்தது. குறிப்பாக ராமநாதபுரம், தஞ்சாவூர் பகுதிகளைச் சார்ந்தவர்கள் அதிக அளவில் இங்கு குடியேறினர்.

    மலேசியாவில் உருவாக்கப்பட்ட முதல் கோவிலாக பினாங்கு தீவில் முத்து மாரியம்மன் கோவில் குயின் ஸ்திரிட்டில் பட்டா நிலத்தில் கி.பி. 1801-ம் ஆண்டு எழுப்பப்பட்டது. இதன்பிறகே யோர்க் சாலை ராமர், பட்டர்வொர்த் மகா மாரியம்மன், வாட்டர்பால் சாலை பாலதண்டாயுதபாணி, கணேசர், பினாங்கு சாலை குஞ்ச் பிகாரி கோவில்கள் எழுப்பப்பட்டன.

    கி.பி.1801-ல் இந்தக் கோவிலுக்கான நிலத்தை, பெட்டிலிங்கம் செட்டியிடம் பிரிட்டிஷ்காரர்கள் வழங்கினர். கி.பி. 1833-ம் ஆண்டு முதல் குடமுழுக்கு விழா நடைபெற்றது. தொடக்கத்தில் பனை ஓலை குடிலாக இருந்து, பின்பு செங்கல் கட்டிடமாக அமைக்கப்பட்டது. கி.பி.1980 முதல் முத்து மாரியம்மனே, மகா மாரியம்மன் என அழைக்கப்படுகிறார்.

    ஆலயத்தின் நடுநாயகமாக விளங்குபவர் மகாமாரியம்மன். 1801-ல் சிறு வழிபாட்டுத் தலமாக தொடங்கி 1833-ம் ஆண்டில் பெரிய கோவிலாக மாற்றம் பெற்றது. சுமார் இருநூறு ஆண்டுகளைக் கடந்தும் ஒரே இடத்தில் நிலைத்து நின்று அருள்வழங்கி வருகிறார், அன்னை மகாமாரியம்மன்.

    ஆலய அமைப்பு

    23 அடி உயரமான ராஜகோபுரம் எண்ணற்ற சிற்பங்கள் கொண்டு வண்ண மயமாக அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் சிலைகள் அனைத்தும் தமிழ்நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்டவையாகும். காசிவிசுவநாதர், விசாலாட்சி, காளி, முருகன், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, சண்டிகேசுவரர், பைரவர் என அனைத்து வடிவங்களும் அழகுற அமைந்துள்ளன. மிகத் துல்லியமான தூண் வேலைப்பாடுகள் சிற்பியின் கைவண்ணத்தை பறைசாற்றுகின்றது. ஆலய மேல் விதானத்தில் பன்னிரண்டு ராசி சின்னங்கள் மரத்தால் செதுக்கப்பட்டுள்ளன.

    மலேசிய நாட்டிலேயே அதிக வரலாறு மற்றும் கலாசார கட்டிடங்களைக் கொண்ட மாநிலமாகத் திகழ்வது, பினாங்கு மாநிலம்தான். பினாங்கு - ஜார்ஜ்டவுன் மையப்பகுதி யூனெஸ்கோ உலக பாரம்பரிய தலம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில் 2008-ம் ஆண்டு மகாமாரியம்மன் கோவிலும் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    மலேசியாவின் பதின்மூன்று மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்வது, பினாங்கு மாநிலம். கி.பி.846-ல் சோழமன்னன் கால் பதித்த பூமியாக பினாங் தீவும், அதையொட்டி கெடாரம் எனும் கடாவும் உள்ளன. கி.பி.1786-ல் ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் பினாங்கு வந்தது. அதன் பின்னரே தமிழர்கள் குடியேற்றம் நடந்தது. மருதுபாண்டியரின் மகனான துரைசாமி 73 கைதிகளோடு பினாங்கு தீவிற்குக் கடத்தப்பட்டதாக கார்ல்வெல்சின் எழுதிய ராணுவ நினைவுகள் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    கோலாலம்பூரை அடுத்து அதிக மக்கள் வாழும் மாநிலமாக பினாங்கு திகழ்கின்றது. அதேபோல, தமிழர்கள் அதிகம் வாழும் மாநிலமாகவும், தைப்பூசத்திற்குப் புகழ்பெற்ற மாநிலமாகவும் விளங்குகிறது. இங்குதான் புகழ்பெற்ற தண்ணீர்மலை முருகன் கோவில் உள்ளது.

    அமைவிடம்

    மலேசியா நாட்டின் பதின்மூன்று மாநிலங்களில் ஒன்றான பினாங்கு தீவில், ஜார்ஜ் டவுன் பகுதியில் உள்ள குயின் ஸ்திரிட்டில் இவ்வாலயம் அமைந்துள்ளது.
    பாணலிங்கம் உருவில் உள்ள இறைவன் சாத்தங்குடி எனும் கிராமத்தில் உள்ள விசுவநாத சுவாமி ஆலயத்தில் அருள்புரிகிறார். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    பொதுவாக சிவாலயங்களில் மூலவரின் விக்கிரகம் கறுப்பு வண்ணத்தில் இருப்பது இயல்பு. அபூர்வமாக சில ஆலயங்களில் மரகத லிங்கம், பவள லிங்கம் இருப்பது உண்டு. ஆனால் பாணலிங்கம் ‘மதுவர்ணம்’ என அழைக்கப்படும் தேன் நிறத்தில் காணப்படுவது மிகவும் அற்புதமான அமைப்பாகும்.

    ஆம். இப்படிப்பட்ட ஒரு பாணலிங்கம் உருவில் உள்ள இறைவன் சாத்தங்குடி எனும் கிராமத்தில் உள்ள விசுவநாத சுவாமி ஆலயத்தில் அருள்புரிகிறார்.

    சாத்தங்குடி ஒரு சின்னஞ்சிறிய அழகிய கிராமம். உத்திரவாகினி எனும் கொள்ளிடம் ஆற்றின் தென் கரையிலும், திருப்புன்கூர் மற்றும் தலையாலங்காடு எனும் தலங்களுக்கு வடமேற்கிலும், திருவாளப்புத்தூர் மாணிக்கவண்ணர் ஆலயத்திற்கு வடகிழக்கிலும், செவ்வாய் தலமான வைத்தீஸ்வரன் கோவிலுக்கு மேற்கிலும், இலுப்பைப்பட்டு திருநீலகண்டர் ஆலயத்திற்கு கிழக்கிலும் என சுற்றிலும் சிவ தலங்கள் சூழ அமைந்துள்ளது சாத்தங்குடி விஸ்வநாத சுவாமி ஆலயம்.

    முகப்பில் மொட்டைக் கோபுரம். அதைத் தாண்டியதும் விசாலமான பிரகாரம். அந்தப் பிரகாரத்தின் நடுவே நந்தியும், பலிபீடமும் இருக்க, அடுத்து உள்ளது சிறப்பு மண்டபம். அதை அடுத்து மகாமண்டபமும், அர்த்த மண்டபமும் இருக்கின்றன. இதனையடுத்து இருக்கும் கருவறையில் இறைவன் விசுவநாத சுவாமி லிங்கத் திருமேனியில் கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார்.

    இறைவனின் ஆவுடை பாகம் சதுரமாகவும், நிறம் மதுவர்ணம் என அழைக்கப்படும் தேன் நிறத்திலும் அமைந்துள்ளது. பாணலிங்கத்தின் நிறம் பல நூறு ஆண்டுகளைக் கடந்தும் பலவித அபிஷேகங்களாலும், எண்ணெய் சாற்றுவதாலும் மாறாத நிலையிலேயே உள்ளது.

    இறைவன் சன்னிதிக்கு வடபுறம் இறைவி விசாலாட்சியின் சன்னிதி உள்ளது. அன்னை நின்ற கோலத்தில் கீழ்திசை நோக்கி அருள்பாலிக்கிறாள். இங்கு அன்னைக்கு நான்கு கரங்கள். அன்னை தன் ஒரு கரத்தில் உத்திராட்ச மாலையையும், இன்னொரு கரத்தில் தாமரை மலரையும் ஏந்தி காட்சி தருகிறாள். அன்னையின் மற்ற இரு கரங்கள் அபய, வரத ஹஸ்த முத்திரைகளுடன் காட்சி தருகின்றன. தவிர அன்னை இங்கு திருமண கோலத்தில் காட்சி தருவது சிறப்புக்குரியதாகும். எனவே இங்கு திருமணமாக வேண்டி காத்திருப்பவர்களும், கிரகப் பாதிப்புகளால் திருமணமாக தாமதமாகும் பெண்களும், இங்கு வந்து அன்னையை ஆராதனை செய்து வந்தால், அவர்களுக்கு விரைவாக திருமணம் நடைபெறுவது உறுதி என்கின்றனர் பக்தர்கள்.

    இங்கு இறைவனும் இறைவியும் ஒரே முகமாக கிழக்கு நோக்கி அருள்பாலிப்பது ‘வீரசக்தி’ என அழைக்கப்படுகிறது. இந்த அமைப்பும் ஒரு சிறப்பான அமைப்பாகவே பக்தர்களால் கருதப்படுகிறது. ஆலயத்தின் தீர்த்தம் கங்கா தீர்த்தம் உள்ளது. தலவிருட்சம் வில்வம். இறைவனின் தேவ கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். ஆலய திருச்சுற்றில் மேற்கில் பிள்ளையார், வள்ளி- தெய்வானை சமேத முருகப்பெருமான் சன்னிதிகளும், வடக்கில் சண்டீகேஸ்வரர் சன்னிதியும் உள்ளன.

    கிழக்கில் சூரியன் நான்கு கைகளுடனும் திருவாட்சியுடனும் ஒரே கல்லினால் ஆன நான்கு அடி உயரத்தில் தனி சன்னிதியில் அருள்பாலிக்கிறார். இறைவன் -இறைவி சன்னிதிக்கு இடையே கயிலாசநாதர் சன்னிதி உள்ளது.

    இந்த ஆலயம் முற்றிலும் கருங்கல் வேலைபாடுகளால் ஆனது. இந்த ஆலயத்தில் பூஜை முறைகள் மற்றும் திருவிழாக்கள் சைவ ஆகமங்களில் ஒன்றாகிய காரண ஆகமத்தின் படி நடத்தப்படுகின்றன. இந்த ஆலய விழாக்களாக நால்வர் திருநட்சத்திரம், வருடப் பிறப்பு, நவராத்திரி, சிவராத்திரி, விஜயதசமி, விநாயகர் சதுர்த்தி, தீபாவளி, திருக்கார்த்திகை, சங்கராந்தி, தை வெள்ளி, பங்குனி உத்திரம் ஆகிய நாட்களில் இறைவன் - இறைவிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

    கன்னியரின் கவலை தீர்க்கும் அன்னையாகவே இங்கு அருள்பாலிக்கும் விசாலாட்சி விளங்குகிறாள் என்று பக்தர்கள் நம்புவது உண்மைதான்.

    இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் 9 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம் :

    கும்பகோணம் அடுத்த திருப்பனந்தாள் - சீர்காழி பேருந்து தடத்தில் உள்ள நாகை மாவட்டம் மணல்மேடு என்ற ஊரில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது சாத்தங்குடி என்ற இந்த தலம்.
    விருதுநகர் மாவட்டம் தேவதானம் வனப் பகுதியில் அமைந்திருக்கிறது திருக்கொழுந்தீஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    விருதுநகர் மாவட்டம் தேவதானம் வனப் பகுதியில் அமைந்திருக்கிறது திருக்கொழுந்தீஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத் தலமாக விளங்குகிறது. சங்கரன்கோவில் ஆலயம் நிலத்திற்குரிய தலமாகவும், தருகாபுரம் ஆலயம் நீர் தலமாகவும், தென்மலை ஆலயம் காற்று தலமாகவும், கரி வலம் வந்த நல்லூர் ஆலயம் அக்னி தலமாகவும் குறிப்பிடப்படுகின்றன. சிவராத்திரியன்று பல அடியார்கள் ஒன்று கூடி, இந்த பஞ்சபூத தலங் களுக்கும் நடந்தே சென்று வழிபாடு செய்வார்கள். ஆகாய தலமாக விளங்கும் தேவதானம் திருக்கொழுந்தீஸ்வரர் ஆலயத்தைப் பற்றி இங்கே நாம் பார்ப்போம்.

    தல வரலாறு

    அடர்ந்த காட்டுக்குள் அலைந்து திரிந்தது ஒரு கலைமான். அது கொன்றைத் தழைகளை விருப்பமுடன் தின்ன ஆரம்பித்தது. அதற்குள் சிவலிங்கம் ஒன்று இருப்பதை கலைமான் கண்டது. அந்நாள் முதல் தினமும் அந்த சிவலிங்கத்தை வணங்கி நின்றது. அந்தக் காட்டில் மேய்ச்சலுக்காக வந்த பசுவும், மானைப்போலவே அந்த சிவலிங்கத்தின் மீது தன் பாலைச் சுரந்து அபிஷேகம் செய்து வணங்கியது.

    இவ்விரு விலங்குகளும் ஒன்றை ஒன்று சந்திக்காமலேயே பல நாட்களாக இறைவனை வணங்கிவந்தன. ஒருநாள் சிவலிங்கத்தின் அருகில் சாணம், கோமியம் கிடப்பதைக் கண்டு கலைமான் கோபம் கொண்டது. அப்போது அங்கு வந்த பசுவைக் கண்ட கலைமான், இறைவன் இருப்பிடம் அருகில் இப்படி அசுத்தம் செய்தது இந்த பசுதான் என்று அறிந்து கொண்டு, தன்னுடைய கொம்புகளால் பசுவைத் தாக்கியது. பசுவும் எதிர் தாக்குதல் நடத்தியது. இரு விலங்கு களுக்கும் பயங்கரமாக சண்டை நடைபெற்றது.

    அப்போது அவர்கள் இருவருக்கும் காட்சி கொடுத்த இறைவன், அவர்களை சமரசம் செய்து, இருவருக்கும் முக்தியை வழங்கினார்.

    அந்த நேரம் பார்த்து பசுவின் சொந்தக்காரனான சங்கரன் என்பவன் அங்குவந்து, இந்தக் காட்சிகளை எல்லாம் கண்ணாரக் கண்டு ஆனந்தம் அடைந்தான். இறைவன் முன்பு அமர்ந்தான். மற்ற பசுக்களில் இருந்து பாலை கறந்து இறைவனை நீராட்டினான். மலர் தூவினான். தான் கொண்டு வந்த கட்டுச் சோற்றை வைத்தும், பழங்கள், தேன், வாசனைச் சாந்து, குங்கிலியம் ஆகியவற்றைக் காணிக்கைப் பொருளாக வைத்தும் இறைவனை வணங்கினான். அவன் கண்ட காட்சியை ஊராரிடமும் கூறினான். ஊர் மக்களும் திரளாக வந்து இறைவனை வணங்கி நின்றார்கள்.

    கொன்றை மரத்தின் கீழ் இறைவன் வீற்றிருப்பதால் அவருக்கு ‘திருமலைக் கொழுந்தீசர்’ எனப் பெயர் பெற்றார். இந்தப் பகுதியில் கருநெல்லி மரத்தடியில் தேவியும், கங்கையும் இறைவனைக் காணத் தவமிருந்தனர். இறைவன் அவர்களுக்கு காட்சி கொடுத்தார். இதனால் இங்குள்ள தேவிக்குத் ‘தவம் பெற்ற நாயகி’ என்ற பெயர் ஏற்பட்டது.

    திருக்கொழுந்தீஸ்வரர் ஆலயத்தை நோக்கி செல்வோம். மிகப்பெரிய தெப்பக்குளம், அதை தாண்டி நம்மை முகப்பு வாசல் வரவேற்கிறது. உள்ளே நுழைந்தால் கொடிமர மண்டபம். அங்கே கோவில் உருவாக காரணமான சேத்தூர் ஜமீன்தார் ஆதி சின்மயத்தேவர், அவரது மனைவி மனோன்மணியம் ஆகியோரின் திருவுருவ சிலை வணங்கிய நிலையில் காணப்படுகிறது. அதையடுத்து கொலு மண்டபம், தியான மண்டபம், அர்த்த மண்டபம், கர்ப்ப கிரகம் என மண்டபங்களை தாண்டி உள்ளே நுழைந்தால் கருவறையில் சிவபெருமானை காண்கிறோம்.

    தானே முளைத்த லிங்கம். மூர்த்தி சிறியதுதான் ஆனால் கீர்த்தி பெரியது. ஆகாயத்தலமான இந்த ஆலயத்தில் எம்பெருமான் அம்மையப்பராக, நச்சாடை தவிர்த்தருளிய இறைவனாக கருணையோடு நமக்கு அருள்பாலிக்கிறார். கோவிலை சுற்றி தட்சிணாமூர்த்தி, விஷ்ணு - மகாலட்சுமி, பிரம்மா, சரஸ்வதி ஆகியோர் வீற்றிருக்கின்றனர். கன்னிமூல விநாயகர், வள்ளி - தெய்வானை சமேத முருகன், சனீஸ்வரர், சண்டிகேஸ்வரர், பைரவர் உள்பட அனைத்து தெய்வங்களும் பிரமாண்டமாக உள்ளன.

    எந்த கோவிலிலும் இல்லாத வகையில் இந்த ஆலயம் வெளிச்சுற்று பிரகாரத்தில் உயரமான இடத்தில் திருக்கொழுந்தீஸ்வரரும், அருகே கண்கொடுத்த சிவன், கண் எடுத்த சிவனும் உள்ளனர். அங்கிருந்து இறங்கினால் அம்மன் தவம் இருந்த இடம் காணப்படுகிறது. அடுத்ததாக கோவிலில் தல விருட்சமான திருக்கொன்றை மரமும் இருக்கிறது. அருகில் மரத் தடியில் அம்மன் தவகோலம் நமக்கு வேண்டும் வரம் தருவதாகவே காணப்படுகிறது.

    கோவில் முன்புறம் நாகலிங்க மரம் உள்ளது. இந்த மரம் மிகவும் விசேஷமானதாகும். குழந்தை வரம் வேண்டி வருவோருக்கு உடனே வரம் கிடைக்க இந்த மரம் காரணமாகிறது. இந்த மரத்தில் உள்ள நாகலிங்க பூவை பறித்து கோவில் நிர்வாகம் மூலம் பூஜையில் வைத்து தருகிறார்கள். இதை உண்ணும் போது, குழந்தை பாக்கியம் கிடைக்கிறது.

    சோழனுக்கு கண்கொடுத்த கண் கண்ட தெய்வம் அம்மையப்பர் என்பதால், அவரை கண்டு வணங்கி கண்நோய் தீர்ந்து செல்பவர்களும் பலர். நச்சாடையை தன் மீது போர்த்த வைத்து பாண்டிய மன்னரை காத்தது போல, இவரை அண்டி வந்தவர்கள் கடன் மற்றும் தீராத நோய்களை தன்னகத்தே இழுத்து பக்தர்களை காக்க வல்லவராக இந்த சிவபெருமான் திகழ் கிறார். இதனால் பலதரப்பட்ட பிரச்சினை உள்ள மக்களும் இங்கு வந்து வணங்கி செல்கிறார்கள்.

    இக்கோவிலில் நடைபெறும் திருவிழாவில் சிவராத்திரி திருவிழா மிகச்சிறப்பானது. பஞ்சபூத தலங்களில் ஆகாய தலமான இவ்வாலயத்தை வணங்க பக்தர்கள் லட்சக்கணக்கில் கூடுகிறார்கள். இவ்வேளையில் பக்தர்கள் வந்த வாகனங்கள் சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்துக்கு நீண்டு நிற்கும் காட்சி நம்மை பிரமிக்க வைக்கும்.

    ஆலயத்தில் பிரதோஷம், கார்த்திகை, மாத வெள்ளி, சோமாவாரம் மிகச்சிறப்பாக நடை பெறும். வைகாசி விசாகம் 10 நாள் திருவிழாவாக நடைபெறும். மாசி மகம் அன்று அம்மன், தபசு காட்சிக்காக தேவதானம் முருகன் கோவில் வந்து தவமிருப்பது விசேஷமானது. ஐப்பசி மாத திருவிழாவில் 6 நாள் கந்த சஷ்டியும், 7-வது நாள் திருக்கல்யாணமும் மிகச்சிறப்பாக நடைபெறும். தை பூசத்திருவிழாவும் இங்கு சிறப்பாக நடக்கிறது.

    பாண்டியனுக்கு அருள் செய்த இறைவன்

    வீரபாகு என்னும் பாண்டிய மன்னன் பாண்டிய நாட்டை ஆண்டுவந்தான். அவன் ஓர் அந்தணனைக் கொன்ற காரணத்தினால் பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. இத்தல இறைவனை வழிபட்டதால், மன்னனின் தோஷம் நீங்கியது. பின்னர் அந்த மன்னன், ‘சிவனே கதி’ என்று இங்கேயே அமர்ந்து விட்டான்.

    சோழநாட்டை ஆண்ட விக்கிரமசோழன் என்ற மன்னன், இந்த சமயத்தில் பாண்டியன் மீது போர் தொடுத்தான். சிவனே என்று கிடந்த பாண்டியனை சிறை பிடிக்க தனது படையை ஏவினான். ஆனால் சிவபெருமானே போர் வீரனாய்க் கோலம் பூண்டு, சோழனுடன் போரிட்டு பாண்டியனுக்குச் சேவகம் செய்து வெற்றியை பெற்றுத் தந்தார். இதனால் இறைவனுக்கு ‘சேவகத்தேவர்’ என்ற பெயரும் உண்டானது.

    பாண்டிய மன்னனிடம் நட்பு பாராட்டுவது போல, நச்சு தோய்ந்த ஆடை ஒன்றை தயாரித்து அனுப்பினான் சோழ மன்னன். அதற்கு முன்தினம் பாண்டியனின் கனவில் தோன்றிய இறைவன், “நாளை வரும் ஆடையை என் மீது போற்று..” என்று கூறினார். மன்னனும் அவ்வாறே செய்தான். சிவன் மீது போற்றப்பட்ட நச்சு தோய்ந்த ஆடை, பேரொளியுடன் எரிந்து சாம்பலானது. இதனால் இறை வனுக்கு ‘நச்சாடை தவிர்த்தருளிய தேவர்’ என்ற பெயரும் வந்தது.

    அந்த சமயத்தில் சோழ மன்னனின் கண் பார்வை பறிபோனது. தன் தவறை உணர்ந்த சோழ மன்னன், பாண்டியன் இறைவனுக்கு கட்டிய ஆலயத்திற்கு பல திருப்பணிகளைச் செய்தான். தான் தங்கிய பாசறைக்கு ‘விக்கிரம பாண்டியன்’ என்று பெயரிட்டு, ‘சோழபுரம்’ என்ற ஊரை அமைத்தான். இதையடுத்து சோழனுக்கு கண்பார்வை வந்தது. சோழனின் கண் எடுத்த சிவனும், கண் கொடுத்த சிவனும், திருக்கொழுந்தீஸ்வரர் ஆலயத்திற்கு அருகேயே இருக்கின்றனா். தனக்கு கண் கிடைத்ததன் காரணமாக, சிவனுக்கு சேத்தூரில் ஒரு ஆலயத்தை சோழ மன்னன் கட்டினான். அந்த ஆலயம் ‘திருகண்ணீசர் ஆலயம்’ என்று அழைக்கப்படுகிறது.

    இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் 10 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் - புளியங்குடி சாலையில் அமைந்திருக்கிறது தேவ தானம் என்ற ஊா். கோவில் இருப்பது வனப்பகுதி என்பதால் ஊரில் இருந்து 6 கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டும். எப்போதும் ஆட்டோ வசதி உண்டு. விழாக் காலங்களில் மட்டும் பஸ் வசதிகள் இருக்கும்.

    முத்தாலங்குறிச்சி காமராசு
    நாகை மாவட்டம் சீர்காழி அருகே திருநாங்கூரில் நாராயண பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    நாகை மாவட்டம் சீர்காழி அருகே திருநாங்கூரில் நாராயண பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும்.
    திருமங்கையாழ் வாரால் பாடல் பெற்ற இத்தலம் திருநாங்கூரில் அமைந் துள்ளது. அழகு மிக்க உப் பரிகைகளுடன் கூடிய மாடங்களைக் கொண்ட வீடுகள் நிறைந்து இங்கு இறைவன் எழுந்தருளியிருக்கின்ற காரணத்தால் திருமணிமாடக் கோவில் எனப்பெயர் வந்ததாகக் கூறுவர். பத்ரிகாஆரமத்தில் இருக்கும் நாராயணனே அதேபோன்ற அமர்ந்த கோலத்தில் இருப்பதாக நம்பிக்கையாகும்.

    ‘நந்தா விளக்கே, அளத்தற் கரியாய்’ என்று ஆழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார். ஸ்ரீமந் நாராயணனை விளக்கே என்று அழைக்கிறார். ஒருவராலும் தூண்டப் படாமல் தானாகவே ஒளியுடன் திகழும் தூண்டா விளக்காகும். அதாவது நித்யமான ‘ஸ்வயம் பிரகாச மான ஞானத்தை உடையவன்’ என்பது பொருள்.
    அழகிய உப்பரிகை களுடன் கூடிய மாடங்களைக் கொண்ட வீடுகள் நிறைந்து இங்கு எம்பெருமான் எழுந்தருளியிருக்கின்ற காரணத்தால் திருமணி மாடக்கோவில் எனப்பெயர் வந்ததாகவும் கூறுவர்.

    சீர்காழிக்கு அருகில் உள்ள திருமணி மாடக்கோவில் என்னும் வைணவத் திருப்பதியில், நாராயணன் வீற்றிருக்கும் கோலத்தில் தரிசனம் தருகிறார். இந்த கோவில் கோபுரத்தில் மூன்று துளைகள் இருக்கின்றன. அதன் வழியே வருடத்தின் 365 நாட்களும் தன் கிரணங்களால் பெருமாளை பூஜிக் கிறான் ஆதவன்.
    11 பெருமான்கள்

    நாங்கூர் - வடமொழியில் நாகபுரி என வழங்கும். ஆண்டுதோறும் தை அமாவாசையன்று நாங் கூரைச் சேர்ந்த பதினொரு திருக்கோவில் எம்பெரு மான்களும் தங்கக் கருட வாகனங்கள் மீது காலையில் எழுந்தருளி மாலை வரையிலும் இத்தலத்தில் தங்குவார்கள். இதற்கென இக்கோவிலில் வரிசையாகத் தனித்தனி மண்டபங்கள் உள்ளன. எல்லோரும் இரவில் கருட வாகனத்தில் சேவை சாதிக்கின்றார்கள். திருமங்கையாழ்வார் அன்னவாகனத்தின் மீது எழுந்தருளுவார்.
    ஆண்டு முழுவதும் பதினொரு தங்கக் கருட வாகனங்க ளும் பாது காப்பாக இக்கோயிலில் வைக்கப் பெற்றுள்ளன.

    மூலவர் : - நாராயணன், நந்தாவிளக்கு கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம்
    தாயார்: - புண்டரீகவல்லித் தாயார்
    உற்சவர் : அளத்தற் கரியான்
    தீர்த்தம்: இந்திர புஷ்கரணி, ருத்ர புஷ்கரணி

    பத்ரிகாச்ரமத்தில் இருக்கும் ஸ்ரீமந் நாராயணனே இங்கு 11 திருமால்களில் ஒருவராக வந்து நின்றார். பத்ரியிலும் நாராயணன் என்ற பெயரிலேயே அமர்ந்த திருக்கோலம், இங்கும் அதே நிலையில் உள்ளார்.

    பத்ரிகாஸ்ரமத்தில் தான் ஸ்ரீமந்நாராயணன் திருமந்திரத்தை உபதேசித்து அருளினார். எனவே தான் எமக்கும் அந்த மந்திரத்தை அருள வேண்டுமென தேவர்கள் இங்கு வந்து வேண்டுகின்றனர் என்பது ஐதீகம். திருமந்திரம் உபதேசித்த பெருமாளே இங்கு எழுந்தருளியிருப்பதால் இது பத்ரிக்குச் சமமான ஸ்தலம்.

    எம்பெருமான், சிவனின் நடனத்தை நிறுத்த, திருநாங்கூரில் பிரவேசித்த போது இந்த தலம் அருகில் சிவன் நடனம் புரிந்துகொண்டு இருந்த தாகவும், ஸ்ரீமந் நாராயணனைப் பரமபத நாதனாகக் கண்ட பரமேஸ்வரன் தன்னைப்போல் 11 உருக் கொண்டு பெருமாள் காட்சி தர வேண்டுமென விண்ணப்பம் செய்ய, அவ்விதமே எம்பெருமான் 11 திருக்கோலங்களில் காட்சி தந்து ஒரு சிவனை அழைத்து ஒரு சிவனுக்குள் செலுத்தி பிறகு இன்னொரு சிவனை அழைத்துச் செலுத்தி இந்த விதமாக 11 சிவன்களை ஒன்றாக்கி நிறுத்தினார் என்பது ஐதீகம்.

    இந்த மணிமாடக்கோவில் நாராயணப் பெருமாளே பத்து திருமேனிகளை எடுத்துக் கொண்டு தாம் ஒரு திருமேனியாக வந்ததாகவும் கூறுவர். திருநாங்கூர் கருடசேவைத் திருவிழாவின் போது 11 எம்பெருமான்களும் இங்கு எழுந்தருள சீர்காழியை சுற்றியுள்ள இடங்களில் இருந்து பக்தர்கள் வருகை தந்து பெருமானை தரிசனம் செய்வர். தற்போது இந்த விழா மிகவும் பிரசித்து பெற்று விட்டதால் தமிழகமெங்கும் உள்ள பக்தர்கள் கருட சேவை வைபவதத்தில் கலந்து கொள்கிறார்கள்.

    திருமங்கை யாழ்வார் ஒவ்வொரு பெருமானையும் வலம்வந்து (மாலை மரியாதைகளுடன்) மங்களாசாசனம் செய்யும் காட்சி தை அமாவாசைக்கு மறுநாள் இங்கு நடப்பது கண்கொள்ளாக் காட்சியாகும். திருமங்கை யாழ்வார் ஒவ்வொரு பெருமாளாக மங்களா சாசனம் செய்துவரும்போது அப்பெருமாளுக்கு உரிய பாசுரங்களை பக்தர்களுடன் சேர்ந்து பாடல் சேவிப்பது செவிக்கினிய விருந்தாகும்.

    திருக்கோட்டியூர் நம்பி இங்கு விஜயம் செய்துள்ளார். திருமந்திரத்தை உபதேசித்த பத்ரி நாராயணன் இருக்கும் இடம். திருமந்திரத்தை ராமானுஜருக்கு உபதேசித்த திருக்கோட்டியூர் நம்பி இங்கு எழுந்தருளியிருப்பது இத்தலத்தின் விசேஷமாகும். மிகவும் சிறந்த வடிவமைப்புடன் பெரிய அளவில் கட்டப்பட்டுள்ளது.
    திருமங்கையாழ்வாரால் மட்டும் 10 பாசுரங்களில் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது.

     இயற்கையெழில் கொஞ்ச செந்நெல் வயல்கள் சூழ, நிறைந்த பொழில்களில் மந்தாரம் நின்றிலங்க மிகவும் ரம்மியமாகத் திகழும் இப்பகுதியில் (திருநாங்கூர் பகுதி) இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள பறவை களின் வருகையும் வாழ்வும் திருமங்கையாழ்வாரின் பாசுரங்களில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

    பழனம் என்று சொல்லத் தக்க அளவில் அமைந்துள்ள இப்பகுதியில் பைங்காற் கொக்கும், செங்கால் அன்னமும், குயிலும், மயிலும், கிளியும், புறாவும் தம் துணையோடு பறந்து ஒன்றித் திளைத்து விளையாடி மகிழும் காட்சிகள் திருமங்கை யாழ்வாரின் பாடல்களிலும் பயின்று வந்துள்ளன.

    ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசைக்கு மறுநாள் திருநாங்கூரில் ஆண்டு தோறும் இந்த பெரு மாள்களை மங்களா சாசனம் செய்ய, திருமங்கையாழ்வார் இங்கு வருவதாக பக்தர்களின் நம்பிக்கை.

    திருநாங்கூர் சுற்றி உள்ள வயல் வெளிகளில் கருட சேவைக்கு (முதல் நாள் நள்ளிரவில்) காற்றி னால் நெற்பயிர்கள் சல..சல.. என்று அசைய அந்த சத்தத்தைக் கேட்ட உடன் திருமங்கை யாழ்வார் பிர வேசித்து விட்டதாக பக்தர்கள் கூத்தாடு வதும், திருமங்கையாழ்வாரால் மிதிக்கப்பட்ட வயல் வெளிகளில் மிகுந்த நெல் விளை யும் என்பதும் இப்பகுதியில் நிலவும் நம்பிக்கையாகும்.
    கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள ஹரிப்பாடு என்ற இடத்தில் மண்ணாறசாலை நாகராஜா கோவில் இருக்கிறது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள ஹரிப்பாடு என்ற இடத்தில் மண்ணாறசாலை நாகராஜா கோவில் இருக்கிறது. இந்த ஆலயம் பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும் சிறப்புமிக்க திருத்தலமாக விளங்கி வருகிறது. இந்த ஆலயத்தின் சிறப்புகளை இங்கே பார்க்கலாம்.

    கோவில் வரலாறு

    திருமாலின் அவதாரங்களில் ஒன்று, பரசுராமர் அவதாரம். இவர் தனது தந்தையை கொன்ற சத்திரி யர்களின் வம்சங்களையே அழித்தொழித்தார். இதனால் ஏற்பட்ட பாவங்களில் இருந்து விமோ சனம் பெற விரும்பிய பரசுராமர், தெய்வீக அம்சம் கொண்ட மகரிஷிகளை அணுகினார். சொந்தமாக ஒரு நிலத்தை பிராமணர்களுக்கு தானம் செய்திட அவர்கள் கட்டளையிட்டனர்.

    பரசுராமர் பூமியைப்பெற வருண பகவானை வழிபட்டார். பரம்பொருளான சிவன் அருளிய ‘மழு’ என்ற ஆயுதத்தை சமுத்திரத்திலிருந்து வீசினார். அந்த மழு சென்று விழுந்த இடம் வரை கடல் விலகியது. அவ்வாறு கிடைத்த பூமியை அந்தணர் களுக்கு தானம் செய்தார். அதுதான் கேரளம் என்று புராணக் கதைகள் சொல்கின்றன.

    உப்புச்சுவை காரணமாக வாழ இயலாமல் மரஞ்செடிகள் கூட முளைக்க முடியாமல் இருந்ததால், அந்த இடத்தில் மனிதர்கள் வாழ இயலாது என்று கருதி, மக்கள் அனைவரும் அங்கிருந்து செல்லத் தொடங்கினர். இதனை அறிந்த பரசுராமர் வேதனையடைந்தார். அவர் திருமாலை நினைத்து தவம் புரிந்தார். திருமால் அவருக்கு நேரில் காட்சி தந்தார். “நாகராஜாவின் அருள்ஒளி எங்கும் பரவினால் மட்டுமே எண்ணியவை நடக்கும். அதற்கு ஒரே ஒரு வழி, நாகராஜரை மனதிருப்தி அடையச் செய்து, அவரது அருளைப் பெற வேண்டும்” என்று கூறி மறைந்தார்.

    கேரளம் இயற்கையழகு நிறைந்த நாடாகவும், மரஞ்செடி கொடிகள் நிறைந்ததாகவும் அனைத்து சம்பத்துகளும் நிறைந்த இடமாகவும் மாறிய பின்னரே அங்கிருந்து விலகுவது என பரசுராமர் தீர்மானித்தார். அதற்கு நாகராஜாவை திருப்திப்படுத்த ஏகாந்தமான ஒரு வனாந்திர பகுதியைத் தேடி தன் சீடர்களோடு புறப்பட்டார். கேரளத்தின் தென் பகுதி யில் கடலோரத்தின் அருகே தகுந்த ஓர் இடத்தை கண்டார். தன் நீண்டகால திட்டத்திற்கு அனுகூலமான இடமான அங்கே தவம்புரிய ‘தீர்த்த சாலை’ அமைத்தார்.

    திருமாலின் அவதாரமான பரசுராமர் கடுமையான தவம் புரிய நேர்ந்தது. இந்த தவம் காரணமாக அபூர்வமான தரிசனம் கிடைத்தது. நாகராஜாவின் பாத கமலங்களில் தலைகுனிந்து வழிபட்டார். மனம் நெகிழ்ந்து துதித்து நின்றார். பின் கரம் குவித்து மெய்சிலிர்க்க வேண்டுதலை அறிவித்தார். பிற்காலத்தில் தீர்த்த சாலை, ‘மண்ணாற சாலை’ என்று பெயர் மாற்றம் கண்டது.

    நாகராஜா, பரசுராமரின் வேண்டுதலை ஏற்றுக்கொண்டார். தனக்கு தினம் தினம் பூஜை செய்வதன் மூலம், திருமாலின் அருள் சுரந்து, இந்தப் பகுதியில் தெய் வீகத் தன்மை நிறையும். மனிதர்களின் சொர்க்கபுரியாக இந்த பகுதி மாறும் என்று அருளினார்.

    அதன்படி தனது சீடர்களில் முக்கியமானவரான விப்ரனை என்பவரை, நாக பூஜை செய்யும் அதிகாரி யாக பரசுராமா் தேர்ந்தெடுத்தார். அவருடைய வம்சத்தில் பிறப்பவர்களுக்கு நாக பூஜையின் அனைத்து அதிகாரங்களையும் வழங்கினார்.

    இதையடுத்து கேரளம் வனப்புமிக்க சோலையாக இயற்கை எழிலுடன் காட்சிதரத் தொடங்கியது. இதனால் இந்தப் பகுதி ‘மந்தரா சோலை’ என்று பெயர் பெற்றது. இதுவே மருவி ‘மண்ணாறசாலை’ என்றானதாகவும் சொல்கிறார்கள்.

    தலைமுறைகள் பல கடந்தன. நாகராஜாவின் வாழ்விடத்தை சுற்றியுள்ள வனப்பகுதியில் எதிர்பாராத விதமாக அக்னியின் கோரத்தாண்டவம் ஏற்பட்டது. அந்த பயங்கர காட்டுத் தீயின் கொடுமையால், அந்த வனத்தில் இருந்த நாகங்கள் அனைத்தும் வேதனை அடைந்தன. அவை, நாகராஜாவை சரணடைந்தன. நாகங்களை மண் மூடி பாதுகாத்தது. நாகங்களுக்கு அபயம் கிடைத்த புண்ணிய பூமியாக இந்தப் பகுதி ஆனது.

    மண்ணாறசாலை நாகராஜா கோவிலில் முக்கிய வழிபாடு ‘உருளி கவிழ்த்தல்’. குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள், இந்தக் கோவிலுக்கு வந்து நாகராஜாவையும், சர்ப்ப யக்சி அம்மாவையும் மனமுருக பிரார்த்தனை செய்து நடத்தும் வழிபாடு இது. இதற்காக பல நாடுகளில் இருந்து ஜாதி, மத பேதமின்றி திரளான பக்தர்கள் அனைத்து நாட்களிலும் கோவிலுக்கு வந்து பூஜை - வழிபாடுகளில் பங்கேற்பது சிறப்பு வாய்ந்ததாகும்.

    பண்டைய காலத்தில் ஐப்பசி மாத ஆயில்ய தினத்திற்கு முக்கியத்துவமோ, சிறப்போ இருந்ததில்லை. மற்ற நாகராஜா கோவில்களைப் போல் மண்ணாறசாலையிலும், புரட்டாசி மாதம் ஆயில்யம் தான் பக்திப்பரவசத்துடன் கொண்டாடப்பட்டு வந்திருக்கிறது. இந்த வழிபாட்டை திருவிதாங்கூர் மன்னர்கள் ஒரு விரதமாகவே கடைப்பிடித்து வந்திருக் கிறார்கள். ஒரு முறை வழக்கம்போல் கோவிலுக்கு வர மன்னரால் இயலாமல் போனது. அடுத்த துலாம் (ஐப்பசி) மாத ஆயில்ய நாளில் வருகை தந்து வழிபாடு நடத்த தீர்மானித்தார். அந்த ஆயில்யத்திற்கான அனைத்து செலவுகளையும் அரண்மனை சார்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

    அதன்பின் கோவில் சொத்துக்களுக்கு வரிச் சலுகை வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஐப்பசி ஆயில்யம் மாபெரும் விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் மன்னரும் குடும்பத்தினரும் பங்கேற்கும் அந்தஸ்து கொண்ட விழாவாக ஐப்பசி மாத ஆயில்யம் பிரபலமாகி சிறப்புற்றது. இது தவிர புரட்டாசி மற்றும் மாசி மாதங் களிலும் ஆயில்யம் விழா கோலாகலமாக நடை பெறுகிறது.

    இந்த வருடத்திற்கான ஐப்பசி மாத ஆயில்ய திருவிழா வருகிற 21, 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

    நாகதோஷமும் வழிபாடும்

    நாக தோஷத்தால், அற்ப ஆயுளும், வம்ச நாசம், தீராத வியாதி, தரித்திரம், மனநிலை பாதிப்பு, துஷ்ட சக்திகளில் தொல்லை போன்றவை ஏற்படலாம். இதனை தீர்க்க நாக தோஷ வழிபாடு அவசியமாகிறது. இது தவிர செல்வ செழிப்புக்கு- தெய்வீகத் தன்மை நிறைந்த பொருட்களுடன் கும்பம் வைத்து வழிபட வேண்டும். அதே போல் கல்வி மற்றும் சுபீட்சமான வாழ்வுக்கு பட்டு சாத்தியும், தானியம், திவ்ய ஆபரணங்கள் பூட்டியும் வழிபடலாம். உடல் நலம் பெற- உப்பு வைத்து வழிபடலாம்.

    விஷத்தன்மை நீங்க -மஞ்சள். ஆரோக்கிய வாழ்வு பெற - நல்ல மிளகு, கடுகு, சிறு பயறு. சர்ப்ப தோஷ பரிகாரத்திற்கு - தங்கத்தில் செய்யப்பட்ட புற்று, நாகத்தின் முட்டை, மரம், பூமி போன்ற வடிவங்கள். நீண்ட ஆயுள் பெற - நெய். நினைத்த காரியம் கை கூடுவதற்கு - பால், கதலிப்பழம், நிலவறை பாயசம். குழந்தை பாக்கியம் பெற- மஞ்சள் பொடி. விவசாயம் செழிக்க - பயிர் செய்யும் தானியங்களில் முதன்மையானது என்று தனித்தனியாக நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு செய்ய வேண்டும்.

    மகா சிவராத்திரி


    சிவ ஆலயங்களில் கொண்டாடப்படும் முக்கிய விழாக்களில் ஒன்று சிவராத்திரி. இந்த நாகராஜா கோவிலிலும் அந்த புண்ணிய தினத்தை முக்கிய விழாவாக கொண்டாடுகிறார்கள். நாகராஜா பிரதிஷ்டை சிவாகம விதிப்படி அமைக்கப்பட்டுள்ளது. பூஜைகளும் அதன்படி சிறப்பாக பல்வேறு நிகழ்ச்சியுடன் நடைபெற்று வருகிறது.

    இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் பக்தா்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    இந்த ஆலயத்திற்குச் செல்ல ஆலப் புழாவில் இருந்து ஏராளமான பஸ்வசதிகள் இருக்கின்றன.
    அண்ணன் பெருமாள் ஆலயம் என அழைக்கப்படும், அழகிய ஆலயம் ஒன்று நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    அண்ணன் பெருமாள் ஆலயம் என அழைக்கப்படும், அழகிய ஆலயம் ஒன்று நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியில் அமைந்துள்ளது. ஆலயம் கீழ்திசை நோக்கி இருக்கிறது. ஆலயத்திற்குள் நுழைந்ததும் பிரகாரமும், அடுத்து அர்த்த மண்டபமும் கருவறையும் காணப்படுகின்றன.

    கருவறையில் வீற்றிருக்கும் மூலவர், ‘சீதா பிராட்டி சமேத கோதாண்டராமர்’ என்ற திருநாமத்தில் பக்தர்களுக்கு சேவை சாதிக் கிறார். மூலவருக்கு அருகே உற்சவர் ஸ்ரீனிவாசப் பெருமாள் திருமேனி உள்ளது. இந்த ஆலயம் சுமார் 400 ஆண்டுகள் பழமையானது என்று சொல்லப்படுகிறது.

    அர்த்த மண்டபத்தில் அனுமன், திருமங்கை ஆழ்வார், நம்மாழ்வார், மணவாள மாமுனி ஆகியோரது திருமேனிகள் உள்ளன. கிழக்கு திருச்சுற்றில் அனுமன் தனி சன்னிதியில் வீற்றிருந்து அருள்பாலிக் கிறார். மூல நட்சத்திரம் அன்று அனுமனுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. அனுமன் ஜெயந்தி அன்று 1008 அர்ச்சனைகள் நடைபெறும். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பயன்பெறுவார்கள்.

    நவராத்திரியின் 10 நாட்களும் ஆலயம் விழாக் கோலம் பூண்டிருக்கும். புரட்டாசி மாதம் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பெருமாளுக்கு ஏக தின லட்சார்ச்சனை, சுதர்சன ஹோமம், ராமர் சீதா திருக்கல்யாணம் போன்றவை நடைபெறுகிறது. ஏராளமான பக்தர்கள் இதில் கலந்துகொண்டு பயன் பெறுகின்றனர். அன்றைய தினம் மூலவர் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அருள்வார். திருக்கல்யாணம் நடைபெறும் தினத்தன்று, பக்தர்களுக்கு விதம் விதமாய் பிரசாதம் வினியோகம் செய்கின்றனர். புளியோதரை, சுண்டல், சர்க்கரைப் பொங்கல், தயிர் சாதம் போன்றவை பிரசாதமாக வினியோகம் செய்யப்படும். பங்குனி மாதம் வரும் ராம நவமியின் போது 9 நாட்கள், உற்சவர் ஆலயத்தின் திருச்சுற்றில் உலா வருவார். 10-ம் நாள் கருடசேவை அன்று உற்சவர் வீதிய உலா வருவார்.

    சித்திரை முதல் ஞாயிறு அன்று பெருமாள் புஷ்ப பல்லக்கில் வீதி உலா வருவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். அட்சய திருதியை அன்றும் பெருமாள் வீதியுலா வருவதுண்டு. மார்கழி மாதத்தின் 30 நாட்களும் ஆலயம் காலை 5.30 மணிக்கே திறக்கப்பட்டு இருக்கும். வைகாசி ஏகாதசியில் சொர்க்க வாசல் திறப்பு வைபமும் ஏராளமான பக்தர்கள் சூழ அமர்க்களமாக நடைபெறும். அன்றைய தினம் உற்சவர் திருச்சுற்றில் உலா வருவார்.

    ராமர்- சீதைக்கு ஒவ்வொரு மாதமும் புனர்பூச நட்சத்திரம் அன்று சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடை பெறுகின்றன. இந்த ஆலயத்தில் இணைந்திருந்து அருள்பாலிக்கும் சீதா பிராட்டியாரையும், கோதண்டராமரையும் வழிபாடு செய்தால், தம்பதிகளிடையே இருக்கும் கருத்துவேறுபாடு அகன்று ஒற்றுமை அதிகரிக்கும். பிரிந்திருந்த கணவன்- மனைவி இருவரும் ஒன்று சேர்வார்கள் என்பது பக்தர் களின் அசைக்க முடியாத நம்பிகையாக இருக்கிறது.

    இந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்


    நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியின் ஒரு பகுதியான கைவிளாஞ்சேரியில் இந்த ஆலயம் அமைந் திருக்கிறது. சீா்காழியின் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் இந்த ஆலயத்தை அடையலாம்.
    இங்கிலாந்து நாட்டின் தலைநகரம் லண்டன் மாநகரின் ஒரு பகுதி ஈலிங். இங்கே கனகதுர்க்கை அம்மன் கோவில் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    இங்கிலாந்து நாட்டின் தலைநகரம் லண்டன் மாநகரின் ஒரு பகுதி ஈலிங். இங்கே கனகதுர்க்கை அம்மன் கோவில் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இந்த ஆலயத்தை ‘ஈலிங் அம்மன் கோவில்’ என்றே அழைக்கிறார்கள். இந்த ஆலயத்தை தமிழா்கள், குறிப்பாக ஈழத் தமிழர்கள் ஒன்று சேர்ந்து உருவாக்கி வழிபட்டு வருகின்றனர்.

    இந்த ஆலயத்தை சென்னை காளிகாம்பாள் ஆலயத்தின் தலைமை குருக்கள் சாம்பமூர்த்தி என்பவர், இங்கு வந்து அம்பாளின் திருவுருவப் படத்தை வைத்து, திருவிளக்கு பூஜை செய்து ஆலயம் அமைக்க வழிகாட்டியதாக கூறப்படுகிறது.

    லண்டன் மாநகரின் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாப்பல் வீதியில் அமைந்திருக்கும் இந்த ஆலயத்தின் அடையாளமாக சிறிய கோபுரம் நிறுவப்பட்டுள்ளது. உள்ளே நுழைந்தவுடன் விழாக்கள் நடக்கும் மண்டபம். அவற்றின் சுவர்களில் கணபதி, சிவ குடும்பம், முருகன் திருமண வைபவம் போன்ற புராணச் சிற்பங்கள் அழகாக அமைக்கப்பட்டுள்ளன.

    அதனுள் நுழைந்து சென்றால் தெய் வீகம் ஒளிவிடும் திருக்கோவில் கண்முன்னே தோன்ற, நாம் தமிழகத்துக்கு வந்து விட்டோமா என்ற பிரமிப்பை ஏற் படுத்துகிறது. கொடிமரம், பலிபீடம், அம்பிகையை நோக்கிய சிம்ம வாகனம் இருக்கின்றன.

    வண்ணங்களில் மின்னும் சிற்பங்களுடன் கூடிய விமானம் உள்ளது. துவாரபாலகிகள் இருபுறமும் நிற்க கரு வறைக்குள் கிழக்கு நோக்கியபடி கனக துர்க்கை அம்மன், மகிஷனின் தலை மீது நின்ற கோலத்தில் இளநகை பூக்க காட்சி தருகிறாள். மேல் இருகரங்களிலும் சங்கு, சக்கரத்துடனும், கீழ் இடக்கரத்தை இடையில் வைத்தும் வலக்கரத்தை அபய ஹஸ்தமாகவும் காட்டி வசீ கரிக்கிறாள். திரிசூலம் ஏந்திய இந்த விஷ்ணு துர்க்கை மிகவும் சக்தி வாய்ந்தவள் என்று கூறுகிறார்கள்.

    ஆலய திருச்சுற்றின் கன்னி மூலையில் மூஷிக வாகனத்துடன் மகாகணபதி சிறுகோவிலில் திரு வருள் புரிகிறார். அவர் பக்கத்தில் நந்தி முன்னிற்க லிங்கத் திருமேனியுடன் சுந்தரேசரும், மீனாட்சி அம்மனும் கோவில் கொண்டுள்ளனர். லட்சுமி சமேத நாராயணர் அடுத்த சன்னிதியில் அருள்பாலிக்கின்றனர். வள்ளி- தெய்வானை இருவரும் இருபுறம் இருக்க, முருகப்பெருமான் வேல் ஏந்தி நின்ற கோலத்தில் திருக்காட்சி நல்குகிறார். இங்கே ருக்மணி சமேத கிருஷ்ணர், ஆஞ்சநேயர் தனித்தனி சன்னிதிகளில் அருள் பொழிகின்றனர்.

    தெற்கு பிரகாரத்தில் குருவாயூரப்பன், சிவகாமி சமேத நடராசர், சபரிமலை ஐயப்பன், தேவாரம் பாடிய நால்வர் ஆகியோர் வீற்றிருக்கின்றனர். தெற்கு நோக்கியபடி ஆலமரச் செல்வனாக தட்சிணாமூர்த்தி, மேல் இரு கைகளில் உடுக்கையும், அக்னியும் ஏந்தியிருக்கிறார். கீழ் இடது கரத்தில் சுவடி ஏந்தியும், வலக் கரத்தால் ஆசி வழங்கும் விதமாகவும் அமைந்த அந்த பஞ்சலோகச் சிலை அற்புதமானது.

    சுதை வேலைப்பாடு அமைந்த கொலு மண்டபத்தில் எல்லா தெய்வங்களின் ஐம்பொன் உற்சவ மூர்த்தங்களும் பிரகாசிக்கின்றன. கோவிலின் ஈசானிய மூலையில் ஒன்பது கோள்களும் நின்ற நிலையில் தோன்றி, தன்னை வழிபடுவோரின் கிரகதோஷம் போக்குகின்றன. மேற்கு நோக்கியபடி காலபைரவர் சூலமேந்தி நிற் கிறார்.

    அம்பாளின் விமானத்தின் கோஷ்டத்தில் தெற்கே லட்சுமியும், மேற்கே நாக பூஷணி அம்மனும், வடக்கே சரஸ்வதியும் காட்சி தருகின்றனர். கோமுகம் அருகே சண்டேசர் எழுந்தருளியுள்ளார். இங்கே அனைத்து தெய்வங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

    இந்த ஆலயத்தில் விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தி, முருகனுக்கு கார்த்திகை, சஷ்டி, பெருமாளுக்குரிய ஏகாதசி, ஐயப்பனுக்கு மண்டல பூஜை, துர்க்கைக்கு நவராத்திரி, ஆடிப்பூரம் என்பது மட்டுல்லாது தைப்பொங்கல், தமிழ்ப்புத்தாண்டு போன்ற நாளிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

    ஆடிப்பூரத் தேர்த் திருவிழா 10 நாட்கள் விமரிசையாக நடைபெறுகிறது. கொடி ஏற்றுத்துடன் ஒவ்வொரு நாளும் விதம்விதமான அலங்காரத்துடன் அம்பிகை காட்சி தருவதுடன், பூரம் அன்று அழகிய அசைந்தாடும் திருத்தேரில் எழுந்தருளி லண்டன் மாநகர வீதிகளில் உலா வருவது அற்புதக் காட்சியாகும்.

    வேட்டி அணிந்த ஆடவரும், புடவை கட்டிய பெண்டிரும், பாவாடை தாவணியில் இளமங்கையரும், இசைக்கருவிகள் முழங்க தேர் இழுத்து உலா வந்து ஆங்கில மண்ணில் தமிழர் பண்பாட்டைப் பறை சாற்றுவது வார்த்தை களால் வருணிக்க முடியாத ஒன்றாகும். இந்த ஆலயத்தில் தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது.

    இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக ஆலயம் திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    டாக்டர் ச.தமிழரசன்
    நாகை மாவட்டம் குத்தாலம் அருகே தேரழுந்தூரில் பழமை வாய்ந்த ஸ்ரீஆமருவியப்பன் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    நாகை மாவட்டம் குத்தாலம் அருகே தேரழுந்தூரில் பழமை வாய்ந்த ஸ்ரீஆமருவியப்பன் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் திருமங்கை ஆழ்வாரால் 45 பாசுரங்களால் மங்களா சாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களில் 10-வது திவ்ய தேசமாகும்.

    சுவாமி:- செங்கமல வல்லி தாயார் சமேத ஸ்ரீதேவாதிராஜன்

    தலவரலாறு

    இக்கோவிலில் மூலவர் ஸ்ரீதேவாதிராஜன் என்ற பெயரிலும், உற்சவர் ஆமருவியப்பன் என்ற பெயரிலும் அருள்பாலிக்கின்றனர். ஆமருவியப்பன் என்றால் பசுவை மேய்ப்பவன் என்று பொருள். இத்தலத் தில் இறைவன் மாடு மேய்த்துக்கொண்டு இருந்த போது உபரிசரவசு என்ற தேவலோக அரசன் ஆகாய மார்க்கமாக தேரில் சென்றான். அந்த தேரின் நிழல்பட்டு, பூமியில் மேய்ந்து கொண்டிருந்த பசுக்களுக்கு ஆபத்து ஏற்பட்டது. இதனால் இறைவன் பசுக்களை காப்பாற்ற அந்த தேரை தடுத்து நிறுத்தி, பூமியில் அழுத்தினார் . இவ்வாறு தேர் பூமியில் அழுந்திய ஊரே தேரழுந்தூர் என்று அழைக்கப்படுகிறது.

    பசுக்களுக்கு ஆபத்து ஏற்படுத்திய அரசனுக்கு கோஹத்தி தோஷம் உண்டாகவே, மன்னன் சுவாமிக்கு ஆயிரம் குடங்கள் வெண்ணை சமர்ப்பித்து முறையிட்டு, பிரார்த்தனை செய்து, கோஹத்தி சாபம் நீங்கப்பெற்றான் என்பது வரலாறு.

    உற்சவங்கள்


    மன்னன் கோஹத்தி சாபம் நீங்கப்பெற்ற நிகழ்வை ஒட்டி, இப்போதும் வருடத்தில் 2 நாட்கள் தை அமாவாசை தினத்திலும், புரட்டாசி கடைசி சனிக் கிழமையும் மூலவர் பெருமாளுக்கு ஆயிரம் குடம் வெண்ணை உற்சவம் நடைபெறுகிறது. மேலும் இந்த கோவிலில் பெருமாளுக்கு வைகாசி மாதத்தில் தேர் திருவிழா, பிரம்மோற்சவம், கார்த்திகை உற்சவம், பகல்பத்து, ராப்பத்து உற்சவம், தெப் போற்சவம், தாயாருக்கு தனியாக பிரம்மோற்சவம், பவித்ரோத்சவம் ஆகிய உற்சவங்கள் சிறப்பாக நடை பெறுகின்றன.

    கருட விமானம்


    இந்த கோவிலில் கருட விமானம் உள்ளது மற்றொரு சிறப்பாகும். 107 திவ்ய தேசங்களிலும் சுவாமியின் எதிரே உள்ள கருடாழ்வார், இந்த தலத்தில் மட்டும் சுவாமிக்கு விமானம் கொடுத்து சுவாமிக்கு பக்கத்திலேயே அருள் பாலிக்கிறார்.

    மேலும் சுவாமிக்கு வலது புறத்தில் பிரகலாதன் இத்தலத்தில் மட்டுமே உள்ளார். உக்கிரமாக காட்சியளித்த சுவாமியிடம் பிரகலாதன், சாந்த சொரூ பியாக, கண்ணன் உருவில் காட்சிதர வேண்டுகோள் வைத்ததை தொடர்ந்து, இத்தலத்தில் பிரகலாதனை அருகில் வைத்துக்கொண்டு சுவாமி கண்ணனாக சாந்த சொரூபியாக காட்சி அளிக்கிறார். மேலும் இத்தலம் மார்க்கண்டேயன் தவம் செய்த தலமாகும்.

    ராஜ பதவி

    இக்கோவிலில் திருமண வரம் வேண்டுவோர், புத்திர பாக்கியம் வேண்டுவோர் வெண்ணெய் மற்றும் எண்ணை தந்து வழிபட, தோஷங்கள் நீங்கப்பெற்று, வேண்டிய வரம் பெறுவர். இத்தலத்தில் வேண்டு வோர்க்கு ராஜபதவி கிடைப் பதுடன், ராஜபதவியை பெற ஏதேனும் தடைகள் ஏற்பட்டால் அத்தடைகளும் நீங்கும். இக்கோவிலின் தல விருட்சம் பலாமரம் ஆகும்.

    தல தீர்த்தம்

    இக்கோவிலின் முன்பு தரிஷ புஷ்கரணி உள்ளது. தரிஷம் என்றால் அமா வாசை. அமாவாசை யன்று உருவானதால் இது தரிஷ் புஷ்கரணி எனப்படுகிறது. மேலும் கஜேந்திர புஷ்கரணி என்ற தீர்த்தமும் உள்ளது.

    கம்பர் சிலை

    கவி சக்கரவர்த்தி கம்பர் தேரழுந்தூரில் தான் பிறந்தார். இதனால் இக்கோவிலில் கம்பருக்கு புடைப்பு சிற்பம் உள்ளது. இந்த சிலை சேதமானதால் 1972-ல் அமைக்கப்பட்ட புதிய சிலையும் அதன் அருகிலேயே உள்ளது. இக்கோவிலின் எதிரில் சிவாலயமான வேதபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளதும் சிறப்பம் சமாகும்.

    அகத்திய முனிவருக்கு சைவ கோவிலில் தான் சிலைகள் இருக்கும். ஆனால் இக்கோவிலில் அகத்தி யருக்கு சிலை இருப்பது குறிப்பிடத்தக்கது. இக்கோவிலின் எதிரே தனிக்கோவிலில் திருமங்கை ஆழ்வார் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார்.

    அரசனின் ஆணவத்தை அடக்கிய கிருஷ்ணர்

    தேவாதி ராஜப் பெருமாள் இங்கு நின்ற திருக்கோலத்தில், கிழக்கு நோக்கிச் சேவை சாதிக்கின்றார். பெருமாளுக்கு இடது புறம் கருடாழ்வாரும். வலதுபுறம் பிரகலாதனும் இருக்கிறார்கள். காவிரித் தாய் பெருமாளை மண்டியிட்டு சேவித்துக் கொண்டிருக்கிறாள். கம்பரின் அவதார தலம் இது. கம்பர், நரசிம்ம அவதாரம் பற்றி இங்குதான் பாடினார். கம்பருக்கும், அவர் மனையாளுக்கும், கோவிலுக்குள் சிலை எழுப்பியிருக்கிறார்கள். திருமங்கையாழ்வாராலும், மணவாள மாமுனிகளாலும் மங்களா சாஸனம் செய்யப் பெற்ற திவ்ய தேசம் இது.

    இங்கு யோக நரசிம்மர், வாசுவேதர், விஷ்வக்சேனர், தேசிகர், ராமபிரான், ஆஞ்சநேயர், ஆண்டாள், ஆழ்வார்கள் ஆகியோர் சந்நிதிகள் உள்ளன.இங்குத் தருமதேவதை, உபரிசரவசு, கருடன், காவிரி, அகத்தியர் ஆகியோர் பெருமாளை வழிபட்டுப் பேறு பெற்றவர்கள். இங்குப் பெருமாள் ருக்குமணி, சத்திய பாமாவுடனும் பசுங்கன்றுடனும் நான்கு திருக்கரங்களுடன் ஸ்ரீ கிருஷ்ணனாகத் காட்சி தருகிறார். கண்ணபிரானால் மேய்க்கப்பட்டிருந்த பசுக்களை ஒருசமயம் நான்முகன் கவர்ந்து சென்றான். அதை அறிந்த கண்ணபிரான் மாயையால் வேறு பசுக்களைப் படைத்தார். பிரமன் தன் தவற்றை உணர்ந்து வேண்டப் பெருமாள் ஆமருவியப்பன் என்னும் திருப்பெயரோடு இத்தலத்தில் எழுந்தருளினார்.

    ஒருதடவை இப்பகுதி அரசன் 999 குடத்தில் வெண்ணை வைத்து ஒரு குடத்தை காலியாக வைத்து கிருஷ்ணரை ஏமாற்றினான். அவனுக்கு பாடம் புகட்ட நினைத்த கிருஷ்ணர், ஒரு குடத்தில் வெண்ணையும் 999 குடங்கள் காலியாகவும் செய்து, அந்த அரசனின் ஆணவத்தை அடக்கினார். இத்தகையை சிறப்புடைய இந்த தலத்தில் விதிப்படி பூஜைகள் செய்தால் எல்லா கஷ்டங்களும் தூள்-தூளாகிவிடும். மேல் அதிகாரிகள் அராஜகத்துடன் நடந்து கொண்டால், இத்தலத்து தேவாதி ராஜபெருமாளை வணங்கினால் பலன் உண்டாகும். காணாமல் போனவர்கள் வீடு திருப்பவும், தொலைந்து போன பெ£ருட்கள் மீண்டும் கிடைக்கவும் இத்தல வழிபாடு உதவுகிறது.
    ×