என் மலர்
முக்கிய விரதங்கள்
திருமணத்தடை, குழந்தை பாக்கியம் போன்றவை தீர விரதம் இருந்து வன்னி மர வழிபாடு செய்து வர வேண்டும்.
மகாபாரத காலத்தில் பஞ்சபாண்டவர்கள் வனவாசம் சென்றபோது பாண்டவர்கள் தங்கள் ஆயுதங்கள் அனைத்தையும் ஒரு வன்னி மரத்தின்பொந்திற்குள்ளாக வைத்து விட்டு சென்றனர். பிறகு கௌரவர்களுடன் போர்புரியும் போது அந்த வன்னி மரத்தை வணங்கி அதிலிருந்து தங்களின் ஆயுதங்களை எடுத்துச் சென்று அவர்களுடன் போரிட்டு மகாபாரத யுத்தத்தில் வெற்றி பெற்றனர். இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் பஞ்சபாண்டவர்களில் சிறந்த வில்லாளி என பெயர் பெற்ற அர்ஜுனன். அர்ஜுனனுக்கு மற்றொரு பெயர் விஜயன் என்பதாகும். அந்த விஜயன் புரட்டாசி மாதத்தில் வருகின்ற தசமி திதியில் விரதம் இருந்து வன்னி மரத்தை வழிபட்டு போரில் வெற்றி பெற்றதால் இந்த நாளை விஜயதசமி என அழைக்கின்றனர்.
ஒரு நபரின் வாழ்வில் திருமணத்தடை, குழந்தை பாக்கியம் இல்லாமை, கல்வித்தடை, வேலைவாய்ப்பின்மை தொழில் வியாபாரத்தில் நஷ்டம், உடல் மற்றும் மனநல குறைபாடுகள் போன்றவை தீர விரதம் இருந்து வன்னி மர வழிபாடு செய்து வர வேண்டும். அதிலும் குறிப்பாக மாதந்தோறும் வருகின்ற வளர்பிறை அல்லது தேய்பிறையில் தசமி திதிகளில் விரதம் இருந்து வன்னி மரத்தை வணங்குவதால் சிவபெருமானின் அருள் கிடைத்து உங்களின் அனைத்து கஷ்டங்களும் நீங்கி, நீங்கள் விரும்பிய அனைத்தும் நிறைவேறும்.
வன்னி மர வழிபாட்டை மாதந்தோறும் வருகின்ற தசமி திதிகளில் விரதம் இருந்து செய்வது சிறந்தது தான் என்றாலும் விஜயதசமி தினத்தன்று வன்னி மரத்துக்கு அடியில் பச்சரிசி மாவு சமர்ப்பித்து, நல்லெண்ணெய் தீபமேற்றி வன்னி அத்தி மரத்தை 3 முறை சுற்றி வந்து வழிபாடு செய்வதால் அதன் பிறகு உங்கள் வாழ்வில் அனைத்திலும் மகத்தான வெற்றிகளை மட்டுமே உண்டாகும் என்பது அவர்களின் கருத்தாகும்.

நடு இரவில் கிருஷ்ணனை தொட்டில் போட்டு பிறந்த நாளைக் கொண்டாடும் வரையில், விரதம் இருக்க வேண்டும். நடு இரவில் பிரசாதத்தை உட்கொண்டு உபவாச விரதத்தை முடிக்கலாம் அல்லது மறுநாள் காலையில் தஹிகலாவை உட்கொண்டும் உபவாசத்தை முடிக்கலாம்.
கிருஷ்ண பரமாத்வை எப்படி வழிபட வேண்டும் தெரியுமா?
ஸ்ரீகிருஷ்ண பூஜை செய்வதற்கு முன் வழிபடுவர் நடுவிரலால் விஷ்ணுவைப் போல் இரண்டு நேர் கோடுகளை வரையவும் அல்லது அடர்த்தியான ஒரு நேர் கோட்டை வரையவும்.
ஸ்ரீ கிருஷ்ணனுக்கு மோதிர விரலில் சந்தனம் இட வேண்டும்.
கிருஷ்ணகமல் பூவால் அர்ப்பணம் செய்ய வேண்டும்.
மூன்று அல்லது மூன்றின் பெருக்குத் தொகை எண்ணிக்கை உள்ள பூக்களை அர்ப்பணிக்க வேண்டும்.
அர்ப்பணம் செய்யும் போது பூவின் காம்பு கிருஷ்ணனை நோக்கியிருக்க வேண்டும்.
பூக்களை நீள்வட்ட வடிவத்தில் அலங்கரிக்க வேண்டும்.
சந்தனம், தாழம்பூ, மல்லிகை, சம்பா, சாய்வாலா, ஆம்பர் மணம் கொண்ட ஊதுபத்தியை உபயோகிக்க வேண்டும்.
வாசனை திரவியங்களில் சந்தனம் உபயோகிக்க வேண்டும்.
ஸ்ரீ கிருஷ்ணனை மூன்று முறை அல்லது மூன்றின் பெருக்கல் தொகை எண்ணிக்கை பிரதட்சணம் செய்ய வேண்டும்.
கிருஷ்ண பகவான் அஷ்டமி திதியில், ஸ்ராவண மாதத்தில் கிருஷ்ண பட்சத்தில் நடுஇரவில், ரோகிணி நட்சத்திரத்தில் வ்ருஷப ராசியில் பிறந்தார்.
கோகுலாஷ்டமி திதியில், கிருஷ்ண தத்துவம் இப்பூவுலகில் 1000 மடங்கு அதிகம் ஆகியுள்ளது. மீதி நாட்களைக்காட்டிலும் அன்றைக்கு கிருஷ்ண தத்துவம் அதிக செயலாற்றலைக் கொண்டிருப்பதால் ‘ஓம் நமோ’ பகவதே வாசுதேவாய’ என நாமஜபம் செய்தால் கிருஷ்ணரின் அருள் நமக்கு அதிக பலனைக் கொடுக்கும்.
கொண்டாடும் விதம்
நடு இரவில் கிருஷ்ணனை தொட்டில் போட்டு பிறந்த நாளைக் கொண்டாடும் வரையில், விரதம் இருக்க வேண்டும். நடு இரவில் பிரசாதத்தை உட்கொண்டு உபவாச விரதத்தை முடிக்கலாம் அல்லது மறுநாள் காலையில் தஹிகலாவை உட்கொண்டும் உபவாசத்தை முடிக்கலாம்.
தஹிகலா என்றால் என்ன தெரியுமா? பல திண்பண்டங்களுடன் தயிர் சேர்த்தல், பாலையும் வெண்ணெயையும் கலா என்பர். வரஜபூமியில் கோபர்களோடு மாடு மேய்க்கும் போது கிருஷ்ண பகவான் எல்லோருடைய கட்டுசாதத்தோடு தன்னுடையதையும் சேர்த்து உண்பான். இந்த பாரம்பரியத்தை இன்றும் பின்பற்றும் விதமாக தஹிகலா தயாரிப்பதும் தயிர் பானையை உடைப்பதும் வழக்கத்தில் உள்ளன.
இறை வழிபாட்டில் பூஜை, ஆரத்தி, பஜனை ஆகியவற்றின் மூலமாக நமக்குப் பயன் கிடைக்கிறது. ஆனால் இதில் எல்லாம் சில நேரக் கட்டுப்பாடு இருப்பதால் நம்மால் தொடர்ந்து செய்ய முடிவதில்லை. இறைவனின் அருள் நமக்குத் தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்றால் நம் வழிபாடும் தொடர்ந்து நடைபெற வேண்டும்.
விரதம் இருப்பது எப்படி ?
கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று கணவன், மனைவி இருவரும் தம்பதி சகிதமாகவே விரதம் இருக்க வேண்டும். பகலில் விரதம் இருக்க வேண்டும். இரவில் ஸ்ரீகிருஷ்ணரை பூஜித்து கண் விழித்து இருந்து அவரது வரலாறை கேட்க வேண்டும்.
மறுநாள் கிருஷ்ணருக்கு மீண்டும் பூஜைகள் செய்து வழிபாடுகள் நடத்தி அன்னதானம் செய்ய வேண்டும். அதன்பிறகு விரதத்தை பூர்த்தி செய்வது மிகவும் சிறந்தது.

கிருஷ்ண ஜெயந்தி நாளில் விரதம் இருப்பவர்கள் நள்ளிரவில் கிருஷ்ணனின் பிறந்த நாளைக் கொண்டாடும் வரை, விரதம் இருக்க வேண்டும்.
கிருஷ்ணன் நடுநிசியில் பிறந்ததாகக் கருதப்படுவதால் பூஜைகள் மாலை வேளைகளில் நடத்தப்படுகின்றன. கிருஷ்ண ஜெயந்தியையொட்டி கண்ணன் குழந்தையாக தங்கள் வீட்டிற்கு வருவது போன்று கால்தடங்களை வீட்டின் வாசலில் இருந்து பூஜையறை வரை இடுவார்கள். கிருஷ்ணருக்குப் பிடித்த உணவுப் பொருட்களை செய்தும், கிருஷ்ணரின் சிலைகளை அலங்கரித்தும் கொண்டாடி மகிழ்கின்றனர். இந்நாளில் விரதம் இருப்பவர்கள் நள்ளிரவில் கிருஷ்ணனின் பிறந்த நாளைக் கொண்டாடும் வரை, விரதம் இருக்க வேண்டும்.
நள்ளிரவில் பிரசாதத்தை உட்கொண்டு உபவாச விரதத்தை முடிக்கலாம். அல்லது மறுநாள் காலையில் தஹிகலாவை உட்கொண்டும் உபவாசத்தை முடிக்கலாம்.
தஹிகலா என்பது பல்வேறு வகையான திண்பண்டங்களுடன் தயிர், பால், வெண்ணெய் போன்றவற்றை கலந்து தயாரிப்பதாகும். வரஜபூமியில் கோபியர்களோடு மாடு மேய்க்கும் போது கிருஷ்ண பகவான் எல்லோருடைய கட்டு சாதத்தோடு சேர்த்து உண்பான். இந்த பாரம்பரியத்தை நினைவு கூர்ந்து பின்பற்றும் விதமாக தஹிகலா தயாரிப்பதும், தயிர் பானையை உடைப்பதும் வழக்கத்தில் உள்ளன. கிருஷ்ணனுக்கு வெண்ணெய் மிகவும் பிடித்தமானது என்று கருதுவதால் அதை கிருஷ்ணனுக்கு நிவேதனம் செய்கின்றனர்.
கிருஷ்ணர் வெண்ணெய் மீது பிரியம் கொண்டதற்கு வேறொரு காரணமும் இருக்கிறது. கொடுங்கோல் மன்னனான கம்சன் மக்களுக்கு அதிக வரி விதித்தான். அந்த வரியைக் கட்டுவதற்காக மக்கள் வெண்ணெய் விற்கும் கட்டாயத்திற்குள்ளானார்கள். தவறான முறையில் வரி விதித்து மக்களைத் துன்புறுத்தும் கம்சனிடமிருந்து மக்களைக் காப்பாற்றவே கண்ணன் வெண்ணெய் தின்பதும் அதை வாரி இறைப்பதுமான செயல்களைச் செய்தான்.
பசுக்களையும், கன்றுகளையும் மேய்க்கும் வரஜ பூமியில் கிருஷ்ணன் தனது உணவுடன் சகாக்கள் கொண்டு வந்திருக்கும் உணவு வகைகளையும் தயிருடன் ஒன்றாகக் கலந்து எல்லோரும் சேர்ந்து சாப்பிடுவார்கள். இந்நிகழ்வை அடிப்படையாக கொண்டு பிற்காலத்தில் கோகுலாஷ்டமிக்கு அடுத்த நாள் தயிர் நிறைந்த பானையைத் தொங்கவிட்டு உடைப்பது வழக்கமாகி விட்டது. இதைத்தான் உறியடித் திருவிழாவாகக் கொண்டாடுகிறோம்.

ஆவணி தேய்பிறை சஷ்டி தினமான இன்று முருகப்பெருமானை எவ்வாறு விரதமிருந்து வழிபட்டால் மிகச் சிறப்பான பலன்களைப் பெறலாம் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
முருகப் பெருமான் வழிபாட்டை தினமும் மேற்கொள்வது சிறந்தது தான் என்றாலும் மாதந்தோறும் வருகின்ற சஷ்டி, கிருத்திகை போன்ற தினங்களில் வழிபாடு செய்வது சிறப்பான பலன்களைக் கொடுக்கும். அந்த வகையில் ஆவணி தேய்பிறை சஷ்டி தினத்தன்று முருகப்பெருமானை எவ்வாறு விரதமிருந்து வழிபட்டால் மிகச் சிறப்பான பலன்களைப் பெறலாம் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
ஆவணி மாத தேய்பிறை சஷ்டி தினமான இன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்து விரதத்தை தொடங்க வேண்டும். பிறகு உங்கள் வீட்டு பூஜையறையில் வள்ளி, தெய்வானையுடன் இருக்கும் முருகன் படத்திற்கு வாசம் மிக்க மலர்களை சாற்றி, தீபங்கள் ஏற்றி, கேசரி அல்லது ஏதேனும் இனிப்புகளை நைவேத்தியம் செய்து முருகனுக்குரிய கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம் போன்ற மந்திர பாடல்களை துதித்து முருகப் பெருமானை தியானித்து, அவரை வணங்க வேண்டும்.
அன்றைய தினம் மூன்று வேளையும் உணவு ஏதும் உண்ணாமல் பால், பழங்கள் மட்டும் சாப்பிட்டு விரதம் அனுஷ்டிப்பது சிறப்பாகும். உண்ணாவிரதத்துடன், மௌனவிரதம் சேர்த்து அனுஷ்டிப்பதால் பல நன்மைகள் ஏற்படும். மாலையில் அருகில் உள்ள கோயிலுக்கு சென்று முருகப் பெருமானை வணங்க வேண்டும். மேலும் நவகிரக சந்நிதியில் இருக்கும் சுக்கிர பகவானுக்கு தீபங்கள் ஏற்றி வணங்க வேண்டும். பின்பு வீடு திரும்பியதும் பூஜை அறைக்கு சென்று, முருகப்பெருமானை வணங்கி உங்களின் சஷ்டி விரதத்தை முடித்து அவருக்கு வைக்கப்பட்ட நைவேத்திய பிரசாதங்களை சாப்பிட்டு விரதத்தை முடிக்கலாம்.

அன்னபூரணி தேவியை அனைத்து தினங்களிலும் விரதம் இருந்து வழிபடலாம் என்றாலும் வாரத்தில் வருகின்ற செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் விரதம் இருந்து வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும்.
மனிதருக்கு ஏற்படுகின்ற உடல் ரீதியான உணர்வுகளில் பசி மிகவும் பலம் வாய்ந்ததாகும். அதிலும் இந்தப் பசி என்கிற உணர்வு அதீத அளவில் மனிதர்களுக்கு ஏற்பட்டால் அவர்கள் எத்தகைய தீய செயல்களைச் செய்வதற்குத் தயங்க மாட்டார்கள்.
எனவே தான் ஞானிகள் பசியை ஒரு நோயாக கருதி பசிப்பிணி என்கின்றனர். உலகத்திற்கே படியளக்கும் தெய்வமாக இருப்பவர் தான் ஸ்ரீ அன்னபூரணி தேவி. அந்த அன்னபூரணி தேவியை நித்தம் விரதம் இருந்து வழிபடுபவர்களுக்கு வாழ்வில் உணவிற்கு கஷ்டப்படும் நிலை எப்போதும் ஏற்படாது.
மக்களின் உணவு பஞ்சத்தை போக்குவதோடு வாழ்வில் சகல விதமான நற்பலன்களை ஏற்படுத்தி தரவல்ல அன்னபூரணி தேவியை அனைத்து தினங்களிலும் விரதம் இருந்து வழிபடலாம் என்றாலும் வாரத்தில் வருகின்ற செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் விரதம் இருந்து வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும்.
மேலும் நவராத்திரி காலத்திலும் அன்னபூரணி தேவிக்கு வித விதமான நைவேத்தியங்கள் வைத்து வழிபடுவதால் அந்நபர் மற்றும் அவரின் குடும்பத்திற்கு வாழ்வில் மிகுதியான நன்மைகள் ஏற்பட செய்யும் ஒரு சிறந்த வழிபாடாக இருக்கிறது.
ஆவணி மாத சங்கடஹர சதுர்த்தி தினத்தன்று விநாயகருக்கு விரதமிருந்து வழிபடுவதால் நீண்ட காலமாக திருமண தாமதமானவர்களுக்கு திருமணம் நடக்கும்.
ஆவணி சங்கடஹர சதுர்த்தி தினமான இன்று அதிகாலை நீராடி, காலை முதல் மாலை வரை விரதம் இருந்து விநாயகப்பெருமான் நினைவோடு ஏதும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும். உணவு சாப்பிட வேண்டிய நிலையில் இருப்பவர்கள் உப்பு சேர்க்காத உணவு அல்லது பால், பழம் மட்டும் சாப்பிட்டு விரதம் மேற்கொள்ளலாம்.
மாலையில் அருகிலுள்ள விநாயகர் கோயில், சந்நிதிக்கு சென்று விநாயகப் பெருமானுக்கு நடைபெறும் அபிஷேகதிற்கு பசும் பால் மற்றும் வாசமிக்க மலர்கள், மஞ்சள், விபூதி போன்ற அபிஷேக பொருட்களை தந்து, அபிஷேக பூஜையில் கலந்து கொண்டு விநாயகரை வழிபட வேண்டும். வழிபாடு முடித்து ஆலயத்தை எட்டு முறை வலம் வந்து வணங்க வேண்டும்.
கோயிலில் அனைத்து பூஜை வழிபாடுகள் முடிந்ததும் வீட்டிற்கு வந்து விநாயகரை வணங்கி பூஜையறையில் நைவேத்தியம் வைக்கப்பட்ட பழத்தை சாப்பிட்டு விரதத்தை முடித்து கொள்ளலாம். ஆவணி மாத சங்கடஹர சதுர்த்தி தினத்தன்று விநாயகருக்கு விரதமிருந்து வழிபடுவதால் நீண்ட காலமாக திருமண தாமதமானவர்களுக்கு திருமணம் நடக்கும்.
புதிய வீடு, மனை போன்ற சொத்துகள் வாங்குவதில் இருந்து வந்த தடைகள் விலகும். உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும். புதிய முயற்சிகள் அனைத்தும் சிறப்பான வெற்றிகளை பெறும். குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் நோய் பாதிப்புகள் நீங்கி அவர்கள் கல்வியில் சிறக்க செய்யும். தொழில், வியாபாரங்களில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைத்து லாபங்கள் பெருகும்.

ஆவணி மாதம் வரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் விரதம் இருந்து சூரியனுக்குரிய கவசம் பாடிச் சூரிய வழிபாட்டை மேற்கொள்ளலாம்.
நவக்கிரகங்களில் ‘ராஜகிரகம்’ என்று அழைக்கப்படுவது சூரியன் ஆகும். அது மேஷம் முதல் மீனம் வரை, மாதம் ஒரு ராசி வீதம் பன்னிரண்டு மாதமும் பவனி வந்து நமக்கு நன்மைகளை வழங்குகின்றது. அந்த சூரியனுக்கு முக்கியத்துவம் தரும் மாதம் ஆவணி மாதமாகும். இந்த மாதத்தில்தான் சூரியன் தன் சொந்த வீடான சிம்மத்தில் உலா வருகின்றது.
ஆவணி மாதம் என்றாலே, விநாயகர் சதுர்த்திதான் நம் நினைவிற்கு வரும். விநாயகருக்கு உகந்த மாதம் இந்த மாதமாகும். ஆவணி மாதத்தில் வருகின்ற ஞாயிற்றுக் கிழமை அன்று தவறாமல் சர்க்கரைப் பொங்கல் வைத்து சூரிய பகவானை வழிபட்டால், கண் நோய் பாதிப்பு எதுவும் ஏற்படாது. அப்படி கண் நோய் பாதிப்பு இருந்தால் அவை விரைவில் நீங்கும் என்று புராணங்கள் கூறுகின்றன.
நாம் நமது சொந்த வீட்டிலே இருப்பதற்கும், வாடகை வீட்டில் இருப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. சொந்த வீட்டில் சுதந்திரமாக வாழலாம். வாடகை வீட்டில் வீட்டு உரிமையாளர் விதித்த கட்டுப்பாட்டின்படி வாழ வேண்டும். இல்லையென்றால் வீட்டைக் காலி செய்யச் சொல்லி விடுவார்கள் அல்லவா? அதுவே சொந்த வீடு என்றால் மகிழ்ச்சியோடு, சுதந்திரமாகவும் வாழ முடியும்.
சூரியன், அப்படி சுதந்திரமாக செயல்படும் வீடு, அதாவது சூரியனின் சொந்த வீடு சிம்மம் ஆகும். சிம்மத்தில் சூரியன் உலாவரும் மாதத்தில் ஒருவர் பிறந்தால், ஜெகத்தை ஆளும் யோகம் வாய்க்கும். செல்வ வளர்ச்சியில் மற்றவர் வியக்கும் அளவு அவரது வாழ்க்கை அமையும் என்பது முன்னோர்களின் கருத்து.
மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் வரையான நட்சத்திரங்கள் அடங்கியது தான், சிம்ம ராசி. அதற்குள் அடியெடுத்து வைக்கும் சூரியன் மகத்தின் காலில் சஞ்சரிக்கும் பொழுது ஒருவர் பிறந்தால் ஜெகத்தை ஆளலாம். பஞ்சாயத்து தலைவர் முதல் பாராளுமன்ற உறுப்பினர் வரை பதவி வாய்ப்பு கிடைக்கவும், புகழின் உச்சிக்கு செல்லவும் வாய்ப்பு உருவாகும். பூரம் நட்சத்திரக் காலில் சூரியன் சஞ்சரிக்கும் பொழுது பிறந்தால், தாரத்தால் தொல்லைகள் ஏற்படாமல் இருக்க பொருத்தம் பார்ப்பது அவசியமாகும். உத்திர நட்சத்திரக் காலில் சூரியன் சஞ்சரிக்கும் பொழுது பிறந்தால், அத்தனை பேரும் பாராட்டும் அளவிற்கு வாழ்க்கை அமையும். எனவே ஆவணியில் பிறந்தவர்கள் எல்லாம் அதிர்ஷ்டசாலிகள் என்றே சொல்லலாம்.
கோபம் அதிகம் வந்தாலும் குணத்தில் சிறந்தவர்களாக சிம்ம ராசிக்காரர்கள் இருப்பார்கள். பரம்பரைப் பெருமையைக் காப்பாற்றுவார்கள். தேசபக்தியுடன், தெய்வ பக்தியையும் கொண்டு விளங்குவர். சட்டத்தை மதிப்பவர்களாகவும், திட்டம் தீட்டுபவர்களாகவும் இருப்பர். கொட்டமடிப்பவர்களைக் கொஞ்ச நேரத்தில் அடி பணிய வைத்து விடுவார்கள். அரசாங்க ஆதரவு அதிகம் பெற்றிருப்பர். எப்படியெல்லாம் வருமானத்தை உயர்த்துவது என்று 24 மணி நேரமும் சிந்திப்பார்கள். குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்லாமல் வைத்துக் கொள்வதில் திறமைசாலிகளாக விளங்குவார்கள்.
ஆவணி மாதத்தில் அஷ்டமி திதியில் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தால், மாமனுக்கு ஆகாது. முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்க முறையான பரிகாரங்கள் உள்ளது. பிறந்த நேரத்தின் அடிப்படையில் வழிபாடுகளை மேற்கொள்ளலாம். அதே அமைப்பில் குழந்தைகள் பிறந்தால் உரிய வழிபாடுகளை உடனடியாகச் செய்தால் மாமன், மைத்துனருக்குரிய முட்டுக்கட்டைகள் அகலும்.
ஆவணி மாதம் சூரியனுக்கு உகந்த மாதம் என்பதால், ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் கதிரவனுக்கு பொங்கல் வைத்து வழிபடுவது சிறப்பான பலனைத் தரும். அன்றைய தினம் சூரிய நமஸ்காரம் செய்யலாம். சூரியனுக்குரிய துதிப்பாடல்கள், ஆதித்யனுக்குரிய கவசங்கள் படித்து வழிபட்டால் அன்றாட வாழ்க்கை அமைதியாக அமையும். மேலும் புகழ் பெருகும், அரசியல் செல்வாக்கு மேலோங்கும். கதிரவன் வழிபாட்டால் அதிசயிக்கும் வாழ்க்கை அமையும்.
ஆவணி மாதம் வரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் விரதம் இருந்து சூரியனுக்குரிய கவசம் பாடிச் சூரிய வழிபாட்டை மேற்கொள்ளலாம். கும்பகோணம் அருகில் உள்ள சூரியனார் கோவில் சென்று வழிபட்டும் வரலாம். உள்ளூரில் நவக்கிரகத்தில் உள்ள சூரிய பகவானுக்கு சிவப்பு வஸ்திரம் சாத்தி, கோதுமை தானம் கொடுத்து அர்ச்சனை செய்தும் வழிபடலாம்.
காசினி இருளை நீக்கக்
கதிரொளி யாகி நின்று,
பூசனை உலகோர் போற்றப்
புசிப்பொடு சுகத்தை நல்கி,
வாசி ஏழுடைய தேரின்மேல்
மகாகிரி வலமாகி வந்த
தேசிகா எனை ரட்சிப்பாய்!
செங்கதி ரவனே போற்றி! போற்றி!
என்று சூரிய பகவான் சன்னிதியில் சூரிய கவசம் பாடினால், சுகமும், நலமும் நம்மை நாடி வரும்.
அலமு ஸ்ரீனிவாஸ்

ஆடி மாதம் வரும் வெள்ளிக்கிழமைகள் சிறப்பு வாய்ந்தது. ஆன்மிக ரீதியாக வெள்ளிக்கிழமை சிறப்பு மிகுந்த தினமாக கருதப்படுகிறது.
ஆடி வெள்ளியன்று விரதம் இருந்து தவிட்டு அப்பம் செய்து அம்பாளுக்கு நைவேத்யம் செய்வது வழக்கம். தவிடை, வெல்லத்துடன் சேர்த்து குழைத்து சப்பாத்தி மாவு பதத்திற்கு கொண்டு வர வேண்டும். இதை சப்பாத்தியை விட சற்று கனமான அளவில் தட்டி தீக்கனலில் சுட்டெடுக்க வேண்டும். தீக்கனல் இல்லாவிட்டால், “நான்ஸ்டிக்‘ தோசைக்கல்லில் சுட்டெடுக்கலாம்.
ஆடிவெள்ளியன்று காலையில் காபி, டீ கூட சாப்பிடாமல் அம்பாள் பூஜையை முடித்துவிட்டு, இந்த பிரசாதத்தை முதலில் சாப்பிட வேண்டும். தவிடு நார்சத்துடையது. இதில் வைட்டமின் “பி’ உள்ளது. வெல்லத்தில் இரும்புச் சத்து உண்டு. ஆடி மாதத்தில் இந்த சத்து உடலுக்கு மிகவும் அவசியம் என்பதால், இந்த உணவை நைவேத்யம் செய்து, அம்பாளின் அருள் கடாட்சமும் பெற்று சாப்பிடலாம்.
ஆடி மாதம் வரும் வெள்ளிக்கிழமைகள் சிறப்பு வாய்ந்தது. ஆன்மிக ரீதியாக வெள்ளிக்கிழமை சிறப்பு மிகுந்த தினமாக கருதப்படுகிறது. கிழமைகளில் ‘சுக்ர வாரம்‘ என்றழைக்கப்படுவது வெள்ளிக்கிழமைதான். ஆடி வெள்ளியன்று குத்து விளக்கு பூஜை செய்து, சுமங்கலிப் பெண்களுக்கு ரவிக்கைத் துணி, தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, மஞ்சள், குங்குமம் வைத்துக் கொடுத்தால் நல்ல பலன்கள் வந்து சேரும். அன்றைய தினம் அம்மனுக்கு விரதமிருந்து அம்மன் ஆலயங்களுக்கு சென்று வழிபட ஏற்ற நாளாகும்.

ஆவணி அவிட்டம் அன்று விரதம் இருந்து பூணூல் அணிந்து கொண்டு காயத்ரி மந்திரம் சொல்பவர்களை, எந்தவித துன்பமும் நெருங்காது. எதிரிகளின் தொல்லை குறையும்.
ஆவணி மாத அவிட்ட நட்சத்திரத்தன்று, பூணூல் அணிபவர்களால் கொண்டாடப்படும் நிகழ்வு, ‘ஆவணி அவிட்டம்’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த நாளில் பழைய பூணூலை கழற்றிவிட்டு, புதிய பூணூல் அணிந்து கொள்வார்கள். இதை குருவின் மூலமாகத்தான் செய்ய வேண்டும். வீட்டில் குருக்களை வைத்து காயத்ரி மந்திரம் சொல்லி, பின் பூணூல் போடுவார்கள்.
‘ஆவணி அவிட்டம்’ என்று சொல்லப்படுகிற சடங்கின் உண்மையான பெயர் ‘உபாகர்மா.’ இதற்கு ‘ஆரம்பம்’ என்று அர்த்தம். சிரவண மாதத்தில் பிரம்மதேவனுக்கு வேதம் கிடைத்தது. அதாவது வேத உபதேசம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த தினம், ஆவணி மாதம், அவிட்ட நட்சத்திரம். அதனால்தான் இதற்கு ‘ஆவணி அவிட்டம்’ என்ற பெயர் வந்தது. பிரம்மனுக்கு வேதம் கிடைத்த ஆரம்ப நாள் என்பதால், இது ஆண்டுதோறும் மனிதர்களால் கொண்டாடப்படுகிறது. ஆண்டு தோறும் செய்யப்படும் இது, வேதத்திற்கு செய்யும் மரியாதையாகவே கருதப்படுகிறது. இதை ஒரு வகையில் ‘வேதத்திற்கான ஆண்டு விழா’ என்றும் சொல்லலாம்.
பிரம்மனுக்கு வேதம் உபதேசமாகிய தினம். அதில் இருந்து வழிவழியாக மனிதர்களுக்கு வேதம் கிடைத்தது. அதனால் ஒவ்வொரு வருடமும் அந்த தினத்தைக் கொண்டாடுகிறோம். அந்தணர்களாக பிறந்த ஒவ்வொருவரும் எட்டு வயதில் ‘உபநயனம்’ எனும் பூணூல் சடங்கை நடத்திக் கொள்ள வேண்டும்.
‘உப நயனம்’ என்ற இரண்டு சொற்களின் அர்த்தம், ‘காயத்ரி மந்திரத்தைக் கற்றுக் கொள்வதற்கு குருவின் அருகில் அழைத்துச் செல்லுதல்’ என்று பொருள்.
பூணூல் அணிபவர்கள் தினமும் காலை, மதியம், மாலை மூன்று வேளையும் காயத்ரி மந்திரம் சொல்ல வேண்டும். பூணூல் அணிந்தவர்கள் தினமும் காயத்ரி மந்திரத்தை குறைந்தது 144 முறை, காலை, நண்பகல், மாலையில் ஜபித்து வரவேண்டியது கடமை.
பூணூல் அணிவிக்கும்போது குரு சொல்லித் தரும் ஜபம் “ஓம், பூர்புவ, சுவஹ, தத், ஸவிதுர், வரோண்யம், பர்கோ, தேவஸ்ய, தீமஹி, தியோ யோந, ப்ரசோதயாத்” என்பதாகும். இந்த மந்திரத்தை தினம் மூன்று வேளை கை மேல் துணி போட்டு மூடி, 108 அல்லது 1008 முறை ஜெபிக்க பாவங்கள் விலகும்.
காயத்ரி மந்திரம் ஜபித்தால் துன்பம், எதிரி பயம் நீங்கும். முகத்திலும், உடலிலும் ஒருவித ஒளி உண்டாகும். பூணூல் அணிந்த அனைவரும் முதலில் தேவர்களுக்கும், பின்னர் ரிஷிகளுக்கும் தர்ப்பணம் (எள்ளும், நீரும் கலந்து தாரையாக விடுவது) என்னும் சடங்கைச் செய்கின்றனர்.
விரத முறை
கணபதி பூஜையுடன் இந்த விரதத்தை தொடங்கி, சாஸ்திர ரீதியாக சம்பந்தப்பட்ட இடத்தை சுத்தம் செய்த பின்னர், பஞ்சகவ்யம் அருந்தி உடல், மனம் ஆகியவற்றை சுத்தமாக்கிக் கொள்ள வேண்டும். இவ்வேளையில் கிழக்கு நுனியாக வாழை இலை போட்டு, அதில் அரிசி பரப்பி, 7 கொட்டைப் பாக்குகள் வைத்து, அதில் சப்தரிஷிகளை ஆவாஹனம் செய்ய வேண்டும். பின்னர் நைவேத்தியம் படைத்து, தீபாராதனை காட்ட வேண்டும். பின், சப்தரிஷிகளை வேண்டி ஹோமம் செய்ய வேண்டும். அதில் அரசு அல்லது புரசு சமித்துக்கள் (குச்சிகள்), சத்துமாவு, நெய், நெல்பொரி ஆகியவற்றை மந்திரம் சொல்லி அக்னியில் இட வேண்டும். பின், புதிய பூணூல் அணிந்து கொள்ள வேண்டும். அந்த நேரத்தில் பஞ்சபூதங்களையும் வழிபடலாம்.
திருமணம் ஆகாத ஆண்கள் பூணூலை குருவிற்கும், வயதில் மூத்தோருக்கும் தானமாகத் தரலாம். புதிய பூணூல் அணிந்த அனைவரும் முதலில் தேவர்களுக்கும், பின்னர் ரிஷிகளுக்கும் தர்ப்பணம் செய்கின்றனர். இவர்களில் தந்தையை இழந்தவர்கள் தேவர்களுக்கும், ரிஷிகளுக்கும் தர்ப்பணம் செய்தபிறகு தங்களுடைய முன்னோர்களுக்கும் தர்ப்பணம் செய்ய வேண்டும். பின்னர் குருவிற்கும், வயதில் மூத்தோருக்கும் வெற்றிலை, பாக்கு, பழம் மற்றும் அவர்கள் சக்திக்குத் தகுந்தாற்போல் காணிக்கைகளை அளித்து அவர்களின் ஆசீர்வாதம் பெற வேண்டும். பூணூல் அணிந்து வரும் ஆண்களை, பெண்கள் வாசலில் மங்கள ஆரத்தி எடுத்து வரவேற்பார்கள்.
சில சமயம் ஆவணி மாதத்தில் இரண்டு அமாவாசைகள் வரும். அது தோஷம் என்பதால் அந்த மாதத்தில் உபநயனம், திருமணம் போன்ற சடங்குகள் செய்யமாட்டார்கள். அதனால்தான் ஆவணி அவிட்டம் ஆடி மாதத்திலேயே வந்து விடுகிறது.
இவ்விரதம் இருந்து பூணூல் அணிந்து கொண்டு காயத்ரி மந்திரம் சொல்பவர்களை, எந்தவித துன்பமும் நெருங்காது. எதிரிகளின் தொல்லை குறையும்.
பொ.பாலாஜி கணேஷ்

ஆஞ்சநேய மூர்த்தியை விரதம் இருந்து வழிபட்டு வரும் பக்தர்களுக்கு வாழ்வில் நன்மைகள் அதிகம் உண்டாகும்.
ராமாயணத்தில் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியின் நிழலாகவும், அன்புபிற்குரிய அடியவராகவும் இருந்தவர் ஸ்ரீ ஆஞ்சநேயர் எனப்படும் அனுமன். நன்மைகள் அனைத்திற்கும் சிறந்த உதாரணமாக ஸ்ரீ ஆஞ்சநேயர் இருக்கிறார். தனது பிரதி பலன் கருதாத பக்தி மற்றும் பிரம்மச்சரிய சக்தியால் சிரஞ்சீவித்துவம் எனப்படும் இறவாநிலை பெற்றவர்.
தொண்டருக்கு தொண்டராக இருக்கும் அந்த அனுமன் தனது பெயரை கூறி வழிபடும் பக்தர்களை விட, தனது நாதராகிய ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் ராம நாமத்திற்கு மிகவும் கட்டுப்பட்டவராக இருக்கிறார். அந்த ஆஞ்சநேய மூர்த்தியை விரதம் இருந்து வழிபட்டு வரும் பக்தர்களுக்கு வாழ்வில் நன்மைகள் அதிகம் உண்டாகும்.
சக்தி வாய்ந்த தெய்வமாக ஆஞ்சநேயர் எனப்படும் அனுமனை விரதம் இருந்து வழிபடுவதற்கு அனைத்து தினங்களும் சிறந்தது தான் என்றாலும் மாதந்தோறும் வருகின்ற செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் அனுமனை வழிபடுவதற்கு சிறந்த தினங்களாக இருக்கிறது.
இந்த தினங்களில் விரதம் இருந்து அனுமன் கோவிலுக்கு சென்று அனுமனுக்கு வெற்றிலை மாலை சாற்றி, வெண்ணெய் நைவேத்தியம் செய்து, தீபம் ஏற்றி அனுமன் காயத்ரி மந்திரங்களை துதித்து வழிபடுவர்களின் வாழ்வில் ஸ்ரீ ஹனுமான் மிக சிறப்பான மாற்றங்களை ஏற்படுத்துவார்.

ஜாதகத்தில் செவ்வாய் தோஷமும் அங்காரக தோஷமும், செவ்வாய் நீச்சம் அடைந்தவர்கள், செவ்வாய் திசை நடப்பவர்கள் செவ்வாய்க்கிழமை விரதம் இருக்க வேண்டும்.
அம்மன் வழிபாட்டுக்கு வட மாவட்டங்களில் ஆடி வெள்ளியும், தென் மாவட்டங்களில் ஆடி செவ்வாயும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் முன்னுதித்த நங்கை அம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆடி மாதம் முழுக்க சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இந்த அம்பிகை ஆண் தெய்வங்களுக்கு எல்லாம் முந்திப் பிறந்ததால் இந்தப்பெயர் வந்ததாக கூறுவர்.
ஆடி செவ்வாய்க்கிழமைகளில் அன்னதானம் செய்தால், பிற நாட்களில் செய்வதைவிட 48 மடங்கு அதிக பலன் கிடைக்கும் என்பது ஒருவித நம்பிக்கை. இந்த தானத்தில் அனைத்துவித காய்கறிகளையும் ஒன்றாக சமைத்த சோறு கொடுப்பது மிகவும் நல்லது. ஜாதகத்தில் செவ்வாய் தோஷமும் அங்காரக தோஷமும், செவ்வாய் நீச்சம் அடைந்தவர்கள், செவ்வாய் திசை நடப்பவர்கள் செவ்வாய்க்கிழமை விரதம் இருக்க வேண்டும்.
அதிகாலை எழுந்து குளித்து சிவப்பு நிற ஆடை அணிந்து அம்மன் கோவிலுக்குச் சென்று செந்நிற மலர் அல்லது செண்பக மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். நிவேதத்திற்குச் செந்நிற கனிகளே உகந்தது. காலையில் அம்மனையும் மாலையில் முருகனையும் வழிபட வேண்டும்.
ஏழைகளுக்கு துவரை தானம் செய்தல் நல்லது. மஞ்சள் குங்குமம், தாம்பூலம் கொடுக்க வேண்டும். செம்பவள மோதிரமோ அல்லது கழுத்து சங்கிலியில் செம்பவளம் அமைத்தலோ நல்லது. இவ்விதம் விரதம் இருப்பவர்களுக்கு அம்மன் அருள் கிடைக்கும். ரத்த சம்பந்தமான நோய்கள் தீரும்.

இன்று வரம் கொடுக்கும் லட்சுமியை வரலட்சுமி என்றழைத்து விரதம் இருந்து வழிபட ஏற்ற நாளாகும். இந்த விரதம் கடைபிடிக்கும் முறையை அறிந்து கொள்ளலாம்.
இன்று வரம் கொடுக்கும் லட்சுமியை வரலட்சுமி என்றழைத்து விரதம் இருந்து வழிபட ஏற்ற நாளாகும்.
அன்றைய தினம் அதிகாலையில் வீட்டைச் சுத்தம் செய்து மாவிலைத் தோரணம் கட்டி, கோலமிட்டு லட்சுமிக்கு வரவேற்புக் கொடுக்க வேண்டும். ‘திருமகளே வருக’ என்று கோல மாவினால் எழுதலாம். பூஜை அறையில் வரலட்சுமியின் படத்தை பலகை மேல் நடுவில் வைக்க வேண்டும். அதன் அருகில் ஐந்து முக விளக்கில் பஞ்ச எண்ணெய் ஊற்றி பஞ்ச முக தீபம் ஏற்ற வேண்டும். அருகில் நெல் பரப்பி அதன்மேல் ஒரு தட்டில் அரிசி பரப்பி வைக்க வேண்டும்.
குடத்திற்கு சந்தனம், குங்குமம் பொட்டு வைத்து, தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, இனிப்புப் பொருள் நைவேத்தியத்தோடு லட்சுமி கவசம் பாடி வழிபாடு செய்தால் பணத் தேவைகள் பூர்த்தி யாகும். அன்றாட வாழ்க்கையின் அனுபவிக்கும் துன்பமெல்லாம் உந்தனருள் பெற்றுவிட்டால் ஓடுவதும் உண்மையன்றோ? இன்றோடு துயர்விலக, இனிய தனலட்சுமியே! மன்றாடிக் கேட்கின்றேன் வருவாய் இதுசமயம்! என்று பாடுங்கள்.
லட்சுமி இல்லம் தேடி வருவாள். ஆடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் அமைதி கிடைக்கவும், ஆனந்தம் வந்து சேரவும், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் உன்னதமான வழிபாடுகளை மேற்கொள்ளுங்கள். வருடம் முழுவதும் வசந்த காலமாகும்.