என் மலர்tooltip icon

    முக்கிய விரதங்கள்

    ஆடி மாதத்தில் வருகின்ற அனைத்து நாட்களிலும் குறிப்பாக செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பராசக்தியை விரதம் இருந்து வழிபடுவதற்கு ஏதுவான தினங்களாக இருக்கிறது.
    ஆடி மாதம் என்றாலே அம்மன் விரத வழிபாட்டிற்குரிய ஒரு சிறப்பான மாதமாக இருக்கிறது. இம்மாதத்தில் வருகின்ற அனைத்து செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பராசக்தியை விரதம் இருந்து வழிபடுவதற்கு ஏதுவான தினங்களாக இருக்கிறது. இந்த தினங்களில் வீட்டின் பூஜை அறையில் அம்பாள் படத்திற்கு வாசமிக்க பூக்களை சமர்ப்பித்து, சர்க்கரைப் பொங்கல் அல்லது பாயாசம் நைவேத்யம் வைத்து, மாவிளக்கு தீபமேற்றி மேற்கூறிய சக்தி மூல மந்திரத்தை 108 முறை முதல் 1008 முறை வரை துதித்து வழிபடுவதால் உடல் மற்றும் மனோபலம் பெருகும்.

    குடும்பத்தில் சுபிட்சங்கள் பெருகும். குறிப்பாக திருமண வயதை அடைந்தும் வரன் அமையாமல் வருந்திய பெண்களுக்கு விரைவில் நல்ல வரன் அமைந்து திருமணம் வாழ்க்கை சிறக்கும். குழந்தை பாக்கியம் இல்லாமல் தவித்தவர்களுக்கு நல்ல புத்திரப்பேறு கிடைக்கும். கல்வி கற்பதில் இருந்து வந்த தடைகளும், தாமதங்களும் நீங்கி சிறந்த முறையில் தேர்ச்சி பெற முடியும். தொழில் வியாபாரங்களில் அதிக அளவு வாடிக்கையாளர்கள் கிடைத்து லாபங்கள் அதிகரிக்கும்.

    வீட்டில் இருக்கின்ற தரித்திர நிலை நீங்கி செல்வ வளம் பெருகும். துஷ்ட சக்திகளால் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகள் நீங்கி வளமை பெருகும். அன்னை ஆதிபராசக்தியின் மகிமையை உணர்ந்த பலர் வருடம் தோறும் விரதம் இருந்து மாலை அணிந்து அவளை தரிசிக்க மருவூர் செல்கின்றனர். 
    தனாகர்ஷண ஹோமத்தை எப்படி விரதம் இருந்து செய்வது மற்றும் இந்த ஹோமத்தை செய்வதால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதையும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.
    செல்வங்கள் அனைத்தும் நம்மிடம் என்றென்றம் நிலையாக இருக்கவும், மேலும் செல்வ சேர்க்கை உண்டாகவும் செய்யப்படும் ஒரு ஹோமத்தையே தனாகர்ஷண ஹோம பூஜையாகும். இந்த தனாகர்ஷண ஹோமத்தை எப்படி விரதம் இருந்து செய்வது மற்றும் இந்த ஹோமத்தை செய்வதால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதையும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.

    குடும்பத்தில் செல்வ செழிப்பு உண்டாக விரதம் இருந்து தனாகர்ஷண ஹோமம் செய்ய வேண்டும். வட இந்தியாவில் தனலட்சுமி பூஜை மற்றும் ஹோமத்தை தீபாவளி சமயத்தில் செய்து வழிபடுகின்றனர். தாம் சேர்த்த பணம், பொன் போன்றவை அனைத்தையும் பூஜையில் வைத்து வழிபடுவர். தை மாத வெள்ளிக்கிழமை நல்ல முகூர்த்த தினத்தில் இந்த தனாகர்ஷண ஹோமத்தைச் செய்வது சிறப்பு. விடியற்காலையில் குளித்து முடித்துவிட்டு, சுத்தமான அணிந்து கொண்டு, நெற்றிக்கு குங்கும திலகமிட்டு ஹோமத்திற்குத் தயாராக வேண்டும்.

    சங்கல்பம் செய்து கொள்ளவும் பிறகு நம் செல்வத்தையெல்லாம் ஒரு குடத்திலிட்டு அதில் சுவர்ண லட்சுமியை ஆவாஹனம் செய்யவும் வட்டமான ஹோம குண்டத்தில் கிழக்கு நோக்கி அமர்ந்து பூஜிக்கவும், தேவதா ஆஜ்யபாகம், சமிதா தானம் செய்யவும். பிறகு சுத்தமான பசு நெய், தாமரைப்பூ, தங்கக் காசு, சர்க்கரை பொங்கல் மூலம் 108 ஆவர்த்தி ஹிரண்யவர்ணா என்ற தேவ மந்திரம் உச்சாடனம் செய்து ஹோமம் செய்யபடும். அடுத்து பிராயச்சித்த ஹோமம் செய்யப்படும். சொக்கத் தங்கம், பட்டு முதலியவற்றுடன் மட்டைத் தேங்காய் வைத்து பூர்ணாஹீதி செய்து ஹோமம் பூஜை நிறைவு செய்யப்படும்.

    கற்கண்டு பாலுடன் செய்த பொங்கல் நைவேத்யம் செய்து, மங்கள ஆரத்தி எடுக்கப்பட்டு தனாகர்ஷண ஹோமம் நிறைவு பெறும். முற்காலத்தில் கேரள தேசத்தில் தங்கத்தை உருக்கி ஹோமத்தீயில் நெய்போல் விட்டு இந்த ஹோமம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. பூஜை செய்யப்பட்ட சுவர்ணலட்சுமி குடத்தை எடுத்துக் கொண்டு, பிரசாதத்தையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    இந்த தன ஆகர்ஷன ஹோமம் செய்வதால் வீட்டில் லட்சுமி குடி புகுந்து செல்வச் செழிப்பு அருள்வாள் என்கிறது வேதம். இந்த ஹோமம் முக்கியமாக தொழில், வியாபாரங்களில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு மிகுந்த லாபங்களையும், தொழில் விருத்தியையும் ஏற்படுத்தவல்ல ஆற்றல் வாய்ந்த ஒரு ஹோம பூஜையாக இருக்கிறது. பணம், பொன் போன்றவற்றின் சேர்க்கை அதிகம் உண்டாக விரும்புபவர்கள் இந்த ஹோமத்தை செய்வது நல்ல பலன் அளிக்கும். வசதியான வீடு, வாகனம் மற்றும் சொத்துக்களின் பெருக்கத்தையும் இந்த ஹோம பூஜை ஏற்படுத்தும்.
    இந்த மாதத்தில் வரும் “ஆடி செவ்வாய் கிழமைகள்” சிறப்பான தினங்களாகும். இந்த ஆடி செவ்வாய் விரதம் இருப்பது மற்றும் வழிபாட்டு முறைகளை பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.
    ஆடி மாத செவ்வாய் கிழமைகளில் அதிகாலையில் எழுந்து, குளித்து முடித்து விட வேண்டும். பின்பு வீட்டையோ அல்லது பூஜையறையையோ மட்டுமாவது நீரால் கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பிறகு பூஜையறையில் உள்ள அத்தனை இறைவனின் படங்களுக்கும் பூக்களை சமர்ப்பிக்க வேண்டும். ஏதேனும் பழங்கள் மற்றும் பாலை நீங்கள் வணங்கும் இறைவனுக்கு நிவேதனம் வைக்க வேண்டும்.

    இதை செய்த பின் இரண்டு குத்துவிளக்குகளில் பஞ்ச தீப எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் ஊற்றி திரி போட்டு விளக்கேற்றி, இரு குத்துவிளக்குகளையும் இரு புறமும் வைத்து விட்டு சாம்பிராணி கொளுத்தி, அந்த புகையை பூஜையறை மற்றும் வீடு முழுவதும் பரவச் செய்ய வேண்டும். இப்போது உங்கள் பரம்பரையின் குல தெய்வத்தை வணங்கிய பின்பு இந்த ஆடி செவ்வாயில் நீங்கள் வழிபட இருக்கும் இறைவனை வேண்டி அன்றைய தினம் முழுதும் உணவு ஏதும் உண்ணாமல் விரதம் இருப்பது நீங்கள் வணங்கும் இறைவனின் ஆசிகளை பெற்று தரும்.

    இந்த தினத்தில் உண்ணா விரதம் இருப்பது உடலுக்கும், மனதுக்கும் நன்மையை தரும் என்றாலும் முழு தினமும் உண்ணா நோன்பு இருக்க முடியாதவர்கள், இந்த தினத்தில் பழங்கள் மற்றும் பாலை உணவாக கொள்ளலாம். இந்த பால், பழங்களையும் உண்ணாமல் சாதாரண உணவுகளை உண்ண வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள், இந்த செவ்வாய் கிழமை காலை இறைவழிபாட்டை முடித்த பின்பு உண்ண தொடங்கலாம்.
    கருட பஞ்சமி தினத்தில் விரதம் இருந்து பெருமாள் கோயிலுக்கு சென்று கருடாழ்வாரையும், பெருமாளையும் வழிபடுபவர்களுக்கு ஜாதகத்தில் இருக்கின்ற நாக சர்ப்ப தோஷங்களின் தீவிரத்தன்மை குறைந்து நற்பலன்கள் உண்டாகும்.
    பெருமாளின் வாகனமாக கருடபகவானுக்குரிய ஒரு சிறப்பான நாள் தான் ஆடி மாதத்தில் வருகின்ற கருட பஞ்சமி தினம். அந்த கருட பஞ்சமி தினத்தில் நாம் செய்ய வேண்டியது என்ன என்பதையும், அதனால் நாம் பெறும் பலன்கள் எத்தனை என்பதையும் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

    கருட பஞ்சமி தினத்தன்று காலையில் எழுந்து குளித்து முடித்ததும் அருகிலுள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று கருட பகவான் சன்னதியில் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். முடிந்தால் கருட பகவானுக்குரிய மந்திரங்களை 9 முதல் 27 முறை வரை துதித்து வணங்குவது நல்லது. பின்பு பெருமாள் மற்றும் தாயாரை வணங்கி கோயிலை மூன்று முறை வலம் வந்து வீடு திரும்பலாம்.

    கருட பஞ்சமி தினத்தில் விரதம் இருந்து பெருமாள் கோயிலுக்கு சென்று கருடாழ்வாரையும், பெருமாளையும் வழிபடுபவர்களுக்கு ஜாதகத்தில் இருக்கின்ற நாக சர்ப்ப தோஷங்களின் தீவிரத்தன்மை குறைந்து நற்பலன்கள் உண்டாகும். வீட்டில் விஷப்பாம்புகள், பூச்சிகள் போன்றவை நுழையாமல் தடுக்கும்.

    கண் திருஷ்டிகள், துஷ்ட சக்தியின் பாதிப்புகள் போன்றவை ஒழியும். மனதிற்கினிய வாழ்க்கைத் துணை, நிறைவான செல்வம், புகழ் போன்றவை கிடைக்கப் பெறுவார்கள். உடலில் விஷ பொருட்களால் ஏற்பட்ட நோய் பாதிப்புகள் நீங்கி உடல் பழைய நிலையை அடையும். எதையும் சாதிக்கக் கூடிய தன்னம்பிக்கை மற்றும் மனோதிடம் உண்டாகும்.

    ஆடிப்பூர தினமான இன்று திருமணமாகாத பெண்கள் இந்நன்னாளில் ஆண்டாளை விரதம் இருந்து வணங்கினால் அவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
    தேவிக்குரிய திருநாள்களில் ஆடி மாதம் பூர நட்சத்திரத்தில் கொண்டாடப்படும் “ஆடிப் பூரம் திருநாள்’ மிகவும் சிறப்பானது. இன்று (சனிக்கிழமை) ஆடிப்பூரம் தினமாகும். இன்று வைணவத் திருக்கோயில்களில் ஆண்டாளுக்கு சிறப்பு பூஜை நடைபெறும். திருமணமாகாத பெண்கள் இந்நன்னாளில் ஆண்டாளை விரதம் இருந்து வணங்கினால் அவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

    பெண்களுக்கு வளையல் காப்பு நடத்துவதுபோல, நம்மைப் படைத்த அன்னைக்கு வளைகாப்பு நடத்தி மகிழ்ந்திடும் நாளே ஆடிப்பூரம். அம்பிகைக்கு வளையல்களால் அலங்காரம் செய்து வழிபட்டு அந்த வளையல்கள் பெண் களுக்குப் பிரசாதமாக அளிக்கப்படுகிறது.

    ஆடிப்பூரத்தையட்டி அம்மன் ஆலயங்கள் அனைத்திலுமே வளையல் காப்பு அணிவிக்கும் உற்சவம் நடத்தப்படும். அன்றைய தினம் அம்மனுக்கு வளையல்களை வாங்கித் தந்து வழிபட்டு அவளது பிரசாதமாக சில வளையல்களைப் பெற்று அணிந்து கொண்டால், மனம்போல மாங்கல்யம் அமையவும், மங்களங்கள் நிலைக்கவும் செய்யும். அதோடு, அம்பிகை தாய்மைக்கோலம் கொண்ட நாள் என்பதால் குழந்தை பாக்கியமும் நிச்சயம் கிட்டும்.

    ஒவ்வொரு பெண்ணின் வடிவிலும் அம்பிகையின் அம்சம் நிறைந்துள்ளது. எனவே ஆடிப்பூரம் தினத்தன்று அம்பிகையின் அருள் முழுமையாக நிறைந்திருக்கும் என்பதால் எந்த பேதமும் இன்றி இயன்ற அளவு மற்ற பெண்களுக்கு வளையல்கள், குங்குமம், மஞ்சள், ரவிக்கைத் துணி, புடவை என்று அவரவரால் இயன்ற மங்களப் பொருட்களை வாங்கித் தர வேண்டும். அப்படி செய்தால் இல்லறம் சிறக்கச் செய்யும். இன்பங்கள் நிறையச் செய்யும் என்பது ஐதீகம்.

    தாலிபாக்கியம் சிறக்க, தாயாகும் பேறுபெற, வளமும் நலமும் பெருக நீங்கள் வேறு எதுவும், செய்ய வேண்டாம். ஆடிப்பூர நாளில் அம்மனுக்குக் கொஞ்சம் வளையல் வாங்கிக் கொடுங்கள். பதிலுக்கு உங்கள் வாழ்க்கை வளமையாகும் வரத்தை நிச்சயம் தருவாள் அம்பிகை.

    திருநெல்வேலி காந்திமதி அம்மனுக்கு ஆடிப்பூர விழாவின் 4 ஆம் நாளன்று ஊஞ்சல் மண்டபத்தில் வளைகாப்பு விழா நடைபெறுகிறது. இந்த அம்பிகையை வழிபடுவோர் திருமணம், பிள்ளைப்பேறு பெறுகின்றனர். சிலர் வீட்டில் முளைப்பாலிகை வைத்து அதை கோயிலில் சேர்க்கின்றனர். ஆடிப்பூர விழா, பல்வேறு ஆலயங்களில் வாகன சேவையுடன் 10 நாள் திருவிழாவாகவும் நடைபெறும்.

    திருவாரூர் கமலாம்பாள், நாகை நீலாயதாட்சி, திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை போன்ற பல திருத்தலங்களில் 10 நாள் பிரம்மோற்சவமும் திருமயிலைக் கற்பகவல்லிக்கு ஆடிப் பூரத்தன்று மதியம் சந்தன காப்பு அலங்காரமும், இரவு வளையல் அலங்காரமும் நடைபெறுகிறது. மேல் மருவத்தூர் ஆதி பராசக்தி அம்மனுக்கு கூழ்வார்க்கும் பண்டிகைச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

    திருக்கழுக்குன்றம், அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோயில், அன்னை திரிபுரசுந்தரி சுயம்பு வடிவானவள். அம்பாள் மூர்த்தம் அஷ்ட கந்தகம் உட்பட எட்டு விதமான வாசனை பொருள்களால் ஆக்கபட்டது. அம்பாளுக்கு (திரிபுரசுந்தரி) மார்பில் ஸ்ரீ சக்கரப் பதக்கம் சார்த்தப்பட்டுள்ளது.

    ஆடிப்பூரம், பங்குனி உத்திரம், நவராத்தியில் வரும் நவமி ஆகிய மூன்று நாட்களில் மட்டுமே அம்பாளுக்கு முழு அபிஷேகம் செய்யப்படுகின்றது. மற்ற நாள்களில் அம்மனுக்கு திருபாதத்தில் மட்டுமே பூஜை நடக்கின்றது. அகில உலகத்தை காக்கும் நாயகியாம் திரிபுரசுந்தரியை வருடத்தில் 3 முறை நடைபெறும் மகாஅபிஷேக விழாவில் கண்டு வணங்கினால் பாவம் விலகி நல்லவை நடக்கும்.

    ஆடி மாதத்தில் பூரம் நட்சத்திரம் உச்சமாக இருக்கும். இந்நாளில் ஏழை சுமங்கலிப் பெண்களுக்கு புடவை, மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு, பணம் வைத்து கொடுப்பது நல்லது. இன்று (சனிக்கிழமை) மஞ்சள் தாலி கட்டிக்கொள்ள தீர்க்க சுமங்கலியாய் இருப்பர். ஆடிப்பூரம் அன்று சக்தி தலங்களில் அம்மன் ஆலயங்களில் வழிபட கேட்கும் வரம் கிடைக்கும். ஆரோக்கியமும், செல்வ செழிப்பும் உண்டாகும். 
    ஆடி மாதம் அம்மனை மனதில் நினைத்து விரதம் இருப்பதால் நமது உள்ளம் அமைதி அடைகிறது. மனம் ஒருமித்த ஒருநல்ல நிலைக்கு வருகிறது.
    ஆடி மாதம் அம்மனை மனதில் நினைத்து விரதம் இருப்பதால் நமது உள்ளம் அமைதி அடைகிறது. மனம் ஒருமித்த ஒருநல்ல நிலைக்கு வருகிறது.
    சஷ்டி, ஏகாதசி, கிருத்திகை போன்ற நாட்களில் விரதம் இருக்க வேண்டும். இதற்கு அறிவியல் பூர்வமான காரணமும் உண்டு. நமது கிரக அமைப்புகளுக்கும், மனித உடலுக்கும் நிறைய பொருத்தங்கள் உண்டு. அதைக் கருத்தில் கொண்டே பண்டிகைகள் உருவாக்கப்பட்டன.

    இதுபோன்ற விசேஷ நாட்களில் வயிற்றில் அதிகமான உணவுப்பதார்த்தங்கள் இருந்தால் அது அஜீரணக் கோளாறு போன்ற அநேக தொல்லைகளை ஏற்படுத்தும். அதனால்தான் விரதம் இருக்க இந்த நாட்களைக் குறித்திருக்கிறார்கள். விரதத்துடன் ஆண்டவனையும் நினைத்து தியானம் இருந்தால் அது உடல் மற்றும் உள்ளத்துக்கு மிகவும் நல்லது.

    சூரிய கிரகணம், சந்திர கிரகணம் போன்ற நாட்களில் கிரகணம் முடிகிறவரை தண்ணீர் கூட அருந்தக்கூடாது. கிரகணம் முடிந்ததும் நன்றாகத் தலைக்குக் குளித்துவிட்டு ஆண்டவனைத் தரிசித்த பிறகே ஆகாரம் மேற்கொள்ள வேண்டும்.  மகாபாரதத்தில் விரதம் பற்றி பீஷ்மர் தர்மருக்குச் சொல்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது,

    வேதத்திற்கு மேலான சாஸ்திரமில்லை
    தாய்க்கு சமமான குருவில்லை
    தர்மத்திற்கு மேலான லாபமில்லை
    விரதத்திற்கு மேலான தவமில்லை
    ஆக விரதம் என்பது தவம் என்று பொருள்படுகிறது.
    பஞ்சமி, சஷ்டி, பவுர்ணமிகளில் விரதம் இருந்தால் பொறுமையும், அழகும் கிடைக்கும்.
    பஞ்சமி, சஷ்டிகளில் விரதம் இருந்து, இறைவனை வணங்கினால் செல்வம் செழித்தோங்கும்.
    தேய்பிறை அஷ்டமி, சதுர்த்திகளில் இருந்தால் நோய் நொடிகள் நம்மை நெருங்காது.

    ஆடி மாதம் முழுவதும் முக்கிய தினங்களில் விரதம் இருந்தால் நல்ல தனமும், நிறைந்த புத்திர பாக்கியமும் கிட்டும். மாதமொன்றுக்கு மூன்று தினங்கள் என்று தொடர்ந்து 12 ஆண்டுகள் விரதம் மேற்கொண்டால் ஒப்பற்ற உயரிய தலைமைப் பதவி கிட்டும். ஒருவேளை மட்டும் உணவு. அதுவும் ஒரு ஆண்டுக்கு இப்படி இருந்தால் சொர்க்கத்தில் இடம் கிடைக்கும்.

    விரதம் என்பது நோயை அகற்றுகிறது. நீண்ட ஆயுளைத் தருகிறது. டென்ஷனைக் குறைக்கிறது. பழிவாங்கும் எண்ணங்களை அறவே அழித்து விடுகிறது. பாவங்கள் நீங்குகிறது. 
    நினைத்த காரியம் நிறைவேற, ஒன்பது வியாழக்கிழமை சீரடி சாயிபாபாவை நினைத்து விரதம் இருந்தால், வேண்டியதைப் பெறலாம்.
    நினைத்த காரியம் நிறைவேற, ஒன்பது வியாழக்கிழமை சீரடி சாயிபாபாவை நினைத்து விரதம் இருந்தால், வேண்டியதைப் பெறலாம். விரதத்தை எந்த ஒரு வியாழக்கிழமையில் வேண்டுமானாலும் பாபாவின் நாமத்தைச் சொல்லி தொடங்கலாம். எந்த காரியத்திற்காக விரதம் இருக்கிறோமோ, அதை மனதில் நினைத்து சாயிபாபாவை பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும்.

    பலகையில் மஞ்சள் துணியை விரித்து, அதன் மீது சாயிபாபா படத்தை வைத்து, சந்தனம், குங்குமம் திலகம் இட வேண்டும். படத்திற்கு மஞ்சள் நிற மலர் மாலை அணிவிக்கலாம். பழங்கள், இனிப்புகள், கற்கண்டு போன்ற எதுவானாலும் நைவேத்தியமாக வைத்து, தீபம், ஊதுபத்தி ஏற்றி காலையும், மாலையும் சாயிபாபாவை வழிபட வேண்டும். இந்த விரதத்தை கடைப் பிடிக்கும்போது, பால், டீ, காபி, பழங்கள், இனிப்புகள் மட்டுமே உட்கொள்ள வேண்டும். நாள் முழுவதும் இதுபோல் செய்ய முடியாதவர்கள், ஒரு வேளை மட்டும் உணவு அருந்தலாம். அதே வேளையில் நாள் முழுவதும் பட்டினியாக இருந்தும் இந்த விரதத்தை மேற்கொள்ளக் கூடாது.

    வீட்டிலேயே சாய்பாபாவுக்கு 9 வாரங்கள் பூஜை செய்து வரவேண்டும். கோவிலுக்கும் சென்று வரலாம். விரதத்தின் ஒன்பது வாரங்களில் பெண்களுக்கு மாதவிலக்கு அல்லது இன்ன பிற காரணங்களால் விரதம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டால், அந்த வியாழக்கிழமையை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், இன்னொரு வியாழக் கிழமை விரதம் இருந்து 9 வியாழக்கிழமை விரதத்தை நிறைவு செய்யலாம். ஒன்பதாவது வியாழக்கிழமையில் 5 ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கலாம். மேற்கண்ட விதிமுறைகளின்படி விரதம் இருந்து நிறைவு செய்தால், நீங்கள் நினைத்த காரியம் நினைத்தபடி நடந்தேறும்.

    ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தன்று, இறந்த நமது முன்னோர்களை வேண்டி வணங்கும் விரதம் அமாவாசை விரதமாகும். இந்த விரத்தை மேற்கொள்ள வேண்டிய விவரம் குறித்து அறிந்து கொள்ளலாம்.
    ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தன்று, இறந்த நமது முன்னோர்களை வேண்டி வணங்கும் விரதம் அமாவாசை விரதமாகும். இந்த விரத்தை மேற்கொள்ள வேண்டிய விவரம் வருமாறு:-

    இன்று காலையில் எழுந்து, அருகில் இருக்கும் ஆற்றிலோ, குளத்திலோ குளித்து விட்டு, இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும். முறைப்படி தர்ப்பணம் செய்து வைக்கும் அந்தணர்கள், ஆற்றின் கரையோரங்களில், குளக்கரைகளில், கடற்கரையோரங்களில் இருப்பார்கள். அவர்கள் மூலம் தர்ப்பணம் செய்யலாம். அதன்பின்னர், முதியவர்கள் மற்றும் ஏழைகளுக்கு பெரிய அளவில் இல்லாவிட்டாலும், சிலருக்காவது அன்னதானம் வழங்க வேண்டும்.

    அமாவாசையன்று, வீட்டில் பெண்கள் குளித்து காலை உணவு உண்ணாமல் இறந்த முன்னோர்களுக்குப் பிடித்தமான உணவுகளையும், பதார்த்தங்களையும் தயார் செய்வார்கள். அன்றைய சமையலில் எல்லாவிதமான காய்கறிகளும் இடம் பெற வேண்டும்.

    விரதம் இருப்பவர்கள், காலையில் எதுவும் சாப்பிடாமல் இருந்து, பின் எத்தனை நபர்களை வணங்க வேண்டுமோ, அத்தனை இலைகள் போட்டு, சமைத்த எல்லா உணவுகளையும், பதார்த்தங்களையும் படைத்து, துணிகள் வைத்து படைப்பவர்கள் துணிகளையும் வைத்து, அகல் விளக்கேற்றி வைத்து, தூப தீபம் காட்டி முன்னோர்களை மனதில் நினைத்து வழிபட வேண்டும்.

    பிறகு, படைத்த எல்லா உணவு, பதார்த்தங்களையும் தனித்தனியாக இலையோடு எடுத்து, வீட்டிற்கு வெளியில், உயரமான இடத்தில் வைக்க வேண்டும்.
    முன்னோர்களுக்குப் படைத்து வைப்பவைகளை, காக்கைகள் (பித்ருக்கள் என்று கூறுவதால்) மட்டுமே உண்ண வேண்டும் என்பதால்தான் உயரமான இடங்களில் வைக்க வேண்டும். காக்கைகள் உண்ட பிறகு, வீட்டிற்குள் முறைப்படி பரிமாறப்பட்ட இலைகளில் உறவு முறைகளுக்கேற்ப உள்ளவர்கள் அமர்ந்து சாப்பிட வேண்டும்.

    அமாவாசை விரதம் இருப்பவர்கள் காலையில் சாப்பிடக் கூடாது பகலில் சாப்பிடலாம். இரவில் பால், பழம் அல்லது சிற்றுண்டிகள் ஏதாவது சாப்பிடலாம். முறைப்படி அமாவாசை விரதமிருந்து முன்னோர்களை வழிபடுபவர்களுக்கு அவர்களின் ஆசியும், அருளும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    ஆண்டின் பிற அமாவாசை நாட்களில் முன்னோர் வழிபாட்டை கடைப்பிடிக்க இயலாதவர்கள், ஆடிமாத அமாவாசையன்று கட்டாயம் முன்னோர் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.
    முன்னோர் வழிபாடு, பன்னெடுங்காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் வழிபாட்டு முறையாகும். நாம் வணங்கி வழிபடும் தெய்வத்தை பார்க்க முடிவதில்லை. ஆனால் நம்மை பெற்றவர்களையும் அவர்களைப் பெற்ற நமது தாத்தா-பாட்டிகளான முன்னோர்களையும் பார்த்திருப்போம். இப்படி உறவாலும் உதிரத்தாலும் நம்மோடு சம்பந்தப்பட்ட, அவர்களது அனுபவங்களை ஆதாரமாகக் கொண்டு வாழ்வதற்கு நன்றி கூறுவதே முன்னோர் வழிபாடாகும். இந்த வழிபாட்டுக்குரிய நாளே, அமாவாசை.

    ஒரு வருடத்தில் பன்னிரண்டு மாதங்களிலும் அமாவாசை வருகிறது. பொதுவாக ஒவ்வொரு அமாவாசை அன்றும் நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும். அமாவாசை நாளில் நமது முன்னோர்களை நினைத்து புண்ணிய நதிகளில் நீராடி, திதி, தர்ப்பணம் கொடுப்பதாலும், அவர்கள் நினைவாக ஏழைகளுக்கு அன்னதானம் வழங்குவதாலும் முன்னோர்களை வழிபட்ட பலனைப் பெறலாம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இப்படி திதி, தர்ப்பணம் கொடுப்பதால், அவரவர் செய்த பாவங்கள் நீங்குவதுடன், அன்னதானம் செய்வதன் மூலம் புண்ணியமும் வந்து சேருகிறது.

    ஆடி முதல் மார்கழி மாதம் வரையிலான காலத்தை ‘தட்சிணாயன புண்ணிய காலம்’ என்றும், தை முதல் ஆனி வரையிலான காலத்தை ‘உத்ராயண புண்ணிய காலம்’ என்றும் கூறுவர். தட்சிணாயனம் தொடங்கும் ஆடி மாத பிறப்பின் முன் 16 நாழிகையும், உத்ராயணம் தொடங்கும் தை மாத பிறப்பின் பின் 16 நாழிகைகளும் உத்தமமான புண்ணிய காலங்களாகும். எனவேதான் தட்சணாயன புண்ணியகாலம் தொடங்கும் ஆடி மாத அமாவாசையும், உத்ராயண புண்ணிய காலம் தொடங்கும் தை மாத அமாவாசையும், மற்ற அமாவாசைகளை முன்னோர் வழிபாட்டிற்கு சிறந்ததாக உள்ளது. புரட்டாசி மாதத்தில் வரும் மகாளயபட்ச அமாவாசையும் புண்ணிய தினமே. இந்த மூன்று அமாவாசை தினங்களிலும் அவசியம் முன்னோர்களுக்கு, திதி தர்ப்பணம் போன்றவைகளை கொடுக்கவேண்டும்.

    ஆடி மாதம் முதல் மார்கழி வரையான காலம் தேவர்களுக்கு இரவு நேரம். அப்போதுதான் நம் முன்னோர்கள் நம்மை பார்ப்பதற்காகவும், ஆசீர்வதிப்பதற்காகவும் பித்ருலோகத்தில் இருந்து புறப்படுவார்கள். அவர்கள் வருகை தர வேண்டும் என்பதற்காக, ஆடி அமாவாசையன்று திதி, தர்ப்பணம் கொடுத்து அவர்களை அழைக்கின்றோம். நமது வேண்டுகோளை ஏற்று மகிழ்ச்சியுடன் வரும் அவர்கள், புரட்டாசி மாத மகாளய பட்ச அமாவாசை அன்று பூலோகத்துக்கு வருகிறார்கள். அப்படி வந்தவர்களை மகிழ்ச்சியடைய செய்யும் விதமாக புரட்டாசியிலும் நாம் அவர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்கவேண்டும். அதனால் மகிழும் அவர்கள் நம்மை ஆசீர்வதித்து விட்டு, பிறகு தை மாதம் மறுபடியும் தங்களுடைய லோகத்தை அடைவார்கள். இதன் காரணமாகவும், ஆடி, தை, புரட்டாசி அமாவாசைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

    பூமியில் பிறந்தவர்கள் பாவ புண்ணியத்தில் இருந்து தப்பமுடியாது. பாவங்களில் பெரிய பாவமாக கூறப்படுவது பித்ரு கர்மாவை நிறைவேற்றாமல் இருப்பதுதான். முன்னோருக்குச் செய்கிற ஆராதனை, நம்மையும், நம் சந்ததியையும் இனிதே வாழ வைக்கும் என்கிறது கருடபுராணம்.

    ஆண்டின் பிற அமாவாசை நாட்களில் முன்னோர் வழிபாட்டை கடைப்பிடிக்க இயலாதவர்கள், ஆடிமாத அமாவாசையன்று கட்டாயம் முன்னோர் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். ஆறுகள், கடல் போன்ற புனித நீர்நிலைகளில் நீராடி திதி, தர்ப்பணம் தரலாம். நமது பித்ருக்களை வழிபட்டு அரிசி, காய்கறி, பழம், புத்தாடை வைத்து படையலிட்டு, இறுதியாக அரூபமாக இருக்கும் அவர்களை நினைத்து எள்ளும் தண்ணீரும் விடவேண்டும்.

    ஒரு தரப்பினர் சாதத்தில் ஆறு பிண்டங்கள் பிடித்துவைத்து, எள், தண்ணீர், தர்ப்பை கொண்டு முன்னோர்களை ஆராதிப்பார்கள். தந்தை, தாத்தா, முப்பாட்டன்கள், தாய், பாட்டி, கொள்ளுப் பாட்டி ஆகிய கோத்திர தாயாதிகளுக்கு ஒவ்வொருவருக்கும் அந்த பிண்டங்களை அர்ப்பணித்து, கடைசியில் அந்த ஆறு பிண்டங்களையும் ஒன்றாக இணைத்து காகத்துக்கு வைப்பார்கள். உயிரினங்களில் கூடி வாழ்ந்து, சேர்ந்து உண்ணும் உயர்ந்த குணம் கொண்டது காக்கை இனம். அப்படிப்பட்ட உயர்ந்த ஜீவனான காகத்திற்கு உணவிடுவதன் மூலம் பித்ருக்களின் ஆசியைப் பெற முடியும் என சாஸ்திரம் கூறுகிறது. எனவே காகத்திற்கும் அமாவாசை தினத்தில் உணவளிப்பது சிறப்பு.

    ஆடி அமாவாசையன்று ராமேஸ்வரத்திற்கு சென்று அங்குள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடுவது சிறப்பாகும். ராமேஸ்வரம் திருத்தலம், ராமாயணத்துடன் தொடர்புடையது. சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் தமிழகத்தில் உள்ள ஒரே தலம் இதுதான். 64 தீர்த்தங்களைக் கொண்ட தமிழகத்தின் ஒரே கோவில் என்ற பெருமையும் ராமேஸ்வரத்திற்கு உண்டு. இதில் 22 தீர்த்தங்கள் கோவிலுக்கு உள்ளேயே இருக்கின்றன. ராமேஸ்வரம் ராமநாதர் ஆலயம் முன்புறம் உள்ள கடல் நீரில் அலையே இருக்காது. சீதாதேவி போல அமைதியாக இருக்கும் இக்கடலில் நீராடுவது சிறப்பு. அதிலும் ஆடி அமாவாசையன்று நீராடுவதும், நீத்தார் கடன்களைச் செய்வதும் மிகவும் விசேஷமானது.

    இலங்கை யுத்தம் முடிந்து கடல் கடந்து நாடு திரும்பிய ராமன், ராவணனைக் கொன்ற பாவத்தை தீர்த்துக்கொள்ள மணலில் ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டான். அந்த லிங்கமே ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதர். ஆடி மாதத்தில் அம்பிகை பர்வதவர்த்தினிக்கும், ராமநாதருக்கும் திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெறும். தீர்த்த நீராடலுக்கு பெயர் பெற்ற ஆடிமாதம் முழுவதும் இங்கு நீராடுவது சிறப்பாகும். பாவநிவர்த்தி மட்டுமல்லாமல், பித்ருதோஷம் நீக்கும் புனிதத்தலமாக இருப்பதால் ஆடி அமாவாசையும் இந்த ஆலயத்தில் சிறப்பு பெறுகிறது.

    ஆடி அமாவாசை அன்று ராமேஸ்வரம் சென்றோ அல்லது அருகாமையில் உள்ள ஆறு, கடல், ஏதாவது ஒரு நீர்நிலையில் நீராடி, திதி, தர்ப்பணம் கொடுத்து முன்னோர்களை நம் இல்லங்களுக்கு அழையுங்கள்.

    நெய்வாசல் நெடுஞ்செழியன்
    ஆடி மாதத்தில் வருகின்ற ஆடி தேய்பிறை பிரதோஷ தினமான இன்று சிவபெருமானை விரதம் இருந்து வழிபட்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
    ஆடி மாத தேய்பிறை பிரதோஷ தினத்தன்று அதிகாலையில் எழுந்து, குளித்து முடித்துவிட்டு சிவனை வணங்கி, உணவேதும் உண்ணாமல் சிவபெருமானுக்கு விரதமிருக்கலாம். இன்று ஆடி தேய்பிறை பிரதோஷம் சிவனுக்கு உகந்த திங்கட்கிழமை அன்று வருவது மிகவும் விசேஷமானதாகும். ஆடி தேய்பிறை பிரதோஷ தினத்தன்று பிரதோஷ வேளையான மாலை 4 மணி முதல் 6 மணி வரையான நேரத்தில் அருகிலுள்ள சிவன் கோயிலுக்கு சென்று சோமாசூக்த பிரதிட்சணம் வந்து வணங்க வேண்டும்.

    பிறகு நந்தி தேவர் மற்றும் சிவப்பெருமானின் அபிஷேகத்திற்கு பால், பன்னீர், தேன், தயிர் போன்ற அபிஷேக பொருட்களை தானம் தருவது சிறந்தது. மேலும் நந்தி தேவருக்கு அருகம்புல் மாலை சாற்றி, வெல்லம் கலந்த அரிசியை நந்தி பகவானுக்கு நைவேத்தியாமாக வைக்க வேண்டும். பிரதோஷ வேளை பூஜையின் நந்தி தேவர் மற்றும் சிவபெருமான், பார்வதி தேவியை வணங்க வேண்டும். எவ்வளவு பெரிய தோஷமாக இருந்தாலும் பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து வெள்ளை நிற பசுவிடமிருந்து கறந்த பாலைக் கொண்டு ஈசனை அபிஷேகம் செய்து, வில்வ இலை, மல்லிகை பூக்கள் சாற்றி வழிபட்டால் சிறப்பான பலன் கிடைக்கும்.

    ஆடி தேய்பிறை பிரதோஷ பூஜை மேற்கொள்ளும் போது அறிவு வளரும், நினைவாற்றல் பெருகும், அனைத்து விதமான தோஷங்களும் நீங்குகிறது. திங்கட்கிழமையில் வருகின்ற ஆடி பிரதோஷத்தில் சிவனை வழிபடுவதால் சந்திர கிரக தோஷங்கள் நீங்குகிறது. சித்த பிரம்மை, மன நல குறைபாடுகள் போன்றவை குணமாகும். வேலை கிடைக்காமல் தவிப்பவர்களுக்கு விரைவில் வேலை கிடைக்கும். வீட்டில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடைபெறும்.
    கும்பம் ராசியினர் வாழ்வில் செல்வ நிலை உயரவும், அதிர்ஷ்டங்களை பெறவும் எந்த தெய்வங்களை விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டும் என்று அறிந்து கொள்ளலாம்.
    கும்ப ராசியில் பிறந்தவர்கள் செல்வ வளமிக்க வாழ்க்கை கிடைக்க பெறவும், அனைத்திலும் சிறப்பான முன்னேற்றங்களை அடையவும் சனிக்கிழமைகளில் விரதம் இருந்து ஆஞ்சநேயர் வழிபாடு மேற்கொள்வதால் சனி பகவானின் தோஷங்கள் நீங்கி நன்மைகள் ஏற்பட தொடங்கும். மேலும் சனி அம்சம் கொண்ட திருப்பதி வெங்கடாசலபதியையும் சனிக்கிழமைகளில் விரதம் இருந்து வழிபடுவதால் வாழ்வில் செல்வ நிலை உயரும். இந்த ராசியினர் அஷ்டமி தினங்களில் பைரவர் மூர்த்தியை விரதம் இருந்து வழிபட்டு வர வேண்டும்.

    கும்ப ராசியினர் விரதம் மேற்கொள்ள நினைத்தால் சனி பகவானுக்கு சனிக்கிழமை விரதம் மேற்கொள்வது சிறந்த பலன்களை கொடுக்கும். வலது கை மோதிர விரலில் தங்க மோதிரம் அணிவது அதிர்ஷ்டத்தை தரும். ஏழ்மையான நிலையில் இருப்பவர்களுக்கும், கோயில்களுக்கும் சனிக்கிழமைகளில் எண்ணெய் தானம் தருவது உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் தோஷங்களை போக்கும். பொய் பேசுவதை தவிர்க்க வேண்டும். இதனால் நீதி தேவனாகிய சனிபகவானின் அருள் உங்களுக்கு கிட்டும்.
    ஜாதகத்தில் சூரிய தோஷம் இருப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த விரத முறையை முறையாக கடைபிடித்தால் நன்மைகள் உண்டாகும்.
    சூரியபகவானின் தோஷங்கள் நீங்கவும், அவரின் முழுமையான அருளாசிகளைப் பெறவும் ஏதேனும் ஒரு ஞாயிற்றுக்கிழமை விரதம் இருந்து காலை 8 மணிக்குள்ளாக தஞ்சையில் இருக்கும் சூரியனார் கோவிலுக்கு சென்று, சூரிய பகவானுக்கு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து, ஆரஞ்சு நிற வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்து, கோயிலை 10 முறை வலம் வந்து வழிபட வேண்டும். இந்த பரிகாரத்தை ஆறு மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது வருடத்திற்கு ஒருமுறையோ செய்வது சூரிய பகவானால் நன்மைகள் ஏற்பட வழிவகை செய்யும்.

    சூரியனார் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்ய முடியாத நிலையில் இருப்பவர்கள், உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் விரதம் இருந்து காலை 8 மணிக்குள்ளாக சென்று, நவக்கிரக சன்னிதியில் இருக்கின்ற சூரியபகவானுக்கு செந்தாமரைப்பூ சமர்ப்பித்து, கோதுமை கொண்டு செய்யப்பட்ட உணவை நைவேத்தியம் செய்து, சூரிய பகவானுக்குரிய காயத்திரி மந்திரம் மற்றும் ஸ்தோத்திரங்களை 108 முறை துதித்து வழிபடுவதால், சூரிய கிரக தோஷங்கள் நீங்கி, வாழ்வில் நன்மையான பலன்கள் உண்டாகும்.

    தினந்தோறும் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு, சூரியன் உதிக்கின்ற கிழக்கு திசை நோக்கி நின்றவாறு ஓம் சூரிய நாராயண நமஹ என்கிற மந்திரத்தை 108 துதித்து வழிபடுவதால் சூர்ய கிரக தோஷங்கள் நீங்கும். ஞாயிற்றுக்கிழமைகள் தோறும் விரதம் இருந்து ஒரு வேளை மட்டும் இனிப்பு உணவு அல்லது கோதுமை கொண்டு செய்யப்பட்ட உணவை சாப்பிட்டு, சூரிய பகவானுக்கு சூரிய பகவானை மந்திரங்களால் துதித்து வழிபட்டு வர சூரியனால் நன்மைகள் உண்டாகும். 
    ×