search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சிவன்
    X
    சிவன்

    இன்று ஆடி மாத தேய்பிறை பிரதோஷம்

    ஆடி மாதத்தில் வருகின்ற ஆடி தேய்பிறை பிரதோஷ தினமான இன்று சிவபெருமானை விரதம் இருந்து வழிபட்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
    ஆடி மாத தேய்பிறை பிரதோஷ தினத்தன்று அதிகாலையில் எழுந்து, குளித்து முடித்துவிட்டு சிவனை வணங்கி, உணவேதும் உண்ணாமல் சிவபெருமானுக்கு விரதமிருக்கலாம். இன்று ஆடி தேய்பிறை பிரதோஷம் சிவனுக்கு உகந்த திங்கட்கிழமை அன்று வருவது மிகவும் விசேஷமானதாகும். ஆடி தேய்பிறை பிரதோஷ தினத்தன்று பிரதோஷ வேளையான மாலை 4 மணி முதல் 6 மணி வரையான நேரத்தில் அருகிலுள்ள சிவன் கோயிலுக்கு சென்று சோமாசூக்த பிரதிட்சணம் வந்து வணங்க வேண்டும்.

    பிறகு நந்தி தேவர் மற்றும் சிவப்பெருமானின் அபிஷேகத்திற்கு பால், பன்னீர், தேன், தயிர் போன்ற அபிஷேக பொருட்களை தானம் தருவது சிறந்தது. மேலும் நந்தி தேவருக்கு அருகம்புல் மாலை சாற்றி, வெல்லம் கலந்த அரிசியை நந்தி பகவானுக்கு நைவேத்தியாமாக வைக்க வேண்டும். பிரதோஷ வேளை பூஜையின் நந்தி தேவர் மற்றும் சிவபெருமான், பார்வதி தேவியை வணங்க வேண்டும். எவ்வளவு பெரிய தோஷமாக இருந்தாலும் பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து வெள்ளை நிற பசுவிடமிருந்து கறந்த பாலைக் கொண்டு ஈசனை அபிஷேகம் செய்து, வில்வ இலை, மல்லிகை பூக்கள் சாற்றி வழிபட்டால் சிறப்பான பலன் கிடைக்கும்.

    ஆடி தேய்பிறை பிரதோஷ பூஜை மேற்கொள்ளும் போது அறிவு வளரும், நினைவாற்றல் பெருகும், அனைத்து விதமான தோஷங்களும் நீங்குகிறது. திங்கட்கிழமையில் வருகின்ற ஆடி பிரதோஷத்தில் சிவனை வழிபடுவதால் சந்திர கிரக தோஷங்கள் நீங்குகிறது. சித்த பிரம்மை, மன நல குறைபாடுகள் போன்றவை குணமாகும். வேலை கிடைக்காமல் தவிப்பவர்களுக்கு விரைவில் வேலை கிடைக்கும். வீட்டில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடைபெறும்.
    Next Story
    ×