search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    செவ்வாய் விரதம்
    X
    செவ்வாய் விரதம்

    செவ்வாய் விரதம் இருப்பது எப்படி?

    ஜாதகத்தில் செவ்வாய் தோஷமும் அங்காரக தோஷமும், செவ்வாய் நீச்சம் அடைந்தவர்கள், செவ்வாய் திசை நடப்பவர்கள் செவ்வாய்க்கிழமை விரதம் இருக்க வேண்டும்.
    அம்மன் வழிபாட்டுக்கு வட மாவட்டங்களில் ஆடி வெள்ளியும், தென் மாவட்டங்களில் ஆடி செவ்வாயும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் முன்னுதித்த நங்கை அம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆடி மாதம் முழுக்க சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இந்த அம்பிகை ஆண் தெய்வங்களுக்கு எல்லாம் முந்திப் பிறந்ததால் இந்தப்பெயர் வந்ததாக கூறுவர்.

    ஆடி செவ்வாய்க்கிழமைகளில் அன்னதானம் செய்தால், பிற நாட்களில் செய்வதைவிட 48 மடங்கு அதிக பலன் கிடைக்கும் என்பது ஒருவித நம்பிக்கை. இந்த தானத்தில் அனைத்துவித காய்கறிகளையும் ஒன்றாக சமைத்த சோறு கொடுப்பது மிகவும் நல்லது. ஜாதகத்தில் செவ்வாய் தோஷமும் அங்காரக தோஷமும், செவ்வாய் நீச்சம் அடைந்தவர்கள், செவ்வாய் திசை நடப்பவர்கள் செவ்வாய்க்கிழமை விரதம் இருக்க வேண்டும்.

    அதிகாலை எழுந்து குளித்து சிவப்பு நிற ஆடை அணிந்து அம்மன் கோவிலுக்குச் சென்று செந்நிற மலர் அல்லது செண்பக மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். நிவேதத்திற்குச் செந்நிற கனிகளே உகந்தது. காலையில் அம்மனையும் மாலையில் முருகனையும் வழிபட வேண்டும்.

    ஏழைகளுக்கு துவரை தானம் செய்தல் நல்லது. மஞ்சள் குங்குமம், தாம்பூலம் கொடுக்க வேண்டும். செம்பவள மோதிரமோ அல்லது கழுத்து சங்கிலியில் செம்பவளம் அமைத்தலோ நல்லது. இவ்விதம் விரதம் இருப்பவர்களுக்கு அம்மன் அருள் கிடைக்கும். ரத்த சம்பந்தமான நோய்கள் தீரும்.

    Next Story
    ×