என் மலர்
முக்கிய விரதங்கள்
குரு பகவானுக்குரிய வியாழக்கிழமை விரதத்தை முறையாக மேற்கொள்பவர்களுக்கு வாழ்வில் பல யோகங்கள் ஏற்படும். செல்வ வளம் பெருகி, சிறந்த வாழ்க்கை உண்டாகும்.
குரு பகவானின் அருளை பெறுவதற்குரிய ஒரு சிறந்த விரதம் தான் “வியாழக்கிழமை விரதம்”. இந்த விரதத்தின் மகிமை பற்றியும், அதனால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதையும் இங்கு அறிந்து கொள்ளலாம்.
வாரத்தில் வரும் ஏழு நாட்களில் வியாழக்கிழமை பிரகஸ்பதி எனப்படும் குரு பகவான் வழிபாட்டிற்குரிய தினமாக இருக்கிறது. எந்த ஒரு மாதத்திலும் சுக்ல பட்சம் எனப்படும் வளர்பிறையில் வரும் வியாழக்கிழமைகளில் இந்த வியாழக்கிழமை விரதத்தை மேற்கொள்ளலாம். ஒரு வருடத்தில் தொடர்ந்து 16 வளர்பிறை வியாழக்கிழமைகளில் இந்த வியாழ விரதம் மேற்கொள்வது மிகுந்த நன்மைகளை தரும். 3 ஆண்டு காலம் இந்த விரதத்தை சரியான படி அனுஷ்டிப்பவர்களுக்கு குரு பகவானின் பூரண அருள் வாழ்நாள் முழுவதும் கிடைக்கும்.
பிரகஸ்பதி எனும் குரு பகவானை குறித்து மேற்கொள்ளப்படும் இந்த வியாழக்கிழமை விரத தினத்தன்று அதிகாலையிலே எழுந்து தலைக்கு ஊற்றி குளித்து முடித்து விட வேண்டும். பிறகு மஞ்சள் நிற ஆடைகளை அணிந்து கொண்டு, எதுவும் உண்ணாமல், அருந்தாமல் அருகிலுள்ள கோயிலின் நவகிரக சந்நிதிக்கு சென்று குரு பகவானுக்கு மஞ்சள் நிற பூக்கள் சாற்றி, மஞ்சள் நிற இனிப்புகள் நைவேத்தியம் செய்து, சந்தனம், மஞ்சள் போன்றவற்றை கொண்டு குரு பகவானுக்கு அபிஷேகம் செய்விக்க வேண்டும். பின்பு குங்குமப்பூ கலந்த பசும்பாலை கொண்டு குரு பகவானுக்கு அபிஷேகம் செய்து வழிபட வேண்டும்.
விரதம் இருக்கும் நாள் முழுவதும் உணவேதும் அருந்தாமல் இருப்பது விரதத்தின் முழுமையன பலன்களை தரும். அன்றைய தினம் குரு பகவானுக்குரிய மந்திரங்கள், ஸ்தோத்திரங்கள் போன்றவற்றை படிப்பது நல்லது. இரவில் உப்பு சேர்க்காத உணவை சமைத்து சாப்பிட்டு வியாழக்கிழமை விரதத்தை நிறைவு செய்யலாம்.
குரு பகவானுக்குரிய இந்த வியாழக்கிழமை விரதத்தை முறையாக மேற்கொள்பவர்களுக்கு வாழ்வில் பல யோகங்கள் ஏற்படும். சரியான காலத்தில் திருமணம் நடக்கும். ஜாதகத்தில் குரு கிரக தோஷம் இருப்பவர்களுக்கு இந்த விரதம் அனுஷ்டிப்பதால் அவை நீங்கும். தொழில், வியாபாரங்களில் சரியான வருமானம் இல்லாதவர்கள், குடும்ப பொருளாதார நிலை சிறப்பாக இல்லாதவர்கள் இந்த விரதம் மேற்கொள்வதால் குரு பகவானின் அருள் கிடைக்கப்பெற்று தொழில், வியாபாரங்களில் சிறந்து செல்வ வளம் பெருகி, சிறந்த வாழ்க்கை உண்டாகும்.

கற்பக விநாயகராக பிள்ளையார்பட்டியில் காட்சி தருவதால் இவரை விரதம் இருந்து வழிபடுபவர்களுக்கு கற்பக விருட்சமாக வாழ்க்கை மலர்கிறது. கனவுகள் அனைத்தும் நனவாகிறது.
நாம் எடுக்கும் காரியங்கள் அனைத்தும் தங்கு தடையின்றி வெற்றி பெற வேண்டுமானால், விக்னேஸ்வரரை விரதம் இருந்து வழிபட வேண்டும். ஆனைமுகப் பெருமான் ஆலயங்களில் மட்டுமல்லாமல், அரசமரம், ஆறு, குளங்களின் கரைகளிலும், இன்னும் சொல்லப்போனால் வீதிகள் தோறும் கூட வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.
அப்படிப்பட்ட விநாயகப் பெருமான் திசைமாறிக் காட்சியளிப்பது பிள்ளையார் பட்டியில்தான். இந்தப் பிள்ளையார்பட்டி சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகில் உள்ளது. அங்கு வடக்குப் பார்த்து வீற்றிருந்து கற்பக விநாயகராக காட்சியளிக்கிறார். எனவே தான் வரத்தை அள்ளி, அள்ளித் தருகிறார். ஒருவரது ஜாதகத்தில் கேது திசை அல்லது ஏது திசை நடந்தாலும் ஆதரவுக்கரம் நீட்டுவது ஆனைமுகப் பெருமான்தான்.
அந்த ஆனைமுகப் பெருமான் கற்பக விநாயகராக பிள்ளையார்பட்டியில் காட்சி தருவதால் இவரை விரதம் இருந்து வழிபடுபவர்களுக்கு கற்பக விருட்சமாக வாழ்க்கை மலர்கிறது. கனவுகள் அனைத்தும் நனவாகிறது.

உங்களின் குடும்பத்திற்கு, பெண்ணின் சாபம் இருப்பதாக நீங்கள் கருதினால், அது விலகுவதற்காக ஒரே தீர்வு ரிஷி பஞ்சமி விரதம் மேற்கொள்வதுதான்.
வளர்பிறை பஞ்சமி திதியில் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும். சூரியன் உதிக்கும் முன்பாகவே எழுந்து நீராட வேண்டும். நதியிலோ, குளத்திலோ, கிணற்றிலோ நீராடுவது சிறப்பு. பின் பட்டாடை உடுத்தி விரதத்தை தொடங்க வேண்டும். சந்தனத்தால் பிள்ளையாரை பிடித்து வைத்து, அதற்கு மாலை அணிவித்து கலசம் வைக்க வேண்டும்.
அதன் பின் நாம் நமக்குத் தேவையான பிரார்த்தனை நிறைவேற வேண்டும் என வேண்டிக் கொண்டு பூஜையை செய்ய வேண்டும். அன்றைய தினம் முழுவதும் ஒரு வேளை மட்டுமே சிறிதளவு உணவருந்த வேண்டும். நைவேத்தியம் படைத்து, அந்த பிரசாதங்களை வீட்டிற்கு வரும் அக்கம் பக்கத்தினர், உறவினர், நண்பர்களுக்கு தரலாம்.
அப்படி யாரும் வரவில்லை என்றால், வாசலில் நின்று கொண்டு அங்கு வரும் யாசகர்களுக்காவது அந்த பிரசாதத்தை வழங்க வேண்டும். அதை ‘பூஜா பிரசாத தானம்’ என்பார்கள். அதன் பின் கலசத்தின் முன் நின்று கொண்டு மனதில் காசியபர், அத்ரி, பாரத்வாஜர், விஸ்வாமித்திரர், ஜமதக்னி மற்றும் வசிஷ்ட மகரிஷிகளை நினைத்து, தன் குடும்பத்தில் பெண்களால் ஏற்பட்டுள்ள சாபத்தை விலக்குமாறு வேண்டிக்கொள்ள வேண்டும்.

ஆவணி மாதம் வரும் சதுர்த்தியை நாம் ‘விநாயகர் சதுர்த்தி’ என்று கொண்டாடுகிறோம். அன்றைய தினம் பக்தியோடு தும்பிக்கையான் மீது நீங்கள் வைக்கும் நம்பிக்கையால் இன்பங்கள் இல்லம் தேடிவரும்.
ஐங்கரன் என்றும், தும்பிக்கையான் என்றும், வேழமுகத்தான் என்றும் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுபவர் விநாயகப்பெருமான். இவருக்கு சதுர்த்தி திதி உகந்ததாகும். அதில் ஆவணி மாதம் வரும் சதுர்த்தியை நாம் ‘விநாயகர் சதுர்த்தி’ என்று கொண்டாடுகிறோம். அன்றைய தினம் பக்தியோடு கணபதி கவசம் பாடி வழிபட்டால், வாழ்வில் நல்ல திருப்புமுனை ஏற்படும். தும்பிக்கையான் மீது நீங்கள் வைக்கும் நம்பிக்கையால் இன்பங்கள் இல்லம் தேடிவரும்.
“வேழமுகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுத்து வரும், வெள்ளைக் கொம்பன் விநாயகனைத் தொழ வெற்றி மிகுத்து வரும்” என்று முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். ஞாலம் போற்றும் வேழமுகத்தானை விரதமிருந்து வழிபட வேண்டும். விநாயகர் சதுர்த்தி அன்று, அருகில் இருக்கும் சிவாலயம் சென்று அங்குள்ள கணபதிக்கு அருகம்புல் மாலையிட்டு வழிபட்டால், அவர் பெருகும் பொன்னை அள்ளி, பெருமையுடன் நமக்கு அளிப்பார்.
எந்தவொரு காரியத்தையும் தொடங்கும் பொழுது, முதன் முதலில் விநாயகரை வணங்கி விட்டுத் தொடங்குவதுதான் வழக்கம். எழுதத் தொடங்கும் பொழுதுகூட நல்ல பலன்கள் நமக்குக் கிடைக்க, பிள்ளையார் சுழி போட்டு தொடங்குகிறோம். கணங்களுக்கெல்லாம் அதிபதியாக இருப்பதால்தான் அவரை நாம் ‘கணபதி’ என்கின்றோம்.
இந்த ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி திருநாள், ஆவணி மாதம் 16-ம் நாள் (2.9.2019) திங்கட்கிழமை வருகிறது. அன்றைய தினம் பிள்ளையாரை வழிபட்டால், எல்லாப் பாக்கியங்களும் நமக்குக் கிடைக்கும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. விநாயகர் சாணத்திலும் காட்சி கொடுப்பார்; சந்தனத்திலும் காட்சி கொடுப்பார். மஞ்சள் பொடியிலும் காட்சிதருவார்; மரகதக் கல்லிலும் காட்சிதருவார். விநாயகரை வழிபட நினைப்பவர்கள் வீட்டிலும் வழிபாடு செய்யலாம். விக்கிரகம் வைத்திருக்கும் ஆலயங்களுக்கும் சென்று வழிபடலாம்.
‘சதுரம்’ என்றால் நான்கு பக்கங்களிலும் பூர்த்தியாகும் அமைப்பாகும். எனவே வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாக இந்த சதுர்த்தி விரதத்தை நாம் மேற்கொள்ளலாம். விநாயகருக்கு உகந்த நாட்கள் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகும். திதிகளில் சதுர்த்தி திதி அவருக்கு உகந்தது. அவருக்கு படைக்கும் ஒவ்வொரு பொருளிலும் அர்த்தம் இருக்கிறது. மோதகம் படைப்பதன் காரணம், மோதும் அகங்கள் இருக்கக் கூடாது என்பதால்தான். ‘எல்லோரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும்’ என்ற தத்துவத்தை வலியுறுத்தித்தான் மோதகத்தைப் படைக் கிறோம். ‘அகம்’ என்றால் ‘மனம்’ என்று பொருள்.
குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் ஏற்படாமல் இருக்க மோதக நிவேதனம் செய்ய வேண்டும். துன்பங்கள் சிதறியோட, சிதறுகாய் உடைக்க வேண்டும். அவல், குசேலனை குபேரனாக்கிய பொருள். எனவே அவல், பொரி, கடலையை ஆனைமுகனுக்கு அர்ப்பணித்து, கணபதி கவசம் பாடினால் மனம் மகிழும் வாழ்க்கை அமையும். மக்கள் போற்றும் செல்வாக்கும் வந்துசேரும்.
ஏழரைச் சனி, அர்த்தாஷ்டமச் சனி, அஷ்டமத்துச் சனியின் பிடியில் சிக்கியவர்கள், சனிக்கிழமை அன்று விநாயகப்பெருமானை வழிபட வேண்டியது அவசியமாகும்.
கனவுகளை நனவாக்கும் கற்பகமூர்த்தி, சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் வீற்றிருக்கிறார். அதன் அருகில் கீழச்சிவல்பட்டியில் சுகம் தரும் சுந்தர விநாயகராகவும், பி.அழகாபுரியில் கலங்காதகண்ட விநாயகராகவும், காரைக்குடி அருகில் உள்ள கோட்டையூரில் சொற்கேட்ட விநாயகராகவும் காட்சி தருகிறார். அவருக்கு அப்பம், கொழுக்கட்டை, மோதகம், அவல், பொரி, சர்க்கரைப் பொங்கல், சுண்டல் படைத்து வழிபட வேண்டும்.
‘தும்பிக்கை கொண்டவனே! தூதாகச் சென்றவனே! நம்பிக்கை கொண்டு நானுன்னைத் தொழுகின்றேன்! அப்புவியில் எனக்கு வரும் அன்றாடப் பிரச்சினையை, இன்பமுடன் தீர்த்துவைக்க எழுந்துவா கற்பகமே!’ என்று பாடுங்கள். பலன் கிடைக்கும்.
ஒருவரது ஜாதகத்தில் கேதுவின் ஆதிக்க திசை, புத்தி நடக்கும்போது, விநாயகரை வழிபட்டால் தடைகள் நீங்கும். தக்கவிதத்தில் வாழ்க்கை அமையும். தடுமாற்றங்கள் அகலும் என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கின்றன. விக்னங்களை அகற்றுவதால் ‘விக்னேஸ்வரன்’ எனப் பெயர் பெற்றவர் விநாயகப் பெருமான்.
வள்ளியை முருகப்பெருமான் மணம் முடிப்பதற்காக, யானை வடிவில் வந்து விநாயகர் உதவியதாக புராணங்கள் சொல்கின்றன. எனவே யானைக்கு கரும்பு, வாழைப் பழம் போன்ற உணவுப் பொருட்களை வழங்கி, அதன் ஆசியைப் பெறுவதும் நல்லது. ஆனைமுகப்பெருமானை ஆவணி சதுர்த்தியில் வழிபட்டால் ஆவல்கள் பூர்த்தியாகும். அனுதினமும் செல்வம் வரும்.
‘ஜோதிடக்கலைமணி’ சிவல்புரி சிங்காரம்.
ஆவணி மாதத்தில் வரும் விநாயகர் சதுர்த்தி நோன்பை கடைப்பிடிப்பதால் புத்திர பாக்கியம், செல்வம் ஆகிய பலன்கள் கிடைக்கப்பெறும்.
ஆவணி மாதத்தில் வரும் விநாயகர் சதுர்த்தி நோன்பை கடைப்பிடிப்பதால் புத்திர பாக்கியம், செல்வம் ஆகிய பலன்கள் கிடைக்கப்பெறும். ஒவ்வொரு மாதத்திலும் சதுர்த்தி வருகிறது. அன்றைய தினங்களில் விநாயகரை நோக்கி நோன்பு அனுஷ்டிப்பது சிறப்பு வாய்ந்ததாகும். ஒவ்வொரு மாதமும் சதுர்த்தி நோன்பை கடைப்பிடித்தால் கிடைக்கும் பலன்களை இங்கு காணலாம்.

* சித்திரை - விஷ்ணு லோகம்
* வைகாசி - சங்கர்ஷண லோகம்
* ஆனி - சொர்க்க லோகம்
* ஆடி - நினைத்தது கைகூடும்
* ஆவணி - விருப்பங்கள் நிறைவேறும்
* புரட்டாசி - சுகம் கிடைக்கும்
* ஐப்பசி - ஈசனுக்கு பூஜை செய்த பலன் கிடைக்கும்
* கார்த்திகை- பெண்களுக்கு சகல சவுபாக்கியமும் உண்டாகும்.
* மார்கழி - மகிழ்ச்சி வந்து சேரும்
* தை - தன லாபம் கிட்டும்
* மாசி - ஆரோக்கிய நலம்
* பங்குனி - செல்வ வளம் பெருகும்
விநாயகர் சதுர்த்தி விரதம் ஆவணி மாதம் சதுர்த்தியில் தொடங்கி, புரட்டாசி மாதம் சுக்கிலபட்ச சதுர்த்தி வரை மேற்கொள்ளப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தி விரதம் ஆவணி மாதம் சதுர்த்தியில் தொடங்கி, புரட்டாசி மாதம் சுக்கிலபட்ச சதுர்த்தி வரை மேற்கொள்ளப்படுகிறது. ஆவணி மாதம் அமாவாசைக்கு அடுத்த நான்காவது நாள் விநாயகர் சதுர்த்தியாகக் கொண்டாடப்படுகிறது. அன்று விடியற்காலையில் எழுந்து வீட்டை நன்றாக பெருக்கி, மெழுகி சுத்தம் செய்துவிட்டு வீட்டு வாசலில் மாவிலை, தோரணங்களை கட்ட வேண்டும். வீட்டின் வாசலுக்கு இருபுறமும் வாழைமரக் கன்றையும் கட்டி வைக்கலாம்.
பூசை அறையைக் கழுவி, மெழுகி, கோலம்போட்டு, அதன் மையப் பகுதியில் ஒரு பலகை வைத்து மேலும் ஒரு கோலம் போட்டு தலைவாழை இலை விரித்து பச்சரிசையைப் பரப்பி வைக்க வேண்டும். அதில் வலது கை மோதிர விரலால் பிள்ளையார் சுழி போட்டு ‘ஓம்’என்று எழுதி மண்பிள்ளையாரை வைக்க வேண்டும். அதற்கு அறுகம்புல், எருக்கம்பூ, விபூதி, சந்தனம் மலர்களால் அலங்கரிக்க வேண்டும்.
அதன்பிறகு விநாயகருக்கு பிடித்தமான கொழுக்கட்டை, மோதகம், தேங்காய், வெல்லம் கலந்த மாவு உருண்டை, விளாம்பழம், அப்பம், சுண்டல், அவல், பொரி, கடலை, எள்ளுருண்டை போன்ற நிவேதனப் பொருளாய் வைத்து தூபமிட்டு சாம்பிராணி புகை காட்டி சூடம் ஏற்றி வழிபட வேண்டும். அப்பொழுது விநாயகருக்குரிய அகவல், கவசம், சகஸ்ரநாமம், காரிய சித்திமாலை, அவ்வையார் அருளிய விநாயகர் அகவல் ஆகியவற்றை பாடுவது நற்பலன்களை தரும்.

விநாயகர் சதுர்த்தி நாளில் கீழ்க்கண்ட பொருட்களில் பிள்ளையாரை அமைத்து வழிபட்டால், பல நன்மைகளை அடையலாம் என்பது ஆன்மிக சான்றோர்களின் கருத்தாகும்.

மஞ்சள் பிள்ளையார் - திருமணத் தடை நீங்கும்
மண் பிள்ளையார் - ராஜ பதவி கிடைக்கும்
புற்றுமண் பிள்ளையார் - வியாபாரம் பெருகும், லாபம் கிடைக்கும்
வெல்லப் பிள்ளையார் - சவுபாக்கியம் உண்டாகும்
உப்புப் பிள்ளையார் - எதிரிகள் வசியமாவர்
வேப்பமரப் பிள்ளையார் - ஜெயம் உண்டாகும்
வெள்ளெருக்கு பிள்ளையார் - ஞானம் கிடைக்கும்
பசுஞ்சாணப் பிள்ளையார் - எண்ணிய காரியம் கைகூடும்
பச்சரிசி மாவுப் பிள்ளையார் - விவசாயம் பெருகும், விளைச்சல் அதிகரிக்கும்
வெண்ணெய் பிள்ளையார் - வியாதிகள் அகலும்.

ஆவணி மாத அமாவாசை தினமான இன்று விரதம் இருக்கும் முறையையும் அதனால் நமக்கு ஏற்படும் பலன்கள் எத்தகையது என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
ஆவணி அமாவாசை நேற்று மாலையே தொடங்கியதால் இன்று காலை அமாவாசை தர்ப்பணம், திதி போன்ற சடங்குகளை செய்யலாம். ஆவணி மாத அமாவாசை தினத்தன்று காலையில் குளித்து முடித்து, உங்கள் ஊரில் இருக்கும் ஆற்றங்கரை அல்லது குளக்கரையில் மைத்ர முகூர்த்த நேரம் எனப்படும் அதிகாலை நேரத்தில் வேதியர்களை கொண்டு மறைந்த உங்கள் முன்னோர்கள், உறவினர்களுக்கு திதி தர்ப்பணம் தர வேண்டும். பின்பு உங்கள் தாய்வழி மற்றும் தந்தை வழி முன்னோர்களை மனதில் நினைத்து, வேதியர்கள் கூறும் மந்திரங்களை திரும்ப கூறி, அரிசி பிண்டத்தில் கருப்பு எள் போட்டு, அதில் தூய்மையான நீரை சிறிது விட வேண்டும். கருப்பு எள் சனி பகவானின் ஆதிபத்தியம் கொண்டது. இதை இச்சடங்கில் பயன்படுத்துவதால் ஆயுள் காரகனாகிய சனி பகவானின் அருளாசி ஒருவருக்கு கிடைக்கின்றது.
சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அமாவாசை திதி, தர்ப்பணம் போன்றவற்றை தர இயலாதவர்கள் அன்றைய தினம் உங்கள் வீட்டிலேயே முன்னோர்களை வழிபட்டு கருப்பு மற்றும் வெள்ளை எள் கலந்த சாதத்தை காகங்களுக்கு உணவாக வைப்பதால் முன்னோர்களுக்கு திதி அளித்த பலன் உண்டாகும்.
இந்த ஆவணி மாதத்தில் வருகிற அமாவாசை தினத்தில் மேற்கண்ட முறையில் தர்ப்பணம் மற்றும் சிராத்தம் தந்து முன்னோர்களை வழிபடுவதால் வீட்டில் தரித்திர நிலை நீங்கி சுபிட்சங்கள் பெருகும். தங்கள் வம்சத்தில் திருமணம் காலதாமதம் ஆகும் நபர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும்.

ஸ்ரீராகவேந்திரரின் அருளைப் பெறுவதற்காக விரதம் இருப்பவர்களும் உண்டு. இந்த விரதத்தை எவ்வாறு அனுஷ்டிக்க வேண்டும் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
சிதம்பரம் அருகில் உள்ள புவனகிரியில் பிறந்து, தஞ்சாவூரில் தவம் இயற்றிய ஸ்ரீராகவேந்திரரை வழிபடுபவர்களின் எண்ணிக்கை ஏராளம். ஸ்ரீராகவேந்திரரின் அருளைப் பெறுவதற்காக விரதம் இருப்பவர்களும் உண்டு. இந்த விரதத்தை எவ்வாறு அனுஷ்டிக்க வேண்டும் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
ஸ்ரீராகவேந்திரருக்கு உகந்த இந்த விரதத்தை ஆரம்பிக்க வியாழக்கிழமை உகந்தநாள் ஆகும். அன்று பூச நட்சத்திரமாக இருந்தால் மிகவும் சிறப்பு. வேறு நட்சத்திரமாக இருந்தாலும் வழிபடலாம். குரு ஓரை நேரத்தில் விரதத்தை தொடங்குவது நல்லது. ஆறு வியாழக்கிழமைகள் தொடர்ந்து நம்பிக்கையுடன் பூஜை செய்ய வேண்டும்.
ஏழாவது வியாழக்கிழமை பூஜையின் விரத முடிவு நாளாகும். அன்று ஒரு அடி உயரத்திற்கு மேல் உள்ள ஐந்துமுக குத்துவிளக்கு வைக்க வேண்டும். பூஜைக்கு வெற்றிலைப் பாக்கு, பழம், மணமிக்க மலர்கள், தூப தீபங்கள் ஆகியவைகள் தேவை.
பூஜை செய்யுமிடத்தில் சுத்தம் செய்து கோலமிட்டு பூஜைக்கு என்று வைத்திருக்கும் மனைப் பலகையில் ஸ்ரீராகவேந்திரர் படத்தை வைக்க வேண்டும். படத்திற்கு சந்தனம், குங்குமம் வைத்து, துளசி மாலை சூட்ட வேண்டும். அதேபோல குத்து விளக்கிற்கும் சந்தனம், குங்குமம் இடவேண்டும்.
பூஜையின்போது ஸ்ரீராகவேந்திரர் படத்தை நடுவில் வைத்து பூஜிக்க வேண்டும். பூஜையை ஆரம்பிப்பதற்கு முன்பாக, குல தெய்வத்தை வழிபட்டு பின் மஞ்சள் பொடியில் பிள்ளையார் பிடித்து வைத்து, அதற்கும் சந்தனம், குங்குமம், மலர் சூட்ட வேண்டும்.
நைவேத்தியமாக வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய் முதலியவைகளை படத்தின் முன்வைத்த பின் பூஜையைத் தொடரலாம்.
ஸ்ரீராகவேந்திரர் படத்திற்கு தீப, தூபம் காட்டி, தேங்காய் உடைத்தபின் கற்பூர ஆரத்தி எடுத்தும் கையில் துளசி இலைகளை வைத்துக்கொண்டும் எழுந்து நின்று,
“பூஜ்யாய ஸ்ரீராகவேந்த்ராய சத்ய தர்ம
ரதாயச பஜதாம் கல்பவ்ருக்ஷாய
நமதாம் ஸ்ரீ காம தேநுவே”
என்று சொல்லிக்கொண்டே படத்தையும், விளக்கையும் பதினோரு தடவை வலம் வர வேண்டும். ஒவ்வொரு முறை வலம் வரும்போது, சுலோகத்தைச் சொல்ல வேண்டும். கையில் வைத்திருக்கும் துளசி இலையை படத்திற்கு அர்ப்பணிக்க வேண்டும். முழு நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்தபின், தரையில் விழுந்து வணங்க வேண்டும்.
இதுபோல் ஆறு வியாழக்கிழமை வழிபட்ட பின், ஏழாவது வியாழக்கிழமை பழங்களுடன் சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் படைக்க வேண்டும்.
இவ்வாறு நாம் பிரார்த்தனை செய்யும்போது நமது கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். ஸ்ரீராகவேந்திரரின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

ஆவணி மாத தேய்பிறை பிரதோஷ தினத்தன்று சிவபெருமானை விரதம் இருந்து வழிபடும் முறை குறித்தும், அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் தெரிந்து கொள்ளலாம்.
ஆவணி மாத தேய்பிறை பிரதோஷ தினத்தன்று அதிகாலையில் எழுந்து, குளித்து முடித்துவிட்டு சிவனை வணங்கி, உணவேதும் உண்ணாமல் விரதம் இருப்பது சிறப்பு. பால், பழம் சாப்பிட்டும் அன்றைய தினத்தில் சிவபெருமானுக்கு விரதமிருக்கலாம். ஆவணி தேய்பிறை பிரதோஷ தினத்தன்று பிரதோஷ வேளையான மாலை 4 மணி முதல் 6 மணி வரையான நேரத்தில் அருகிலுள்ள சிவன் கோயிலுக்கு சென்று சோமாசூக்த பிரதிட்சணம் வந்து சிவபெருமான், நந்தி பகவான் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய தெய்வங்களை வணங்க வேண்டும்.
பிறகு நந்தி தேவருக்கு அருகம்புல், வெல்லம் கலந்த அரிசியையும், சிவப்பெருமானின் அபிஷேகத்திற்கு பால், பன்னீர், தேன், தயிர் போன்ற அபிஷேக பொருட்களை தானம் தந்து, பிரதோஷ வேளை பூஜையின் நந்தி தேவர் மற்றும் சிவபெருமான், பார்வதி தேவியை வணங்க வேண்டும். பிரதோஷங்களில் சனிக்கிழமை அன்று வருகின்ற சனி பிரதோஷம் மிகவும் சிறப்பானது.
அதிலும் நாளை வருகின்ற ஆவணி தேய்பிறை பிரதோஷமானது சனி பகவானுக்குரிய பூசம் நட்சத்திரத்தில் வருவதால், அன்றைய தினத்தில் சிவன் கோயிலிலேயே இருக்கின்ற நவகிரக சந்நிதியில் சனிபகவானுக்கு விளக்கெண்ணெய் தீபம் ஏற்றி, வழிபாடு செய்வதால் சனி பிரதோஷத்தன்று சிவபெருமான், நந்தி தேவரை வழிபட்ட பலனை பெற முடியும். அஷ்டம சனி, ஜென்ம சனி போன்ற சனி கிரக தோஷங்களால் பாதிக்கப்படுபவர்களுக்கு பாதகங்கள் குறைந்து நன்மைகள் அதிகரிக்கும்.மேலும் மாத சிவராத்திரி தினமும் ஆவணி தேய்பிறை பிரதோஷ தினத்திலேயே வருவது மிகவும் சிறப்பானதாகும். எனவே அன்றைய தினத்தில் பிரதோஷ வழிபாடு தவறாமல் செய்வதால் நீங்கள் எண்ணிய காரியங்கள் ஈடேறும்.

ஆஞ்சநேயருக்கு செவ்வாய்க் கிழமைகளில் விரதம் இருந்து எந்த பொருட்களைப் படைத்து வணங்கினால், அவரது முழு ஆசீர்வாதமும் கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
அனுமன் கலியுக மக்களைக் காப்பவராக கருதப்படுகிறார். இவரை மனதார நம்பிக்கையுடன் வணங்கினால், அனைத்து விதமான பிரச்சனைகளில் இருந்தும் அனுமன் காப்பார் என்றும் சொல்லப்படுகிறது. இவர் பொதுவாக குங்குமப்பூ நிறத்தில் சித்தரிக்கப்படுவார். ஏன் என்று தெரியுமா?
இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று இந்த சிந்தூர் ஆற்றல் மற்றும் உயிராற்றலின் நிறம். மற்றொன்று, ஒரு நாள் சீதை தன் நெற்றி உச்சியில் சிந்தூரைத் தடவினார். அதைக் கண்ட அனுமன் சீதையிடம் ஏன் என்று கேட்டார். அதற்கு சீதை, இது ராம பிரான் நீண்ட காலம் செழிப்பாக இருக்க அவரை ஆசீவதிக்கும் வகையில் செய்யும் ஓர் செயல் என்று கூறினார்.
இதைக் கேட்ட அனுமன் உடனே தன் உடல் முழுவதும் இந்த சிந்தூரைத் தடவிக் கொண்டார். இப்போது செவ்வாய்க் கிழமைகளில் அனுமனுக்கு எந்த பொருட்களைப் படைத்து வணங்கினால், அவரது முழு ஆசீர்வாதமும் கிடைக்கும் என்று காண்போம்.
துளசி
செவ்வாய் கிழமைகளில் அனுமனுக்கு துளசி மாலையை அணிவித்து வணங்குவது நல்லது. பின் அந்த துளசி இலைகளை சாப்பிடலாம்.
சிவப்பு கொடி
முக்கோண வடிவமுள்ள சிவப்பு கொடியில் ‘ராம்’ என்று எழுதி, அனுமனுக்கு படைத்து வணங்கி, அந்த கொடியை வாகனங்களின் முன் மாட்டிக் கொண்டால், விபத்துக்களில் இருந்து விலகி இருக்கலாம். அதுவே வீட்டில் வைத்திருந்தால், வீட்டில் பணம் கொழிக்கும்.
சிந்தூர்
அனுமனுக்கு ஆரஞ்சு நிற சிந்தூர் வைக்க வேண்டும். இப்படி தொடர்ச்சியாக செய்து வருவதன் மூலம், மாங்கல்ய தோஷம் நீங்குவதோடு, இதர தோஷங்களும் அகலும்.
மல்லிகை எண்ணெய்
மல்லிகை எண்ணெயை மனநிலையை மேம்படுத்த உதவும். அதிலும் சிந்தூர் பொடியை மல்லிகை எண்ணெயுடன் சேர்த்து கலந்து, அனுமனுக்கு திலகமிடுவது, இன்னும் நல்லது.
இனிப்புகள்
செவ்வாய் கிழமைகளில் அனுமனுக்கு லட்டு, சுண்டல், வெல்லம், கொய்யாப்பழம் போன்றவற்றை படைத்து வணங்கினால், அனுமனின் முழு ஆசீர்வாதமும் கிட்டுமாம்.

முழுமுதற் தெய்வமான விநாயகப் பெருமானை விரதம் இருந்து வழிபடுவர்களுக்கு எத்தகைய காரியங்களிலும் ஏற்படுகின்ற தடை தாமதங்கள் நீங்கி, அவை சிறப்பான வெற்றியை பெறும்.
பொதுவாக விநாயகர் பெருமான் விரத வழிபாட்டை அனைத்து நாட்களிலும் கட்டாயம் செய்ய வேண்டும். குறிப்பாக காலையில் எழுந்து, குளித்து முடித்து விட்டு உங்களின் அன்றாட பணிகளை தொடங்குவதற்கு முன்பு விநாயகப் பெருமானுக்குரிய மந்திரங்கள் துதித்து தொடங்குவதால் அவை சிறப்பான பலன்களை தருவதாக அமையும். புதன் மற்றும் சனிக்கிழமைகளில் விரதம் இருந்து விநாயகப்பெருமானுக்கு அருகம்புல் சாற்றி வழிபடுவது விநாயகப் பெருமானின் முழுமையான அருள் நமக்கு கிடைக்க வழிவகை செய்கிறது.
முழுமுதற் தெய்வமான விநாயகப் பெருமானை விரதம் இருந்து வழிபடுவர்களுக்கு எத்தகைய காரியங்களிலும் ஏற்படுகின்ற தடை தாமதங்கள் நீங்கி, அவை சிறப்பான வெற்றியை பெறும். உடல் மற்றும் மன பலமும் அதிகரிக்கும். புத்திசாலித்தனம் மேம்படும். கல்விக் கலைகளில் சிறக்க முடியும். தீய எண்ணங்கள், குணங்கள் நீங்கும். தொழில், வியாபாரங்களில் வெற்றியும் அதிக லாபமும் கிடைக்கும். வீடு, வாகனம் போன்ற சொத்துக்களின் சேர்க்கை அதிகரிக்கும். மற்ற தெய்வங்களின் அருள் கடாட்சம் கிடைக்க வழிவகை செய்யும்.