என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கிருஷ்ணன்
    X
    கிருஷ்ணன்

    கிருஷ்ண ஜெயந்தி: கிருஷ்ணரை விரதம் இருந்து வழிபடுவது எப்படி?

    நடு இரவில் கிருஷ்ணனை தொட்டில் போட்டு பிறந்த நாளைக் கொண்டாடும் வரையில், விரதம் இருக்க வேண்டும். நடு இரவில் பிரசாதத்தை உட்கொண்டு உபவாச விரதத்தை முடிக்கலாம் அல்லது மறுநாள் காலையில் தஹிகலாவை உட்கொண்டும் உபவாசத்தை முடிக்கலாம்.
    கிருஷ்ண பரமாத்வை எப்படி வழிபட வேண்டும் தெரியுமா?

    ஸ்ரீகிருஷ்ண பூஜை செய்வதற்கு முன் வழிபடுவர் நடுவிரலால் விஷ்ணுவைப் போல் இரண்டு நேர் கோடுகளை வரையவும் அல்லது அடர்த்தியான ஒரு நேர் கோட்டை வரையவும்.

    ஸ்ரீ கிருஷ்ணனுக்கு மோதிர விரலில் சந்தனம் இட வேண்டும்.
    கிருஷ்ணகமல் பூவால் அர்ப்பணம் செய்ய வேண்டும்.
    மூன்று அல்லது மூன்றின் பெருக்குத் தொகை எண்ணிக்கை உள்ள பூக்களை அர்ப்பணிக்க வேண்டும்.
    அர்ப்பணம் செய்யும் போது பூவின் காம்பு கிருஷ்ணனை நோக்கியிருக்க வேண்டும்.
    பூக்களை நீள்வட்ட வடிவத்தில் அலங்கரிக்க வேண்டும்.

    சந்தனம், தாழம்பூ, மல்லிகை, சம்பா, சாய்வாலா, ஆம்பர் மணம் கொண்ட ஊதுபத்தியை உபயோகிக்க வேண்டும்.
    வாசனை திரவியங்களில் சந்தனம் உபயோகிக்க வேண்டும்.
    ஸ்ரீ கிருஷ்ணனை மூன்று முறை அல்லது மூன்றின் பெருக்கல் தொகை எண்ணிக்கை பிரதட்சணம் செய்ய வேண்டும்.

    கிருஷ்ண பகவான் அஷ்டமி திதியில், ஸ்ராவண மாதத்தில் கிருஷ்ண பட்சத்தில் நடுஇரவில், ரோகிணி நட்சத்திரத்தில் வ்ருஷப ராசியில் பிறந்தார்.
    கோகுலாஷ்டமி திதியில், கிருஷ்ண தத்துவம் இப்பூவுலகில் 1000 மடங்கு அதிகம் ஆகியுள்ளது. மீதி நாட்களைக்காட்டிலும் அன்றைக்கு கிருஷ்ண தத்துவம் அதிக செயலாற்றலைக் கொண்டிருப்பதால் ‘ஓம் நமோ’ பகவதே வாசுதேவாய’ என நாமஜபம் செய்தால் கிருஷ்ணரின் அருள் நமக்கு அதிக பலனைக் கொடுக்கும்.

    கொண்டாடும் விதம்

    நடு இரவில் கிருஷ்ணனை தொட்டில் போட்டு பிறந்த நாளைக் கொண்டாடும் வரையில், விரதம் இருக்க வேண்டும். நடு இரவில் பிரசாதத்தை உட்கொண்டு உபவாச விரதத்தை முடிக்கலாம் அல்லது மறுநாள் காலையில் தஹிகலாவை உட்கொண்டும் உபவாசத்தை முடிக்கலாம்.
     
    தஹிகலா என்றால் என்ன தெரியுமா? பல திண்பண்டங்களுடன் தயிர் சேர்த்தல், பாலையும் வெண்ணெயையும் கலா என்பர். வரஜபூமியில் கோபர்களோடு மாடு மேய்க்கும் போது கிருஷ்ண பகவான் எல்லோருடைய கட்டுசாதத்தோடு தன்னுடையதையும் சேர்த்து உண்பான். இந்த பாரம்பரியத்தை இன்றும் பின்பற்றும் விதமாக தஹிகலா தயாரிப்பதும் தயிர் பானையை உடைப்பதும் வழக்கத்தில் உள்ளன.

    இறை வழிபாட்டில் பூஜை, ஆரத்தி, பஜனை ஆகியவற்றின் மூலமாக நமக்குப் பயன் கிடைக்கிறது. ஆனால் இதில் எல்லாம் சில நேரக் கட்டுப்பாடு இருப்பதால் நம்மால் தொடர்ந்து செய்ய முடிவதில்லை. இறைவனின் அருள் நமக்குத் தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்றால் நம் வழிபாடும் தொடர்ந்து நடைபெற வேண்டும்.

    விரதம் இருப்பது எப்படி ?

    கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று கணவன், மனைவி இருவரும் தம்பதி சகிதமாகவே விரதம் இருக்க வேண்டும். பகலில் விரதம் இருக்க வேண்டும். இரவில் ஸ்ரீகிருஷ்ணரை பூஜித்து கண் விழித்து இருந்து அவரது வரலாறை கேட்க வேண்டும்.
    மறுநாள் கிருஷ்ணருக்கு மீண்டும் பூஜைகள் செய்து வழிபாடுகள் நடத்தி அன்னதானம் செய்ய வேண்டும். அதன்பிறகு விரதத்தை பூர்த்தி செய்வது மிகவும் சிறந்தது.
    Next Story
    ×