என் மலர்tooltip icon

    முக்கிய விரதங்கள்

    மார்கழி மாதத்தில், முக்கியமாக பெண்கள் ஏற்கும் விரதம், மார்கழி நோன்பு ஆகும். பாவை நோன்பு இருக்கும் பெண்களுக்கு திருமண பாக்கியம் கிடைக்கும்.
    மார்கழியில் நோற்றதால் மார்கழி நோன்பு என்றும், கன்னிப்பெண்களால் நோற்கப்படுவதால் பாவை நோன்பு என்றும் கூறப்படுகின்றது. இந்த நாளில் திருப்பாவை, திருவெம்பாவை பாடி இறைவனை வணங்குகின்றனர். 

    மார்கழி மாதத்தில், முக்கியமாக பெண்கள் ஏற்கும் விரதம், மார்கழி நோன்பு ஆகும். ஆயர்ப்பாடியிலுள்ள கன்னியர்கள், நாட்டு முன்னேற்றத்திற்காகவும், பால் வளம் பெருகவும், நல்ல கணவர்களை அடையவும், நோன்பு நோற்றனர். 

    கன்னியர்கள் விடியற்காலை எழுந்து, மற்றப் பெண்களையும் எழுப்பி, ஆற்றங்கரை சென்று, அங்குள்ள மணலினால் பாவை போன்ற உருவம் செய்து, மலர்கள் சூட்டி, பார்வதிதேவியை பாடித்துதித்து வழிபட்டனர். பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒரே பெண்மணியானவரான ஆண்டாள் இயற்றிய பாவைப்பாட்டாகிய (இறைவன் மீது பாடப்பட்ட பாடல்கள்) திருப்பாவையும், மாணிக்கவாசகர் சிவபெருமான் மீது இயற்றிய திருவெம்பாவையும் பாவைப்பாட்டுக்களில் சிறந்தவை.

    மார்கழி மாதம் தேவர்களின் இரவுக் காலம் முடியும் காலம் ஆகும். இதை உஷத் காலம் என்றும் வைகறைப் பொழுது என்றும் கூறுவது உண்டு. இந்த மாதத்தில் யார் விடியற்காலத்தில் எழுந்து பக்தியுடன் பகவானைத் தொழுகிறார்களோ அவர்கள் சகல சவுபாக்கியங்களையும் பெறுவதுடன் ஆண்டவனின் அருளுக்கும் பாத்திரமாவார்கள்.

    மார்கழி மாதத்தில் அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து வீதிகளில் பஜனை செய்தல் வேண்டும். திருப்பாவை, திருவெம்பாவை ஆகியவை பாட வேண்டும். மார்கழி மாதம் முழுவதும் நெய் உண்ணோம், பால் உண்ணோம் என்பார் ஆண்டாள். இவ்வாறு விரதம் இருந்து காலையில் பஜனை செய்து ஆண்டவனை வழிபட அருள் கிடைக்கும்.

    மார்கழி மாத நோன்பால் உள்ளத்தையும் உடலையும் நாம் தூய்மையாக்கி கொள்ள முடியும். அது மட்டுமின்றி மார்கழி மாத நோன்பு நமது பிறவிப்பயனே ஆண்டவனை அடைவது தான் என்பதை உணர்த்துகிறது. தெய்வமே எங்களுக்கு நல்ல கணவனைக் கொடு என்பது தான் கன்னிப்பெண்களின் பிரார்த்தனையாக இருக்கும். மாத பாவை நோன்பு இருக்கும் பெண்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கும். பொங்கல் நைவேத்தியம் வைப்பது நல்லது.
    கண்ணனின் பிறந்த நாளான கிருஷ்ண ஜெயந்தி அன்று உரிய முறையில் விரதம் இருந்த வேண்டிக்கொண்டால் குழந்தைச் செல்வம் கிடைக்கும்.
    கண்ணன் அவதரித்த ரோகிணி நட்சத்திரத்தை வைணவர்கள் கிருஷ்ண ஜெயந்தி என்பார்கள். கண்ணனின் பிறந்த நாளான அன்று உரிய முறையில் விரதம் இருக்க வேண்டும். அது மட்டுமின்றி பலவகைப் பட்சணங்களை இல்லத்தில் தயார் செய்து வைத்து இரவில் கண்ணனைப் பூஜை செய்து வணங்குவது வழக்கம். அப்பொழுது கண்ணன் புகழ் பாடும் கீதங்கள், சரிதங்கள் ஆகியவற்றைப் படிக்கலாம்.

    கணவன், மனைவி இருவருமே செய்யத்தக்க விரதம் இது. பகலில் உபவாசம் இருந்து இரவில் ஸ்ரீ கிருஷ்ணனைப் பூஜித்து, அவரது சரிதத்தைக் கேட்டு கண் விழிப்பார்கள். பாகவதத்தில் கிருஷ்ணனின் அவதாரக் கட்டத்தைக் கேட்பதும், பாராயணம் செய்வதும், பாகவதம் கேட்பதும் மிகவும் புண்ணியமாகும்.
    கண்ணன் மேல் மிகவும் மனதை பறிகொடுத்து விரதம் இருப்பவர்களுக்கு மங்களகரமான பலன்கள் அனைத்தும் கைகூடும். குழந்தைச் செல்வம் தருவதுடன் சகல சவுபாக்கியங்களையும் அருளி முக்தி நலத்தையும் கண்ணன் தருவான்.

    கார்த்திகை மாதம் முழுவதும் விரதமிருந்து இறைவனை வேண்டிக்கொண்டால் விருப்பங்கள் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
    கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் நீராடி இறைவனை வழிபட்டால் எல்லா பாவங்களும் விலகும். இப்படி நீராடுவதை, ‘கார்த்திகை நீராடல்’ என்பர். ஸ்ரீவாஞ்சியம் என்ற தலத்தில் உள்ள திருக்குளம் ‘குப்தகங்கை’ எனப்படுகிறது. கங்கையானவள் 999 பாகம் ரகசியமாக இந்த குப்தகங்கையில் வசிக்கிறாள். மீதி ஒரு பாகம்தான் காசியில் உள்ள கங்கையில் உள்ளாள். எனவே காசியை விட இங்குள்ள கங்கைக்கே பெருமை அதிகம் என்பர்.

    கேதார கௌரி விரதம்:-- கார்த்திகை பவுர்ணமி அன்று அம்மை மற்றும் அப்பனை நினைத்து விரதமுறை மேற்கொள்ளும் இவ்விரத முறை உமாகமேஸ்வர விரதம் என்று அழைக்கப்படுகிறது.

    கார்த்திகை ஞாயிறு விரதம்:-- இவ்விரத முறை கார்த்திகை முதல் ஞாயிறு அன்று தொடங்கப்பட்டு தொடர்ந்து பன்னிரெண்டு வாரங்கள் கடைப்பிடிக்கப்படுகிறது. நவகிரகங்கள் இவ்விரதத்தை மேற்கொண்டே வரம் பெற்றனர். எனவே இவ்விரதமுறையை கடைப்பிடிப்பதால் நவகிரகப் பாதிப்புகள் நீங்கி அம்மை, அப்பரின் பேரருள் கிடைக்கும்.

    கார்த்திகை விரதம்:-- கார்த்திகை விரதம் என்பது முருகப்பெருமானைக் குறித்து கார்த்திகை மாத கார்த்திகை நட்சத்திரம் தொடங்கி ஒவ்வொரு மாதமும் கார்த்திகை நட்சத்திரத்திலும் கடைப்பிடிக்கப்படுகிறது.

    இவ்விரதம் தொடர்ந்து 12 ஆண்டுகள் கடைப்பிடிக்கப்படுகிறது. இவ்விரத முறையில் பகலில் உணவு உண்ணாமல் இறைவழிபாடு செய்து விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.



    இவ்விரத முறையை மேற்கொள்வதால் வாழ்வின் பதினாறு செல்வங்கள் கிடைக்கும். தொடர்ந்து 12 ஆண்டுகள் இவ்விரத முறையை பின்பற்றுவதால் வாழ்வில் பெரும்பேறும், முக்தியும் கிடைக்கும்.

    விநாயகர் சஷ்டி விரதம்:-- இவ்விரதமுறை விநாயகப் பெருமானை நினைத்து மேற்கொள்ளப்படுகிறது. இவ்விரதம் கார்த்திகை மாதம் தேய்பிறை பிரதமை முதல் மார்கழி மாதம் வளர்பிறை சஷ்டி வரை மொத்தம் 21 நாட்கள் கடைப்பிடிக்கப்படுகிறது.

    இவ்விரத முறையில் 21 இழைகளால் ஆன நோன்பு கயிற்றினை ஆண்கள் வலது கையிலும் பெண்கள் இடது கையிலும் கட்டிக் கொள்கின்றனர். முதல் 20 நாளும் ஒருபொழுது மட்டும் சாப்பிட்டும், கடைசி நாள் முழுமையாக உபவாசம் மேற்கொள்கின்றனர்.

    இவ்விரத முறையினை மேற்கொள்வதால் சிறந்த வாழ்க்கைத் துணை, புத்திசாலியான புத்திரர்கள் கிடைப்பர். வாழ்வின் எல்லாப் பேறுகளும் கிடைக்கும். எடுத்த நல்ல காரியங்கள் வெற்றியாகும்.

    ப்ரமோதினி ஏகாதசி:-- கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசி ப்ரமோதினி என வழங்கப்படுகிறது. இது கைசிக ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது. இவ்விரதமுறையைப் பின் பற்றுவதால் உயர்ந்த நன்மைகள் கிடைக்கும். பூலோகத்தில் சொர்க்க வாழ்வு கிடைக்கும்.
    சிவனுக்கு மிகவும் உகந்த விரதம், கார்த்திகை மாதம் வரும் திங்கட்கிழமை சோமவார விரதம். இது விரதம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
    சிவனுக்கு மிகவும் உகந்த விரதம், கார்த்திகை மாதம் வரும் திங்கட்கிழமை சோமவார விரதம்.

    சிவனின் தலையில் இருக்கும் சந்திரன் சோமவார விரதத்தை கடைபிடித்து சிவனுக்கு மிகவும் பிடித்தவனாகி சிவனின் தலையிலேயே இடம்பெற்றான். அந்த அளவிற்கு சோமவார விரதம் மிகவும் புகழ்பெற்றது.

    ஒருமுறை இந்த விரதத்தை எப்படி கடைபிடிப்பது என்று பார்வதி சிவனிடம் கேட்க, சிவன், காலையில் எழுந்து நீராடி, தினக்கடமைகளை முடிக்க வேண்டும். வீட்டிலேயே விரிவாக சிவபூஜை தினமும் செய்யும் ஒரு வேதியரையும் அவரது மனைவியையும் அழைத்து அவர்களை சிவ-பார்வதியாக நினைத்து, அவர்களுக்கு முடிந்தவரை தானம் செய்ய வேண்டும். அதன் பின் பகல் முழுவதும் உண்ணாமல் விரதம் இருந்து முன் இரவில் ஒரு வேளை மட்டும் உணவருந்தி சிவ சிந்தனையுடன் விரதமிருக்க வேண்டும். 

    வீட்டிலேயே விரிவாக பூஜை செய்ய இயலாதவர்கள் சிவன் கோயிலுக்கு சென்று சிவனுக்கு அபிஷேகம் செய்து வேதியர்களுக்கும், அடியவர்களுக்கும் அன்னதானம் செய்யவும். இந்த சோமவார விரதம் இருப்பவர்கள் எனக்கு மிகவும் விருப்பமானவர் கள். அவர்களுக்கு என்னிடத்தில் இடம் கொடுப்பேன் என்று சிவன் கூறுகிறார்.

    கார்த்திகை மாத சோமவாரங்களில் சிவா லயங்களில் சங்கா பிஷேகம் செய்வார்கள். கார்த்திகை மாதத்தில் இறைவன் அக்னிப் பிழம் பாக இருப்பார். எனவே குளிர்விக்கும் பொருட்டு சங்காபிஷேகம் செய்வார்கள். கார்த்திகை மாதம் சூரியன் பகை வீடான விருச்சிகத்தில் சஞ்சரிப்பார். அப்போது சந்திரன் நீச்சத்தில் இருப்பதால் தோஷம் என்பர். இந்த தோஷத்தை நீக்கவே சங்காபிஷேகம் நடத்தப்படுகிறது.
    அனுமனுக்கு விரதமிருந்து வெற்றிலை மாலை சூட்டி வழிபட்டால், வெற்றிகள் வந்து சேரும். சகல யோகங்களும் நமக்கு வந்து சேரும்.
    அனுமன் வழிபாடு ஆனந்தமான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும்; தடைகளை நீக்கும்; தனவரவைப் பெருக்கும். அனுமனுக்கு வெற்றிலை மாலை சூட்டி வழிபட்டால், வெற்றிகள் வந்து சேரும். வடை மாலை அணிவித்து வழிபட்டால் வளர்ச்சியின் உச்சத்திற்கே செல்லலாம். அனுமனுக்கு உகந்த ஜெயந்தியான அனுமன் ஜெயந்தி மார்கழி மாதம் 3-ந்தேதி (18.12.2017) திங்கட்கிழமை வரும் மூலம் நட்சத்திரமன்று வருகின்றது. அன்றைய தினம் அவரை ஆராதித்து வழிபட்டுக் கொண்டாடினால் பேறும் புகழும் கிடைக்கும்.

    தெய்வங்களுக்கு, உரிய விதத்தில் அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்டால் வையகத்தில் நல்ல வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை. அனுமன் ‘சொல்லின் செல்வன்’ என்று பெயர் பெற்றவர். சொல்லக் கூடிய சொல்லை யோசித்து, எதைச் சொன்னால் எதிரில் இருப்பவர் மகிழச்சி அடைவாரோ அதைச் சொல்பவன் தான் கெட்டிக்காரன்.

    ராமபிரான் சீதையைத் தேடச் சொல்லி அனுமனைத் தூது அனுப்பினார். அனுமன் ஆகாய மார்க்கமாக பறந்து சென்று அசோக வனத்தில் இருந்த சீதையைப் பார்த்தார். அது அசோகவனம் அல்ல; சோகவனம் என்பதை உணர்ந்தார். காரணம் சோகத்தோடு சீதை அமர்ந்திருந்தாள்.

    அதன்பிறகு சீதையிடம் ராமனைப் பற்றி எடுத்துரைத்து விட்டு மீண்டும் ராமனிடம் வந்தார். அப்பொழுது ராமபிரான் மனதில் குழப்பம் அதிகாக இருந்தது. ‘சீதை இருக்கிறாளா? எங்கிருக்கிறாள்? எப்படியிருக்கிறாள்? கற்போடு இருக்கிறாளா? காவலில் இருக்கிறாளா?’ என்றெல்லாம் சிந்தித்துக் கொண்டிருந்தார். அனுமனைப் பார்த்ததும் மகிழ்ச்சி கொண்டு தகவலைக் கேட்டார். அதற்கு அனுமன் மூன்றே வார்த்தையில் அவரது சந்தேகத்தைத் தீர்த்தார். அந்த சொற்கள் தான் ‘கண்டேன் அந்த கற்பினுக்கனியை’ என்பதுதான். அதாவது, ‘சீதையைக் கண்டேன். அவள் கலங்கமில்லாமல் கற்போடு இருக்கிறாள்’ என்ற பொருளில் ராமாயணம் அனுமனைப் பற்றி வர்ணிக்கிறது. அதனால் தான் அனுமன் ‘சொல்லின் செல்வன்’ என்ற பெயர் பெற்றார்.



    அப்படிப்பட்ட அனுமனை நாம் வழிபட்டால் எதிர்ப்புகளை வெல்லக்கூடிய ஆற்றல் நமக்கு வந்து சேரும். பிரிந்து இருப்பவர்களை ஒன்று சேர்க்கும் ஆற்றல் அனுமனுக்கு உண்டு. அவரைக் கைகூப்பித் தொழுதால் கருத்து வேறுபாடுகள் அகலும். இல்லத்தில் வாலில் மணிகட்டிய ஆஞ்ச நேயர் படத்தை பூஜையறையில் வைத்து அதற்கு ஒரு மண்டலம் வாலில் பொட்டு வைத்து வழிபட்டு வரவேண்டும். மேல்நோக்கிப் பொட்டு வைப்பதா? கீழ்நோக்கிப் பொட்டு வைப்பதா என்பது அவரவர்களின் கோரிக்கையைப் பொறுத்துத்தான் அமைகின்றது.

    எந்தக் கோரிக்கைக்கு அனுனை எப்படி வழிபட வேண்டும் என்பதை அறிந்து கொண்டால் வந்த துயரங்கள் விலகி ஓடும். வளர்ச்சிப் பாதையிலும் அடியெடுத்து வைக்க இயலும். ஜெய அனுமான், வீர ஆஞ்சநேயர், சிவஆஞ்சநேயர் என்று விதவிதமாக அனுமன் அருள் தருகிறார். சுசீந்திரம் தாணுமாலையன் கோவிலிலும், நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலிலும், வேகுப்பட்டி ஆஞ்சநேயர், வ.சூரக்குடி சிவஆஞ்சநேயர் திருக்கோவிலிலும் விஸ்வரூப ஆஞ்சநேயராக தரிசனம் தருகிறார்.

    சனிக்கிழமை தோறும் விரதமிருந்து ஆஞ்சநேயரை வழிபட்டால், சகல யோகங்களும் நமக்கு வந்து சேரும். விரதமிருக்கும் நாட்களில் மிகச் சுத்தமாக இருக்க வேண்டும். அனுமனை முழுமையாகத் தியானித்து ஒருவேளை உணவு மட்டும் உண்டால், உன்னத பலன் கிடைக்கும்.

    அருகில் இருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று ஆஞ்சநேயருக்கு வடை மாலை அணிவத்து வழிபட்டால் தடைகள் அகலும். வெற்றிலை மாலையை அணிவிப்பவர்கள் தங்கள் கோரிக்கைக்கு ஏற்ப, தாராபலம் பெற்ற நாளில் அணிவித்தால் ஏராளமான நற்பலன்களை அடையலாம். அவல், பொரி, கடலை, கற்கண்டு, வாழைப்பழம் போன்றவை அனுமனுக்குரிய நைவேத்தியங்களாக அமைகின்றன.
    திருக்கார்த்திகை நாளில் இருந்து 21 நாட்கள் தொடர்ந்து விரதமிருந்து பிள்ளையாரை வழிபட்டு வந்தால் தனவிருத்தி, தான்ய விருத்தி கிடைக்கும்.
    திருக்கார்த்திகை நாளில் இருந்து 21 நாட்கள் தொடர்ந்து விரதமிருந்து பிள்ளையாரை வழிபட்டு வரவேண்டும். ஒவ்வொரு நாளும் ஒரு நூல் திரியை தனியாக எடுத்து வைக்க வேண்டும். 21-வது நாளில் சஷ்டியும், சதயமும் கூடும் நேரத்தில், ஆவல்களை நிறைவேற்றும் ஆனைமுகன் சன்னிதியில் ஐந்துவகை பொரி (நெல் பொரி, சோளப்பொரி, அவல் பொரி, எள் பொரி, கம்பு பொரி) வைத்து, ஆவாரம் பூ அருகில் வைத்து, கருப்பட்டியில் பணியாரம் செய்து நைவேத்தியமாக படைத்து கணபதியை வழிபட வேண்டும். 21 நாட்கள் எடுத்து வைத்த 21 திரியையும் ஒரே திரியாக்கி, மாவிளக்கு ஏற்ற வேண்டும்.

    இந்த வழிபாட்டின் மூலமாக தனவிருத்தி, தான்ய விருத்தி கிடைக்கும்.

    மார்கழி மாதம் 9-ம் நாள் (24.12.2017) ஞாயிற்றுக் கிழமை இந்த பிள்ளையார் நோன்பு வருகிறது. 
    ஒவ்வொரு மாத பவுர்ணமி விரதமும் ஒவ்வொரு சிறப்புகளைக் கொண்டதாக இருக்கிறது. அவற்றைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
    திருவண்ணாமலையில் ஆண்டு முழுவதும் பவுர்ணமி மாதங்களில் மலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள். அதிலும் சித்திரா பவுர்ணமி மற்றும் கார்த்திகை பவுர்ணமியில் திருவண்ணாமலையை வலம் வருவது அதிக பலனைத் தருவதாக சொல்கிறார்கள்.

    ஒவ்வொரு மாத பவுர்ணமியும் ஒவ்வொரு சிறப்புகளைக் கொண்டதாக இருக்கிறது. அவற்றைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

    சித்திரை மாத பவுர்ணமி: எமதர்மனின் கணக்கரான சித்ரகுப்தன் அவதரித்த நாள். அன்றைய தினம் விரதம் இருந்தால் மோட்சம் கிடைக்கும்.

    வைகாசி மாத பவுர்ணமி: முருகப்பெருமான் ஆறுமுகங்களுடன் அவதரித்த நாள். வைகாசி விசாகம். அன்றைய தினம் விரதம் மேற்கொண்டால் இன்பமான வாழ்வு அமையும்.

    ஆனி மாத பவுர்ணமி: காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழா. இந்த நாளில் விரதம் இருந்தால் இறை தரிசனம் சித்திக்கும்.

    ஆடி மாத பவுர்ணமி: கஜேந்திர மோட்சம் நடந்த நாள். அன்றைய தினம் அம்மன் ஆலயத்தில் மாவிளக்கு வைப்பது மங்கள வாழ்வை நல்கும்.

    ஆவணி மாத பவுர்ணமி: அன்றைய தினம் விரதம் இருப்பது சகோதர ஒற்றுமையை பலப்படுத்தும்.

    புரட்டாசி மாத பவுர்ணமி: இந்த நாளில் விரதம் இருந்தால் முன்னோர்களின் ஆசியைப் பெறலாம்.

    ஐப்பசி மாத பவுர்ணமி: அன்னாபிஷேக திருநாள். அன்றைய தினம் விரதம் இருந்தால் வறுமை அகலும்.

    கார்த்திகை மாத பவுர்ணமி: கார்த்திகை தீபத் திருநாள். அன்றைய தினம் வழிபாடு செய்வதால் பிரகாசமான எதிர்காலம் அமையும்.

    மார்கழி மாத பவுர்ணமி: ஆருத்ரா தரிசன நாள். அன்றைய தினம் ஆருத்ரா தரி சனம் பார்த்தால், சிறப்பான எதிர்காலம் அமையும்.

    தை மாத பவுர்ணமி: தைப்பூசத் திருநாள். இந்த நன்னாளில் விரதம் இருந்தால் முருகப்பெருமானின் அருள் கிடைக்கும்.

    மாசி மாத பவுர்ணமி: மாசி மகம் திருநாள். இந்த நாளில் விரதம் மேற்கொண்டால் ஜெகத்தை ஆளும் வாய்ப்பு உண்டாகும்.

    பங்குனி மாத பவுர்ணமி: பங்குனி உத்திர நாளான அன்றுதான் முருகன் - வள்ளி திருமணம், சிவ- பார்வதி திருமணம் நடைபெற்றதாக புராணங்கள் கூறுகின்றன. இந்த நாளில் வழிபாடு செய்தால் திருமண வரம் கிடைக்கும்.
    நேர்மை, ஒழுக்கம் போன்ற பாதையில் செல்ல வலியுறுத்தும் விரதமாக ஐயப்ப வழிபாடு இருப்பதும், பக்தர்கள் பலர் சபரிமலை தரிசனத்தைத் தேர்வு செய்ய ஒரு காரணமாக உள்ளது.
    கார்த்திகை மாதம் வந்தாலே ஐயப்ப பக்தர்களுக்கு கொண்டாட்டம்தான். கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் குளிர்ந்த நீரில் குளித்து, உடல்சுத்தம், மனசுத்தத்துடன் அந்த ஐயப்பனின் அருளை வேண்டி காடு மேடு கடந்து சென்று சரணம் அடைவதில் உள்ள சுகத்தை, அதை அனுபவித்தவர்கள் மட்டுமே அறியமுடியும்.

    இந்து மதத்தில் எண்ணிலடங்கா இறை வழிபாடுகள் இருந்தாலும், மண்ணில் மனிதனாகப் பிறந்து, இறைநிலையை அடைந்தவரான ஐயப்பனின் வழிபாடு அனைவரையும் கவரும் ஒன்றாக இருக்கிறது. நேர்மை, ஒழுக்கம் போன்ற பாதையில் செல்ல வலியுறுத்தும் விரதமாக ஐயப்ப வழிபாடு இருப்பதும், பக்தர்கள் பலர் சபரிமலை தரிசனத்தைத் தேர்வு செய்ய ஒரு காரணமாக உள்ளது.

    தான்தோன்றித் தனமாக ஊரைச் சுற்றிவருபவர்களை, ‘ஒரு கால்கட்டு போட்டால் சரியாகிவிடுவான்’ என்று சொல்லக் கேட்டிருப்போம். அந்த கால்கட்டுக்கு ‘திருமணம் செய்து வைத்தல்' என்பது பொதுவான பொருளாக இருக்கிறது. ஆனால் கால்கட்டு என்பதற்கு ‘பாதை மாறாது மனதை ஒருநிலைப்படுத்தி வாழ்வது’ என்பதே சரியான பொருளாகும்.



    சபரிமலையில் வீற்றிருக்கும் ஐயப்பன், குத்து காலிட்டு, கால்கள் கட்டப்பட்ட நிலையில்தான் காட்சி தருகிறார். அவர் தன்னுடைய தவத்தை யாரும் கலைத்து விடக்கூடாது என்பதற்காக மனதை ஒரு நிலைப்படுத்தியபடி அமர்ந்திருப்பதாக கூறப்படுகிறது. 

    ஐயப்பனின் இந்த விரத தரிசனம், எந்த நேரத்திலும் எந்த காரணத்திற்காகவும் தங்கள் இலக்குகளை மனிதர்கள் விட்டுவிடக்கூடாது என்பதை வலியுறுத்துவதாக கூறுகிறார்கள். ஐயப்பன் வழிபாடு ஏராளமான வாழ்வியல் தத்துவங்களை உள்ளடக்கி உள்ளது. நிலையற்ற இந்த பூலோக வாழ்க்கையில், வாழும் காலத்திலேயே நல்லவராக வாழ்ந்து பிறவிப் பெருங்கடலை கடக்கும் எளிய வழியை காட்டுகிறது ஐயப்பன் வாழும் சபரிமலையின் வரலாறு. 

    ஆடம்பர வாழ்வு நிலையற்றது என்று உணர்த்தவே ஐயப்ப பக்தர்கள் எளிமையான ஆடையை.. சீருடைபோல் அணிந்து செல்கிறார்கள். மேலும் அனைவரும் சமத்துவமானவர்கள் என்பதற்காகவே ஒரே மாதிரியான இருமுடி கட்டி மலை யேறுகின்றனர். 

    வள்ளலார் வலியுறுத்திய ஒரு விரதம் தான் செவ்வாய்க்கிழமை விரதம். இந்த விரதத்தை எப்படி அனுஷ்டிக்க வேண்டும் என்று பார்க்கலாம்.
    வள்ளலார் வலியுறுத்திய ஒரு விரதம்தான் செவ்வாய்க்கிழமை விரதம். ஆனால் இது முழுக்க முழுக்க முருகப்பெருமானுக்குரிய விரதம் என்று கூறி விட இயலாது. வள்ளலார் ஆரம்பத்தில் திருத்தணிகை முருகப் பெருமானைத் தொழுது அவரது காட்சி பெற்றவர் என்பது இங்கே நினைக்கத் தகுந்தது.

    செவ்வாய்க் கிழமை விரதம் பற்றி அடிகளார் கூறி இருக்கும் குறிப்பு.

    திங்கட்கிழமை இரவில் பலகாரஞ் (பழ ஆகாரம்) செய்து, செவ்வாய்க்கிழமை அருணோதயத்தி லெழுந்து, திருநீறு நெற்றியில் மாத்திரம் அணிந்து, நல்ல நினைப்புடன் அங்கசுத்தி, தந்தசுத்தி முதலானவையுஞ் செய்து கொண்டு, சூரியோதயத்திற்கு முன் ஆசாரமான சுத்த சலத்தில் ஸ்நானஞ் செய்து, விபூதியை சலத்தினால் குழைத்து அனுஷ்டானப்படி தரித்துக் கொண்டு, கண்பதியை நினைத்து, பின்பு ஸ்ரீ பஞ்சாஷரத்தை நூற்றெட்டு முறை ஜெபித்து, பின்பு சிவத்தியானம் செய்து, எழுந்து வாயிலில் வந்து சூரியனைப் பார்த்து ஒம் சிவ சூரியாய நம என்று மெதுவாகச் சொல்லி நமஸ்கரித்து அதன் பின்பு அவ்விடத்தில் தானே நின்று கொண்டு, தங்கள் தங்கள் மனத்திலிருக்கிற கோரிக்கைகளை முடித்துக் கொடுக்க வேண்டுமென்று ஸ்ரீ வயித்தியலிங்கரையும் தையல் நாயகியையும் முத்துக்குமாரசாமியையும் தியானித்துக் கொண்டு, பின்பு ஔம் வயித்தியநாதாய நம வென்று நூற்றெட்டு, ஆயிரத்தெட்டு இரண்டில் எந்த அளவாவது ஜெபித்து, ஒரு பலம் மிளகு சீலையில் முடிந்து வயித்தியலிங்கார்ப்பணம் என்று ஔரிடத்தில் வைத்து, சிவனடியார் ஒருவர்க்கு உபசாரத்தொடு அமுது படைத்து, பின்பு சுசியொடு பச்சரிசிப் பொங்கல் முதலான புசிப்பை அரையாகாரம் முக்கால் ஆகாரங் கொண்டு, அன்று மாலையில் சிவ தரிசனஞ் செய்து, பாய் சயனம், கொட்டை (தலையணை) முதலாகியவையும் விட்டு, மெழுகிய தரையில் கம்பளம் விரித்துப் படுக்க வேண்டும். சிவ சரித்தரங் கேட்க வேண்டும். செபஞ் செய்துகொண்டிருக்க வேண்டும். சந்தனம், புட்பம், தாம்பூலம், இராகம்,. சுகம், பெருந்தூக்கம் முதலானவையும் விட்டிருக்க வேண்டும். 

    - என்று வள்ளலார் குறிப்பிட்டிருக்கிறார்.

    இதன் மூலம் வேண்டிய கோரிக்கைகள் இனிது நிறைவேறும் என்பது நம்பிக்கை.
    குழந்தை வரம் வேண்டும் தம்பதிகள் தத்தாத்ரேயரை விரதமிருந்து வழிபாடு செய்தால் அவர்களது கோரிக்கை விரைவில் நிறைவேறும்.

    3-12-2017 தத்தாத்ரேயர் ஜெயந்தி

    மும்மூர்த்திகளாக சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒரே மூர்த்தியாக தோன்றியதே ‘தத்தாத்ரேயர்’ அவதாரம் ஆகும். மும்மூர்த்திகளின் மனைவியர்களான பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகியோருக்கு தாங்களே உலகில் சிறந்த பதிவிரதைகள் என்ற கர்வம் உண்டானது. அந்த கர்வத்தைப் போக்க எண்ணிய இறைவன், அதற்கு கருவியாக நாரதரை தேர்வு செய்தார்.

    ஒரு நாள் நாரதர், தன் கையில் இரும்பு குண்டு சிலவற்றை எடுத்துக்கொண்டு முப்பெரும் தேவியர்களையும் சந்தித்தார். ‘தேவியர்களுக்கு என் வணக்கம்! இன்று இறைவன் எனக்கு அளித்த உணவு இது. இந்த இரும்பு குண்டை பொரியாக்கி சாப்பிட வேண்டும் என்பது இறைவனின் உத்தரவு. பதிவிரதைகளால் மட்டுமே இந்த இரும்பு குண்டுகளை, பொரியாக்க முடியும் என்பதால் உங்களைத் தேடி வந்தேன்’ என்று தன் தந்திர வார்த்தைகளை உதிர்த்தார்.

    இதனைக் கேட்டு மூன்று தேவியர்களும், ‘நாரதரே! விளையாடுகிறீர்களா? இரும்பு குண்டுகள் எப்படி பொரியாகும்? முட்டாள்தனமாக அல்லவா இருக்கிறது’ என்றனர்.

    ‘இல்லை தாயே! நிச்சயம் பதிவிரதைகளால் இது சாத்தியமாகும்’ என்று மீண்டும் நாரதர் வற்புறுத்தினார். இதனால் முப்பெரும் தேவியர்களும் அந்த இரும்புக் குண்டை தீயிலிட்டு பொரியாக்க முயன்றனர். ஆனால் அவர்களால் அது இயலவில்லை. அவர்களின் மனதில் இருந்த அகந்தையே அதற்கு காரணமாக அமைந்தது.

    இதையடுத்து நாரதர் அந்த இரும்பு குண்டுகளைக் கொண்டுபோய், அத்ரி முனிவரின் மனைவி அனுசுயா தேவியிடம் கொடுத்தார். அவர் அதனை பொரியாக்கி நாரதரிடம் கொடுத்தார். இந்த அரிய செயலை கேள்வியுற்ற முப்பெரும் தேவியர்களும், அனுசுயாவின் மீது பொறாமை கொண்டனர். தங்கள் கணவர்களிடம் கூறி அனுசுயாவின் கற்பை சோதனை செய்யும்படி அனுப்பி வைத்தனர்.

    அதன்படி சிவன், விஷ்ணு, பிரம்மா மூவரும், முனிவர் வேடம் பூண்டு அனுசுயாவின் குடிலுக்கு வந்தனர். முனிவர்களுக்கு உணவளிப்பதற்காக பலகாரங்களை தயார் செய்தார் அனுசுயா. பின்னர் உணவு பரிமாற தொடங்கியபோது, முனிவர் வேடத்தில் இருந்த முப்பெரும்தேவர்களும், ‘நாங்கள் நிர்வாண நிலையில்தான் உணவருந்துவோம்’ என்றனர்.


    தன் பதிவிரதை தன்மையால் அந்த மூவரையும் குழந்தைகளாக உருமாற்றினாள் அனுசுயா. பின்னர் அவர்களுக்கு அமுது அளித்து தொட்டிலில் தூங்கச் செய்தாள். அனுசுயாவின் கற்பை பரிசோதிக்கச் சென்ற தங்கள் கணவன்மார்கள், பலகாலம் ஆகியும் இருப்பிடம் திரும்பாததை எண்ணி மனம் கலங்கிய முப்பெரும் தேவியர்கள், அனுசுயாவின் குடிலை நோக்கி வந்தனர்.

    அங்கு மும்மூர்த்திகளும் குழந்தை வடிவில் விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டு அனுசுயாவின் கற்பை எண்ணி மலைத்தனர். இதையடுத்து அனுசுயாவிடம் சென்ற அவர்கள், ‘தாயே! கற்பில் சிறந்த உன்னை சோதிக்க எண்ணிய தவறை உணர்ந்து கொண்டோம். எங்கள் கணவர்களை, பழைய படியே உருமாற்றி எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்’ என்று கேட்டனர்.

    இதையடுத்து அனுசுயா, மும்மூர்த்திகளையும் பழைய உருவுக்கு மாற்றினார்.

    பின்னர் மும்மூர்த்திகளும் அனுசுயா- அத்ரி தம்பதியருக்கு ஆசி வழங்கி, ‘என்ன வரம் வேண்டும்?’ என்று கேட்டனர்.

    அதற்கு அனுசுயா, ‘இறைவா! தாங்கள் மூவரும் எங்களுக்கு குழந்தையாக வந்து பிறக்க வேண்டும்’ என்ற வரத்தை வேண்டினர்.

    இறைவனும் அவ்வாறே வரம் அளித்தார். அதைத் தொடர்ந்து பல காலம் தவத்தில் ஈடுபட்டிருந்த அத்ரி- அனுசுயா தம்பதியருக்கு மும்மூர்த்திகளின் அம்சமாக, தத்தாத்ரேயர் பிறந்தார். அனுமன், மார்க்கண்டேயர் போலவே, தத்தாத்ரேயரும் சிரஞ்சீவியாக வாழும் சிறப்பு பெற்றவர்.

    குழந்தை வரம் வேண்டும் தம்பதிகள் தத்தாத்ரேயரை வழிபாடு செய்தால் அவர்களது கோரிக்கை விரைவில் நிறைவேறும்.
    திருக்கார்த்திகை தினமான இன்று முருகன், சிவபெருமானை விரதமிருந்து வழிபாடு செய்ய வேண்டும். இன்று விரதம் இருக்கும் முறையை அறிந்து கொள்ளலாம்.
    திருக்கார்த்திகை தினத்தன்று ஆலயங்களில் தீபத்திருவிழா நடைபெறும். பக்தர்கள் தீப விளக்குகள் ஏற்றிவைத்து வழிபடுவர். திருக்கார்த்திகையன்று காலையில் குளித்ததும், குலதெய்வத்தை மனதில் நினைத்து பூஜை செய்ய வேண்டும். 
     
    சிவனுக்கும், முருகனுக்கும் உரிய பாடல்களைப் பாட வேண்டும். அன்று மாலை அண்ணாமலைக்கு அரோகரா, நமசிவாய, சிவாயநம, சரவணபவ ஆகிய மந்திரங்களை உச்சரிக்க வேண்டும். 
     
    மாலை ஆறு மணிக்கு விளக்கேற்ற வேண்டும். ஆறு விளக்குகள் குறையால் இருக்க வேண்டும். விநாயகர், முருகன், சிவன் படங்களை வைத்து பழம், வெற்றிலை பாக்கு, பொரி, பிடி கொழுக்கட்டை ஆகியவற்றை நைவேத்யம் செய்ய வேண்டும். தீபாராதனை காட்டி பிரசாதம் சாப்பிட்டு விரதம் முடிக்க வேண்டும்.
     
    தொடர்ந்து விரதமிருக்க விரும்புபவர்கள் திருக்கார்த்திகையன்று தொடங்கி, அடுத்த திருக்கார்த்திகை வரை அனுஷ்டித்தால் முருகன் அருளால் அனைத்து நலமும் பெறலாம்.
     
    கோவிலில் ஏற்றப்படும் தீபத்திற்கு அவ்வளவு மகத்துவம் உண்டு. நாம் முற்பிறவியில் அறியாமல் செய்த பாவங்கள் கூட கோவிலில் தீபம் ஏற்றுவதாலும், தீபத்தை தரிசிப்பதாலும் விலகி விடும். அதனால், திருக்கார்த்திகை அன்று கோவில்களில் தீபஸ்தம்பம், அணையாதீபம், லட்சதீபம், கோடி தீபம் என்று பல பெயர்களில் ஏற்றி வைப்பர். கோவில் முன் சொக்கப்பனை கொளுத்துவர். சிவனையும், முருகனையும் அக்னி வடிவமாக வழிபடுவர்.
    கார்த்திகை முதல் ஞாயிறு அன்று தொடங்கி தொடர்ந்து, 12 ஞாயிற்றுக்கிழமைகள் விரதத்தை மேற்கொண்டால், நவக்கிரக பாதிப்புகளில் இருந்து விடுபடலாம்.
    கார்த்திகை முதல் ஞாயிறு அன்று தொடங்கி தொடர்ந்து, 12 ஞாயிற்றுக்கிழமைகள் கடைப்பிடிக்கப்படும் விரதம் இது. நவக்கிரகங்கள் இந்த விரதத்தை மேற்கொண்டே பல வரங்களைப் பெற்றனர். எனவே இந்த விரதத்தை மேற்கொண்டால், நவக்கிரக பாதிப்புகளில் இருந்து விடுபடலாம்.

    ஸ்ரீவாஞ்சியத்தில் உள்ள குப்தகங்கை தீர்த்தத்தில், கார்த்திகை ஞாயிற்றுக்கிழமை நீராடுவது சிறப்புக்குரியது. அன்று அதிகாலையில் சிவனும் சக்தியும், குப்தகங்கை யின் கிழக்கு கரையில் வீற்றிருந்து ஆசி வழங்குவதாக ஐதீகம். கார்த்திகை ஞாயிற்றுக் கிழமைகளில் குப்த கங்கையில் நீராடினால் பிரம்மஹத்தி தோஷம், பாவங்கள் நீங்கும்.
    ×