என் மலர்
முக்கிய விரதங்கள்
சிவனுக்குரிய விரதங்கள் எட்டு. வாழ்வு வளமாக சிவனுக்கு உகந்த இந்த எட்டு விரதங்களை முறையாக கடைபிடித்து வரவேண்டும்.
சிவனுக்குரிய விரதங்கள் எட்டு. வாழ்வு வளமாக சிவனுக்கு உகந்த இந்த எட்டு விரதங்களை கடைபிடித்து வரவேண்டும். அவையாவன:
சோமவார விரதம் - திங்கட்கிழமை தோறும்
திருவாதிரை விரதம் - மார்கழி திருவாதிரை
மகாசிவராத்திரி - மாசி தேய் பிறை சதுர்த்தசி
உமா மகேஸ்வர விரதம் - கார்த்திகை பவுர்ணமி
கல்யாண விரதம் - பங்குனி உத்திரம்
பாசுபத விரதம் - தைப்பூசம்
அஷ்டமி விரதம் - வைகாசி பூர்வபட்ச அஷ்டமி
கேதார விரதம் - தீபா வளி அமாவாசை

‘உமாமகேஸ்வர விரத நாளில் சிவ - சக்தியை நினைத்து விரதம் இருந்தால் குடும்ப ஒற்றுமை மேம்படும். கணவன்-மனைவி கருத்து வேறுபாடு மறையும்.
பிருகு முனிவர் சிவனை மட்டுமே வழிபடுபவர். அவர் அம்பாளை வழிபடாததால், இறைவனின் உடலில் பாதியைப் பெற்று அவரோடு இன்றிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் பார்வதிதேவி கடுமையான விரதம் இருந்தார்.
அதன்பயனாக, அவர் கார்த்திகை மாதம் பவுர்ணமி நாளில் இறைவனின் இடப்பாகத்தைப் பெற்றார். பார்வதி தேவி இருந்த அந்த விரதம் ‘உமாமகேஸ்வர விரதம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில் சிவ- சக்தியை நினைத்து விரதம் இருந்தால் குடும்ப ஒற்றுமை மேம்படும். கணவன்-மனைவி கருத்து வேறுபாடு மறையும்.

கார்த்திகை திங்கட்கிழமையான சோமவாரத்தில் சிவபெருமானை விரதமிருந்து வழிபடுவது சிறப்புக்குரியது.
திங்கட்கிழமையை குறிக்கும் சொல்லுக்கு சோமவாரம் என்று பெயர். கார்த்திகை திங்கட்கிழமையான சோமவாரத்தில் சிவபெருமானை விரதமிருந்து வழிபடுவது சிறப்புக்குரியது.
இந்த விரதத்தை ஆண், பெண் இருவரும் கடைப்பிடிக்கலாம். இந்த வழிபாட்டுக்காக மஞ்சள்பொடி, குங்குமம், சந்தனம், பூமாலை, உதிரிப் பூக்கள், வெற்றிலை, பாக்கு, ஊதுபத்தி, சாம்பிராணி, பஞ்சு, நல்லெண்ணெய், கற்பூரம், வெல்லம், மாவிலை, வாழைப் பழம், அரிசி, தேங்காய், தயிர், தேன், தீப்பெட்டி, பூணூல், வஸ்திரம், அட்சதை (பச்சரிசியுடன் மஞ்சள்பொடி கலந்தது), பஞ்சாமிர்தம், திராட்சை, கல்கண்டு, சர்க்கரை கலந்த பசுவின்பால் ஆகியவற்றை சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
ராகு காலத்துக்கு முன்பே பூஜையை தொடங்கவேண்டும். அதிகாலையில் விநாயகர் பூஜை செய்து சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும். மஞ்சளில் பிள்ளையார் பிடித்து, தேங்காய் உடைத்து கற்பூரம் காட்டவேண்டும். கலசத்தில் தண்ணீர் பிடித்து அதில் நாணயம், மஞ்சள்பொடி கலந்து கலசத் துக்கு மேலே மாவிலைக்கொத்தை செருகி, மையத்தில் மஞ்சள் தடவிய தேங்காயை வைத்து சந்தனம், குங்குமத்தால் அலங்கரிக்க வேண்டும். பின்னர் பூஜையை தொடங்க வேண்டும்.
சாதம், நெய், பருப்பு, பாயசம், தேங்காய், வாழைப்பழம் போன்றவற்றை நைவேத்தியமாக படைக்க வேண்டும். தொடர்ந்து சிவநாமங்களைச் சொல்ல வேண்டும். பூஜை முடிந்த பிறகு, வயதான தம்பதியரை பார்வதி- பரமேஸ் வரனாக நினைத்து சந்தனம், குங்குமம் அளித்து நமஸ்காரம் செய்ய வேண்டும். அவர்களுக்கு தட்சணையும் அளிக்க வேண்டும். உணவு பரிமாறி, அட்சதையை அவர்கள் கையில் கொடுத்து வணங்கி ஆசி பெற வேண் டும்.

திங்கட்கிழமையை குறிக்கும் சொல்லுக்கு சோமவாரம் என்று பெயர். இந்த நாளில் சிவபெருமானை வழிபடுவது சிறப்புக்குரியது. சோம என்பதற்கு பார்வதியுடன் கூடிய சிவபெருமான் என்றும், சந்திரன் என்றும் பொருள்.
சாபத்தின் காரணமாக நோயில் விழுந்த சந்திரன், தன் சாபமும், நோயும் நீங்க சிவபெருமானை நினைத்து தவம் இருந்தான். அதன் பயனாக அவன் நோய் நீங்கப்பெற்றான். மேலும் நவக்கிரகங்களில் ஒருவராகும் வாய்ப்பையும் பெற்றான். அவன் பெயரில் உருவானதே சோமவார விரதமாகும்.
இந்த விரதத்தை கடைப்பிடிப்பவர்கள், துன்பங் கள், பாவங்கள் விலகுவதுடன், நல்ல வாழ்க்கைத் துணையையும் பெறுவார்கள். இந்து சமய திருமணங்களில் அருந்ததி பார்ப்பது என்று ஒரு நிகழ்வு உண்டு. கற்புக்கரசியான அந்த அருந்ததி தேவியை வசிஷ்ட முனிவர் தன் வாழ்க்கைத் துணைவியாக பெற்றது, சோமவார விரதத்தின் வாயிலாகத்தான். எனவே பெண்கள் மட்டுமின்றி, ஆண்களும் இந்த விரதத்தைக் கடைப்பிடித்து நல்ல வாழ்க்கைத் துணையை அடையலாம்.
சோமவார விரதங்களில், கார்த்திகை மாதத்தில் வரும் சோமவாரங்கள் பிரசித்திப்பெற்றதாக விளங்குகிறது. கார்த்திகை மாத சோமவாரங்களில், அனைத்து சிவாலயங்களிலும், இறைவனுக்கு சங்காபிஷேகம் செய்யப்படும். கார்த்திகை மாதத் தில் இறைவன் அக்னிப் பிழம்பாக இருப்பதாக ஐதீகம்.

எனவே அவரைக் குளிர்விக்கும் பொருட்டு சங்காபிஷேகம் செய்யப்படுவதாக சொல்கிறார்கள்.
கார்த்திகை திங்கட்கிழமையான சோமவாரத்தில், கணவனும் மனைவியும் ஆலயங்களுக்குச் சென்று வருவது உத்தமம். அதனால் சிவ-சக்தியின் ஆசி கிடைத்து, காலம் முழுவதும் அந்தத் தம்பதியர் கருத்து வேறுபாடின்றி இணைந்திருப்பார்கள்.
இது தவிர கார்த்திகை மாதத்தில் செய்யப்படும் எந்த பூஜையாக இருந்தாலும், அது பன்மடங்கு பலன் அளிக்கக்கூடியதாகும். அந்த பூஜைகளால் பாவங்கள், வறுமை விலகி, வளமான வாழ்வு அமையும். கார்த்திகை மாதத்தில் ஸ்ரீமன் நாராயணர், ஒவ்வொருவர் வீட்டில் உள்ள நீரிலும் எழுந்தருள்வதாக ஐதீகம்.
கார்த்திகை மாதத்தில் கஸ்தூரி மஞ்சளால் அபிஷேகம் செய்து, தாமரை மலரால் அர்ச்சனை செய்தால், மகா விஷ்ணுவுடன் லட்சுமிதேவி நம் வீட்டில் நிரந்தரமாகத் தங்கிவிடுவாள்.
வில்வ இலையால் சிவனை பூஜிப்பவர்களுக்கு முக்தி கிடைக்கும். கார்த்திகை மாதத்தில் சாளக்கிராமத்தை துளசியால் அர்ச்சிப்பவர்கள், வைகுண்டம் செல்லும் பாக்கியத்தை அடைவர்.

சபரிமலை செல்வதற்காக 48 நாட்கள் விரதம் இருந்தாக வேண்டும் என்பது சாஸ்திரம், ஒரு மண்டலம் என்பது 48 நாட்கள் இது எப்படி வந்தது? என்று பார்க்கலாம்.
சபரிமலை செல்வதற்காக 48 நாட்கள் விரதம் இருந்தாக வேண்டும் என்பது சாஸ்திரம், ஒரு மண்டலம் என்பது 48 நாட்கள் இது எப்படி வந்தது? மொத்த நட்சத்திரங்கள் 27. அவற்றுக்குரிய ராசிகள் 12, கிரகங்களின் எண்ணிக்கை 9, இவை மொத்தம் 48. இந்த 48 தினங்களுக்கு ஒருவர் பகவானிடம் பக்தி வைத்து தரிசித்தால், எந்தவித கலிதோஷங்களும் பிடிக்காது.
நட்சத்திரங்கள், ராசிகள், கிரகங்களால் உண்டாகும் தொல்லைகளில் இருந்து விடுபட்டு, பகவானுடைய பாதங்களில் சரணாகதி அடைந்து உலகத் துன்பங்களிலிருந்து மீண்டு வருவதற்காகவே பக்தர்கள் ஒரு மண்டலமான 48 நாட்கள் காலம்விரதம் மேற்கொள்கின்றனர்.

ஹரிஹரபுத்திரனான சாஸ்தாவை வழிபடும் அடியவர்கள், மேற்கொள்ள வேண்டிய விரதங்கள் மூன்றாகும்.
ஹரிஹரபுத்திரனான சாஸ்தாவை வழிபடும் அடியவர்கள், மேற்கொள்ள வேண்டிய விரதங்கள் மூன்றாகும். அவை: புத வார விரதம், சனி வார விரதம், உத்திர நட்சத்திர விரதம். இந்த விரதங்களை மேற்கொள்பவர்கள், ஏதேனும் ஒரு புதன்கிழமையன்றோ, சனிக்கிழமையன்றோ அல்லது ஒவ்வொரு மாதத்திலும் வரும் உத்திர நட்சத்திரத்தன்றோ விரதம் மேற்கொள்ள வேண்டும்.
முதல் நாள் பகல் உணவோடு விரதத்தைத் தொடங்கி இரவு உணவை உண்ணாதிருக்க வேண்டும். விரத நாளன்று அதிகாலையில் எழுந்து நீராடி, நித்ய கர்மாக்களை முடித்து, விதிமுறைப்படி ஸ்ரீமஹா சாஸ்தாவை வழிபாடு செய்தல் வேண்டும். தண்ணீர் மட்டுமே பருகி முழு விரதம் இருத்தல் உத்தமமானது.
நாள் முழுவதும், பாராயணம், ஜபம், தியானம் ஆகியவற்றை மேற்கொண்டு, ஐயனின் ஆலயத்துக்கும் சென்று வழிபட வேண்டும். அதேபோல், இரவு முழுவதும் கண்ணயராது ஐயனைத் தியானித்து, மறுநாள் அதிகாலையில் நீராடி, சாஸ்தாவை வழிபட்டு அவரின் அடியவருடன் கூடி உண்ண வேண்டும். அன்றும் பகலில் உறங்காது, இரவிலே உறங்குதல் வேண்டும்.
உத்திர நட்சத்திர விரதத்தை மேற்கொள்பவர்கள், சித்திரை மாதத்தின் உத்திர நட்சத்திரத் திருநாளில் தொடங்கி, சாஸ்தாவின் ஜன்ம தினமான பங்குனி உத்திரம் வரை ஒவ்வொரு உத்திரத்திலும் வழிபடுவது சிறப்பு. அங்ஙனம் இயலாதவர்கள், பங்குனி உத்திரத் திருநாளன்று மட்டுமாவது கட்டாயம் விரதம் கடைப்பிடித்து வழிபட வேண்டும்.
பங்குனி உத்திர விரதம் மேற்கொள்பவர்கள், இரண்டு நாள்கள் முன்னதாகவே, அதாவது பங்குனி மாதத்தின் மக நட்சத்திரத்தன்றே விரதத்தைத் தொடங்க வேண்டும். ஒவ்வொரு நாளும் அதிகாலையில் எழுந்து நித்ய கர்மாக்களை முடித்து சாஸ்தாவை விதி முறைப்படி பூஜிக்க வேண்டும். பகலில் உறங்குதல் கூடாது.
மேலும், இந்த விரதம் மேற்கொள்பவர்கள் ஆசார நியமத்துடன் தங்கள் இல்லத்திலிருந்து பால்குடம், நெய்குடம், தயிர்குடம், இளநீர் ஆகியவற்றை அருகில் உள்ள சாஸ்தாவின் ஆலயத்துக்கு வழிநடையாக எடுத்துச் சென்று அபிஷேக ஆராதனைகள் செய்வது விசேஷம். இதனால் அவர்களது துன்பங்கள் யாவும் தூசாகும். அவர்கள் சகல ஐஸ்வர்யங்களை இம்மையில் அடைந்து, மறுமையில் ஐயனின் பேரருளையும் பெறுவர்.
பங்குனி உத்திரத்தன்று இரவிலும் விழித்திருக்க வேண்டும். சாஸ்தாவின் சரித்திரங்களை கேட்டு, பாராய ணம், ஜபம் தியானம் ஆகியவற்றை செய்தல் வேண்டும். மறுநாள் சாஸ்தாவை வழிபட்டு, காலை உணவு அருந்தி விரதத்தைப் பூர்த்தி செய்துகொள்ளலாம்.

திருமண தடை, சிறந்த வாழ்க்கை துணை அமைய விநாயகர், முருகனுக்கு உகந்த இந்த இரு விரதங்களை தொடர்ந்து கடைபிடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
விநாயகர் சஷ்டி விரதம் :
கார்த்திகை மாத தேய்பிறை பிரதமை முதல் மார்கழி மாத வளர்பிறை சஷ்டி வரை, 21 நாட்கள் விநாயகரை நினைத்து மேற்கொள்ளப்படும் விரதம் இது. இந்த விரதத்தின்போது, 21 இழைகளால் ஆன நோன்பு கயிற்றினை ஆண்கள் வலது கையிலும், பெண்கள் இடது கையிலும் கட்டிக் கொள்வார்கள். முதல் 20 நாளும் ஒருபொழுது மட்டும் சாப்பிட்டு், கடைசி நாள் முழுமையாக உபவாசம் இருக்க வேண்டும். இந்த விரதத்தால் சிறந்த வாழ்க்கைத் துணை அமையும். புத்திசாலியான புத்திரர்கள் கிடைப்பார்கள். எடுத்த காரியங்கள் வெற்றியாகும்.
கார்த்திகை விரதம் :
இது முருகப்பெருமானை நினைத்து, கார்த் திகை மாத கார்த்திகை நட்சத்திரம் தொடங்கி, ஒவ்வொரு மாதமும் கார்த்திகை நட்சத்திரத் தில் கடைப்பிடிக்கப்படுகிறது. தொடர்ந்து 12 ஆண்டுகள் கடைப்பிடிக்க வேண்டிய இந்த விரத முறையில், பகல் உணவு உண்ணாமல் இறைவழிபாடு செய்ய வேண்டும். இந்த விரதத் தால் வாழ்வில் பதினாறு வகையான செல்வங் களையும் பெறலாம்.

‘ரம்பா திருதியை’ விரதம் தேவலோக நடன மங்கையான ரம்பையின் நினைவாக, பார்வதிதேவியை நினைத்து செய்யப்படும் சிறப்பு மிகுந்த வழிபாடாகும்.
21-11-2017 ரம்பா திருதியை
அட்சயத் திருதியை பற்றி அனைவருக்கும் தெரியும். அந்த நாளில் சிறிய அளவிலாவது செல்வம் வாங்கிவிட வேண்டும் என்று அனைவரும் ஆவல் கொள்வார்கள். அதன் மூலம் இல்லத்தில் செல்வ வளம் அதிகரிக்கும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது.
அட்சயத் திருதியை பற்றி தெரியும் சரி.. உங்களுக்கு ‘ரம்பா திருதியை’ப் பற்றித் தெரியுமா?
செல்வத்தை அள்ளித் தருவது அட்சயத் திருதியை என்றால், ஐஸ்வரியத்தோடு பேரழகை அள்ளித் தரும் விரதம் ‘ரம்பா திருதியை’ ஆகும். இந்த விரதம் தேவலோக நடன மங்கையான ரம்பையின் நினைவாக, பார்வதிதேவியை நினைத்து செய்யப்படும் சிறப்பு மிகுந்த வழிபாடாகும். இந்த நாளில்தான் தேவேந்திரனின் அறிவுரையின் பேரில், பார்வதிதேவியை வழிபட்டு, ரம்பை தன்னுடைய பேரழகை மீட்டெடுத்ததாக புராணங்கள் கூறுகின்றன. கார்த்திகை மாதம் வரும் அமாவாசைக்கு அடுத்த மூன்றாவது நாளில் ‘ரம்பா திருதியை’ விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்திரலோகத்தின் அழகார்ந்த இந்திரசபை கூடியிருந்தது. அந்த சபையின் அரியாசணத்தில் இந்திராணியோடு அமர்ந்திருந்தான் இந்திரன். சபையில் தேவர்கள் பலரும் வரிசையாக அமர்ந்திருக்க, சபையின் நடுவே, தேவலோகப் பேரழகிகளான ரம்பை, ஊர்வசி, மேனகை ஆகியோர் நடனமாடிக்கொண்டிருந்தனர்.
நடனம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே மூன்று அழகிகளுக்குள்ளும் போட்டி ஏற்பட்டு விட்டது. யார் சிறப்பாக நடனம் ஆடுகிறார்கள் என்ற பிரச்சினை எழுந்தது. அதனால் மூவரின் நடனமும் வேகம் பிடித்தது. தேவலோகத்தின் முதல் பேரழகி என்ற தனது பட்டத்தைத் தக்க வைத்துக் கொள்ள எண்ணிய ரம்பை, சுற்றுச் சுழன்று அரங்கம் அதிரும்படியாக ஆடிக்கொண்டிருந்தாள். அப்போதுதான் அந்த சம்பவம் நடந்தது.
ஆட்டத்தின் இடையே, ரம்பை அணிந்திருந்த நெற்றிப்பொட்டும், பிறை சந்திரனும் கீழே விழுந்து விட்டன. இதனால் ரம்பை நிலை குலைந்து போனாள். இந்தக் காட்சியைக் கண்ட ஊர்வசியும், மேனகையும், ரம்பையைப் பார்த்து ஏளமான சிரிப்பை உதிர்த்து விட்டு, அரங்கை விட்டு வெளியேறினர்.

அவர்களின் செய்கையை தனக்கு நேர்ந்த அவமானமாக கருதிய ரம்பை, கீழே விழுந்த அணிகலன்களை எடுத்துக் கொண்டிருந்தபோது, ‘இன்றை சகுனம் சரியில்லை.. சபை கலையலாம்’ என்று உத்தரவிட்டான் இந்திரன்.
ஏற்கனவே தன் சக அழகிகளின் ஏளனத்தால் வெட்கிப் போயிருந்த ரம்பை, தன்னால் சகுனம் சரியில்லை என்று இந்திரன் சொன்னதும் உடைந்து போய்விட்டாள். இரவு முழுவதும் அவளுக்கு உறக்கம் இல்லை. சபையில் தனக்கு நேர்ந்த அவமானத்தை எண்ணி கண்ணீர் வடித்தாள்.
பொழுது விடிந்ததும் இந்திரனைப் போய் சந்தித்தாள். அவனிடம், ‘இந்திரதேவா! நேற்று எனக்கு அவையில் நடந்த அவமானத்துக்கு பரிகாரம் செய்ய வேண்டும். அந்த சம்பவத்தால், என்னுடைய முதல் அழகி என்ற பட்டம் பறிபோய் விட்டதோ என்று அஞ்சுகிறேன்’ என்று கலங்கினாள்.
ரம்பையை ஏறிட்ட இந்திரன், ‘நடனம் என்பது அதன் பாவங்களின் விதி மீறாமல் ஆட வேண்டும் என்பதே முறை. ஆனால் நீங்கள் மூவரும் நடனம் ஆடுவதற்கு பதிலாக, கூத்து அல்லவா நடத்தினீர்கள். அதைப் பார்த்து கலங்கிய கலைவாணிதான், உன்னுடைய நெற்றிப் பொட்டையும், பிறைசந்திரனையும் அகற்றிவிட்டாள். நீ முதல் அழகி என்ற பட்டத்தில் இருந்து கொஞ்ச காலம் விலகி இருப்பதுதான் நல்லது’ என்றான் ஆத்திரத்துடன்.
இந்திரன் அப்படிச் சொன்னதும் துடித்துப் போனாள் ரம்பை. ‘தேவேந்திரா! தேவ உலகின் அதிபதியான நீங்கள் என்னை விலக்கி வைக்கலாமா?. அதற்கு பதிலாக என்னுடைய தவறை திருத்திக்கொள்ள, பரிகாரம் சொல்லுங்கள்’ என்று வேண்டினாள்.

அவளது துன்பத்தை உணர்ந்து கொண்ட இந்திரன், ‘சிவபெருமானை அடையும் நோக்கில், பார்வதிதேவி பூமியில் அவதரித்திருக்கிறார். அவர் ஒரு மகிழ மரத்தின் கீழ் தவம் இருக்கிறார். அந்த கவுரிதேவியை விரதமிருந்து வழிபாடு செய்தால் உனக்கு ஏற்பட்டுள்ள களங்கம் நீங்கும்’ என்று விமோசனம் கூறினான்.
இதையடுத்து பூலோகம் வந்த ரம்பை, கவுரிதேவியைத் தேடியபோது, பூலோகம் எங்கும் தீபங்கள் வரிசையாக ஒளிர்ந்து கொண்டிருந்தன. அது கார்த்திகை மாதம். அந்த ஒளியில் அன்னையை நம்பிக்கையோடு தேடிய ரம்பைக்கு அன்னையின் தரிசனம் கிடைத்தது.
கார்த்திகை மாத அமாவாசைக்கு இரண்டாம் நாள் துவிதியை திதி. அந்த நாளில் மஞ்சளால் அம்பிகை பிரதிமையை செய்து வைத்து, விரத பூஜை செய்தாள் ரம்பை. மஞ்சள் கொண்டு அன்னையை வணங்கியதால் இந்த பூஜைக்கு ‘தீந்திரிணி கவுரி விரதம்’ என்ற பெயரும் உண்டு. தீந்திரிணி என்றால் மஞ்சள் என்று பொருள்.
ரம்பையின் பூஜையை ஏற்றுக்கொண்ட கவுரிதேவி, மறுநாள் அவளுக்கு சொர்ணதேவியாக காட்சி தந்தாள். ரம்பையை மீண்டும் தேவலோகத்தில் முதல் அழகியாக ஆகும்படி அருளியதுடன், அவளது அழகையும், ஐஸ்வரியங்களையும் இன்னும் அதிகமாக்கி அருள் செய்தாள். மேலும் ரம்பை இருந்த விரதம் ‘ரம்பா திருதியை’ என்று பெண்களால் தங்கத் திருவிழாவாக கொண்டாடப்படும் என்றும் ஆசீர்வதித்தாள்.
ரம்பைக்கு கவுரி தேவி காட்சிதந்தபோது, அழகுக்கு உரிய கார்த்திகேயனை மடியில் வைத்தபடி பொன்மேனியளாக இருந்தார். அதன் காரணமாக, ரம்பா திருதியை அன்று கார்த்தியாயனி வீற்றிருக்கும் ஆலயங்களில் எல்லாம் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

செவ்வாய்க்கிழமையில் வரும் அஷ்டமி அன்று பைரவரை வழிபாடு செய்தால் கடன் தொல்லை தீரும், மன அமைதியோடு, குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிலவும்.
பொதுவாக அஷ்டமியில் பைரவரை விரதமிருந்து வழிபடுவது சிறப்பானது என்றாலும், அந்த அஷ்டமி தினம் செவ்வாய்க்கிழமையில் வருவது கூடுதல் சிறப்பானதாகும். அன்றைய தினம் பைரவரை வழிபாடு செய்தால் கடன் தொல்லை தீரும். மன அமைதியோடு, குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிலவும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தடைபட்ட சுப காரியங்கள் இனிதே நடந்தேறும்.
மேலும் செவ்வாடை சாத்தி, சிவப்பு அரளிப்பூ மாலை சூட்டி, வெல்லம் கலந்த பாயசம், உளுந்து வடை, பால், தேன், பழம் நிவேதனம் செய்து, வெள்ளை பூசணிக்காயில் நெய் விட்டு தீபம் ஏற்றி விபூதி அபிஷேகம் செய்து வழிபட்டால் சகல யோகங்களும் வந்து சேரும்.
இதே போல் வெள்ளிக்கிழமையில் வரும் தேய்பிறை அஷ்டமியும் பைரவருக்கு மிகவும் உகந்த நாள். அன்றைய தினம் பைரவரை வணங்குவதால் லட்சுமி கடாட்சம் பெருகும்.

ஐயப்பனுக்குரிய நட்சத்திரமான உத்திர நட்சத்திர நாளில் விரதம் இருக்கலாம். பாவங்கள் தீர்ந்து நலம் பெற ஐயப்பனுக்குரிய உத்திர விரதம் உறுதி தருகிறது.
ஐயப்பனுக்குரிய நட்சத்திரம் உத்திர நட்சத்திரமாகும். அந்த நட்சத்திர நாளில் ஐயப்பனுக்குரிய விரதம் இருக்கலாம். அன்று காலை முதல் இரவு வரை, முறையான விரதம் அனுஷ்டித்து மாதம் ஒரு நாள் ஸ்ரீ ஐயப்ப சுவாமியை மனதில் எண்ணி வணங்கலாம்.
தீபம் ஏற்றி, சரண கோஷம் இட்டு பானகம் நிவேதனம் செய்து, கற்பூர தீபம் ஏற்றிய பின் வணங்கி, அருகில் உள்ள ஐயப்பன் அல்லது மற்ற ஆலயங்களுக்குச் சென்று வரலாம்.
பூரணா, புஷ்கலாம்பிகையுடன் உள்ள ஹரிஹரபுத்ர சுவாமி படத்தை வீட்டில் பூஜை செய்து, 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்களும் விரதம் இருக்கலாம். தோஷங்கள், தடைகள், பாவங்கள் தீர்ந்து நலம் பெற ஐயப்பனுக்குரிய உத்திர விரதம் உறுதி தருகிறது.

தமிழகம் மற்றும் தென் மாநிலங்களில் சபரிமலை ஐயப்ப பக்தர்கள் இன்று மாலை போட்டு தங்களது விரதத்தைத் தொடங்கியுள்ளனர்.
கார்த்திகை மாதம் இன்று பிறந்து விட்டது. இதையடுத்து தமிழகம் மற்றும் தென் மாநிலங்களில் சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மாலை போட்டு தங்களது விரதத்தைத் தொடங்கியுள்ளனர். கார்த்திகை மாதம் முதல் நாளில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஐயப்ப பக்தர்கள் மாலை போட்டு தங்களது விரத்தைத் தொடங்குவது வழக்கம்.
ஒரு மண்டலமான, 48 நாட்களுக்கு விரதம் இருந்து மலைக்குச் சென்று ஐயப்பனை தரிசிப்பார்கள் பக்தர்கள். கார்த்திகை மாதப் பிறப்பையொட்டி நவம்பர் 16ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. நேற்று ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவித்து தங்களது விரதத்தைத் தொடங்கினர். நேற்று மாதப் பிறப்பைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவித்து விரதம் தொடங்கினர். ஆங்காங்கு உள்ள ஐயப்பன் கோவில்களிலும், பிற கோவில்களிலும் மாலை அணியும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சென்னையில் மகாலிங்கபுரத்தில் ஐயப்பன் கோவிலில் இன்று நூற்றுக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து மாலை அணிந்து கொண்டனர். நீண்ட வரிசையில் காத்திருந்து ஒவ்வொரு பக்தரும் மாலை அணிந்து கொண்டனர். அவர்களுக்கு குருசாமிகள் மாலை அணிவித்தனர். சிறார்கள் முதல் வயதான பெண்கள் வரை பலரும் மாலை போட்டுக் கொண்டனர்.

கார்த்திகை மாதம் நாளை பிறக்க இருப்பதால் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருக்க தொடங்குகிறார்கள்.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை முதல் தேதியில் மாலை அணிந்து மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜை காலங்களில் சென்று ஐயப்பனை தரிசிப்பார்கள்.
நாளை கார்த்திகை மாதம் பிறப்பதையொட்டி ஐயப்ப பக்தர்கள் நாளை முறை 48 நாட்கள்( ஒரு மண்டலம்) மாலை அணிந்து விரதம் இருக்க தொடங்குகிறார்கள்.
நேற்றே சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்டதால் ஒருசிலர் இன்றும் மாலை அணிந்தனர். சென்னை மகாலிங்கபுரம், ராஜா அண்ணாமலைபுரம், அண்ணாநகர் ஆகிய இடங்களில் உள்ள ஐயப்பன் கோவில்களில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்குவார்கள். மாலை போடும் பக்தர்கள் துளசிமணி மாலைகள் மற்றும் கருப்பு, நீலம், காவி போன்ற வேட்டிகளையும் ஆர்வத்துடன் வாங்கினார்கள்.
விரதம் இருந்து செல்லும் பக்தர்களை வரவேற்க சபரிமலையும் தயாராகி விட்டது. கடந்த ஆண்டுகளை விட கூடுதலாக 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.
சபரிமலையில் கேட்க தொடங்கி இருக்கும் சரண கோஷமும், நெய்வாசமும் இனி 2 மாதத்துக்கு தொடர்ந்து பக்தர்களுக்கு சுகமான அனுபவமாக இருக்கும்.