என் மலர்
முக்கிய விரதங்கள்
பெருமாளின் வாகனமாக விளங்கும் கருடனுக்கு உரிய விரதம் தான் கருட பஞ்சமி விரதம் ஆடி மாதம் வளர்பிறை பஞ்சமி அன்று இந்த விரதம் கடைபிடிக்கப்படுகிறது.

கருடபஞ்சமி தொடர்பாக கூறப்படும் கதை:-
முன்னொரு காலத்தில் 7 அண்ணன்களுக்கு ஒரே ஒரு தங்கை இருந்தாள். அவர்கள் விறகு வெட்டி பிழைப்பு நடத்தி வந்தனர். ஒருநாள் தங்கை ஆனவள் தன் அண்ணன்களுக்குக் கஞ்சி கொண்டு சென்றாள். அப்போது வானில் கருடன் ஒன்று நாகத்தைக் கவ்விக்கொண்டு சென்றது. அப்போது அந்த நாகம் கக்கிய விஷம் தங்கை கொண்டு சென்ற கஞ்சியில் விழுந்துவிட்டது. அதை அறியாத அவள் அண்ணன்கள் அனைவருக்கும் அந்த கஞ்சியை பரிமாறினாள். அதை உண்ட அவர்கள் அனைவரும் இறந்துவிட்டனர்.
“தினமும் செய்வது போலத்தானே செய்தோம். இன்று இப்படி ஆகிவிட்டதே... என்று அழுது புரண்ட அவள், தன் அண்ணன்களை காப்பாற்ற வேண்டி இறைவனிடம் மன்றாடினாள். சிவனும், பார்வதியும் அங்கே தோன்றி அவள் அழுகைக்கான காரணத்தை கேட்டனர்.... அவள் நடந்ததைக் கூறினாள். அதற்கு அவர்கள், “ இன்று கருடபஞ்சமி. நீ அதை மறந்து, அதற்குரிய பூஜை செய்யாமல் வந்துவிட்டாய். அது தான் உன் பிரச்சினைக்கு காரணம்.
இங்கேயே இப்போதே நாங்கள் சொல்வதை போல் நாகருக்கு பூஜை செய். கங்கணக்கயிற்றில் ஏழு முடிச்சிட்டு, நாகர் இருக்கும் புற்று மண்எடுத்து, அட்சதை சேர்த்து, இறந்து கிடக்கும் உன் அண்ணன்கள் முதுகில் குத்து. அவர்கள் உயிரோடு எழுந்திருப்பார்கள்” என்று சொல்லி கருட பஞ்சமியின் முக்கியத்துவத்தை அவளுக்கு உணர்த்தினர். அவளும் அதேபோல் செய்தாள். இறந்து கிடந்த அண்ணன்கள் அனைவரும் உயிர் பெற்று எழுந்தனர். இதை பிரதிபலிக்கும் வகையில் கருடபஞ்சமி விரதம் கடைபிடிக்கப்படுகிறது.

இன்றும் கூட, கருட பஞ்சமி அன்று பெண்கள் தங்கள் உடன் பிறந்தவர்கள் முதுகில் அட்சதை இட்டு குத்தி, அவர்கள் தரும் சீரைப்பெற்றுக்கொள்வதை சில இடங்களில் காணலாம்.
விரதமுறை
வளர்பிறை பஞ்சமியில் கருடனுக்குரிய விரதத்தை கடைபிடிக்க வேண்டும். அதிகாலையில் எழுந்து குளித்து தூய்மையான ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும்.
தூய்மையான இடத்தில் பூக்களால் அலங்கரித்து ஐந்து நிறங்களைக் கொண்ட கோலங்கள் போட வேண்டும். நடுவில் ஒரு பலகை போட்டு, அதன் மேல் தலை வாழை இலையை விரித்துப் பச்சரிசியைக் கொட்டி வைத்து, அதன் மேல் சக்திக்கு தகுந்தபடி பொன், வெள்ளி, தாமிரம், அல்லது மண் இவற்றில் ஏதாவது ஒன்றால் செய்யப்பட்ட பாம்பின் வடிவம் ஒன்றைச் செய்து அரிசியின் மேல் வைக்க வேண்டும்.
பாம்பின் படத்தின் நடுவில் மஞ்சளால் செய்யப்பட்ட கவுரிதேவியின் வடிவத்தை வைத்து அலங்காரங்கள் செய்து பூஜை செய்ய வேண்டும். பருத்தி நூலால் ஆன மஞ்சள் சரட்டை சார்த்தவும்.
இப்படிப் பூஜை செய்பவர்களின் கோரிக்கைகள் எல்லாம் முழுமையாக நிறைவேறும். சகல விதமான செல்வங்களையும் பெறுவார்கள். அதோடு முக்தியும் அடைவர். இந்த பூஜை செய்வதனால் நாக தோஷம் நீங்கும்.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலின் தசரா திருவிழாவை முன்னிட்டு, பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதத்தை தொடங்கினர்.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து, பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுவார்கள்.
கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா வருகிற அக்டோபர் மாதம் 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
விழாவின் சிகர நாளான அக்டோபர் மாதம் 19-ந்தேதி இரவு 12 மணிக்கு மகிஷா சூரசம்ஹாரம் நடக்கிறது. விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்வார்கள்.
தசரா திருவிழாவை முன்னிட்டு, பல்வேறு ஊர்களிலும் விரதம் இருக்கும் பக்தர்கள் நேற்று கோவிலுக்கு வந்து விரதத்தை தொடங்கினர். முன்னதாக பக்தர்கள் செவ்வாடை அணிந்து, கடலில் புனித நீராடினர்.
பின்னர் பக்தர்கள் கோவிலில் சென்று வழிபட்ட னர். அம்மன் பாதத்தில் வைத்த துளசிமாலையை கோவில் அர்ச்சகர் பக்தர்களுக்கு அணிவித்தார்.
விரதம் தொடங்கிய பக்தர்கள் தங்களது ஊர்களில் உள்ள கோவில்களின் அருகில் குடில் அமைத்து, அதில் தங்கியிருந்து அம்மனை வழிபடுவார்கள். அவர்கள் தினமும் ஒரு வேளை மட்டும் பச்சரிசி உணவு சாப்பிட்டு விரதம் இருப்பார்கள்.
பின்னர், குலசேகரன்பட்டினம் வந்து முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கொடியேற்றத்தில், விரதம் இருக்கும் பக்தர்கள் திரளாக கலந்து கொள்வார்கள். கொடியேற்றம் நடந்ததும், விரதம் இருக்கும் பக்தர்களுக்கு கோவில் அர்ச்சகர் காப்பு அணிவிப்பார்.
காப்பு கட்டிய பக்தர்கள் நேர்த்திக்கடனாக சிவன், பார்வதி, காளி, விநாயகர், முருகர், ராமர், லட்சுமணர், அனுமார், முனிவர், குறவன், குறத்தி, போலீஸ், நர்ஸ், சிங்கம், புலி, கரடி போன்ற பல்வேறு வேடங்களை அணிந்து, ஊர் ஊராக சென்று காணிக்கை வசூல் செய்து, அதனை சூரசம்ஹார நாளில் கோவிலில் வழங்கி வழிபடுவார்கள்.

திருமணத்தடை உள்ள கன்னிப் பெண்கள் ஆடிப்பூரம் அன்று விரதம் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்து ஆண்டாளை தரிசனம் செய்தால் அவர்களுக்கு மாங்கல்ய பாக்கியம் உடனே கிடைக்கும் என்கிறார்கள்.
பூமாதேவி அவதரித்த ஆனந்த மாதமும் இந்த ஆடி மாதம் தான். அதாவது ஆண்டாள் அவதரித்த அந்த நன்னாள் தான் ஆடிப்பூரமாகக் கொண்டாடப்படுகிறது.
மாங்கல்ய பலம் அதிகரிக்கும்
ஆடி செவ்வாயும், ஆடி வெள்ளியும் பெண்கள் அதிக அளவில் ஆலயத்துக்கு வரும் நாட்களாகும். ஆடி செவ்வாய் தேடி குளி. அரைத்த மஞ்சளை பூசி குளி என்று சொல்வார்கள். ஆடி மாதத்து செவ்வாய்க்கிழமைக்கு அந்த அளவுக்கு மகத்துவம் இருக்கிறது.
ஆடி செவ்வாய் தினத்தன்று பெண்கள் மா விளக்கு போடுவதும், திருவிளக்கு பூஜை செய்வதும், துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை பழ தீபம் ஏற்றுவதும், செவ்வரளி பூக்கள் வழிபாடு செய்வதும் அதிகமாக நடைபெறும். இதன் மூலம் பெண்களின் மாங்கல்ய பலம் அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகமாகும்.
இன்று ஆடி அமாவாசை அன்று மண்ணுலகை விட்டு விண்ணுலகு எய்தி சிவபதம் அடைந்த சகல ஆத்மாக்களுக்கும் விரதம் இருந்து செய்யப்படும் பூஜை ஆகும்.
இன்று ஆடி அமாவாசை தர்ப்பண பூஜை - மண்ணுலகை விட்டு விண்ணுலகு எய்தி சிவபதம் அடைந்த சகல ஆத்மாக்களுக்கும் செய்யப்படும் பூஜை ஆகும்.
ஆத்மாக்கள் மோட்சத்தை அடைந்து இறைவன் அடி சேர்ந்தபின் நமது வாழ்க்கையில் நடக்கும் துன்பங்கள் தொடராமல் இன்பங்கள் பெருகி வளமான வாழ்வு வாழ்வதற்கு ஆத்மாக்களின் ஆசீர்வாதம் எப்போதும் வேண்டும்.
சீரும் சிறப்பும் பெற்று நாம் வாழ்வதிலும் நோய் நொடி இன்றி சுகத்துடன் இருப்பதற்கும் எத்துறையிலும் முன்னேற்றம் காண்பதற்கும் ஆடி அமாவாசை தினத்தன்று ஆத்மதர்ப்பணம் செய்து அவர்களை நினைவு கூற வேண்டும்.
முக்கியமாக தாய் தந்தையர்களை இழந்தவர்கள் இதில் பெரும் பங்கெடுத்து கடமைகளை செய்ய வேண்டும். தாத்தா, பாட்டி மாமனார் மாமியார் சுற்றத்தவர்கள் என நம்மை விட்டு அமரர்களாகிய அனைவருக்கும் இதுபோற்றி வணங்கத்தக்க நாளாகும்.
அப்பா, அம்மா, உறவு என அனைவருக்கும் நீத்தார் கடன் செய்யத் தவறியவர்கள் சந்தர்ப்ப சூழ்நிலையால் செய்ய முடியாதவர்கள் இறந்த காலங்களில் ஒருமாத கால முடிவில் தீட்டு துடக்கு முடிந்த பின் பிதுர் கடன் செய்ய முடியாதவர்கள் இந்த ஆடி அமாவாசை நாளில் ஒவ்வொரு வருடமும் தர்ப்பணம் செய்தல் அவசியமாகும்.
மனிதர்களாகிய நாம் பெற்ற கடன்கள் பலவாகும். அவற்றுள் மூன்று கடன்கள் பெரும் கடன்களாக கருதப்படுகிறது. அவை தேவர்கடன், முனிவர்கடன், பிதிர்க்கடன் என்பவையாகும். தேவர் கடன் இறைவனை வழிபடுவதாலும், முனிவர்கடன் வேதம் ஒதுவதாலும், திருமுறை பாராயணம் (தேவாரம் திருவாசகம்) பாடுவதாலும், பிதிர்க்கடன் இறந்த ஆத்மாக்களை நினைத்து எள்ளும் தண்ணீரும் இறைத்து தர்ப்பணம் செய்தல் மூலமாகவும் தீர்க்கப்படுகின்றன. நீத்தார்கடன் எனப்படும் பிதிர்க்கடனை தீர்க்கவும், இக்கடமையை செய்ய ஏற்ற நாளாகவும் வருவது இந்த ஆடி அமாவாசை தினமாகும்.
சூரியனும் சந்திரனும் சேர்ந்திருக்கக் கூடிய நாளாகிய ஆடி அமாவாசை திதியன்று காலையில் கடலில், நதியில் ஆற்றில் மூழ்கி குளித்து அல்லது வீடுகளில் குளித்து சுத்தமான ஆடை அணிந்து விபூதி பூசி பொட்டு வைத்து விரதம் இருந்து ஆலயம் சென்று சிவன் தரிசனம் செய்து, ஆலய குருவின் வழிகாட்டுதலின்படி முதலில் தர்ப்பை கையில் அணிந்து சங்கல்பம் செய்து அமரத்துவம் அடைந்தவர்கள் பெயர் நாமங்களை குருவிடம் சொல்ல வேண்டும்.
இறந்த தாய் தந்தையர் அவர்கள் பெயர்களை முதலில் சொல்லி பின்பு தாத்தா பாட்டி தலைமுறை சொல்லி அதன் பின் ஏனைய உறவினர் நண்பர்கள் இறந்திருந்தால் அவர்கள் பெயர்களும் சொல்லி எள்ளும் தண்ணீரும் சேர்த்து இறைத்து தர்ப்பணம் செய்து அவர்கள் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்ய வேண்டும். அதன்பின் மோட்ச தீபம் ஏற்றி இறைவனை வழிபட்டு அர்ச்சனை செய்து ஆராதிக்க வேண்டும்.
எள்ளு நீருடன் தர்ப்பைப்புல் நுனியால் இறைத்து விடுவதால் பிதிர்கள் திருப்தி அடைவார்கள். தர்ப்பணம் என்பது திருப்திப்படுத்துதல் என்று பொருள் படும்.
பகவான் விஷ்னுவின் தேகத்தில் இருந்து வெளிப்பட்டதும் சகல பாவங்களையும் தீர்க்க வல்லதாகிய எள்ளும், தாகத்தை தீர்க்கும் நீரும், கொண்டு தர்ப்பணம் செய்து பிதிரின் ஆசியையும் குருவின் ஆசியையும் பெற வேண்டும். பின் குருவிற்கு தானமாக வேட்டி சால்வை அரிசி காய்கறி குருதட்சனை வழங்கி ஆசீர்வாதம் பெற வேண்டும்.
வீட்டில் அமரர்கள் படத்தின் முன் சைவமாக சமைத்து வாழை இலை உணவு படைத்து கற்பூர ஆராதனை செய்து வணங்கி உறவினருடன் கூடி மதிய உணவு உண்ண வேண்டும்.

வெள்ளிக்கிழமை அன்று அம்பிகையை விரதம் இருந்து வழிபாடு செய்தால் வெற்றிகள் வந்து குவியும்; வேதனைகள் அகலும் என்பது முன்னோர்கள் வாக்கு.
திங்கள் செவ்வாயினில் தெரிசித்த மாந்தர்க்குத் தீங்குகள் அகன்று ஓடும்!
சேர்புதன் வியாழனில் திருக்கோலம் கண்டோர்க்குச் செல்வங்கள் வந்து கூடும்!
மங்கல வெள்ளி சனி ஞாயிறில் உனைக்கண்டோர் மாபெரும் வெற்றிகாண்பர்!
என்று அம்பிகை பாமாலை எடுத்துரைக்கிறது. வெள்ளிக்கிழமை அன்று அம்பிகையை வழிபாடு செய்தால் வெற்றிகள் வந்து குவியும்; வேதனைகள் அகலும் என்பது முன்னோர்கள் வாக்கு. அந்த அடிப்படையில் எத்தனை வெள்ளிக்கிழமைகள் வந்தாலும் ஆடி வெள்ளிக்கும் தை வெள்ளிக்கும் ஆலய வழிபாட்டை மேற்கொண்டால் அற்புதப் பலன் கள் கைமேல் கிடைக்கும். மாதங்களில் வித்தியாசமான மாதம் ஆடி மாதம்.
பெண் தெய்வ வழிபாட்டின் மூலமும், முன்னோர் வழிபாட்டின் மூலமும் முத்தான பலன்கள் நமக்கு கிடைக்க வைக்கும் மாதமாகும். ஆடி வெள்ளியில் அம்பிகை வழிபாட்டை மேற்கொண்டால் தேடிய செல்வம் நிலைக்கும். ஆடி அமாவாசையில் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்துவந்தால் முன்னேற்றப் பாதையில் இருக்கும் தடைகள் விலகும். எனவே மனித தெய்வங்களையும், மகத்தான பலன் தரும் தெய்வங்களையும் வழிபட உகந்த மாதமாக இம்மாதம் விளங்குகின்றது.
அப்படிப்பட்ட அற்புதமான மாதத்தில் செவ்வாய்க்கிழமையும், வெள்ளிக்கிழமையும் திருமகள் வழிபாட்டையும் ஆதிபராசக்தியையும் முறையாக வழிபட்டால் கும்பிட்டவுடன் குறைகள் தீரும்! நினைத்த காரியங்கள் அனைத்தும் நடைபெறும்!
அம்பிகையைச் ‘சக்தி’ என்று சொல்கிறோம். எந்தக் காரியத்தையும் செய்யும் பொழுது ‘சக்தி இருந்தால் செய். இல்லையேல் சிவனே என்றிரு’ என்று பெரியவர்கள் சொல்வது வழக்கம். எனவே, ஒரு மனிதன் செயல்படக் காரணமாக இருப்பது அவன் உடலில் உள்ள சக்தியும், அவனுக்கு அருள்கொடுக்கும் சக்தி எனப்படும் அம்பிகையும் தான். அந்த சக்தி வழிபாடு நம் சஞ்சலத்தைத் தீர்க்கும். நம் வாழ்வில் சந்தோஷத்தைச் சேர்க்கும்.
சக்தியை சாந்த வடிவத்தில் மீனாட்சி என்றும், காமாட்சி என்றும், விசாலாட்சி என்றும், உண்ணாமலை என்றும், அகிலாண்டேஸ்வரி என்றும், கமலாம்பிகை என்றும், திரிபுரசுந்திரி என்றும், காந்திமதி என்றும், பெரியநாயகி என்றும், தையல்நாயகி என்றும், ஞானப்பூங்கோதை என்றும், வடிவுடையம்மன் என்றும், கொடியிடையம்மன் என்றும், திருவுடையம்மன் என்றும் நாம் எண்ணற்ற பெயர்கள் சூட்டி வழிபாடு செய்கின்றோம்.
மாரியம்மன் என்றும், காளியம்மன் என்றும், பொன்னழகி என்றும், கனகதுர்க்கா என்றும், கண்ணாத்தாள் என்றும், சமயபுரத்தாள் என்றும் அந்த ஓம்கார நாயகனின் தாயாக விளங்கும் ஆங்கார சக்திக்கு வடிவம் கொடுத்திருக்கிறார்கள். அந்த அம்பிகையை நாம் முறையாக விரதமிருந்து வழிபட்டு வர ஏற்ற மாதம் ஆடி மாதமாகும்.
கோடி மாதங்கள் கிடைத்தாலும் ஆடி மாதம் போல் ஒரு மாதம் வழிபாட்டிற்கு கிடையாது. ஆடி மாதத்தில் தான் வெள்ளிக்கிழமை தோறும் விளக்கேற்றி வைத்து வழிபாடு செய்வது வழக்கம். காரணம் சூரியன் கடகராசியில் சஞ்சரிக்கும் பொழுது ஆடி மாதத்தில் அம்பிகையை நோக்கி விரதமிருந்து நம் கோரிக்கைகளை நினைத்துக்கொண்டால் இன்பங்கள் அனைத்தும் இல்லம் தேடிவந்துகொண்டேயிருக்கும். துன்பங்கள் ஓடி ஒளியும்.
குறிப்பாக ஒரு மனிதனின் வாழக்கைக்குத் தேவை அருளா?, பொருளா? என்று ஆராய்ந்து பார்க்கும் பொழுது தெய்வத்தின் அருளோடு வரும் பொருள்தான் என்று பதில் கிடைக்கும். அந்தப் பொருள் வளம் கொடுப்பவளை நாம் திருமகள் என்றும், லட்சுமி என்றும் வர்ணிக்கிறோம். எட்டு வகை லட்சுமியின் அருள் இருந்தால் பண மழையில் நாம் நனையலாம்.
‘அன்றாட வாழ்க்கையினில் அனுபவிக்கும் துன்பமெல்லாம்
உந்தனருள் பெற்றுவிட்டால் ஓடுவதும் உண்மையன்றோ?
இன்றோடு துயர்விலக இனிய தனலட்சுமியே!
மன்றாடிக் கேட்கின்றோம் வருவாய் இதுசமயம்!’
என்று தனலட்சுமியின் முன்னால் ஆடி வெள்ளிக்கிழமையன்று பாடினால், தனவரவு தாராளமாக வந்து கொண்டேயிருக்கும். பற்றாக்குறை அகன்று பணத்தேவைகள் பூர்த்தியாகும். திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும். அங்ஙனம் வரம்கொடுக்கும் லட்சுமியை ‘வரலட்சுமி’ என்று அழைத்து விரதமிருந்து வழிபட ஏற்ற நாளும் ஆடி மாதம் தான்.
வெள்ளிக்கிழமையன்று அதிகாலையில் வீட்டை மெழுகிக் கோலமிட்டு, மாவிலைத் தோரணம் கட்டி லட்சுமிக்கு வரவேற்பு கொடுக்க வேண்டும். வீட்டுவாசலில் லட்சுமிக்குரிய கோலங்களான தாமரைக் கோலம், இதயக்கமலம், ஐஸ்வர்யக் கோலம் போன்றவற்றை வரைந்து திருமகள் வருக! என்று கோலமாவினால் எழுதி வைக்கலாம். அஷ்டலட்சுமியும் இல்லத்தில் அடியெடுத்து வைக்க வேண்டுமானால் இல்லத் தூய்மை மிகவும் முக் கியமாகும்.
அம்பிகைக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் லட்சுமியை இல்லத்திலும் வழிபாடு செய்யலாம். ஆலயத்தை நோக்கி நாம் அடியெடுத்து வைத்து மகாலட்சுமியை வழிபட்டால் வாழ்வில் வளம் சேரும். வசதி வாய்ப்புகளும் பெருகும். இமயத்தில் வீற்றிருக்கும் அம்பிகைக்கு சமய மாலை பாடினால் சமயத்தில் வந்து நமக்கு கைகொடுத்து உதவுவாள்.
“ஜோதிடக்கலைமணி” சிவல்புரிசிங்காரம்.

ஆடி வெள்ளிக்கிழமை அன்று பெண்கள் விரதம் இருந்து அம்மனை வழிபாடு செய்தால் எண்ணிய வேண்தல்கள் அனைத்தும் நிறைவேறும்.
ஆடி வெள்ளிக்கிழமை அன்று மஞ்சள் தேய்த்து நீராடி, மாக்கோலம் போட்டு, திருவிளக்கின் ஐந்து முகங்களையும் ஏற்ற வேண்டும். பின்னர் லலிதா சகஸ்ர நாமம், அம்மன் பாடல்களை பாடி பூஜை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
வயதுக்கு வராத சிறு பெண்களை அம்மனாக பாவித்து, அவர்களுக்கு வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், அட்சதை, சீப்பு, தோடு, கண்ணாடி வளையல், ரவிக்கை ஆகிய ஒன்பது பொருட்களையும் தட்சணையுடன் வைத்து கொடுத்து, அன்னதானம் செய்தால் வெகு சிறப்பான பலனைப் பெறலாம். ஏன் ஒன்பது பொருட்கள் கொடுக்க வேண்டும் என்பதற்கு, தேவி பாகவதம் விளக்கம் அளிக்கிறது.
அம்பிகையின் அம்சமாக சர்வபூதகமணி, மனோன்மணி, பலப்பிதமணி, நலவிகாரிணி, கலவிகாரிணி, காளி, ரவுத்திரி, சேட்டை, வாமை ஆகிய நவ சக்திகளையும் சொல்வார். இந்த நவசக்தியரை குறிக்கும் வகையில் பெண் குழந்தைகளுக்கு ஒன்பது புனித பொருட்கள் வைத்து கொடுப்பது வழக்கத்துக்கு வந்தது. ஆடி வெள்ளி அன்று சில குறிப்பிட்ட அம்மன் ஆலயங்களில் நவசக்தி பூஜை நடைபெறும்.
ஒன்பது வகையான மலர்களால், ஒன்பது சக்திகளையும், ஒரே நேரத்தில் ஒன்பது சிவாச்சாரியார்கள் அர்ச்சிப்பதே ‘நவசக்தி பூஜை’ எனப்படும். இது மிகுந்த பலனளிக்க கூடியதாகும். ஆடி வெள்ளியன்று நாகதேவதைக்கு பால் தெளித்து விசேஷ பூஜை செய்வார்கள். ஆடி வெள்ளியில் ‘சண்டி ஹோமம்’ போன்ற சக்தி ஹோமங்களும் செய்வார்கள்.

ஐப்பசி பெளர்ணமி மட்டுமின்றி, சித்திரை முதற்கொண்டு பன்னிரு மாதங்களிலும் வரும் பெளர்ணமி திருநாளில் சிவனாரை விரதமிருந்து வழிபடுவது மிகவும் சிறப்பு.
ஐப்பசி பெளர்ணமி மட்டுமின்றி, சித்திரை முதற்கொண்டு பன்னிரு மாதங்களிலும் வரும் பெளர்ணமி திருநாளில் சிவனாரை வழிபடுவது மிகவும் சிறப்பு. அந்த வகையில் புரட்டாசி பெளர்ணமி தினத்தில் (அக்டோபர்-5 வியாழக்கிழமை), வீட்டில் விரதமிருந்து சிவபெருமானை வழிபடுவதாலும், அருகிலுள்ள சிவாலயங் களுக்குச் சென்று வில்வார்ச்சனை செய்து, நெய்தீபங்கள் ஏற்றிவைத்து வழிபடுவதாலும் விசேஷ பலன்கள் கைகூடும்.
பிள்ளையார் பக்தரான கிருச்சமத முனிவரின் மகன் பலி.அவனும் பிள்ளையாரை வழிபட்டு பல வரங்களைப் பெற்றான். அந்த வரங்களில் குறிப்பிடத்தக்கவை பொன், வெள்ளி மற்றும் இரும்பாலான பறக்கும் கோட்டைகள். அவற்றைக்கொண்டு மூவுலகங்களையும் துன்புறுத்தினான், திரிபுரங்களுக்கும் அதிபதி யான அந்த அசுரனின் தொல்லைகளைப் பொறுக்க முடியாத தேவர்களும் முனிவர்களும் சிவபிரானைச் சரணடைந்தனர்.
அவர்களை ரட்சிக்கத் திருவுளம்கொண்ட பிள்ளையார் அசுரன்மீது போர்தொடுத்தார். போரின் முடிவில் கடும் சீற்றத்துடன் பாய்ந்தது சிவ கணை. திரிபுரனாகிய பலி, சிவனாரின் திருவடிகளில் ஒன்றிக் கலந்தான். அப்படி அவன் வீடுபேறடைந்த திருநாள், புரட்டாசி மாத பெளர்ணமி தினமாகும். அந்த நாளை பாகுளி என்று அழைப்பார்கள். இந்தப் புண்ணிய திருநாளில் சிவ வழிபாடு செய்பவர்களைத் துன்பங்கள் நெருங்காது.
புரட்டாசி பெளர்ணமி தினத்தில் காலை வேளையில் சிவ வழிபாடு செய்ய, முற்பிறப்பில் செய்த பாவங்கள் நீங்கும். நண்பகலில் சிவ வழிபாடு செய்ய, முற்பிறப்பில் செய்த பாவங்கள் மட்டும் இல்லாமல், இந்தப் பிறவியில் செய்த பாவங்களும் நீங்கும். மாலை பிரதோஷ வேளையில் சிவ வழிபாடு செய்தால், சிவபெருமானின் அருளால் ஏழேழு பிறவிகளில் செய்து முற்றிய பாவங்கள் எல்லாமே நீங்குவதுடன், விரும்பிய எல்லா வேண்டுதல்களும் நிறைவேறும்.

கிருத்திகை தோஷம் உடையோர் ஞாயிற்றுக்கிழமைகளில் விரதம் இருந்து சூரிய பகவானே எனது தோஷத்தைப் போக்கியருளும் என வேண்டி வணங்கவும்.
கிருத்திகை நட்சத்திரத்திற்குரிய தெய்வம் முருகப்பெருமான், உரிய கிரகம் சூரியன். இந்த கிரகத்திற்குரிய அதிதேவதை சிவன். சிவனை வழிபட்டால் பல்வேறு செல்வ வளங்களை பெற்று மகிழ்ச்சி பெறலாம்.
சூரிய வழிபாடு மிகவும் தொன்மையான வழிபாடு. கிருத்திகை நட்சத்திரகாரர்கள் சூரிய வழிபாடு செய்தால் சகல செல்வங்களும் பெறலாம். மயிலாடுதுறை அருகே உள்ள காத்ர சுந்தரேஸ்வரர் கோவில் கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய தலம்.
கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் கிருத்திகை நட்சத்திரத் தன்றோ, பிரதோஷ நாட்களிலோ இந்தக் கோவிலில் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் வளம் பெறலாம் என்பது நம்பிக்கை. திருமணத்தடை உள்ள கிருத்திகை நட்சத்திரப் பெண்கள் புண்ணிய நதிகள் தீர்த்தத்தால் இத்தல அம்மனுக்கு அபிஷேகம் செய்தும், சுமங்கலி பூஜை செய்தும் வழிபட்டால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் வெள்ளிக்கிழமை அல்லது கிருத்திகை நட்சத்திர நாட்களில் இந்தக்கோவிலில் தரிசனம் செய்தால் சிறந்த மணவாழ்க்கை அமையும். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெள்ளிக்கிழமை அதிக நன்மைகள் தரும் தினமாக அமைந்திருக்கின்றது.
இந்நாட்களில் கிருத்திகை நட்சத்திரத்தின் நல்ல மின் காந்த கதிர்வீச்சுகள் பூமியில் படரும் அது மிகவும் நல்லது. அத்தி மரம் கிருத்திகை நட்சத்திரத்திற்கு உரிய மரமாகும். இந்த மரத்தின் உடலில் பால் நிரம்பி இருக்கும். அந்தப் பால் கார்மேகங்களை தன் பக்கம் இழுக்கும் குணம் கொண்டது. இதன் குச்சிகளை எரித்தால் அதன் புகை மழை பொழியும் கருமேங்களை வரவழைக்கும் என்று வானவியல் மூலிகை சாஸ்திரம் கூறுகிறது.
கிருத்திகை நட்சத்திரத்தின் கெட்ட கதிர் வீச்சுகள் மனித உடலில் படும் போது பல வகையான உடல் மாற்றம், மன மாற்றம் நோய்கள் உண்டாகின்றன. இதற்கு கிருத்திகை நட்சத்திர தோஷம் என்பார்கள். இந்த தோஷத்தையும், நோய்களையும் நீக்க இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அத்தி மரத்தை 20 நிமிடம் கட்டிப்பிடிக்கலாம் அல்லது அதன் நிழலில் உட்காரலாம்.
கிருத்திகை தோஷம் உடையோர் ஞாயிற்றுக்கிழமைகளில் விரதம் இருந்து காலையிலே வீட்டில் இருந்தவாறு சிவப்புப் பூவும் நீரும் கைகளில் ஏந்தி சூரிய பகவானே எனது தோஷத்தைப் போக்கியருளும் என வேண்டி பூவையும் நீரையும் சூரியனைப் பார்த்தவாறு பூமரத்தடியில் போட்டு வணங்கவும். 108 தடவைகள் இதனை செய்யலாம்.
கோவிலில் சூரியனுக்கு அபிஷேகம் செய்யலாம். சர்க்கரைப் பொங்கல் நைவேதிக்கலாம். கோதுமைத் தானம் கொடுக்கலாம். சிவப்புப்பட்டு சிவப்புப் பூமாலை அணியலாம். சிவப்புப் பூவால் அர்ச்சித்து வழிபடலாம். தினமும் சூரிய கவசம் படிப்பது மிக்க பலனைத்தரும்.

கிருத்திகை அல்லது கார்த்திகை என்ற நட்சத்திரம் முருகப்பெருமானின் நட்சத்திரம் மாதம் தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம். சிறப்பானது. ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் மேலும் விசேஷமானது.

சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து வந்த தீப் பொறிகள். சரவணப் பொய்கையில் 6 குழந்தைகளாக மாற அந்த குழந்தைகளை சீராட்டி, பாராட்டி வளர்க்கும் பொறுப்பு 6 கார்த்திகை பெண்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சூரபத்மனை அழித்து தேவர்களையும் மக்களையும் காக்க அவதரித்த ஆறு முருகனை வளர்த்த கார்த்திகை பெண்களை போற்றும் வகையில் கிருத்திகை விரத திருநாளாக கொண்டாடப்படுகிறது.
உலகமெங்கும் உள்ள தமிழ் மக்கள்தங்கள் பிரார்த்தனைக்களையும், நேர்த்திக் கடன்களையும் செலுத்தும் முக்கிய நாளாக இந்த நாளை கொண்டாடுகிறார்கள். எல்லா முருகன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள். அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, வீதி உலா என விமரிசையாக நடக்கிறது.
அறுபடை வீடுகளில் திருத்தணியில் இவ்விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. முருகனின் பதினாறு வகையான திருவுருவங்களில் இங்கு ஞானசக்திதரர் என்னும் திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.
முருகப் பெருமான் செவ்வாயின் அம்சம். ஆகையால் செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் திருமணத்தடை, செவ்வாய் தோஷ தடை, கர்ம புத்திர தோஷம், மண், மனை சொத்து வழக்குகளில் பிரச்சினைகள், சகோதரர்களால் சங்கடங்கள் குருதிசை, செவ்வாய் திசையால் பாதிக்கப்பட்டவர்கள் ஆடிக் கிருத்திகை தினத்தில் கந்தனை வணங்க அனைத்து கவலைகள், பிரச்சனைகள், தொல்லைகள் தொந்தரவுகள் நீங்கி வாழ்வில் சகல சவுபாக்கியங்களும் சேரும்.
கிருத்திகையில் மட்டும் நட்சத்திரங்கள் தாராளமாக இருப்பதால் அந்த நட்சத்திரத்தில் தானம் செய்யும் எஜமானனும் அவன் வம்ச பரம்பரையினர்களும் அளவற்ற நன்மைகளை அடைகிறார்கள்.
கிருத்திகை நட்சத்திரமும் ஞாயிற்றுக் கிழமையும் இணைந்த நாளில் அக்னியை நினைத்து தவமிருந்தால் குண்டலினி சக்தி ஏறும். இது புலிப்பாணி, அகத்தியர் சொன்ன நல்லநாள். மனித உடலில் இருக்கும் ஏழு சக்கரங்களான மூலாதாரம், சுவாதிஸ்டானம், மணிபூரகம், அனாதகம், விசுத்தி, ஆக்ஞா, சகஸ்ராரா இவை பல அபூர்வ சக்திகளை எழுப்பி தர வல்லவை.
பல அற்புதங்களை செய்பவர்கள் உடலில் இந்த குறிப்பிட்ட சக்கரங்களில் ஒன்று வேலை செய்வதால் தான் சாதிக்க முடிகிறது. சாதாரண மனிதனுக்கு இவை உறங்கி கொண்டிருக்கும். இந்த சக்கரங்கள் சுழல ஆரம்பித்துவிட்டால் ஒருவனுக்கு எல்லா சித்துகளும் கைவரும் என்பார்கள்.
தெய்வயானை கிரியா சக்தியாகவும், வள்ளி இச்சா சக்தியாகவும், வேல் ஞான சக்தியாகவும், மயில் ஆணவம் என்றும், சேவல் சிவஞானம் என்றும் கூறுவார்கள்.
முருகன் திருப்பெயர்கள் எண்ணிலடங்காது. ஆறுமுகப்பெருமானின் அவதாரங்கள் ஒவ்வொன்றும் சிறப்புடையது. அத்தகைய சிறப்புடைய முருகனை ஆடிக்கிருத்திகையில் வழிபட்டால் எல்லா வளமும் கிடைக்கும்.
கார்த்திகை பெண்கள் 6 பேர் கந்தனைப் பாலூட்டி வளர்த்த காரணத்தால் அவர்கள் 6 பேரும் கந்தனுக்கு தாய் என்ற சிறப்பினைப் பெற்றனர். அப்போது சிவபெருமான் கார்த்திகை பெண்களே! நீங்கள் எம் குமாரனை பாலூட்டி வளர்த்த காரணத்தால் இன்று முதல் உங்கள் பெயரிலேயே முருகன் கார்த்திகேயன் என்ற பெயர் பெறுவான். அது மட்டுமல்ல உங்களின் நாளாகிய கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதமிருந்து முருகனை வழிபடுவோர் இன்னல்கள் அனைத்தும் நீங்கி வாழ்வில் சகல செல்வங்களும் பெற்று வாழ்வார்கள் என்று கூறி ஆசிர்வதித்தார்.
அவ்வாறே இன்றும் முருகபக்தர்கள் கார்த்திகை விரதம் இருந்து முருகனின் பேரருளைப் பெற்று வருகிறார்கள். ஆலயங்களில் நடைபெறும் அபிஷேக ஆராதனைகள், பூஜைகள் மற்றும் அர்ச்சனைகளிலும் பங்கு கொண்டு முருகன் அருள் பெறலாம். மாதாமாதம் வரும் கார்த்திகை மாதக்கார்த்திகை அல்லது கிருத்திகை விரதம் எனப்படும்.
கார்த்திகை மாதத்தில் வரும் பெரிய கார்த்திகை மற்றும் கார்த்திகை தீபவிழா எனப்படும். மற்ற நட்சத்திரங்கள் ஒன்று, இரண்டு, மூன்று அல்லது நான்கு நட்சத்திரங்களுடைய கூட்டமாகும்.
கிருத்திகையில் மட்டும் நட்சத்திரங்கள் தாராளமாக இருப்பதால் அந்த நட்சத்திரத்தில் தானம் செய்யும் எஜமானனும் அவன் வம்ச பரம்பரையினர்களும் அளவற்ற நன்மைகளை அடைகிறார்கள். அது போல ஆடி கிருத்திகைக்கும் மிகுந்த சிறப்பு உண்டு. ஆடி கிருத்திகை தினத்தன்று மயிலத்துக்கு சென்று முருகனை வழிபட்டால் வேண்டியது எல்லாம் கிடைக்கும்.

முருகனுக்கு உகந்த விரதங்களுள் ஆடிக்கிருத்திகை விரதம் மிகவும் முக்கியமானது. இந்த நாளில் பக்தர்கள் முருகனை விரதமிருந்து வணங்கி, தங்களின் விரதத்தை பூர்த்தி செய்வார்கள்.

வருடத்தில் மூன்று கார்த்திகை தினங்கள் அதிக முக்கியத்துவம் பெறும். அவை, உத்தராயன துவக்கமான தை மாதம் வரும் தை கிருத்திகை, கார்த்திகை மாதம் வரும் பெரிய கிருத்திகை மற்றும் தட்சிணாயன துவக்கமான ஆடி மாதத்தில் வரும் ஆடிக் கிருத்திகை.
இந்த மூன்றும் கார்த்திகேயக் கடவுளுக்கு உகந்த நாட்கள். ஆடிக்கிருத்திகையில் விரதம் இருந்து முருகனை வழிபடுவதால் வேண்டிய வரங்கள் கிடைக்கும்.
ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு விரதம் இருக்கும் முருக பக்தர்கள், அன்று புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, முருகனை வழிபடுவார்கள். குறிப்பாக பழநியில், பக்தர்கள் சண்முகா நதியில் நீராடி முருகனை வணங்கி, தங்களின் விரதத்தை பூர்த்தி செய்வார்கள்.
விரதம் இருப்பவர்கள் கடைப்பிடிக்கவேண்டிய பொதுவான விரதமுறைகளே இதற்கும் பொருந்தும் என்றாலும் கந்தனுக்குரிய விரதங்களில் உப்பு தவிர்க்கப்படுவதை முக்கியமாய்க் கருதுகின்றனர். உப்பில்லா உணவை எடுத்துக் கொண்டு கார்த்திகை விரதமோ, சஷ்டி விரதமோ இருத்தல் சிறப்பாகவும், உயர்வாகவும் கருதப்படுகிறது.
ஆடி மாதத்தில் இருந்து வரிசையாக அனைத்துக் கடவுளரையும் வேண்டிச் செய்யும் பண்டிகைகளும், விரதங்களும் வருகின்றன. தேவர்களின் மாலைக்காலம் என்று சொல்லப்படும் இந்த மாதத்தில் வழிபாடுகள் அதனாலேயே நடத்தப்படுகிறது.
தைமாதக் கார்த்திகையை விட ஆடிக் கார்த்திகையே சிறப்பாகவும் சொல்லப்படுகிறது. ஆடி மாதத்தில் இருந்து தொடங்கி ஆறுமாதங்கள் கார்த்திகை விரதம் இருந்து தை மாதக் கார்த்திகையில் விரதத்தை முடிக்கலாம்.
மனத் தூய்மைக்கும், மன ஒருமைக்கும் வழிசெய்யும் விரதங்களைக் கடைப்பிடிப்பது அனைவருக்கும் நன்மை பயக்கும்.
விரதம் இருப்பது எப்படி?
கார்த்திகை பெண்கள் கந்தனைப் பாலூட்டி வளர்த்த காரணத் தால் அவர்கள் 6 பேரும் கந்தனுக்கு தாய் என்ற சிறப்பினைப் பெற்றனர். அப்போது சிவபெருமான் கார்த்திகை பெண்களே நீங்கள் எம் குமாரனை பாலூட்டி வளர்த்த காரணத்தால் இன்று முதல் உங்கள் பெயரிலேயே முருகன் கார்த்திகேயன் என்ற பெயர் பெறுவான். அது மட்டுமல்ல உங்களின் நாளாகிய கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதமிருந்து முருகனை வழிபடுவோர் இன்னல்கள் அனைத்தும் நீங்கி வாழ்வில் சகல செல்வங்களும் பெற்று வாழ்வார்கள் என்று கூறி ஆசிர்வதித்தார். அவ்வாறே இன்றும் முருக பக்தர்கள் யாவரும் கார்த்திகை விரதம் இருந்து முருகனின் பேரருளைப் பெற்று வருகிறார்கள்.
கார்த்திகை மாதத்தில் வரும் பரணி நட்சத்திரத்தன்று நீராடி பகலில் உணவு உண்டு இரவில் ஏதும் உண்ணாதிருத்தல் வேண்டும். மறுநாள் கார்த்திகை அன்று அதிகாலையில் நதி நீராடிய திருநீறு பூசி முருகனை வழிபாடு புரிய வேண்டும்.
தண்ணீர் மட்டும் அருந்தி முருக மந்திரங்கள், முருகன் துதிகளை பாராயணம் செய்து ஜெபம், தியானம், கோவில் வழிபாடு இவைகளை செய்தல் வேண்டும். இரவில் நித்திரை செய்யாமல் விழித்திருந்து கந்த மந்திரங்களை கூறி மறுநாள் ரோகிணியன்று காலையில் மீண்டும் நீராடி நித்திய வழிபாடுகளை புரிந்து கந்தன் அடியார்களுக்கு அன்னதானம் செய்து அவர்களுடன் கூடி உணவு உண்ண வேண்டும்.
ஆலயங்களில் நடைபெறும் அபிஷேக ஆராதனைகள், பூஜைகள், அர்ச்சனைகளிலும் பங்கு கொண்டு முருகன் அருள் பெறலாம். மாதாமாதம் வரும் கார்த்திகை மாதக் கார்த்திகை அல்லது கிருத்திகை விரதம் எனப்படும்.
கார்த்திகை விரதத்தை விநாயகர் கூறியவாறு 12 ஆண்டுகள் அனுஷ்டித்த நாரதர் முருகனருளால் தேவரிஷியாக பதவி பெற்றார். வேறு சிலரும் இவ்விரதம் மேற்கொண்டு நற்கதி அடைந்தார்கள்.

விவசாயிகள் இன்று தாங்கள் தொடங்கும் விவசாயம் நல்ல பலனை தர வேண்டும் என ஆற்றில் குளித்து புத்தாடை அணிந்து விரதத்துடன் அம்மனுக்கு அபிஷேகம் செய்வர்.
தமிழ் மாதமாகிய ஆடி மாதத்தின் 18 ஆம் நாள் கொண்டாடப்படும் தமிழர்களின் பண்டிகையே ‘ஆடி 18’. இதனை ஆடி பெருக்கு எனவும் கூறுவர். பஞ்ச பூதங்களில் நீர் வளத்தை எப்போதும் மனித இனத்துக்கு பஞ்சம் இல்லாமல் தர வேண்டும் என இயற்கையை வழிபடுவதே இப்பண்டிகையின் நோக்கம்.
இயற்கை அன்னையை அம்மனாக பாவித்து இம்மாதம் முழுவதும் அம்மன் கோவில்களில் விழா எடுப்பர். ஆடி மாதத்தில் ஆறு, குளம், ஏரி அனைத்திலும் நீர் வளம் பெருகி இருக்கும். எனவே இம்மாதத்தில் விவசாயத்தை தொடங்குவர். இதனால் தான் ‘ஆடி பட்டம் தேடி விதை’ எனும் பழமொழியும் உண்டானது. விதை போடுவதும், நாற்று நடுவதும் இம்மாதத்தில் நடக்கும்.
தமிழகத்தின் அனைத்து நீர் வளங்களுக்கும் நன்றி சொல்லி குதுகலமாய் விவசாயத்தை தொடங்கும் இயற்கையோடு இணைந்த தமிழ் சமுகத்தின் இணையற்ற விழா எனலாம். பார்வதி (அம்மன்) தேவிக்கு அரிசியினால் பல வகையான பண்டங்களை தயாரித்து படைத்து பாட்டிசைத்து வணங்குவர்.
நீர் வளத்தை கொடுக்கும். ஆறுகளை அட்சசையும் மலர்களையும் தூவி வணங்குவர். பெரும்பாலும் இப்பண்டிகை ஆற்றங்கறைகளை ஒட்டி வாழும் மக்களே வெகு விமர்சையாக கொண்டாடுகின்றனர். அதிலும் காவிரி நதி கறை மக்கள் குறிப்பிடத்தக்கவர்கள். தாங்கள் தொடங்கும் விவசாயம் நல்ல பலனை தர வேண்டும் என ஆற்றில் குளித்து புத்தாடை அணிந்து விரதத்துடன் அம்மனுக்கு அபிஷேகம் செய்வர்.
மாவுவிளக்கு செய்து அதில் மஞ்சள் குங்குமம் வைத்து, மஞ்சள் திரியுடன் விளக்கை ஏற்றி மாவிலையில் வைத்து ஆற்றில் பெண்கள் விடுவர். நூற்றுக்கணக்கான பெண்கள் ஒரே சேர இவ்வாறு செய்யும் போது ஆற்றில் மிதந்து செல்லும் மாவிவிளக்குகள் காண்பவர்களின் நெஞ்சை மகிழ்விக்கும்.