search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தர்ப்பணம்"

    • ஜூலை 17-ந்தேதி (ஆடி-1) அமாவாசை வருகிறது.
    • ஆகஸ்டு 16-ந்தேதி (ஆடி-31) மற்றொரு அமாவாசை வருகிறது.

    அமாவாசை தினத்தன்று தங்களது மூதாதையர்களுக்கு திதி வழங்கி வழிபடுவது வழக்கம். அதில் ஆடி அமாவாசையும், தை அமாவாசையும் மிகவும் பிரசித்தி பெற்றது. முன்னோர்களுக்கு தர்ப்பணம் தரக்கூடிய அமாவாசை திதி ஒரு மாதத்தில் இரண்டு முறை வந்தால் எதை கடைபிடிக்க வேண்டும் என்ற குழப்பம் வரும். இதனால் எந்த அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு திதி வழங்கலாம் என்பது குறித்து பொதுமக்களிடம் ஒரு குழப்பமான சூழ்நிலை நிலவி வந்தது. எந்த அமாவாசையை ஆடி அமாவாசையாக கடை பிடிக்கலாம் என்று பார்க்கலாம்.

    இந்த ஆண்டு ஆடி மாதத்தில் 2 அமாவாசை வருகிறது. ஜூலை 17-ந்தேதி (ஆடி-1) அமாவாசையும், ஆகஸ்டு 16-ந்தேதி (ஆடி-31) ஒரு அமாவாசையும் என 2 அமாவாசை வருகிறது.

    தட்சிணாயன புண்ணிய காலத்தில் வரும் முதல் அமாவாசையன்று முன்னோர்க்கு பித்ரு கடன் கொடுத்தால் அது அவர்களை நேரடியாக சென்றடையும் என்பதும் நம்பிக்கை.

    ஒரே மாதத்தில் 2 அமாவாசை திதி வருகின்ற மாதத்தை 'மலமாதம்' என ஜோதிட சாஸ்திரம் கூறுகின்றது. இத்தகைய மல மாதத்தில் புதுமனை புகுவிழா, நிச்சயதார்த்தம், திருமணம், நிலைவாசல் படி ஸ்தாபித்தல், புது கிணறு வெட்டுதல் போன்ற எத்தகைய சுப காரியங்களையும் செய்ய மாட்டார்கள்.

    பொதுவாகவே.... ஆடி மாதம் என்பதால் திருமணம், கிரகப்பிரவேசம் செய்ய மாட்டார்கள். எனவே இந்த மாதத்தில் சுப காரியம் செய்ய முடியாமல் போகுமே என்ற கவலைப்பட தேவையில்லை.

    தட்சிணாயன புண்ணிய காலத்தில் வரும் முதல் அமாவாசையன்று முன்னோர்க்கு பித்ரு கடன் கொடுத்தால் அது அவர்களை நேரடியாக சென்றடையும் என்பதும் நம்பிக்கை.

    இந்த ஆண்டு ஆடி மாதத்தில் 2 அமாவாசை வருகிறது. அதில் ஆகஸ்டு 16-ந்தேதி (ஆடி-31) வரும் அமாவாசையே ஆடி மாதத்திற்கு உரியதாகும். அந்த நாளிலேயே முன்னோர்களுக்கு திதி வழங்குவது நல்லது. பொதுமக்கள், பக்தர்கள், விரதம் இருப்பது, முன்னோர்களுக்கு திதி, தர்பணம் மற்றும் இராமேஸ்வரம், ஸ்ரீரங்கம், தேவிபட்டிணம், புண்ணிய தலங்களில் புனித நீராடல் செய்ய ஆடி- 31( 16.08.2023 )புதன்கிழமையில் வரும் அமாவாசையே உகந்தது.

    ஆடி 1-ம் தேதி வரும் அமாவாசை கடக ராசி புனர்பூச நட்சத்திரத்திலும் ஆடி 31-ம் தேதி ஆயில்யம் நட்சத்திரத்திலும் வருகிறது.

    ஆடி முதல் மார்கழி முடிய உள்ள காலத்தில் நம்முடைய முன்னோர்களான பித்ருக்கள் நம்மைப் பார்ப்பதற்காக இந்த உலகத்துக்கு வருகின்றனர்.

    அவர்கள் பித்ரு லோகத்தில் இருந்து புறப்படும் நாள் ஆடி அமாவாசை. எனவே, அவர்களை நாம் நினைவில் வைத்திருக்கிறோம் என்பதைத் தெரிவிப்பது போலவும், அவர்களை பூமிக்கு வரும்படி அழைப்பு விடுப்பதுபோலவும் ஆடி அமாவாசையன்று அவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவேண்டும் என்கிறது சாஸ்திரம்.

    புரட்டாசி மகாளாய அமாவாசை அன்றைய தினமும் நாம் அவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவேண்டும்.

    பித்ருலோகத்தில் இருந்து வந்த நம் முன்னோர்கள் திரும்பவும் பித்ருலோகத்துக்குச் செல்லும் நாள் தை அமாவாசை. நம்முடன் வந்து ஆறு மாத காலம் தங்கியிருந்த முன்னோர்களை வழியனுப்பும் விதமாக தர்ப்பணம் கொடுக்கவேண்டும்.

    ஆடி அமாவாசை நாளில் தன்னுடைய சொந்த வீடான கடக ராசியில் தாய் காரகன் சந்திரன் தந்தை காரகன் சூரியனுடன் இணைந்திருக்கிறார்.

    சூரியனும் சந்திரனும் சேர்ந்திருக்கும் நாளே அமாவாசை என்பது எல்லோருக்கும் தெரியும்.

    சந்திரன் தேய்பிறை நிலையில் இருந்து விடுபட்டு வளர்பிறை நிலைக்கு செல்லும் நாள்.

    முன்னோர்களுக்கு நாம் செய்யக் கூடியதான இந்த தர்ப்பண காரியங்களை நாம் சிரத்தையாகச் செய்தால், நமக்கு அனைத்து வளங்களும் கிடைக்கும்.

    மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். அமாவாசை தினத்தில் நம்முடைய வீட்டினை சுத்தம் செய்து வீடுகளில் விளக்கேற்றி நம்மை காண வரும் முன்னோர்களுக்கு எள்ளும் தண்ணீரும் கொடுத்து வரவேற்பதன் மூலம் அவர்கள் மனம் மகிழ்ந்து ஆசி வழங்குவார்கள்

    அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு தானம் தர வேண்டும். எள் என்பதை வடமொழியில் திலம் என்று கூறுவார்கள். திலம் என்று சொல்லப்படும் எள்ளை தானமாகக் கொடுத்தாலே சகல பாவங்களும் நீங்கிவிடும் என்பது நம்பிக்கை.

    அமாவாசை நாளில் ஆடை தானம் செய்வதால் வாழ்வில் வேண்டிய பலன் உண்டாகும். புதிய ஆடைகளை தானம் செய்வதால் ஆயுள்விருத்தி, குழந்தைகள் சிறு வயதில் இறந்துவிடுவது தடுக்கப்படும்.

    கண்டாதி தோஷம் விலகும். உங்கள் பணியில் வரும் தடைகள் அனைத்தும் நீங்கும். இதில் பசு தானம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

    பித்ருசாப தோஷங்கள் விலகும். எந்த ஒரு சுப திதியிலும் பசுவை தானம் செய்வதால் பித்ருக்களின் ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும். ஈரேழு ஜென்மத்தில் செய்த பாவங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.

    நோய் தொல்லையால் அவதிப்படுபவர்கள் அமாவாசை நாளில் வெண்கலக் கிண்ணத்தில் சுத்தமான நெய் தானம் செய்ய வேண்டும். அப்படி செய்தால் சகல விதநோய்களும் நீங்கும் என்பது ஐதீகம்.

    முன்னோர்களுக்கு படையலிட்டு வழிபட்ட பின்னர் ஏழைகளுக்கும் இயலாதவர்களுக்கும் அன்னதானம் கொடுப்பது சிறப்பு.

    அமாவாசை நாளில் உணவின்றி தவிப்பவர்கள், ஏழைகள், பசியோடு இருப்பவர்களைத் தேடிச்சென்று தானம் கொடுங்கள்.

    நம்முடைய வழிபாடும், தானமும் உள்ளன்போடு இருந்தால் முன்னோர்களின் ஆசி பரிபூரணமாகக் கிடைக்கும்.

    ஈரோடு மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி சேலம், நாமக்கல், கோவை, திருப்பூர், கரூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே கோவிலுக்கு வந்திருந்தனர்.
    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பண்ணாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

    மேலும் பவுர்ணமி, அமாவாசை மற்றும் விசேஷ நாட்களில் ஆயிரக்கணகான பக்தர்கள் கோவிலில் குவிந்து அம்மனை வழிபடு வார்கள்.

    இந்த நிலையில் இன்று வைகாசி அமாவாசையை யொட்டி அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் பண்ணாரியம்மன் கோவிலுக்கு வந்தனர். முன்னதாக இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு பால், தயிர், இளநீர் மற்றும் வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து பண்ணாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    இதையொட்டி ஈரோடு மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி சேலம், நாமக்கல், கோவை, திருப்பூர், கரூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே கோவிலுக்கு வந்திருந்தனர்.

    மேலும் மைசூர், சாம்ராஜ் நகர் உள்பட கர்நாடகா மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் சிலர் நேற்று இரவே கோவிலுக்கு குடும்பத்துடன் வந்து தங்கி இன்று அதிகாலை அம்மனை தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து பக்தர்கள் கோவில் முன்பு உள்ள குண்டம் இறங்கும் இடத்தில் மஞ்சள், மிளகு, உப்பு போட்டு வணங்கினர்.

    இதனால் பண்ணாரி யம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு கோவில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

    இதே போல் பவானி கூடுதுறைக்கு அமாவா சையை யொட்டி இன்று காலை முதலே ஏராளமான பேர் வந்திருந்தனர்.

    சேலம், கோவை, திருப்பூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் கூடுதுறையில் நீராடினர். தொடர்ந்து அவர்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் திதி கொடுத்தனர்.

    மேலும் பொதுமக்கள் பலர் தங்கள் குடும்பத்துடன் வந்து புனித நீராடி சங்க மேஸ்வரரை வழிபட்டனர். இதனால் கூடுதுறையில் பக்தர்களின் கூட்டம் அலை மோதியது.

    வைகாசி அமாவாசையை யொட்டி கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலுக்கு நேற்று இரவு முதலே ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இதையொட்டி இன்று காலை கொடுமுடி காவிரி ஆற்றில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். தொடர்ந்து பக்தர்கள் மகுடேஸ்வரர் மற்றும் வீரநாராயண பெருமாளை வழிபட்டனர்.
    அமாவாசையில் நம்முன்னோர்களை நினைத்து செய்யும் தான தர்மங்கள் அவர்களை சந்தோஷப்படுத்துவதுடன் செல்வம், புகழ், நீண்ட ஆயுளைத் தரும்.
    மகாளய அமாவாசையில் பால், தயிர், நெய், தேன், பழங்களை நிவேதனமாக வைக்கலாம். பலகாரம், சாதவகைகளையும் படையல் செய்யலாம். வசதி குறைந்துள்ளவர்கள் மூதாதயரை மனதில் நினைத்து அகத்திக் கீரையை பசு மாட்டிற்கு உணவாகத் தந்தாலே போதும்.

    முதியவர்கள் இருவருக்காவது உணவும், ஆதரவற்றவர்களுக்கு துணிமணியும் வயிறார உணவளியுங்கள். அமாவாசையில் குல மூதாதையர்களை நினைத்து செய்யும் தான தர்மங்கள் அவர்களை சந்தோஷப் படுத்துவதுடன் நோய் நொடிகள் அகலும், நீண்ட ஆயுளும், நிறைந்த செல்வமும், மங்காத புகழும் அமையும்.

    இப்பூஜையால் தீராத கடன் ஒழியும். தீர்க்க முடியாத வியாதிகள் குறையும். யார் விட்ட சாபமோ என அஞ்சிய வாழ்க்கை அகலும் என்று முன்னோர்கள் தெரிவித்துள்ளனர். நாமும் நம்முன்னோர்களுக்கு மகாளய அமாவசை தினத்தன்று பூஜை செய்து அவர்களின் ஆசி பெறுவோம்.

    வசதி இல்லாதவர்கள் நம் முன்னோர்களை மனதில் நினைத்து பசு மாட்டிற்கு அகத்திக் கீரையை உணவாகத் தந்தாலே போதும். அமாவாசையில் அவர்களை நினைத்து செய்யும் தான தர்மங்கள் அவர்களை சந்தோஷப் படுத்துவதுடன் செல்வம், புகழ், நீண்ட ஆயுளைத் தரும்.
    ராமநாதசுவாமி கோவிலில் இயற்கையாக அமைந்துள்ள 22 புனித தீர்த்தங்களிலும் பக்தர்கள் கூட்டம் அலை மோதியதால் பல மணி நேரம் காத்திருந்து புனித நீராடினர்
    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலுக்கு வைகாசி அமாவாசையை முன்னிட்டும், பள்ளி விடுமுறையையொட்டியும் இன்று காலை மட்டும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். தொடர்ந்து பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

    அமாவாசை தினம் என்பதால் ஏராளமான பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். மேலும் பல்வேறு தோஷங்களுக்கு பரிகார பூஜைகளும் செய்வதில் பக்தர்கள் ஆர்வம் காட்டினர். மேலும் குடும்பத்துடன் வருகை தந்த சுற்றுலா பயணிகளும் கடலில் நீராடி மகிழ்ந்தனர்.

    ராமநாதசுவாமி கோவிலில் இயற்கையாக அமைந்துள்ள 22 புனித தீர்த்தங்களிலும் பக்தர்கள் கூட்டம் அலை மோதியதால் பல மணி நேரம் காத்திருந்து புனித நீராடினர். அதன்பின்னர் ராமநாத சுவாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்மன் சன்னதி உள்பட கோவிலில் அமைந்துள்ள முக்கிய சாமி சன்னதிகளில் நடைபெற்ற சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் உள்ளிட்ட வழிபாடுகளில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ராமேசுவரம் கோவிலில் திருவிழா கூட்டம் போல் பக்தர்கள் அலைமோதியதால் சாமி தரிசனம் செய்ய நீண்ட நேரமானது. ராமேசுவரம் நகர் முழுவதும் வாகனங்கள் அதிகமாக வந்ததால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

    மேலும் அமாவாசை நாளையொட்டி கோவில் நிர்வாகம் பக்தர்களுக்கு குடிநீர் வசதிகள், மருத்துவ வசதிகள் உள்பட அனைத்து அடிப்படை வசதிகளை செய்திருந்தது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதையும் படிக்கலாம்....இன்று வைகாசி மாத அமாவாசை... விரதம் இருந்தால் தீரும் பிரச்சனைகள்...
    ×