search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    பவானி கூடுதுறையில் புனித நீராடிய பொதுமக்கள்
    X
    பவானி கூடுதுறையில் புனித நீராடிய பொதுமக்கள்

    வைகாசி அமாவாசையையொட்டி பவானி கூடுதுறையில் புனித நீராடிய பொதுமக்கள்

    ஈரோடு மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி சேலம், நாமக்கல், கோவை, திருப்பூர், கரூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே கோவிலுக்கு வந்திருந்தனர்.
    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பண்ணாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

    மேலும் பவுர்ணமி, அமாவாசை மற்றும் விசேஷ நாட்களில் ஆயிரக்கணகான பக்தர்கள் கோவிலில் குவிந்து அம்மனை வழிபடு வார்கள்.

    இந்த நிலையில் இன்று வைகாசி அமாவாசையை யொட்டி அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் பண்ணாரியம்மன் கோவிலுக்கு வந்தனர். முன்னதாக இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு பால், தயிர், இளநீர் மற்றும் வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து பண்ணாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    இதையொட்டி ஈரோடு மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி சேலம், நாமக்கல், கோவை, திருப்பூர், கரூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே கோவிலுக்கு வந்திருந்தனர்.

    மேலும் மைசூர், சாம்ராஜ் நகர் உள்பட கர்நாடகா மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் சிலர் நேற்று இரவே கோவிலுக்கு குடும்பத்துடன் வந்து தங்கி இன்று அதிகாலை அம்மனை தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து பக்தர்கள் கோவில் முன்பு உள்ள குண்டம் இறங்கும் இடத்தில் மஞ்சள், மிளகு, உப்பு போட்டு வணங்கினர்.

    இதனால் பண்ணாரி யம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு கோவில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

    இதே போல் பவானி கூடுதுறைக்கு அமாவா சையை யொட்டி இன்று காலை முதலே ஏராளமான பேர் வந்திருந்தனர்.

    சேலம், கோவை, திருப்பூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் கூடுதுறையில் நீராடினர். தொடர்ந்து அவர்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் திதி கொடுத்தனர்.

    மேலும் பொதுமக்கள் பலர் தங்கள் குடும்பத்துடன் வந்து புனித நீராடி சங்க மேஸ்வரரை வழிபட்டனர். இதனால் கூடுதுறையில் பக்தர்களின் கூட்டம் அலை மோதியது.

    வைகாசி அமாவாசையை யொட்டி கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலுக்கு நேற்று இரவு முதலே ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இதையொட்டி இன்று காலை கொடுமுடி காவிரி ஆற்றில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். தொடர்ந்து பக்தர்கள் மகுடேஸ்வரர் மற்றும் வீரநாராயண பெருமாளை வழிபட்டனர்.
    Next Story
    ×