என் மலர்
ஆன்மிகம்
- இதன் காரணமாக தாமிரபரணி நதிக்கரை சிவாலயங்களை பற்றிய தெளிவு நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வாழும் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.
- அந்த வகையில் திருப்புடைமருதூர் புராணமும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பே தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை மூலம் வெளியில் வந்தது.
தாமிரபரணி நதியின் இரு புறங்களிலும் 274 சிவாலயங்களை மகான்களும், சித்தர்களும், மன்னர்களும் உருவாக்கினார்கள்.
இந்த 274 சிவாலயங்களும் ஒவ்வொரு தல புராணத்தையும், சிறப்பையும் தன்னகத்தே கொண்டவை.
இந்த 274 சிவாலயங்களின் தனித்துவமான சிறப்புகளையும், பெருமைகளையும் பல்வேறு புராணங்களில் நம் முன்னோர்கள் பதிவு செய்துள்ளனர்.
அத்தகைய புராணங்களில், தாமிரபரணி மகாத்மியம், நவசமுத்திர மகாத்மியம், சிவசைல மகாத்மியம், திருப்புடை மருதூர் மகாத்மியம், திருக்குற்றால தல புராணம், தென்காசி தலபுராணம், கருவை தல புராணம், திருச்செந்தூர் புராணம் போன்றவை முக்கியமானவை.
இந்த புராணங்கள் மூலம் தாமிரபரணி நதிக்கரை சிவாலயங்களை நாம் துல்லியமாக அறிந்து, புரிந்து கொள்ள முடியும். துரதிர்ஷ்டவசமாக கடந்த பல நூற்றாண்டுகளாக இந்த புராணங்களை தமிழர்கள் குறிப்பாக தென்பாண்டி மக்கள் சுத்தமாக மறந்து அல்லது தெரியாமலேயே போய்விட்டனர்.
சமீப காலமாக இந்த புராணங்கள் குறித்து மக்கள் மத்தியில் சற்று ஆர்வம் வந்துள்ளது.
இதன் காரணமாக தாமிரபரணி நதிக்கரை சிவாலயங்களை பற்றிய தெளிவு நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வாழும் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில் திருப்புடைமருதூர் புராணமும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பே தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை மூலம் வெளியில் வந்தது.
உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், திருப்புடைமருதூர் புராணத்தை மீண்டும் அச்சிட்டு வெளியிட்டது.
திருப்புடைமருதூர் புராணம் அருமையான தமிழ் இலக்கியமாகும். திருமால், பிரம்மன், இந்திரன் மற்றும் பலர் திருப்படைமருதூர் வந்து வரம் பெற்ற தகவல்கள் இந்த புராணத்தில் இடம் பெற்றுள்ளன.
ராமனே சீதையைப் பிரிந்தபோது, இந்த தலத்துக்கு வந்து வழிபட்டான் என்றும், ராமனிடம் நாறூம்பூநாதர், 'நீ உன் தேவியைப் பெறுவாய்...' என்று வரம் வழங்கி ஆசிர்வதித்தார் என்றும் இந்த புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ராமாயணக் கதையின் பெரும்பகுதி திருப்புடைமருதூர் புராணத்தின் வீரமார்த்தாண்டப் படலத்தில் உள்ளது.
இந்த புராணம் கடவுள் வாழ்த்து, பாயிரம், அவையடக்கம், கயிலைச் சிறப்பு, நாட்டுப்படலம், நகரப் படலம், தல விசேடம், தீர்த்த விசேடம், மூர்த்தி விசேடம், நடம்புரி படலம், விருத்திர வதைப்படலம், இந்திரன் பழிதீர்த்த படலம், சீதரப்படலம், ஆதி மனுப்படலம், ஆலயம் காண்படலம், சதுமுகப் படலம், பதியத்தி தீர்ந்த படலம், அவிர்த்தானப் படலம், வால சதானந்தப் படலம், புறமதம் தீர்த்த படலம், அலதந்தப் படலம், கருவூர்ச் சித்தப்படலம், அகத்தியப் படலம், தாரக உபதேசப் படலம், வீரமார்த்தாண்டப் படலம், தாம்பிர வன்னிப் படலம், ஆத்தி வனப் படலம், புட்வ வனப் படலம், அரிகைப் படலம், மூன்றீசுவரப் படலம் என்று பிரிக்கப்பட்டுள்ளது.
- எண்ணற்ற சித்தர்கள் வாழும் பூமியாகவும் திருவண்ணாமலை திகழ்கிறது.
- பிரம்மா, விஷ்ணு ஆகியோரின் ஆணவம் அழிந்த தலம்.
காசியில் இறந்தால் முக்தி, திருவாரூரில் பிறந்தால் முக்தி. சிதம்பரத்தை தரிசித்தால் முக்தி. ஆனால் திருவண்ணாமலையில் அருள்பாலிக்கும் அண்ணாமலையாரை நினைத்தாலே முக்தி கிடைக்கும் என்பது சொல் வழக்கு.
பஞ்சபூதத்தில் இது அக்னி தலம். சிவனே மலையாக அமைந்திருக்கும் சிறப்பு மிக்கதலமாக இதுபோற்றப்படுகிறது. அர்த்த நாரீஸ்வரர் கோலத்தில் இறைவன் காட்சி தந்த தலம், கார்த்திகை தீப வழிபாடு உருவாக காரணமான மூல தலம்.

பிரம்மா, விஷ்ணு ஆகியோரின் ஆணவம் அழிந்த தலம் என்று பல்வேறு சிறப்புகளைக் கொண்டிருக்கிறது. திருவண்ணாமலை.
அதேநேரம் எண்ணற்ற சித்தர்கள் வாழும் பூமியாகவும் திருவண்ணாமலை திகழ்கிறது. எத்தனையோ சிவ தலங்கள் இருப்பினும் சித்தர்கள் பலரும் தவம் செய்யவும், ஜீவசமாதி அடையவும் திருவண்ணாமலையையே தேர்வு செய்திருக்கிறார்கள்.
திருவண்ணாமலை ஆன்மிக பூமியாக மட்டுமின்றி, சித்தர்கள் அருவமாக வாழும் பூமியாகவும் இருக்கிறது. திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும் மலையானது, எப்போது தோன்றியது என்ற துல்லியமான கணிப்பு இதுவரை இல்லை.
பிரபஞ்சம் தோன்றியதில் இருந்தே இந்த மலை இருப்பதாகவும், இந்த மலை ஒவ்வொரு யுகத்திலும், ஒவ்வொரு விதமாக காட்சி தருவதாகவும் சொல்லப்படுகிறது.
கிருதாயுகத்தில் அக்னி மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் தாமிர மலையாகாவும் இருந்த இந்த சிவன் மலை, தற்போதைய கலியுகத்தில் கல் மலையாக நம் கண்களுக்கு காட்சி தருகிறது.

'அண்ணுதல்' என்றால் 'நெருங்குதல்' என்று பொருள். 'அண்ணாமலை' என்பதற்கு நெருங்கவே முடியாத' என்ற பொருளை தருகிறது. பிரம்மாவாலும், விஷ்ணுவாலும் சிவனின் அடியையும். முடியையும் நெருங்கவே முடியாததால் 'அண்ணாமலை' என்ற பெயர் பெற்றது.
'அருணம்' என்றால் சிவப்பு நிறத்தில் இருக்கும் நெருப்பு, 'சலம்' என்றால் மலையைக் குறிக்கும். சிவபெருமான் சிவப்பு நிறத்தில் - எரியும் நெருப்பு மலையாக இருப்பதால் சிவபெருமானுக்கு அருணாச்சலேஸ்வரர்' என்ற பெயர் வந்தது.
- இன்று சர்வ ஏகாதசி.
- திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு கார்த்திகை-26 (புதன்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: ஏகாதசி இரவு 10.54 மணி வரை பிறகு துவாதசி
நட்சத்திரம்: ரேவதி காலை 9.57 மணி வரை பிறகு அசுவினி
யோகம்: மரணயோகம்
ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்று சர்வ ஏகாதசி. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசல நாயகர் காலை வெள்ளி விமானத்திலும் குதிரை விமானத்திலும் பவனி. சுவாமிமலை முருகப் பெருமான் காமதேனு வாகனத்தில் புறப்பாடு. திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி திருப்புளிங்குடி மூலவர் ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை கோவில் அபிஷேகம். ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர் கோவில்களில் பெருமாள் புறப்பாடு. விருதுநகர், வேதாரண்யம் ஸ்ரீ சிவபெருமானுக்கு காலையில் அபிஷேகம். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்ட ராம சுவாமிக்கு திருமஞ்சனம். பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-ஊக்கம்
ரிஷபம்-அமைதி
மிதுனம்-ஓய்வு
கடகம்-பக்தி
சிம்மம்-தனம்
கன்னி-மேன்மை
துலாம்- சிறப்பு
விருச்சிகம்-திறமை
தனுசு- நற்செயல்
மகரம்-பணிவு
கும்பம்-ஆர்வம்
மீனம்-சாதனை
- தஞ்சைத் தரணியில் திருவிடை மருதூரில் காவேரிக் கரையில் அமைந்துள்ளது இத்திருத்தலம்.
- இங்கும் மருத மரமே தல விருட்சம். இங்கு இறைவன் மகாலிங்கேசுவரர். அம்பாள் ப்ருஹத் சுந்தர குஜாம்பிகை.
அடுத்ததாக, மைசூரில் உற்பத்தியாகி தமிழகத்தில் கடலோடு கலக்கும் புண்ணிய நதி காவிரி.
தஞ்சைத் தரணியில் திருவிடை மருதூரில் காவேரிக் கரையில் அமைந்துள்ளது இத்திருத்தலம்.
இங்கும் மருத மரமே தல விருட்சம். இங்கு இறைவன் மகாலிங்கேசுவரர்.
அம்பாள் ப்ருஹத் சுந்தர குஜாம்பிகை.
செம்மொழித் தமிழையும், சைவ மொழியையும் இம் மண்ணில் வாழ்வாங்கு வாழச் செய்த ஞான சம்பந்தர், சுந்தரமூர்த்தி நாயனார், நாவுக்கரசர் ஆகிய மூவராலும் தேவாரப் பதிகங்கள் பாடப்பட்ட திருத்தலம்.
தைப்பூசத் திருவிழா, வைகாசி பிரம்மோற்சவ உற்சவம், திருவாதிரை, ஆடிப்பூரம், கார்த்திகை மகா தீபம், சோமவார வழிபாடு போன்ற உற்சவங்கள் இத்தலத்தில் வெகு பிரசித்தம்.
ஜோதி மகாலிங்கர் சாந்நித்தியமிக்க தெய்வமாய் எழுந்தருளியிருக்கும் இத்திருத்தலம் வடபுலத்திற்கும், தென் புலத்திற்கும் நடுப்பகுதியில் அமைந்திருக்கிற காரணத்தால், இடைத்தலமாக கருதப்பட்டு மத்தியார்ச்சுனம் என்று வணங்கப்பட்டு வருகிறது.
சோழ மன்னர்களால் கட்டப்பட்ட எழில் நிறைந்த கலைக் கோவிலாக விளங்குகிறது.
இனி, கடைத் தலமான புடார்ச்சனத்தைக் காணலாம்.
- இத்தலம் தென் புலத்தில் மருதவனத்தில் அமைந்த காரணத்தால், கடைத்தலம் என்ற பொருள்பட, வடமொழியில் புடார்ச்சுனம் என அழைக்கப்படலாயிற்று.
- இறைவனும் புடார்ச்சுனேசுவரர் என்ற நாமத்தால் வணங்கப்பட்டு வருகிறார்.
தாமிரபரணி பாய்ந்தோடி செழிப்பைத் தந்திருக்கும் மருத மரக் காட்டுப்பகுதிக்கு ஒரு சமயம் கொடிய வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக, தன் படை பரிவாரங்களோடு மன்னன் ஒருவன் வந்திருந்தான்.
நீண்ட நேரம் அங்குமிங்கும் அலைந்து திரிந்தும், அவர்களது கண்ணில் எந்த ஒரு கொடிய விலங்கோ, வேறு பிராணிகளோ தென்படவில்லை.
இதனால் மன்னனுக்கு மனச் சோர்வும், ஏமாற்றமும் ஏற்பட்டது.
எல்லோரும் களைப்பாக சற்றே மருதமரச் சோலையில் ஓய்வெடுத் திருந்த சமயத்தில் தான் அந்த அதிசயம், மின்னல் போல் தென் பட்டு ஓடி மறைந்தது.
அதாவது, அழகிய புள்ளிமான் ஒன்று மின்னலாய் எங்கிருந்தோ பாய்ந்து வந்து அவர்களின் கண்முன்னே துள்ளிக் குதித்து ஓடி ஒளிந்தது.
இதனைக் கண்ட மாத்திரத்தில் மன்னனுக்கும், படை பரிவாரங்களுக்கும் ஒரே ஆனந்தப் பரவசம்.
துள்ளி எழுந்து, புயல் வேகத்தில் அதனைப் பின் தொடர ஆரம்பித்தனர்.
சிறிது நேரத்திற்கெல்லாம் அந்த மானின் இருப்பிடத்தை கண்டு பிடித்தனர்.
அதனை பிடித்து விட எண்ணிய மன்னன், தனது வில்லில் இருந்து கூரான அம்பை குறிபார்த்து எய்தான்.
அவன் வைத்த குறி எப்போதும் தப்புவதில்லை.
இப்போதும் அதே பாணியில் 'விர்'ரெனப் பாய்ந்த அம்பு, மானின் மேல் சென்று தைத்தது.
அடுத்த கணம் நடந்ததுதான் யாருமே நம்ப முடியாதது மட்டுமல்ல, எதிர்பாராத ஒன்றாகவும் அமைந்து விட்டது.
அது இறைவனின் திருவிளையாடல் அன்றோ! அம்பால் தைக்கப்பட்ட மான் முன்னிலும் விரைவாக ஓடத் துவங்கியது.
காவலாட்களும் விடாப்பிடியாய் பின்னால் துரத்திச் சென்றனர்.
ஒரு கட்டத்தில், ஓட்டமாய் ஓடிச் சென்ற மான் மிகப்பெரிய மருத மரத்தின் அருகே சென்று மாயமாய் மறைந்தும் போனது.
இதனால் தாங்க முடியாத ஆத்திரம் ஏற்பட்டது மன்னனுக்கு.
அருகே கிடந்த கோடாரி ஒன்றை வேகமாக எடுத்தான். மருத மரத்தை பலங்கொண்ட மட்டும் ஓங்கி வெட்டத் துவங்கினான்.
அந்த வேளையில்தான் யாரும் எதிர்பாராத விதமாக அந்த அதிசயக்காட்சி அரங்கேறியது.
ஆம்! மான் ஓடி ஒளிந்த மருத மரத்திலிருந்து குருதி வெளிப்பட ஜோதிப்பிழம்பாய் சுயம்பு மூர்த்தியாய் இறைவன் வெளிப்பட்டான்.
அங்கே ஆயிரம் சூரியனின் ஜோதிப் பிரகாசம்.
இந்த அதிசயக் காட்சியைக் கண்ட மன்னவன், பொங்கிப் பெருகிய கண்ணீர் வெள்ளத்தில் இறைவனை மானசீகமாக வணங்கி நின்றான்.
இறைவன் தன்னை ஆட்கொண்டு, அந்த மருதவனத் தலத்தில் வெளிப்பட்ட காரணத்தால், பரம்பொருளுக்கு அவ்விடத்தில் ஒரு திருக்கோவில் எழுப்பிட உளங்கொண்டான்.
அதனால், அவ்விடத்தில் மகேசனுக்கு அதி அற்புத கலைக்கோவில் ஒன்று உருவானது.
இத்தலம் தென் புலத்தில் மருதவனத்தில் அமைந்த காரணத்தால், கடைத்தலம் என்ற பொருள்பட, வடமொழியில் புடார்ச்சுனம் என அழைக்கப்படலாயிற்று.
இறைவனும் புடார்ச்சுனேசுவரர் என்ற நாமத்தால் வணங்கப்பட்டு வருகிறார்.
இவ்வாறு, மருத மர வனத்தில் சுயம்பு மூர்த்தியாக மூன்று தலங்களில் எழுந்தருளி நூற்றாண்டுகள் பல கடந்த பின்னரும், மானசீகமாக மல்லிகார்ச்சுனம் (தலைத்தலம்), மத்தியார்ச்சுனம் (இடைத்தலம்), புடார்ச்சுனம் (கடைத்தலம்) என லட்சோப, லட்ச மக்களால் போற்றி வணங்கப்பட்டு வருகிறது.
தொன்று தொட்டு நாகரீகச் செழிப்பு மிக்க தலங்களாக இம்மூன்றும் விளங்கி வருவதோடு, எதிர்காலத்தில் இன்னும் பல நூற்றாண்டுகள் உன்னதமாய் விளங்கும் என்பதும் சர்வ நிச்சயமாகும்.
- அம்மன் சன்னதியின் நுழைவு வாயிலின் இடப்புறத்தில் மருத மரமும், மல்லிகைக் கொடியும் சேர்ந்து இடம் பெற்றுள்ளன.
- கருவறையில் மல்லிகார்ச்சுன சுவாமி தரையோடு தரையாகக் காட்சி தருகிறார்.
ஆந்திர மாநிலம், கர்நூல் மாவட்டத்தில் ஸ்ரீசைலம் உள்ளது.
மலை உச்சியில் உள்ள ஸ்ரீசைலம் தலத்தின் ஆயிரம் மீட்டருக்கு கீழே நல்ல மழைக்காடுகளின் வட திசை நோக்கிப் பாயும் கிருஷ்ணா நதி பாதாள கங்கை என்ற பெயரில் சலசலத்து ஓடுகிறது.
இங்கே அம்பாள் பிரமதாம்பிகை.
ஸ்ரீசைலம் பனிரெண்டு ஜோதிர்லிங்கத் தலங்களில் இரண்டாவதாக வைத்து வணங்கப்படுகிறது.
அவ்வாறே சக்தி பீடங்களுள் ஒன்று என்ற பெருமையும் இதற்கு உண்டு.
அம்மன் சன்னதியின் நுழைவு வாயிலின் இடப்புறத்தில் மருத மரமும், மல்லிகைக் கொடியும் சேர்ந்து இடம் பெற்றுள்ளன.
கருவறையில் மல்லிகார்ச்சுன சுவாமி தரையோடு தரையாகக் காட்சி தருகிறார்.
கருவறைக்குள் பக்தர்கள் தாராளமாக அனுமதிக்கப்படுகிறார்கள்.
அவர்களே தங்கள் கரங்களால் அபிஷேகம் செய்யலாம். தொட்டு வணங்கலாம்.
பக்தர்கள் தங்கள் தலையை லிங்கத்தின் மீது அழுத்தி வழிபடவும் செய்யலாம்.
சுயம்பு மூர்த்தியான மல்லிகார்ச்சுனர் சாந்நித்தியமிக்க தெய்வமாக வடபுலத்தில் எழுந்தருளி இருப்பதால் இது தலைத்தலம் அல்லது முதல் தலம் என கருதி வணங்கப்பட்டு வருகிறது.
- மருத மரத்தை வடமொழியில் அர்ச்சுன விருட்சம் என அழைப்பதுண்டு.
- மருத மரத்தை தல விருட்சமாகக் கொண்டு விளங்கும் திருத்தலங்கள் நமது மண்ணில் அநேகம்.
மருத மரத்தை வடமொழியில் அர்ச்சுன விருட்சம் என அழைப்பதுண்டு.
மருத மரத்தை தல விருட்சமாகக் கொண்டு விளங்கும் திருத்தலங்கள் நமது மண்ணில் அநேகம்.
ஆயிரத்தி இருநூறு ஆண்டுகளுக்கும் மேலான புராதனப் பெருமையும், இறைவன் சுயம்பு மூர்த்தியாக வெளிப்பட்ட தன்மையும், பாரத நாட்டின் பழம் பெரும் புண்ய நதிக்கரையில் அமைந்த திருக்கோவில் எனவும் பல அம்சங்கள் ஒன்றாகப் பொருந்தி நிற்கும் திருத்தலங்கள் மூன்று ஆகும்.
நமது சான்றோர்கள் காலம் காலமாக இந்த தலங்களை புண்ணிய இடங்களாக மதித்து பேணியும், போற்றியும், வணங்கியும் வருகின்றனர்.
அவை மல்லிகார்ச்சுனம் (ஸ்ரீசைலம்), மத்தியார்ச்சுனம் (திருவிடை மருதூர்), புடார்ச்சுனம் (திருப்புடை மருதூர்) எனப்படும் மூன்று தலங்களாகும்.
இவை ஒன்றுக்கொன்று சமமான அம்சங்களைக் கொண்டு விளங்கும் காரணத்தால் முதல் தலம், இடைத்தலம், கடைத்தலம் என்றும் பகுக்கப்பட்டு வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இனி அவைகள் ஒவ்வொன்றின் மகத்துவத்தை வரிசையாகக் காணலாம்.
- இதிகாச காப்பிய நூல்களான மகாபாரதம், ராமாயணம் ஆகிய நூல்களில் தாமிரபரணியின் புராதனப் பெருமை பலபட சிறப்பாக சொல்லப்பட்டுள்ளது.
- இப்பேர்பட்ட பெருமைமிக்க தாமிரபரணி, துவக்க காலத்தில் தண்பொருந்தப்பேதாறு என்றே எல்லா இலக்கிய நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பாரம்பரிய வழக்கப்படி கடந்த 2018ம் ஆண்டு புண்ணிய நதியாம் தாமிரபரணியில் நடைபெற்ற மகாபுஷ்கரத் திருவிழாவில் லட்சக்கணக்கான மக்கள் புனித நீராடி மகிழ்ந்தனர் என்பது நடந்து முடிந்த வரலாறு.
இதிகாச காப்பிய நூல்களான மகாபாரதம், ராமாயணம் ஆகிய நூல்களில் தாமிரபரணியின் புராதனப் பெருமை பலபட சிறப்பாக சொல்லப்பட்டுள்ளது.
இப்பேர்பட்ட பெருமைமிக்க தாமிரபரணி, துவக்க காலத்தில் தண்பொருந்தப்பேதாறு என்றே எல்லா இலக்கிய நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதிகை மலையில் உற்பத்தியாகி, பாபநாசத்தில் சமவெளிப் பகுதியில் இறங்கி, பல ஊர்கள் வழியாகப் பாய்ந்து வளப்படுத்தி, வங்கக் கடலில் சேர்ந்த பூ மங்கலம் அருகே பழைய காயலில் சங்குமுக தீர்த்த கட்டத்தில் கடலோடு சங்கமித்து தன் பயணத்தை நிறைவு செய்கிறது.
அவ்வாறு செல்லும் வழியெல்லாம் செல்வச் செழிப்பை மக்களுக்கு வாரி வாரி வழங்கிய வண்ணம் தாமிரபரணித் தாயானவள் கருணை உள்ளத்தோடு பசிப்பிணி தீர்த்து வருகிறாள்.
அத்தோடு சைவத்தையும், தமிழையும் பாங்காய் வளர்த்து வருகிறாள்.
அவ்வாறு பாய்ந்து வரும் வேளையில், தெற்கிலிருந்து வடக்காக ஓங்கி உயர்ந்து வளர்ந்திருக்கும் மருதமரச் சோலையின் நடுவே தாமிரபரணியின் கிழக்குக் கரையில் அமைந்துள்ள திருத்தலமே திருப்புடை மருதூர்.
தல விருட்சமான மருத மரத்தின் பெயராலே இத்தலம் அழைக்கப்படுவது சிறப்பாகும். மருத மரத்திற்கு ஏன் அத்தகைய சிறப்பு ஏற்பட்டது என்பதை இனி காணலாம்.
- உலக நாடுகளின் வரலாறை படித்துப் பார்த்தால் பொதுவான உண்மை ஒன்று நமக்குத் தெரியவரும்.
- அதாவது, எங்கெல்லாம் வற்றாத ஜீவ நதிகள் செழிப்பாகப் பாய்கின்றதோ, அந்தப் பகுதிகளில்தான் மனித நாகரீகம் வளர்ச்சியடைய ஆரம்பித்தது.
உலக நாடுகளின் வரலாறை படித்துப் பார்த்தால் பொதுவான உண்மை ஒன்று நமக்குத் தெரியவரும்.
அதாவது, எங்கெல்லாம் வற்றாத ஜீவ நதிகள் செழிப்பாகப் பாய்கின்றதோ, அந்தப் பகுதிகளில்தான் மனித நாகரீகம் வளர்ச்சியடைய ஆரம்பித்தது.
இந்த யதார்த்த நிலை நமது புண்ணிய பூமிக்கும் பொருந்தும் என்பதை நாம் பல நூல்கள் வாயிலாக படித்துத் தெளிந்திருக்கிறோம்.
நமது பெருமைமிகு புண்ணிய நாட்டில் பிரம்ம புத்திரா, துங்கபத்திரா, சிந்து, கங்கை, கோதாவரி, நர்மதை, கிருஷ்ணா, சரசுவதி, காவேரி, யமுனை, பரணிதா, தாமிரபரணி என்கிற பன்னிரெண்டு ஜீவ நதிகளும் பல நூற்றாண்டுகளாக ஆன்றோர்களால் புண்ணிய நதிகளாக போற்றப்பட்டும், வணங்கப்பட்டும் வருகிறது.
இந்த நதிகள் ஒவ்வொன்றிற்கும் குறிப்பிட்ட ராசி உண்டு.
அந்த வகையில் தாமிரபரணி (விருச்சிகம்), பிரம்மபுத்திரா (கும்பம்), துங்கபத்ரா (மகரம்), சிந்து (தனுசு), கங்கை (மேஷம்), கோதாவரி (சிம்மம்), நர்மதை (ரிஷபம்), கிருஷ்ணா (கன்னி), சரசுவதி (மிதுனம்), காவேரி (துலாம்), யமுனை (கடகம்), பரணிதா (மீனம்) என சான்றோர்களால் வகுக்கப்பட்டுள்ளது.
வான சாஸ்திர கணிப்பின்படி குருபகவான் ஒவ்வொரு ராசியிலும் பன்னிரெண்டு ஆண்டுகள் சஞ்சாரம் செய்வதாக ஐதீகம்.
அந்த வகையில், நமது புண்ணிய நதிகள் ஒவ்வொன்றும் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை குரு பகவான் பிரவேசிக்கையில் அதனை மகா புஷ்கர விழாவாகக் கொண்டாடி மகிழ்கின்றனர்.
அந்த வேளையில் அதாவது மகா புஷ்கரம் கொண்டாட்டத்தில் ஆன்றோர்களும், சான்றோர்களும், பக்தர்களும், பொதுமக்களும் நாடு முழுவதிலும் இருந்து கிளம்பி வந்து முக்கியமான தீர்த்த கட்டங்களில் புனித நீராடி இறையருள் பெற்று பேரின்பம் அடைகின்றனர்.
பாவம் தொலைத்து புண்ணியம் சேர்க்கின்றனர்.
- 13-ந்தேதி காலை பரணி தீபம், மாலை 6 மணிக்கு மகா தீபம்.
- பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 13-ந் தேதி காலை பரணி தீபம் மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது.
தீபத் திருவிழாவை யொட்டி தொடர்ந்து இரவு மாட வீதிகளில் அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன் வீதி உலா நடந்து வருகிறது. நேற்று இரவு வெள்ளி தேரோட்டம் நடைபெற்றது.
தீபத் திருவிழாவில் 7-வது நாளான இன்று பஞ்ச மூர்த்திகள் 5 தேர்கள் வலம் வரும். மகா தேரோட்டம் நடந்தது. காலை 6.36 மணிக்கு விநாயகர் தேர் புறப்பாடு நடைபெற்றது. ஒருபுறம் ஆண்களும் மறுபுறம் பெண்களும் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
இதைத்தொடர்ந்து விநாயகர் தேர் நிலைக்கு வந்த பிறகு முருகர் தேரோட்டம் நடைபெறும். மதியம் அருணாசலேஸ்வரர் மகாதேரோட்டம் நடைபெறும்.
தேரோட்டத்தில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர், உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
இதனைத் தொடர்ந்து பெண்களால் இழுக்கப்படும் பராசக்தி அம்மன் தேரோட்டமும், சண்டிகேஸ்வரர் தேரோட்டம் நடைபெறுகிறது.
பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் நடைபெற்றதால் அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு இருந்தனர்.
ரத வீதிகளில் அண்ணா மலையாருக்கு அரோகரா என்ற கோஷம் எழுப்பியபடி பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்துச் சென்றனர்.
ராஜகோபுரம் முன்பு ஏராளமான பக்தர்கள் கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். இதனால் அருணாசலேஸ்வரர் கோவில் மாடவீதிகளில் பக்தர்கள் பரவசத்துடன் காணப்பட்டனர்.

கார்த்திகை தீபத்திருவிழாவில் தேரோட்டம் நடைபெறும் நாளன்று நேர்த்தி கடனாக கரும்பில் சேலையால் தொட்டில் கட்டி தங்கள் குழந்தையை சுமந்தபடி மாட வீதியை வலம் வருவார்கள்.
அதன்படி, இன்று ஏராளமான பக்தர்கள் கரும்பு தொட்டில் அமைத்து மாட வீதியை வலம் வந்து நேர்த்தி கடன் செலுத்தினர்.
தேரோட்டத்தையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. 6000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். விழுப்புரம், வேலூர் உள்ளிட்ட பகுதியிலிருந்து கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட்டன.
- சுலோகங்களை பாடி, கற்பூரம் தீபாராதனை செய்து வழிபடுங்கள்.
- விளக்குகளை அணைப்பதற்கும் விதிகள் உண்டு.
தீபாவளிக்கு தீபங்களை வரிசைப்படுத்தி வழிபாடு செய்ய வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் தீபாவளியில் அப்படி வழிபடும் வழக்கம் தமிழகத்தில் இல்லை. ஆனால் திருக்கார்த்திகை திருநாளில், ஒவ்வொரு வீட்டையும், அகல் விளக்குகள் அலங்கரிக்கும் என்பதை அனைவரும் அறிவர்.
அன்றைய தினம் இல்லங்கள் தோறும் பல்வேறு எண்ணிக்கையில் அகல் விளக்குகளை ஏற்றி, மக்கள் இறை வழிபாட்டை மேற்கொள்வர்.

தமிழ்நாட்டில் திருவிளக்கு இறைவனின் பிரதிநிதியாக பார்க்கப்படுவதால், அதற்கான மரியாதையை நாம் அளிக்க வேண்டும். பூஜைக்கு ஏற்றப்படும் திருவிளக்கிற்கு பால், சர்க்கரை, கற்கண்டு போன்றவற்றை நைவேத்தியமாகவும், கார்த்திகை தீபத்தன்று அவல், பொரியில் வெல்லப் பாகு சேர்த்தும், கார்த்திகை பொரி படைத்தும் வழிபாடு செய்யுங்கள்.
கார்த்திகை தீபத் திருநாள் அன்று அகல் விளக்குகளை சுவாமி அறையில் ஏற்றி, தெரிந்த சுலோகங்களை பாடி, கற்பூரம் தீபாராதனை செய்து வழிபடுங்கள். விளக்குகளை அணைப்பதற்கும் விதிகள் உண்டு.
வெறும் வாயினால் ஊதி விளக்கை அணைக்கக் கூடாது. பூ அல்லது நீர்த் துளி, பால் துளியைக் கொண்டு விளக்கினை அமர்த்த வேண்டும்.

தீபத்தை வடக்கு திசை நோக்கி ஏற்றுவது அறிவு வளர்ச்சியும், செல்வ வளர்ச்சியும் தரும். கிழக்கு திசையில் ஏற்றுவது துன்பங்களை நீக்கும்.
மேற்கு திசையில் ஏற்றுவது கடன் தொல்லைகளையும், தோஷங்களையும் போக்கும். ஆனால் எக்காரணத்தைக் கொண்டும் தெற்கு திசையில் தீபங்களை ஏற்றக்கூடாது.
- லிங்கோத்பவர் சிற்பமானது ஒரு நீள்வட்ட வடிவில் அமைந்திருக்கும்.
- பாதங்கள் பூமியில் புதைந்திருக்கும். தலை வானில் மறைந்திருக்கும்.
பெரும்பாலான சிவாலயங்களில் கருவறையைச் சுற்றிவரும் போது, சன்னிதிக்கு நேர் பின்புறம் 'லிங்கோத்பவர்' இருப்பதைக் காணலாம். இவரே அடி முடி காண முடியாத அண்ணாமலையார். ஆம்.. இவரது சிற்பமானது ஒரு நீள்வட்ட வடிவில் அமைந்திருக்கும்.
அதனும் அவரது பாதங்கள் பூமியில் புதைந்திருக்கும். தலை வானில் மறைந்திருக்கும். அவரது தலைப்பகுதியை ஒட்டி அன்னமும், கால் அடியில் பன்றியும் வடிவமைக்கப்பட்டிருக்கும்.
விஷ்ணுவும், பிரம்மாவும் இறைவனின் அடி முடியைக் காண்பதற்காக சென்ற நிகழ்வை கண் முன் நிறுத்தும் வகையில்தான் இந்த 'லிங்கோத்பவர்' சிற்பம் அமைந்திருக்கும்.

சிவன் லிங்க வடிவமாக உள்ளார். லிங்கம் என்பது நீள் வட்ட வடிவம் கொண்டது. சதுரம், செவ்வகம், முக்கோணம் எதுவாக இருந்தாலும் அதற்கு ஆரம்ப இடமும், முடியும் இடமும் உண்டு. ஆனால் வட்டத்துக்கு ஆரம்பமும் இல்லை, முடிவும் இல்லை.
சிவனும் அதே போல, ஆதியும் அந்தமும் இல்லாதவர் என்பதை உணர்த்தவே, அவா் சிவலிங்க வடிவமாகவும், லிங்கோத்பவர் வடிவமாகவும் அருள்கிறார்.
திருவண்ணாமலையில் பிரம்மாவுக்கும் திருமாலுக்கும் ஒளி வடிவில் ஈசன் காட்சி கொடுத்த தினம் சிவராத்திரி என்கிறார்கள். அந்த காலத்தை 'லிங்கோத்பவர் காலம்' என்றும் சொல்வார்கள்.
இரவு 11.30 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரையான நேரமே லிங்கோத்பவர் காலம். ஆண்டு தோறும் வரும் மகா சிவராத்திரி அன்று, இந்த நேரத்தில் லிங்கோத்பவர் அருள்காட்சி தருவார்.






