என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    புண்ணிய தலங்கள்-திருவிடைமருதூர் (மத்தியார்ச்சுனம்)
    X

    புண்ணிய தலங்கள்-திருவிடைமருதூர் (மத்தியார்ச்சுனம்)

    • தஞ்சைத் தரணியில் திருவிடை மருதூரில் காவேரிக் கரையில் அமைந்துள்ளது இத்திருத்தலம்.
    • இங்கும் மருத மரமே தல விருட்சம். இங்கு இறைவன் மகாலிங்கேசுவரர். அம்பாள் ப்ருஹத் சுந்தர குஜாம்பிகை.

    அடுத்ததாக, மைசூரில் உற்பத்தியாகி தமிழகத்தில் கடலோடு கலக்கும் புண்ணிய நதி காவிரி.

    தஞ்சைத் தரணியில் திருவிடை மருதூரில் காவேரிக் கரையில் அமைந்துள்ளது இத்திருத்தலம்.

    இங்கும் மருத மரமே தல விருட்சம். இங்கு இறைவன் மகாலிங்கேசுவரர்.

    அம்பாள் ப்ருஹத் சுந்தர குஜாம்பிகை.

    செம்மொழித் தமிழையும், சைவ மொழியையும் இம் மண்ணில் வாழ்வாங்கு வாழச் செய்த ஞான சம்பந்தர், சுந்தரமூர்த்தி நாயனார், நாவுக்கரசர் ஆகிய மூவராலும் தேவாரப் பதிகங்கள் பாடப்பட்ட திருத்தலம்.

    தைப்பூசத் திருவிழா, வைகாசி பிரம்மோற்சவ உற்சவம், திருவாதிரை, ஆடிப்பூரம், கார்த்திகை மகா தீபம், சோமவார வழிபாடு போன்ற உற்சவங்கள் இத்தலத்தில் வெகு பிரசித்தம்.

    ஜோதி மகாலிங்கர் சாந்நித்தியமிக்க தெய்வமாய் எழுந்தருளியிருக்கும் இத்திருத்தலம் வடபுலத்திற்கும், தென் புலத்திற்கும் நடுப்பகுதியில் அமைந்திருக்கிற காரணத்தால், இடைத்தலமாக கருதப்பட்டு மத்தியார்ச்சுனம் என்று வணங்கப்பட்டு வருகிறது.

    சோழ மன்னர்களால் கட்டப்பட்ட எழில் நிறைந்த கலைக் கோவிலாக விளங்குகிறது.

    இனி, கடைத் தலமான புடார்ச்சனத்தைக் காணலாம்.

    Next Story
    ×