என் மலர்
ஆன்மிக களஞ்சியம்

திருப்புடைமருதூர் புராணம்
- இதன் காரணமாக தாமிரபரணி நதிக்கரை சிவாலயங்களை பற்றிய தெளிவு நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வாழும் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.
- அந்த வகையில் திருப்புடைமருதூர் புராணமும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பே தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை மூலம் வெளியில் வந்தது.
தாமிரபரணி நதியின் இரு புறங்களிலும் 274 சிவாலயங்களை மகான்களும், சித்தர்களும், மன்னர்களும் உருவாக்கினார்கள்.
இந்த 274 சிவாலயங்களும் ஒவ்வொரு தல புராணத்தையும், சிறப்பையும் தன்னகத்தே கொண்டவை.
இந்த 274 சிவாலயங்களின் தனித்துவமான சிறப்புகளையும், பெருமைகளையும் பல்வேறு புராணங்களில் நம் முன்னோர்கள் பதிவு செய்துள்ளனர்.
அத்தகைய புராணங்களில், தாமிரபரணி மகாத்மியம், நவசமுத்திர மகாத்மியம், சிவசைல மகாத்மியம், திருப்புடை மருதூர் மகாத்மியம், திருக்குற்றால தல புராணம், தென்காசி தலபுராணம், கருவை தல புராணம், திருச்செந்தூர் புராணம் போன்றவை முக்கியமானவை.
இந்த புராணங்கள் மூலம் தாமிரபரணி நதிக்கரை சிவாலயங்களை நாம் துல்லியமாக அறிந்து, புரிந்து கொள்ள முடியும். துரதிர்ஷ்டவசமாக கடந்த பல நூற்றாண்டுகளாக இந்த புராணங்களை தமிழர்கள் குறிப்பாக தென்பாண்டி மக்கள் சுத்தமாக மறந்து அல்லது தெரியாமலேயே போய்விட்டனர்.
சமீப காலமாக இந்த புராணங்கள் குறித்து மக்கள் மத்தியில் சற்று ஆர்வம் வந்துள்ளது.
இதன் காரணமாக தாமிரபரணி நதிக்கரை சிவாலயங்களை பற்றிய தெளிவு நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வாழும் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில் திருப்புடைமருதூர் புராணமும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பே தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை மூலம் வெளியில் வந்தது.
உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், திருப்புடைமருதூர் புராணத்தை மீண்டும் அச்சிட்டு வெளியிட்டது.
திருப்புடைமருதூர் புராணம் அருமையான தமிழ் இலக்கியமாகும். திருமால், பிரம்மன், இந்திரன் மற்றும் பலர் திருப்படைமருதூர் வந்து வரம் பெற்ற தகவல்கள் இந்த புராணத்தில் இடம் பெற்றுள்ளன.
ராமனே சீதையைப் பிரிந்தபோது, இந்த தலத்துக்கு வந்து வழிபட்டான் என்றும், ராமனிடம் நாறூம்பூநாதர், 'நீ உன் தேவியைப் பெறுவாய்...' என்று வரம் வழங்கி ஆசிர்வதித்தார் என்றும் இந்த புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ராமாயணக் கதையின் பெரும்பகுதி திருப்புடைமருதூர் புராணத்தின் வீரமார்த்தாண்டப் படலத்தில் உள்ளது.
இந்த புராணம் கடவுள் வாழ்த்து, பாயிரம், அவையடக்கம், கயிலைச் சிறப்பு, நாட்டுப்படலம், நகரப் படலம், தல விசேடம், தீர்த்த விசேடம், மூர்த்தி விசேடம், நடம்புரி படலம், விருத்திர வதைப்படலம், இந்திரன் பழிதீர்த்த படலம், சீதரப்படலம், ஆதி மனுப்படலம், ஆலயம் காண்படலம், சதுமுகப் படலம், பதியத்தி தீர்ந்த படலம், அவிர்த்தானப் படலம், வால சதானந்தப் படலம், புறமதம் தீர்த்த படலம், அலதந்தப் படலம், கருவூர்ச் சித்தப்படலம், அகத்தியப் படலம், தாரக உபதேசப் படலம், வீரமார்த்தாண்டப் படலம், தாம்பிர வன்னிப் படலம், ஆத்தி வனப் படலம், புட்வ வனப் படலம், அரிகைப் படலம், மூன்றீசுவரப் படலம் என்று பிரிக்கப்பட்டுள்ளது.






