என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    புண்ணிய தலங்கள்-ஸ்ரீசைலம் (மல்லிகார்ச்சுனம்)
    X

    புண்ணிய தலங்கள்-ஸ்ரீசைலம் (மல்லிகார்ச்சுனம்)

    • அம்மன் சன்னதியின் நுழைவு வாயிலின் இடப்புறத்தில் மருத மரமும், மல்லிகைக் கொடியும் சேர்ந்து இடம் பெற்றுள்ளன.
    • கருவறையில் மல்லிகார்ச்சுன சுவாமி தரையோடு தரையாகக் காட்சி தருகிறார்.

    ஆந்திர மாநிலம், கர்நூல் மாவட்டத்தில் ஸ்ரீசைலம் உள்ளது.

    மலை உச்சியில் உள்ள ஸ்ரீசைலம் தலத்தின் ஆயிரம் மீட்டருக்கு கீழே நல்ல மழைக்காடுகளின் வட திசை நோக்கிப் பாயும் கிருஷ்ணா நதி பாதாள கங்கை என்ற பெயரில் சலசலத்து ஓடுகிறது.

    இங்கே அம்பாள் பிரமதாம்பிகை.

    ஸ்ரீசைலம் பனிரெண்டு ஜோதிர்லிங்கத் தலங்களில் இரண்டாவதாக வைத்து வணங்கப்படுகிறது.

    அவ்வாறே சக்தி பீடங்களுள் ஒன்று என்ற பெருமையும் இதற்கு உண்டு.

    அம்மன் சன்னதியின் நுழைவு வாயிலின் இடப்புறத்தில் மருத மரமும், மல்லிகைக் கொடியும் சேர்ந்து இடம் பெற்றுள்ளன.

    கருவறையில் மல்லிகார்ச்சுன சுவாமி தரையோடு தரையாகக் காட்சி தருகிறார்.

    கருவறைக்குள் பக்தர்கள் தாராளமாக அனுமதிக்கப்படுகிறார்கள்.

    அவர்களே தங்கள் கரங்களால் அபிஷேகம் செய்யலாம். தொட்டு வணங்கலாம்.

    பக்தர்கள் தங்கள் தலையை லிங்கத்தின் மீது அழுத்தி வழிபடவும் செய்யலாம்.

    சுயம்பு மூர்த்தியான மல்லிகார்ச்சுனர் சாந்நித்தியமிக்க தெய்வமாக வடபுலத்தில் எழுந்தருளி இருப்பதால் இது தலைத்தலம் அல்லது முதல் தலம் என கருதி வணங்கப்பட்டு வருகிறது.

    Next Story
    ×