என் மலர்
ஆன்மிக களஞ்சியம்

இதிகாசங்களில் சொல்லப்பட்டுள்ள தாமிரபரணியின் சிறப்பு
- இதிகாச காப்பிய நூல்களான மகாபாரதம், ராமாயணம் ஆகிய நூல்களில் தாமிரபரணியின் புராதனப் பெருமை பலபட சிறப்பாக சொல்லப்பட்டுள்ளது.
- இப்பேர்பட்ட பெருமைமிக்க தாமிரபரணி, துவக்க காலத்தில் தண்பொருந்தப்பேதாறு என்றே எல்லா இலக்கிய நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பாரம்பரிய வழக்கப்படி கடந்த 2018ம் ஆண்டு புண்ணிய நதியாம் தாமிரபரணியில் நடைபெற்ற மகாபுஷ்கரத் திருவிழாவில் லட்சக்கணக்கான மக்கள் புனித நீராடி மகிழ்ந்தனர் என்பது நடந்து முடிந்த வரலாறு.
இதிகாச காப்பிய நூல்களான மகாபாரதம், ராமாயணம் ஆகிய நூல்களில் தாமிரபரணியின் புராதனப் பெருமை பலபட சிறப்பாக சொல்லப்பட்டுள்ளது.
இப்பேர்பட்ட பெருமைமிக்க தாமிரபரணி, துவக்க காலத்தில் தண்பொருந்தப்பேதாறு என்றே எல்லா இலக்கிய நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதிகை மலையில் உற்பத்தியாகி, பாபநாசத்தில் சமவெளிப் பகுதியில் இறங்கி, பல ஊர்கள் வழியாகப் பாய்ந்து வளப்படுத்தி, வங்கக் கடலில் சேர்ந்த பூ மங்கலம் அருகே பழைய காயலில் சங்குமுக தீர்த்த கட்டத்தில் கடலோடு சங்கமித்து தன் பயணத்தை நிறைவு செய்கிறது.
அவ்வாறு செல்லும் வழியெல்லாம் செல்வச் செழிப்பை மக்களுக்கு வாரி வாரி வழங்கிய வண்ணம் தாமிரபரணித் தாயானவள் கருணை உள்ளத்தோடு பசிப்பிணி தீர்த்து வருகிறாள்.
அத்தோடு சைவத்தையும், தமிழையும் பாங்காய் வளர்த்து வருகிறாள்.
அவ்வாறு பாய்ந்து வரும் வேளையில், தெற்கிலிருந்து வடக்காக ஓங்கி உயர்ந்து வளர்ந்திருக்கும் மருதமரச் சோலையின் நடுவே தாமிரபரணியின் கிழக்குக் கரையில் அமைந்துள்ள திருத்தலமே திருப்புடை மருதூர்.
தல விருட்சமான மருத மரத்தின் பெயராலே இத்தலம் அழைக்கப்படுவது சிறப்பாகும். மருத மரத்திற்கு ஏன் அத்தகைய சிறப்பு ஏற்பட்டது என்பதை இனி காணலாம்.






