search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karthika Deepam"

    • மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் விழா கோலாகலம்
    • இன்று அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது

    குனியமுத்தூர், 

    கோவை- பாலக்காடு ரோடு, குனியமுத்தூருக்கு அருகே உள்ள மதுக்கரையில் பிரசித்திபெற்ற தர்மலிங்கே ஸ்வரர் கோவில் அமைந்து உள்ளது. கோவில், தரைமட்ட த்தில் இருந்து 1600 அடி உயரத்தில் அமைந்து உள்ளது. இங்கு கிட்டத்தட்ட 960 படிகள் ஏறி சென்று, சுவாமியை தரிசனம் செய்ய வேண்டும்.

    மதுக்கரை தர்மலிங்கே ஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் கார்த்திகை தீபத்தி ருவிழா மற்றும் கிரிவலம் ஆகியவை வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அப்போது கோவை மட்டுமின்றி அண்டை மாவட்டங்களிலும் இருந்து பக்தர்கள் அதிகளவில் வந்தி ருந்து கார்த்திகை தீபத்திருவிழாவில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து மனநிறைவுடன் வீடு திரும்புவர்.

    மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் ஆலயத்தில் நடப்பாண்டுக்கான கார்த்திகை தீபத்திருவிழா இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது. முன்னதாக இன்று அதிகாலை 5 மணியளவில் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடத்தப்பட்டன.

    மதுக்கரை தர்மலிங்கே ஸ்வரர் கோவிலில் கார்த்திகை திருவிழாவை கண்டுக ளிப்பதற்காக திருமலை பாளையம், சாவடி, சீரப்பாளையம், அரிசிபாளை யம், எட்டிமடை, கோ வைப்புதூர், சுண்ட க்காமுத்தூர், ராமசெட்டி பாளையம், பி.கே.புதூர், குனியமுத்தூர், குரும்பபா ளையம், ஈச்சனாரி, அறிவொ ளி நகர், எம்ஜிஆர் நகர், மதுக்கரை மார்க்கெட், சுகுணாபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிலுக்கு வந்திரு ந்தனர்.

    அப்போது அவர்கள் கோவில் கருவறையில் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளிய சுவாமியை மனமுருக வழிபட்டு வருகின்றனர். மேலும் இந்த கோவிலில் இன்று மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்பட உள்ளது. இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் நேரடியாக கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் இந்த கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா 3 நாட்கள் சிறப்பாக நடத்தப்படுகிறது. இதில் முதல் நாள் திருவிழாவை மதுக்கரை ஊர்மக்களும், 2-வது நாள் திருவிழாவை திருமலை யாம்பாளையம் பொது மக்களும், 3-வது நாள் திருவிழாவை எட்டிமலை ஊர்மக்களும் ஒருங்கிணைந்து செய்து வருகின்றனர்.

    தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் நாளை (திங்கட்கிழமை) கிரிவலம் நடைபெற உள்ளது. மேற்கண்ட 3 நாட்களிலும் சேர்த்து கிட்டத்தட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு, தரிசனம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மதுக்கரை தர்மலிங் கேஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை தீபம் முடிந்து கீழே இறங்கும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். மேலும் நாளை கிரிவலத்தின்போது காலை முதல் மாலைவரை அன்னதானம் வழங்குவதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவில் கிரிவலத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிலை சுற்றி வலம் வர உள்ளனர். மேலும் தர்மலிங்கேஸ்வரரை மனதார வேண்டி கிரிவலம் சென்று வந்தால் நினைத்த காரியங்கள் நடக்கும், கோர்ட் வழக்குகளில் வெற்றி கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    இந்த கோவிலில் மாதாமாதம் பவுர்ணமி பூஜை சிறப்பாக நடைபெறும். அப்போதும் இங்கு பவுர்ணமி கிரிவலம் நடத்தப்படும்.

    மதுக்கரை தர்மலிங்கே ஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபம் மட்டுமின்றி பிரதோஷம், கிருத்திகை, பவுர்ணமி அன்று சிறப்பு பூஜை நடைபெறும். ஐப்பசி பவுர்ணமி மற்றும் தைப்பூசம் அன்று அன்னா பிஷேகம் நடைபெறுவது வழக்கம்.மேலும் பௌர்ணமி தவிர மாத நாட்களில் தினமும் முக்கால பூஜை நடைபெற்று வருகிறது. அதன்படி காலை 7 மணி முதல் 8 மணி வரையிலும், மதியம் 12 மணி முதல் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 5 மணி வரையிலும் முக்கால பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் விசேஷ நாட்களில் மாலை 6.30 மணிவரை கோவிலின் நடை திறந்திருக்கும்.

    பழம்பெருமைவாய்ந்த மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவிலில், 150 ஆண்டுகளுக்கும் மேல் கார்த்திகை தீபம் தொடர்ந்து ஏற்றப்பட்டு வருகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

    • பக்தர்கள் அவதி
    • இடம் பிடிக்க முண்டியடித்துக்கொண்டு ஏறினர்

    வேலூர்:

    திருவண்ணாமலை கார்த்திகை தீப விழாவில் பல லட்சம் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். வேலூர் மாவட்டம் மற்றும் ஆந்திராவிலிருந்து திருவண்ணாமலை தீப திருவிழாவை காண காலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்தனர்.

    பக்தர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு அரசு சார்பில் போதிய பஸ் வசதி இல்லாததால் பக்தர்கள் அவதி அடைந்து வருகின்றனர். புதிய பஸ் நிலையத்திற்குள் வரும் சிறப்பு பஸ்களில் இடம் பிடிக்க பக்தர்கள் முண்டியடிக்கும் நிலை ஏற்பட்டது. ஒரு சில பஸ் டிரைவர்கள் பஸ்களை குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தாமல் அங்கும் இங்குமாக பஸ்களை ஓட்டிச் சென்று பக்தர்களை அலைக்கழித்தனர்.

    கடந்த ஆண்டு திருவண்ணாமலை தீப திருவிழாவுக்கு குழந்தைகளுடன் செல்லும் பக்தர்கள் குழந்தைகளை தவறவிட்டால் எளிதாக கண்டுபிடிக்க புதிய பஸ் நிலையத்தில் போலீசார் அடையாள டேக் கட்டி அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த ஆண்டு குழந்தைகளுக்கு டேக் கட்டப்படவில்லை.

    • கார்த்திகை தீப 5-வது நாள் விழா நடந்தது
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ேகாவிலில் கார்த்திகை தீப திருவிழா நடந்து வருகிறது.

    5-வது நாளான இன்று காலை மூஷிக வாகனத்தில் விநாயகர் கண்ணாடி ரிஷப வாகனத்தில் அண்ணாம லையார் எழுந்தருளி மாடவீதியில் உலா வந்தார். இரவு பஞ்ச மூர்த்திகள் வெள்ளி மூஷிகம் வெள்ளி மயில் வெள்ளி பெரிய ரிஷப வாகனத்தில் அண்ணாம லையார் எழுந்தருளி வீதி உலா வருகிறார்.

    நேற்று நான்காம் நாள் இரவு பஞ்ச மூர்த்திகள் வெள்ளி கற்பகவிருட்சகம், வெள்ளி காமதேனு வாகனங்களில் சாமி வீதி உலா நடைபெற்றது.

    விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    • ஆதார் கார்டு கட்டாயம்
    • முன்ேனற்பாடு பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடந்தது

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த தென்மாதிமங்கலம், கடலாடி ஊராட்சிகளுக்கு இடையில் தென்கைலாயம் என்று அழைக்கப்படும் சுமார் 4 ஆயிரத்து 560 அடி உயரம் கொண்ட பருவதமலை அமைந்துள்ளது.

    இந்த மலையின் உச்சியில் உள்ள கோவிலில் மல்லிகாஜுனேஸ்வரர் அன்னை பிரம்மராம்பிகை அம்பாளும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்புரிகிறார்கள்.

    மலைக்கு செல்ல 700 அடிக்கு செங்குத்தான படிகளை கடந்து செல்ல வேண்டும். மூலிகைச் செடி, கொடி, மரங்கள் உள்ளடக்கிய சிறப்பு வாய்ந்த பருவத மலைக்கு ஒவ்வொரு பவுர்ணமி மற்றும் அமாவாசை, வார விடுமுறை நாட்களிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கு சென்று பக்தர்களே சாமிக்கு அபிஷேகம் தீபாரதனை செய்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    வரும் டிசம்பர் 6 தேதி அன்று கார்த்திகை தீபத் திருவிழா முன்னிட்டு பருவதமலை உச்சியில் கொப்பரை வைத்து தீபம் ஏற்றப்படுகிறது. விழாவை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தர உள்ளனர். இதனால் மலையின் மீது ஏறி சென்று பக்தர்கள் இடையூறு இன்றி சாமி தரிசனம் செய்வதற்காக முன்ேனற்பாடு பணிகள் குறித்து கலசப்பாக்கம் தாலுகா அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு கலசப்பாக்கம் தி.சரவணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இந்து சமய உதவி ஆணையர் ஜோதிலட்சுமி முன்னிைல வகித்தார். ஆலோசனைக் கூட்டத்தில் கார்த்திகை தீபத் திருவிழா அன்று பல்வேறு மாவட்டம், மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தரஉள்ளதால் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, கூடுதல் போக்குவரத்து வசதி, மலையேறும் வழியில் மின்விளக்கு வசதிகள் மற்றும் மலை அடிவாரத்தில் மருத்துவ வசதி செய்வது மற்றும் மலை மீது ஏறி செல்ல பக்தர்களிடையே கட்டுப்பாடுகள் விதித்து எவ்வளவு பக்தர்கள் செல்ல வேண்டும் என முன்னதாக வரையறுக்கப்பட்டு மலை மீது செல்பவர்களுக்கு கட்டாயம் ஆதார் கார்டு நகல் மற்றும் மொபைல் எண் பெற்றுக் கொண்டு அனுமதிக்க வேண்டும்.

    மேலும் மலை உச்சியில் நீண்ட நேரம் பக்தர்களை ஓய்வெடுக்க அனுமதிக்க கூடாது எனவும் வழியில் அதற்கான ஏற்பாடுகளை செய்யப்பட வேண்டும் உட்பட பல்வேறு கருத்துகள் பற்றி கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது.

    கூட்டத்தில் கலசப்பாக்கம் ஒன்றிய குழு தலைவர் அன்பரசி ராஜசேகரன், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் பாரதி ராமஜெயம், அறங்காவலர் குழு தலைவர் ராமன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணியன், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் சிவகுமார், ஒன்றிய கவுன்சிலர் கலையரசிதுரை, ஊராட்சி மன்ற தலைவர் எழில்மாறன் மற்றும் அரசு அலுவலர்கள் இந்து சமய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • 29 தேதி முதல் 1ம் தேதி முடிய காலை சுவாமி படிச்சட்டத்திலும் இரவு வாகனத்திலும் சுவாமி புறப்பாடு நடைபெற உள்ளது.
    • கார்த்திகை தீபம் ஏற்றி திருவீதியில் சொக்கப்பனை கொளுத்துதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    சுவாமிமலை:

    அறுபடை வீடுகளில் நான்காம் படைவீரான சுவாமிமலை அருள்மிகு சுவாமிநாதசாமி திருக்கோ விலில் திருக்கார்த்திகை திருவிழா வருகின்ற 27ந் தேதிதொடங்கி 8-ந் தேதி வரை 12 நாட்கள் சிறப்பாக நடைபெற உள்ளது.

    இதனை முன்னிட்டு வருகின்ற 27 ஆம் தேதி இரவு விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கப்பட்டு 28ஆம் தேதி காலை கொடியேற்றமும் விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், பரிவாரங்களுடன் படி இறங்கி உற்சவ மண்டபம் எழுந்தருதல் நிகழ்ச்சியும் இரவு திருவீதி உலா நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து மறுநாள் 29 தேதி முதல் 1ம் தேதி முடிய காலை சுவாமி படிச்சட்டத்திலும் இரவு வாகனத்திலும் சுவாமி புறப்பாடு நடைபெற உள்ளது.

    அதனை தொடர்ந்து 2 - ந் தேதி அன்று காலை சுவாமி படிச்சிட்டத்திலும் இரவு பஞ்ச மூர்த்திகளுடன் 5 சப்பரத்தில் எழுந்து திருவீதி உலா நடைபெற உள்ளது. மறுநாள் 3ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை காலை சுவாமி படிச்சட்டத்திலும் இரவு வாகனத்திலும் சுவாமி புறப்பாடு நடைபெற உள்ளது.

    அதனை தொடர்ந்து மறுநாள் 6-ம் தேதி திருக்கார்த்திகை தினத்தன்று காலை திருத்தேர் வடம் பிடித்து திருவீதி புறப்பாடும் இரவு தங்கமயில் மற்றும் வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்று கார்த்திகை தீபம் ஏற்றி திருவீதியில் சொக்கப்பனை கொளுத்துதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    மறுநாள் ஏழாம் தேதி அன்று சுவாமி தீர்த்தவாரி நிகழ்ச்சியும் இரவு அவரோகணம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    இதனை முன்னிட்டு பல லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என முன்னெச்சரிக்கையாக காவல்துறை, சுகாதா ரத்துறை, பேரூராட்சி, தீயணைப்புத்துறை, போக்குவரத்து துறை, பொதுப்பணித்துறை, மின்சார துறை, மற்றும் தொலைதொடர்புத் துறை ஆகிய துறை அதிகாரிகளுடன் கலந்து பக்தர்களுக்கான சிறப்பு வசதிகள் செய்ய முன்னேற்பாடுகளை கோவில் துணை ஆணையர் உமாதேவி கோவில் கண்காணிப்பாளர்கள் சுதா, பழனிவேல், மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • வந்தவாசியில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு நடவடிக்கை
    • சமூக விரோதிகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக போலீசாருக்கு தகவல்

    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த வெண்குன்றம் கிராமத்தில் ஸ்ரீ தவளகிரீஸ்வரர் மலை கோவிலில் சமூக விரோதிகள் அதிகமாக நடமாட்டம் இருப்பதால் போலீசா ர் தடுப்பு வேலி அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    வெண்குன்றம் கிராமத்தில் மிகப்பெரிய மலை உள்ளது இந்த மலையில் 1440 அடி உயரத்தில் அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் கோவில் உள்ளது. இந்த மலை மீது வந்தவாசி சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கார்த்திகை மாதம் தீபம் அன்று மலை ஏற்றுவது வழக்கம்.

    புகழ் பெற்ற இந்த மலையில் உள்ள ஸ்ரீ தவளகிரீஸ்வரர் கோவிலை கடந்த ஆகஸ்டு மாதம் சமூக விரோதிகள் சேதப்படுத்தி உள்ளனர். மேலும் தற்போது இந்த மலையில் சமூக விரோதிகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததின் அடிப்படையில் மலையின் அடிவாரத்தில் போலீசார் தடுப்பு வேலி அமைத்து தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்களை தீவிரமாக சோதனை செய்த பிறகு அவர்களுடைய முழு விலாசத்தை பெற்றுக் கொண்ட பிறகு தான் மலையின் மீது ஏற அனுமதித்து வருகின்றனர்.

    கோவை குண்டுவெடிப்பு சம்பவம் நடந்த நிலையில் தற்போது வந்தவாசி அடுத்த வெண்குன்றம் மலையின் அடிவாரத்தில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் சம்பவம் வந்தவாசி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • அழகர்மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது.
    • மாலை 6.15 மணிக்கு மேல் 7 மணிக்குள் தீபம் ஏற்றப்படும்.

    மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோவில் துணை ஆணையர் ராமசாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கள்ளழகர் கோவிலில் கார்த்திகை தீப உற்சவம் வருகிற 7-ந் தேதி (புதன்கிழமை) பவுர்ணமியன்று நடக்கிறது.

    அன்று காலையில் சுந்தரராஜப்பெருமாள் கள்ளழகருக்கு ஏகாந்த திருமஞ்சனம் நடத்தி பெரிய தோளுக்கினியானில் சுந்தரராஜப்பெருமாள் கள்ளழகரை எழுந்தருளச் செய்கிறார்.

    பின்னர் திருமடப்பள்ளி யில் உள்ள நாச்சியாருக்கு திருமஞ்சனம் செய்து, நாச்சியார் முன் புன்னியவசனம், தீப பூஜை நடத்திய பிறகு மாலை 6.15 மணிக்கு மேல் 7 மணிக்குள் நெய் தீபங்களை பெருமாள் சன்னதி, விஷ்வக்சேனர் சன்னதி, சேத்திரபாலகர் சன்னதி, கருடன் சன்னதி, தாயார் சன்னதி, சக்கரத்தாழ்வார் சன்னதி, நரசிம்மர் சன்னதி, ஆண்டாள் சன்னதி, சரஸ்வதி சன்னதி, கம்பத்தடி போன்ற சன்னதிகளில் தீபங்கள் ஏற்றப்படுகிறது.

    பிராம்ன சீர்பாதமாக பெருமாளை தெற்கு படியேற்றத்தின் வழியாக பிரகாரம் எழுந்தருளி ஆழ்வார்கள் சன்னதியில், தீர்த்தம், சடாரி, கோஷ்டி நடந்து பெருமாளை தீபத்துடன் குடவரை வழியாக உறியடி மண்டபத்திற்கு மேல்புறம் பார்சட்டத்தில் எழுந்தருளச்செய்கிறார்.

    பின்னர் புன்னியவசனம் சொக்கப்பானை, புரோ ஷேனை, பூஜை நடந்த பிறகு அகல் தீபத்தை சொக்கப்பானையில் கொளுத்தி பெருமாள் தீப உற்சவம் நடைபெறும்.

    மேலும் அழகர்மலையின் உச்சியில் அமைந்துள்ள வெள்ளிமலையாண்டி கோவில் கோம்பை கொப்பரையில் 200 லிட்டர் நெய் ஊற்றி மாலை 6.15 மணிக்கு மேல் 7 மணிக்குள் தீபம் ஏற்றப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தயாரித்த விளக்குகளை வெயிலில் நன்கு காயவைத்து அதை சுடுவலையில் அடுக்கி தீயில் இட்டு தயார் செய்கின்றனர்.
    • பனி மூட்டமாக இருப்பதாலும் அகல்விளக்குகளை வெயிலில் காய வைக்க முடியாமல் தொழிலாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான கார்த்திகை தீப திருவிழா அடுத்த மாதம் (டிசம்பர்) 6-ந் தேதி கொண்டாடப்படுகிறது.

    அன்றைய தினம் வீடுகளில் வரிசையாக தீபங்கள் ஏற்றி அழகுபடுத்துவது வழக்கம். இதுபோல் கோவில்களிலும், பக்தர்கள் புதிய விளக்குகளில் தீபங்கள் ஏற்றுவர். அகல் விளக்கு என்பது எண்ணெய் விளக்கின் ஒரு வகையாகும்.

    இது பொதுவாக களி மண்ணால் செய்யப்பட்டு, பருத்தி திரியால், நெய் அல்லது நல்லெண்ணை கொண்டு எரியூட்டப்படும். விளக்கேற்றுவ தால் துன்ப இருள் அகற்றப்பட்டு மகாலட்சுமி வாசம் செய்வாள் என்று நம்பப்படுகிறது.

    இப்படி சிறப்பு வாய்ந்த தீபத்திரு விழாவையொட்டி, தமிழகத்தில் பல்வேறு இடங் களில் அகல்விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரமடைந்து வருகிறது.

    தஞ்சை கீழவாசல் பழைய மாரியம்மன்கோவில் சாலை சாலக்காரத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் அகல்விளக்குகள் தயாரிக்கும் பணியில் மண்பாண்டத் தொழிலாளா்கள் தீவிரம் காட்டி வருகின்றனா்.

    கடந்த சில நாட்களாக இப்பகுதியில் தொடா் மழை இருந்து வந்த நிலையில், தற்காலிகமாக அகல்விளக்குகள் தயாரிக்கும் பணியை நிறுத்தி வைத்திருந்தனா். தற்போது மழை ஓய்ந்ததால் அகல்விளக்குகள் தயாரிக்கும் பணியில் மண்பாண்டத் தொழிலாளா்கள் மும்முரம் காட்டி வருகின்றனா்.

    ஒரு முகவிளக்கு, 5 முக விளக்கு என பல அளவுகளில் அகல் விளக்கை வடிவமைக்கிறார்கள். அதன்பின்னர் தயாரித்த விளக்குகளை வெயிலில் நன்கு காயவைத்து அதை சுடுவலையில் அடுக்கி தீயில் இட்டு தயார் செய்கின்றனர்.

    இப்பகுதியில் தயாரிக்கப்படும் அகல்விளக்குகள் தஞ்சை மட்டுமின்றி பிற ஊர்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. தற்போது மழை பெய்து ஓய்ந்தாலும் அவ்வப்போது மேகமூட்டம் திரள்வதாலும், பனி மூட்டமாக இருப்பதாலும் அகல்விளக்குகளை வெயிலில் காய வைக்க முடியாமல் தொழிலாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    மேலும் அகல்விளக்குகளை தீயில் சுடுவதற்கு தேவையான வைக்கோல், தென்னை மட்டை, கீற்றுகளும் மழையில் நனைந்ததை காய வைக்க முடியவில்லை.

    இதனால் 7 நாட்களில் முடிய வேண்டிய பணி கூடுதல் நாட்கள் ஆகிறது.

    இது குறித்து அகல்விளக்கு தயாரிப்புப் பணியில் ஈடுபட்டு வருபவர்கள் கூறுமபோது,

    கார்த்திகை தீபத்திரு விழாவிற்கான அகல் விளக்குகள் தயாரிப்பு பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. மழைக்கால மாக இருப்பதால், மண்ணை பதப்படுத்தி, விளக்குகள் தயாரிப்பதில் சிக்கல் உள்ளது.

    பனிப்பொழிவு காரணமாக விளக்குகளை காய வைக்க முடியாத நிலை உள்ளது. ஒருமுகம் கொண்ட 3 விளக்குகள் ரூ.10-க்கும், 5 முக விளக்கு ஒன்று ரூ.70-க்கும், 7 முக விளக்கு ஒன்று ரூ.90-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி எங்களுக்கு வேலை இருக்கும். அதன்பிறகு கட்டிட வேலைக்கும், ஓட்டல் வேலைக்கும், பிற கூலி வேலைக்கும் தான் செய்கிறோம்.

    மாதம்தோறும் ரூ.3 ஆயிரம் கிடைக்க அரசு வழிவகை செய்ய வேண்டும். நாங்கள் தயாரிக்கும் அகல்விளக்குகளை மாவட்ட நிர்வாகமே கொள்முதல் செய்ய வேண்டும். எங்கள் தெருவில் காலிமனை உள்ளது.

    அந்த இடத்தில் அகல்விளக்குகள் தயாரிக்க மேற்கூரை அமைத்து கொடுத்தால் மழை காலத்திலும் அகல்விளக்குகள் நனையாமல் இருக்க வசதியாக இருக்கும். அகல்விளக்குகள் தயாரிக்க உதவும் மண் திருவை வழங்க வேண்டும் என்றார்.

    ×