என் மலர்
மேற்கிந்தியத் தீவு
- இந்தியாவின் ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா சதமடித்து அசத்தினர்.
- முதல் விக்கெட்டுக்கு இந்திய ஜோடி 229 ரன்கள் சேர்த்தது.
டொமினிகா:
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் டொமினிகாவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் அஸ்வின் 5 விக்கெட், ஜடேஜா 3 விக்கெட், சிராஜ், ஷர்துல் தாக்குர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, இந்திய அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. முதல் நாள் முடிவில், இந்தியா விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் எடுத்திருந்தது. ஜெய்ஸ்வால் 40 ரன்னும், ரோகித் சர்மா 30 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்நிலையில், 2-வது நாளான இன்று இந்திய அணி பேட்டிங்கை தொடர்ந்தது. ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா பொறுப்புடன் ஆடினர்.
இதையடுத்து, அறிமுக வீரரான ஜெய்ஸ்வால் தனது முதல் போட்டியிலேயே சதமடித்து அசத்தினார். தொடக்க ஜோடி 200 ரன்களைக் கடந்து ஆடி வருகிறது. ஜெய்ஸ்வால் 215 பந்துகளில் சதமடித்தார். அவரை தொடர்ந்து கேப்டன் ரோகித் சர்மாவும் சதமடித்து அசத்தினார். ஆனால் 103 ரன்னில் அவுட்டானார்.
முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 229 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. அடுத்து இறங்கிய சுப்மான் கில் 5 ரன்னில் அவுட்டானார்.
தொடர்ந்து இறங்கிய விராட் கோலி ஜெய்ஸ்வாலுடன் ஜோடி சேர்ந்து பொறுமையாக ஆடினார்.
இறுதியில், இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 2 விக்கெட்டுக்கு 312 ரன்கள் எடுத்துள்ளது. ஜெய்ஸ்வால் 143 ரன்னும், விராட் கோலி 36 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். தற்போது வரை இந்தியா 162 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
- இந்தியாவின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அறிமுக டெஸ்டில் சதமடித்தார்.
- அவரை தொடர்ந்து கேப்டன் ரோகித் சர்மாவும் சதமடித்து அசத்தினார்.
டொமினிகா:
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் டொமினிகாவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்தியா சார்பில் அஸ்வின் 5 விக்கெட், ஜடேஜா 3 விக்கெட், சிராஜ், ஷர்துல் தாக்குர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, இந்திய அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. முதல் நாள் முடிவில், இந்தியா விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் எடுத்திருந்தது. ஜெய்ஸ்வால் 40 ரன்னும், ரோகித் சர்மா 30 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்நிலையில், 2-வது நாளான இன்று இந்திய அணி பேட்டிங்கை தொடர்ந்தது. ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா பொறுப்புடன் ஆடினர்.
இதையடுத்து, அறிமுக வீரரான ஜெய்ஸ்வால் தனது முதல் போட்டியிலேயே சதமடித்து அசத்தினார். தொடக்க ஜோடி 200 ரன்களைக் கடந்து ஆடி வருகிறது. ஜெய்ஸ்வால் 215 பந்துகளில் 11 பவுண்டரி உள்பட 100 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார்.
அவரை தொடர்ந்து கேப்டன் ரோகித் சர்மாவும் சதமடித்து அசத்தினார். ஆனால் 103 ரன்னில் அவுட்டானார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 229 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.
- முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- இந்தியா சார்பில் அஸ்வின் 5 விக்கெட் வீழ்த்தினார்.
டொமினிகா:
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டொமினிகாவில் உள்ள வின்ட்சர் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 64.3 ஓவரில் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் ஆலிக் அதானஸ் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து 47 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்தனர்.
இந்தியா சார்பில் அஸ்வின் 5 விக்கெட், ஜடேஜா 3 விக்கெட், சிராஜ், ஷர்துல் தாக்குர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, இந்திய அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா களமிறங்கினர். இருவரும் நிதானமாக ஆடினர். முதல் நாள் முடிவில், இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் எடுத்திருந்தது. ஜெய்ஸ்வால் 40 ரன்னும், ரோகித் சர்மா 30 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்நிலையில், 2-வது நாளான இன்று இந்திய அணி பேட்டிங்கை தொடர்ந்தது. ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா பொறுப்புடன் ஆடினர்.
இதையடுத்து, அறிமுக வீரரான ஜெய்ஸ்வால் தனது முதல் போட்டியிலேயே சதமடித்து அசத்தினார். தொடக்க ஜோடி 200 ரன்களைக் கடந்து ஆடி வருகிறது. ஜெய்ஸ்வால் 215 பந்துகளில் 11 பவுண்டரி உள்பட 100 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார்.
- முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- இந்திய வீரர் அஸ்வின் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
டொமினிகா:
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டொமினிகாவில் உள்ள வின்ட்சர் பார்க் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 64.3 ஓவரில் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் ஆலிக் அதானஸ் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து 47 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்தனர்.
இந்தியா சார்பில் அஸ்வின் 5 விக்கெட், ஜடேஜா 3 விக்கெட், சிராஜ், ஷர்துல் தாக்குர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, இந்திய அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா களமிறங்கினர். இருவரும் நிதானமாக ஆடினர்.
முதல் நாள் முடிவில், இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் எடுத்துள்ளது. ஜெய்ஸ்வால் 40 ரன்னும், ரோகித் சர்மா 30 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
- சர்வதேச கிரிக்கெட்டில் 700 விக்கெட்கள் வீழ்த்தி அஸ்வின் சாதனை படைத்துள்ளார்.
- கும்ப்ளே, ஹர்பஜன் சிங் ஆகியோர் சர்வதேச கிரிக்கெட்டில் 700 விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர்.
டொமினிகா:
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டொமினிகாவில் தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு செய்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 64.3 ஓவரில் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆலிக் அதானஸ் மட்டும் 47 ரன்கள் எடுத்தார். இந்தியா சார்பில் அஸ்வின் 5 விக்கெட், ஜடேஜா 3 விக்கெட் வீழ்த்தினர்.
இந்நிலையில், இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் 700 விக்கெட்கள் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். 700 விக்கெட் வீழ்த்திய 3வது வீரர் அஸ்வின் ஆவார்.
இதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 477 விக்கெட்டும், ஒருநாள் போட்டிகளில் 151 விக்கெட்டும், டி20 போட்டிகளில் 72 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார்.
ஏற்கனவே அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங் ஆகியோர் சர்வதேச கிரிக்கெட்டில் 700 விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர்.
- டாஸ் வென்று முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- இத்தொடர் 3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்குட்பட்டது என்பதால் முக்கியத்துவம் பெறுகிறது.
டொமினிகா:
வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. முதலில் டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது.
அதன்படி இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டொமினிகாவில் உள்ள வின்ட்சர் பார்க் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆரம்பம் முதல் இந்திய அணி அசத்தலாக பந்து வீசியது. குறிப்பாக, அஸ்வின், ஜடேஜா சுழலில் அந்த அணி சிக்கியது.
அந்த அணியின் ஆலிக் அதானஸ் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து 47 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்தனர்.
இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 64.3 ஓவரில் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்தியா சார்பில் அஸ்வின் 5 விக்கெட், ஜடேஜா 3 விக்கெட், சிராஜ், ஷர்துல் தாக்குர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, இந்திய அணி முதல் இன்னிங்சில் களமிறங்குகிறது.
இந்த தொடர் 3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்குட்பட்டது என்பதால் அந்த வகையில் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.
- டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் பிராத்வெயிட் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
- வெஸ்ட் இண்டீஸ் அணியில் அலிக் அதானேஸ் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகிறார்.
இந்திய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது. இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி டொமினிகாவில் உள்ள ரோசவ்வில் இன்று தொடங்கியது.
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் பிராத்வெயிட் பேட்டிங்கை தேர்வு செய்தார். ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி பந்துவீசுகிறது. இந்திய அணியில் இடதுகை பேட்ஸ்மேனும் துவக்க வீரருமான யாஷாஸ்வி ஷெய்ஸ்வால் மற்றும் விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் ஆகியோர் சர்வதேச டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆகின்றனர். இதேபோல் வெஸ்ட் இண்டீஸ் அணியில் அலிக் அதானேஸ் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகிறார்.

அணிகள் விவரம்:
வெஸ்ட் இண்டீஸ்: கிரைக் பிராத்வெயிட் (கேப்டன்), சந்தர்பால், ரெமன் ரெய்பர், பிளாக்வுட், அலிக் அதானேஸ், ஜேசன் ஹோல்டர், ஜோசுவா டி சில்வா, ரக்கீம் கான்வால், அல்சாரி ஜோசப், கேமர் ரோச், ஜோமல் வாரிகன்.
இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), யாஷாஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, ரகானே, ரவீந்திர ஜடேஜா, இஷான் கிஷன், அஸ்வின், ஷர்துல் தாக்கூர், ஜெய்தேவ் உனாத்கட், முகமது சிராஜ்.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பிராத்வெயிட், சந்தர்பால் இருவரும் துவக்க வீரர்களாக களமிறங்கினர்.
- ஜெய்ஸ்வால் அறிமுக வீரராக களம் இறங்குவார் என கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.
- பிளேயிங் லெவனில் 2 சுழற் பந்துவீச்சாளர்கள் இடம் பெறுவார்கள் என இந்திய அணி கேப்டன் கூறினார்.
டொமினிகா:
இந்திய அணி 2 டெஸ்ட் போட்டி, 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதலில் டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது.
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டொமினிகாவில் இன்று தொடங்குகிறது.
இந்திய அணியில் புஜாராவின் இடத்தில் யார் பிளேயிங் லெவனில் இடம் பெறப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது.
இந்நிலையில், இன்றைய ஆட்டத்தில் ஜெய்ஸ்வால் அறிமுக வீரராகவும், தொடக்க வீரராகவும் களம் இறங்குவார் என கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.
இந்திய அணியின் 3-வது வரிசை வீரராக ஷுப்மன் கில் களமிறங்குவார். இந்திய அணியின் பிளேயிங் லெவனில் 2 சுழற் பந்துவீச்சாளர்கள் இடம் பெறுவார்கள் என தெரிவித்துள்ளார்.
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் போட்டி இந்திய நேரப்படி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
- வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பதவியை ராஜினாமா செய்வதாக நிக்கோலஸ் பூரன் அறிவித்தார்.
- வெஸ்ட் இண்டீஸ் ,தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2 டெஸ்ட் 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடவுள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 டி20 உலக கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் முதல் சுற்றுடன் வெளியேறியது. இதையடுத்து கேப்டன் பதவியை ராஜினாமா செய்வதாக நிக்கோலஸ் பூரன் அறிவித்தார்.
மேலும் ஒரு பேட்டராகவும் அவர் பங்களிப்பு அந்த தொடரில் மோசமாகவே இருந்தது. அதற்குப் பிறகு வரும் மார்ச் மாதத்தில் தான் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் அந்த அணி விளையாடவுள்ளது.
இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் போட்டி அணிக்கு ஷாய் ஹோப், டி20 அணிக்கு ரோவ்மேன் பவலும் கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
வெஸ்ட் இண்டீஸ் ,தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2 டெஸ்ட் 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடவுள்ளது.
- வங்காளதேச அணி சார்பில் ஷாகிப் அல் ஹசன் 5 விக்கெட்டுகளும், எபடோட் ஹொசைன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
- 50 ரன்கள் பார்டன்ர்ஷிப் அமைத்து வங்கதேச அணியை வெற்றிபாதைக்கு அழைத்து சென்றனர்.
இந்திய கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக வங்காளதேசம் சென்றுள்ளது. இந்தியா-வங்காளதேசம் அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மிர்புரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்தது.
அண்மையில் நடந்த நியூசிலாந்து தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டு இருந்த கேப்டன் ரோகித் சர்மா, விராட்கோலி, லோகேஷ் ராகுல் ஆகியோர் இந்திய அணிக்கு திரும்பி இருக்கின்றனர். முன்னணி வீரர்கள் திரும்பி இருப்பதால் அணி மேலும் வலுப்பெற்று இருக்கிறது.
இந்நிலையில் இன்று நடைபெற இருக்கும் முதலாவது ஒருநாள் போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, ஷிகர் தவான் களமிறங்கினர். தொடக்கத்தில் தவான், 7 ரன்களிலும், ரோகித் சர்மா 27 ரன்களிலும் வெளியேறினர்.
பின்னர் வந்த விராட் கோலி 9 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த வீரர்களில் கே.எல்.ராகுல் மட்டும் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தார். நிலைத்து ஆடிய அவர் அரைசதம் அடித்தார்.மறுபுறம் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
இறுதியில் 41.2 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்தது. அதிகபட்சமாக ராகுல் 73ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். வங்காளதேச அணி சார்பில் ஷாகிப் அல் ஹசன் 5 விக்கெட்டுகளும், எபடோட் ஹொசைன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து 187 ரன்கள் இலக்குடன் வங்காளதேச அணி விளையாடியது.
இதையடுத்து 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்காளதேச அணி இந்திய அணியின் அபார பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் திணறியது. முதல் ஓவரிலே சாண்டோ விக்கெட்டை தீபக் சாஹார் வீழ்த்தி அந்த அணிக்கு அதிர்ச்சியளித்தார்.
இதனை தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் லிண்டன் தாஸ் 41 ரன்களுக்கு ஷாகிப் ஆல் ஹாசன் 29 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். தொடர்ந்து சீரான இடைவெளியில் வங்காளதேச அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது 136 ரன்களுக்கு 9 விக்கெட்டை இழந்து இருந்ததால் வெற்றி இந்திய அணியின் பக்கம் இருந்தது கடைசி விக்கெட்டுக்கு ஹாசன் மிர்ஸ் மற்றும் முஸ்தாபிசுர் ரகுமான் இந்திய அணிக்கு அதிர்ச்சி அளித்தனர்.
கடைசி விக்கெட்டிற்கு இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடினர். 50 ரன்கள் பார்டன்ர்ஷிப் அமைத்து வங்கதேச அணியை வெற்றிபாதைக்கு அழைத்து சென்றனர். பரபரப்பாக சென்ற போட்டியில் வங்காளதேச அணி 40 ஓவர்களில் 9 விக்கெட் இழந்து 187 ரன்கள் எடுத்து, ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஹெட்மயர் ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் விமானத்தை தவறவிட்டார்.
- இதனால் அவர் டி 20 உலகக்கோப்பை தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
செயின்ட் லூசியா:
டி20 உலகக் கோப்பை தொடர் வரும் 16-ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்க உள்ளது. இதற்கான வீரர்களை போட்டியில் பங்குபெறும் நாடுகள் அறிவித்துள்ளதோடு, போட்டிகளில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவுக்கு செல்ல தயாராகி வருகிறது.
வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிரடி ஆட்டக்காரர் ஷிம்ரன் ஹெட்மயர் டி20 உலகக் கோப்பைக்கான அணியில் இடம்பெற்றிருந்தார்.
இந்நிலையில், உலக கோப்பை போட்டியில் பங்கேற்க ஆஸ்திரேலியாவுக்கு செல்லக்கூடிய விமானத்தை ஹெட்மயர் தவறவிட்டார். இதன் காரணமாக அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
ஷிம்ரன் ஹெட்மயருக்கு பதிலாக 34 வயதான ஷமர் ப்ரூக்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
- முதலில் ஆடிய நியூசிலாந்து 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 215 ரன் குவித்தது.
- 3 போட்டி கொண்ட தொடரை நியூசிலாந்து 2-0 என கைப்பற்றியது.
ஜமைக்கா:
நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது.
இரு அணிகள் மோதிய 2வது டி20 ஓவர் போட்டி கிங்ஸ்டனில் நடந்தது.
முதலில் ஆடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் குவித்தது. கிளென் பிலிப்ஸ் அதிரடியாக ஆடினார். அவர் 41 பந்தில் 76 ரன்னும், டேரில் மிட்செல் 20 பந்தில் 48 ரன்னும் குவித்தனர். கான்வே 34 பந்தில் 42 ரன்னும் எடுத்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஒபெட் மெக்காய் 3 விக்கெட் கைப்பற்றினார்.
இதையடுத்து, 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. அந்த அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 125 ரன் மட்டுமே எடுத்தது. இதனால் அந்த அணி 90 ரன் வித்தியாசத்தில் தோற்றது.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டி கொண்ட டி20 தொடரை நியூசிலாந்து 2-0 என கைப்பற்றியுள்ளது. 3-வது 20 ஓவர் போட்டி நாளை நடக்கிறது.






