என் மலர்
மேற்கிந்தியத் தீவு
- இந்திய அணி முதல் இன்னிங்சில் 438 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 255 ரன்கள் எடுத்துள்ளது.
டிரினிடாட்:
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி டிரினிடாடில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 438 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சிறப்பாக ஆடி சதமடித்த விராட் கோலி 121 ரன்னில் ஆட்டமிழந்தார். ரோகித் சர்மா 80 ரன்னும், ஜடேஜா 61 ரன்னும், யஷஸ்வி ஜெய்ஷ்வால் 57 ரன்னும், அஷ்வின் 56 ரன்னும் எடுத்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் கீமர் ரோச், வாரிகன் தலா 3 விக்கெட்டும், ஹோல்டர் 2 விக்கெட்டும் எடுத்தனர்.
இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்சில் களமிறங்கியது. பிராத்வெய்ட் 75 ரன்கள் எடுத்தனர். அலிக் 37 ரன்னும், சந்தர்பால் 33 ரன்னும், மெக்கென்சி 32 ரன்னும் எடுத்தனர். மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது தடைப்பட்டது. 3ம் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 5 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்துள்ளது.
இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. சிராஜின் பந்துவீச்சில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் விரைவில் அவுட்டாகினர்.
இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில 255 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்திய அணி 183 ரன்கள்
முன்னிலை பெற்றுள்ளது.
இந்தியா சார்பில் சிராஜ் 5 விக்கெட்டும், முகேஷ்குமார், ஜடேஜா தலா 2 விக்கெட்டும், அஸ்வின் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
- முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி 10 விக்கெட்டுகளையும் இழந்து 438 ரன்கள் குவித்தது.
- 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 41 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்தது.
இந்திய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது.
இரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் டெஸ்டில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி டிரினிடாடில் நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. தொடக்க வீரர்களான ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால் ஆகியோர் அரை சதமடித்து அசத்தினர். ரோகித் சர்மா 80 ரன்னும், ஜெய்ஸ்வால் 57 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். முதல் நாள் முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 288 ரன்கள் எடுத்திருந்தது.
விராட் கோலி 87 ரன்னும், ஜடேஜா 36 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்நிலையில், இரண்டாவது நாள் ஆட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது. விராட் கோலி சிறப்பாக ஆடி சதமடித்து அசத்தினார். ஜடேஜாவும் அரை சதமடித்தார். 500- வது சர்வதேச போட்டியில் விளையாடும் விராட் கோலி சதமடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், யாஷவி ஜெய்ஷ்வால் 57 ரன்களும், அஷ்வின் 56 ரன்களும், இஷான் கிஷான் 25 ரன்களும், ஷூப்மன் கில் 10 ரன்களும், ராகானே 8 ரன்களும், ஜெய்தேவ் 7 ரன்களும் எடுத்தனர். சிராஜ் மற்றும் முகேஷ் குமார் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.
இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி 10 விக்கெட்டுகளையும் இழந்து 438 ரன்கள் குவித்தது.
இதைதொடர்ந்து, வெஸ்ட் இண்டீஸ் தனது முதல் இன்னிங்சை விளையாட தொடங்கியது. இந்த அணியில் தொடக்க வீரர்களாக கேப்டன் கிரேக் பிராத்வெய்ட் மற்றும் சந்தர்பால் இருவரும் களமிறங்கினர். இதில், சந்தர்பால் 33 ரன்களில் அவுட்டானார். பின்னர், கிர்க் மெக்சென்சி களமிறங்கினார். பிராத்வெய்ட் 37 ரன்களுடனும், மெக்கென்சி 14 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
2ம் நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 41 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்தது.
இந்நிலையில், 3ம் நாள் ஆட்டம் நேற்று தொடங்கியது. களத்தில் இருந்த பிராத்வெய்ட் மற்றும் மெக்கென்சி ஆட்டத்தை தொடங்கினர். இதில், பிராத்வெய்ட் அரை சதம் அடித்து 75 ரன்கள் எடுத்தார். மெக்கென்சி 32 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
தொடர்ந்து, விளையாடிய பிளாக்வுட் 20 ரன்களும், ஜோஷ்வா டா சில்வா 10 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
தற்போது, அலிக் 37 ரன்களுடனும், ஜேசன் ஹோல்டர் 11 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இந்நிலையில், 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 108 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்துள்ளது.
- முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி 4 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்தது.
- நேர்த்தியான ஆட்டத்தை வேளிப்படுத்திய இந்திய வீராங்கனை ஹர்லீன் தியோல் 77 ரன்கள் குவித்தார்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. முதலில் 3 டி20 போட்டிகளில் இந்திய மகளிர் அணி 2-1 என தொரை கைப்பற்றியது. இதையடுத்து நடைபெற்ற ஒருநாள் தொடரில் 2 போட்டிகள் நிறைவடைந்த நிலையில் 1-1 என ஒருநாள் தொடர் சமனில் இருந்தது.
தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்தது. வங்காளதேச அணி தரப்பில் பர்கானா 105 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து 226 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய மகளிர் அணியின் தொடக்க வீராங்கனை ஷாபாலி வர்மா 4 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த யாஷ்டிகா 5 ரன்களில் வெளியேறினார்.
தொடர்ந்து ஸ்மிருதி மந்தனா, ஹர்லீன் தியோல் இணைந்து சிறப்பாக விளையாடினார். அரை சதம் அடித்த மந்தனா 59 ரன்களில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஹர்மான்ப்ரீத் கவுர் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் நேர்த்தியான ஆட்டத்தை வேளிப்படுத்திய ஹர்லீன் தியோல் 77 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
அதன்பின் களமிறங்கிய வீராங்கனைகள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். கடைசி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 3 ரன்கள் தேவைப்பட்டது. 1 விக்கெட் கைவசம் இருந்தது. ஆனால் அந்த ஓவரில் மருபா அக்டர் வீசிய முதல் 2 பந்தில் 2 ரன்கள் எடுத்த நிலையில், மேக்னா சிங் அவுட் ஆனார். இதனால் இந்திய அணி 49.3 ஓவரில் 225 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனால் போட்டி டையில் முடிந்தது. அத்துடன், இந்தியா - வங்காளதேச அணிகளுக்கு இடையேயான மகளிர் ஒருநாள் தொடர் 1-1 என சமனில் முடிந்தது.
- 500- வது சர்வதேச போட்டியில் விளையாடும் விராட் கோலி சதமடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி 10 விக்கெட்டுகளையும் இழந்து 438 ரன்கள் குவித்தது.
இந்திய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் டெஸ்டில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி டிரினிடாடில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. தொடக்க வீரர்களான ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால் ஆகியோர் அரை சதமடித்து அசத்தினர்.
ரோகித் சர்மா 80 ரன்னும், ஜெய்ஸ்வால் 57 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். முதல் நாள் முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 288 ரன்கள் எடுத்திருந்தது. விராட் கோலி 87 ரன்னும், ஜடேஜா 36 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்நிலையில், இரண்டாவது நாள் ஆட்டம் நேற்று தொடங்கியது. விராட் கோலி சிறப்பாக ஆடி சதமடித்து அசத்தினார். ஜடேஜாவும் அரை சதமடித்தார். 500- வது சர்வதேச போட்டியில் விளையாடும் விராட் கோலி சதமடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், யாஷவி ஜெய்ஷ்வால் 57 ரன்களும், அஷ்வின் 56 ரன்களும், இஷான் கிஷான் 25 ரன்களும், ஷூப்மன் கில் 10 ரன்களும், ராகானே 8 ரன்களும், ஜெய்தேவ் 7 ரன்களும் எடுத்தனர். சிராஜ் மற்றும் முகேஷ் குமார் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.
இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி 10 விக்கெட்டுகளையும் இழந்து 438 ரன்கள் குவித்தது.
இதைதொடர்ந்து, வெஸ்ட் இண்டீஸ் தனது முதல் இன்னிங்சை விளையாட தொடங்கியது.
இந்த அணியில் தொடக்க வீரர்களாக கேப்டன் கிரேக் பிராத்வெய்ட் மற்றும் சந்தர்பால் இருவரும் களமிறங்கினர்.
இதில், சந்தர்பால் 33 ரன்களில் அவுட்டானார். பின்னர், கிர்க் மெக்சென்சி களமிறங்கினார்.
பிராத்வெய்ட் 37 ரன்களுடனும், மெக்கென்சி 14 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில், 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 41 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்துள்ளது.
- விராட் கோலி சிறப்பாக ஆடி சதமடித்து அசத்தினார்.
- ஜடேஜாவும் அரை சதமடித்தார்.
இந்திய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது.
இரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் டெஸ்டில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி டிரினிடாடில் நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது.
தொடக்க வீரர்களான ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால் ஆகியோர் அரை சதமடித்து அசத்தினர். ரோகித் சர்மா 80 ரன்னும், ஜெய்ஸ்வால் 57 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.
முதல் நாள் முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 288 ரன்கள் எடுத்திருந்தது. விராட் கோலி 87 ரன்னும், ஜடேஜா 36 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்நிலையில், இரண்டாவது நாள் ஆட்டம் நேற்று தொடங்கியது. விராட் கோலி சிறப்பாக ஆடி சதமடித்து அசத்தினார்.
ஜடேஜாவும் அரை சதமடித்தார். 500- வது சர்வதேச போட்டியில் விளையாடும் விராட் கோலி சதமடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், யாஷவி ஜெய்ஷ்வால் 57 ரன்களும், அஷ்வின் 56 ரன்களும், இஷான் கிஷான் 25 ரன்களும், ஷூப்மன் கில் 10 ரன்களும், ராகானே 8 ரன்களும், ஜெய்தேவ் 7 ரன்களும் எடுத்தனர்.
சிராஜ் மற்றும் முகேஷ் குமார் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.
இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி 10 விக்கெட்டுகளையும் இழந்து 438 ரன்கள் குவித்துள்ளது.
இதைதொடர்ந்து, வெஸ்ட் இண்டீஸ் தனது முதல் இன்னிங்சை தொடங்கி விளையாடி வருகிறது.
- இந்தியா முதல் நாள் முடிவில் 288 ரன்கள் எடுத்திருந்தது.
- தொடர்ந்து ஆடிய விராட் கோலி சதமடித்தார்.
டிரினிடாட்:
இந்திய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் டெஸ்டில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி டிரினிடாடில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. தொடக்க வீரர்களான ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால் ஆகியோர் அரை சதமடித்து அசத்தினர். ரோகித் சர்மா 80 ரன்னும், ஜெய்ஸ்வால் 57 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.
முதல் நாள் முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 288 ரன்கள் எடுத்திருந்தது. விராட் கோலி 87 ரன்னும், ஜடேஜா 36 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்நிலையில், இரண்டாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. விராட் கோலி சிறப்பாக ஆடி சதமடித்து அசத்தினார். ஜடேஜாவும் அரை சதமடித்தார்.
500- வது சர்வதேச போட்டியில் விளையாடும் விராட் கோலி சதமடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- முதல் நாள் உணவு இடைவேளை வரை இந்தியா விக்கெட் இழப்பின்றி 121 ரன்கள் எடுத்திருந்தது.
- இறுதியாக, விராட் கோலி மற்றும் ஜடேஜா ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது.
இரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் டெஸ்டில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி டிரினிடாடில் இன்று தொடங்கியது.
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பவுலிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் முகேஷ் குமார் அறிமுக வீரராக களமிறங்குகிறார்.
அதன்படி, இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால் இருவரும் துவக்க வீரர்களாக களமிறங்கினர். இருவரும் பொறுப்புடன் ஆடினர்.
கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் அரை சதமடித்து அசத்தினர். முதல் நாள் உணவு இடைவேளை வரை இந்தியா விக்கெட் இழப்பின்றி 121 ரன்கள் எடுத்திருந்தது.
இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 87 (161), ரோகித் சர்மா 80 (143) ரன்கள் சேர்த்தனர்.
தொடர்ந்து, யாஷவி ஜெய்ஸ்வால் 57 ரன்களும், ஜடேஜா 36 ரன்களும், கில் 10 ரன்களும், ராஹானே 8 ரன்களும் எடுத்தனர்.
இறுதியாக, விராட் கோலி மற்றும் ஜடேஜா ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2வது டெஸ்ட்டியின், முதல் நாள் ஆட்ட முடிவில் 84 ஓவரில் இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 288 ரன்களுடன் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
- டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பவுலிங் தேர்வு செய்தது.
- இந்திய கேப்டன் ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால் ஆகியோர் அரை சதமடித்தனர்.
டிரினிடாட்:
இந்திய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் டெஸ்டில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி டிரினிடாடில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பவுலிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் முகேஷ் குமார் அறிமுக வீரராக களமிறங்குகிறார்.
அதன்படி, இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால் இருவரும் துவக்க வீரர்களாக களமிறங்கினர். இருவரும் பொறுப்புடன் ஆடினர். கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் அரை சதமடித்து அசத்தினர்.
முதல் நாள் உணவு இடைவேளை வரை இந்தியா விக்கெட் இழப்பின்றி 121 ரன்கள் எடுத்துள்ளது.
- டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் பிராத்வெயிட் பவுலிங் தேர்வு செய்தார்.
- இந்திய அணியில் முகேஷ் குமார் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகிறார்.
டிரினிடாட்:
இந்திய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் டெஸ்டில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி டிரினிடாடில் இன்று தொடங்கியது.
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் பிராத்வெயிட் பவுலிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் முகேஷ் குமார் அறிமுக வீரராக களமிறங்குகிறார்.
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால் இருவரும் துவக்க வீரர்களாக களமிறங்கினர்.
இந்தியா அணி விவரம் பின்வருமாறு:
ரோகித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, ரகானே, ரவீந்திர ஜடேஜா, இஷான் கிஷன், அஸ்வின், முகேஷ் குமார், ஜெய்தேவ் உனத்கட், முகமது சிராஜ்.
வெஸ்ட் இண்டீஸ் அணி விவரம் பின்வருமாறு:
கிரெய்க் பிராத்வைட் (கேப்டன்), அலிக் அதானாஸ், ஜெர்மைன் பிளாக்வுட், டேகனரைன் சந்தர்பால், ஜோசுவா டா சில்வா, ஷானன் கேப்ரியல், ஜேசன் ஹோல்டர், அல்ஸாரி ஜோசப், கிர்க் மெக்கென்சி, கீமர் ரோச், ஜோமல் வாரிக்கன்.
- வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
- ஆட்ட நாயகன் விருது யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு வழங்கப்பட்டது.
டொமினிகா:
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் டொமினிகாவில் நடந்தது. முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 150 ரன்னில் சுருண்டது.
இந்தியாவின் அஸ்வின் 5 விக்கெட்டும், ஜடேஜா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 421 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. ஜெய்ஸ்வால் 171 ரன், ரோகித் சர்மா 103 ரன்கள் எடுத்தனர்.
அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 2வது இன்னிங்சில் 130 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதனால் இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 141 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், வெற்றி குறித்து இந்திய கேப்டன் ரோகித் சர்மா பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ஜெய்ஸ்வாலுக்கு நல்ல திறமை இருக்கிறது, அவர் தயாராக இருக்கிறார் என்பதை கடந்த காலத்தில் நமக்குக் காட்டினார்.
அவர் விவேகமாக பேட்டிங் செய்தார். போட்டியின் எந்த சமயத்திலும் அவர் அச்சம் அடையவில்லை. நாங்கள் நடத்திய அரட்டைகள் அவருக்கு, நீங்கள் இங்கு சொந்தமானவர் என்பதை நினைவூட்டுவதாக இருந்தது.
பந்து வீச்சில் இது ஒரு சிறந்த முயற்சி. அவர்களை 150 ரன்களுக்கு வெளியேற்றுவது எங்களுக்கு சவாலாக அமைந்தது.
பேட்டிங் கடினமாக இருக்கும் என்று எங்களுக்குத் தெரியும். ரன்கள் எடுப்பது எளிதானது அல்ல. நாங்கள் ஒருமுறை மட்டுமே பேட்டிங் செய்ய விரும்பினோம். எனவே 400 ரன்களுக்கு மேல் எடுத்தோம், அதன்பின் வெளியேறி நன்றாக பந்து வீசினோம்.
அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவரும் சிறப்பாக பந்து வீசினர். குறிப்பாக அஸ்வின் பந்துவீசியது மிகவும் சிறப்பு என தெரிவித்தார்.
- இந்தியா முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 421 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது.
- வெஸ்ட் இண்டீஸ் அணி 2வது இன்னிங்சில் 130 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
டொமினிகா:
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் டொமினிகாவில் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் அஸ்வின் 5 விக்கெட், ஜடேஜா 3 விக்கெட் வீழ்த்தினர்.
அடுத்து ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 421 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ஜெய்ஸ்வால் 171 ரன், ரோகித் சர்மா 103 ரன், விராட் கோலி 76 ரன்கள் எடுத்தனர். இதன்மூலம் இந்திய அணி 271 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் 2வது இன்னிங்சில் களமிறங்கியது. இந்திய அணியின் சுழல் பந்துவீச்சில் அந்த அணி திணறியது.
இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன.
இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 2வது இன்னிங்சில் 130 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா சார்பில் அஸ்வின் 7 விக்கெட்டும், ஜடேஜா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 150 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
- அடுத்து ஆடிய இந்தியா 5 விக்கெட்டுக்கு 421 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது.
டொமினிகா:
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் டொமினிகாவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் அஸ்வின் 5 விக்கெட், ஜடேஜா 3 விக்கெட், சிராஜ், ஷர்துல் தாக்குர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, இந்திய அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா பொறுப்புடன் ஆடி சதமடித்தனர். ரோகித் சர்மா 103 ரன்னில் அவுட்டானார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 229 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. அடுத்து இறங்கிய சுப்மான் கில் 5 ரன்னில் அவுட்டானார். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 2 விக்கெட்டுக்கு 312 ரன்கள் எடுத்துள்ளது. ஜெய்ஸ்வால் 143 ரன்னும், விராட் கோலி 36 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்நிலையில், 3ம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வால் 171 ரன்னில் அவுட்டானார். 3வது விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வால், விராட் கோலி ஜோடி 110 ரன்கள் எடுத்தது. அடுத்து இறங்கிய ரகானே 3 ரன்னில் ஆட்டமிழந்தார். நிதானமாக ஆடிய விராட் கோலி அரை சதமடித்து 76 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில், இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 421 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்திய அணி 271 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.






