search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    டிரினிடாட் டெஸ்ட் - டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பவுலிங் தேர்வு
    X

    டிரினிடாட் டெஸ்ட் - டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பவுலிங் தேர்வு

    • டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் பிராத்வெயிட் பவுலிங் தேர்வு செய்தார்.
    • இந்திய அணியில் முகேஷ் குமார் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகிறார்.

    டிரினிடாட்:

    இந்திய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் டெஸ்டில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி டிரினிடாடில் இன்று தொடங்கியது.

    டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் பிராத்வெயிட் பவுலிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் முகேஷ் குமார் அறிமுக வீரராக களமிறங்குகிறார்.

    இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால் இருவரும் துவக்க வீரர்களாக களமிறங்கினர்.

    இந்தியா அணி விவரம் பின்வருமாறு:

    ரோகித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, ரகானே, ரவீந்திர ஜடேஜா, இஷான் கிஷன், அஸ்வின், முகேஷ் குமார், ஜெய்தேவ் உனத்கட், முகமது சிராஜ்.

    வெஸ்ட் இண்டீஸ் அணி விவரம் பின்வருமாறு:

    கிரெய்க் பிராத்வைட் (கேப்டன்), அலிக் அதானாஸ், ஜெர்மைன் பிளாக்வுட், டேகனரைன் சந்தர்பால், ஜோசுவா டா சில்வா, ஷானன் கேப்ரியல், ஜேசன் ஹோல்டர், அல்ஸாரி ஜோசப், கிர்க் மெக்கென்சி, கீமர் ரோச், ஜோமல் வாரிக்கன்.

    Next Story
    ×