என் மலர்
அமெரிக்கா
- டுவிட்டர் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பில் தான் தொடர வேண்டுமா என்று டுவிட்டரில் எலான் மஸ்க் கருத்து கணிப்பு நடத்தினார்.
- 1.7 கோடி பேர் பங்கேற்ற கருத்து கணிப்பில் எலான் மஸ்க் பதவி விலக வேண்டும் என்று 57.5 சதவீதம் பேர் கருத்து தெரிவித்தனர்.
வாஷிங்டன்:
உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், டுவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கினார். அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பை ஏற்ற அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார். 50 சதவீத ஊழியர்களை பணி நீக்கம் செய்தார்.
மேலும் டுவிட்டர் நிறுவனத்தில் பல மாற்றங்களை கொண்டு வந்தார். இதற்கிடையே டுவிட்டர் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பில் தான் தொடர வேண்டுமா என்று டுவிட்டரில் எலான் மஸ்க் கருத்து கணிப்பு நடத்தினார். 1.7 கோடி பேர் பங்கேற்ற இந்த கருத்து கணிப்பில் அவர் பதவி விலக வேண்டும் என்று 57.5 சதவீதம் பேர் கருத்து தெரிவித்தனர். 42.5 சதவீதம் பேர் எலான் மஸ்க், பதவியில் தொடர விருப்பம் தெரிவித்தனர்.
பெரும்பாலானோர், பதவி விலக வேண்டும் என்று தெரிவித்ததால் அதை ஏற்று எலான் மஸ்க், பொறுப்பில் இருந்து விலகுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் டுவிட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:-
டுவிட்டர் தலைமை நிர்வாக அதிகாரி பதவியை விரைவில் ராஜினாமா செய்வேன். அந்த பதவிக்கு ஒரு முட்டாள்தனமான நபரை தேடிப்பிடித்து விட்டு ராஜினாமா செய்வேன். அதன் பிறகு மென்பொருள், சர்வர் பணிகளை மட்டும் ஏற்று நடத்துவேன் என்று கூறி உள்ளார்.
இதுகுறித்து எலான் மஸ்க்கை பின் தொடர்பவர்கள் கூறும்போது, 'தலைமை நிர்வாக அதிகாரி பதவிக்கு ஏற்கனவே ஒருவரை தேர்வு செய்துவிட்டு எலான் மஸ்க் இந்த கருத்து கணிப்பை நடத்தியது போல தெரிகிறது என்று தெரிவித்துள்ளனர்.
- அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
- நிலநடுக்கத்தில் சிக்கி 2 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கலிபோர்னியா:
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. வடக்கு கலிபோர்னியாவில் உள்ள பெர்ண்டேல் அருகே கடலில் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவில் 6.4 புள்ளிகளாக பதிவானது. இதனால் வீடுகள் கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. அதிர்ச்சி அடைந்த மக்கள் வெளியே ஓடி வந்து சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளன. சில இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. சாலைகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தில் சிக்கி 2 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
12 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். நிலநடுக்கத்தால் மின்விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 70 ஆயிரம் பேர் மின்சாரமின்றி தவித்து வருகிறார்கள். மின் விநியோகத்தை சீர் செய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மீட்பு குழுவினர் கூறும்போது, 'சில இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளது. நிலநடுக்கம் காரணமாக மின் இணைப்புகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதி மக்கள் தொகை குறைந்த பகுதி என்பதால் மீட்பு பணியில் பெரிய பிரச்சினை இல்லை' என்றனர்.
சேதம் அடைந்த கட்டிடங்கள் குறித்த விவரங்களை அதிகாரிகள் சேகரித்து வருகிறார்கள். கணக்கெடுப்பு முடிந்த பிறகு சேதம் குறித்து முழு தகவல் வெளியிடப்படும்.
முக்கியமான இடங்களுக்கு மின் விநியோகம் 10 மணி நேரத்தில் வழங்கப்படும் என்றாலும் பெரும்பாலான இடங்களில் மின் விநியோகம் தாமதம் அடையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
- பிளையட் 5 மற்றும் 6 என்ற இரு செயற்கைகோள்களை சுமந்து சென்ற ராக்கெட் ஏவல் தோல்வியடைந்துள்ளது.
- எஞ்சினில் ஏற்பட்ட குறைந்த அழுத்தமே காரணம் என ஏரியன் ஸ்பேஸ் நிறுவன சி.இ.ஓ ஸ்டீபன் இஸ்ரேல் தகவல்.
ஐரோப்பில் இருந்து ஏவப்பட்ட வேகா-சி ராக்கெட் தோல்வியடைந்ததாக ஏரியன் ஸ்பேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
பிளையட் 5 மற்றும் 6 என்ற இரு செயற்கைகோள்களை சுமந்து சென்ற ராக்கெட் ஏவல் தோல்வியடைந்துள்ளது.
எஞ்சினில் ஏற்பட்ட குறைந்த அழுத்தமே காரணம் என ஏரியன் ஸ்பேஸ் நிறுவன சி.இ.ஓ ஸ்டீபன் இஸ்ரேல் தகவல் வெளியாகி உள்ளது.
- அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
- இந்த நிலநடுக்கம் 6.4 ரிக்டர் அளவுகோலில் பதிவானது.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் வடக்கு பகுதியில் ஹம்போல்ட் கவுன்டி பகுதியில் யுரேகா என்ற இடத்திற்கு அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகி உள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்த நிலநடுக்கம் 16.1 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. பெர்ன்டேல் என்ற பகுதியில் இருந்து மேற்கே-தென்மேற்கே 7.4 மைல்கள் பரப்பளவிற்கு நிலநடுக்கம் தாக்கியுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கானோர் வீடுகளில் மின் வினியோகம் துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
நிலநடுக்கத்தால் வீடுகளின் ஜன்னல்கள் உடைந்து சிதறின. வீட்டிலிருந்த பொருட்கள் தூக்கி எறியப்பட்டன. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின.
- துப்பறிவாளர்கள் நடத்திய நேர்காணலில் பேசிய ஜேக்கப் தனது தாயை பலமுறை கத்தியால் குத்தியதாக கூறினான்.
- தாயை கொல்வதற்கு துப்பாக்கி வேண்டும் என ஜேக்கப் தன் நண்பரிடம் கேட்டுள்ளான்.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் புளோரிடாவில் ஜேக்கப் ப்ரூவர் என்ற 17 வயது சிறுவன், தன் அம்மாவை கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஜேக்கப்பிடம் அவனது அறையை சுத்தமாக வைத்திருக்கும்படி அவனது தாய் கூறியிருக்கிறார். தொடர்ந்து இவ்வாறு அறிவுறுத்தியதால் ஆத்திரமடைந்த ஜேக்கப், தாயுடன் வாக்குவாதம் செய்துள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், கத்தியால் தாயை குத்தி உள்ளார். அத்துடன் பாத்திரத்தால் தலையில் அடித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த தாய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ஜேக்கப்பை கைது செய்து சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் சிறார் சிறையில் அடைக்கப்பட்டான். துப்பறிவாளர்கள் நடத்திய நேர்காணலில் பேசிய ஜேக்கப் தனது தாயை பலமுறை கத்தியால் குத்தியதாக கூறினான்.
தாயை கொல்வதற்கு துப்பாக்கி வேண்டும் என ஜேக்கப் தன் நண்பரிடம் கேட்டு மெசேஜ் அனுப்பி உள்ளான். அவன் துப்பாக்கி கொண்டு வர முடியாது என்று கூறியதுடன், கத்தி கொண்டு வருவதாகவும் கூறி கத்தியை கொண்டு வந்து கொடுத்திருக்கிறான். மேலும், அந்த நண்பர் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது.
- சீனா கட்டுப்பாடுகளை தளர்த்தியதால் ஏற்பட்ட பாதிப்பை சமாளிக்க போராடி வருகிறது.
- பாதிப்பு அதிகரித்து வருவதால் எந்த நேரத்திலும் மற்ற நாடுகளுக்கு பரவலாம் என அஞ்சப்படுகிறது.
வாஷிங்டன்:
சீனாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. தினமும் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதையடுத்து கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அடுத்த 90 நாட்களில் 60 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படக்கூடும். லட்சக்கணக்கானோர் உயிரிழக்க கூடிய வாய்ப்பு உள்ளதாக தொற்று நோயியல் நிபுணர் எரிக் பீகல் டிங் தெரிவித்துள்ளார்.
சீனாவில் கொரோனா அதிகரித்து வருவதால் எந்த நேரத்திலும் மற்ற நாடுகளுக்கு பரவலாம் என அஞ்சப்படுகிறது.
சீனாவின் இந்த பாதிப்பு வைரசின் புதிய பிறழ்வுகளை உருவாக்கலாம் என்றும், இது உலகையே கவலை அடைய செய்திருப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஏனெனில் உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடு கட்டுப்பாடுகளை தளர்த்தியதால் ஏற்பட்ட பாதிப்பை சமாளிக்க போராடி வருகிறது.
எந்த நேரத்திலும் வைரஸ் வேகமாக பரவலாம். வைரசின் பிறழ்வு எல்லா இடங்களிலும் உள்ள மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் திறன் கொண்டது என்பதை நாங்கள் அறிவோம் என அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் தெரிவித்தார்.
பிரைஸின் கருத்து பற்றி வாஷிங்டனில் உள்ள சீனத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளரிடம் கேட்டதற்கு, அவர் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
- உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 10-வது மாதத்தைக் கடந்துள்ளது.
- அடுத்த ஆண்டுக்குள் இந்த போர் முடிவுக்கு வரும் என நம்புவதாக ஐ.நா.பொது செயலாளர் கூறினார்.
நியூயார்க்:
உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24-ம் தேதி போரை தொடங்கியது. உக்ரைனின் தலைநகர் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மீது ஏவுகணை, வான்வழி தாக்குதல்கள் நடத்தப்பட்டன. உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 10-வது மாதத்தைக் கடந்துள்ளது.
உக்ரைனுக்கு எதிரான போரை நிறுத்த ரஷியாவுக்கு ஐ.நா. சபை, உலக நாடுகள் கோரிக்கை விடுத்தன. ஆனால் அதனை நிராகரித்து ரஷியா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இதற்கிடையே, ஐ.நா. சபை பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் போரை நிறுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டார். இரு நாட்டு அதிபர்களைச் சந்தித்து பேசினார். உக்ரைன் ரஷியா போரை நிறுத்தும்படி வலியுறுத்தினார்.
இந்நிலையில், உக்ரைன் ரஷியா இடையிலான போர் 2023-ல் முடிவுக்கு வரும் என ஐக்கிய நாடுகளின் சபை பொதுச் செயலாளர்
அன்டோனியோ குட்டரெஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக குட்டரெஸ் நேற்று நடந்த மாநாட்டில் பேசுகையில், உக்ரைனில் எதிர்காலத்தில் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பை தான் காணவில்லை. ஏற்கனவே அதிகரித்து வரும் ராணுவ மோதல்கள் தொடரும்.
ஆனால் 2023-ம் ஆண்டின் இறுதிக்குள் உக்ரைன் ரஷியா இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அனைத்தையும் செய்யவேண்டும். இது நடக்கும் என உறுதியாக நம்புகிறேன் என தெரிவித்தார்.
- டுவிட்டர் சி.இ.ஓ.வாக வேறு ஒருவரை நியமிப்பேன் என எலான் மஸ்க் தெரிவித்திருந்தார்.
- கருத்துக் கணிப்பு முடிவைக் கடைப்பிடிப்பதாக அவர் உறுதியளித்துள்ளார்.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் பல்வேறு செய்தி நிறுவனங்களைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர்கள் பலரின் டுவிட்டர் கணக்குகளை டுவிட்டர் நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு முடக்கியது. டுவிட்டரின் இத்தகைய செயல்பாடுகள் மன உளைச்சலை தருவதாக ஐ.நாவின் உலகளாவிய தகவல் தொடர்புகளுக்கான துணைப் பொதுச்செயலாளர் மெலிசா பிளெமிங் தெரிவித்திருந்தார்.
எலான் மஸ்க் தனது டெஸ்லா மின்சார கார் நிறுவனத்தின் 2 கோடியே 20 லட்சம் பங்குகளை 3.58 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு (சுமார் ரூ.29,743 கோடி) கடந்த 3 நாட்களாக விற்றது அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
டுவிட்டர் நிர்வாகத்தில் பல்வேறு அதிரடி மாற்றங்களைச் செய்துவரும் எலான் மஸ்க், தொடர்ச்சியாக டுவிட்டரின் நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு குழுவை கலைத்தார். டுவிட்டரின் தலைமை நிர்வாக அதிகாரியாக நீண்ட காலம் பணியாற்ற விரும்பவில்லை எனவும் அவர் கூறியிருந்தார். அந்த வேலைக்கு வேறு ஒருவரை நியமிப்பேன் என்று சூசகமாகத் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, டுவிட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், 'டுவிட்டர் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டுமா?' என ஒரு கேள்வியைக் கேட்டுள்ளார். கருத்துக் கணிப்பு முடிவைக் கடைப்பிடிப்பதாக அவர் உறுதியளித்துள்ளார்.
இந்நிலையில், எலான் மஸ்க்கின் இந்தக் கேள்விக்கு 57.6 சதவீதத்திற்கும் அதிகமான பயனர்கள் 'ஆம்' என்றும், சுமார் 42.4 சதவீதம் பேர் 'இல்லை' என்பதையும் கிளிக் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்தியா சார்பில், சர்கம் கவுசல் என்ற 32 வயது பெண், கலந்து கொண்டார்.
- சர்கம் கவுசல், காஷ்மீரின் ஜம்முவை பூர்வீகமாக கொண்டவர்.
வாஷிங்டன் :
திருமணமான பெண்களில் சிறந்த அழகியை தேர்ந்தெடுப்பதற்காக, 'திருமதி உலக அழகி' (மிஸஸ் வேர்ல்டு) என்ற போட்டி, கடந்த 1984-ம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான இப்போட்டி, அமெரிக்காவில் வெஸ்ட்கேட் லாஸ் வேகாஸ் ரிசார்ட் என்னும் சொகுசு விடுதியில் நடந்தது. 63 நாடுகளை சேர்ந்த அழகிகள் பங்கேற்றனர்.
இந்தியா சார்பில், சர்கம் கவுசல் என்ற 32 வயது பெண், கலந்து கொண்டார். நேற்று இறுதிச்சுற்று போட்டி நடந்தது.
அதில், சர்கம் கவுசல் வெற்றி பெற்று பட்டத்தை கைப்பற்றினார். அவருக்கு சென்ற ஆண்டுக்கான திருமதி உலக அழகி ஷாலின் போர்டு, கிரீடம் சூட்டினார். அப்போது, அரங்கம் அதிர கைதட்டல் எழுந்தது.
2-வது இடத்தை பாலினேசியா நாட்டு பெண்ணும், 3-வது இடத்தை கனடா அழகியும் பிடித்தனர்.
கடந்த 2001-ம் ஆண்டு திருமதி உலக அழகி பட்டத்தை இந்திய பெண் அதிதி கவுரிகர் வென்றார். 21 ஆண்டுகள் கழித்து, இந்த பட்டம் மீண்டும் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.
தான் வெற்றி பெற்றதை சர்கம் கவுசல் சமூக வலைத்தளத்தில் மகிழ்ச்சியுடன் அறிவித்தார். ''21 ஆண்டுகளுக்கு பிறகு நமக்கு கிரீடம் கிடைத்துள்ளது. எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இந்தியாவை நேசிக்கிறேன். உலகத்தை நேசிக்கிறேன்'' என்று அவர் கூறியுள்ளார்.
2001-ம் ஆண்டில் திருமதி உலக அழகி போட்டியில் வென்ற அதிதி கவுரிகரும் சர்கம் கவுசலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். சர்கம் கவுசல், காஷ்மீரின் ஜம்முவை பூர்வீகமாக கொண்டவர். அவருடைய கணவர் அடி கவுசல், இந்திய கடற்படை அதிகாரி ஆவார். இவர்களுக்கு 2018-ம் ஆண்டு திருமணம் ஆனது.
- தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடனுக்கு சான்றிதழ் வழங்குவதற்காக கடந்த ஆண்டு ஜனவரி 6-ந் தேதி பாராளுமன்றம் கூடியது.
- டிரம்ப் மீதான குற்றச்சாட்டுகள் பகிரங்கமாக அறிவிக்கப்படும் எனவும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் டிரம்ப் தோல்வியை தழுவினார். ஆனால் அவர் தோல்வியை ஏற்காமல் தேர்தலில் முறைகேடு நடந்தாக குற்றம்சாட்டி வந்தார்.
இந்த சூழலில் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடனுக்கு சான்றிதழ் வழங்குவதற்காக கடந்த ஆண்டு ஜனவரி 6-ந் தேதி பாராளுமன்றம் கூடியது. அப்போது டிரம்பின் ஆதரவாளர்கள் பாராளுமன்றத்துக்கு புகுந்து பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர். இதில் 5 பேர் பலியாகினர்.
இந்த கலவரம் குறித்து அமெரிக்க பாராளுமன்ற குழு 1½ ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணை நடத்தி வருகிறது. இதில் கலவரத்தில் ஈடுபட்ட ஏராளமானோர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த கலவரத்தில் டிரம்பின் தொடர்பு குறித்தும் பாராளுமன்ற குழு விசாரித்து வந்தது.
இந்த நிலையில் பாராளுமன்ற குழு தனது விசாரணையை நிறைவு செய்துவிட்டதாகவும், கலவரம் தொடர்பாக டிரம்ப் மீது கிளர்ச்சியை தூண்டுதல் உள்பட 3 கிரிமினல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய நீதித்துறைக்கு பரிந்துரைக்க குழு முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் இந்த குழு அடுத்த வாரம் தனது முழு விசாரணை அறிக்கையை வெளியிடும் எனவும், அப்போது டிரம்ப் மீதான குற்றச்சாட்டுகள் பகிரங்கமாக அறிவிக்கப்படும் எனவும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
- அமெரிக்க நிறுவனங்களைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர்களின் டுவிட்டர் கணக்குகளை அந்நிறுவனம் முடக்கியது.
- இது மிகுந்த மன உளைச்சலை அளிக்கிறது என்றார் ஐ.நாவின் தகவல் தொடர்புகளுக்கான துணைப் பொதுச்செயலாளர்.
நியூயார்க்:
அமெரிக்காவின் பல்வேறு செய்தி நிறுவனங்களைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர்கள் பலரின் டுவிட்டர் கணக்குகளை டுவிட்டர் நிறுவனம் கடந்த இரு தினங்களுக்கு முன்பு முடக்கியது. டுவிட்டரின் புதிய தனியுரிமைக் கொள்கைகளின் ஒரு பகுதியாக, மற்றவர்களின் நல்வாழ்வுக்கு அச்சுறுத்தல் என்ற அடிப்படையில் இந்த கணக்குகள் முடக்கப்பட்டதாக டுவிட்டர் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
அதேசமயம், எலான் மஸ்க்கின் ஒவ்வொரு அசைவுகளையும் ரகசியமாக கண்காணித்து அவர் குறித்து செய்திகளை வெளியிட்டு வந்ததற்காக பத்திரிகையாளர்களின் கணக்குகள் முடக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், பத்திரிகையாளர்களின் கணக்குகளை முடக்கியதன் மூலம் ஊடக சுதந்திரத்தைப் பறிப்பதாக கூறி டுவிட்டர் நிறுவனத்துக்கு ஐ.நா. மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஐ.நா.வின் உலகளாவிய தகவல் தொடர்புகளுக்கான துணைப் பொதுச்செயலாளர் மெலிசா பிளவ்மிங் கூறுகையில், டுவிட்டரில் பத்திரிகையாளர்களின் கணக்குகள் முடக்கப்பட்டது மிகுந்த மன உளைச்சலை அளிக்கிறது. ஊடக சுதந்திரம் என்பது பொம்மை அல்ல. சுதந்திரமான பத்திரிகை ஜனநாயக சமூகங்களின் அடித்தளம் ஆகும். மேலும் அது தீங்கு விளைவிக்கும் தவறான தகவல்களுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு முக்கிய கருவியாகும் என தெரிவித்தார்.
ஐரோப்பிய கூட்டமைப்பின் ஆணையர் வேரா ஜூரோவா, டுவிட்டர் நிறுவனம் ஊடக சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகளை மதிக்க வேண்டும். எலான் மஸ்க் அதைப் பற்றி எச்சரிக்கையாக இருக்கவேண்டும். டுவிட்டர் நிறுவனம் தொடர்ந்து எல்லை மீறினால் ஐரோப்பாவின் புதிய டிஜிட்டல் சேவைகள் சட்டத்தின் கீழ் பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என எச்சரித்தார்.
- நிலநடுக்கம் மிட்லாண்டிலிருந்து வட மேற்கே 22 கிலோ மீட்டர் தொலைவிலும் 8 கிலோ மீட்டர் ஆழத்திலும் மையம் கொண்டிருந்தது.
- நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
டெக்சாஸ்:
அமெரிக்காவின் மேற்கு டெக்சாலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. எண்ணெய் உற்பத்தி செய்யும் பகுதியில் ரிக்டர் அளவில் 5.4 புள்ளிகளாக நிலநடுக்கம் உண்டானது.
இந்த நிலநடுக்கம் மிட்லாண்டிலிருந்து வட மேற்கே 22 கிலோ மீட்டர் தொலைவிலும் 8 கிலோ மீட்டர் ஆழத்திலும் மையம் கொண்டிருந்தது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
மேலும் இந்த நிலநடுக்கம் வடக்கு டெக்சாசில் லுபாக் வரையும், மிட்லாண்டிற்கு தென்மேற்கே 20 மைல் தொலைவில் உள்ள ஒடெசா வரையும் உணரப்பட்டது.






