என் மலர்
அமெரிக்கா
- அமெரிக்காவில் சக்திவாய்ந்த சூறாவளி ஏற்பட்டது.
- இதில் சிக்கி 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் மத்திய பகுதியில் சக்திவாய்ந்த சூறாவளி நேற்று தாக்கியது. இதில் பல்வேறு பகுதிகளிலும் இருந்த வீடுகள் சூறையாடப்பட்டன. மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.
இதுதொடர்பாக புலாஸ்கி கவுன்டி பகுதியைச் சேர்ந்த பிரதிநிதி மேடலின் ராபர்ட்ஸ் சி.என்.என். செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், நேற்று மதியம் கடுமையாக தாக்கிய சூறாவளியால் அர்கான்சாஸ் மாகாணத்தின் நார்த் லிட்டில் ராக் பகுதியில் முதல் நபர் பலியானார். அப்பகுதியில் 50 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பலர் பாதிப்படைந்து இருக்கக்கூடும் என தெரிவித்தார்.
டென்னிசி மாகாணத்தில் 7 பேர், வின், அர்கனாஸ் நகரங்களில் 4 பேர், சுல்லிவன், இண்டியானா நகரங்களில் 3 பேர், இல்லினாய்ஸ், அலபாமா, மிச்சிபி மற்றும் லிட்டில் ராக் பகுதியில் தலா ஒருவர் பலியாகி உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
74 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நேற்றிரவு மின்சார வசதி இன்றி பாதிக்கப்பட்டனர் என தகவல் தெரிவிக்கின்றது.
- மியாமி ஓபன் டென்னிசின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டம் நடந்தது.
- இதில் இத்தாலியின் சின்னர் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
மியாமி:
முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர், ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரசை சந்தித்தார்.
இதில் அல்காரஸ் முதல் செட்டை 7-6 என்ற செட் கணக்கில் வென்றார். இரண்டாவது செட்டை சின்னர் 6-4 என கைப்பற்றினார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை 6-2 என கைப்பற்றிய சின்னர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் ரஷிய வீரர் மெத்வதேவை ஜானிக் சின்னர் எதிர்கொள்கிறார்.
- இந்த சிற்பங்கள் கிமு 1ஆம் நூற்றாண்டு முதல் கிபி 11 ஆம் நூற்றாண்டு காலகட்டத்தைச் சேர்ந்தவை.
- சிலை கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்ட சுபாஷ் கபூருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
நியூயார்க்:
இந்தியாவில் இருந்து கடத்தப்பட்டு சிலைக் கடத்தல் மன்னன் சுபாஷ் கபூரால் விற்பனை செய்யப்பட்ட 15 சிற்பங்களை அமெரிக்க அருங்காட்சியகம் இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப உள்ளது. சுபாஷ் கபூர் மீதான குற்றவியல் நடவடிக்கையைத் தொடர்ந்து இந்த சிற்பங்களை திருப்பி அனுப்புகிறத-
இந்த சிற்பங்கள் அனைத்தும் கிமு 1ஆம் நூற்றாண்டு முதல் கிபி 11 ஆம் நூற்றாண்டு காலகட்டத்தைச் சேர்ந்தவை. டெரகோட்டா, செம்பு மற்றும் கற்சிற்பம் ஆகியவை அடங்கும்.
இதுதொடர்பாக நியூயார்க்கில் உள்ள புகழ்பெற்ற பெருநகர கலை அருங்காட்சியகம் (மெட்) வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சந்தேகத்திற்குரிய வியாபாரிகளிடமிருந்து பெறப்பட்ட பழங்கால வரலாற்று சிறப்பு மிக்க பொருட்களை அருங்காட்சியம் தீவிரமாக மதிப்பாய்வு செய்கிறது. மேலும், இந்திய அரசாங்கத்துடனான நீண்டகால உறவுகளை மிகவும் மதிப்பதுடன், இந்த பிரச்சனையை தீர்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிலை கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்டு 10 ஆண்டு சிறைத்தண்டனை பெற்ற சுபாஷ் கபூர் திருச்சி மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
- 74 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நேற்றிரவு மின்சார வசதி இன்றி பாதிக்கப்பட்டு உள்ளனர்.
- அமெரிக்காவின் மிஸ்ஸிசிப்பி நகரில் கடந்த வாரத்தில் வலிமையான சூறாவளி தாக்கியதில் 26 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்காவின் மத்திய பகுதியில் சக்தி வாய்ந்த சூறாவளி நேற்று தாக்கியது. இதில், பல்வேறு பகுதிகளிலும் இருந்த வீடுகள் சூறையாடப்பட்டன. மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.
இதுபற்றி புலாஸ்கி கவுன்டி பகுதியை சேர்ந்த பிரதிநிதி மேடலின் ராபர்ட்ஸ் என்பவர் சி.என்.என். செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, நேற்று மதியம் கடுமையாக தாக்கிய சூறாவளியால், அர்கான்சாஸ் மாகாணத்தின் நார்த் லிட்டில் ராக் பகுதியில் முதல் நபர் பலியானார்.
அந்த பகுதியில் 50 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். பலர் பாதிப்படைந்து இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது என கூறியுள்ளார். இதுதவிர, செயின்ட் பிரான்சிஸ் கவுன்டியில் வைன்னே நகரில் 3 பேர் உயிரிழந்து உள்ளனர்.
74 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நேற்றிரவு மின்சார வசதி இன்றி பாதிக்கப்பட்டு உள்ளனர் என தகவல் தெரிவிக்கின்றது.
அமெரிக்காவின் மிஸ்ஸிசிப்பி நகரில் வலிமையான சூறாவளி தாக்கியதில் 26 பேர் உயிரிழந்த ஒரு வாரத்தில் மற்றொரு சூறாவளி தாக்குதல் ஏற்பட்டு உள்ளது. இதன் பாதிப்புகள் அதிகரிக்க கூடும் என கூறப்படுகிறது.
- ஆயுதங்களுக்கு ஈடாக உணவு பொருட்களை ரஷியா முடிவு செய்திருப்பதையும் நாங்கள் அறிந்துள்ளோம்.
- வடகொரியாவுக்கும் ரஷியாவுக்கும் இடையிலான எந்தவொரு ஆயுத ஒப்பந்தமும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை மீறக்கூடியது.
வாஷிங்டன்:
உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷியாவுக்கு அதன் நெருங்கிய நட்பு நாடுகளில் ஒன்றான வடகொரியா ஆயுதங்களை வழங்கி வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. ஆனால் வடகொரியா அதை திட்டவட்டமாக மறுத்தது.
இந்த நிலையில் சர்வதேச நாடுகளின் பொருளாதார தடைகள் மற்றும் இயற்கை பேரழிவுகள் காரணமாக வடகொரியாவில் கடுமையான உணவு பஞ்சம் நிலவி வரும் சூழலில், ரஷியா வடகொரியாவுக்கு உணவு பொருட்களை வழங்கி அதற்கு ஈடாக ஆயுதங்களை பெற முயற்சிப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு கொள்கையின் செய்தி தொடர்பாளர் ஜான் கெர்பி கூறுகையில், "வடகொரியாவுக்கு ஒரு பிரதிநிதிகள் குழு அனுப்ப ரஷியா முயல்கிறது என்பதையும், ஆயுதங்களுக்கு ஈடாக உணவு பொருட்களை ரஷியா முடிவு செய்திருப்பதையும் நாங்கள் அறிந்துள்ளோம். வடகொரியாவுக்கும் ரஷியாவுக்கும் இடையிலான எந்தவொரு ஆயுத ஒப்பந்தமும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை மீறக்கூடியது ஆகும். ஒப்பந்தத்தின் நிலைமையை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகிறது" என்றார்.
எனினும் இதுகுறித்து வடகொரியா மற்றும் ரஷியா உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
- மியாமி ஓபன் டென்னிசின் பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் நடந்தது.
- இதில் பெட்ரா கிவிடோவா வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
மியாமி:
முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்று ஆட்டம் ஒன்றில் செக் குடியரசின் பெட்ரா கிவிடோவா, ரொமானியா வீராங்கனை சொரானா சிர்ஸ்டியுடன் மோதினார்.
இதில் கிவிடோவா 7-5, 6-4 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் ரிபாகினாவுடன், கிவிடோவா மோதுகிறார்.
- பல நாடுகளைச் சேர்ந்த மக்கள் அமெரிக்காவுக்குள் குடியேறும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- இந்த முயற்சியில் உயிரிழப்பு சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.
வாஷிங்டன்:
உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக குடியேறும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த முயற்சியில் உயிரிழப்பு சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.
இந்நிலையில், கனடா எல்லை வழியாக இந்தியா மற்றும் ரோமானியா நாடுகளைச் சேர்ந்த 2 குடும்பத்தினர் 7 பேர் அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக செல்ல முயற்சித்துள்ளனர். கனடாவில் இருந்து செயிண்ட் லாரன்ஸ் ஆறு வழியாக படகில் அமெரிக்காவுக்குள் நுழைய முயற்சித்துள்ளனர்.
அப்போது, அவர்கள் பயணித்த படகு கவிழ்ந்து அனைவரும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் இந்திய குடும்பத்தினர் உள்பட 6 பேரும் உயிரிழந்தனர். ஒரு குழந்தை மாயமாகியுள்ளது. அந்தக் குழந்தையை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
- மியாமி ஓபன் டென்னிசின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்று ஆட்டங்கள் நடந்தன.
- முதல் அரையிறுதியில் மெத்வதேவ் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
மியாமி:
முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்று ஆட்டம் ஒன்றில் ரஷிய வீரர் டேனில் மெத்வதேவ், சக நாட்டு வீரர் கரென் கச்சனாவை சந்தித்தார். இதில் மெத்வதேவ் முதல் செட்டை 7-6 என்ற செட் கணக்கில் வென்றார். இரண்டாவது செட்டை கச்சனாவ் 6-3 என கைப்பற்றினார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை 6-3 என கைப்பற்றிய மெத்வதேவ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
- மியாமி ஓபன் டென்னிசின் பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் நடந்தது.
- இதில் ரிபாகினா வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
மியாமி:
முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்று ஆட்டம் ஒன்றில் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா, அமெரிக்க வீராங்கனை ஜெசிக்கா பெகுலாவுடன் மோதினார்.
இதில் ரிபாகினா 7-6, 6-4 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
- மறைப்பதற்காக தேர்தல் பிரசாரநிதியில் இருந்து டிரம்ப் அந்த நடிகைக்கு 1 லட்சத்து 30 ஆயிரம் அமெரிக்க டாலர் பணம் கொடுத்ததாக புகார் எழுந்தது.
- நடிகைக்கு டிரம்ப் பணம் கொடுத்ததற்கான ஆதாரங்களும் கைப்பற்றப்பட்டதாக தெரியவந்துள்ளது.
வாஷிங்டன்:
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் அடிக்கடி பாலியல் புகார்களில் சிக்குவது என்பது வாடிக்கையாக உள்ளது. அவருக்கு எதிராக 10-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தினார்கள்.
76 வயதான டிரம்ப் ஆபாச நடிகையான ஸ்டோர்மி டேனியல் என்பவருடன் முறையற்ற உறவை வைத்து இருந்தார். தன்னுடன் சில ஆண்டுகள் டிரம்ப் பாலியல் உறவு வைத்து இருந்ததாக ஆபாச நடிகை தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட புத்தகத்திலும் இடம் பெற்று இருந்தது.
அந்த சமயம் அவர்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 2016-ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலின் போது இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது.
இதையடுத்து இதனை மறைப்பதற்காக தேர்தல் பிரசாரநிதியில் இருந்து டிரம்ப் அந்த நடிகைக்கு 1 லட்சத்து 30 ஆயிரம் அமெரிக்க டாலர் பணம் கொடுத்ததாக புகார் எழுந்தது.
இந்த பணம் சட்ட விரோதமாக கொடுக்கப் பட்டதாக வழக்கு தொடரப் பட்டது. இந்த பிரச்சினைகளால் அவர் அதிபர் தேர்தலிலும் தோல்வியை தழுவினார்.
இந்த வழக்கு மான்ஹாட்டன் மாவட்ட வக்கீல் அலுவலகத்தில் உள்ளது. இதில் டிரம்பின் முன்னாள் வக்கீல் ஒருவர் அவருக்கு எதிராக சாட்சி அளித்ததாக கூறப்படுகிறது. மேலும் நடிகைக்கு டிரம்ப் பணம் கொடுத்ததற்கான ஆதாரங்களும் கைப்பற்றப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் ஆபாச நடிகையுடன் இருந்த தொடர்பில் குற்றத்தை மறைத்ததற்காக எழுந்த புகாரின் பேரில் நியூயார்க் நடுவன் மன்றம் டிரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளது.
அமெரிக்க வரலாற்றில் முதன் முறையாக அதிபராக இருந்த ஒருவர் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அடுத்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் டிரம்ப் போட்டியிட உள்ளார். இந்த சூழ்நிலையில் அவர் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது அமெரிக்காவை அதிர வைத்துள்ளது.
இந்த குற்றச்சாட்டில் டிரம்ப் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பும் அமெரிக்காவில் நிலவுகிறது. இதற்கிடையில் வருகிற செவ்வாய்க்கிழமை டிரம்ப் கோர்ட்டில் சரண் அடைய திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்போது அவருக்கு ஜாமீன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- அமெரிக்காவில் ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கியது.
- இந்த விபத்தில் 9 ராணுவ வீரர்கள் பலியாகினர்.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தில் ராணுவ பயிற்சியின் போது 2 ராணுவ பிளாக் ஹாக் ஹெலிகாப்டர்கள் விபத்தில் சிக்கின. இந்த விபத்தில் 9 வீரர்கள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு 10 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டது. உள்ளூர் நேரம் (இரவு 11 மணி ), போர்ட் கேம்ப்பெல்லுக்கு மேற்கே உள்ள டிரிக் கவுண்டியில் ராணுவத் தளம் இன்று அதிகாலை வெளியிட்ட ஒரு அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது. இதன்படி 2 பிளாக் ஹாக் மருத்துவ வெளியேற்ற விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. பலியான 9 வீரர்களின் அடையாளங்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மியாமி ஓபன் டென்னிசின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்று ஆட்டங்கள் நடந்தன.
- இதில் மெத்வதேவ், சின்னர் ஆகியோர் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினர்.
மியாமி:
முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்று ஆட்டம் ஒன்றில் ரஷிய வீரர் டேனில் மெத்வதேவ், அமெரிக்காவின் கிறிஸ்டோபரை சந்தித்தார். இதில் மெத்வதேவ் 6-3, 7-5 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர், பின்லாந்து வீரர் எமில் ரூசோவுரியுடன் மோதினார். இதில் சின்னர் 6-3, 6-1 என்ற நேர்செட்களில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.






